யோசிப்பவருக்கும், ரசிகனுக்கும் சில சந்தேகங்கள் இருக்கு அகலிகையின் வாழ்க்கையில். முதலில் ரசிகனுக்குப் பதில்: அகலிகையின் நிலையைக் கொஞ்சமும் மாற்றாமலேயே வர்ணிக்கின்றார் வால்மீகி. அவள் தவறு செய்வதையும், பின்னர் மனம் வருந்துவதையும் அதனால் கிடைக்கும் சாபத்தையும், சாபத்தின் பலனால் அன்ன, ஆகாரமின்றிக் காற்றையே உணவாய்க் கொண்டு, எவர் கண்ணிலும் படாமல் நூற்றாண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றாள், ஸ்ரீராமனின் வருகைக்காக. தவம் கடுமையாகச் செய்கின்றாள், ராமனை நினைத்து. அவளுடைய மன்னிக்க முடியாத தவறுக்குத் தண்டனையும் கிடைத்து விட்டது. அதை முழுதும் அனுபவித்தும் விடுகின்றாள். பின்னர் அவள் எடுப்பதோ புதுப் பிறவி! அந்த மாசடைந்த பிறவி மறைந்து போய், மனதினாலும், உடலினாலும் முற்றிலும் தூயவளாய் மாறுகின்றாள். ஸ்ரீராமனின் கருணையினால். ஆகவே தான் கெளதமரும் அவளை ஏற்கின்றார். தவறு செய்தால் கடுமையான தண்டனை கிடைக்கும், அதை நாம் அனுபவித்தே தீரவேண்டும், அப்படியும், நாம் மாறாத பக்தியோடு இருந்தோமானால் நமக்கு நல்வழி கிட்டும் என்பதே அகலிகையின் வாழ்வில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.
அடுத்து யோசிப்பவர் கேட்பது, தொலைக்காட்சியில் வந்த ராமாயணத் தொடரில் அகலிகை கல்லாக மாறுவது போலவே காட்டப் பட்டதாய்த் தெரிவிக்கின்றார். அவர் சொல்லுவது ராமானந்த சாகரின் ராமாயணம் தொடர் என்றே நினைக்கின்றேன். நான் அவ்வளவு தொடர்ந்து அந்தத் தொடரைப் பார்க்கவில்லை எனினும், அந்தத் தொடர் எடுக்க அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட புத்தகங்களில் கம்ப ராமாயணமும் இடம் பெற்றுள்ளது. டைட்டிலில், முன்னாலேயே புத்தகங்கள் லிஸ்டில் கம்பராமாயணமும் வந்து விடும் என்றும் நினைக்கின்றேன். ஆகவே தற்காலத்துச் சாதாரண மனிதர்களால் இந்த தூசியைப் போல் அகலிகை இருந்தாள் என்பதை ஜீரணிக்க முடியாது என்பதால் இம்மாதிரி எடுத்திருக்கலாம். கம்பர் தான் அகலிகை கல்லாய் மாறினாள் என்று சொல்கின்றார், துளசிதாசர் ராமாயணத்தில் அகலிகை விபரங்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை என்றே நினைக்கிறேன். துளசி ராமாயணம் வரிகள் நினைவில் இல்லை, முன்னர் படித்தது ஹிந்தியில் நினைவு வைத்துக் கொண்டு தான் சொல்கிறேன்.
ரசிகரே, நீங்கள் கேட்டிருப்பதும், யோசித்திருப்பதும் சாதாரணமாய் அனைவரும் நினைக்கக் கூடிய ஒன்றே. ஆகவே கவலை வேண்டாம்!
Thanx;-)
ReplyDeleteஉள்ளேனம்மா...
ReplyDelete