எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 31, 2011

அதீதம் இதழில் புத்தாண்டுத் தலையங்கம்!

அதீதம்

அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டிலே நம்முடைய கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவோம் எனத் தீர்மானித்துக்கொள்வோம். கடமை என்பது இங்கே நாம் ஒவ்வொருவரும் நம் நாட்டுக்குச் செய்ய வேண்டியது! சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பக்கத்தில் “நாடென்ன செய்தது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்லி இருந்தார்கள். என்றாலும் பொதுவாக அனைவருமே ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். வேரோடிப் போன ஊழலை எப்படி ஒழிப்பது? நாம் திரும்பத் திரும்ப ஊழல் செய்பவர்களைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. யார் குறைந்த அளவுக்கு ஊழல் செய்திருக்காங்கனு தான் பார்க்கவேண்டி இருக்கே தவிர யார் ஊழலே செய்யலைனு பார்க்க முடியலை. இதுக்கு அடிப்படைக்காரணமே யாருக்குமே மனதில் நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று தோன்றாததும், நேர்மையாக இருந்து கடமையை ஆற்றுவதில் தான் நாம் நம் நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவைகளில் ஒன்றாக இருக்கும் என்பதும் எவருக்கும் புரியவில்லை.

அந்தப் பதிவிலேயே ஒருவர் கேட்டிருந்தார். சிவிக் சென்ஸ் பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதறீங்களேனு. எழுதத் தான் வேண்டி இருக்கிறது. ஏனெனில் இப்போதைய குடிமக்களுக்கெனத் தனியாகக் கடமைகள் இருப்பதே யாருக்கும் தெரியவே இல்லை.. எல்லாருமே மெத்தனமாக நமக்கு என்ன வந்ததுனு இருந்தால் எப்படி? நம்மால் சிறுமை கண்டு பொங்கற அளவுக்கு எல்லாராலும் முடியறதில்லை. இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததும் மோசமானஅரசியலே காரணம். நன்மைகள் செய்தால் அவங்களுக்குத் தொல்லைகளே அதிகமாக இருக்கிற ஒரு காலகட்டத்திலே யார் துணிந்து நன்மையையே செய்ய நினைப்பார்கள்? நமக்கென்ன வந்ததுனு தான் போகமுடியும். அரசு இங்கே தான் தன் வலுவான கரத்தை நீட்டித் தீமைகளை அழிக்க முற்படவேண்டும். நல்லவர்களை நல்ல குடிமகன்களைக் காக்க முன்வரவேண்டும். அரசு இதை நமக்குச் செய்தால் நாம் அரசுக்குப் பலமடங்கு திரும்பச் செய்யலாமே.

கடமையாற்றுவதில் நேர்மைதேவை. எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் நம் வேலையை, நம் கடமையை நாம் செய்து முடிக்கவேண்டும். அந்த சிவிக் சென்ஸ் என்பதே நம் மக்களுக்குச் சுத்தமாக இல்லை. ஏனெனில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் நாம் இவை அனைத்தையும் மறக்கடிக்கப்பட்டோம். நம் கடமைகளைச் செய்ய நமக்கு யாரும் இன்று ஒரு பெரிய அளவில் முன்னோடியாக இல்லை. எனினும் இப்படித் தான் கடமைகளைத் தவறாமல் செய்யணும் என்ற எண்ணமே நம்மிடம் ஆழப் பதியவில்லை.

குடிமைப் பயிற்சி என்ற பெயரில் நானெல்லாம் பள்ளி மாணவியாய் இருக்கையிலே வாரம் இருநாட்கள் ஒரு வகுப்பு எடுப்பாங்க. அதிலே தெருவிலே நடந்து செல்வதில் இருந்து, வாசலில் குப்பையைப் போடுவதில் இருந்து எல்லாமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு நாடகமாய் நடித்தும் காட்டி இருக்கோம். ஆசிரியர்களே போலீஸ் வேஷம் போட்டுட்டு வருவாங்க. நாங்க மாணவிகள் சைகிளில், நடந்து, கார் ஓட்டிக்கொண்டு என நடித்துக்கொண்டு வந்து தவறான பாதையில் தவறான முறையில் சாலையைக் கடப்பதாயும், நில் எனும் குறிப்புக் காட்டியபின்னரும் அதைக் கவனிக்காமல் செல்வது போலவும், சிலர் ஒழுங்காய்ச் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது போலும் நடிப்போம். அப்போ எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க, இது தவறு; இது சரி என. தவறான முறையில் சாலையைக் கடந்தவர்களுக்கு அபராதம் என்றும் சொல்லுவாங்க. அந்த அபராதமும் சீட்டு வாங்கிக் கொண்டு செலுத்த வேண்டியது என்பதைப் புரிய வைப்பாங்க. சாலைகளில் இருக்கும் குடிநீர்க் குழாய்களில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது இதெல்லாம் கூடாதுனு சொல்வாங்க. அவ்வளவு ஏன்? அந்தக் காலங்களில் நான் மதுரையில் பள்ளிமாணவியாய் இருக்கையில் காலை பதினொரு மணியில் இருந்து மதியம் ஒரு மணிக்குள் ஒவ்வொரு வார்ட் கவுன்சிலரும் அவங்க தொகுதியைச் சுற்றி வந்து யார் வீட்டு வாசல்லே குப்பை குவிகிறது? யார் தண்ணீர்க்குழாயை வெட்டி வேலைகளுக்குப் பயன்படுத்தறாங்கனு பார்ப்பாங்க. அபராதமும் விதிப்பாங்க. நகராட்சியின் ரசீது கொடுப்பாங்க. இது நடந்தது இந்தியாவில். அதுவும் பெரிய கிராமம் எனப்படும் மதுரையில். அதே மதுரை இன்று இருக்கும் நிலைமை குறித்துச் சொல்லவேண்டியதில்லை

இம்மாதிரி இருந்த நிர்வாகம் இப்போது சீர் கெட்டதற்கு நமக்குக்குடிமைப் பயிற்சி அளிக்காததும், மாரல் சைன்ஸ் எனப்படும் ஆன்மிகப் பாடங்கள் கற்றுத் தராததும் முக்கியக் காரணம். முன்பெல்லாம் வாரம் ஒரு நாள் இந்த அடிப்படை தார்மீகங்கள் பற்றிய வகுப்பு எடுப்பார்கள். உலகளாவிய அளவில் உள்ள பெரிய தலைவர்கள்,மதத்தலைவர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் ஆகியோரின் அமுத மொழிகள் போன்றவை கற்பிக்கப்படும். ஆனால் இப்போது இவை எல்லாம் மதச் சார்பின்மைக்கு ஒத்துவராது என்று தள்ளிவிட்டனர். இதுவா மதச் சார்பின்மை? உண்மையான மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் ஒதுக்காமல் அவற்றிலுள்ள நல்ல விஷயங்களை மட்டுமே பார்ப்பது ஆகும். நம் சொந்த மதத்தை ஒதுக்கிக் கொண்டு அதில் குறை கூறிக்கொண்டு இருந்தோமானால் மற்ற மதங்களை அவற்றைப் பின்பற்றும் நண்பர்களை எப்படி மதிப்போம்! ஆனால் இந்த நிலையை மாற்றவேண்டும் என உறுதி எடுப்போம்.. இதை ஆரம்பிக்கவேண்டியது இளைஞர்களிடம் இருந்தும், பள்ளி மாணவர்களிடம் இருந்தும் தான்.

நம்மால் இயன்றது நாம் குடியிருக்கும் பகுதி இளம் சிறார்களுக்குச் சாலைவிதிகள், சாலைப்பராமரிப்பு, தெருக்களைச் சுத்தமாய் வைத்திருத்தல், குடிநீரை வீணாக்காமல் கண்காணித்தல், சுகாதார மேம்பாடு, போன்ற அடிப்படை விதிகளோடு, இறை உணர்வையும் ஊட்டி வரவேண்டும். இதற்கெனப் பிரசாரம் செய்வது எனப் பொருள் இல்லை. அவரவரின் சொந்த மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஒரு தார்மிக உணர்வைத் தோற்றுவிக்கவேண்டும். இது என் நாடு; என் மாநிலம்;என் நகரம்; என் தெரு; என் மக்கள் என்ற உணர்வைத் தோற்றுவிக்க வேண்டும். இன்றைய அடிப்படைத் தேவை இந்த உணர்வே. தானே ஊழலற்ற ஒரு சமுதாயம் உருவாகும். எல்லோரும் இன்புற்று வாழ்வதுவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே!

இதற்காக நாம் பாடுபடுவோம் என்ற உறுதியை எடுப்போம்.

வந்தே மாதரம்!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். அதீதம் மின்னிதழுக்காக எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். மேல் விபரங்களுக்கு மேலுள்ள அதீதம் சுட்டிக்குச் செல்லவும். சில நாட்கள் தொடர்ந்து அதீதத்துக்கு எழுதியவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, December 29, 2011

ஸ்கூலுக்குப் போகணுமே அடுத்தவாரம்!

அப்புவோட தலையாய சந்தேகம், பாட்டி நீ எப்போவுமே பாட்டியாத் தான் இருந்தியா? ஹிஹிஹி, நான் குழந்தைதான் அப்படினு சொன்னா இல்லைங்கறது. தினம் ராத்திரி என்னைப் படுக்கச் சொல்லி ரஜாயால் போர்த்திவிட்டு, அது போர்த்தும்போது கைகளையும் ரஜாய்க்குள்ளே வைச்சுக்கணும். கை கொஞ்சம் வெளியே தெரிஞ்சால் கூட, put your hands inside the comforter or else you will freeze அப்படினு குட்டிக்குரலில் சொல்லி என்னை பயமுறுத்தும். கதை சொல்லவானு கேட்டுக்கும். ஏன் டெடி வைச்சுக்கலை? நான் தரட்டா? டெடி வைச்சுக்காமலா தூங்கறேனு ஆச்சரியமாக் கேட்கிறது. நேத்திக்கு அவ அம்மாவும், அப்பாவும் வேலையா வெளியே போக வேண்டி இருந்தது. அப்புவோட அக்காவும் கூடப் போயிருந்தாள். ஆதலால் அப்புவை மட்டும் எங்க கிட்டே விட்டுட்டுப் போனாங்க. சமத்தா இருந்தது.

ஆனால் அதுக்கு சந்தேகம்! அது நாலு மணிக்கு "கமகம்" குடிக்கும். இங்கே கமகம் என்பது பால்னு அர்த்தம் பண்ணிக்கணும். குடிக்கிற எல்லாமே அப்புவுக்கு இன்னமும் கமகம் தான். சாப்பிடறச்சே கமகம்னு கேட்டால் தண்ணீர்னு புரிஞ்சுக்கணும். மற்ற நேரங்களில் பால். நாலுமணிக்குள்ளே அம்மாவோ,அப்பாவோ வரலைனா என்ன செய்யறது? Patti do you know how to heat the Gamagam? னு கேள்வி. எனக்கு கமகம் சூடு பண்ணிக்கொடுக்கத்தெரியுமானு ஒரே கவலை. நான் மைக்ரோவேவில் வைத்துச் சூடு பண்ணித் தரேன்னு சொன்னேன். அரை மனசா சரினு சொன்னது. அப்போவும் கமகம் இருக்கிற இடம் தெரியுமானு கேட்டது. ஃப்ரிஜிலே இருந்து எடுத்துக்கறேன்னு சொன்னேன். அது குடிக்கிற கமகம் ஆர்கானிக் கமகம்.அதனாலே அது நான் காட்டறேன்னு சொன்னாள்.


அப்பு நான் இப்போத் தான் முதல்லே இங்கே வரேன்னு நினைச்சுட்டு இருக்கு. திங்களன்று வீட்டுக்கு வந்ததும், நடந்த நிகழ்ச்சியால் அவளோட அப்பாவும், அம்மாவும் அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளில் மூழ்கிப் போக அப்பு என்னை அழைத்துக்கொண்டு நான் இந்த வீட்டுக்குப் புதுசு என்ற நினைப்பில் நாங்க தங்கப்போற ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் ரூமைக் காட்டி இங்கே தான் நீயும் தாத்தாவும் தங்கணும்; இந்தக் கட்டிலில் பெட்டெல்லாம்போட்டு உனக்கும் தாத்தாவுக்கும் நான், அம்மா, அக்கா தயார் செய்தோம்னு சொல்லிட்டு, சாமிரூமைக் காட்டி இது உம்மாச்சி ரூம்னு சொன்னது. அதுக்கப்புறமா என்னைத் தட்டித் தூங்க வைத்துவிட்டு வெளியே வந்து ஹாலில் சோபாவில் படுத்துக்கொண்டு உடனேயே தூங்கிப் போனது!

பாட்டியோட பேர் என்னனு கேட்டா, பாட்டிதான் அப்படினு சொல்றது. ஹிஹிஹி, எனக்குப் பேரே இல்லையாம். சின்னக் குழந்தையா இருந்திருக்கேன்னு சொன்னா ஃபோட்டோ காட்டுனு சொல்றது, எங்க பையரை அவ அம்மாவோட பேபி பிரதர்னு சொன்னா சிரிப்பு வருது அப்புவுக்கு. பேபி பிரதர், பேபி சிஸ்டர் எல்லாம் அப்பு மாதிரி பேபியாத்தான் இருப்பாங்களாம். எங்க பையரை he is too big; he is not a baby அப்படினு சொல்லிச் சிரிக்கிறது. வீடு முழுதும் தலையணைக்கப்பலில் உலா! எங்களையும் அதிலே பிரயாணம் செய்யச் சொல்லிக் கூப்பிடும். அவங்க ஸ்கூலில் அவளோட டீச்சர் அவ கிட்டே what are you going to get for this Christmas? அப்படினு கேட்டிருக்காங்க. அதுக்கு அவ, I am going to get my thatha and patti. னு சொல்லி இருக்கா. டீச்சர் எங்க பொண்ணு கிட்டே, what are thatha and patti?னு கேட்டிருக்காங்க. பொண்ணு விளக்கினதும் டீச்சருக்கு ரொம்ப சந்தோஷமாம். அடுத்தவாரம் என்னையும் ஸ்கூலுக்குக்கூட்டிட்டுப் போய் அவங்க டீச்சரை விட்டு எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்கச் சொல்றதா அப்பு சொல்லி இருக்கு.

ஹிஹிஹிஹி, அது பிறந்தப்போ நான் வந்திருந்தது அதுக்குத் தெரியலை; பாவம். கொஞ்ச நாள் போனால் புரிஞ்சுக்கும். அப்போப் பெரிய பெண்ணா ஆயிடுவா. என்ன இருந்தாலும் இந்த சுகம் தனி.

Tuesday, December 27, 2011

மயிரிழையில் தப்பினோம்! :(

யு.எஸ். வந்தால் அக்காவும், தம்பியுமாக நாங்கள் தங்கும் காலத்தைப் பங்கு போட்டுக்கொள்வது வழக்கமே. அது போல் இப்போதும் தம்பி வீட்டுக்கு முன்னால் வந்தாச்சுனு அக்கா கிட்டே இருந்து அழைப்புக்கு மேல் அழைப்பு. ஒருவழியாக இந்தக் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பெண்ணும், அவங்க குடும்பமும் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. பையரோ விமானத்தில் போயிடுங்கனு அதைக் குறித்துச் செய்த ஆய்வுகளில் விமானப் பயணச்சீட்டின் விலை ஹூஸ்டனில் பையர் வீட்டை விட அதிக விலை என்பது தெரிந்தது மட்டுமின்றி, நாங்க ஹூஸ்டனில் இருந்து டாலஸ் போய் அங்கிருந்து இன்னொரு இடம் போய் மெம்பிஸ் போகும் விமானத்தைப் பிடிக்கவேண்டும். அல்லது ஷிகாகோ போய் அங்கிருந்து மெம்பிஸ் போகவேண்டும், இல்லைனா அட்லான்டா போய்ப் போகவேண்டும். ஆங்காங்கே காத்திருக்கும் நேரங்களை எல்லாம் கணக்குப்பண்ணினால் 10 மணி நேரம் ஆகிவிடும். ஆகவே நாங்க காரிலேயே போகலாம் என்ற எங்கள் விருப்பத்தைச் சொன்னதும் பெண் புறப்பட்டு வந்தாள். இங்கே கார் பயணம் அலுப்பைத்தராது. சுகமாகவே இருக்கும்.

எல்லாம் நல்லபடியாகவே இருந்தது. வழியெல்லாம் மழை கொட்டித்தீர்த்தது. ஆனால் இங்கே மழை பெய்தால் எல்லாம் பயணத்துக்கு அசெளகரியம் எல்லாம் ஏற்படாது. சாலைகள் எல்லாம் பிரமாதமாக இருக்கும் என்பதால் ஒரு பிரச்னையும் இருக்காது. திடீர்னு ஒரு இடத்தில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. என்னனு பார்த்தால் இவ்வளவு அதிகவனமான ஏற்பாடுகளிலும் ஆங்காங்கே விபத்தும் நேரிடுகிறது. அது போல நாங்க மெம்பிஸ் போய்ச் சேர இரண்டு மணி நேரம் முன்னர் ஒரு கார் குப்புறக் கவிழ்ந்து ஏற்பட்டிருந்த விபத்தைப் பார்த்துக்கொண்டே சென்றோம். கார் அந்த இடத்தைக்கடக்க அரை மணி நேரம் ஆனது. ஒருவழியா மெம்பிஸும் வந்து சேர்ந்தோம்.

இரவு உணவுக்காக ஒரு நல்ல உணவு விடுதியில் நிறுத்தலாம் என எங்களுக்கு ஒத்துவருகிறாற்போல் ஒரு உணவு விடுதியில் காரை நிறுத்தினார் எங்கள் மருமகர். அனைவரும் இறங்கி உள்ளே போய் அவரவருக்கு வேண்டியதைச் சொல்லிவிட்டு உணவு வரக் காத்திருந்தோம். நாங்க ஆர்டர் செய்திருந்த தோசையும் வந்தது. உணவை வாயில் போடும்போது விடுதியின் மானேஜர் வந்து, கார் அடையாளத்தைச் சொல்லி, முன்புறத்து ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைச் சொன்னார். உடனேயே பதறி அடித்துக்கொண்டு எல்லாரும் வெளியே பாய்ந்தோம். அன்னிக்குனு பார்த்து நான் எப்போதும் இணைபிரியாமல் கையிலேயே வைத்திருக்கும் என் கைப்பையை வண்டியிலேயே விட்டுட்டு வந்துவிட்டேன். பின் சீட்டிலே போர்வையைப் போட்டு மூடி வைத்திருந்தோம்.

உள்ளே பார்த்தால் எங்க மருமகரின் லாப்டாப் இல்லை; குழந்தைகள் சினிமா பார்க்கவென்று அதை எடுத்திருந்தது. அவங்க பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஊர் வந்துவிட்டதால் திரும்ப உள்ளே வைக்காமல் டிரைவிங் சீட்டின் அடியிலேயே வைத்திருந்திருக்கிறார். யாருமே அதைப் பெரிசாக நினைக்கவில்லை. தெரிந்த ஊர், தெரிந்த இடம் என்ற அலட்சியமா? அல்லது நேரமா! புரியவில்லை. எப்போதும் கவனத்தோடு இருக்கும் நானும் என் கைப்பையை வைத்துவிட்டுப் போயிருந்தேன்! ஆகவே இது நேரம் தான் காரணம் என நினைக்கிறேன். லாப்டாப்பைக் காணோம் என்றதும் வண்டியை மறுபடி சோதனை போட்டோம். நல்லவேளையாகக் கைப்பை இருந்தது. வேறு பொருட்கள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தன. எங்க வண்டிக்கு அருகே இருந்த மற்றொரு வண்டியும் முன்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவங்க உள்ளூரிலேயே இருந்து வந்திருப்பதால் அதிகம் சாமான்கள் இல்லை. ஆனாலும் வண்டி ஜன்னல் உடைந்ததைச் சொல்லி ஆகவேண்டும். அப்போத் தான் இன்ஷூரன்ஸ் காரங்க மாத்திக் கொடுக்க வசதி. உடனே போலீஸும் வந்தது. கேஸ் பதிவு செய்திருக்கிறார்கள். லாட்டாப்பை வாங்கிய கம்பெனிக்குத் தொலைபேசி லாப்டாப் சென்றிருக்கும் வழியைத் தேடச் சொன்னது. அவங்க பார்த்ததில் லாப்டாப்பில் இருந்து எதையும் நீக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

கூடியவரை உடனடியாக வங்கிக்கணக்கெல்லாம் முடக்கி, க்ரெடிட் கார்ட் கணக்குகள் மற்ற முக்கியக் கணக்குகளை எல்லாம் முடக்கியாச்சு. முதலில் உணவை வாங்கிக்கொண்டு வீட்டில் போய் உண்பதாக இருந்தது. ஆனால் திடீரெனத் தோன்றியதொரு யோசனையில் எல்லாருமே அங்கேயே சென்று உண்பதாக முடிவு செய்தோம். அது ஒருவேளை நன்மைக்குத்தானோ என இப்போது தோன்றுகிறது. எல்லாரும் வண்டியிலேயே அமர்ந்திருந்து ஒருத்தர் மட்டும் இறங்கிப் போய் உணவு வாங்கச் சென்றிருந்தாலோ அல்லது பெண்ணும், மாப்பிள்ளையும் மட்டும் போயிருந்தாலோ, அந்த ஆள் வந்து வண்டியில் இருந்தவங்களை மிரட்டி இருக்கலாம்.அல்லது துப்பாக்கியை வைத்து மிரட்டி இருக்கலாம். என்ன ஒரு விந்தை என்றால் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைக்கையில் பாதுகாப்பிற்கெனப் பொருத்தி இருக்கும் எச்சரிக்கை மணி இரண்டு கார்களில் இருந்துமே ஒலிக்கவில்லை. வந்தவன் சாமர்த்தியமாக அதைச் செயலற்றதாக்கி இருக்கிறானோ? தெரியவில்லை. உடைந்த கண்ணாடியை ஓரளவுக்குத் திரட்டிப் போட்டுவிட்டு போலீஸ் எங்களை அங்கிருந்து கிளம்ப அனுமதி கொடுத்ததும் மிச்சம் உடைந்த துகள்கள் மேலேயே அமர்ந்த வண்ணம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஒருத்தருமே சாப்பிடவில்லை. மற்ற பாதுகாப்பு வேலைகளைப் பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு வந்து தொடர, குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு எங்களுக்கு இரவு முழுதும் சிவராத்திரியும், ஏகாதசியுமாகப் பொழுது கழிந்தது.

மூன்றுமுறை யு.எஸ். வந்து சென்றதில் இம்மாதிரி நடந்தது இதுவே முதல்முறை. இறை அருளால் தப்பிப் பிழைத்திருக்கிறோம். இதுவே கடைசிமுறையாகவும் இருந்து வரப் போகும் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையைக் கொடுக்கப் பிரார்த்திக்கிறோம்.

Sunday, December 25, 2011

நாசாவில் ஆலோசனை நடத்திய விபரங்கள்! :))

ஒபாமா கூப்பிட்டாஹ, பான் -கீ--மூன் கூப்பிட்டாஹ, ஹிலாரி கிளின்டன் கூப்பிட்டாஹ! இப்படி எல்லாரும் கூப்பிட்டு நாம யு.எஸ். வந்திருக்கோம். (ஹிஹிஹி, நுழையறச்சேயே கஸ்டம்ஸ்காரங்க சொன்னதை எல்லாம் கண்டுக்கக் கூடாது!) வந்துட்டு உலக சமாதானத்துக்காக எதுவுமே செய்யாமல் இருந்தால் எப்பூடி? அதான் நாசாவுக்கு விசிட் செய்து இந்தியாவுடனான ஒப்பந்தங்களைப் பத்திப் பேச்சு வார்த்தை நடத்தப் போயிருந்தோம். என்ன மரியாதை! என்ன மரியாதை! ஆங்காங்கே போஸ்டர்! வாண வேடிக்கை! ரெட் கார்ப்பெட் வெல்கம்!னு ஏக மரியாதை போங்க! அங்கே நடந்த பேச்சு வார்த்தையைப் பத்தி பப்ளிக்கா எல்லாம் சொல்ல முடியாது. சும்மாப் போய் வந்த விபரம் மட்டும் கீழே! :))))))

நாசா ஸ்பேஸ் சென்டருக்கு ஒரு முறை கூடச் சென்றதில்லை. ஆகவே இம்முறையாவது அங்கே செல்ல நினைத்தோம். ஒருநாள் சென்றோம். உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு உண்டு. சிறுவர்கள், மாணவர்களுக்குச் சலுகை. உள்ளே நுழைகையிலேயே பெரியதொரு கூடம் பல்வேறு அலங்காரங்கள், கடைகள், விளையாட்டுக் கூடங்கள் என வரவேற்கிறது. ஒரு பக்கம் உணவு உண்ணும் விடுதி. எல்லாம் யானைவிலை, குதிரை விலை விற்கும் எனப் பையர் சொன்னார். உள்ளே நுழைகையில் சோதனைகள் உண்டு. என்னைச் சோதனை போடுகையில் என்ன காரணமோ தெரியலை உள்ளே அனுப்பிட்டார் காவலாளி. உணவு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை; என்றாலும் நாங்க உணவைக் காட்டிவிட்டு வழக்கம்போல் என் கணவரோட சர்க்கரை வியாதியைச் சொல்லிவிட்டு உள்ளே கொண்டு போனோம். உள்ளே போனதும் பையர் முதலில் ட்ராம் கார் சுற்றுலாவை முடித்துக்கொள்வோம் என அதற்குச் சென்று வரிசையில் நிற்கச் சொன்னார். அதற்குள்ளாக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு திசையில் போய்விட, எல்லாரையும் கூட்டி வந்து உள்ளே சென்றோம். உள்ளே நுழைகையில் எல்லாரையும் ஒன்றாக வைத்துக் குடும்பமாகப்படம் எடுத்தார் ஒருத்தர். ஆஹானு ஆச்சரியப்பட்டுப் போனேன். பையர் படம் வாங்கிக்க வேண்டுமெனில் 30 டாலரிலிருந்து 50 டாலர் வரை கொடுக்க வேண்டும் என்றும் இது ஒரு பிசினஸ் எனவும் சொன்னார்.

ட்ராம் காரில் ஏறிக் கொண்டு சுற்றுலாவுக்குக் கிளம்பினோம். முதலில் அப்போலோ மிஷின் கன்ட்ரோல் சென்டருக்குச் சென்றோம். அங்கே சுற்றிப் பார்த்துவிட்டு ராக்கெட் பார்க் சென்று அங்கே உள்ளவைகளையும் சுற்றிக்காட்டினார்கள். உள்ளே கன்ட்ரோல் ரூமில் வேலை செய்வதை விளக்கப்படங்களோடு ஒளிக்காட்சியாகவும் காட்டுகிறார்கள். இவை அனைத்தும் உண்மையாகவே வேலை செய்யும் இடங்கள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் என்ற அறிவிப்பும் வேறு கொடுக்கிறார்கள். நாம் செல்லும் தினம் நம்மால் பார்க்க முடிந்தால் நம் அதிர்ஷ்டமே. இது தவிர விண்வெளியைக் குறித்தும், செயற்கைக்கோள்கள் குறித்தும் விளக்கப் படம், துரதிர்ஷ்டம் பிடித்த கொலம்பியா விண்கலத்தில் பயணம் செய்த நபர்கள்(கல்பனா சாவ்லா உள்பட) அவர்கள் தங்களைத் தயார் செய்து கொண்ட முறைகள் எனக் காட்டுகின்றனர். அந்தக் குறுகிய பாதை வழியாக வெளியே சறுக்கிக் கொண்டு வந்து இறங்குகையில், எனக்கு நல்லவேளையா நமக்கு விஞ்ஞானத்தில் அறிவு கொஞ்சம் தான் என நிம்மதி ஏற்பட்டது. எப்படித்தான் வராங்களோ தெரியலை! அந்த உடையைப் போட்டுக்கொள்ளவும் இருவராவது உதவிக்குத் தேவை. இவ்வளவு செய்து முடித்து விண்வெளிப்பயணமும் செய்த பின்னர் அவர்கள் இப்படி இறந்து போனது துரதிர்ஷ்டவசமானதே. அவர்கள் நினைவாக ஞாபகார்த்தக் கல் பொறித்து அங்கே மரங்களை வளர்க்கின்றனர்.

இதை எழுதிப் போடறதுக்குள்ளே பப்ளிஷ் ஆகி இருக்கு; அதுக்குள்ளே கமென்ட்ஸும் வந்தாச்சு! துரோகி கூகிள் ப்ளாகர்!

Friday, December 23, 2011

chak de India!

ஹிஹிஹி, இன்னிக்குத் தான் பார்த்தேன்; ரொம்ப நாளாப் பார்க்கணும்னு நினைச்ச படம்; அருமை! அருமை! அருமை! யதார்த்தமான படம். அதுவும் காமன்வெல்த் கேம்ஸிலோ எதிலோ பெண்கள் ஹாக்கி டீம் ஜயிச்சதுக்கப்புறமா வந்த படம்னு நினைக்கிறேன். அதனால் அதன் தாக்கம் அதிகமா இருந்திருக்கும். ஒரு காலத்தில் இந்தியாவை ஹாக்கியில் வெல்ல முடியாதும்பாங்க. இன்னிக்கு அந்த விளையாட்டே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :((((( எல்லாருக்கும் கிரிக்கெட் தான்!

Tuesday, December 20, 2011

முக்கியச் செய்தி!

அறிவிப்பு! கண்ணன் வருவான் மூன்றாம் பாகம் ஆரம்பம்!

இங்கேபார்க்கவும். விரைவில் எதிர்பாருங்கள்!

Sunday, December 18, 2011

யப்ப்ப்ப்ப்பா, இத்தனையானு கேட்காதீங்க! இம்புட்டுத்தான்!

உத்தமபுத்திரன்,= அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. சுமார் ரகம் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது சிவாஜி நடிச்சதோ பி.யு. சின்னப்பா நடிச்சதோ இல்லையாக்கும். தனுஷ்(?) நடிச்ச உத்தமபுத்திரன். நம்ம கணேஷ் கேட்டிருக்கார்; அதுக்கப்புறம் தான் செக் பண்ணினேன். மூணு உத்தமபுத்திரன்! :)))))))


த்ரீ இடியட்ஸ் = பிரமாதமாப் பேசினாங்க; ஆனால் சில இடங்களில் ரசிக்க முடியலை. சில இடங்களில் பரவாயில்லை. கடைசிக் காட்சியில் தான் அமீர்கான் தான் தான் சந்திக்கவேண்டிய வாங்க்டு என்று தெரிந்ததும் மனம் மாறுவது சரியான சினிமாத்தனமாக இருக்கிறது.


ஜப் வி மெட்= இது கொஞ்சம் பரவாயில்லை. ஜோடிப் பொருத்தமும் நல்லா இருந்தது. நான் கரீனா கபூர் நடிச்ச படங்கள் ஜாஸ்தி பார்த்ததில்லை. இதிலே பரவாயில்லாமல் நடிச்சிருக்காங்க என்றாலும் கரிஷ்மாவின் நடிப்போடு போட்டி போடமுடியுமா? சந்தேகம் தான். ஜுபைதாவும், சக்தியும் போதுமே கரிஷ்மாவுக்கு!


கோ = கொஞ்சம் இல்லை நிறைய யதார்த்தமான படம். ஆரம்பத்திலேயே ஊகிச்சுட்டேன். யார் வில்லன் என்று. அதனால் கடைசியிலே அதிர்ச்சியாக இல்லை. முழுக்க முழுக்க நடக்கக்கூடிய சாத்தியங்களே படம் முழுதும். எல்லாமும் வெகு இயல்பாக இருக்கின்றன. அரசியல்வாதிகள் அனைவரும் நிஜமான அரசியல்வாதிங்களோனு நினைக்க வைச்சுட்டாங்க. அவ்வளவு ஜகஜம்! ஹிஹிஹி!



ஜெரி= ஹிஹிஹிஹிஹி தான் படம் முழுசும்! பின்னே! மாது பாலாஜியும், கிரேசி மோகனும் வந்தால்! வேறே எப்படி இருக்கும்? என்றாலும் படம் நல்லதொரு கருத்தைச் சொல்கிறது. மென்டலி ரிடார்டட் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்திருக்கும் கதாநாயகி ஜானகி(கிரேசியோட நிரந்தரக்கதாநாயகி பெயர் ஜானகி தான் இதிலேயும்) திருமணமாகாத கல்லூரிப் பெண். (இதிலே நடிக்கும் பெண் தான் இப்போ சீரியல் ஒண்ணிலே வர துளசி??) இந்தக் குழந்தையைத் தான் தத்து எடுத்ததை ஒப்புக்கொள்ளும் ஆணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று தனக்குள்ளாக சபதம் எடுத்திருக்கிறாள். அவங்க அப்பா, அம்மாவுக்குக் கூடத் தெரியாமல். அது நடக்கிறதா?

கதாநாயகனோ (யாருங்க அது?) செலக்‌ஷனே சரியில்லை; வேறே யாரையானும் போட்டிருக்கலாம்; நகைச்சுவைக்காட்சியிலே முகபாவம் சரியில்லை; மத்தது மட்டும் வாழ்ந்ததா? அதுவும் இல்லை! கதாநாயகன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. ஒரே சமயம் மூணு பேரை லவ் பண்ணிக்காட்டுவதாக நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு மூணு பேரையும் ஒரே சமயம் காஃபி ஷாப், அங்கே இங்கேனு வர வைச்சுட்டுக் கடைசியிலே ஜானகியை லவ் பண்ண முடியாம அவ பிறந்த நாளுக்கு யாரையோ பார்க்கப் போறானு பின் தொடர்ந்து உண்மையைக் கண்டு பிடிச்சு...... உண்மையான காதல் பிறந்து....... மூணு பேரையும் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லி......... ஹிஹிஹி மூணு பேரோட உறவினர்களிலேயும் ஒருத்தருக்கு அம்மா, அப்பா, இன்னொருத்தருக்கு அண்ணன், அண்ணி, மூன்றாமவருக்கு மாமா, அத்தை னு இருந்ததாலே மாப்பிள்ளை ஜெரியின்(ஜெயராமனுக்கு ஜெரியாம்) அப்பா மூணு பேரும் ஒரே பொண்ணு குடும்பம்னு நம்பக் குழப்பமோ குழப்பம்; அவங்களுக்கு இல்லை. நமக்கும் இல்லை. நல்லா ரசிக்க முடியுது! கிரேசியைக் கேட்க வேண்டுமா! வெளுத்துக் கட்டி இருக்கார்!

அப்புறமாக் கடைசிலே உண்மை தெரிஞ்சதும் ஜெரியோட அப்பா மாட்டேன்னு சொல்லியும் ஜெரி மற்ற இரண்டு மணப் பெண்களின் துணையோடும் (அவங்களும் உண்மை தெரிஞ்சு மனசு மாறிடறாங்களாம், :P) கல்யாணம் செய்துக்கறார். அதோடு இரண்டு பேரும் குழந்தையே பெத்துக்கப் போறதில்லைனு முடிவு எடுத்திருப்பதாயும், இந்தக் குழந்தையைத் தான் வளர்க்கப் போவதாயும் சொல்லுகிறார். நல்லதொரு செய்தி இருக்கே படத்தில்; அந்த வகையில் பாராட்டலாம்.

கடைசி சீன் சூப்பரோ சூப்பர்! :)))))))


சென்னை 28 ரொம்ப எதிர்பார்ப்போட பார்த்த படம். கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிடிக்கும். படம் தொய்வில்லைனாலும் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இல்லை. சென்னை -28 இரண்டாம் பாகம் வந்தாச்சா? யாராவது சொல்லுங்கப்பா!

கண்ட நாள் முதல் = கிட்டத்தட்ட ஜப் வி மெட் படத்தோட கதை தான் என்றாலும் அதிலே எதிர்பாராமல் சந்திக்கறாங்க. இதிலே அப்படி இல்லை. சின்ன வயசிலே இருந்து பழகிட்டுச் சண்டை போட்டுட்டு, ஹீஹிஹி, ரெண்டு பேரும் என்ன ஒரு இயல்பா சண்டை போடறாங்க! லைலாவுக்கு (கல்யாணத்துக்கு அப்புறம்??) இதெல்லாம் என்ன இயல்பா வருதுங்கறீங்க! அருமையாச் சண்டை போடறாங்க. ஆனால் அடிக்கிறது தான் கொஞ்சம் என்னவோ போல் இருக்கு. அதிலும் முதல் தரம் அடிக்கிறதை நியாயப்படுத்த முடியுது. படம் முடியறச்சே அடிக்கிறது ம்ஹும்; அந்த சீனுக்கு உள்ள மகத்துவத்தையே அந்த அடி குறைச்சுடுது! ஆனால் கண்ணுக்கு இனிமையான வீடுகளிலே நடக்கிற சம்பவங்கள் தான். பக்கத்து வீட்டிலே நடக்கிறதைக் காதால் கேட்டுக்கொண்டே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே நம் வீட்டில் குளிர்ந்த மாலை நேரத்தில் கையிலே ஒரு நல்ல புத்தகத்தை வைத்துக்கொண்டு சூடாய் பஜியாவோ, பக்கோடாவோ சாப்பிட்டுக்கொண்டு அவ்வப்போது புத்தகத்தில் ஒரு கண்ணும், பக்கத்து வீட்டு நிகழ்ச்சியில் இன்னொரு கண்ணுமாக இருப்பது போல் ஓர் உணர்வு.


இன்னும் சில மனதில் நிற்காத படங்கள். ம்ஹும், சுகமில்லை.

Thursday, December 15, 2011

குகைக்குள்ளே 180 அடி ஆழத்தில் !

இப்போது உள்ளே ஒரு சில காட்சிகளைக் காட்டும் படங்களைப் பார்ப்போம்.

180 அடி ஆழத்தில் உள்ளே












உயிருள்ள தாவரம் ஒன்று எப்படியோ தப்பிப் பிழைத்துள்ளது.
















படி வளைந்து கீழே செல்கிறது.


















உள்ளே இறங்கும் படிகள். 35 படிகள் இறங்க வேண்டும்.
















இடப்பக்கமாய்ப் பார்த்தால் பெருமாள் பள்ளி கொண்டிருப்பார். தெரியறாரா?












குகையின் ஆழம்











வரிசையாய் ரிஷிகளைப் போல் காணப்படும் பாறை ஓவிய அற்புதம்.

Wednesday, December 14, 2011

ஆழம் காண முடிந்த இடங்கள் ஒரு பார்வை!

1960 ஆம் ஆண்டு சில மாணவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது இந்தச் சுண்ணாம்புப் பாறைக்குகைகள். மூன்று கல்லூரி மாணவர்கள் இந்த இடத்திற்குச் சுற்றுலா வந்தபோது தற்செயலாகக் கண்டுபிடித்து முதல்முறை ஒரு மைல் தூரம் செல்லும் குகைப்பாதையைக்கண்டறிந்தார்கள். மேலும் மேலும் அங்கே சென்று ஆய்வுகள் செய்ததில் மேலும் இரண்டு மைலுக்கும் மேலுள்ள பாதையும் அதை ஒட்டிய குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதை வடக்குக் குகைகள் என்றனர். குகைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவை தனியார்களின் நிலங்களில் இருந்ததினால் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலமே குகைகளின் பராமரிப்பும் செய்யப்பட்டு குகைப்பாதையும் மேம்படுத்தப்பட்டது. நிலத்தின் சொந்தக்காரப் பெண்மணி இதை உலகுக்கு அறிவிக்க விரும்பினாள். கல்லூரி மாணவரான ஓரியனால் இது டெக்சாஸின் நகர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அவர்களிடம் தேவையான நிதி உதவி இல்லை எனச் சொல்லப்பட்டது.

ஓரியனும், அவர் நண்பரும் துணை செய்ய நிதியைப் பெருக்க முடிவு செய்தார் நிலச் சொந்தக்காரப் பெண்மணி. அவரின் கணவரும் தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் வேலை செய்தவர் என்பதால் அவரும் தன் பங்குக்கு உதவிகள் செய்ய முன் வந்தார். அவர்களின் குமாரனும் சேர்ந்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள் மூவரும் ஓரியன், அவர் நண்பர் ஆகியோர் துணையோடு குகையை மேலும் பரிசோதித்துக் கொண்டு முன்னேற ஆரம்பித்தனர். அப்போது சில படிவங்கள் 5,000 வருடங்களுக்கும் முன்னால் ஏற்பட்டவை என்பது தெரிய வந்தது. மேலும் மேலும் சோதித்ததில் கறுப்புக்கரடி ஒன்றின் தொடை எலும்பும், தாடை எலும்பும் கிடைத்தது. அது குறைந்த பட்சமாக எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற தகவலும் கிடைத்தது. மேலும் உள்ளே சென்று சோதனைகள் செய்ய விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளே சென்றனர். பின்னர் 1964-ஆம் வருடம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பொதுமக்கள் பலரால் இது பார்வையிடப்பட்டு வருகிறது. இதை நிர்வகிப்பது இன்றளவும் நிலச்சொந்தக்காரப் பெண்மணியின் குடும்பத்தினரே. வேறு எவராலும் நிர்வகிக்கப்படவில்லை.1968-ஆம் ஆண்டு மேலும் சோதித்ததில் அவர்கள் தோண்டியதற்குக் கீழே இன்னமும் ஆழத்தில் ஒரு பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது. உள்ளே காமிராவை விட்டுப் பார்த்ததில் அங்கே ஒரு பெரிய அறை இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் குகைப்பாதையை இன்னும் சீரமைத்துக் கீழே இறங்க வழி செய்து கீழே தவழ்ந்தே சென்று அந்த அறையை அடைந்தனர். அந்த அறையை முதலில் சென்றடைந்த ஜாக், ரெக்கி, மைல்ஸ் மூவரின் பெயரிலும் அந்த அறை ஜாரெமி அறை என்றே அழைக்கப்படுகிறது. மேலும் மேலும் குகையைத் துளைத்துக்கீழே கீழே செல்கையில் குகையின் வடபாகத்து நேர் எதிரே தென்பாகத்திலும் ஒரு குகைப்பாதை செல்வதும், அதை ஒட்டியதொரு பெரிய அறையும் கண்டெடுக்கப்பட்டது. இது இன்னும் அரை மைல் தூரத்தை அதிகரித்தது. சமீபத்தில் 2005-இல் செய்த ஆய்வின்படி, இன்னும் சில நூறடிகளுக்கும் கீழே இந்தக் குகைப்பாதை செல்லும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.

அந்த ஆய்வு இன்னமும் முடிவடையவில்லை. என்றாலும் இவை தற்சமயம் இருக்கும் வடக்குப்பக்கத்துக் குகைக்கு அருகே இருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்சமயம் இந்தப் பெயரை மாற்றி உள்ளனர். தென்பக்கம் செல்லும் பாதையை மறைந்திருக்கும் பாதை/ஹிட்டன் பாசேஜஸ். என்றும், வடபக்கம் செல்லும் பாதையை டிஸ்கவரி பாசேஜ்/புதிய கண்டுபிடிப்புப் பாதை எனவும் மாற்றி இருக்கின்றனர். இந்தப்பாதையில் கொஞ்ச தூரம் இருட்டிலேயே செல்ல வேண்டி இருக்கும். இரண்டு பாதைக்கும் தனித்தனியாகச் செல்ல வேண்டும்.

தென் பக்கம் செல்லும் பாதை இரண்டு மைல் தூரத்திற்குச் சென்று திரும்பும் வகையிலும், அந்தப்பக்கம் பெரிய அறைகள் இரண்டும் உள்ளன. வடப்பக்கம் செல்லும் பாதை அரை மைல், முக்கால் மைல் என்றாலும் செல்லும் பாதை கொஞ்சம் கடினமானதாகவும் இருக்கும். இரண்டையும் பார்ப்பது அல்லது ஒன்றை மட்டும் பார்ப்பது என்பது நம் விருப்பத்தைப் பொறுத்து.

Tuesday, December 13, 2011

180 அடி ஆழத்தில் இறங்க வேண்டியதாப் போச்சு!


அடுத்ததாய் நாங்க போனது காவெர்ன் கேவ்ஸ் எனப்படும் சுண்ணாம்புப் பாறைக் குகைகள். பூமிக்கடியில் 180 அடி ஆழத்தில் இதன் கடைசி அறை தற்போது அமைந்துள்ளது. இதை இன்னமும் ஆய்வு செய்கிறார்கள். அப்படி ஆய்வு செய்ததில் இன்னமும் சில நூறடிகள் கீழே செல்லமுடியும் எனக் கண்டறிந்திருக்கிறார்கள். தற்சமயம் 180 அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்கலாம். வழியெங்கும் விளக்குகள் போடப்பட்டு முக்கியமான இடங்களிலும் , மேலிருந்து நீர் சொட்டும் இடங்களிலும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. துணைக்கு வழிகாட்டி வருகிறார் . அனைத்து இடங்களையும் காட்டி விளக்கம் கொடுக்கிறார். அவர் என்னதான் சொன்னாலும் நம் கண்களுக்கு ஒரு இடத்தில் பிள்ளையாரின் தும்பிக்கையோடு கொழுக்கட்டையுமாகவே , கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியும், இன்னொரு இடத்தில் கோயில் கோபுரங்களும், குதிரையில் அமர்ந்திருக்கும் சாஸ்தாவுமாக, தெரிகிறது. இதோ தக்ஷிணாமூர்த்தியும் அவரை வணங்கும் தேவர்களும் தெரிகிறார்களா?


கிளம்பிட்டோம் என்றாலும் பையருக்குச் சந்தேகம். எங்களால் இறங்க முடியுமா என்றே. இரு பாதைகள் இருக்கின்றன. நீளம் அதிகமானதாகவும் அதே சமயம் செல்லும் பாதை ஒளியோடும், காற்று வசதியோடும் இருப்பதைத் தேர்ந்தெடுத்தோம். தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது என்றாலும் அரசு அங்கீகரித்துள்ளது. பள்ளிக்குழந்தைகளும், சிறு குழந்தைகளும் அதிகம் வருகின்றனர். போய் வர ஒரு மணி நேரம் ஆகும். அதோடு இரண்டு இடங்களில் ஏறி, இறங்கப் படிகள். படிகள் குறைந்த பக்ஷம் 30 படிகள் இருக்கும். துணிஞ்சாச்சு. இனிமே இறங்காமல் முடியுமா? இறங்கியாச்சு.

குகைகளின் வரலாறு அடுத்து வரும். படங்களும் தொடரும்.

Sunday, December 11, 2011

அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!

இன்று பாரதியின் பிறந்த நாள். பாரதியின் பாடல்களைப் பாடிக்காட்டி பாரதியின் மேல் எனக்குப் பித்தை உண்டாக்கிய ஈஸ்வர வாத்தியாரை நினைவு கூர்கிறேன். அச்சமில்லை; அச்சமில்லை; அச்சமென்பதில்லையே பாடலை அவர் பாடுகையில் உண்மையிலேயே அச்சம் சிறிதேனும் இருந்தால் மறைந்துவிடும். வழக்கம் போல் திரு இன்னம்புராரின் பதிவைப் படித்ததும் அதையே பகிர்ந்து கொள்ள எண்ணிப் பகிர்ந்து கொள்கிறேன். அவர் சொல்லி இருப்பதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்? கீழே இருப்பவை அவர் எழுதி இருக்கும் பதிவு.



அன்றொரு நாள்: டிசம்பர் 11
ஒளி படைத்தக் கண்ணினாய்!

இன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களின் ஜன்மதினம். இணைய தளத்தில் பலர் அவருடைய புகழுரைப்பார்கள். செப்டம்பர் 11, 2011 அன்று யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து,
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி! ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை மீள்பதிவு செய்து விட்டு, சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 1930-40களில் பாரதியார் வாசம் மாணவர்கள் நாவில். அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். படிக்கக்கிடைக்காது.
நான் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் புரியும் என்று தெரியவில்லை. மதிப்புக்குரிய தமிழாசிரியர் வி.ஜி.ஶ்ரீனிவாசன், பாலு சார், தலைமை ஆசிரியர் யாகூப் கான் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. பாலு சார், எமது சூத்ரதாரி. அவருடைய எதிரொலியாக திலகர் மைதானத்தில் கர்ஜித்தேன், பாரதி கீர்த்தியை. வி.ஜி.எஸ். தந்தையின் நண்பர். ரொம்ப அன்யோன்யம் என்று நினைக்கிறேன். அவருடைய இல்லத்தில் என் அம்மா பால் காச்சியதும், அதிலிருந்த பால் ஏடு வாங்கி ருசித்ததும் மட்டுமே பாலப்பருவத்திலிருந்து இன்று வரை நினைவில் இருக்கிறது. அப்பா அடிக்கடி பாரதியாரை பற்றி வி.ஜி.எஸ் சொன்னதாக, அவ்வப்பொழுது சொன்னது மனதில் தங்கியிருந்திருக்கலாம். தலைமை ஆசிரியரோ எங்களை எங்கள் போக்கில் விட்டதே பெரிய ஸ்வாதந்தர்யம். அதற்கான வலியையும் பொறுத்துக்கொண்டார். எங்கள் ஹீரோ.
ஆம். ஒரு பிற்போக்கான கிராமத்தில், பின் தங்கிய சமுதாயத்திற்கான ஏழைகளின் பள்ளியில், ‘என்னா ப்ரதர்!’ என்ற உறவே துலங்கும் மாணவருலகத்தில் பீடு நடை போட்டு, வீறாப்புடன் நடந்த கவிஞன் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். எங்களை உய்விக்க வந்த மஹானுபவன். ஒளி படைத்த கண்ணினான்.

60 வருடங்களுக்கு மேல் கடந்தன. புதுச்சேரியில் மஹாகவி வாழ்ந்த இல்லத்தை அங்குலம் அங்குலமாக யான் அனுபவிக்கும் வேளையிலே, இரு சம்பவங்கள். ஒரு பெண் எம்.லிட். ஆய்வு செய்கிறாளாம். நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாள். ஏடுகள் காற்றில் பறக்காமல் இருக்க, ஒரு கல்லை அதன் மேல் வைத்தாள். மடிந்த பக்கம் லேசாகக் கிழிந்தது. நான் அவளை கோபித்துக்கொண்டேன். அங்கு ஒரு விசிப்பலகை. அதில் அமர்ந்து தான் மொட்டை மாடியில், மஹாகவியும், நண்பர்களும் அளவளாவினர். அந்த விசிப்பலகையில் ஒருவர் அமர, நான் அவரை எழுந்திருக்கச் சொன்னேன், கறாராக பேசி. அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அந்த இல்லத்தை பராமரிப்பவர்கள் தங்களால் அத்தனை கண்டிப்பாக பேச முடியவில்லை என்றும், பார்வையாளர்கள். கேட்கமாட்டார்கள் என்றும் சொன்னார்கள். அங்கு வாங்கிய பாரதியார் நூல்களை, எங்கு வாங்கியவை அவை, ஆங்கிலேயனை அவர் விமர்சித்த முறை, வின்ச் துரையெல்லாம் சொல்லி, போர்ட்ஸ்மத் நூலகத்துக்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன்.

எது எப்படியோ! மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் தயவில், அவர் பெயரில், ஒரு புரட்சி நிகழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
இன்னம்பூரான்
11 12 2011




Thursday, December 08, 2011

கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!


அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.

நம் உள்ளத்தினுள்ளே இதயம் என்று நாம் சொல்வது, லப் டப் லப் டப் னு துடிச்சுக்குதே அது இல்லை ,நம் மார்பில் நட்ட நடுவில் ஒரு சின்னப் பொறியாக நம் கண்ணுக்கே தெரியாமல் சின்னத் துவாரமாக இருக்கிறது. மிக மிக சூக்ஷ்மமாகச் சின்ன துவாரத்தில் பொறியாக இருக்கும் அந்த அக்னி தான் நாம் நம்மை உணரும்போது ஆத்மதரிசனமாய்த் தெரிகிறது. இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.

இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள்.



திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.

பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..
சென்ற வருடத் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றிய விளக்குகள் ஒரு சிறு பகுதி மட்டும்.

திருக்கார்த்திகை தீபம் பிரமனுக்கும், மாலுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணம் மற்றுமில்லாமல் அம்பிகையானவள் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்று மாலை நேரம் வழிபாடுகள் செய்து திருவண்ணாமலை உச்சியில் ஈசனை ஜோதி வடிவாகப் பார்த்ததாக ஐதீகம் என்பதாலும் கொண்டாடப் படுகிறது. அப்போது தான் முதல் முதல் அம்பிகை திருவண்ணாமலையை கிரிவலமும் வந்து சிவபெருமானின் இடப்பாகத்தையும் வேண்டி பெற்றாள். திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:

கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்.

என்று சொல்கிறது. தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம். இது மிகப் பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது. மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார். ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார்.

கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார். அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,

"தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்!" என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது. மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள். ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள். இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது. சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது.

சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே. மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம். அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று. அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(


இன்று இந்தியாவில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடும் அனைத்து நண்பர்களுக்கும் என் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள். என்னோட பதிவுகளில் முன்னர் எழுதியவற்றிலிருந்து சில பத்திகளைத் தொகுத்து அளித்திருக்கிறேன். மீள் பதிவுக்கு மன்னிக்கவும். நன்றி.

Tuesday, December 06, 2011

தங்கத்தவளைப்பெண்ணே! வேறு! :)))) (எங்கள் சவடால் 2K+11)


புங்கவர்மன் யோசித்தான். “இது என்னடா வம்பு!”னு நினைத்தான். “ஏற்கெனவே ஜோசியருக்குச் சம்பள பாக்கி; காவலருக்குச் சம்பள பாக்கி. செலவாகும்னு கல்யாணம் வேறே செய்துக்கலை. இப்படி இருக்கிறச்சே இந்த அம்மா வந்து உதவி கேட்கிறாங்களே. இதனால் நம்ம கஜானாவுக்கு ஏதேனும் ஆபத்து வந்துட்டா என்ன செய்யறது? மாட்டேன்னு சொல்லிடுவோமா? “யோசித்தான். அப்போது அந்தப் பெண் தங்கள் நாட்டுக் கஜானா நிரம்பி வழிவதாகவும்,அத்தனை பணத்தையும் எடுத்துக்கவேண்டியே, முக்கியமாய் அதிலே ஓர் விலைமதிக்கமுடியாத நவரத்தினமாலை இருப்பதாகவும். அந்த மாலையைப் போட்டுக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றும் அந்த மாலையைத் தான் அரக்கன் கேட்டதாகவும், தன் கணவர் கொடுக்க மறுத்ததாலேயே அரக்கன் அவரைத் தூக்கிப் போய்த் தொந்திரவு கொடுப்பதாயும் சொன்னாள். பத்து நிமிஷத்துக்கு மட்டுமே தான் பெண்ணாக இருக்கமுடியும் என்றும் நிரந்தரமாக மாற அரக்கனைக் கொன்றுவிட்டு மந்திரம் ஜெபிக்கவேண்டும் என்றும் சொன்னாள். பணம் என்றதும் வாயைப் பிளந்தான் புங்கவர்மன். அதுவும் நவரத்தினமாலையாமே! விடக்கூடாது ஒரு கைபார்க்கணும்.

சரினு ஒத்துக்கொண்டு தொலைக்கலாம். ஆனால் ஏழுமலை ஏழுகடல் தாண்டி எப்படிப் போறதாம்? அந்த அரக்கன் நம்மைக் கொன்னுட்டா? யோசனையோடு அந்தப் பெண்ணை மறுபடி தவளையாக மாறிக்கச் சொன்னான். அவளும் மறுபடி தவளையானாள். அன்றிரவு அங்கேயே படுத்து உறங்கின மன்னனுக்கு ஒரு கனவு. அந்தக் கனவில் ஒரு பூனை வந்து அவனுக்கு உதவியது. அதுவும் அது ஏதோ பாட்டெல்லாம் பாடி டான்ஸும் ஆடினது. ஒரு இடத்தில் குதித்துக் குதித்துக் காட்டியது. சரி அந்த இடம் தான் முக்கியம்னு மனசுக்குள் குறித்துக்கொண்டான். விழித்தெழுந்த புங்கவர்மனுக்குத் தான் கண்டது கனவா, நனவானு கொஞ்சம் குழப்பம். ஏனென்றால் கனவில் கேட்ட அதே பாடல் இப்போ நனவிலும் கேட்டது. “வாரான் வாரான் பூச்சாண்டி மாட்டு வண்டியிலே! ரயிலு வண்டியிலே, மெயிலு வண்டியிலே!” என்று பாடல் சப்தம். மன்னன் மெல்ல எழுந்து வெளியே பார்த்தான். ஒரு அழகான வெள்ளைப் பூனை ஆடிப்பாடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் மற்ற மிருகங்கள் வேடிக்கை பார்த்தன. மன்னன் பார்த்துக்கொண்டே இருக்கையில் பூனை அவனைப் பாரத்துக் கண்ணைச் சிமிட்டியது அவனை வாவென அழைப்பது போல் இருந்தது. பூனை பின்னேயே சென்றான். பாட்டைப்பாடிக்கொண்டே சென்றது பூனை. புங்கவர்மனுக்கு எதுவும் புரியவில்லை.தொடர்ந்து சென்றான். சற்றுத் தூரம் சென்றதும், அந்தப் பூனை ஒரு மனிதனாக மாறிவிட்டது. ஆஹா! இது என்ன? புங்கவர்மன் யோசிக்கும் முன்னர் புங்கவர்மன் ஒரு பாம்பாக மாறிவிட்டான். புங்கவர்மன் அதிர்ச்சியோடு கூச்சல் போட்டான். கத்தினான். ஆனால் அவன் ஆட்கள் யாருக்கும் தெரியவில்லை. ஏதோ பாம்பு தான் வந்திருக்குனு நினைச்சுட்டாங்க போல!

பூனை மந்திரவாதியோ “ஹோஹோஹோ” என்று சிரித்தான். இது என்ன இப்படிச் சிரிக்கிறான் என்று நினைப்பதற்குள் அவனே, “ ஏ, புங்கா, உன் பழைய நிலைமை வரணும்னால் இந்த மந்திரத்தைச் சொல்லணும். ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! இதை இந்த வரிசைப்படியே மாத்தாமல் சொன்னால் தான் நீ மறுபடி புங்கவர்மனாவாய். இல்லைனா அம்புடுதேன்! “ இதைச் சொல்லிவிட்டு மறுபடி ஹோ ஹோ எனச் சிரித்தான். புங்கவர்மப் பாம்பு சீறியது. மந்திரவாதியோ இப்போக் கீரிப்பிள்ளையாக மாறி ஓட்டம் எடுத்தான். புங்கவர்மப்பாம்புக்கு இவன் தான் அந்த அரக்கன் எனப் புரிந்தது. ஆனாலும் என்ன செய்யமுடியும்? அப்போது அங்கே வந்த தங்கத்தவளைப் பெண்ணைப் பார்த்ததும், அவன் பாம்பு மனம் அவளைப் பிடித்துத் தின்னச் சொல்ல, அவளைத் துரத்தினான். அவளோ பயந்து போய், ஒரு மரத்தின் அடியில் போய்க் குரல் கொடுக்க அங்கே இருந்த ஒரு கிளி எட்டிப் பார்த்தது. உடனேயே, கிளி, “ஜெய் ஜிக்கி! ஜிக்கி ஜெய்! ஜெய் ஜெய் ஜிக்கி!” னு மூணு தரம் கிக்கி பாஷையில் சொல்லத் தவளைப் பெண் பெண்ணாக மாறினாள். அவள் உடனேயே, புங்கவர்மன் மனுஷனாக மாற வேண்டிய மந்திரத்தைச் சொன்னாள். “ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! என மூன்றுதரம் சொல்ல, அப்பாடா, புங்கவர்மனுக்கு உயிர் வந்தது. தவளைப்பெண் அரக்கன் இந்த வாரான் வாரான் பூச்சாண்டி பாட்டைப்பாடித்தான் எல்லாரையும் ஏமாற்றிக் கூட்டிக்கொண்டு போவதாய்ச் சொன்னாள். இந்தப்பாட்டை நான் மறுபடி என் நாட்டுக்குப் போனதும் குழந்தைங்க மட்டுமே பாடணும்னு சட்டம் போடறேன்னு புங்கவர்மன் சொன்னான்.

ஆனால் அவனுக்கு ஒரு சந்தேகம். கிளி சொன்னதும் தவளைப்பெண் பெண்ணாக மாறிய மாதிரி நம்மையும் கிளியே மாத்தி இருக்கலாமேனு. ஆனால் தவளைப்பெண் சொன்னாள். “அப்படி எல்லாம் முடியாது. இதுதான் என் கணவரின் தங்கை. அந்த அரக்கன் இவளுக்கு மந்திரமெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கல்யாணம் செய்துக்க நினைச்சுக் கூட்டிட்டு வந்துட்டான். இவளோ அவனக் கல்யாணம் செய்துக்க விரும்பலை. அதனால் கிளியாக மாத்திட்டான். கிளியெல்லாம் எங்கே மந்திரம் சொல்லப் போகிறது அலக்ஷியமாக இருந்துவிட்டான். ஆனால் அது கற்றுக்கொண்டு என்னைப் பெண்ணாக மாற்றியதைக் கண்டதுமே பத்து நிமிஷத்துக்கு மட்டுமே செல்லும் என்றதோடு அதற்குப் பின்னர் சொல்லும் மந்திரமெல்லாம் கிளி மூலம் பலிக்காதபடி பண்ணிட்டான். “ என்றாள். “பின்னர் எப்படி நீ மறுபடியும் ராஜகுமாரி ஆவாய்? இந்தக் கிளிப்பெண்ணை எப்படி மாற்றுவது?” எனப் புங்கவர்மன் கேட்க, “அதுக்குத் தான் உன் உதவியை நாடினோம்.” ஏழுமலை, ஏழு கடல் தாண்டிப் போனால் அங்கே என் கணவரைக் கட்டி வைத்திருக்கும் இடத்தில் ஒரு அவரைக்காய் இருக்கும். அந்த அவரைக்காய் நிஜமானது இல்லை. அதை எடுத்துத் தோலை உரித்து உள்ளிருக்கும் பருப்புப் பளபளவென ரத்தினம் போல் இருக்கும். ஆசைப்பட்டுக்கொண்டு எடுத்து வைச்சுக்காதே. அந்த ரத்தினத்தை இரண்டாகப் பிளந்தால் உள்ளே ஒரு சின்னக்கடுகு இருக்கும். அதை நசுக்கினால் அரக்கன் இறப்பான். அப்புறமாய் நீ மந்திரங்களைச் சொல்லி என்னையும், கிளிப்பெண்ணையும் பெண்களாக்கலாம். அப்படி ஆக்கினால் இவளை உனக்கே கல்யாணம்செய்து தரச் சொல்றேன்.” என்றாள்.

ஆஹா, கல்யாணமா? வாயைப் பிளந்தான் புங்கவர்மன். ரொம்பக்கஷ்டப்பட்டு அவனோட குதிரையிலே ஏறிக்கொண்டு ஏழு மலையைத் தாண்டி விட்டான். ஏழு கடலை எப்படித் தாண்டறது? அப்போத் தான் அவனுக்கு நினைப்பு வந்தது. “அன்டா கா கஸம்; அபுல் கா கஸம்; பறந்திடு ஸீசேம்” சொன்னாக் குதிரை பறக்கும்னு அவன் கிட்டே குதிரை வித்தவங்க சொன்னதை நினைப்பு வரவே அந்த மந்திரத்தைச் சொல்லிக் குதிரையில் பறந்தான். கீழே பார்க்கிறச்சே குலை நடுங்கியது.
விழுந்துடப் போறோம்னு பயந்து குதிரையைக் கெட்டியாப் பிடிச்சுக்கக் குதிரை திட்ட ஆரம்பிச்சது. ஒரு மாதிரியா சண்டை போட்டுக் குதிரையை சமாதானம் செய்து வந்து சேர்ந்தான். தவளைப்பெண்ணின் கணவன் நல்லவேளையா மனுஷ ரூபத்திலேயே இருந்தான். (பின்னே? இதுக்கு மந்திரம் யார் கிட்டே கேட்டுக்கறது? :P இப்படி எல்லாம் மூளைக்கு வேலை கொடுத்தே பழக்கம் இல்லையாக்கும்.) அவனைப் பார்த்து அவரைக்காயைக் கேட்க, அவன் அங்கே இருந்த ஒரு பாம்புப் புற்றைக் காட்ட பயந்து போனான் புங்கவர்மன். அப்புறமா இருக்கிற கொஞ்சூண்டு மூளையைக் கசக்கிட்டு யோசிச்சுத் தானும் ஒரு பாம்பா மாறித்தான் அந்த ரத்தினத்தை எடுக்கணும்னு புரிஞ்சது அவனுக்கு.

உடனே அந்த அரசகுமாரனிடம்(அவனுக்கு என்ன பேர்?) போய் என்னைப் பாம்பாக மாத்துனு சொன்னான். அரசகுமாரன் ஙே என விழித்தான். தலையிலே அடிச்சுக்கொண்ட புங்கவர்மன் , “ ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! “ மந்திரத்தைச் சொல்லச் சொல்ல ம்ஹும் எதுவும் நடக்கலை! :P உடனே அரசகுமாரனை மண்டையிலே கொட்டப் போகையில் அவன் பயந்து போய் “ஜிம்கா ஜோ ஜோக்கு, ஜிம்கா ஜோ ஜோக்கு, ஜிம்கா ஜோ ஜோக்கு” என்று குழற ஆரம்பிக்க, என்ன ஆச்சரியம் புங்கவர்மப்பாம்பு அங்கே காணப்பட்டது. புங்கவர்மப்பாம்புக்கு நல்லவேளையா ரத்தினத்தை எடுக்கத் தான் வந்தது நினைவிலிருக்கவே அந்தப் புற்றுக்குள் போய் நுழைந்தது. அங்கே இருந்த இன்னொரு பாம்பு சீறவே, புங்கவர்மப்பாம்பு அழகாய் “நாதர்முடிமேலிருக்கும் நல்லபாம்பே!” பாட்டை அபிநயிக்க மயங்கிப் போன புற்றுப் பாம்பு தானும் ஆட ஆரம்பிக்க இதான் சமயம்னு புங்கவர்மப் பாம்பு உள்ளே போய் நைசாக ரத்தினத்தை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பிச்சது. அது ஓடின ஓட்டத்தில் ரத்தினம் தானே கீழே விழுந்து உடைய, அங்கே அதுக்குள்ளே பறந்து வந்த கிளிப்பெண் அந்தக் கடுகைத் தன் அலகால் கொத்த கடுகு நசுங்கியது. அரக்கன் இறந்தான் என்பதற்கு அறிகுறியாக அந்தக் காட்டு மரங்கள் ஆடின; மலைகள் அதிர்ந்தன. ராஜகுமாரன் சந்தோஷத்தில் ஒரு குதி குதித்தான். குதித்த வேகத்தில் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டான். இதற்குள்ளாகப் புங்கவர்மனைத் தேடிக்கொண்டு ரொம்ப சுலபமாக ஏழு மலைகளையும், ஏழு கடல்களையும் தாண்டிக்கொண்டு ஜோசியரும், பச்சைச்சட்டைக்காவலனும் வந்துட்டாங்க. புங்கவர்மப் பாம்பு தான் இங்கே இருக்கேன்னு சீறிச் சீறிக்காட்டியும் கண்டுக்கலை. அங்கே அரக்கன் குவித்திருந்த செல்வக்குவியலைப் பார்த்து அசந்துட்டாங்க. “புங்கவர்மன் ஒரு பக்கி. இதைப் பார்த்தால் விடமாட்டான்; நமக்கும் தர மாட்டான். அவன் இல்லாதது நல்லதாப் போச்சு.” னு பேசிக்கவே புங்கவர்மப் பாம்பு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு சீற ரெண்டு பேரும் சீச்சீ, போனு ஒரு கம்பை எடுத்துட்டு புங்கவர்மப்பாம்பை அடிச்சாங்க. புங்கவர்மப்பாம்புக்கு ஒரே அழுகையாக வந்தது.

நல்லவேளையா அங்கே அப்போத்தான் தத்தித்தத்தி வந்த தவளைப்பெண் எல்லாத்தையும் பார்த்துட்டு நடந்ததை (புத்திசாலியாச்சே) புரிஞ்சுட்டா.
உடனே தன் கணவன் காலடியில் போய், “ட்ட்ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ட்ட்ட்ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”னு கத்த வெறுத்துப் போன ராஜகுமாரன், சேச்சே, நானே என் ஜிக்கியைக் காணோமேனு தேடறேன். நீ எங்கே வந்தேனு அந்தத் தவளைப்பெண் தான் தன் மனைவினு தெரியாமல் அதைத் தள்ளிவிட்டான். உடனே தன் கிளிமூக்கால் தலையிலே அடிச்சுக்க முடியாத கிளிப்பெண் “ஜெய் ஜிக்கி! ஜிக்கி ஜெய்! ஜெய் ஜெய் ஜிக்கி!” னு சொல்லவே தவளைப்பெண் உருமாறினாள். அவள் அவசரம் அவசரமாக புங்கவர்மப்பாம்பைப் பார்த்து, ஜோ ஜோ ஜிம்கா ஜோ! ஜிம்கா ஜோ ஜோ! ஜோ ஜிம்கா ஜோ! னு சொல்ல அப்பாடா! ஒருவழியாப் புங்கவர்மன் புங்கவர்மனாக மாறினான். தன் பச்சைச்சட்டைக்காவலனையும், ஜோசியரையும் பார்த்து, “இருங்க வச்சுக்கறேன்” அப்படினு கறுவினான். அதுக்குள்ளே கிளிப்பெண் அவனைக்கொத்த, தன் நினைவுக்கு வந்து தங்கத்தவளைப்பெண்ணை நிரந்தரமாக்கும் மந்திரத்தைச் சொல்ல அவளும் நிரந்தரப் பெண்ணானாள். பின்னர் கிளிப்பெண்ணுக்கும் பெண்ணாக மாறும் மந்திரத்தைச் சொல்லிப் பெண்ணாக மாற்றினான்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பச்சைச்சட்டைக்காவலன் தன்னோட ராஜாவுக்கு அதிக சக்தி வந்திருக்குனு புரிந்து கொண்டு ஜோசியர் தான் பணத்தைத் திருடச் சொன்னார்னு ஒரேயடியாப் பொய் சொல்லிட்டு புங்கவர்மன் காலில் விழுந்தான். கிளிப்பெண்ணை விட்டால் தனக்குப் பெண்ணே கிடைக்காமல் போயிடப் போறதுனு அவளைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருந்த புங்கவர்மன் ஜோசியர் ஓடறதைப் பார்த்துட்டு, சத்தமாய்க் கூவினான்.

“பிடியுங்கள், விடாதீர்கள் அவரை!”


ஹாஹாஹா, கற்பனை வளம் திடீர்னு அதிகரிச்சுடுச்சு. கஷ்டப்பட்டு நிறுத்தினேனாக்கும். நானே எண்ணிட்டேன். 1039 வார்த்தைகள் :))))

இங்கே

Monday, December 05, 2011

நதியோடு நடந்த கதை!

தண்ணீர் நதியிலிருந்து கால்வாய்க்கு வருகிறது. வருடம் ஒரு முறை உள்ளே தூர் வாரி சுத்தம் செய்யப்படுவதாய்ச் சொல்கின்றனர். என்றாலும் அசுத்தமாகி விட்டதாயும், நீர் மாசடைந்துவிட்டதாயும் பொதுவான புகார். இத்தனைக்கும் எங்கேயும் குப்பைகளோ, ப்ளாஸ்டிக் கழிவுகளோ, உணவுப் பொருட்கள் மிச்சமோ, துணிகளோ நீரில் மிதந்து பார்க்க முடியாது.

படகில் காவல் காக்கும் காவல்படையினர். பொதுமக்களும் இம்மாதிரியான படகுகளில் சுற்றி வரலாம். இருமுறை சுற்றுகின்றனர். முதல்முறை சுற்றுகையில் வலப்பக்கம் இருக்கும் முக்கிய இடங்களைக் குறித்து விளக்கம் கொடுக்கின்றனர். இரண்டாம் முறை சுற்றுகையில் இடப்பக்கத்து இடங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. நம்ம ஊர் மாதிரி ஒருதரம் போகையிலேயே இரண்டு பக்கத்தையும் காட்டிட்டுப் பார்க்கச் சொல்லிட்டுக்கீழே இறக்குவதில்லை. அளவுக்கு மேல் ஏற்றுவதில்லை.படகில் நாங்கள் சென்று கொண்டிருக்கையில் திடீரென மழை பெய்யவே ஒரு பெரிய பாலத்துக்கு அடியில் போய்ப் படகு நங்கூரமிட்டு நின்றபோது எடுத்த படம்.

சான் அன்டானியோ நகரம் யு.எஸ்ஸில் ஏழாவது பெரிய நகரமாகவும், டெக்சாஸில் இரண்டாவது பெரிய நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தெற்கு மத்தியபாகத்தில் அமைந்துள்ள இது 2.2. லக்ஷம் மக்கள் கொண்டதாய்ச் சொல்லப்படுகிறது. ஒரு சுற்றுலா நகரான இந்த நகரில் ஓடும் சான் அன்டானியோ நதியின் இரு கரைகளிலும் மக்கள் நடக்க, படகில் பயணிக்க, ஆங்காங்கே அமர்ந்து இயற்கைக்காட்சிகளை ரசிக்க, அல்லது உணவு உண்ண, ஆட, பாட, கொண்டாட என ஏற்படுத்தப்பட்டிருக்கும் அநேகக் கடைகள், விடுதிகள், கண்காட்சி சாலைகள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், ஐஸ்க்ரிம் கடைகள் எனப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத ஒன்று. உண்மையில் இது முக்கிய நதியே அல்ல. இது வந்த கதை தனி. வருடத்திற்கு 26 லக்ஷத்துக்கும் மேல் சுற்றுலாப் பயணிகள் இந்த நகருக்கு வருகை புரிகின்றனர். இது இங்கே இந்த நதிக்கரையோரம் நடந்து செல்வதை ரிவர் வாக் என அழைக்கின்றனர். இது வந்த விபரம் பின்வருமாறு:

1921-ஆம் வருடம் திடீரென இந்த நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 50 உயிர்கள் பலியாயின. ஆகவே நதியில் ஏற்படும் உபரிநீரைத் தடுத்து ஒரு அணை கட்டத்தீர்மானித்தனர். அணை கட்டுகையிலேயே கூடவே ஒரு கால்வாயும் கட்டி அந்தக் கால்வாயை நகரின் முக்கிய வழிப்பாதையில் அமைத்து அதன் வழியாக நதி உபரி நீர் புகுந்து இரு கரைகளுக்குள்ளும் சுற்றி வருமாறு செய்தனர். 1926-இல் ஆரம்பித்த வேலை மெல்ல மெல்லச் சென்றது. ராபர்ட் ஹக்மேன் என்னும் சான் அன்டானியோவிலேயே பிறந்து வளர்ந்த கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் இந்த ரிவர் வாக் யோசனையைத் தெரிவித்தார். மெல்ல மெல்ல ஆரம்பம் ஆன இந்த வேலை, ஜாக் வொயிட் என்பவர் மேயராக வந்ததும் அவர் மூலம் பல முன்னேற்றங்களைக் கண்டு இன்று இம்மாதிரியானதொரு 2-1/2 மைல் சுற்றி வந்து நடக்கும் ரிவர் வாக் பாதையோடும் கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் போன்றவற்றோடு காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஹக்மேனுக்கு எதிர்ப்புகளே இருந்தது. மீண்டும் நதியில் வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படக் கூடும் எனப் பயந்தனர். ஆனால் நாளாவட்டத்தில் இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறிப் போனது.நடக்கும் பாதையின் ஒரு பக்கப்பார்வை.
இன்னொரு பக்கத்து நீண்ட பாதையின் ஒரு பார்வை

Friday, December 02, 2011

புரட்சி முடிந்தது! விடுதலை கிடைத்தது!

அரவை இயந்திரம்












டெக்ஸாஸின் தனிக்கொடி. இன்றும் டெக்ஸாஸ் மாநிலத்திற்கு ஒற்றை நக்ஷத்திரத்துடன் கூடிய தனிக்கொடி அந்தஸ்து உண்டு. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் இரண்டாவது பெரிய மாநிலம் டெக்ஸாஸ்.
கொண்டாட்டங்கள் குறித்து அறிந்து கொண்ட மெக்சிகோ அதிபர் (படைகளுக்கும் தலைமை வகித்து ஆலோசனைகள் கூறினார்) சான்டா அன்னா, தளபதி ஜோக்வின் என்பவரிடம் உடனடியாக அலமோவை முற்றுகை இட்டுப் பிடிக்கச் சொன்னார். ஆனால் திடீரெனப் பெய்த மழையால் அவர் எண்ணம் ஈடேறவில்லை. சான் அன்டானியோ நகரத்தின் (அப்போதைய பெயர் வேறு) குடிமக்கள் மெக்சிகோவின் வீரர்கள் படை எடுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு ஊரை விட்டு ஓட ஆரம்பித்தனர். டெக்ஸாஸின் தளபதி தன் வீரர்களை மெக்சிகப்படைகள் வருவதைக் கண்காணிக்க அங்கிருந்த உயரமான சர்ச்சின் உச்சிக்கு அனுப்பி வைத்தார். படைகளும் மெக்சிகப் படை நெருங்குவதைத் தெரிவித்தனர். கிடைத்த இடத்தில் அனைவரும் தஞ்சம் புகுந்தனர். அலமோ கோட்டையில் முடிந்தவர்கள் அடைக்கலம் புகுந்தனர். இதில் சில பெண்கள், குழந்தைகள் அடைக்கப்பட்டுக் கிடந்த பெரிய கூடம் கோட்டையினுள் உள்ளது.

முதல் நாளிரவு அமைதியாக முற்றுகை சென்றது. மெக்சிகப் படைகளின் பலத்தோடு ஒப்பிட்டால் டெக்ஸாஸின் படைபலம் கம்மி. மெக்சிகப் படைவீரர்கள் சான் அன்டானியோ நதியைக் கடந்து அலமோவின் சுற்றுச்சுவர் அருகே வந்துவிட்டனர். மார்ச் 4-ஆம் தேதி வரையிலும் மெக்சிகோவிற்குச் சாதகமாகவே நிலைமை இருந்தது. சான்டா அன்னா அலமோவைத்தாக்க இதுவே சரியான தருணம் என நினைத்தார். ஆனால் படைத்தளபதிகள் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என நினைத்தனர். அன்றே ஒரு அரசியல் தலைவரின் உறவுப்பெண்மணி சான்டா அன்னாவைச் சந்தித்துச் சரணடையப் போவதாய்த் தெரிவித்தாள். .ஆகவே அலமோவில் தஞ்சம் புகுந்திருப்பவர்களைக் காக்கவேண்டிப் பேச வேண்டும் என்றும் கூறினாள். ஆனால் சான்டா அன்னா மார்ச் ஆறாம் தேதி கோட்டையைத் தாக்கப் போவதாய்த் தெரிவித்தார். ஆனால் அதற்குள்ளாக டெக்ஸாஸ் தன் பலத்தை ஓரளவு அதிகரித்துக்கொண்டது. கோட்டைச் சுவர்களில் ஓட்டையிட்டு அதன் மூலம் உள்ளிருந்து சுட ஆரம்பித்தனர். ஆனாலும் பல டெக்ஸாஸ் குடிமக்கள் மெக்ஸிகப் படைகளால் சுடப்பட்டனர். இறந்த பின்னரும் இறந்த பிணங்களைச் சுட்டதாகச் சொல்கின்றனர்.
இறந்தவர்கள் அறுநூறுக்கும் மேல் என சான்டா அன்னா கூறிக் கொண்டு, இந்தப் போர் தூசு மாத்திரம் எனவும் விமரிசித்தார். ஆனால் உண்மையில் இறந்தவர் குறைவு என்கின்றனர். ஆனால் இந்த முற்றுகைக்கு முன்பே டெக்சாஸின் முக்கியத் தலைவர்கள் கூடி டெக்ஸாஸைச் சுதந்திர நாடாக அறிவித்தனர்.

இங்கே பார்க்கவும்இங்கே பார்த்தால் ஒளிக்காட்சி பார்க்கலாம். அலமோ மெக்சிகன்களுக்கும், அதே சமயம் இங்கே வந்து குடியேறிய டெக்சியன்கள் எனப்படும் வெள்ளையர்களுக்கும் பொதுவான ஒரு அடையாளமாக இருந்து வந்தது. உள்ளிருந்துபோராடிய டெக்சியன்களுக்குக் கிட்டத்தட்ட எட்டு நாள் முற்றுகைக்குப் பின்னரும் போதிய உதவி கிடைக்கவில்லை. அலமோ அவர்களின் உயிர்நாடியாக ஆனது. சரணடைவதற்குப் பதிலாகப் போராடவே நினைத்தனர். அந்நாளையில் கத்திச்சண்டையில் பிரபலம் ஆன ஜிம் போவி, டெனிசியிலிருந்து வந்த அரசியல்வாதியும், எல்லைகளின் பாதுகாவலராக இருந்தவருமான டேவிட் க்ரோக்கெட் முன்னணியில் இருந்து அலமோவைக் காக்கச் சண்டை போட்டனர். ஆனால் இத்தகைய முயற்சிகளுக்குப் பின்னரும் மார்ச் ஆறாம் தேதி காலை விடிவதற்குள்ளாக மெக்சிகன் துருப்புக்கள் கோட்டையின் மேலேறி உள்ளே வந்துவிட்டனர். அங்கிருந்த பெரிய முகாம் ஒன்றின் மேலும், சர்ச் ஒன்றின் மேலும் குண்டுமாரி பொழிந்தனர். இந்த முகாமில் இருந்த மருத்துவசாலை ஒன்று டெக்ஸாஸின் முதல் மருத்துவசாலை எனப்படுகிறது.


ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் டெக்சாஸின் வாஷிங்க்டன் ஆன் தி ப்ரேஸோஸ் என்னுமிடத்தில் கூடிப் பேசி டெக்ஸாஸை சுதந்திர நாடாக அறிவித்த பின்னர் மெக்சிகோவில் இருந்து அது பிரிந்துவிட்டதாக ஐக்கியஅமெரிக்க நாடு அங்கீகரித்தது. ஆனாலும் மெக்சிகோ அங்கீகரிக்கவில்லை. தேர்தல்கள் மூலம் தக்க ஆட்களையும் தேர்ந்தெடுத்தது. என்றாலும் மெக்சிகோவின் தொந்திரவு நீடித்தது. ஜெனரல் ஹூஸ்டன் அலமோவின் முற்றுகைக்குப் பின்னர் டெக்ஸியன்களின் பெரும்படை ஒன்றைத் தயார் செய்து தலைமை வகித்து நடத்தினார். தோல்வி அடைந்த பல வாரங்களுக்குப் பின்னர் ஹூஸ்டனின் தலைமையில் வந்த பெரும்படை சான்டா அன்னாவைச் சிறையெடுத்து சுதந்திரப் பிரகடனத்தை ஒப்புக்கொள்ள வைத்து ஒப்பந்தத்திலும் கை எழுத்துப் போட வைத்தது. சான் ஜசின்டோ என்னும் இடத்தில் நடந்த அந்த யுத்தத்தின் மூலம் டெக்ஸாஸ் புரட்சி முடிவுக்கும் வந்தது.


ஆயுதங்களின் ஒரு பகுதி. இவை அனைத்தும் முக்கியக் கோட்டையின் வெளிச்சுற்றுக்களில் வைக்கப்பட்டுள்ளது. கோட்டையை உள்ளே படம் எடுக்க இயலாது.

Thursday, December 01, 2011

டெக்ஸாஸ் புரட்சியும்,அலமோ முற்றுகையும்!

இந்தப் படம் விக்கி பீடியாவின் தளத்தில் இருந்து எடுத்தேன். மற்றப் படங்கள் கீழே போட்டிருப்பவை அங்கே கோட்டையின் வெளிச் சுற்றில் வைத்திருந்த புகைப்பட ஓவியக் காட்சிகளில் சில. உள்ளே படம் எடுக்கக் கட்டாயமாய் அநுமதி இல்லை. அப்படியும் ஒரு சில இடங்களில் எடுக்க முயற்சித்தேன். அவை வெளியே இருந்த சிறைச்சாலை அறைகள். உள்ளே முக்கியத் தலைவர்கள் இருந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தாலும் செப்பனிட்டுப் பாதுகாப்பின் கீழ் வைத்துள்ளனர். அங்கே முற்றிலும் படம் எடுக்கத் தடை


1836-ஆம் ஆண்டு. மெக்ஸிகோவில் இருந்த ஸ்பானிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த டெக்ஸாஸ் மாநிலத்தவர்களுக்கு காலனி ஆதிக்கம் பிடிக்கவில்லை. மெக்ஸிகோ ஸ்பெயின் நாட்டோடு தொடுத்த விடுதலைப் போராட்டத்தில் ஜயித்து 1821-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அதிலிருந்து 1836-ஆம் ஆண்டு வரை டெக்ஸாஸ் மாநிலமும் ஸ்பானிஷ் டெக்ஸாஸ் ஆக, மெக்ஸிகோவின் கீழ் இருந்த ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது. ஆனால் 1824-இல் போடப்பட்டப் பொதுக்காலனிக்குடியேற்றச் சட்டம் மூலம் பல தொழில் முனைவோர்கள் அமெரிக்க ஐக்கியக் குடியரசிலிருந்து இங்கே வந்து குடியேறினார்கள். அவர்களில் பலரும் டெக்ஸாஸில் நிலங்களை வாங்கிப் பெரும்பண்ணைக்காரர்களாகவும், பல அடிமைகளையும் வைத்திருந்தனர். அடிமைகளை விடுவிக்கும்படி மெக்ஸிகோவின் அதிபர் 1830 ஆண்டு அவசரச் சட்டம் பிறப்பித்தும் டெக்ஸாசிற்கு மட்டும் சலுகை தருமாறு கேட்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே சலுகை கிடைக்கப் பெரும்பாலான பண்ணைக்காரர்கள் ஒப்பந்த அடிப்படையில் அனைத்து அடிமைகளையும் வாழ்நாள் முழுவதுக்கும் தொழிலாளர்களாக மாற்றிக்கொண்டுவிட்டனர். 1836 வரையிலும் கிட்டத்தட்ட 5,000 அடிமைகள் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது.

1830-ஆம் ஆண்டு அதிபர் மீண்டும் அடிமைகளை விடுவிக்கும்படியும், அடிமைகளை வைத்திருக்கக்கூடாது என்றும் கடுமையாகத் தடை செய்தார். மேலும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இங்கு குடியேறும் வெள்ளையர்களையும் கட்டுப்படுத்த ஆரம்பித்தார். வெள்ளையர் குடியேற்றம் முற்றிலும் தடுக்கப்பட்டது. சுங்கச்சாலைகளில் கண்காணிப்பு, பண்ணைகளில் கண்காணிப்பு எனத் தனிப்பட்ட கண்காணிப்புக்களும், எல்லைகளில் கண்காணிப்பும் தடுத்து நிறுத்துவதும் அதிகமாகிக் கொண்டே போனது. இங்கிருந்த காலனி மக்கள் ஐக்கிய அமெரிக்க மக்கள் டெக்ஸாஸிற்கு வருவதையும் குடியேறுவதையும் தடுக்கக் கூடாது எனக் கூட்டம்போட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் பின்னர் டெக்ஸாஸைத் தனி நாடாக அறிவிப்பும் செய்தார்கள். எந்த நாட்டோடும் சார்ந்திராத தனி மாநிலம் என அறிவிக்கப்பட்டது. மெக்ஸிகோவின் அரசும், அதிபரும்பல விதங்களிலும் டெக்ஸாசின் குடியிருப்போரையும், அங்கே குடியிருக்க வந்த மற்ற ஐக்கிய அமெரிக்க வெள்ளையர்களையும் திருப்தி செய்ய முயன்றது. ஆனால் மெல்ல மெல்ல அதிபரின் நடவடிக்கைகளால் அதிருப்தியே மேலோங்க டெக்ஸாஸ் வாழ் மக்கள் புரட்சிக்குத் தயாரானார்கள்.

1832-ஆம் ஆண்டு முதல் புரட்சியும், நடந்தது. அதன் பின்னர் வந்த நான்கு வருடங்களில் 1836-ஆம் வருடம் டெக்ஸாஸின் முக்கிய அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்களால் டெக்ஸாஸ் சுதந்திரமான தனி நாடாக அறிவிக்கப்பட்டது. புரட்சி முடிந்து மேற்கு நாடுகளின் அடுத்த நெப்போலியன் என வர்ணிக்கப்பட்ட சான்ட் அன்னா சிறையில் அடைக்கப்பட்டார். அன்றிலிருந்து டெக்ஸாஸ் நிர்வாகத்தை அதன் மக்களே கவனித்துக்கொண்டாலும் மெக்சிகோ அதன் சுதந்திரத்தை அங்கீகரிக்கவே இல்லை. 1836-ஆம் ஆண்டு சான் அன்டானியோ என்னும் இந்த ஊரின் கோட்டையில் நடந்த புரட்சிப் போரே பாட்டில் ஆஃப் அலமு என அழைக்கப்படுகிறது. டெக்சாஸில் குடியேறிய அனைவருமே இந்த சுதந்திரச் சண்டையில் பங்கெடுக்க அழைக்கப்பட்டனர். ஆனால் மெக்சிகோ தரப்போ பூரண படை பலத்தோடு இருந்தது. டெக்ஸாஸின் படைவீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் கிடைக்கவில்லை. கிடைத்த ஆயுதங்களப் பலராலும் பயன்படுத்தவும் முடியவில்லை. எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை.

சான்ட் அன்னா அலமோ கோட்டையை முற்றுகை இட முன்னேறி வருவது தெரியாமல் டெக்ஸாஸின் வீரர்கள் உள்ளூர்ப் பொதுமக்களோடு சேர்ந்து அமெரிக்க ஐக்கியக் குடியரசின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர்.


மேலுள்ள மூன்று படங்களும் நான் எடுத்தவை. இவை தவிர அந்தக் காலகட்டத்து அரவை இயந்திரம், ஆயுதங்களின் ஒரு பார்வை போன்றவை அடுத்த பதிவில்

Wednesday, November 30, 2011

ஊரைச் சுற்றிய விபரங்கள்

யு.எஸ்ஸுக்கு மூன்று முறை வந்தும் எங்கேயும் சுற்றிப் பார்க்கப் போனதில்லை. முதல் முறை அட்லான்டாவில் இருந்த என் சித்தி பையரைப் பார்க்கச் சென்ற போது அங்கே ஸ்மோக்கி மவுன்டன்ஸ், இன்க்ளைன்ட் ரயில் பயணம், குகைக்குள்ளே ரூபி ஃபால்ஸ் போன்றவை பார்த்தோம். அப்போ இணையத்தில் எழுத ஆரம்பிக்கவில்ல. எழுத ஆரம்பித்ததும் சென்ற முறை வந்தப்போ அதிகமா எங்கேயும் போக முடியவில்லை. அருகே இருக்கும் கால்வெஸ்டன் பீச்சுக்கு மட்டும் காலை கிளம்பிப் போய்விட்டு மாலை வந்தோம்.


இம்முறை இரண்டரை மணி நேரப் பயணத்தில் இருக்கும் சான் அன்டானியோவுக்குப் பையர் அழைத்துச் சென்றார். சான் அன்டானியோ கதையும், அங்குள்ள ரிவர் வாக்கும் தனியாக வரும். இப்போது அங்கே பார்த்த ஸீ வேர்ல்ட் பற்றி மட்டுமே. கடல், கடல் சார்ந்த பிராணிகள் குறித்த இந்தப் பூங்கா குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் ருசிகரமாய் ஆவலைத் தூண்டுவதாய் இருக்கிறது. ஸீ வேர்ல்டுக்குள் போக டிக்கெட் மட்டும் ஒருத்தருக்கு 50 டாலர். அதோடு தண்ணீர் மட்டும் எடுத்துப் போகலாம். உள்ளே சென்றால் வெளியே வரக் குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும். ஆனால் சாப்பாடு உள்ளே விற்பதைத் தான் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்க என் கணவரின் நீரிழிவு நோயைக் காரணம் காட்டிவிட்டு குட் டே பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்ல அநுமதி வாங்கிக் கொண்டோம். மற்றப் பழங்கள், உணவுப் பொருட்களைக் காரிலேயே வைக்கும்படி ஆயிற்று. இதோ ஸீ வேர்ல்டின் நுழைவாயில்.

நுழைகையில் பாதுகாப்புச் சோதனை உண்டு. சிறு குழந்தைகளுக்கும் பாதுகாப்புப் பரிசோதனையோடு குழந்தைகளின் கை விரல் அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன. உள்ளே போய்க் குழந்தை பிரிந்துவிட்டால் அடையாளம் காண வேண்டி எனச் சொன்னார்கள். நல்ல யோசனைதான். உள்ளே நுழைகையிலேயே கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நாம் வருஷம் பூராவும் பல பண்டிகைகளைக் கொண்டாடினாலும் இவர்கள் கொண்டாடும் இந்த ஒரே நாள் பண்டிகைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மனதைக் கவர்கிறது. முக்கியமாய்க் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த சான்டாவின் பலவேறு விதமான கோலங்களை எங்கும் காணலாம். ஒரு சிலர் சான்டாவைப் போல் உடையணிந்தும் காணப்படுகிறார்கள். அவர்களைப் படம் எடுக்கிறதுக்குள்ளாகக் காட்சி மாறிவிட்டது. முதலில் ஷாமு ஷோ பார்க்கச் சென்றோம்.



இந்த ஷாமு 1961-ல் பிடிபட்ட மிகப் பெரிய திமிங்கிலத்தில் ஒன்று. பெண் திமிங்கிலமான இது உலகின் நான்காவது பெரிய திமிங்கிலமாகவும், இரண்டாவது பெண் திமிங்கிலமாகவும் இருந்ததோடு பொதுமக்களின் பார்வைக்காகவும் வைக்கப்பட்டது. நாளாவட்டத்தில் இதைப் பழக்கி ஷாமு எனப் பெயரிட்டு சான் டியாகோவில் இருந்த ஸீ வேர்ல்ட் காட்சியில் நக்ஷத்திர அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் குழந்தைகள், பொதுமக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த இந்த ஷாமு பதின்மூன்று மாதங்களே காட்சிகளில் வந்தது. 1971-ல் இது இறந்ததாய்ச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பல திமிங்கிலங்கள் பிடிக்கப்பட்டுக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும் அனைத்துக்கும் பிரபலமான ஷாமுவின் பெயரையே சூட்டினார்கள். அது சான் டியாகோவில் மட்டுமில்லாமல் எந்த மாநிலத்தின் ஸீ வேர்ல்ட் காட்சியாக இருந்தாலும் ஷாமுவின் பெயரிலேயே காட்சி நடந்து வருகிறது. காட்சியின் சில பகுதிகளைக் காணலாம்.
நாங்கள் அமர்ந்திருக்கும் பக்கம் அருகே வந்த திமிங்கிலத்தையும் அதே சமயம் எதிர்ப்பக்கம் போன திமிங்கிலத்தையும் காணலாம்.


எதிர்ப்பக்கம் சென்ற திமிங்கிலம்.


குழந்தைகளை மகிழ்விக்க விதவிதமான வேஷங்களில் காட்சி கொடுப்பவர்கள். இப்போது கிறிஸ்துமஸ் நெருங்குவதால் அனைத்துக் காட்சிகளும் அதை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸின் புனிதமும், கிறிஸ்துவின் அறிவுரைகளும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களும், சான்டாவைப் பற்றியும், அவர் எவ்வாறு நல்ல குழந்தைகளுக்கு அருமையான பரிசை அளிப்பார் எனவும், வழி தவறும் குழந்தைகளை எவ்வாறு அரவணைத்துத் திருத்திப் பெரிய பரிசளிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இவர்களோடு கை குலுக்கி உரையாடிப் படங்கள் எடுத்துக்கொள்கின்றனர் குழந்தைகள் தனியாகவும், அவர்கள் குடும்பத்தினரோடும். குழந்தைகளின் விருப்பங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இடம் அடைக்கும் என்பதாலும், திறக்க நேரம் பிடிக்கும் என்பதாலும் ரெசலூஷனைக்குறைச்சுப் போட்டிருக்கேன் சில படங்களை. சரியா வந்திருக்கானு தெரியலை. தொ.நு.நி. மன்னிக்க. :P