
தமிழ்த்தாத்தாவின் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்! அன்னாரின் புகழைப் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ!
"செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு
சுவை பெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத் தோன்றும் சாமிநாட்தப்
புலவன் குறைவில் சீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செவ்வியறியாதார்
இன்றெம்மை ஆள்வோராயினும்,
பன்னிய சீர் மஹாமஹோபாத்தியா
யப் பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ் செய்வாரேல்
முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்
இவள் பெருமை மொழியலாமோ?
நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க
குடந்தை நகர்க்கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே!"
உ.வே.ச தமிழ் எழுதுவதுதானே அவருக்கு செய்யும் அஞ்சலி?
ReplyDeleteசரி
:-))))))))))))
தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு எனது அஞ்சலிகள்:)
ReplyDelete