எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 31, 2020

வண்ண விளக்கு அலங்காரங்கள்!

ஐஸ்லாந்தில் இருந்து வெளியே வந்ததும் கொஞ்ச நேரம் வெளியே உட்கார்ந்து உடல் சீதோஷ்ணத்தைச் சமன் படுத்திக் கொண்டோம். கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னர் குழந்தைக்கும் ஆடைகளை மாற்றிக் கொண்டார்கள். பின்னர் பையர் அனைவருக்கும் காஃபி வாங்கி வந்தார். அதைக் குடித்துக் கொஞ்சம் தெம்பு வந்த பின்னர் விளக்கு அலங்காரங்களைப் பார்க்கக் கிளம்பினோம். சுமார் இரண்டரை மைல் நீளம் என்று பையர் சொல்லி இருந்தார். ஆனால் அதை விடக் கூடவே இருந்திருக்குமோனு நினைத்தோம். கிறிஸ்துமஸுக்கு முன்னிருந்து ஆரம்பித்துப் புது வருடம் வரை விளக்கு அலங்காரங்கள் கண்களையும், கருத்தையும் கவர்கின்றன. அநேகமாக நாங்க இருக்கும் பையர் வீட்டுப் பகுதியில் தீபாவளிக்கு ஆரம்பிக்கும் விளக்கு அலங்காரங்கள் ஆங்கிலப் புது வருடம் வரை தொடர்கிறது. பலரும் அவரவர் வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.

பலர் வீடுகளிலும் மாட்டுத் தொழுவம் போல் அமைத்து குழந்தை ஏசு பிறப்பைப் பொம்மைகளால் அமைக்கின்றனர். எல்லார் வீட்டு வாசலிலும் நக்ஷத்திரங்கள் தொங்கும். இதை இந்தியாவிலும் பார்க்கலாம். ஆஙாங்கே பெரிய பெரிய வணிக வளாகங்களில் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர் சான்டா க்ளாஸ் வேடம் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். குழந்தைகள் அவருடன் படம் பிடித்துக்கொள்வார்கள். பல சமயங்களில் பெரியவர்களும் தங்கள் குடும்பத்தோடு படம் எடுத்துக் கொள்வார்கள். கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட திரைப்படமும் காட்டுவார்கள். அப்படி ஒரு 3D படம் இங்கேயும் காட்டினார்கள். வட துருவத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிய படம் அது. குட்டிக் குஞ்சுலுவுக்குக் கண்ணாடியைப் போட்டு விட்டால் முதலில் சந்தோஷமாகப் பார்த்தது. பின்னர் அதில் பெரிய பெரிய உயிர் வாழ் ஜந்துக்கள் வரவும் அதுக்குப் பிடிக்கலை. கண்ணாடியைக் கழட்டி விட்டது. அங்கிருந்து தான் நேரே விளக்கு அலங்காரங்கள் பார்க்கப் போகணும்.

குழந்தைக்காக ஸ்ட்ரோலர் எடுத்து வந்திருந்ததால் அதில் குழந்தையை உட்கார வைத்துத் தள்ளிக்கொண்டு சென்றார்கள். ஆனால் குஞ்சுலு கடுமையாகத் தன் ஆக்ஷேபங்களைத் தெரிவித்தது. தானும் நடந்தோ அல்லது ஓடியோ தான் வருவேன் எனப் பிடிவாதம். சரினு கொஞ்ச தூரம் நடக்க விட்டார்கள். நாங்கள் கொஞ்சம் மெதுவாகவே சென்றோம்.  இரண்டு பக்கங்களிலும் வண்ண விளக்கு அலங்காரங்கள். இது "பே" எனப்படும் விரிகுடாப் பகுதி என்பதால் Back waters  கொஞ்சம் இருக்கும். மணல் பகுதியும் இருக்கும். எல்லா இடங்களிலும் விளக்கு அலங்காரங்கள்.


ஐஸ்லாந்தில் இருந்து வெளியே வரும் இடத்தில் இருந்த விடுதி! இங்கே சாக்லேட் பானம் மட்டும் சூடாகக் கிடைக்கும்.


விளக்கு அலங்காரங்களைப் பார்க்கச் செல்லும் வழி


நுழையும் இடம்










போகும் வழியில் இம்மாதிரிச் சின்னச் சின்னக் கூண்டுகளில் உடலுக்குச் சூடு செய்து கொள்ளும் வசதி!


ஆர்க்டிக் ஸ்லைட் என்னும் வட துருவக் குளிர்ப் பிரதேசத்தின் மாதிரி. இதைப் பார்க்கக் கீழே காணும் ரயிலில் செல்ல வேண்டும் அல்லது நடந்து போகணும். ரயிலில் செல்ல வசதிக்குறைவு. உட்கார இயலாது. அதைப் பார்க்கப் போனால் விளக்கு அலங்காரங்களைப் பார்க்க நேரம் எடுக்கும் என்பதால் வெளியே இருந்தே பார்த்துவிட்டு மேலும் விளக்குகளைப் பார்க்கச் சென்றோம்.











விளக்கு அலங்காரங்களை நானே கொஞ்ச தூரம் தான் எடுத்தேன். அதிலும் தேர்ந்தெடுத்த படங்களையே போடுவேன். இன்னும் ஓரிரு நாட்கள் வரலாம்.

Wednesday, January 29, 2020

இன்னிக்குக் கொஞ்சம் தான் படம் காட்டறேன்!

பனிக்கட்டிச் சிற்பங்கள் பார்வைக்கு இன்னமும் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் அதை ரசிக்கவில்லை என்பதோடு திரும்பத் திரும்பப் போட்டு அனைவருக்கும் அறுவையாக ஆகிவிட்டது என்றும் தோன்றுகிறது.ஆகவே இன்னிக்குக் கொஞ்சமாக ஐஸ்லான்டின் சிற்பப் படங்களைப் போட்டு விட்டு நாளைக்கு விளக்கு அலங்காரப் படங்களைத் தொடர்கிறேன். அவையும் நிறைய இருக்கின்றன. நான் எடுத்தது சுமார் ஒரு மைல் தூரத்துக்குத் தான். அதன் பின்னர் சுமார் முக்கால் மைல் தூரத்துக்கான விளக்கு அலங்காரங்களைப் படம் எடுக்க முடியலை. அசதியும், கால் வலியும் வந்து விட்டது. அவரால் செல்லைக் கைகளில் பிடித்துப் படம் எடுக்க முடியலை. பையர், மருமகள், குழந்தையைக் கவனிக்க வேண்டி இருந்தது. ஆகவே விளக்கு அலங்காரங்கள் எடுத்தவற்றில் இருந்து தேர்ந்தெடுத்துப் போடுகிறேன்.

 வேறே சில படங்கள் இருந்தாலும் இதைத் தொடர்ந்த விளக்கு அலங்காரங்களைக் கொஞ்சம் போல் போட்டுவிட்டுப் பின்னர் மற்றவற்றிற்குத் தொடரணும். எல்லோரும் பார்த்து ரசிக்கிறாற்போன்ற இடங்களுக்கு எங்கும் செல்லவில்லை. பையர் அலுவலக வேலையை வீட்டில் வந்தும் செய்கிறார். அவருக்கு நேரமே இருப்பதில்லை. பெண்ணிற்குப் பெரிய பெண்ணின் படிப்புத் தவிர்த்து அப்புவின் படிப்புக்காகக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு தினம் ஒரு வகுப்புக்குச் செல்ல வேண்டி உள்ளது. சனி, ஞாயிறுகளில் அவங்க வீடு சுத்தம் செய்தல், ஒரு வாரத்துணிகளைத் துவைத்துத் தயார் செய்தல், அன்னிக்குத் தான் பால், தயிர், மளிகை சாமான்கள், ஒரு வாரத்துக்கான காய், கனிகள்னு வாங்கி வைச்சுக்கணும். ஆகவே வார நாட்களை விட வார இறுதி நாட்கள் காற்றாய்ப் பறந்து விடும்.








இந்தச் சறுக்கில் மேலே ஏறிப் பின்னர் கீழே சறுக்கி விளையாடுவதற்காகச் செய்யப் பட்டிருந்தது. ஆனால் நாங்கள் மேலே ஏறவில்லை. இதோடு சிறிது தூரத்தில் முடிவடைந்ததால் பார்த்துக்கொண்டே மேலே போய்ப் பின்னர் வெளியேறி விட்டோம். பையர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார். மருமகளும் ஏறவில்லை என்றாள்.




காரிபியன் கிறிஸ்துமஸுக்கான அலங்காரங்கள் மேலேயும், கீழேயும்.













Sunday, January 26, 2020

காப்பி அடிப்பதனால் என்ன பயன் என்கொல்??????? :(

முகப்புப் பக்கம்  இங்கேயும் நீக்கச் சொல்லிக் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

ஹரிஹரன் பால சுப்ரமணியன் February 7 2019    copied and pasted by this person

மஞ்சளில் ஒரு ஊறுகாய்   My Post about turmeric pickle

படம் இங்கே! பதிவு அங்கே! My second post about the turmeric pickle

இந்தச் சுட்டிகளில் போய்ப் பார்க்கவும். அப்பட்டமான காப்பி, பேஸ்ட் என்பது தெரியும்.

மஞ்சளில் ஒரு ஊறுகாய் என என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் ஒரு பதிவு 2015 ஆம் ஆண்டில் போட்டிருந்தேன். அதையே மறுபடியும் அதே 2015 ஆம் ஆண்டில் என்னோட எண்ணங்கள் வலைப்பக்கத்தில் சுட்டி கொடுத்துவிட்டு ஊறுகாய் செய்தவற்றின் படமும் போட்டிருந்தேன். சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கம் போட்டிருந்த அந்தப் பதிவில் முதல் இரண்டு பத்தியில் கொஞ்சம் வம்பு வளர்த்துவிட்டு "ஊறுகாய்க் காலம் தொடங்கப் போகிறது!" வரியிலிருந்து ஆரம்பித்து செய்முறையை எழுதி இருந்தேன். படங்கள் போடவில்லை. அதன் பின்னர் ஊறுகாயைப் படம் எடுத்து படம் இங்கே! பதிவு அங்கே!" எனச் சுட்டி கொடுத்துப் பதிவும் எண்ணங்கள் வலைப்பக்கம் போட்டிருந்தேன்.

அந்த ஊறுகாய் செய்முறையை ஹரிஹரன் பாலசுப்ரமணியன் என்பவர் தன்னுடைய "ஊர்க்கோடாங்கி" என்னும் வலைப்பக்கம், "ஊறுகாய்க் காலம் தொடங்கப் போகிறது!" என்னும் வரியிலிருந்து ஆரம்பித்து (முதல் இரண்டு பத்திகளை விட்டுவிட்டார். அவை என்னோட சொந்த வம்பு என்பதால் கண்டு பிடிச்சுடுவாங்கனு பயமோ என்னமோ! ) அப்படியே வரிக்கு வரி வார்த்தை மாறாமல் 2019 ஆம் வருடம் ஃபெப்ரவரி மாதம் ஏழாம் தேதி காப்பி, பேஸ்ட் பண்ணி இருக்கார். அதைக் காப்பி, பேஸ்ட் பண்ணியதோடு அல்லாமல் தன்னுடைய பதிவு போலவும் கொடுத்திருக்கார். என்றாலும் நான் பயன்படுத்தும் சில வார்த்தைகள் எனக்கு மட்டுமே நன்கு தெரியும். என் பதிவைப் படிக்கிறவங்களுக்கும் நன்கு தெரியும். ஆகவே முதல் வார்த்தையைப் படிக்கும்போதே புரிந்து விட்டது. என்றாலும் ஒரு முறைக்குப் பல முறை அங்கே போய், என்னுடைய பதிவுகளிலும் போய் சோதனைகள் செய்து விட்டு இந்த மாபெரும் திருட்டுத்தனத்தை இங்கே பலரும் அறிய வெளியிடுகிறேன்.

அந்தப் பதிவில் போய்க் கருத்துக்கள் மூலம் என் கண்டனங்களையும் ஆக்ஷேபங்களையும் தெரிவித்திருக்கிறேன். நண்பர்கள் அனைவரும் மூன்று பதிவுகளையும் பார்த்துப் படித்துவிட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லவும். இம்மாதிரி என்னோட "சிதம்பர ரஹசியம்" மற்றும் "லலிதாம்பாள் சோபனம்" "பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!" மின்னூல்கள்,   சுமங்கலிப் பிரார்த்தனை பற்றிய பதிவு எனப் பல பதிவுகள் களவாடப் பட்டிருக்கின்றன. இவற்றில் லலிதாம்பாள் சோபனம் எழுதியவரை மட்டும் முகநூல் மூலம் கண்டு பிடித்துச் சண்டை போட்டு அவற்றை நீக்க வைத்தேன். அந்த சோபனமே இன்னொரு இடத்திலும் பதிவாகி உள்ளது. அவங்களைக் கேட்டதுக்குப் பதிலும் சொல்லலை. நீக்கவும் இல்லை. என்ன பிழைப்போ! ரொம்ப வருத்தமாக இருக்கிறது. கண்களில் பட்டதை உடனே பகிர்கிறேன். இன்னும் எத்தனை எத்தனை பதிவுகளோ! யார் யாரோ?  குறைந்த பட்சம் என்னுடைய பெயரையாவது சொல்லி இவங்க பதிவில் இருந்து எடுத்திருக்கேன் எனக் குறிப்பிட்டிருக்கலாம்.

முகநூலில் வரகூரார் அண்ணா அவர்களால் என்னுடைய பதிவுகள் பலவும் என் பெயரையும் குறிப்பிட்டுப் படத்தையும் போட்டுப் பகிரப்படுகின்றன. மனதுக்கே நிறைவாய் இருக்கும்.

Saturday, January 25, 2020

குஞ்சுலுவின் குழந்தைகள்!

இவை எல்லாம் குட்டிக்குஞ்சுலுவின் "பேபீஸ்"!  தினம் ராத்திரி அது படுத்துக்கப் போகும்போது இவை எல்லாவற்றையும் உடன் எடுத்துச் சென்று தன்னுடன் படுக்கையில் போட்டுக்கொள்ளும். அந்தப்பக்கம் அப்பாவும், இந்தப்பக்கம் அம்மாவும் இடம் இல்லாமல் படுத்துக்கொள்வார்கள். அது தூங்கினதும் எடுத்து வைப்பார்கள். இதை ராத்திரி எடுத்துப் போவது ஒரு தனி வேலை. குஞ்சுலு "ஸ்லீபி!" என்றதும் அவ அம்மாவோ, அப்பாவோ தூங்க வைக்க உடன் செல்லுவார்கள். அது அப்போ வேறே ஏதேனும் பாப்பாவை வைத்துக் கொண்டிருக்கும். படுத்துக்கப் போறச்சே தான் இந்த பேபீஸ் நினைவே குஞ்சுலுவுக்கு வரும். உடனே தேடும் படலம் ஆரம்பிக்கும். எல்லாத்தையும் ஒரே தடவையில் தூக்கிக் போகணும்னு சேர்த்து இரு கைகளாலும் பிடிச்சுக்கும். ஆனால் ஏதேனும் ஒண்ணு கீழே விழுந்து வைக்கும். அதை எடுக்கையில் இன்னொண்ணு. இப்படிப் பொறுமையாக எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டே போகும். அவ அம்மாவோ அப்பாவோ ஒரு பேபி போதும்னு சொல்லக் கூடாது! க்ரீச்னு ஒரு கத்தல்! எல்லா பேபிஸும் தான் வரணும்.

காலம்பர எழுந்து வரச்சேயும் நினைவாக முதலில் பேபீஸைக் கொண்டு வந்து சோஃபாவில் போட்டு விடும். அப்புறமாத் தான் அது மத்த வேலையே பார்க்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றுக்குத் திடீர்னு அதிர்ஷ்டம் அடிக்கையில் அன்றைய நாள் பூராக் குஞ்சுலுவின் இடுப்பிலேயே அந்த பேபி வாசம் செய்யும். இல்லைனா வேறே 3,4 பேபீஸ்  உள்ளன. அவற்றை வைத்துக்கொள்ளும். அவற்றில் இரண்டு இரட்டைக் குழந்தைகள்! அதற்கெனத் தனியாக விளையாட்டு  ஸ்ட்ரோலர் வாங்கி இருப்பதால்  அதில் வைத்துத் தள்ளிக் கொண்டு போகும். அவற்றுக்கு ஃபீடிங் பாட்டிலில் இருந்து வாயில் வைத்துக்கொள்ளும் ரப்பர் வரை கொடுத்து இருக்காங்க! எல்லாத்தையும் எங்கேயானும் போட்டு விடும். அல்லது இந்த பேபீஸின் காலுக்கு எனக் கொடுத்திருக்கும் ஷூவைக் கழற்றி எங்கேயானும் போட்டு விட்டுத் தேடும். அல்லது திரும்பத் திரும்ப நம்மைப் போட்டுத் தரச் சொல்லும். இன்னொரு பேபி பையரோட நண்பர் வீட்டில் கொடுத்தது. சில சமயம் இந்த பொம்மைகளைக் கீழே போட்டுவிட்டுக் காலால் மிதிக்கும். குழந்தைத் தனம் அப்போது வந்துடும் போல! பாப்பாவை மிதிக்கலாமா எனக் கேட்டால் உடனே கைகளில் எடுத்துக் கொள்ளும்.

என்ன இருந்தாலும் பெண் குழந்தை என்பதை இதோட விளையாட்டுக்கள் காண்பித்து விடுகின்றன. முரட்டுத்தனமாக நாற்காலி, பெஞ்ச் ஆகியவற்றை இழுத்துப் போட்டுக் கொண்டு மேலிருந்து சாமான்களை எடுத்துக் கீழே போட்டு விஷமம் செய்தாலும் இம்மாதிரியான விளையாட்டுக்கள் "பெண் என்றும் பெண்தான்!" என்பதைக் காட்டுகின்றன. அதோடு இல்லாமல் அம்பேரிக்கா முழுவதும் பெண் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் தனி, ஆண் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் தனி. நாம் பரிசுப் பொருள் வாங்குவதானால் கூடக் குழந்தை ஆணா, பெண்ணா எனச் சொல்லி வயசையும் சொன்னால் அதற்கேற்ற பரிசுப் பொருட்களை நம் வசதியைச் சொன்னால் அதற்கேற்ப எடுத்துக் கொடுப்பார்கள். அல்லது நாமே தேர்வு செய்து கொள்ளலாம். ஆங்காங்கே இவற்றை விரிவாகப் போட்டு அலமாரிகளில் அடுக்கி இருப்பார்கள். ஆண், பெண் சமத்துவம் என்று சொல்பவர்கள் எல்லாம் இங்கே வந்தால் வாயை மூடிக் கொண்டு இம்மாதிரித் தான் செய்யணும். பெண் குழந்தைகளுக்கு என ரோலிங் சைகிள் கூடப் பிங்க் (ரோஜா நிறம்) வண்ணத்திலும் ஆண் குழந்தைகளுக்கு நீல வண்ணத்திலும் க்டைக்கும். பிறந்த பெண் குழந்தைகளுக்கு மருத்துவமனை கொடுக்கும் உடுப்புகள் ரோஜா நிறத்தில் தான். ஆண் குழந்தைகள் எனில் நீல நிறம். குழந்தைக்குப் போர்த்தும் போர்வையிலிருந்து துண்டு வரை ஆணுக்கு நீலமும், பெண்ணுக்கு ரோஜா நிறமுமாக இருக்கும்.

Thursday, January 23, 2020

இன்னமும் பனிக்கட்டிச் சிற்பங்கள்!


இது தான் எகிப்தோ? பாலைவனம்னு சுட்டிக்காட்ட ஒட்டகங்கள் இருக்கின்றன.


அட! இதானே பிரமிட்? அப்போ நேத்திக்குப் பார்த்தது? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!


என்னவாக்கும் இதெல்லாம்? கீழே?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!





இது ஏதோ நுழைவாயிலாட்டமா இருக்கே!


இது ஏதோ வீடு மாதிரி இல்லையோ? படிக்கட்டுகள் இருக்கும் போல!


அது என்ன கறுப்பு, சிவப்பு வளையம்?


அட! நம்ம ரங்க்ஸ்! இங்கே வந்து நிக்கறாரே! ஏசுவோடு சேர்த்துத் தான் படம் எடுக்கச் சொன்னார். எடுத்தேன்! இங்கே எப்பூடி?


கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள். இம்மாதிரி நிறையவே காண முடியும். நம்ம கில்லர்ஜிக்குப் பிடிக்காது என்பதால் ஒரு சில மட்டும்! இஃகி,இஃகி,இஃகி!



எதிரே உள்ள கட்டிடம் என்ன கட்டிடம்? ???????








Tuesday, January 21, 2020

பனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்!

சில படங்கள் ஒரே மாதிரி வருவதாகச் சொல்லி இருந்தார் கில்லர்ஜி! அதைத் தவிர்க்க இயலாது. இரண்டு பக்கங்களிலும் அடுத்தடுத்து முதலில் அலங்காரங்கள் ஆனதும் தொடர்ந்து ஒன்றை ஒன்று ஒட்டியே எல்லாச் சிற்பங்களும் வருகின்றன. ஒன்றை எடுத்தால் முழுதும் எடுக்கும்போது அடுத்ததில் பாதி சேர்ந்து வரும் அல்லது வளைந்து செல்லும் பாதையின் பின் புறம் இருப்பதில் ஒரு பகுதி தெரியும். அமைப்பு அப்படி. இங்கே நினைவில் இருப்பனவற்றுக்கு மட்டுமே விளக்கம் கொடுக்கிறேன். சிலது நினைவில் இல்லை.







இந்த கோபுரம் எந்த நாடுனு தெரியலை. ஆனால் இங்கே டாலஸில் இதே போல் ஒரு கோபுரம் பொண்ணு அழைத்துச் சென்று பார்த்தோம். அதைப் பற்றிப் பின்னால். இது அநேகமா ஏதோ ஒரு ஐரோப்பிய நாடுனு நினைவு.


இதைப் பார்க்கப் பிள்ளையார் மாதிரி இருக்கு இல்ல? நம்ம ரங்க்ஸ் தான் காட்டினார் உம்மாச்சி பாருனு!


எகிப்திய பிரமிடுகளின் மாதிரிக்கு அந்தப் பக்கம் ஆர்க்டிக், வடதுருவத்து மனிதன். அடுத்துக் கீழே ஆர்க்டிக் முழுசும் பார்க்கலாம். பின்னால் சுதந்திர தேவி சிலையின் மாதிரி தெரியும். அதைக் கிட்டவும் போய் எடுத்திருக்கேன். அதனால் அதுவும் வரும்.




விளையாட்டு வீரர்கள். எந்த நாடுனு நினைவில் இல்லை. குறிப்பாவது எடுக்கிறதாவது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக் காது, கண், மூக்கு எல்லாம் எரியக் கைவிரல்கள், கால் விரல்கள் விரைப்பாக ஆக உள்ளுக்குள்ளே நெஞ்சுக்குள் குளிர் பரவ! என்னோட கர்வபங்கம்.


சுதந்திர தேவி சிலையும் பின்னாலும் பக்கவாட்டிலும் வேறு நாடுகளின் சிற்பங்களில் ஒரு பகுதியும்


இது எல்லோரும் ஏற முயன்றார்கள்னு நினைக்கிறேன். ஆனால் ஏறுவதற்கான இடம் இல்லை. அது தனியா அமைக்கப்பட்டிருந்தது. கீழே இருப்பது கன்னி மேரினு நினைவு.





இயேசு சிலுவையில்!


இன்னும் படங்கள் இருக்கின்றன. நான் தேர்ந்தெடுத்துத் தான் போடுகிறேன். அடுத்த இரு பதிவுகளில் படங்களே வரும். இதைத் தவிர்த்து விளக்கு அலங்காரங்களின் படங்கள் வேறே. அதுவும் நிறையத்தான். இத்தனைக்கும் ஒரு பகுதி எடுக்கவே முடியலை. களைத்து விட்டோம்.


மாயன் கலாசாரச் சிலைகள்னு நினைவு.