எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 29, 2012

சாதனை பல படைத்த பிரதமருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

இந்தியா கண்ட பிரதமர்களிலேயே மிகக் குறைந்த காலம் ஆட்சியில் இருந்தவர்களில் லால்பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும் ஆவார்கள். இருவருமே நேர்மையும், நாணயமும், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு தங்கள் பதவியைத் துஷ்பிரயோகம் செய்யாதவர்களாகவும் இருந்தனர். இந்தக்காலத்தில் இது அதிசயமாக இருக்கலாம். ஆனால் இது நடந்தது. சாஸ்திரிஜியின் பிள்ளை கல்லூரியில் சேரும்போது தன் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அவர் சொல்லிவிட, பிள்ளையும் கல்லூரிக்கு விண்ணப்பம் அளித்திருக்கிறார்.

தகப்பன் பெயர்: லால்பகதூர் சாஸ்திரி

தகப்பன் வேலை: இந்தியப் பிரதமர்

எல்லா விண்ணப்பங்களையும் பரிசீலித்தவருக்குத் தூக்கிவாரிப் போடப் பிரின்சிபாலுக்குச் செய்தி போக சாஸ்திரியின் பிள்ளையை வரவழைத்துக் கேட்க உண்மை தெரிகிறது. பிரின்சிபால் உடனேயே பிரதமரின் அலுவலகத்திற்குத் தொலைபேசிப் பிரதமரோடு பேச வேண்டும் என்று கேட்க, சில மணிகளில் பிரதமர் பேசுகிறார். பிரின்சிபால் உங்கள் பையன் என்று தெரிந்தால் கல்லூரியில் சேர்க்க மாட்டோமா? இது என்ன சோதனையா என்று வருந்த, இல்லை, ஐயா, அவன் என் பிள்ளை என்பதால் நீங்கள் உங்கள் கல்லூரியில் அவனைச் சேர்த்தால் நான் வருத்தப் படுவேன். அவன் வாங்கி இருக்கும் மதிப்பெண்கள் அவன் கேட்டிருக்கும் பாடத்திட்டத்திற்கு ஏற்றதாக இருந்தால், அவன் தகுதியுள்ளவனாக இருந்தால் அவனை உங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லை எனில் வேண்டாம்."

எந்தத் தகப்பனும் இப்படிச் சொல்ல மாட்டார். அதே போல் மொரார்ஜி தேசாயும். அவர் உயர் பதவியில் இருந்த சமயம் அவர் மகளோ, மகனோ, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க நினைத்து விண்ணப்பித்தால் இடம் கிடைக்கவில்லை. மொரார்ஜி ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் போதும்; இடம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் தன் பதவியைப் பயன்படுத்தி கல்லூரியில் சேர்க்க விரும்பவில்லை. நம் நாட்டில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதில் பெருமைப் படுவோம். அவருக்கு இன்று பிறந்த நாள். மொரார்ஜியின் காலத்தில் உண்மையாகவே தேனாறும், பாலாறும் ஓடத் தான் செய்தது. ரேஷன் கடைகளில் கூட்டத்தைக் காண முடியாது. எல்லா விலைவாசிகளும் கட்டுக்கடங்கி இருந்தன. ரயிலில் மூன்றாம் வகுப்பை ஒழித்துக் கட்டிவிட்டு இரண்டாம் வகுப்பை மட்டும் வைத்துக் கொண்டு அந்தப்பயணிகளுக்கும் வேண்டிய செளகரியம் செய்துகொடுக்கப் பட்டது இவர் ஆட்சியில் தான். எச்.எம்.படேல் என்ற ஒரு ஐசிஎஸ் அதிகாரி, நடுத்தரக் குடும்பஸ்தரை தைரியமாக நிதி மந்திரியாகப் போட்டார். வாயில் வெள்ளி ஸ்பூனோடு பிறக்காத காரணத்தால் அவரும் நடுத்தர, பாமர ஜனங்களுக்கான பட்ஜெட்டைப் போட்டார். அது நம் பொருளாதார மேதைகளால் குமாஸ்தாவின் பட்ஜெட் என விமரிசிக்கப் பட்டது. ஆனால் பண வீக்கம் என்னமோ கட்டுக்குள் இருந்ததை எவரும் பாராட்டவில்லை. கீழே திரு இன்னம்புராரின் மொரார்ஜி பற்றிய கட்டுரை வழக்கம் போல் பகிர்ந்திருக்கிறேன்.

இந்தியா கண்ட ஒரே நாணயமான பிரதமர். உண்மையாக நாட்டு மக்களை முன்னேற்ற நினைத்த பிரதமர். இவரின் ஆட்சிக் காலத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பதை ஒரு பெருமையாகவே நினைக்கிறேன். நாம் நினைத்து நினைத்துப் பெருமைப் பட்டுக்கொள்ளும் ஒரே பிரதமர். தன் சொந்தக் குழந்தைக்குக் கூட சிபாரிசு செய்யாத மனிதர். தன் பதவியை எந்த விதத்திலும் துர் உபயோகம் செய்யாத ஒரே மனிதர். இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.கேட்பார் பேச்சைக் கேட்டுச் செளத்ரி கெடுத்தார் எல்லாவற்றையும். எளிமை, பொறுமை, பணிவு, எதற்கும் கலங்காத திட சித்தம். மொத்தத்தில் ஸ்தித ப்ரக்ஞர் என்பதற்குத் தகுதியான ஒரே நபர்.

எங்கு காண்போம் இவரைப் போல் இனி??


*************************************************************************************அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29:

ரிக்கார்டு மனிதர்!

இன்றைய தினம் ஜனித்தவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான், ஜன்மதினம். அதுவே ஒரு ரிக்கார்டு. ஸ்வபாவமோ, பாவனையோ, அவரது ‘ராஜரிஷித்துவம்’ மற்றொரு ரிக்கார்டு; ‘நான் தான் ‘எவெர்’ ரைட்டு’ சுயச்சான்று மற்றொரு ரிக்கார்டு; கடிவாளமில்லாத, இடை விடாத, பிடிவாத எவெரஸ்ட் இவர் என்பது மற்றொரு ரிக்கார்டு; ‘வாக்கு சுத்தம்’ என்றால், வெட்டு ஒன்று: துண்டு பனிரண்டு! அதுவும் இடம், பொருள், ஏவல் பொருட்படுத்தாமல். இவர் பிரதமர் பதவி ஏற்றவுடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வாழ்த்துக்கூற வந்தார். தலைமை நீதிபதி பிரதமரை காண வருவது முறையன்று என்று மொழிந்தார்,இவர். இதுவும் மற்றொரு ரிக்கார்டு; உள்குத்து பகைவர்களால், ‘இது ஒரு கிறுக்கு/ நூறாம் பசலி/குரங்கு பிடி/... என்று அன்றாடம் சகஸ்ர நிந்தனை செய்யப்பட்டது, மற்றொரு ரிக்கார்டு; ‘சிறுநீராமுதம்’ பருகுவது மற்றொரு ரிக்கார்டு; படித்தது விஞ்ஞானம்; அவருக்கு பிடித்தது மெய்ஞ்ஞானமும், யோகமும். அதுவும் மற்றொரு ரிக்கார்டு; 21 வயதில் பிரிட்டீஷ் சர்க்காரின் உயர்பதவி -33 வயது வரை; அதையும் மற்றொரு ரிக்கார்டு என்று சொன்னால் மிகையாகாது. ஒரு காந்தியை நம்பி, அந்த பதவியை தொலைத்ததும், இன்னொரு காந்தியை நம்பி(?) அண்டி வந்த அரசியல் பதவியை தொலைத்ததும், மற்றொரு ரிக்கார்டு. இந்தியாவின் உயரிய விருது ‘பாரத ரத்னா’; பாகிஸ்தானின் உயரிய விருது ‘நிஷான் எ பாகிஸ்தான்’ இரு விருதுகளையும் பெற்ற பாரதமாதாவின் மைந்தன் இவர் தான் என்பதும் ஒரு ரிக்கார்டே.

உச்சகட்ட ரிக்கார்டு: 1977-79ல் இந்திய பிரதமராக இருந்த போது, உலக தேசீய தலைவர்கள் எல்லாரையையும் விட வயதில் மூத்தவர்் என்பதே. அந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விமான விபத்து. எதோ அன்றாட சம்பவம் போல் பாவித்து, இறங்கி வந்து விட்டார். ஒரு நிருபர் கேட்டதற்கு பதில்: பல் செட் உடைந்து விட்டது! (பேராசிரியரை நினைத்துக்கொண்டேன்!) இத்தனை சாதனை படைத்த ரிக்கார்டு மனிதர், நழுவ விட்ட ரிக்கார்டு: நூற்றாண்டு! இவருடைய பிறந்த தினம் 29 02 1896. மறைந்த தினம் 10 04 1995. பத்து மாதம் பொறுக்க மாட்டாரோ! இந்த மாஜியினால், அரசுக்கு செலவு, மாளிகை உபயம், தண்டச்செலவு ஒன்றும் இல்லை. வேலை போன பின், மும்பையில் மகனில் அபார்ட்மெண்டில், எளிமையாக வாழ்ந்தார். அது கூட ஒரு ரிக்கார்டு தான்.

எனக்கு இவரிடமிருந்து ஒரு ஏகலைவ பாடம். இவர் உதவி பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், நான் குஜராத் அரசு பணியில். இவரின் ஆளுமைக்கு அடியிலிருந்த சுங்க இலாக்காவோடு லடாய். இவருடைய பரம சிஷ்யரான ஹிது பாய் தான் எங்களுடைய முதல்வர். அவர் ஒரு நாள் என்னை கூப்பிட்டார். கையில் உதவி பிரதமரின் இரு வரி கடிதம். ‘ இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. உமது வழக்குக்கு வெற்றி. வாழ்த்துக்கள்’ அதன் பின்னணி, சுங்க இலாக்காவின் மீது நான் தொடுத்த தர்மயுத்தம். அது வெற்றி பெற்றால், எல்லா மாநிலங்களும் கோடிக்கணக்கில் பயன் அடையும். வழக்கோ இழுத்தடிக்கப்பட்டது. இவருக்கு, முதல்வரிடமிருந்து அனுப்புவதாக, ஒரு கடிதம் தயார் செய்து கொண்டு போய், முதல்வரிடம் போய் நின்றேன், சில மாதங்களுக்கு முன். ‘வேறு வினை வேண்டாம். சிபாரிசா கேட்கிறாய் என்று என்னை கோபிப்பார். நீ இலாக்கா-யுத்தம் நடத்து,ராஜா.’ என்றார், 'இ'ங்கிதமாக! அப்படியே நடந்தது. ஆறு மாத தாமதம். கெலித்த பின் தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய் ( இப்போது தான் பெயர் வருகிறது) வாழ்த்து அனுப்பினார். நோ சிபாரிசு என்றால் காந்திஜி, ராஜாஜி, மொரார்ஜி. இப்போதெல்லாம் 2ஜி! சிபாரிசு கந்தரகூளம். ஆண்டவா! எங்கள் நாட்டை இப்படி உருக்குலைத்து விட்டாயே. சிபாரிசு என்பது சர்வசாதாரணம். ஆனால், அது விஷவித்து. முதலில் குமாஸ்தா வேலைக்கு சிபாரிசு. அதுவே காலப்போக்கில் 2ஜி பகல் கொள்ளையாயிற்று. சிபாரிசுகளை தவிர்ப்பதில் மொரார்ஜி தேசாயின் கறார் பாலிசியில் ஒரு பின்னம் கூட மற்றவர்களால் காப்பாற்ற முடிவதில்லை.

ஐயா குஜராத்தின் பதேலி என்ற கிராமத்தின் மண். தந்தை பள்ளி ஆசிரியர். பலமுறை சிறை என்றவர். பழைய பம்பாய் மாகாணத்தில் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தவர். மத்திய அரசில் வணிகம் & தொழில் இலாக்கா அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்து, கட்சித்தொண்டுக்காக, பதவியிலிருந்து விலகி இருந்து, பிரதமர் பதவிக்கு 1964லிலும் 1966லும் போட்டியிட்டு தோல்வியுற்றார். எமெர்ஜென்சியின் போது கைதும் செய்யப்பட்டார். அது காலாவதியான பின் 1977ல் ஜனதா கட்சி பிரதமரானார். உள்குத்து, அவரை 1979ல் விலக வைத்தது. அவருடைய மகனால் இவருக்கு கெட்ட பெயரும் வந்தது. ஆதாரத்துடன் குற்றச்சட்டுக்கள் வந்ததாகத் தெரியவில்லை. இவருக்கும், அமெரிக்க வேவுத்துறைக்கும் தொடர்பு இருந்ததாக, ஸேமூர் ஹெர்ஷ் என்ற பிரபல இதழாளர் கூறினார். அதை ‘பைத்தியக்காரத்தனம்’ என்ற மொரார்ஜி ஒரு மிலியன் டாலருக்கு நஷ்ட ஈடு வழக்கு ஒன்று தொடர்ந்தார், அமெரிக்காவில். இருதரப்பிலும், உருப்படியாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை.

இவருடைய டாப் ரிக்கார்ட்: 1966லியே திருமதி.இந்திரா காந்தி ஆளுமை புரிய லாயக்கு இல்லை என்று சொன்னது. நின்னா ரிக்கார்ட்! உக்காந்தா ரிக்கார்ட்! அது தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய்!

இன்னம்பூரான்

29 02 2012

http://www.timescontent.com/photos/preview/13412/Indira-Gandhi-Morarji-Desai.jpgஉசாத்துணை:

http://www.independent.co.uk/news/people/obituary-morarji-desai-1615165.html

Sunday, February 26, 2012

இதனால் அறிவிப்பது என்னவெனில்!!! :(

http://ilavarasijohnson.blogspot.com/2010/01/chidambara-ragasiyam.html//சிதம்பர ரகசியம் தொடரைத் திருடியவர். இன்று வரை அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை. அந்தப் பதிவுகளை அழிக்கவும் இல்லை.


http://tinyurl.com/732s45h//மழலைகளில் வரும் என்னுடைய பிள்ளையார், பிள்ளையார்
[Open in new window]
தொடரை இவரின் இந்த வலைப்பக்கத்தில் அப்படியே பார்க்க முடிகிறது. என்ன ஒரே ஒரு ஆறுதல், நான் கேட்டப்புறம் {?} என்னுடைய பெயரைப் போட்டிருக்கிறார். ஆகையால் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

http://tinyurl.com/7qewxh2 இது யாரோ திருப்பாவை விளக்கம், ராதானு போட்டிருக்கு.
[Open in new window]
உள்ளே போனால் அப்படியே நான் எழுதிய ராமாயணத் தொடர். ஆர்ஷியா சத்தார் பற்றிய குறிப்புகளை மட்டும் நீக்கி விட்டுப் போட்டிருக்கார். மற்றபடி கோசலை பாடின தாலாட்டுப்பற்றி நான் எழுதி இருந்த வாக்கியம் கூட எழுத்துக்கு எழுத்து அப்படியே. அந்தப் பாடலை திரு விஎஸ்கே அனுப்பி நான் பப்ளிஷ் பண்ணி இருந்தேன். அதைப் போடவில்லை. மற்றபடி ராமாயணத் தொடர் காப்பி, பேஸ்ட் ஆகி இருக்கு! என் பெயரைப்போடவில்லை. ஆனால் மழலைகளில் இருந்து எடுத்திருக்காங்க போல. படங்கள் கூட நான் தொடரில் போட்டு வந்த அதே படங்கள் தான். இவங்க ப்ரொஃபைலும் இல்லை; பெயரும் இல்லை. பின்னூட்டம் கொடுக்கும் வசதியும் இல்லை.

ஏன் இப்படித் திருடணும்? கர்ணன் பத்தி நான் எழுதினதையும் இப்படித்தான் ஒருத்தர் காப்பி பண்ணிப் போட்டிருந்தார். ஒரே விஷயம் எல்லாருக்கும் தெரிவது சகஜமே. ஆனால் எழுத்துக்கு எழுத்து அப்படியேவா வரும்? என் எழுத்து நடை பழக்கப்பட்டவங்களுக்குச் சில இடங்களில் நான் பயன்படுத்தும் வார்த்தைகள் தெரியும். மேலும் என் எழுத்து எனக்குத் தெரியாதா? என்னோட பதிவுகளோடும் ஒப்பிட்டுப் பார்த்தாச்சு.

இந்தத் தொந்திரவு தாங்காமலேயே கண்ணன் கதையையும்,செளந்தரிய லஹரியையும் இடம் மாத்தினேன். :((((( ஒரு சிலர் படிச்சால் போதும்.

இன்றைய புலம்பல் இது! :((((((

இதனால் வலை உலகில் உள்ள பதிவுத் திருடும் நண்பர்களுக்குச் சொல்லுவது என்னவெனில் என்னுடைய படைப்புக்களைத் திருடுவதற்கு முன்னர் சொல்லிவிட்டுத் திருடவும். அவை என்னுடைய உரிமை. யாரும் திருட முடியாது.

Friday, February 24, 2012

பூவெல்லாம் கேட்டுப் பார்த்தேன்!

நேற்றுச் சிரிப்பு தினமாகப் போனது. முதல் சிரிப்பு மேரே பாப், பஹ்லே ஆப் படம் பார்த்ததின் விளைவு. ஓம்புரியைக் காமெடியனாகப் பார்த்த வருத்தம் என்னமோ தீரலை. :( நல்ல தியேட்டர் ஆர்டிஸ்ட். கெடுத்துட்டாங்க. வேறே யாரும் கிடைக்கலையா? ஓம்புரி, ஜெனிலியா, அக்‌ஷய் கன்னாவைத் தவிர மத்தவங்க எல்லாம் சீரியல் நடிகர்கள். அர்ச்சனா புரன்சிங்கை அடையாளமே கண்டுபிடிக்க முடியலை. ஒரு காலத்தில் சீரியலில் கொடிகட்டிப் பறந்தார். அதோடு, அட??? நம்ம ஷோபனா! துக்கினியூண்டு ரோலில்; கடைசியில் தான் கொஞ்சம் கொஞ்சம் வரார். எப்போ ஒடிந்து விழுவாரோனு பயம்ம்மாவே இருந்தது! நல்லவேளையா விழலை! :))))

அடுத்துச் சிரிப்புப் பூவெல்லாம் கேட்டுப் பார். ஒரு சினிமாவே அதிகம்; இன்னொண்ணானு நினைச்சேன். ஆனால் நேற்று என்னமோ வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த சினிமாவைப் பார்க்கறாப்போல் ஆச்சு. இங்கே தொலைக்காட்சியைச் சமைத்துக்கொண்டே பார்க்கும்படியா வேறே வைச்சிருக்கா. வசனங்கள் காதில் வந்து விழுது. கோவை சரளா ஞாபக மறதி டாக்டரா வந்து குழப்படி பண்ணறது அருமை. நினைச்சு நினைச்சுச் சிரிக்க முடிந்தது. இம்மாதிரியான ஆரோக்கியமான சிரிப்புக்கள் நிறைந்த காட்சிகளைப் பார்த்தே எத்தனை நாளாச்சு! அதுக்காகவே பார்க்கலாம். மற்றபடி சூர்யா, ஜோதிகாவுக்கு முதல்படமாமே? அப்படியா?????????? இங்கே வந்தால் தான் சினிமா பார்க்க வேண்டி இருக்கு. இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் பாதியிலே அணைச்சுட்டுப் போயிடுவேன். அது ஏன்????????????????????????

Tuesday, February 21, 2012

உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்!

ஃபெப்ரவரி 21-ம் தேதியை யுனெஸ்கோ தாய்மொழி தினமாக அறிவித்து அதை ஐநா 2008-ஆம் வருடம் பிரகடனப் படுத்தியதன் தொடர்பாக மின் தமிழில் இன்னம்புரார் எழுதி இருந்த கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தாய்மொழியின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளின் சிறப்பையும் அவற்றையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியுள்ளார். தற்காலச் சூழ்நிலைக்குத் தேவையான பதிவு. அதோடு இந்தியாவிலேயே முதல் முதலாகத் தாய்மொழியை அரசு மொழியாக அறிவித்த ஒரே மாநிலம் குஜராத் தான். அந்த மாநில மக்கள் ஆங்கிலமும் பேசுவார்கள்; ஹிந்தியும் தெரியும்; இங்கே போல் அங்கேயும் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா தான் ஹிந்தி தனித்தேர்வுகளை நடத்துகிறது. ஆனால் அம்மக்கள் தங்களுக்குள்ளாக குஜராத்தியில் தான் பேசிக்கொள்வார்கள். அது எவ்வளவு படித்தவர்களானாலும் குஜராத்தியில் பேச மறப்பதில்லை. இன்று இந்தியாவிலேயே தன்னிறைவு பெற்றதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் ஒரே மாநிலமும் குஜராத் தான். இனி இன்னம்புராரின் கருத்துகள். வழக்கத்தை விடப் பெரிய பதிவு.
******************************************************************************************அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21

தாய்மொழி

தமிழ் என்னுடைய தாய்மொழி. இன்றைய தினம் தாய்மொழி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழ் என்னை வரித்துக்கொண்டது ஒரு பெரும் பேறு. தமிழர்கள் யாவரும் தமிழ் விழா எடுக்க வேண்டும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல; தினந்தோறும், தமிழுக்காக கொஞ்சநேரம் செலவழிக்க வேண்டும். சிறிதளவாவது, தமிழ் இலக்கியங்களை படிப்பதில் செலவிடவேண்டும். சிறிதளவாவது இலக்கணம் அறியவேண்டும். நான் தமிழார்வத்தினால் உந்தப்பட்டு, சில வருடங்கள் முன்னால் சென்னை வந்த போது, வாரம்தோறும், ஆர்வலர்களை தருவித்து ஒரு தமிழ் வட்ட மேஜை இயக்க திட்டமிட்டேன். நடக்கவில்லை. பேட்டைக்கு ஒரு சங்கம் தமிழார்வத்தை பரப்ப வேண்டும். இது தலைவாசல்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. உவமை சற்றே மாறி அமைந்திருந்தாலும், உவகையை உணர்த்துகிறது என்று கருதுகிறேன். அவரவருக்கு அவரவருடைய அன்னை தெய்வம். ஆகவே, அவரவரின் தாய்மொழி பற்றை போற்றுவோமாக;மதிப்போமாக; ஊக்குவிப்போமாக. இது முதல் படி.

நமது தாய்மொழியின் தொன்மை, பெருமை, இலக்கிய மேன்மை, சுவை, கலையுடன் தொடர்பு, இறை தொண்டு, மொழி நுட்பங்கள், விமர்சனம், ஒப்புமை ஆகியவை பற்றியும், தொடர்ந்து வரும் பல கருத்துக்களையும் புரிந்துகொண்டு, மற்றவர்க்கு அறிவிப்பது நற்பயனை பயக்கும். அன்றாட அளவளாவுதல்,வட்டமேஜை, நூல்கள், சொற்பொழிவுகள், விழா எடுப்பது, இணைய தளம் எல்லாம் உதவும். அது இரண்டாவது படி.

அந்த கடமையை செவ்வனே செய்ய, நாம் நமது தாய்மொழியில் வல்லுனர் ஆகவேண்டும். அம்மை மடியில் அமர்ந்து பேசிய மழலையும், பள்ளிப்பாடங்களும், தேர்வில் பெற்ற மதிப்பீடுகளும், அன்றாட வாழ்க்கையில் கூடி வரும் பாமரகீர்த்திகளும், கிளை மொழிகளுக்கும், பேசும் மொழிக்கும், நாட்டுப்புற வரவுகளுக்கும் ஆதரவும், ஊக்கமும் அளிப்பதும், நாள் தவறாமல் தமிழிலும், மற்ற மொழிகளிலும் புதியவற்றை தேடி அறிந்து கொள்வதும்,இலக்கியம், இலக்கிய சுவை, இலக்கிய விமர்சனம், கருத்து பரிமாற்றம் ஆகியவை திறனைக்கூட்டும். மொழி ஒரு கருவி. ஓசையை அசைத்து, சொல் அமைத்து, அதன் பொருளை தெரிவிப்பது மட்டுமே மொழிக்கு இட்ட பணி என்றால், இலக்கியம் பிறக்காது; கற்பனை தோன்றாது. அது வெம்பிய பிஞ்சு. சார்லஸ் பெகு என்ற கவிஞர், ‘சொல்லின் தன்மை வேறுபடும். சில படைப்பாளிகள், தன் அடிவயிற்றில் இருந்து அதை எடுப்பார்கள்; சிலர் ஜோல்னா பையிலிருந்து...’ என்றார். இதை புரிந்துகொண்டால், தமிழன்னை நம்மை உவகை பொங்க வரவேற்பாள். இது மூன்றாவது படி.

சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம். நமக்குள் தமிழ் பேசிக்கொள்வதற்கு தடை யாது? ஏன் சரமாரியாக, ஓட்டைக்கப்பலில் வந்து இறங்கி வந்தவன் போல, ஆங்கிலத்தில் பிளந்து கட்டுகிறோம்? தமிழ் வீடுகளில் தமிழில் பேசிக்கொள்வது தான் பண்பு, சிறார்களுக்கு முன்னுதாரணம். சில சமயம் ஆங்கிலத்தில் பேசுவது இங்கிதம். ஒரு மாநிலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே தாய்மொழியில் அரசு அருமையாக நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமயம் முதல்வர் என்னை குறிப்பிட்டு, ‘இவருக்கு நாம் பேசுவது, நுட்பங்கள் உள்பட, புரிந்தால் நமக்கு தான் நன்மை; ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்றார். அந்த பெருந்தன்மை நமக்கும் வேண்டும். மற்றபடி தமிழுக்கு முதன்மை. திரு.வி.க. அவர்கள் மார்க்கபந்து. இது நான்காவது படி.

வடமொழி என்று முத்திரையிட்டு தமிழார்வலர்களில் பலரால் நிந்திக்கப்படும் சம்ஸ்க்ருதம், இந்தியாவின் நன்கொடை மனித இனத்திற்கே. ‘சம்ஸ்க்ருதம்’ என்ற சொல் ‘சிறப்பான அமைப்பு என்ற பொருள்படும் காரணப்பெயர். அம்மொழியை பழிப்பது ஒரு தாழ்வு மனப்பான்மை. தேவையே இல்லை. தமிழ் எந்த வகையிலும் வடமொழிக்குக் தாழ்ந்தது அன்று. அத்தகைய பாகுபாடு, மொழிகளுக்கு ஏற்புடையது இல்லை. இரு மொழிகளும் ஆயிரக்கணக்கான வருடங்களாக, நம் சமுதாயத்தின் இரு கண்களாயின. தமிழறிஞர்களில் பெரும்பாலோர் வடமொழியில் விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர். வடமொழியை வரவேற்கும் மனநிலை நன்மை பயக்கும். கிரந்தம் பற்றி சர்ச்சை செய்த வண்ணம் இருக்கிறோம். கிரந்தம் பரவுவதற்கு நாம் எல்லாரும் உழைக்கவேண்டும். இது ஐந்தாம் படி.

ஆங்கிலம் உலகளாவிய பொது மொழி என்பதை யாவரும் அறிவர். ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் ஆதாயமே ஒழிய தீமை யாதும் இல்லை. ஆங்கில மோகம் வேண்டாம். ஆங்கில புலமை வேண்டும். இன்று உலகம் குறுகி விட்டது. ஆங்கிலம் தெரியாதவர்களால், திரைகடலோடியும் திரவியம் தேட இயலாது. திக்கு, திசை தெரியாமல் திண்டாடவேண்டும். மேலும், பலமொழிகளில் இருக்கும் இலக்கியம்,வரலாறு, எண்ணில் அடங்கா அறிவியல் தளங்களுக்கு ஆங்கிலம் திறவு கோல்.இந்தியாவில் ஹிந்தியை மதிப்பது நலம். ஆனால் தேசிய மொழி என்பதால் எழும் வெறியை முற்றும் தணிக்கவேண்டும். இந்த விவேகம் ஆறாவது படி.

அண்டை மாநில மொழிகளை நிந்திப்பது அறிவீனம். கேரள கதக்களியும் வேண்டும்; சுந்தரத்தெலுங்கும் வேண்டும்; மஸ்தி வெங்கடேச ஐயங்காரின் இலக்கியமும் வேண்டும். இயன்றவரை அண்டை மாநிலமொழிகளையும் ஓரளவு கற்றுக்கொள்வோம். இந்த மனித நேயம் நமது உறவுகளை உறுதிப்படுத்தும். ஏழு படி ஏறி விட்டோம்.

இன்றைய உலகில் ஐரோப்பிய மொழிகளுக்கு மவுசு ஜாஸ்தி. விஞ்ஞானம் படிக்க ஜெர்மானிய மொழி, கலையார்வத்திற்கு ஃபெரன்ச் என்பார்கள். எல்லா மொழிகளிலும் எல்லாம் இருக்கின்றன. எல்லாமும் இல்லை. தற்காலம் ஸ்பானிஷ் மொழி பரவிய வண்ணம் இருக்கிறது. தென் அமெரிக்கக்கண்டத்தில் அதற்குள்ள ஆளுமை தான் காரணம். இன்று தமிழ்நாட்டில் பலமொழிகளை கற்க வசதிகள் பெருகி உள்ளன. ஒரு காலத்தில் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ள வசதியே இல்லை. ஜெர்மானியத்துக்கு ஒரு இடம். ஃபெரன்ச் மொழிக்கு ஒரு இடம். அவ்வளவு தான். இருக்கும் வசதிகளை, தேவைக்கேற்ப, பயன் படுத்திக்கொள்வது சிலாக்கியம். எட்டாவது படியில் நாம்.

எட்டாவது படியிலிருந்து குனிந்து எட்டிப்பார்த்தால்...

யுனெஸ்கோ ஸ்தாபனம் ஃபெப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி விழா தினமாக,1999 ல் அறிவித்து, அதை ஐ.நா. 2008ல் பிரகடனப்படுத்தியதின் பின்னணி தெரியும்.

‘தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...’ என்று நாம் பாடினால், ‘ஸோனார் பங்களா’ (‘பொன் விளைந்த களத்தூர்’) என்று தமது தேசாபிமானத்தை வெளிப்படுத்தும் பங்களா தேஷ் நாட்டில் 1952 லிருந்து இந்த விழா எடுக்கப்படுகிறது. பெங்காலி மொழியை ஒழிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் 1948லேயே தீவிரம் காட்ட, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர்; சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் இருப்பது சின்னம். நாடு இரண்டாகப்பிரிந்தது விளைவு. அந்த நினைவு மண்டபத்தில் இந்த தினத்தில் பத்து லக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். 23 கோடி மக்கள் அந்த மொழி பேசுவதாக, ஒரு புள்ளி விவரம். வரலாற்று நோக்கில் பார்த்தால், பிரச்னை தோன்றியது,1905ம் வருடத்தில் கர்ஸான் பிரபு வங்காளத்தைத் துண்டித்தபோது. கொதித்தெழுந்தனர் மக்கள். துண்டுகள் இணைக்கப்பட்டன, 1911ல். தழும்பு நீங்கவில்லை. அது மறுபடியும், வேறு காரணங்களால் வெடித்துக்கொண்டது, 1947ல். எனினும் பாஷாபிமானம் வங்காளம் முழுதும் ஒன்றே.

மூன்று மாதங்கள் முன், நாவன்னா. காவன்னா, '...தமிழ் இலக்கியம் அறிந்தோர் அறிவியல் என்று வரும்
போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.அறிவியல் அறிந்தோர் தமிழில் அறிவியல் இல்லை என்று கருதும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்று சொன்னது சாலத்தகும். இந்த ஆலோசனை எல்லாத்துறைகளுக்கும் ஏற்புடையது. ஓஹோ! ஒன்பதாவது படி ஏறி, அதே எட்டில் பத்தாவது படி அடைந்தோம்.

அங்கிருந்து எட்டிப்பார்த்தால்...

இன்றைய செய்தி: லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள். இது பூதாகாரமான பிரச்னைகளுக்கு வித்திட்டிருக்கிறது. ஏனெனில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரஷ்ய இனம். ரஷ்யா முரட்டு அண்ணாச்சி வேறே. ஆனால், அன்றொரு நாள், வலுக்கட்டாயமாக ரஷ்யர்களை எக்கச்சக்கமாக குடியேற்றம் செய்ததை லாட்வியர்கள் மறக்கவில்லை. தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும். நாமும் எட்டு படிகள் ஏறி எட்டிப்பார்க்கலாம். அத்துடன் மொழிகள் நசித்துப்போவதைத் தடுக்கலாம். ஆறாயிரம்/ஏழாயிரம் மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன. அந்தமான் தீவுகளில் ஒரு மொழி அண்மையில் நசித்தது. நாம் யாவரும், அவரவது வட்டாரமொழிகளை காப்பாற்ற வேண்டும். பழங்காலம் போல் இல்லாமல், ஒலியும், ஒளியும், இணைய தளத்தில் சக்கைப்போடு போடுகின்றன. வேறு என்ன வேண்டும், பராபரமே!

இன்னம்பூரான்

21 02 2012

http://www.newsonweb.com/newsimages/July2009/8613a8ac-d791-4e48-bdb4-d74f984c5d1a1.jpg
படத்தில் இருப்பவர் எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஸ்தாபகர்களில் ஒருவர் ஆன சுபாஷிணி ட்ரெம்மல்.


பி.கு: ‘தமிழ்’ என்று கேட்டதும் வந்த படம் மேலே. ‘இன்னாது இது! பாமர கீர்த்தி ‘ஃபில்மா காட்றே! இன்னா நினச்சுக்குணே’ ந்னு யாராவது கேட்றுவாகளோ என்று நடுநடுங்கி, எடுத்த சித்திரம் கீழே. ஆளை விடு சாமி!

http://www.shakthimaan.com/ta/downloads/computer/tamil-keyboard-unicode.png


Monday, February 20, 2012

தாத்தாவோட பிறந்த நாள் இன்னிக்கு!

காலம்பரயே போடணும்னு நினைச்சுட்டு அப்புறமா ஏதோ வேலையிலே போடமுடியாமப் போச்சு. நாள் முடியறதுக்குள்ளாவது போடலாம்னு போட்டாச்சு! தாத்தாவுக்கு அஞ்சலி. இது வரச்சே இந்தியாவிலே 20-ஆம் தேதியா வந்திருக்கும். ஆகையால் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா. ரொம்ப மன்னிச்சுக்குங்க. அநியாயத்துக்கு மறந்திருக்கேன். :((((((

Friday, February 17, 2012

சினிமாவோ சினிமா!!!!!!!!!!!!!!!

Wednesday== நிறையப் பார்த்திருந்தாலும் மறுபடியும் பார்த்தேன். ஹாட்ஸ் ஆஃப் டு அனுபம் கேர், நஸ்ருதின் ஷா. அதிலும் நஸ்ருதின் அப்படியே மும்பையின் சாமானியனை, தினம் தினம் லோகல் ட்ரெயினில் வேலைக்குச் சென்று வரும் மனிதனாக வாழ்ந்து காட்டி இருப்பார். அனுபவித்துப் பார்த்தேன். நஸ்ருதின் ஷாவின் நடிப்பை, நடிப்பா அது! இல்லை. அவர் தான் தினம் தினம் சந்திக்கும் இளைஞனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகி இருந்ததையும், சம்பவ தினத்தன்று தான் மட்டும் அந்த ரெயிலில் பயணிக்க முடியவில்லை, உடல்நலக்கோளாறால் விடுமுறை எடுத்ததையும், அந்த இளைஞன் ரெயிலில் பயணம் செய்தவன் இல்லாமல் போனதையும் ஒரு வறட்சியான குரலில் வர்ணிக்கையில் மனம் பதறும்.

Dar = பார்த்ததில்லை; பார்த்தேன். கொஞ்சம் செயற்கையான காட்சிகள் இருந்தாலும் படம் பரவாயில்லை. ஷாருக் கானுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த படமாமே. :)))

Rab Ne Bana di Jodi = இதுவும் ஒரு ஷாருக் கான் படம் தான். படத்தைப் பார்க்கறச்சே சிப்பு சிப்பா வந்தது. அந்தப் பெண் நடனம் ஆடப் பழகப் போறச்சே கூடத் தன்னோட ஜோடியா ஆடுவது தன் கணவன் தான் என்றே தெரியலையாம். என்ன தான் அவங்களுக்குள்ளே சரியான உறவு இல்லைனாலும் நடை, பாவனை, பேச்சில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சொற்கள், ம்ஹும், இன்னும் எத்தனையோ இருக்கு. கண்டு பிடிச்சிருக்கலாம். கண்டு பிடிக்க முடியலையாம். தலையை மாத்தி வாரிக்கொண்டு ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மீசை வைச்சுக் கொண்டு வந்தால் ஏமாந்துடுவாளாம் வேறே யாரோனு. முக ஜாடை கூடவா மாறும்! பேத்தலோ பேத்தல்!

Dilvale Dulhaniya Le Jayenge = simply implausible! :(

Bhoot = OK. ஆனாலும் என்னவோ இடிக்குது. அது என்ன????

Fanaa = இதுவும் அப்படித்தான், கண்ணே தெரியாமல் இருக்கும் பெண் முதல் முறையா டெல்லி போறாளாம். அப்பா, அம்மா கூட வரலை. நண்பர்களோடு(பெண்கள் தான்) போகிறாள். போற இடத்தில் டூர் கைடின் பேச்சையும், அவனுடைய ஷாயர் பாடும் திறமையைக் கண்டும் மயங்கிடறாளாம். அவனோட சுத்துவதோடு காந்தர்வ முறைப்படி கல்யாணமே பண்ணிக்கிறா. திரும்பி ஊருக்கு வருகையில் பாதியிலேயே காதலர் ரெயிலில் இருந்து தூக்கிட்டு வந்துடறார். அவர் சொன்னதாலே கண் ஆபரேஷனும் பண்ணிக் கண் தெரிகையில் அப்பா, அம்மா வராங்க. ஆனால் இவர் குண்டு வெடிப்பில் இறந்துட்டதாச் சொல்றாங்க. மிச்சம் கதை தான் அப்புறமா. படம் அறுவை. இந்தப் படத்தைப் பாரத்துட்டு எனக்கு எங்கே தேசபக்தி அதிகம் ஆயிடப் போகுதேனு நம்ம ரங்க்ஸ், மருமகள் ரெண்டு பேரும் பயந்தாங்க. நல்லவேளையா இருந்ததும் குறைஞ்சுடுமோனு தோணிப் போச்சு! :P :P:P:p அத்தனைக்குச் செயற்கையான சம்பவங்கள்.

நல்ல சினிமா எப்போ, என்னிக்குப் பார்க்க முடியும்?? கடைசியாப் பார்த்தது காஞ்சிபுரம்.

Tuesday, February 14, 2012

அப்பு டேட்ஸ்! அப்புவின் கோபம்! :(

வேறே வழியில்லாமல் மெம்பிஸில் இருந்து கிளம்பறாப்போல் ஆச்சு. அங்கே குளியலறை ஒன்றில் நீர்க்கசிவுக்காக ரிப்பேர் செய்யணும். இன்னொரு குளியலறை+டாய்லெட்டில் ம்ஹ்ஹும்,,,, முடியலை! :)))) டோக்கன் சிஸ்டம்! அதோட குளிர் வேறே நம்ம ரங்க்ஸுக்கு ஒத்துக்கலை. ஜன்னல் வழியே வெளியே பார்த்தா ஜவ்வரிசி கொட்டறாப்போல் சிலநாட்கள், பஞ்சுப்பொதி போல் சிலநாட்கள் ஐஸ் பொழியும். அதைப் பார்த்ததும் இங்கே இவருக்கு இன்னமும் குளிர ஆரம்பிக்கும். :(

நம்ம கதையே வேறே. அன்டார்டிகா குளிரில் கூடத் தாக்குப் பிடிக்கும் அதிசய ஆஸ்த்மா நமக்கு. ஆனால் நம்ம தோல் இருக்கே ரொம்ப ரொம்ப சென்சிடிவ் டைப். அது ரொம்பவ்வ்வ்வ்வ்வ்வே வறண்டு போய் அரிப்பு அதிகம் ஆகி, ரத்தம் வந்து, அதைத் தொடர்ந்து மூக்கில் இருந்தும் ரத்தம் வர ஆரம்பிச்சு, இருக்கிற தொல்லை போதாதுனு என்னோட ருமாட்டிக் பிரச்னையும் ஜாஸ்தி ஆக, அங்கே இருப்பது ஆபத்து என மண்டையில் விளக்குப் பளிச்சிட, ஹூஸ்டன் வந்து விட்டோம். அப்புவுக்குக் கோபம். கிளம்பும் அன்று முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. ஒருமாதிரியாகப் புரிய வைச்சிருந்தது. அப்புறமா திடீர்னு கிளம்பறதைப் பார்த்தா அழுமேனு சொல்லிக் கொண்டே இருந்தோம். ஆனாலும் அதுக்குக் கோபம். கோபம் கோபம் தான்.

I miss you very much thatha & patti. will you remember me? அப்படினு கேட்டது.

என்னத்தைச் சொல்ல! எப்படியானாலும் இந்தியா போயாகணுமேனு சொன்னோம். இங்கேயே இருக்க முடியாது என்பதையும் சொன்னோம். இந்த விசா விசானு ஒண்ணு இருக்கே அதைப் பத்தி எல்லாம் அப்புவுக்கு என்ன புரியும். பல வருடங்கள் முன்னர் ஹிந்துப் பத்திரிகையில் ஒரு ஞாயிறில் இதைக் குறித்த ஒரு கட்டுரை வந்திருந்தது. கட்டிங் கூட வைச்சிருக்கேன், (இந்தியாவில்) வெகுநாட்கள் கழித்து மகளைப் பார்க்கக் காத்திருந்த தந்தை, மகளுக்கு க்ரீன் கார்ட் பிரச்னையால் கடைசியில் வரமுடியாமல் போனதைப் பற்றியது. இதே கூத்து எங்க வீட்டிலும் நடந்திருக்கு.

என்னவோ! :(

Sunday, February 12, 2012

அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.

மின் தமிழ் நண்பர்களுக்கு,

வணக்கம். நான் மெம்பிஸ் வரப் போகும் செய்தி தெரிந்ததில் இருந்தே திரு இன்னம்புரார் என்னை இங்குள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்த்து எழுதச் சொல்லி வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத சொந்தக் காரணங்களால் என்னால் எங்கும் செல்ல முடியாமல் போனதோடு நாளை ஹூஸ்டனும் திரும்புகிறேன். ஆகவே என்னால் மார்ட்டின் லூதர் கிங்கைக்கொன்ற இடத்துக்கோ, லிங்கனைக் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கோ செல்ல முடியவில்லை. என்றாலும் இன்றைய பிப்ரவரி 12அன்றொரு நாள் தொடருக்கான விஷயத்துக்கு லிங்கனின் பிறந்த நாள் என்பதால் என்னை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். ரொம்பத் தயங்கினேன். அவரைப் போல என்னால் ஜீவன் ததும்படியான எழுத்துக்களில் எழுத முடியாவிட்டாலும் ஓரளவுக்குத் தொகுத்துள்ளேன். இதைத் தொடர்ந்து அவரின் அனுபந்தமும் வரும். நாளை தான் இங்கே பிப்ரவரி 12 என்றாலும் நாளை முழுதும் பயணத்தில் இருப்பதால் இன்றே போடுகிறேன். இந்தியாவில் பிப்ரவரி 12 வந்திருக்குமே. அதிக நீளமான பதிவுக்கு மன்னிக்கவும்.
**************************************************************************************************************************************************************************


இந்தப் பையன் எப்போப் பார்த்தாலும் படிச்சுட்டே இருக்கான்; இவன் எங்கே உருப்படப்போறான்?” தந்தை கரித்துக் கொட்டினார். ஆனால் தாய்க்கு நம்பிக்கை இருந்தது. “இல்லை; இவன் பெரிய ஆளாக வரப் போகிறான்.” என்று நம்பிக்கையுடன் மகன் தலைமுடியைக் கோதிக் கொடுத்தாள், “மகனே, பள்ளிக்குச் செல்!’ என அனுப்பி வைத்தாள். இத்தனைக்கும் மாற்றாந்தாய் அவள். சொந்தப் பிள்ளை இல்லை. மூத்தாள் பிள்ளை. பள்ளிக்குப் போகையிலேயே பிள்ளைக்குப் பதினொரு வயசு. சில நாட்கள் போவான்; பல நாட்கள் போக முடியாது.

தந்தைக்கு மகன் ஏதேனும் ஒரு பண்ணையில் வேலைக்குப் போனான் எனில் வரும் ஒரு சில சென்ட்களே பிரதானமாக இருந்தது. கஷ்டப்பட்ட குடும்பம். முதலில் கென்டுகியில் இருந்தனர். முதல் மனைவி நான்சி இருந்தாள் அப்போது. பின்னர் இன்டியானா வந்தனர். அங்கே தான் நான்சி இறக்க நேரிட்டது. பின்னர் தந்தையான தாமஸ் லிங்கன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆபே என அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் லிங்கனுக்கு மாற்றாந்தாய் அருமையானவளாக அமைந்தாள். இருந்தும் தந்தை மாதா மாதம் கிடைக்கப் போகும் எட்டு டாலருக்காக ஆயிரம் மைல் தள்ளி இருக்கும் நியூ ஆர்லியன்ஸுக்கு மகனை வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கேதான் முதல் மாற்றம் லிங்கனின் மனதில் ஏற்பட்டது. அடிமைகள் அங்கே சந்தையில் விற்கப்படுவதைக்கண்டு மனம் வருந்தினார் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினார். பின்னர் நியூ ஆர்லியன்ஸ் திரும்பி வந்த ஆபேக்கு 21 வயசும் ஆகிவிடத் தன்னந்தனியாகத் தன் சுய சம்பாத்தியத்தில் வாழத் தொடங்கினார்.

பள்ளிப்படிப்பே இல்லாமல், கிடைத்த புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்ட லிங்கன் இல்லினாய்ஸ் மாகாணத்தில் பல ஊர்களில் பல வேலைகள் செய்து நியூ சலேம் என்னும் ஊருக்கு வந்து அந்த ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுப் பின் ஒரு தேர்ந்த வக்கீலாக ஆனது தனிக்கதை. பார்க்க இங்கே.
http://www.abrahamlincoln.org/?gclid=CNmB6Jillq4CFaFeTAodTl10eA
http://en.wikipedia.org/wiki/Abraham_Lincoln
1847- ஆம் ஆண்டு தன் மாவட்டப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்ற லிங்கனுக்கு வாஷிங்டனிலேயே அடிமைச்சந்தையைக் காணவும் மனம் கொந்தளித்தது. மாநிலங்களின் சட்டத்தை மாற்றியமைக்க முடியாவிட்டாலும், மத்தியில் நிர்வாகம் செய்து கொண்டு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அதிபர் இந்த அடிமைகளை ஒழிக்க ஏதேனும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்க லிங்கனை எவருமே ஆதரிக்கவில்லை. ஐக்கிய அமெரிக்கா அப்போது மெக்சிகோவுடனான சண்டையில் முழு மனதோடு ஈடுபட்டிருந்தது. அதன் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த லிங்கன் பின்னர் கான்சாஸ்-நெப்ராஸ்கா பிரதேசத்தில் 1854- ஆம் ஆண்டு மக்கள் அடிமைகளை ஆதரித்து ஓட்டளித்தால் அடிமைகளை வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் போடப்பட்டதைக் கண்டு மனம் கொதித்தார்.

1858-ல் செனடர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றாலும் 1860-ஆம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால்!!! பெருமளவுக்கு அடிமைகளை வைத்திருந்த பதினைந்து தென் மாநிலங்களில் முதலில் ஏழும், பின்னர் நான்கும் யூனியனில் இருந்து விலகிக் கொண்டதாக அறிவித்தன. லிங்கனை அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. ஜெஃபர்சன் டேவிஸ் என்பவரை அதிபராக நியமித்தார்கள். வெடித்தது உள்நாட்டுப் போர். பார்க்க:
http://en.wikipedia.org/wiki/American_Civil_War

ஏன் போர் என்பதைக் குறித்த அவர் பேச்சு மிகவும் பிரபலம் ஆனது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
http://en.wikipedia.org/wiki/Gettysburg_Address

http://www.civilwar.org/battlefields/gettysburg.html?gclid=CJ2czLqQlq4CFWZjTAodKBorgQ
http://norvig.com/Gettysburg/


போரில் லிங்கன் ஜெயித்து மறுமுறைக்கான அதிபர் தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இன்றளவும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லிங்கனை மறக்கவே மாட்டார்கள். மொத்த அமெரிக்காவும் லிங்கனின் பிறந்த தினமான பெப்ரவரி 12-ம் தேதியன்று அவரை நினைவு கூர்கின்றனர்.

The Slave singing at Midnight
from Poems on Slavery
by Henry Wadsworth Longfellow
(1807-1882)

Loud he sang the psalm of David!
He, a Negro and enslaved,
Sang of Israel's victory,
Sang of Zion, bright and free.

In that hour, when night is calmest,
Sang he from the Hebrew Psalmist,
In a voice so sweet and clear
That I could not choose but hear,

Songs of triumph, and ascriptions,
Such as reached the swart Egyptians,
When upon the Red Sea coast
Perished Pharaoh and his host.

And the voice of his devotion
Filled my soul with strange emotion;
For its tones by turns were glad,
Sweetly solemn, wildly sad.

Paul and Silas, in their prison,
Sang of Christ, the Lord arisen,
And an earthquake's arm of might
Broke their dungeon-gates at night.

But, alas! what holy angel
Brings the Slave this glad evangel?
And what earthquake's arm of might
Breaks his dungeon-gates at night?

Thursday, February 09, 2012

பல்வேறு திறமைகளுக்கான விருதை என்னோடு பகிரும் நண்பர்கள்!

கோமதி அரசு எனக்கு மேற்கண்ட விருதைக் கொடுத்திருக்கிறார்கள். அவங்க என் பதிவுக்கு வந்து படித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு நான் அவங்க பதிவுக்குப் போனதில்லை! எப்போவோ போவேன். படிப்பேன். கருத்தெல்லாம் சொன்னதில்லை. என்றாலும் அவங்க என்னையும் உயர்வாக மதிச்சு அவங்களுக்குக் கிடைத்த விருதை என்னோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உயர்வான எண்ணம். உயர்ந்த உள்ளம் படைத்த மனுஷியிடமிருந்து கிடைத்த அன்பான விருது.

மிக்க நன்றி கோமதி அரசு. அவ்வப்போது உங்கள் பயணக்கட்டுரைகளைப் படித்து வருகிறேன். முக்கியமாய்த் திருக் கயிலை யாத்திரைப் பயணக்கட்டுரை. சென்னை அன்னபூர்ணா ட்ராவல்ஸ் மூலம் நாங்களும் 2006-ஆம் வருஷம் சென்று வந்தோம். என்னோட ஆன்மீகப் பயணம் பதிவுகளில் ஓம் நமச்சிவாய என்னும் தொடராக எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் பாருங்கள். என்னைப் பதிவுலகுக்கு அடையாளம் காட்டிய பதிவு இந்தக் கயிலை யாத்திரைக் கட்டுரையும், சிதம்பர ரகசியம் தொடரும் தான். ஆகவே நீங்கள் கொடுத்திருக்கும் வெர்சடைல் ப்ளாகர் விருது எனக்குத் தகுதியில்லை எனினும் உங்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு வாங்கிக் கொள்கிறேன். மீண்டும் நன்றி.

எனக்குப் பிடித்த ஐந்து:

முதல்லே பிள்ளையாரோட சண்டை போடுவதும், சமாதானம் ஆவதும்.

சாப்பாடு ரசம் சாதம்-சுட்ட அப்பளம் வித் நெய்!(அப்பளத்தில் நெய்)

புத்தகங்கள் படிப்பது

விதவிதமாய்ச் சமைப்பது; பசியோடு இருப்பவர்க்கு அவங்க போதும் போதும்னு சொல்றவரைக்கும் உணவு பரிமாறுவது

மெலிதான கர்நாடக இசை கேட்டுக்கொண்டே வேலை செய்வது


நான் கொடுக்க விரும்பும் ஐவர். அநேகமாய் எல்லாருமே மிகத் திறமையோடு அலுவலகவேலைகளையும் கவனித்துக்கொண்டு பதிவுகளும் போட்டு வருகின்றனர். ஆதலால் நானெல்லாம் ஒண்ணும் இல்லைனு சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. அப்படி உள்ள சிலரில் முதலில்

எங்கள் ப்ளாகின் அனைத்து ஆ"சிரி"யர்களுக்கும்

உண்மையாகவே versatile blogger என்னும் பட்டத்துக்குத் தகுதியுடையவர்கள் இவங்க எல்லாருமே. பலவிதமான பதிவுகள், பல்வேறு விதமான பார்வைகள். கோணங்கள். ஏற்கெனவே அநன்யா மூலம் 2 வருஷம் முன்னர் அறிமுகம் ஆனாலும் எப்போவோ நேரம் இருக்கையில் படிப்பேன். ஒருமுறை கல்லுரல், இயந்திரம் எல்லாம் அவங்களும் போட்டிருந்தாங்க. நானும் அப்போ அது குறித்து எழுதி இருந்தேன். ஆனாலும் பின்னூட்டம் போட்டது இல்லை. சமீப காலமாகத் தான் தவறாமல் போகிறேன். ஐந்து ஆ"சிரி"யர்களும் தகுந்தவர்களே.

எங்கள் ப்ளாக், கண்ணு படப் போகுது! சுத்திப் போட்டுக்குங்க. :))))))

ஐந்து பேர்னு சொன்னதாலே மேலே கொடுக்கலாமானு தெரியலை. அப்படி இருந்தால் நான் கொடுக்க விரும்பும் மற்ற நபர்கள்.

எல்கே, http://lksthoughts.blogspot.com

பாகீரதி வலைப்பக்கத்தின் சொந்தக்காரர். இவரும் கடந்த இரு வருடங்களில் தான் அறிமுகம். கதை எழுதுவதில் மன்னர்! அதிலும் த்ரில்லர் எழுதறதில்.

அப்பாவி தங்கமணி http://appavithangamani.blogspot.com/

எல்கே மூலம் அறிமுகம் எனக்கு. இவங்க வலைப்பக்கம் போனால் வயித்துவலியோடுதான் திரும்பணும். இயல்பான நகைச்சுவை. கொஞ்சம் இல்லை நிறையவே நீளமான பெரிய பதிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாக இருந்தாலும் சிரிக்க விஷயம் சகஜமாக வரும்.

லக்ஷ்மி http://echumi.blogspot.com

இவங்க எல்கே பதிவுகள் மூலம் அறிமுகம். இவங்க அனுபவக் கட்டுரைகள் எல்லாம் இயல்பா நேரே பேசறாப்போல் இருக்கும். கிட்ட உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்குமோ அந்த உணர்வு வரும். இப்போ நல்லதொரு தோழி.

ப்ரியா http://parvathapriya.wordpress.com/2012/01/01/2011-in-review

திருப்பூர் தொழிலதிபர். இவங்களும் அப்பாவி மூலம் பழக்கம். ஆன்மீகத்தில் ஈடுபாடு. இவங்களோட பல கேள்விகள் மூலம் எனக்குள்ளேயே தெளிவு கிடைக்கிறது. ஆனால் தியானத்தில் இவங்க எங்கேயோ போயிட்டாங்க. அந்த நிலையை என்னால் எல்லாம் எப்போது எட்ட முடியும்? காதிலே, மூக்கிலே புகையோடு பார்ப்பேன் இவங்களை!

அப்பாதுரை http://moonramsuzhi.blogspot.com/

இவருக்கு விருதெல்லாம் ஜுஜுபி. எல்லா விஷயத்தையும் சர்வ சகஜமாக அலசுகிறார். ஒருவிதத்தில் இவரிடம் பொறாமையும் உண்டு எனக்கு. கதை எழுதினாலும் நெஞ்சைத் தொடும். வாதத் திறமை இயல்பாகவே இருக்கிறது. ஆனால் அது வாதம் எனத் தெரிய வராது. மனதைப் புண்ணாக்காத வண்ணம் தன் கருத்துக்களை, நகைச்சுவை கலந்த மென்மையாகவும் அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும் சொல்கிறார். பார்க்கப் போனால் இவர் வட துருவம் என்றால் நான் தென் துருவம். ஆனாலும் இவர் கருத்துக்கள் எதுவும் என்னைப் புண்படுத்தியதில்லை.ஆன்மீகம், பக்தி, கடவுள் குறித்த பல உள்ளார்ந்த ஆழமான கருத்துக்கள் உள்ள மனிதர். எனினும் இவரின் பல கேள்விகளுக்கு விடை இவரிடமே கிடைக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.

Wednesday, February 01, 2012

அப்பு டேட்ஸ்! லேட்டஸ்ட்! :)))

இரண்டு நாட்களாக டாக்டர் அவதாரம். அதிக வேலை காரணமாகச் சீக்கிரமாய்ப் படுத்துடுவேன். படுத்தால் சிறிது நேரம் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். அதை நான் அழறேன்னு நினைச்சுட்டு அப்பு ஏன் அழறேனு கேட்டது. அழலை; கண்ணிலே இருந்து தண்ணீர் கொட்டுது; அதோட ரொம்பக் களைப்பா இருக்கு; கை, காலெல்லாம் வலினு சொன்னேனா! உடனே தன்னோட டாக்டர் கிட்டை எடுத்துட்டு வந்தாச்சு.

ரெண்டு நாள் முன்னே தான் தாத்தாவுக்கு மெடிகல் செக்கப் நடந்திருக்கு. அதிலே முட்டியைத் தட்டிப் பார்க்கிறேன்னு ஓங்கி ஒண்ணு வைச்சிருக்கா தாத்தாவுக்கு. அதனாலே எனக்குக் கொஞ்சம் பயம்! :)) முதல்லே பிபி செக்கப். பிபி நார்மல்; வெரி நைஸ். அடுத்து தெர்மாமீட்டராலே ஜுரம் இருக்கானு பார்த்தாச்சு. ஜுரம் கொஞ்சம் இருக்கு; ஓகே?

ஓகே. அடுத்து ஸ்டெத்தை எடுத்துப் பார்க்கணுமே: ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு mmm breathe! னு சொல்லிட்டு மூச்சை விட்டும் காட்டியாச்சு. அப்படியே நாமளும் மூச்சை விடணும். அடுத்து ஒரு டார்ச்சை எடுத்துண்டு வந்து காது, மூக்கு, வாய் ( say, ஆ) எல்லாம் பார்த்தாச்சு. அப்படியே கண்களையும் பார்த்தாச்சு. நல்லவேளையா முட்டியைத் தட்டுகையில் ரொம்பவே மெதுவா லேசா வைச்சுட்டு எடுத்தது. பிழைச்சேன்.

you have red eyes and they are watering. I'll recommend you to an eye surgeion. OK? Now I will give you a shot. don't cry.

No, I will cry. Mommy, Mommy, I do not need a shot.

No, baby, No. see, see, I will give you a lollipop.

No, I want a choclate. chocklate only.

டாக்டருக்கு என்ன செய்யறதுனு புரியலை. உடனே போய் அவங்க அம்மா கிட்டே கேட்டுட்டு நிஜம்மாவே ஒரு சாக்லேட்டோட வந்தாச்சு.

அப்பு ஆஸ்பத்திரிக்குப் போனா அங்கே அதுக்கு டாக்டர் லாலிபாப் கொடுக்கிறச்சே என்னோட அக்காவுக்குனு கேட்டு இரண்டு வாங்கிட்டு வருவா.

ஆகவே இந்தக் குழந்தையும் கேட்டாச்சு. எங்க அக்காவுக்கும் சாக்லேட்.

நடுவிலே நம்ம ரங்க்ஸ் குறுக்கே புகுந்து, ஏய், உனக்கு ஏது அக்கா? னு போட்டுக்க் கொடுக்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர அதான் பெரியப்பா பொண்ணுங்க இருக்காங்களே; சும்மா இருங்கனு அதட்டிட்டு, சாக்லேட்டுக்கு அழ, உடனே

where is your sister? I cannot see her.

She is in India. ஒரு நிமிஷம் யோசித்த அப்பு, அப்போ சரி, சாக்லேட்டை இங்கே இருந்தே தூக்கிப் போட்டுடறேன். உங்க அக்கா எடுத்துக்கட்டும்னு சொன்னது. அதோடயா? முட்டை முட்டையா எழுதின பிரிஸ்கிருப்ஷனும் கொடுத்திருக்கு. அதைச் சொல்ல விட்டுட்டேனே! அதைப் பத்திரமா வச்சுக்கச் சொல்லி வேறே அட்வைஸ். :)))))

:P:P:P:p

இப்போ அடுத்து எனக்குக் கண் டெஸ்ட் இருக்கு இன்னிக்கு. வர்ட்ட்டா????????