எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 31, 2023

குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!

 வீடு அமைதியாக இருக்கிறது. சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. அதிலும் முக்கியமாகத் தம்பளர்கள்! சமையலறையில் இரண்டு, பாத்திரம் தேய்க்கும் சிங்கில் இரண்டு, சாப்பாடு மேஜையில் 2 என அங்கும் இங்குமாகக் கிடக்கும் தம்பளர்கள் இன்னிக்கு எடுக்க ஆள் இல்லாமல் வைத்த இடத்திலேயே மௌனம் காக்கின்றன. குஞ்சுலுவின் ஐபாடில் இருந்து வரும் கார்ட்டூன்  குழந்தைகளின் சிரிப்புச் சப்தத்துடன் குஞ்சுலு சிரிக்கும் சப்தம், நடுநடுவில் ஐ பாட் பார்த்தது போதும்னு அவ அப்பா/அம்மா சொல்லும்போது நோ என உரத்த குரலெடுத்துக் கத்தும் குஞ்சுலுவின் கோபக்குரல்! எதுவும் இல்லை.

குளிக்க/சாப்பிட/பால் குடிக்க எனப் படுத்தும் குஞ்சுலு! அதைச் சமாதானம் செய்து அதற்குப் பொழுது போவதற்காகப் பையர் யாத்ரி நிவாஸ் அருகே இருக்கும் பார்க், வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா என அழைத்துச் சென்றது தவிர அதுக்கு பைக்கில் போவது பிடிச்சிருக்கு என்பதால் தினம் ராத்திரி அதைக் கூட்டிக் கொண்டு பைக்கில் ஓரிரு கிலோ மீட்டர்கள் போயிட்டும் வருவார். ராத்திரி வாசல் கதவைப் பூட்ட வேண்டி ரங்க்ஸ் உட்கார்ந்திருப்பார். 

தொலைக்காட்சிப் பெட்டியைப் போடவும்/அணைக்கவும் என ரங்க்ஸ் வைத்திருந்த நீளக் கம்பில் தேசியக்கொடியை ஒட்டி வைச்சிருக்கு குஞ்சுலு. அதை எடுக்கக் கூடாது எனவும் ஆர்டர் போட்டிருக்கு. அதை வைத்துக் கொண்டு இன்னொரு குச்சியையும் வைத்துக் கொண்டு காலண்டர், வால் க்ளாக், பஞ்சாங்கம் போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு எடுத்த பாடங்கள். என்னை ஓல்ட் லேடி எனவும் அவரை ஓல்ட் மேன் எனவும் கூப்பிட்டுக் கொண்டிருந்ததுக்கு திடீர்னு வெட்கம். அதைச் சொல்லி நாங்க கேட்டாலே வெட்கம் வந்துடுது. அவ அம்மா கணக்கு டேபிள்ஸ் சொல்லிக் கொடுத்தால் அதில் மனம் பதியாமல் விளையாட்டுக் காட்டும். அங்கங்கே இரைந்து கிடைக்கும் ஹேர் பான்ட்கள் விதம் விதமாக. தினம் ஒன்றை எடுத்துத் தலையில் வைச்சுக்கணும். கொம்பு முளைச்சாப்போல் இருக்குமா? நான் முயல்குட்டி எனக் கூப்பிடுவேன். அதுக்குக் கோபம் வரும். 

நாங்க வாங்கிக் கொடுக்கும் புதுப் பட்டுப்பாவாடையையோ, அல்லது நகையையோ போட்டுக் கொண்டால் உடனே எங்களிடம் வந்து காட்டாது. கண்ணில் குறும்பு மேலிடத் துணியால் அல்லது போர்வையால் தன்னை மூடிக் கொள்ளும். காதுத் தோடு, ஜிமிக்கி போட்டுக் கொண்டால் காதுகளை மூடிக்கும். நாம கவனிக்காதபோது கையை எடுக்கும். அப்போப் பார்த்துட்டேனே என்று சொன்னால் சிரிக்கும். இன்னமும் கோர்வையாக எழுத வரலை. கணக்கு ஓரளவு போடுகிறது.வரைவதிலும் கைவேலைகள் செய்வதிலும் உள்ள ஆர்வம் வியக்கத்தக்கதாய் இருக்கு. அதைப் பார்க்கையில் படிப்பில் ஆர்வம் கம்மி தான். விரைவில் நன்றாய்ப் படிக்கவும் செய்யணும். மேலும் இங்கே நைஜீரியாவில் ஆங்கிலேய வழிக்கல்வி என்பதால் பாடங்களை மெதுவாய்த் தான் சொல்லித் தராங்க. 

இது எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டு தாத்தாவும்/பாட்டியும் உட்கார்ந்திருக்கப் போறோம்.குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!

Monday, August 21, 2023

ஒரு வழியா எல்லாம் சரியாச்சு!

 டிரைவர் அங்கேயே தான் இருந்திருக்கார், இது போல் முதல் நாள் ஆனப்போ ட்ராவல்ஸ்காரர் நம்பர் ரங்க்ஸிடம் இருந்ததால் அவரைக் கூப்பிட்டு டிரைவரை அழைத்துவிட்டார். இப்போ அந்த நம்பரும் அம்பேல் அம்பேல், அம்பேல்! ஆகவே அவர் ஒரு பக்கம், மாப்பிள்ளை ஒரு பக்கம்னு தேடிக் கொண்டு போக டிரைவர் அங்கே இருந்ததைப் பார்த்துட்டு அப்பாடானு ஆச்சு. பின்னர் அங்கேயே ட்ராஃபிக் ஜாம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நான் வண்டியில் ஏறிக்கொண்டேன்.ஏற்றப்பட்டேன். பின்னர் எல்லோரும் ஏறினதும் ஓட்டலுக்குப் போனோம். பெண், மாப்பிள்ளை உடை மாற்ற வேண்டி (மடிசார், பஞ்சகச்சம்) அறைக்குப் போக நான், ரங்க்ஸ், அப்பு மூவரும் டிஃபன் சாப்பிடச் சென்றோம். எங்களைப் போல் தாமதமாக வந்தவங்க சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாங்க. நாங்க கை,கால் சுத்தம் செய்து கொண்டு உட்கார்ந்ததும் இட்லி ஒன்று, ஒரு கரண்டி பொங்கல், ஒரு உளுந்து வடை, சட்னி, சாம்பார், கிழங்கு, காரச் சட்னி ஆகியவற்றோடு டிஃபன் வந்தது. அது சாப்பிடும்போதே சுடச் சுட பூரி (பெரிதாக இருந்தது) வந்தது. பின்னர் கடைசியாக தோசை வர நாங்க சாப்பிட்டு முடித்தோம். பெண்ணும் வந்து கலந்து கொண்டு ஒரு இட்லியும், கொஞ்சம் பொங்கலும் மட்டும் சாப்பிட்டாள். அதுவே சட்னி எல்லாம் தொட்டுக்க முடியலை. பயம் வேறே!

பின்னர் அறைக்குப் போய் சாமான்களைக் கட்டி வைத்துவிட்டு ஓட்டல் அறை செட்டிலெ செய்யப் போனாங்க. அது முடிஞ்சதும் எல்லோரும் கிளம்பி ஸ்ரீரங்கம் நோக்கி வந்தோம்.  நாங்க ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பும்போது எப்போவும் போல் கல்லணை வழியில் டிரைவரைப் போகச் சொன்னோம். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பின்னர் அந்த வழியிலேயே போனார். இங்கே திருச்சி/தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கல்லணைப் பக்கம் கிழக்கே திரும்ப வேண்டிச் சென்றால் அம்மாடியோவ்1 வரிசையாக நூற்றுக் கணக்கான லாரிகள் அணி வகுத்து இருபக்கமும் நின்றன, நாங்க ஸ்ரீரங்கம் வந்த புதுசில் ஊர்ப்பக்கம் போனப்போக் கல்லணை வழி போயிட்டுப் போகும்போது அதிகாலை என்பதால் பிரச்னை இல்லாமல் போயிட்டோம். திரும்பி வரச்சே மாட்டிக் கொண்டோம் வண்டியே போக வழி இல்லை. மதியம் இரண்டரை மணிக்குத் திருவையாறைக் கடந்தவர்கள் ஸ்ரீரங்கம் போய்ச் சேர நாலரை ஐந்து மணி ஆச்சு. அன்று மதியச் சாப்பாடு இல்லை. :( இப்போவோ போகும்போதே அதே மாதிரி பிரச்னை. இரு பக்கமும் வண்டிகள் அணி வகுத்து நிற்க வழி கண்டு பிடிச்சுப் போகவே முடியலை.

நீதிமன்ற உத்தரவு இருந்ததால் சென்ற ஆட்சியில் மணல் அள்ளுவது முற்றிலும் தடுக்கப் பட்டிருந்தது. ஆகவே பிரயாணம் செய்வது வசதியாக இருந்தது இப்போதுள்ள விடியா ஆட்சியில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் மணல் அள்ள லாரிகள் அணி வகுத்து நின்றன. ஒரு வழியாக நாங்க கல்லணைப் பகுதியைக் கடக்கவே காலை ஒன்பது மணி கிட்டத்தட்ட ஆகிவிட்டது. அதை மனதில் கொண்டு இப்போது திரும்பும்போது தஞ்சை வழியாக பை பாஸில் போகலாம்னு முடிவு செய்து அப்படியே சென்றோம். ஒரு சில கிலோ மீட்டர்கள் அதிகம். ஆனாலும் வண்டி தடங்கல் இல்லாமல் போகலாமே. என்ன ஒரு பிரச்னை எனில் கல்லணை வழியில் ஷெல் கம்பெனியின் பெட்ரோல் பங்கில் WE CARE  கழிவறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். இந்த வழியில் அது வராது. :( டிரைவர் வேறே எங்கேயோ ஒரு பங்கில் நிறுத்தியதில் பார்க்கவே சகிக்கலை. வந்துட்டோம்.

சுமார் இரண்டரை மணி அளவில் அம்மாமண்டபம் சாலை வந்தால் சாலையை அடைத்து விட்டார்கள் அப்போத் தான் நினைவுக்கு வந்தது அன்று பதினெட்டாம் பெருக்கு என்பது. சாதாரணமாகவே அம்மா மண்டபத்தில் கூட்டம் நெரியும் எனில் இப்போப் பெருமாள் வேறே வந்துட்டாராம். இந்த வருஷம் ஆடிப் பதினெட்டுக்கே காவிரிக்குச் சீர் கொடுக்கிறார் போல. தெருவெங்கும் மக்கள் வெள்ளம். ஒரு வழியாகச் சந்து, பொந்துகளில் புகுந்து சுற்றிக் கொண்டு எங்க வளாகத்தை வந்து அடைந்தோம். ரங்க்ஸ் அங்கேயே இறங்கி சாப்பாடு வாங்கச் செல்ல, நாங்க வீட்டுக்குள் போனோம். சாப்பாடு வந்து நாங்க சாப்பிடும்போது மணி மூன்று ஆகிவிட்டது. ஒரு வழியாகப் பெண்ணின் பிரார்த்தனைகள் நிறைவேறின. இரண்டு நாட்களில் அவள் ஊருக்கும் கிளம்பி விட்டாள்.


பரவாக்கரை அக்ரஹாரத்தில் பூர்விக வீடு. இங்கே தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தாராம்.  ஏற்கெனவே முன்னர் ஒரு தரமும் போட்டேன். 


பையர் புது மடிக்கணினி வாங்கி வந்திருக்கார். பழசு (இரண்டு இருக்கு. தோஷிபா தான் என்னோட முதல் மடிக்கணினி! பிடிச்சதும் கூட) அது இப்போ வேலை செய்யலை, 12 வருஷங்கள் உழைத்தது. அடுத்து டெல் மடிக்கணினி. குஞ்சுலுவின் வயசு ஆகுது. அதுவும் ஓரளவு உழைச்சது. தோஷிபா இல்லைனு ஆனதும் முழுக்க முழுக்க அதில் தான் வேலை செய்தேன். நன்றாகவே இருக்கு. இன்னும் சில வருஷங்கள் இருக்கும். ஆனால் பையருக்கு அம்பேரிக்க வழக்கப்படி நாலைந்து வருஷம் ஆனதும் பழசைத் தூக்கிப் போடணும்னு! இப்போதைக்கு அதை டிசேபிள் பண்ண வேண்டாம்னு சொல்லி வைச்சிருக்கேன். பார்ப்போம். :(  இ கலப்பை செட்டிங்கில் புதுக்கணினியில் பிரச்னை வந்ததால் அதை எடுக்க மனசு வராமல் இருந்தது. இப்போ இன்னிக்கு அதெல்லாமும் சரியாச்சு.

புதுக்கணினியிலும் எல்லாம் சரியாச்சு. இ கலப்பை சரியா வரலை, சுரதா மூலம் தான் தட்டச்சு செய்யறேன். இ கலப்பையில் குறில்/நெடில், ழ, ள, ல பிரச்னை மற்றும் ந, நு போட்டால் நூ என ஆகிக் கொண்டிருந்தது. ஸ் ஸா வரவே வராது. அதெல்லாம் சுரதாவில் இல்லை என்பதால் இனிமேல் சுரதா மூலம் தான் தட்டச்சணும் போல!

Sunday, August 20, 2023

கொட்டம் அடிக்கும் குஞ்சுலு!

 குட்டிக் குஞ்சுலு வந்திருக்கா? வீட்டில் ஒரே அமர்க்களம் தான். சாப்பிடப் படுத்தல் வழக்கம் போல். அது அவங்க அறையில் விளையாடும்போது வெளியே செர்வீஸ் வராந்தாவின் ஜன்னல் கதவைக் காற்றுக்காக அவ அம்மா திறந்து வைச்சிருக்கா! ஹாஹா! குரங்கார் வந்துட்டார். ஆனால் பாருங்க, இவங்க அம்மாவும் பெண்ணும் கத்தின கத்தலில் பயந்து ஓடிப் போய்விட்டது. குஞ்சுலு எங்களோட விளையாடும்போது என்னை ஓல்ட் லேடி எனவும் அவரை ஓல்ட் மேன் எனவும் கூப்பிடுகிறது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தாத்தா உட்கார்ந்தவாறே தொலைக்காட்சிப் பெட்டியைப் போட வைச்சிருக்கும் கம்பில் தேசியக் கொடியை ஒட்டி வைச்சுட்டு அதைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போச்சு. இன்டிபென்டென்ட்ஸ் டே என்னிக்குனு காலண்டரில் தேதி, கிழமையைக் காட்டச் சொல்லி அந்தக் கம்பை வைச்சுக் கொண்டு எங்களுக்குப் பாடம். 


அது பெயர் மிஸ் ஆன்னியாம். அவங்க வகுப்பு ஆசிரியை போல!  நான் மிஸ் துர்கா என்றதற்கு ஒரே கோபம்! நோ வே! ஐ அம் மிஸ் ஆன்னி என்றது. பின்னர் பஞ்சாங்கத்தை வைச்சுக் கொண்டுக் கணக்குச் சொல்லிக் கொடுத்தது. கடிகாரத்தில் மணி பார்க்கச் சொல்லிக் கொடுத்தது. அவங்க அப்பா ஏதோ குறுக்கே பேசினதுக்கு ஒரே அதட்டல் தான். சுமார் ஒரு மணி நேரம் போல இப்படி விளையாடியதை டான்ஸ் க்ளாஸ் ஆன்லைனில் என அவங்க அம்மா கூட்டிச் சென்று விட்டதும் ஒரே கத்தல். பின்னர் தானே சமாதானம் ஆச்சு. இப்போ மைசூருக்குப் போயிருக்குச் சுத்திப் பார்க்க. புதன்/வியாழன் வரும்.

Tuesday, August 15, 2023

வண்டி எங்கே?

 Dhanvanthri Homam Picture


மறுநாள் காலை எழுந்து கொண்டு ஓட்டலில் கொடுத்த காம்ப்ளிமென்ட்ரி காஃபியைக் குடித்தோம். எனக்கு மட்டும் ரூம் சர்வீஸ் அவங்களே செய்தாங்க. இஃகி,இஃகி,இஃகி! பின்னர் குளித்துவிட்டு அன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழரை வரை எமகண்டம் என்பதால் மற்ற ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ஏழேகால் மணி வாக்கில் கோயிலுக்குக் கிளம்பினோம். ரெஸ்டாரன்டில் பத்து மணி வரை டிஃபன் உண்டு எனச் சொன்னார்கள். அதுக்குள்ளே வந்துடலாம் என்று கிளம்பிவிட்டோம். காரில் மேற்கு கோபுர வாசலுக்கு வந்தாச்சு. வண்டியிலிருந்து இறங்குவதற்குள்ளாக தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிக் கொண்டு ஆட்கள் சூழ்ந்து கொள்ள அவங்களை விரட்டுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுத்து. எங்களுக்குக் கட்டளை குருக்கள் இருக்கார்னு சொல்லி அவர் பெயரையும் விலாசத்தையும் சொன்னதும் வேறே வழியில்லாமல் விலகிப் போனாங்க. அங்கிருந்து நேரே அம்மன் சந்நதி/அம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்க, நேர் எதிரே மேற்கைப் பார்த்த வண்ணம் வைத்தியநாத ஸ்வாமியின் தரிசனம். வண்டியிலிருந்து கீழே இறங்கி எல்லோரும் அம்மன் சந்நிதியை நோக்கி நடக்க ஆரம்பிக்க என்னால் பத்துத் தப்படி நடக்க முடியலை. அதுக்குள்ளே எங்க பெண், அப்பு மற்றும் நம்ம ரங்க்ஸ் முன்னால் போயிட்டாங்க. டிரைவரை என்னை இறக்கிவிட்டுட்டு வண்டியைக் கோயில் அனுமதி பெற்றுப் பார்க் பண்ண எடுத்துட்டுப் போயிட்டார். மாப்பிள்ளை மட்டும் என்னுடன் வந்தார். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க முயன்றாலும் முடியலை. அங்கிருந்த கோயில் கடைக்காரர்கள் என்னிடம் ஏம்மா கஷ்டப்படறீங்க? வீல் சேர் இருக்கு. இலவசம் தான் வாங்கிட்டுப் போங்க சௌகரியமா. சேரை வெளி ஆட்கள் தள்ளினால் உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க என்றார்கள்.

எங்கே கிடைக்கும் எனக் கேட்டுக் கொண்டு மாப்பிள்ளை வீல் சேர் எடுத்துவரக் கிளம்பினார். அதுக்குள்ளே ரொம்ப தூரம் போயிட்ட நம்ம குழுவினர் அங்கிருந்து ஏன் தாமதம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கே! வா! வா! எனக் கூப்பிட, அவங்கல்லாம் நம்மைப் பிடி.உஷானு நினைச்சுட்டு இருக்காங்க போலனு நினைச்சுண்டேன். அங்கே இருந்து உள்ளே போனவர் ஒருத்தரிடம் வீல் சேருக்கு உட்கார்ந்திருக்கேன்னு சொல்லி அனுப்பிச்சேன். வீல் சேருக்கு டெபாசிட் 100 ரூ. அதைக் கொடுத்துட்டு வீல் சேருடன் மாப்பிள்ளை வந்தார். வீல் சேரில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டேன்.  வேறே ஆட்கள் வீல் சேரைத் தள்ள வந்தார்கள். ஆனால் மாப்பிள்ளை விடலை. பின்னால் நிறையப் பணம் கொண்டான்னு கேட்டால் என்ன செய்வது என அவரே தள்ளினார். ஓரிரு இடங்களில் படிகள் வந்தப்போக் கூட வந்தவர்கள் உதவி செய்தார்கள். ஒரு வழியாக குழுவினர் காத்திருந்த இடத்துக்கு வந்து அங்கிருந்து உள்ளே அம்மன் சந்நிதிக்குப் போனோம். அபிஷேஹ அலங்காரங்கள் அபபோது தான் முடிந்திருந்தது. சந்நிதிக்கு நேரே சிலர் மாவிளக்குப் போட்டுவிட்டு உட்கார்ந்திருந்தனர். அங்கேயே ஓர் இடம் தேடிக் கோலம் போட்டுவிட்டு மாவிளக்கைத் தட்டில் பரத்தி விட்டு நடுவில் குழி ழெய்து நெய் ஊற்றித் திரியைப் போட்டுப் பெண்ணை விட்டு ஏற்றச் சொன்னேன். அவங்க வீட்டில் உதிராகத் தான் மாவிளக்கு இருக்கணும். அதே போல் ஒரே திரி தான். மாவிளக்கு எரியும்போது ஸ்வாமி சந்நிதியில் காலபூஜை தீபாராதனை மணி அடித்தது. மனம் மகிழ்ச்சி கொண்டது. அங்கே இருந்தே தரிசனம் செய்து கொண்டேன். சிலர் அங்கே போனார்கள். நம்ம குழுவினர் குருக்கள் வந்ததும் போகலாம்னு இருந்துட்டாங்க. சில நிமிஷங்களில் அம்பிகைக்கும் தீபாராதனை நடக்க ஏற்பாடுகள் செய்ய, கூட்டம் வந்துடும்னு மாவிளக்கை சமாதானம் செய்து தீபாராதனை காட்டி நிவேதனம் செய்து எடுத்துக் கொண்டோம். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் படங்கள் எதுவும் இல்லை.

மாவிளக்குப் போட்டு முடிஞ்சதும் நான் அங்கேயே வீல் சேரில் உட்காரந்து கொள்ளக் கட்டளை குருக்கள் வந்து இவங்களை எல்லாம் அழைத்துச் சென்றார். எனக்கு இதான் கவலையாக இருந்தது. அங்கே உட்கார மேடையோ நாற்காலியோ கிடைக்காதே/ நம்மால் நிற்க முடியாதே/எப்படி நிற்பேன்? என்றெல்லாம் யோசித்துக் கவலையில் இருந்த எனக்கு வைத்தீஸ்வரன் நல்வழி காட்டினார். அவங்கல்லாம் மற்ற சந்நிதிகளைப் பார்த்துக் கொண்டு குருக்களிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு வந்தார்கள். அதுக்குள்ளே ஒரு மாமி எனக்கு வெற்றிலை, பாக்குக் கொடுக்க அந்த மாமிக்கு பெண்ணை விட்டு வெற்றிலை, பாக்குக் கொடுக்கச் சொன்னேன். பரஸ்பரம் இது முடிந்ததும், எல்லோரும் வண்டியைத் தேடிக் கிளம்பினோம். ஓட்டலில் இருந்து கிளம்புகையில் என்னோட செல்லை எடுத்துக்கணும்னு நான் சொல்ல, வேண்டாம், அதுக்குனு ஒரு பை வேறே வைச்சுக்கணும், பேசாம வைச்சுட்டு வா என்று விட்டார்.

இப்போ என்ன பிரச்னைன்னா டிரைவரின் நம்பர் என்னோட செல்லில் மட்டும் இருந்தது. ஆகவே அவரை எப்படிக் கூப்பிடுவது? 


உச்சிப் பிள்ளையார் கோயில் எங்க வளாக மொட்டை மாடியில் இருந்து பெண் எடுத்தது.


காவிரி ஒரு பார்வை மொட்டை மாடியில் இருந்து! தெற்கு கோபுரமும் எடுத்திருக்காள். ஆனால் அது என்னமோ கணினியில் அப்லோட் ஆகலை.


கடைசி வெள்ளி மாவிளக்குப் போட்டேன். அப்போ எடுத்த படங்கள். மாவிளக்குப் படம் வழக்கம்போல் அப்லோட் ஆகலை. திரும்ப முயலணும்.


Monday, August 14, 2023

எட்டு வருஷம் கழிச்சுப் பெண் வந்த கதை!

29 ஆம் தேதியன்று மாலை பெண்ணும், அவள் கணவர், அப்பு ஆகியோரும் வந்தனர். ஏற்கெனவே பயணச்சீட்டு வாங்கிப் பயணம் உறுதியானாலும் அவங்க வந்து இறங்கும் மும்பையில் நல்ல மழைக்காலம். விமான நிலையத்தை மூடாமல் இருக்கணும்னு ஏகப்பட்ட கவலைகள்/பிரார்த்தனைகள். அதனாலேயே ஒருத்தருக்கும் சொல்லவும் இல்லை. அதற்கு முன்னாடியே பையர் வந்துட்டார். குஞ்சுலு அவ அம்மாவுடன் வழக்கம் போல் மடிப்பாக்கம் தாத்தா/பாட்டி வீட்டில் இருக்கப் பையர் மட்டும் வந்துட்டார். {குஞ்சுலு முந்தாநாள் வந்து விட்டது. கொட்டம் தான்} பையர். இங்கே வந்ததிலிருந்து காதில் மாட்டிய இயர் ஃபோனைக் கழட்ட நேரம் இல்லை. பெண்ணின் உடல் நிலை கருதி தன்வந்தரி ஹோமம் ஏற்பாடு செய்திருந்தோம். அது 31 ஆம் தேதி திங்களன்று காலை ஏழு மணி அளவில் ஆரம்பித்துப் பத்தரை/பதினோரு மணி அளவில் முடிந்தது. சாப்பாடு நாங்க தற்சமயம் வாங்கும் காடரரிடம் ஏற்பாடு செய்து அவங்களும் கொண்டு வைச்சுட்டாங்க. சர்க்கரைப் பொங்கலும், அவிசும் மட்டும் ஹோமத்திற்காக வீட்டிலேயே பண்ணினேன்.  இதுக்கு நடுவிலே ஸ்ரீராம் ஒரு சஷ்டி அப்த பூர்த்திக்காக ஸ்ரீரங்கத்துக்கு பாஸுடன் வரப் போவதாகச் சொல்லி இருந்தாரா? வந்துட்டுப் போயிருப்பாரோ என நினைத்து அவரைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் ஆகஸ்ட் ஆறாம் தேதி தான் என்றார். நல்ல வேளை என நினைத்துக் கொண்டேன். அந்த வாரம் தான் பெண் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்வதாக இருந்தோம்.

ஆகஸ்ட் ஆறாம் தேதி தான் பெண் திரும்ப மும்பை செல்கிறாள். அதுக்குள்ளாக எங்க குலதெய்வம் கோயில், அவங்க குலதெய்வம் கோயில் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டு பெண்ணின் குலதெய்வம் கோயிலான வைத்தீஸ்வரன் கோயிலில் மாவிளக்கும் போட வேண்டும் என்றாள். எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வரலாம் என்று  ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதன் கிழமை காலையில் கிளம்பினோம். பெண்ணின் உடல் நிலை கருதிக் கஞ்சியைக் காலில் கொட்டிக்கொண்டாற்போல் ஓட்ட/பாட்டம் இல்லாமல் இம்முறை சாவகாசமான பயணம். பையர் அலுவலக வேலை இருப்பதால் வீட்டில் தங்கி விட்டார். 

நாங்க அன்று மதியம் சுமார் பதினோரு மணி அளவில் பரவாக்கரை போய் மாரியம்மனைப் பார்த்துக் கொண்டு அர்ச்சனைகள் செய்து கொண்டோம். ஊர் ஜனங்களுக்கு அன்னதானத்திற்குப் பெண் ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்ததால் சாப்பாடு வகைகள் வந்து இறங்கின.  ஏழெட்டு நபர்களை முதலில் உட்கார வைத்துப் பெண்ணும் மாப்பிள்ளையும் அவங்களே சாப்பாடு பரிமாறினாங்க. அவங்க சாப்பிட்டு முடிச்சதும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். முதலிலேயே எங்க ஊர்ப் பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு வந்திருந்தோம் என்பதால் நேரே வைத்தீஸ்வரன் கோயில் தான் போக வேண்டி இருந்தது. பெருமாள் கோயிலிலேயே பட்டாசாரியாரிடம் சொல்லிப் புளியஞ்சாதமும்/தயிர் சாதமும் வாங்கிப் போயிருந்தோம். வைத்தீஸ்வரன் கோயில் போனதும் அதைச் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டோம்.

அக்ஷர்தாம் என்னும் ஓட்டலில் (புதிதாக வந்திருக்கு) பையர் முன் பதிவு செய்திருந்தார். அங்கே போனால் அறைகள் எல்லாம் மாடியில். தரைத்தளத்துக்கே 3,4 படிகள் ஏறிப் போக வேண்டி இருந்தது. எங்களுக்கான அறைகள் முதல் தளம். லிஃப்ட் இல்லை. ஆகவே அவங்களே அங்கே கீழேயே ரெஸ்டாரன்ட் பக்கம் இருந்த ஒரு பெரிய குடும்ப அறையைக் காட்டினாங்க. 2 குளியலறை/கழிவறை கொண்டது. இரண்டு பெரிய கட்டில்கள். நான்கு பேர் படுக்கலாம். அதிகப்படி தேவைக்கு மேலும் ஒரு படுக்கை கொடுத்தார்கள். சரினு அங்கேயே தங்கி விட்டோம். காலை உணவு ஓட்டல்காரங்களோடதாம். ஆனால் பஃபே இல்லை. combo breakfast என்றார்கள்.

இதுக்குள்ளே என்னை இணையத்தில் காணோம் எனத் தி/கீதா, கோமதி அரசு, மற்றும் பலர் வாட்சப்பில் தொடர்பு கொள்ள, நல்லவேளையாகக் காணாமல் போனவர்னு அறிவிப்புக் கொடுக்கலையேனு சந்தோஷத்தில் விபரங்களைச் சொன்னேன்.

தொடரும்!