எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 30, 2008

தொடர்கின்றன பதில்கள்! உஷாவுக்கு நல்லா வேணும்!

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
வெளிநாட்டு நாவல் என்றால் தாய், மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்
இர்விங் வாலஸின் நாவல்கள், அதிலும் முக்கியமாய் The Man, Hitler மனைவி ஈவா பற்றிய ஒரு நாவல், பெயர் நினைவில் இல்லை. துப்பறியும் நாவல்கள் உண்டு என்றால் அகதா கிறிஸ்டிக்கு முதலிடம், அலிஸ்டர் மக்ளீன் நாவல்களும் பிடிக்கும், என்றாலும் ஆங்கிலத்தில் படித்ததில் கண்ணில் நீர் வர வைத்த கதை என்று சொல்லலாம் என்றால் A Stone for Danny Fisher (ஹெரால்ட் ராபின்ஸ்) கதையின் முடிவை இன்னும் மறக்க முடியாது. We have to ignore the vulgarity. :(


17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

சந்தேகமே இல்லாமல் பொன்னியின் செல்வனும், தேவனின் அனைத்து நாவல்களும் தான்.


18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

அப்படி ஒண்ணும் யோசிச்சது இல்லை, என்றாலும் தலைப்புக்கும், கதைக்கும் சம்மந்தம் இருக்கானு பார்ப்பேன்.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

படிக்கிற வயசில் ஆச்சரியமாய்ப் படிச்சது பொன்விலங்கு சத்தியமூர்த்தியையும்,அப்புறம் கேள்விப் பட்டது குறிஞ்சி மலர் அரவிந்தனையும். நான் முதலில் படிச்சது பொன்விலங்கு. அப்புறமே முதலில் வெளிவந்த குறிஞ்சிமலரைப் படிக்க நேர்ந்தது. என்றாலும் நா.பா.வின் இந்த லட்சியக் கதாநாயகர்கள் ரொம்பநாள் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள். நான் மனமுதிர்ச்சி பெறும்வரை???



20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

கதைக்களம் மாறுபடும், மொழி மாறுபடுவதால் சில முக்கியமான கலாசார மாறுபாடுகளும் காணப்படும். வழக்கங்கள் மாறுபடும். பொதுவான உணர்வுகள் தவிர



21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

பல நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளனவே. என்றாலும் இப்போ சமீபத்தில் ஆனந்த விகடனில் வந்த மல்லி என்ற நாவலும், கல்கியில் வந்த பா.ராகவனின் "கால் கிலோ காதல், அரை கிலோ கனவு" நாவலும் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப் படவேண்டும். மல்லியின் கதாநாயகி ஆன மல்லியின் உழைப்பை, தெளிவான சிந்தனையை, தீர்க்கமான முடிவை மாணவிகளும், பா.ராகவனின் கதாநாயகனின் விடலைத் தனம் எவ்வாறு மாறுகின்றது, மனமுதிர்ச்சி அடைந்து, காதல் என்னும் மாயா உலகில் இருந்து விலகிப் படிக்க ஆரம்பிக்கின்றான் என்பதையும் அந்தப் பருவ வயதில் இருக்கும் அனைத்து இளைஞர்கள், இளைஞிகளையும் சென்றடைய வேண்டும் என்பதில் ரொம்பவே ஆவலாய் இருக்கின்றது. உளவியல் ரீதியாகவும் இது பயனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பதின்ம வயது ஆண்களின் மனநிலையைக் குறித்த இந்தக் கதையைத் துணைப்பாடமாகவே வைக்கலாம் என்பதும் என் தனிப்பட்ட கருத்து.



22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

தலைமுறைகள், 24 ரூபாய் தீவு,


23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

சகஜமாய், பேச்சுத் தமிழிலேயே, அவங்க அவங்க இருப்பிடம், சுற்றுப்புறம், கதைக்களம் சார்ந்தே

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

பொதுத்தன்மை??? பொதுத் தன்மை என்று பார்த்தால் கதாநாயகன் என்றொருவன், கதாநாயகி என்றொருத்தியும் இருப்பதே தான் சொல்ல முடியும். ஆனால் கி.ரா. அவர்களின் எழுத்தை எடுத்துக் கொண்டால், கோபல்ல கிராமமே முதன்மை வகிக்கும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று.


25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

பார்க்கணும்னு எல்லாம் நினைக்கலை.


26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நேரம் கிடைப்பதைப் பொறுத்தே இது அமையும். என்றாலும் சில சமயம் துப்பறியும் கதைகளை முடிவு தெரியும் வரையில் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படிப்பது உண்டு.


27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், பி.வி.ஆர்


28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

சிலவற்றில் அவ்வாறு தோன்றும். என்றாலும் இப்போ நானும் ஏதோ கிறுக்க ஆரம்பிச்சதும், அது சிலரால் தவிர்க்கமுடியலை என்று தெரிகிறது. இந்தப் பதிவுகள் இரு பகுதிகளாய் வந்திருக்கிறதிலேயே தெரியுமே!

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

கி.ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமத்தில் கிராமம் தானே கதாநாயகத் தன்மை வகிக்கின்றது. கிராமத்து அனைத்து மக்களும் பங்கு பெறுவார்கள். இல்லையா? ம்ம்ம்ம்ம்??? சுஜாதாவின் ஜீனோ??? அந்தக் கதையில் அது தானே நாயகன்?? அது கணக்கில் வராதுனு நினைக்கிறேன்.


30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று
கருதுகிறீர்களா?

இலக்கியம் என்ற நிர்ணயம் நம்மால் செய்யப் படுவது தானே?? தவிர, ஒரு கவிதையிலும் மொத்தக் கதையையும் சொல்ல முடியும். சிறுகதைகளும் அதே தளத்தில் இயங்கும். சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆன பி.எஸ்.ராமையாவின் கதைகளைப் படித்தாலே போதும். சொல்லப் படும் கருத்தே முக்கியம்.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

ம்ம்ம்ம்ம்ம்??? இப்போ ஒரு வருஷமா எதுவும் படிக்கலை. ஹூஸ்டனில் படிச்சது தான்.


32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

அட, நான் எழுதற பதிவுகளே நாவல் அளவுக்குப் பெரிசா இருக்கேனு கத்திட்டு இருக்காங்க, இந்த தண்டனை வேறேயா???


33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

அதெல்லாம் யாரையும் தண்டிக்கவேண்டாமேனு ஒரு தாயுள்ளத்தோடு தான் வேறே என்ன???

இங்கே பார்க்கவும்.

Wednesday, October 29, 2008

தெரியாத் தனமாய்க் கேட்டதுக்கு உஷாவுக்கு ஒரு தண்டனை!


நாவல்களோடு உங்கள் அனுபவம்

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

முதலில் படிச்சது நாவல் என்ற வகையில் பார்த்தால் கல்கியின் "பொன்னியின் செல்வன்" தான். ஆனால் முதல் பாகம் மட்டுமே படிச்சேன்.


.2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

சொன்னால் நம்ப மாட்டீங்க, ஆனால் மூன்றாவது படிக்கும்போது ஆரம்பித்தேன். 7 வயசு தான் அப்போ. :))))))), தமிழ் பழகினதுமே கொஞ்சம் கொஞ்சமாய்ப் படிக்க ஆரம்பிச்சு, நல்ல சரளமாப் படிக்கப் பழக்கம் வந்ததுக்கு அப்போது வந்த தரமான வாரப் பத்திரிகைகள் தான் காரணம்.


3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

சரித்திரம், நகைச்சுவைக்கு எப்போவும் முதலிடம்.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அநேகமாய் எழுத்தாளர் யாருனு பார்த்தே!



5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

நாவல்களுக்குப் பெரும்பாலும் ஒரு முடிவு சொல்லப் பட்டு விடுகின்றது. சிறுகதை என்றால் முடிவு தொக்கி நிற்கும். நாமாய்ப் புரிஞ்சுக்கணும்.

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

கதையின் மையக்கரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றியே பின்னப் படுமே!

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

கதையின் தன்மையைப் பொறுத்தும் நடக்கும் கால கட்டத்தைப் பொறுத்தும், கதைக்களத்தைப் பொறுத்தும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

பக்கங்கள் இருக்கும் அளவுக்கு விஷயம் சுவையாக இருக்கணுமேனு கவலை வரும்.


9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

அப்படி எல்லாம் போனதில்லை. நடப்பது நடக்கும். எப்படி நம் வாழ்க்கையில் விதி விளையாடுமோ அதே தானே நாவலின் பாத்திரங்களுக்கும். விதிப்படி நடந்தே தீரும். :))))) முடிவை முன்னேயே தெரிஞ்சுக்கறதிலே சுவாரசியமும் குறையுமே. அதை இழக்க விரும்ப மாட்டேன்.



10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

இதுக்கெல்லாம் நாள், நட்சத்திரம் எதுக்கு? வேலை எதுவும் இல்லாத எல்லா நேரமும் நல்ல நேரமே! ஆனால் வேலையை முடிச்சுட்டு நிதானமா உட்காரணும். இல்லைனா ரசிக்க முடியாது.


11. பாதி வரைப் படித்து,முடிக்காமல் போன நாவல்கள் எவை?

வம்பு எதுக்கு?


12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

அது இருக்கு நிறையவே.



13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

விஷ்ணுபுரம்- ஜெயமோகன். கையிலே கிடைச்சது. கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க ஹூஸ்டன் மீனாட்சி கோயில் நூலகத்தில். இன்னும் அந்த வருத்தம் அடங்கலை! வாங்கிப் படிக்க முடியும்னு தோணலை! :(


14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

1.அமரதாரா - கல்கி

2.பொன்னியின் செல்வன் -கல்கி

3.ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்

4. மிஸ்டர் வேதாந்தம் - தேவன்
5.லட்சுமி கடாசம் - தேவன், தேவனின் அனைத்து நாவல்களுமே பிடிக்கும்.
6.அமுதமாகி வருக - ராஜம் கிருஷ்ணன்
7. மலர்கள் - ராஜம் கிருஷ்ணன்
8.குறிஞ்சித் தேன், வளைக்கரம், கரிப்பு மணிகள் -ராஜம் கிருஷ்ணன்

9.திரைக்குப் பின் - ஆர்வி, மிக சமீபத்திலேயே ஆர்வி அவர்களைப் பார்க்க நேர்ந்தது. அவர் கதைகள் பற்றிப் பேசியதும், ரொம்பவே சந்தோஷம் அடைந்தார். இயல்பாகவே உற்சாகமான மனிதர் :(

நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன் விலங்கு. சித்தப்பா வீட்டில் முதல்முறை அவரைப் பார்த்தப்போ ரொம்பவே சந்தோஷமாயும், ஆச்சரியமாயும் இருந்தது.

தி.ஜானகிராமனின் மலர்மஞ்சம், அம்மா வந்தாள். அம்மா வந்தாளைச் சித்தப்பா மொழிபெயர்த்து இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் போடும்போது தட்டச்சு செய்து கொடுத்திருக்கின்றேன் சிலமுறைகள். சித்தப்பாவின் நாவல்களில் முக்கியமாய் பதினெட்டாவது அட்சக் கோடும், இப்போ சமீபத்தில் கொடுத்த மானசரோவரும் பிடித்தது.

நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள். இதிலே தலைமுறைகள் படிக்கும்போது 20 வயசு, முதல்முதலாய்த் திருமணம் ஆகி மூன்றுவருஷச் சென்னை வாசத்துக்கு அப்புறம் ராஜஸ்தானுக்குப் போயிருந்தப்போ பொழுதுபோக்கு என எடுத்துச் சென்ற இந்தப் புத்தகம் படிச்சுட்டு, பலநாள் தூங்காமல் நான் பட்ட அவஸ்தை! மனவேதனை தாளாமல் பலநாட்கள் ராத்திரி எழுந்து உட்கார்ந்து அழுதிருக்கேன். இப்போக் கூட கதையின் முடிவு மனதை உலுக்கும். :((((

கி.ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமம். பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

10.சுஜாதாவின் சில நாவல்கள். குறிப்பாய் 24 ரூபாய் தீவு ( பெயர் இம்முறை சரியா எழுதி இருக்கேனில்லை லதா??? :P., அப்புறம் இன்னொரு கதை, சுஜாதா எழுதியதே, பெயர் நினைவில் இல்லை. கதாநாயகன் வெளிநாடு சென்றிருக்கும்போது மனைவியும், அவன் ஒரே பெண்ணும் விபத்தில் இறக்க, அவர்கள் பிரிவில் தவிக்கும் நாயகன், பல முயற்சிகளுக்குப் பின்னர் ஊரை விட்டுச் செல்ல நினைத்து ரயிலில் ஏறும்போது அவன் பெண் வயதே ஆன ஒரு பிச்சை எடுக்கும் குழந்தையைப் பார்த்து விட்டு அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பிப்பான். கதையின் மையக்கருவே இதுதான் என்றாலும், எடுத்த எடுப்பில் இதைச் சொல்லாமல் கடைசியில் சொல்லி இருக்கும் உத்தி நன்றாய் இருக்கும். )இன்னும் பல நாவல்கள் இருக்கின்றன. எழுத்தாளர்களும் இருக்கின்றனர்.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

தாகூரின் நாவல் ஆன "புயல்", சரத்சந்திரரின் நாவல்கள், முக்கியமாய் சாவித்திரி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நாவல்கள், யுகாந்தர் குறிப்பாய், வி.எஸ்.காண்டேகரின் யயாதி 1, யயாதி- 2, கருகிய மொட்டு, இன்னும் த.நா.குமாராசாமி, த.நா.சேனாபதி இருவரும் மொழி பெயர்த்து வெளியிட்ட பல நாவல்கள் இருக்கின்றன. மலையாளத்தில் தகழியின் செம்மீன், நாலுகெட்டு வீடு, (வாசுதேவன் நாயர்), கன்னடத்தில் மாதவையா, (மொழிபெயர்ப்பு கி.சரஸ்வதி??), Manohar Malgoankar. R.K.Narayanan's all novels. Especially Guide, Read in both Tamil and English. Wuthering Heights.


டிஸ்கி: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிறதுனு சொல்றது இதுதான்னு இப்போ நுனிப்புல் உஷாவுக்குப் புரியும்னு நம்பறேன். இன்னும் இருக்கே!! நாளைக்கோ அல்லது நாளன்னைக்கோ தொடருமே! என்ன செய்வீங்க??

Monday, October 27, 2008

தீர்ந்து போகிறதுக்குள்ளே வாங்க எல்லாரும்! :P

திவா கேட்டிருக்கார் ஸ்வீட், காரம் இல்லையானு! ஸ்வீட் இல்லைனாலும் காரமாவது வேணும்னு சொல்லி இருக்கார். அதுக்காக இதோ! கல்யாணம் ஆகி வந்ததிலே இருந்து ட்ரம்மிலே காரம், இனிப்பு எல்லாம் செய்து பழக்கம்.பெரிய குடும்பம், வரவங்க, போறவங்களும் நிறைய இருப்பாங்க அப்போ! நானும், எங்க மாமியாருமா ஒரு வாரம் சேர்ந்து எல்லா பட்சணங்களும் பண்ணுவோம். "பையர்" இப்போக் கூட பட்சண பாக்டரி ஆரம்பிக்கிற வழக்கம் நின்னு போச்சு போலிருக்கேனு சொல்லுவார், நக்கலாக. அந்த அளவுக்குப் பண்ணிட்டு, அப்புறமா ஒரு கிலோ, 2 கிலோ டப்பாக்களில் மட்டுமே பண்ணிட்டு இருந்தேன். அதுவும் இந்த வருஷம் இல்லாமல் போய் எல்லாம் ஓசி. எனக்குப் பிடிச்ச ஸ்வீட்டிலே லட்டுவும் ஒண்ணு. அதுவும் கல்கத்தா, உ.பியிலே மாவாவும் சேர்த்து மாவா லட்டுனு பண்ணுவாங்க. தனி டேஸ்ட் தான். தீபாவளிப் பண்டிகை மட்டும் இல்லை, அநேகமாய் எல்லாப் பண்டிகைகளுமே இந்தியா பூராக் கொண்டாடறதாலே, என்ன கொஞ்சம் பழக்கம் தான் மாறும், அதிகமா தனிமை வாட்டியதில்லை. ஆனால் இப்போ இந்தியாவில், தமிழ்நாட்டில் சொந்த வீட்டில் இருந்தும்???? :(
மிக்சரும் எனக்குப் பிடிச்சது. சிலருக்குப் பிடிக்கிறதில்லை. கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். ஆனால் அதுக்கு உதாரணம் எங்க வீட்டிலேயே இருக்கிறதாலே, ரசிக்கத் தெரியலைனு நினைச்சுக்க வேண்டியது தான். அனைவரும் தீபாவளி நல்லாக் கொண்டாடி இருப்பீங்கனு நினைக்கிறேன். நாளை கொண்டாடுபவர்களுக்கும் வாழ்த்துகள். சீக்கிரமா வாங்கப்பா, தீர்ந்து போயிடும் அப்புறம். ஏற்கெனவே ஓசி வாங்கி வச்சிருக்கேன்.

Sunday, October 26, 2008

தீபாவளி வாழ்த்துகள்!

அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Friday, October 24, 2008

அன்றே சொன்னான், நன்றே சொன்னான்!


கலியுகமா, கலியுகமா என்று சந்தேகம் பட்டுக் கொண்டிருக்கோம் இல்லையா?? அந்தச் சந்தேகமே வேண்டாம். இது கலி யுகமே தான். அடித்துச் சொல்கின்றார் கிருஷ்ணன் பாகவதத்தில். கொஞ்சம் சாம்பிள் பார்ப்போமா???

கலியுகத்தில் மக்கள் பொய் அதிகம் சொல்லுவார்கள். வஞ்சனை, தூக்கம், சோம்பல், இம்சித்தல், மனவருத்தம், பயம், அறியாமை, அழுகை, கலக்கம் போன்றவை அதிகமாய் இருக்கும். அளவில்லாமல் சாப்பிடுவாங்களாமே?? அதான் ஃபாஸ்ட் ஃபுட் வந்துடுச்சேங்கறீங்களா?? அதுவே அளவுக்கு மேலே போனால் விஷம் தானே??? சத்தத்தை ரசிப்பார்களாம். அவரவர் ஆசைப் படிக்கு எதையும் அடைய நினைப்பார்கள். ஆனால் அதற்கேற்ற பணம் இருக்காது. வேதங்களுக்கும், மற்ற புராணங்களுக்கும் அவரவர் மனம் போன போக்கில் அர்த்தங்களைச் சொல்லுவார்கள். துறவிகள் பணத்தாசை பிடித்து அலைவார்கள். துறவிகளில் போலிகள் அதிகமாய்க் காணப்படுவதால் உரிய மரியாதையும் கிடைக்காமல் இருக்கும். தர்மம் செய்வது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பிக்கும். தாய், தந்தையர், உறவினருக்கு உரிய மரியாதை கிடைக்காது. உடன்பிறந்தோரிடையே ஒற்றுமை குறையும். மதிப்பு இருக்காது. மனைவி வழி உறவினர்களே மதிக்கப் படுவார்கள். பெற்றோர், உடன்பிறந்தோரைக் கலந்து ஆலோசிக்காமல் மனைவி வழி உறவினர்கள் ஆன மாமனார், மாமியார், மைத்துனன், மைத்துனி ஆகியோரைக் கலந்து ஆலோசிப்பார்கள். உதவிகளும், கட்டுப்படுதலும் அவர்களுக்கு மட்டுமே இருக்கும்.

நிலையாக எதிலும் மனம் நிலைத்து நிற்காமல் அலைபாய்வதோடு, உறவினர்கள் ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுத்து, சொத்து, சுகம், பணம் போன்றவற்றுக்காக ஒருவரை ஒருவர் கொன்றும் கொள்வார்கள். பெற்றோரைப் பிள்ளைகள் அலட்சியம் செய்வதோடு அல்லாமல், வயது முதிர்ந்த காலத்தில் கவனிப்பும் கிடைக்காது பெற்றோருக்குப் பிள்ளைகளிடம் இருந்து. அதிகப் பணக்காரனே மதிக்கப் படுவான். பணம் இருந்தால் எதையும் வாங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். முறையான திருமணங்கள் குறைந்து போய் முறையற்ற திருமணங்கள் அதிகரிக்கும். கோயில்கள் கவனிப்பாரின்றிக் காணப்படும். வெளிப் பகட்டுக்காக மட்டுமே கோயில்களுக்குச் செல்வது போன்ற பழக்கங்கள் இருக்கும். அதுவும் தொலை தூரத்தில் உள்ள கோயில்களை நாடிச் செல்லுவார்கள். ஆட்சி புரிபவர்களும் நல்லவர்கள் போல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுவார்கள். இரக்கம் இல்லாமல் திருட்டுக் குணத்துடனும், பேராசையுடனும் காணப்படுவார்கள்.

என்றாலும் நாம சங்கீர்த்தனம் இருந்தாலே அதுவே காப்பாற்றும் என்றும் கண்ணன் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே அனைத்துப் பாவங்களும் விலகி விடும் என்றும் சொல்கின்றான் கண்ணன். கண்ணனையே நினைந்து, கண்ணனையே பாடி, கண்ணன் புகழே கேட்டு, கண்ணனையே அர்ச்சித்து, கண்ணனையே வழிபட்டு, கண்ணனுக்கே அடிமையாகி, கண்ணனுக்கே தோழனாகி, கண்ணனுக்கே எஜமானும் ஆகி கண்ணனுக்கே அனைத்தும் சமர்ப்பணம் செய்வதே அனைத்திலும் சிறந்ததாகவும் சொல்லப் படுகின்றது.

டிஸ்கி: டாகுமெண்டில் சேகரிச்சு வச்சிருப்பதைப் பார்வையிடும்போது வேறே ஒரு பதிவுக்காக எழுதி வச்ச இது கிடைச்சது. பதிவு போட்டு நாளாயிடுச்சுனு ஜி3 பண்ணிட்டேன். சும்மா இருக்க முடியலை! என்றாலும் இது எல்லாமே இன்றைக்கு நடக்குது என்பது உண்மை. இன்னும் இருந்தது. நீஈஈஈஈஈஈஈஈளமா எழுதறேனேனு ஒரு புகார் இருக்கே, அதான் பாதியிலேயே நிறுத்திட்டேன்!!!!!!

Monday, October 20, 2008

இயக்குநர் ஸ்ரீதர் மறைந்தார்! :(((

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெரிதும் பேசத்தக்கப் பல படங்களை இயக்கியவரும், சித்ராலயா என்னும் படக்கம்பனியின் நிர்வாகியாகவும் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் இன்று மலர் மருத்துவமனையில் காலம் ஆனார். பலநாட்களாக உடல் நலம் இன்றி இருந்த இவர் என்றேனும் ஒருநாள் உடல்நலம் தேறி மீண்டும் படங்களை இயக்க வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கனவு மண்ணாகிப் போனது. எனினும் அவர் மனைவியின் உதவியுடன் நோயுடன் போராடினார். காலம் வென்றது. இனி பேசப் போவது எந்நாளும் அவர் இயக்கிய படங்களே.

பொதிகைத் தொலைக்காட்சி தன்னுடைய வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்குக் கொடுத்து கெளரவித்தது ஒரு பெரிய ஆறுதல் இத்தனை வருத்தத்திலும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.இங்கே படிக்கலாம் அவருக்கு விருது வழங்கிய செய்தி பற்றிய ஒரு பதிவை!

Sunday, October 19, 2008

சினிமா! சினிமா! சினிமாவின் தாக்கம் தொடர்கின்றது!

திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், தில்லானா மோகனாம்பாளில் மனோரமா தன்னுடைய நாடகக் கொட்டகையில் சிவாஜியைப் பார்த்து உபசரிக்கும் இடம் மிகப் பிடித்த இடம். "நாயனக்காரரே? ஜோடா, வெத்திலவாக்கு?" என்று கேட்கும் அந்த இடம் வரும்போது மட்டும் பார்ப்பேன். அடுத்து கரிஷ்மா நடிச்ச ஜுபைதா படமும் அந்த அளவுக்கு மனதைக் கவர்ந்த ஒன்று. இதுவும் "உம்ராவ் ஜான்" மாதிரி அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை என்றே சொல்கின்றார்கள். கரிஷ்மாவின் ரத்தத்திலேயே நடிப்புக் கலந்து இருக்கின்றதால் அருமையாக வாழ்ந்திருப்பார் இந்தப் படத்தில். முடிவு அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே! கதாநாயகனாய் வருவது மனோஜ் வாஜ்பாய்?? விக்ரம் கோகலே?? யாருனு தெரியலை, மறந்துட்டேனே! :)))))
சினிமாவின் பாதிப்பு என்னும்போது இந்தப் படத்தை எவ்வாறு மறந்தேன் என்பது போல நேற்று 9x சானலில் மீண்டும் இந்தப் படத்தைப் போட்டிருந்தார்கள். இணையம் இல்லை, மின் தடையினால். மழை பெய்து கொண்டிருந்ததால் நடைப்பயிற்சிக்கும் செல்லமுடியாது என்பதால் மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்தேன். "உம்ராவ் ஜான்" என்றொரு பெண்ணைப் பற்றிய இந்தக் கதை மனதைத் தாக்கியது முதல்முறை ரேகா நடிச்சப்போ பார்த்தப்போவே. ஏமாற்றி அழைத்துச் செல்லப் பட்ட பெண்ணின் மனநிலையும், அவள் பிறந்த இடத்தைப் பார்க்கவும், உறவுகளைப் பார்க்கவும் ஏங்குவதையும் ரேகா சித்தரித்தாற்போல் ஐஸ்வர்யாவால் முடியுமா என்றால், சாதித்தே காட்டி இருக்கின்றார் ஐஸ்வர்யா. அல்கா யக்னிக்கின் குரலில் அமைந்த அனைத்து கஜல்களும் பொருள் பொதிந்தவையாகவும் இருக்கின்றன. நேற்றே மீண்டும் பாடலை நன்கு பொருள் புரிந்து கேட்கவும் முடிந்தது. அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் பிரியும் இடத்தில் இருவருமே அசத்தலான நடிப்பால் மனதைக் கலங்க அடித்திருக்கின்றார்கள்.

தாயைப் பார்த்ததும் உணர்ச்சி வசத்தால் இருவரும் அணைத்துக் கொண்டு அழுவதும், பின்னர் உம்ராவ் ஜானின் தற்போதைய நிலைமை புரிந்த தாய் அவளை மறுப்பதும், தன் மகள் ஆன ஆமீரா இறந்துவிட்டாள் என்று சொல்லுவதும் மனதை மிகவும் கஷ்டப் படுத்தியது. தன்னுடைய மிகப் பெரும் பொறுப்பை உணர்ந்தே ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டும். கடைசியில் சொல்லுவது போல் உம்ராவ் ஜானுக்காகப் பரிதாபப் படுவதா? அல்லது தன் குழந்தைமையைத் தொலைக்க நேர்ந்த ஆமீராவிற்காகவும், அவள் தவறு செய்துவிட்டதாய்க் கருதி வெறுத்து ஒதுக்கிய வீட்டினரையும் பார்த்து வருந்துவதா எனப் புரியவில்லை. தாய் அவளை மனம் மாறி ஏற்றுக் கொண்டிருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

இன்றளவும் இம்மாதிரியான ஒரு நிகழ்ச்சி தொடர்கதையாக ஆகிப் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டும் இருக்கின்றதே? தெரிந்தோ, தெரியாமலோ பல பெண்கள் துன்புறுகின்றார்களே? :(((((((((( அதில் வரும் ஒருபாட்டில் வரும் இந்த வரிகள் மனதைக் கலங்க அடிக்கும். "அக்லே ஜனம் மோஹே பிட்டியா நா கீஜியே!" இந்தப் படம் முதல்முறை பார்த்தப்போ எழுதின விமரிசனம்இங்கே

Wednesday, October 15, 2008

யாருக்காக??? இது உஷாவுக்காக!!


என் பதிவுகள், சினிமா நினைவுகள்
தோழி உஷாவுக்காக!



1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

நினைவிலே இல்லை. ஆனால் அப்பா மட்டும் சினிமா பார்த்துட்டுத் திரும்பி வந்து எங்களுக்கெல்லாம் கதை சொல்லுவார், கேட்டிருக்கோம், பல இந்திப் படங்கள், தமிழ்ப்படங்கள் அதிலே அடக்கம். ஜனக், ஜனக் பாயல் பாஜே! படம் பார்த்துட்டு கோபி கிருஷ்ணாவின் நடனத்தைப் பற்றிச் சொன்னதில் இருந்து அந்தப் படம் பார்க்க நினைத்து, அப்புறம் எப்போவோ தூரதர்ஷனில் பார்க்கக் கிடைத்தது. முதல் சினிமான்னா??? ராம பக்த ஹனுமான்?? இல்லாட்டி மாயா பஜார்?? சரியாத் தெரியலை, ஏழு வயசிருக்கலாமோ????


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

அரங்கிலே படம் பார்த்தேப் பல வருடங்கள் ஆகின்றது. என்றாலும் போன வருஷம் யு.எஸ்ஸில் இருந்தப்போ சிவாஜி படத்துக்குப் பொண்ணு டிக்கெட் வாங்கிக் கொடுத்து எங்க இரண்டு பேரையும் தள்ளிவிட்டா. அங்கே பார்த்தது தான். இந்தியாவிலே என்றால் குஜராத் ஜாம்நகரில் தான் இருக்கும். தமிழ்நாட்டில்??? கடைசியாப் பார்த்தது "மை டியர் குட்டிச்சாத்தான்" என நினைக்கிறேன். ராயப்பேட்டாவில் கோபாலபுரம் பக்கம் ஏதோ ஒரு தியேட்டர். நாங்க முன் பதிவு செய்துட்டு போன ஒரே படமும் இது தான். அம்பத்தூரில் இருந்து சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துட்டுப் போனதும் தியேட்டரில் படத்தை விட எங்களைப் பார்க்கவே அதிகக் கும்பல் கூடிச்சுனு நினைக்கிறேன். இப்போக் கூட நினைவில் இருக்கு பூரி, கிழங்கு, புளியோதரை, வறுவல், தயிர்சாதம் எடுத்துட்டு, நாங்க 4 பேர், பக்கத்து வீட்டுக் காரங்க 5 பேர், என் அண்ணா குடும்பம், தம்பி குடும்பம் என்று ஒரு 15 பேருக்கு மேல் போனோம். மாட்டு வண்டி பூட்டித் தலையில் விளக்கெண்ணை தடவிட்டு ஜவந்திப் பூ வச்சுக்கலை, மத்தது எல்லாம் நடந்தது. :)))))))


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

இப்போ இரண்டு நாள் முன்பு தொலைக்காட்சியில் 9x சானலில் பார்த்த ஒரு பெண் பத்திரிகையாளர் பற்றிய இந்திப் படம். "பாப்???" என்ற பெயரில் வந்தது. அந்தப் பெண்ணின் இயல்பான நடிப்பும், செய்திகளைச் சேகரிக்கும் விதமும், குண்டு வெடிப்பில் நேருக்கு நேர் கண்ட உண்மைகளும், சமூகத்தில் பெரிய ஆளான வில்லன் செய்யும் கீழ்த்தரமான வேலைகளைக் கண்டு பிடித்துப் பத்திரிகைக்குக் கொடுத்தும், பத்திரிகையின் நிறுவனரால் செய்தி வெளியிட மறுக்கப் பட்டு, வேலையில் இருந்தே தூக்கி எறியப் படுவதும், அவரின் செய்தி சேகரிப்பின் கஷ்டங்களையும் கண்டபோது மனதில் தோன்றிய எண்ணம், சமீபத்திய பெண் பத்திரிகையாளரும், டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவங்களின் காரணங்களை புலனாய்வு "ஹெட் லைன்ஸ் டுடே" செய்தி சானலின் தயாரிப்பாளர் ஆன 23 வயதே ஆன செளமியா ஸ்வாமிநாதன், டெல்லியில் அதிகாலையில் வீடு திரும்பும் போது கொல்லப் பட்டதும், அதற்கு டெல்லியின் முதலமைச்சரும், தானே ஒரு பெண்ணுமான ஷீலா தீட்சித், "யார் அந்தப் பெண்ணை சாகசங்கள் செய்யச் சொன்னது? அதிகாலையில் ஏன் வெளியே போனார்? இந்த அளவுக்கு சாகசம் தேவையா?" என்றெல்லாம் கேட்டது நினைவில் மோதியதோடு அல்லாமல், நிஜ வாழ்வில் மனிதர்கள் பேசுவது, திரையை விடக் கொடுமை என்ற உண்மையையும் உணர்த்தியது.
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

பல ஸ்ரீதர் படங்கள். புரட்சியான கருத்துக்களை முன் வைத்துப் படம் எடுப்பதில், அதுவும் தரமான படங்கள் தருவதில் இன்று வரை அவரை மிஞ்ச யாருமே இல்லை என்பது என்னுடைய கருத்து. பல படங்களின் கருத்துக்கள் தாக்கி இருக்கின்றன என்றாலும் தற்போது உள்ள திரைப்படக் காலங்களில் பொற்காலம், பாரதி-கண்ணம்மா, மறுபக்கம் போன்ற படங்கள் ஓரளவுக்குச் சொல்லும்படியாக இயல்பாக எடுக்கப் பட்டு இருந்தன.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தாக்கும்படியாக தமிழ் சினிமா எதுவும் இல்லை என்றே சொல்லணும். மலையாளத்தில் பல படங்கள் மனதைத் தைக்கும் விதத்தில் எடுக்கிறாங்க. அரசியம் சம்பவம்னு எதுவும் இல்லை. அவ்வளவு ஆழமா நினைக்கிறதில்லை சினிமா விஷயத்தில்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

வீணை பாலசந்தரின் "பொம்மை" படம் பார்க்கணும்னு ஆசை, இன்னும் பார்க்க முடியலை. மற்றபடி என்னை எந்தப் படமும் தாக்கும்படி எல்லாம் இல்லை. தொழில் நுட்பம் என்றால் இப்போ வர படங்களின் தொழில் நுட்பங்கள் எல்லாமே ஆச்சரியமாத் தான் இருக்கு. கதையோடு ஒட்டாமல் இருப்பதும் யோசிக்க வைக்கும்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தினப் பத்திரிகைகளில் வர விஷயங்களுக்கு மேல் தெரியாது. சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறதுனு ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளைப் படிக்கிறதையே நிறுத்திட்டேன்.
7. தமிழ்ச்சினிமா இசை?

பல பழைய பாடல்கள் தான் வேறே என்ன?? பைய"ரி"டம் ஒரு கலெக்ஷனே இருக்கு. கணினியில் போட்டுக் கொடுத்திருக்கார். நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. என்றாலும் நான் "பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்"(எந்தப் படம்???) பாட்டை ரொம்பவே அனுபவிச்சுப் பாடிட்டு இருந்தப்போ அப்பா வில்லன் மாதிரி வந்து திட்டியது மறக்கவே முடியாது. அப்போ அந்த வயசிலே அர்த்தம் எல்லாம் புரியலை, என்றாலும் பின்னால் அந்தப் பாட்டு கேட்க நேரும்போதெல்லாம் சிரிப்பு வரும்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ம்ம்ம்ம்??? தமிழ் தவிர, தொலைக்காட்சியில் அவ்வப்போது வர ஆங்கிலப் படங்கள் எப்போவாவது பார்ப்பேன். அதிலே ரொம்பப் பிடிச்சது என்றால் கென்னடி கொலை பற்றிய ஒரு படம், பெயர் நினைவில் இல்லை, Independence Day, கன்னடத்தில் சாருஹாசன் நடித்த ஒரு படம், அவருக்குக் கிடைக்கவேண்டிய பென்ஷனுக்கோ, என்னவோ ரொம்பவே அலைவார்.என்ன படம்னு நினைவில் இல்லை. சாருஹாசன் அவார்ட் வாங்கிய படம். இந்தியில் கிரீஷ் கர்னாட், ஷபனா ஆஸ்மி நடிச்ச ஒரு படம், வங்காளக் கதை, கிரீஷ் கர்னாட் வீட்டுக்கு மூத்த பையர், அவர் மனைவியாக ஷபனா! ம்ம்ம்ம்ம்?? படம் பெயர் ஸ்வாமி??? ஆமாம்னு நினைக்கிறேன், ஹேமமாலினி அம்மா தயாரிப்பாளர். இன்னொரு படமும் இருக்கு வங்காளக் கதை, நடிச்சது சுசித்ரா சென்னும், சஞ்சீவ் குமாரும். அரசியலில் ஈடுபட்ட மனைவிக்காகக் கணவன் தவிப்பதும், குடும்ப வாழ்க்கை வாழ மனைவி தவிப்பதும், தந்தையின் நிர்ப்பந்தம் காரணமாய் அரசியலுக்கே திரும்புவதும், என்றோ ஒருநாள் சந்திக்கும்போது பழைய நினைவுகள் அலைமோதுவதுமாய், இயல்பாக நடிச்சிருப்பாங்க இரண்டு பேரும். பாட்டுக்கள் கூட சூப்பர். விஜய் ஆனந்த் தயாரிப்புனு நினைக்கிறேன். பெயர் மறந்து போச்சு!


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஹிஹிஹி, அதெல்லாம் இல்லைங்க, ஏதோ எங்க வீட்டுக்கு எதிரே சித்ராலயா கம்பெனியின் மதுரைக் கிளை அலுவலகம் இருந்தது. அதனால் சில நடிகர்களைப் பார்க்க நேர்ந்திருக்கு. அப்போதான் ஜெயலலிதாவை முதல் முதல் வெண்ணிற ஆடையில் நடிச்சிட்டு இருக்கும்போதே பார்த்திருக்கேன். அவங்க அழகில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட திரையில் வரலை என்பது ஏமாற்றம் தான்.


10.தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏதோ சில படங்கள் சொல்லும்படி இருந்தாலும் தமிழ் சினிமா வளர்ச்சி தொழில் நுட்ப அளவிலேயே வளர்ந்துள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் அந்த அளவுக்குத் தரமான படைப்புகள் வருதா என்றால்??? விளம்பரம் வரும் அளவுக்குப் படங்கள் இல்லை. ஏமாற்றமே தருகின்றது. எதிர்காலம் என்ன எதிர்காலம்? ரசிக்க ரசிகர்கள் இருக்கும்வரை இம்மாதிரிப் படங்கள் வந்தே தீரும்.



11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

அப்பாடா, தமிழ்நாடு கொஞ்சமாவது உருப்பட ஒரு வழி இருக்குனு சொல்றீங்க?? ஆனால் அதுஒரு கனாக் காலம்னு தோணுதே! :P:P:P:P


இனி தொடர வேண்டியவர்கள் யார் வேண்டுமானாலும் தொடருங்க! எல்லாரும் ரொம்ப பிசி, என்னைத் தவிர, அதனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லலை!

Tuesday, October 14, 2008

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்! :P

அட, நிஜமாவே கொண்டாடறாங்கப்பா எல்லாரும்! ஆளாளுக்கு என்ன ஒரு ஆலோசனை! பின்னிட்டேனா நானு?? எங்கே? முடியலை. எதிர்வீட்டு மாமி தான் வந்து பின்னறாங்க. நல்லாவே எஞ்சாய் பண்ணறீங்கனு புரியுது! அம்பி, வந்து கவனிச்சுக்கறேன்! :P:P:P:P:P:P

Saturday, October 11, 2008

இடது சாரியும், ஆக்கிரமிப்புக்களும்!


புதுசா போஸ்ட் ஒண்ணும் கொஞ்ச நாளைக்குப் போட முடியாது என்றாலும் அபி அப்பா சொல்றாப்போல் அவ்வப்போது வந்து நானும் மேடையிலே இருக்கேன்னு சொல்லிட்டுப் போக வேண்டி இருக்கு. தவிர, நானும் இடதுசாரியாக மாறியாச்சு கொஞ்ச நாட்களாக. தெருவில் நடந்து போறப்போ கூட வலது பக்கமாய்த் தான் போவேன். இதுக்கு என்னோட விளக்கம். பின்னால் வர வாகனங்கள் நாம் இடது பக்கமாய் நடந்து போகும்போது தெரியாது என்பதோடு, சில சமயம் ரொம்ப வேகமாய் தலை போகிற அவசரத்தோடும் வருவாங்க சில ஆட்டோ, லாரிக்காரங்க, அவங்க கிட்டே இருந்தும் தப்பிக்கலாம்னு தான். ஆகவே நான் எப்போவும் வலது பக்கமாவே நடப்பேன். எதிரே வரும் வாகனங்களும் தெரியும். பின்னாலே வரதும் எல்லாம் அதைத் தாண்டி அந்தப் பக்கமாத் தானே போகும்.

ஆனால் இதில் எனக்கும் ம.பா.வுக்கும் தெருவிலேயும் கருத்து வேறுபாடு வரும். அவர் அந்தப் பக்கமே நடக்க, நான் இந்தப் பக்கமாய் நடக்க, இரண்டு பேருமே அறிமுகம் இல்லாதவங்க மாதிரி போவோம். இப்போ அதை விட மோசமா இருக்கு. அதனாலே குறைந்த பட்சமாய் இதிலாவது அவர் சொல்றதைக் கேட்போமேனு ஒரு எண்ணம். இடது கையால் தட்டச்சப் பழகிட்டு இருக்கேன். இது கூட அப்படித் தான் தட்டச்சியது. எப்படி வந்திருக்கு?? கொஞ்சம் நேரம் ஆகிறது. ஆங்கிலம் சுலபமா இருக்கு. தமிழில் தட்டச்சுவது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. என்ன இருந்தாலும் இடதுசாரிகளை விட்டுக் கொடுக்க முடியுமா?? இடதுசாரிகளுக்கு ஒரு வாழ்க போட்டுக்கலாம். அடுத்துப்பாருங்க முக்கியமான கட்டம் வருது.

என்னத்தைச் சொல்றது? என்னோட சாம்ராஜ்யம் ஆன சமையல் அறை ஆக்கிரமிக்கப் பட்டு விட்டது. கிட்டத் தட்ட ஒரு ஆறு நாட்கள் கழிச்சு நேத்துக் காலம்பர, சமையல் அறையில் நுழைந்தால், எனக்கே ஆச்சரியம், என்னோட சமையல் அறையா இது?? எது எங்கே இருக்குனு கண்டு பிடிக்க முடியலை. மேடை என்னமோ சுத்தமாய்த் தான் இருந்தது. ஆனால் பாத்திரங்கள்?? கடவுளே! எப்படிக் கண்டு பிடிப்பேன் ஒண்ணுமே புரியலை. பால் காய்ச்சும் பாத்திரம் ஒண்ணை எடுத்தால், வந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கு ஒண்ணுக்குள் ஒண்ணாய். அதைக் காணோமேனு கூப்பிட்டுக் கேட்டால் உன் பாத்திரங்களை நான் ஒண்ணும் செய்யலை. பேசாமல் உட்காரு. காஃபி தானே வேணும்? போய் உட்காருனு ஒரு பயங்கர அதட்டல்.
இடது கையால் செய்யறேனே என்று கேட்டதுக்கு போய்க் கணினி முன்னாலே உட்காருனு மறுபடி ஒரு அதட்டல்! அல்லது ஒரு கிண்டல்?? உள் குத்து?? என்னனு புரியறாப்போல் பேசற வழக்கமே கிடையாது. ஸ்தித ப்ரக்ஞன் என்று நினைக்கிறேன். கோபமா, சந்தோஷமா, வருத்தமா எதுவுமே புரியாத ஒரு குரல். என்னவோ போங்க! இத்தனை வருஷமாய்த் தனி ஆட்சி புரிந்து கொண்டிருந்த என்னோட சமையலறையில் பயங்கர ஆக்கிரமிப்பு. வன் கொடுமை! ஆணாதிக்கம் அதிகமாயிடுச்சுனு நினைக்கிறேன்.

எப்படி வெளியே தள்ளறது? யாராவது சொல்லுங்களேன்!

டிஸ்கி: இடது கையால் அடிச்ச இந்தப்பதிவுக்கு எல்லாரும் வந்து வாழ்த்துச் சொல்லுங்க. மறுபடி எப்போ முடியுமோ தெரியலை! இதுக்கே நாக்குத் தள்ளிடுச்சு. ஒரு மணி நேரம் ஆயிருக்கு. கொஞ்சம் பழகணுமோ???

Thursday, October 09, 2008

அழகு தெய்வம்- நவராத்திரி நாயகியர் - 10

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

அம்மா= அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் பொறுமை, அம்மா என்றால் பாசம், அம்மா என்றால் இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது. எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியலையே! பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன?? (மீன்??) இனத்தில் மட்டுமே ஆண் கர்ப்பம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவி தான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோ??அந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

20. யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
ப்ராந்தி என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமும், ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும் என்ற பொருளிலும் வருகின்றது. மாயை, என்ற அர்த்தமும் வரும். காட்சிப்பிழை, பொய்த்தோற்றம் என்றும் சொல்லலாம். பூமியின் சுழற்சியையும் எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே?? என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா?? அந்த மாயைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

21. இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:

அனைத்து உயிரிகளிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அகிலம் பூராவும் வியாபித்து, நாம் நிற்பது, நடப்பது, பார்ப்பது, கேட்பது, பேசுவது, முகர்வது, உண்ணுவது என அனைத்தை இயக்கங்களிலும் தானே சர்வமுமாய் நிறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.

22. சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
சிதிரூபேண= சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி?? என்று அந்த உணர்வாய் உறைபவளே நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்றாள் . அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

Wednesday, October 08, 2008

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர் - 9

17. யா தேவீ ஸர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
ஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல், நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக் கொண்டால் நல்லது. அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை அல்லவா?? தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே! ஆகவே நல்ல சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவைகளையே நினைக்கும் மனதைக் கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில் , ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

18. யா தேவீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நம்ஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
தயை= கருணை, இரக்கம், பரிவு. இங்கே அனைத்துமே பொருந்தும். சகல ஜீவராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும். எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா?? தயை உருவில் அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

19. யா தேவீ ஸர்வ பூதேஷூ துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
துஷ்டி=திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே சந்தோஷம் வரும் அல்லவா?? இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். ஒரு செடியில் இருந்து பூவைப் பறித்தால் மேலும், மேலும் பூக்க வேண்டும், பறிக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. காய்கள் பறித்தாலும், கனிகள் பறித்தாலும் அவ்வாறே. பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. கறந்த பாலைத் திரும்பக் கொடு என்னிடம் என்று மாடு கேட்க ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்?? பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடியாவது கேட்கின்றதா?? இல்லையே? நமக்கு எந்த விதமான மறுப்பும் இல்லாமல் நம் தேவைக்கு உதவும் இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும் பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா என்றால் வரவில்லையே?? இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இதாவது கொடுப்போம். ஆனால் போதுமென்று சொல்லாமல், மேலும் மேலும் அன்னைக்கு நமஸ்கரிப்போமே!

Tuesday, October 07, 2008

நவராத்திரிச் சிறப்பு அலங்காரம்


நவராத்திரி சிறப்பு அலங்காரம்
நவராத்திரியில் அம்பாளுக்கு வித விதமாய் அலங்காரம் செய்வாங்க. அதே போல் குழந்தைகளுக்கும் செய்வாங்க. நானும் சின்ன வயசிலே எல்லா வேஷமும் போட்டுட்டு இருக்கேன். அதை நினைவு கூரும் விதமாய் இந்த வருஷ நவராத்திரிச் சிறப்பு அலங்காரமாய்க் கைக்கட்டு அமைந்து விட்டது. குளிக்கும்போது எப்படி கீழே விழுவாங்க என்று ரொம்ப வருஷமாய் எனக்குச் சந்தேகம் வந்துட்டு இருந்தது. இப்போ அது புரிஞ்சு போச்சு. வெள்ளிக்கிழமை அன்று கீழே விழுந்து, ஸ்பாண்டிலிடிஸ் வலி தான் அதிகம்னு நினைச்சு விட்டுட்டதில் சனிக்கிழமை கையே தூக்க முடியாமல் போய் ஆர்தோவிடம் போய்க் கைக்கட்டு போட்டுட்டு வந்தாச்சு. எப்படி விழுந்தீங்கனு கேட்டால் இதுக்கு ஆக்ஷன் ரீப்ளே கஷ்டம். நேரில் வந்து விசாரிச்ச கேஆரெஸ். ராகவன், சிபி, சிபியோட தங்கமணி, போனில் விசாரித்த மெளலி ஆகியோருக்கு நன்றி. இது தான் இந்த வருஷ நவராத்திரிச் சிறப்புப் பதிவாயும் வச்சுக்கணும் அனைவரும்! :)))))))))) கொஞ்ச நாட்களுக்கு சிஷ்ய(கே)கோடிங்க தைரியமா உலாவலாம். தொல்லை இருக்காது. ஏற்கெனவே என்னோட கணினியின் SMPS என்னாலே எழுத முடியாதுன்னதும் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடவும் கொண்டாடியாச்சு. ஆகவே எல்லாரும் கொண்டாடலாம். :P:P:P:P
திருமதி விசாலம் அவர்கள் தான் பார்த்த சின்னமஸ்தா தேவியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறிய தத்துவம் ஓரளவு சரியாக இருந்தாலும், பூரண விளக்கம் அவருக்குக் கிடைக்கவில்லை. எனக்கு அவ்வளவாக இதெல்லாம் தெரியாது என்றாலும் படித்துப்

புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். எல்லாம் வல்ல அந்தத் தேவியின் ஒவ்வொரு

சொரூபத்திற்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் உண்டு என்று நாம் எல்லாரும் அறிவோம். அப்படி இந்த உருவத்துக்கும் ஒரு காரணம், ஒரு காரியம் இருக்கிறது. நம்மால் எளிதில்

புரிந்து கொள்ள முடியாது. எனக்கும் புரிந்து கொள்ள ஆசைதான். ஸ்ரீவித்யா உபாசகர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நான் படித்த வரைச் சின்ன மஸ்தா தேவியைப்

பற்றி எழுதுகிறேன். இதில் ஏதாவது தவறு இருந்தால் அது நான் சரியாகப் புரிந்து

கொள்ளாமையே தவிர நான் படித்தது காரணம் இல்லை. ஏதாவது தவறாக இருந்தால்

விஷயம் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் இந்த தேவியின் உருவம் பற்றி. அதுவே ஒரு கேள்விக்குறிதான். காளியை விடப்

பயங்கரமான சொரூபம் இவளுக்கு. பார்த்தாலே அருவருப்பும், பயமும் கொள்ளும் தோற்றம். பக்தர்களை ரட்சிக்கும் தாய் இந்தக் கோலம் ஏன் எடுத்தாள்? ரதியும், மன்மதனும் இணைந்திருக்கும் போது அவர்கள் மீது தன் இடக்காலை நீட்டி, வலக்காலை ம டக்கி ஆடும் நிலையில் இருக்கிறாள். நிர்வாண கோலத்தில் இருக்கும் இவள் மேனியில் கருநாகம் மாலையாகத் திகழ்கிறது. வலக்கையில் கோடரியும், இடக்கையில் துண்டிக்கப்பட்ட தன் தலையையும் ஏந்திக் கொண்டு தன் கழுத்தில் இருந்து வரும் ரத்தத்தைக் கையில்

வைத்திருக்கும் தலைப்பகுதியால் பருகும் தோற்றம். இவள் தோழியரான வர்ணனி மற்றும்

டாகினி இருவரும் இவளைப் போலவே காட்சி அளிக்கிறார்கள்.இது தோற்றம். இப்போது இதன்

அர்த்தம் என்னவென்றால்:

மனத்தை ஒருவழிப்படுத்த என்ன வழி என்று மறைமுகமாகக் கண்டத்தைக் குறிப்பாக

உணர்த்துகிறாள். கண்டத்தைத் துண்டித்துப் பார்த்தால் மனதின் ஸ்வரூபம் தெரியும் என்பார்கள்.

அறுத்தால் உடலை விட்டுப் பிராணன் போய் விடும். ஆனால் கழுத்தை அறுத்தாலும் பிரானன்

கூட்டை விட்டுப் போகாமல் இருப்பதற்குச் செய்யும் யோகம் "ஹடயோகம்" என்பார்கள். ஒரு

உண்மையான யோகி என்றால் அவருக்குத் தன் தலை, உடல் ஆகியவை செயல்படுவது நன்கு

புரியவேண்டும் என்பதை பதஞ்சலி முனிவரின் யோக சாஸ்திரம் உணர்த்துகிறது. அப்படிப்பட்ட

மனத்தைக் கண்டித்து ஏகாக்கிரக சித்தத்தில் செலுத்தும்படி செய்வதே உண்மையான யோகம்.

கண்டஸ்தானத்தில் வாயுசக்கரம் இருக்கிறது. வாயுவின் அம்சமான மனம் கண்டஸ்தானத்தில்

இருக்கிறது. அகண்ட பரிபூர்ணமான பரம்பொருளைக் கண்டமாக்கிப் பின் சின்னா

பின்னமாகக் காட்டி,(சின்னமாகவும், பின்னமாகவும்) இறைவனது மாயாசக்தியால்

இவ்வுலகம் உண்டாகிக் காத்தல், அழித்து லீலை புரிதலைக் காட்டுகிறது.

புருவங்களின் மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில் இந்தத் தேவி வேகமாகப் பிரவேசிக்கிறாள்,

அதாவது யோகிகளுக்கு. காலத்தின் உதவி இவளுக்குத் தேவையில்லை. அதிவேகமாக

எப்படி மின்சாரம் அதிவேகமாக நமக்கு ஷாக் அடித்தால் நம் உடலில் பாய்கிறதோ அதை விட

வேகமாகச் சின்னமஸ்தா தேவி கண்மூடித் திறக்கும் முன் சரீரத்தில் வியாபிக்கிறாள். நம்

சரீரத்தில் வலம் வரும் முக்கியமாக இதயத்தை வலம் வரும் 101 நாடிகளில் முக்கியமானவை இடை, பிங்களை, சுழுமுனை. முதுகெலும்பின் நடுவில் இருக்கும் சுழுமுனை தனக்கு இருபுறமும்

இருக்கும் இடை, பிங்களை நாடிகளுடன் பின்னல்போல் பின்னிக்கொண்டு மூன்றும் ஆக்ஞா

சக்கரத்தில் சேருகின்றன. இது ஒரு வகையில் திரிவேணி சங்கமம். இடை கங்கை, பிங்களை யமுனை. சுழுமுனைதான் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி. இந்தச் சுழுமுனைதான் சின்னமஸ்தா தேவி என்று வைத்துக் கொண்டால் இடை வர்ணனியாகவும், பிங்களை டாகினியாகவும்

செயல்படுகிறார்கள்.நம் சரீரத்தில் இருக்கும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியக் கிரந்திகளைத் தன் ஆயுதத்தால் அறுத்து அகில உலகிலும் உள்ள பிரம்மாண்ட சக்தியை நம் உடலில் உள்ள பிரம்மாண்டத்தில் சேர்ப்பதே இதன் தத்துவம். அதாவது மனிதனின் தலை புத்தி என்றால், இந்த புத்தி சக்திக்கு அப்பாற்பட்ட பரம்பொருள் இருக்கிறது. தலையைத் துண்டித்தல் என்பது புத்தியானது சக்தியைத் தாண்டி நிற்கிறதுக்கு அடையாளம். சகல இந்திரியங்களையும்

ஜெயித்தால்தான் புத்தியானது சக்தியைத் தாண்ட முடியும். அதனால் தான் இந்த தேவி தானும்

நிர்வாண கோலத்தில் ரதியும் மன்மதனும் இணந்திருக்கும் கோலத்தில் இருக்கும்போது

அவர்கள் மீது ஏறி நின்று ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறாள். ச்கலத்தையும் ஜெயித்துத் தான், தனது என்ற உணர்வு போனால் தான் அப்படிப்பட்ட நிலைமை அடைய முடியும் என்று ஸ்ரீவித்யா உபாசகர்கள் கூறுவார்கள்.இப்பிறவியில் அப்படி எல்லாம் நாம் இருப்போமா என நினத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் இதன் தாத்பர்யம் என்ன என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

டாக்டர் நடராஜன் என்னும் தேவி உபாசகர் (திரு நஜன், தற்சமயம் இல்லை) ஸ்ரீவித்யையைப்

பூரணமாகக் கற்றுக் கையாண்டவர் என்றும் அவர் பிரசுரித்துள்ள "தசமஹாவித்யா"

என்னும் நூலில் இந்தத் தேவியைப் பற்றி இன்னும் அறிய முடியும்
என்றும் கூறுகிறார்கள்.

சனிக்கிழமை கூறியது சின்னமஸ்தா தேவியைப் பற்றியது. படமும் கிடைக்கவில்லை, போடவும் யோசனை, கொஞ்சம் பயங்கரமான தோற்றத்துடன் கூடியது படம். ஞாயிறு அன்றைக்கு உரியவள் சின்னமஸ்தா தேவி. ஏழாம் நாள் ஆன திங்கள் அன்று தூமாவதி என்னும் ஜேஷ்டா தேவி ஆவாள். இவளைப் பற்றியும் எழுத நிறைய இருந்தாலும் தற்சமயம் எழுத முடியவில்லை,. இவள் படமும் இன்னும் தேடமுடியலை. தூமாவதியானவள் சக்தி தன் உடலைத் தியாகம் செய்த குண்டத்தில் இருந்து அவளின் உடம்பு எரிந்தபோது தோன்றிய புகையில் இருந்து தோன்றியவள் ஆகவே அவளின் சக்தியும் அளவிட முடியாத ஒன்றே. பின்னர் எழுதுகின்றேன் இருவரையும் பற்றியும் அந்தகாசுரனின் கதையும். தற்சமயம் கை சரியில்லாத காரணத்தால் தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏற்கெனவே போட்டு வைத்த பதிவுகளே வெளிவரும்.

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர் -8

14. யா தேவீ ஸர்வ பூதேஷு காந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

காந்தி என்றால் ஒளி, வெளிச்சம் என்றும் பொருள் வரும். தனிப்பட்ட முறையில் அலங்கரித்துக் கொள்ளுவதையும் குறிக்கும். அந்த அலங்கரிப்பினால் ஏற்படும் தனிப்பட்ட கவரும் தன்மையையும் குறிக்கும். இங்கே ஒளி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி இல்லையேல் உலகில்லை அல்லவா?? பகலில் சூரிய ஒளி தேவைப்படுகின்றது. இரவில் மாற்றாக சந்திரன் ஒளி குளுமையாகக் கிடைக்கின்றது. வெறும் இருட்டு மட்டுமே இருந்தால் என்ன தெரியும்?? எதுவும் தெரியாது, புரியாது. நம் அனைவருக்கும் இவ்வாறு ஒளியின் அவசியம் தேவைப்படுகின்றது. அதை உணருவது நம் கண்களே அல்லவா?? நம் அனைவருக்கும் அந்தக் கண்களுக்கு ஒளியைத் தரும் தேவியாக உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

15. யா தேவீ ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

உயிர் வாழ அனைவருக்கும் உணவு தேவை, அந்த உணவை எல்லாராலுமா உற்பத்தி செய்ய முடியும்? யாரோ உற்பத்தி செய்கின்றார்கள். நாம் விலை கொடுத்து வாங்குகின்றோம். அதற்குப் பணம் தேவை அல்லவா?? பணம் இல்லை எனில் எதையும் வாங்க முடியாது. தேவைக்குத் தக்க பணம் இல்லாமால் ஒருவராலும் இருக்க முடியாது. நாம் ஆசைப்பட்டு சேர்த்து வைக்கும் பணம் இல்லை இது,. தேவைக்கான பணமே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி தேவி தான். அந்த லக்ஷ்மி தேவி வடிவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

16. யா தேவீ ஸர்வ பூதேஷூ வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
பொதுவாய் சொத்துக் குவிப்பையும், மேன்மேலும் வட்டி வாங்கிச் சேர்ப்பதையுமே குறித்தாலும், வளர்ச்சியைக் குறிக்கும் இந்த வ்ருத்தி என்னும் சொல்லானது இங்கேயும் நல் வளர்ச்சியை மட்டுமே குறிக்கின்றது. செழிப்பாக இருக்கும் மனிதன், குடும்பத்தையும், குடும்பம் சமூகத்தையும், சமூகம் நகரத்தையும் நகரம், மாவட்டங்களையும், மாவட்டங்கள் மாநிலங்களையும், மாநிலங்கள் நாட்டையும் எவ்வாறு செழிப்பாக்குகின்றதோ, அந்தத் தனி மனிதனின் செழிப்பு, வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் தேவை. அதைக் கொடுப்பவள் தேவியே. இங்கே வ்ருத்தி வடிவில் உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

Monday, October 06, 2008

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர்

11. யா தேவீ ஸர்வ பூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
லஜ்ஜா= என்றால் வெட்கம், நாணம் என்று அர்த்தங்கள் வருகின்றன. என்றாலும் இந்த இடத்தில் இதற்கு அடக்கம், பணிவு என்பது பொருந்துமோனு நினைக்கிறேன். ஆங்கிலத்தில் modesty?? என்று சொல்லலாமோ?? நாம் செய்யும் தவறுகளுக்கு வெட்கப் படுவதோடு அல்லாமல், நாம் தான் அனைத்தும் செய்தோம், நம்மால் தான் எல்லாம் என்ற நினைப்பும் வரக் கூடாது. அடக்கமாய், பணிவாய், விநயமாய் இருக்கவேண்டும். அத்தகையதொரு கல்வியே தேவை இல்லையா?? கல்வியால் பெறக்கூடிய இந்த லஜ்ஜை என்னும் உணர்வாய் எந்தத் தேவி அனைவரிடத்திலும் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

12. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம் அனைவரிடத்திலும் ஷாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.

இங்கே ஷாந்தி என்பது மெளனம், பொறுமை, பகை தீர்ந்து அமைதி அடைதல் என்ற அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர் நம்மிடம் கோபமாய் இருந்தாலோ மன வேறுபாடுகள் இருந்தாலோ அமைதியா இரு என்று சொல்கின்றோம் அல்லவா?? அந்த அமைதி தான் இங்கே. மெளனமும் ஒரு மொழியே. மெளனமாய் இருந்தால் அதைவிடச் சிறந்ததொரு பேச்சு வேறு கிடையாது. அனைத்தையும் உணர்த்தும் மெளனம். மெளனம் கடைப்பிடிக்கப் பட்டால் அங்கே ஷாந்தி தானாகவே வந்து சேரும். தேவையான சமயங்களில் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய மெளனம், அமைதி என்ற உருவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

13. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம்மிடம் சிரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.

ஷ்ரத்தா என்பது இங்கே வெறும் மத சடங்குகளில் நம்பிக்கை என்று மட்டுமே கொள்ளக் கூடாது. ஆழ்ந்த நம்பிக்கையையும் குறிக்கும். தீவிரமான கவனத்தையும் குறிக்கும். குருவின் உபதேசங்களில் நம்பிக்கை, குருவின் ஒவ்வொரு ஆணையும் நமக்கு நல்லதே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை, நாம் படிக்கும் பாடங்களில் உள்ளவைகளில் நம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கும் கவனம், அந்தக் காரியம் நன்மையாய் முடியும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புகளில் நேர்மறைப்பார்வை என்று எடுத்துக் கொண்டு, தேவி இவை அனைத்திலும் அந்த ஆழ்ந்த நம்பிக்கையாக உறைகின்றாளே, அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

Sunday, October 05, 2008

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர் - 6

7. யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப் படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப் படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப் படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8. யா தேவி ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை, அல்லது வேட்கை வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். த்ருஷ்ணா என்றால் பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள் பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும் பேராசை மட்டுமே. ஆகவே தேவியை அடைய நினைக்கும் பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளாகவே இங்கே வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

9. யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும். தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அது வரை பொறுத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

10. யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.

Saturday, October 04, 2008

அழகு தெய்வம்- நவராத்திரி நாயகியர் - 5


4. யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
இங்கே தூங்குவதைக் குறித்துக் கூடத் தேவியா என எண்ணினால் ஆம், தேவியே தான். அநேகமாய் நித்திராதேவி ஆக்கிரமித்துக் கொண்டாள் என பல எழுத்தாளர்களும் தூங்குவதைக் குறிப்பிட்டு எழுதுவதைக் கண்டிருக்கின்றோம் அல்லவா?? அந்த நித்திரையும் சாமானியமாய் மனிதருக்கு வந்து விடுகின்றதா என்ன??? எல்லாருமேவா நன்றாய்த் தூங்கி விழிக்கின்றார்கள்?? இல்லையே! பலருக்குத் தூக்கமே வருவதில்லை அல்லவா?? அப்படி நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக உறையும் தேவியை தினமும் இரவில் நினைத்து நமஸ்கரித்து அனைத்தையும் அவள் பாதாரவிந்தங்களில் அர்ப்பணித்துப் படுத்தால் தேவி தூக்க வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5. யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம!

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும், ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும் போதுமா?? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருக்க வேண்டும் அல்லவா? பஞ்ச பட்ச பரமான்னமாகவே இருந்தாலும் பசி இல்லை எனில் சாப்பிட மாட்டோம். இந்த உலகில் எதுவும் போதும் என்றே நாம் சொல்ல மாட்டோம். உடையா, இன்னும் வேண்டும். ஒரு நேரத்துக்கு நாம் உடுத்துவது என்னமோ ஒரு உடைதான். நகையா இன்னும் வேண்டும், வீடா, இன்னும் பெரியதாய், பணம், காசா, எத்தனை இருந்தாலும் போதலை. ஆனால் ஒருவரைக் கூப்பிட்டு சாப்பாடு மட்டும் போட்டுவிட்டால் அவர் இன்னும் வேண்டும் என்று சொல்ல மாட்டார். வயிறு நிறைந்துவிட்டது போதும் என்றே சொல்லுவார். ஆகவே போதும் என மனிதரைச் சொல்ல வைக்கும் அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி இருத்தலே நல்லது. அந்தப் பசி வடிவான தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6. யா தேவி ஸர்வ பூதேஷூ ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில் பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

இன்றைய சேர்க்கை: இன்று வெள்ளிக்கிழமை தோன்றும் தேவியானவள் பைரவி. இவளைக் கால ராத்திரி என்றும் அழைக்கலாம். இவளின் தோற்றத்தைப் பற்றிய ஒரு கதை அந்தகாசுரனுடன் சம்மந்தப் பட்டது உள்ளது. இவளே அனைத்து உயிர்களையும் படைக்கின்றாள். காத்து ரட்சிக்கின்றாள். உயிர்களின் கிரியா சக்தியாகச் செயல்படுகின்றாள் தனது தவத்தினால். இவளின் இடைவிடாத தவ சக்தியானது நமது மூலாதாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே எழும்பி சஹஸ்ராரத்தைச் சென்றடைந்து அங்கிருந்து உடலின் ஒவ்வொரு அணுக்களுக்கும் ஜீவசக்தியாகப் பாய்ந்து, திரும்ப மூலாதாரத்தை அடைகின்றது. மீண்டும் அதே திரும்பவும் நடைபெறுகின்றது. இது இடைவிடாமல் திரும்பத் திரும்ப எந்தவிதமான ஓய்வும் இல்லாமல் நடைபெறும் ஒன்று. இந்த சக்தி இல்லையேல் நாம் இல்லை. இவள் தோற்றத்தைக் குறித்த கதை தனியாக வரும்.

இன்றைய நைவேத்தியம்:பச்சைப்பயறுச் சுண்டல்.
யாரும் வரதில்லைங்கறதாலே சுண்டல் மிஞ்சிப் போயிடும். இன்னிக்காவது யாராவது வாங்க. :P

Friday, October 03, 2008

இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு!

இந்த புவனேஸ்வரியைப் பற்றி எழுதப் போகும்போது திடீரென வானம் கறுத்து இடி, மின்னல் ஏற்பட்டது. மின்னல் என்றால் நான் உட்கார்ந்து எழுதுவது அறைக்குள்ளே. அந்த அறைக்குள்ளே திடீரென ஒரு பேரொளி பாய்ந்தது. அதை நான் நன்கு உணரும் முன்னே அண்ட, சராசரங்களும் ஆடுவது போன்ற ஒரு பெரிய ஓசையுடன் இடி இடித்தது. அதை இடி என்றே உணர முடியவில்லை. அப்போது தான் ஓசையில் இருந்து அம்பிகை தோன்றுவதைப் பட்டு கேட்டு விட்டுக் கணினியில் உட்கார்ந்திருக்கின்றேன் எழுத. உடனேயே ஒளியும், ஓசையுமாகக் கண் முன்னே தோற்றம் ஏற்பட்டுச் சிறிது நேரம் வரைக்கும் எதுவும் புரியவில்லை. காணாதது கண்டாற்போன்றதொரு நினப்பு. என்ன நடந்தது என்றும் உணரமுடியவில்லை. என்னை நான் மீட்டுக் கொள்ளவும் நேரம் பிடித்தது. உடனேயே கணினியை மூடி வைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டேன். பின்னர் இடியும், மின்னலும் உண்மைதான் என்று தெரிந்தாலும் எனக்கு ஏற்பட்ட அபூர்வ உணர்வு புதுமையாகவே இருந்தது.

ஹ்ரீம் என்ற புவனேஸ்வரியின் பீஜமானது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த ஹ்ரீமில் இருந்தே தோன்றியவர்கள் மற்ற தேவியர்கள் ஆன மஹா காலீ, மஹா லக்ஷ்மீ, மஹா சரஸ்வதி ஆகியோர் . விதை விதைத்தால் அதிலிருந்து முதலில் முளை, துளிர், இலை, கிளை, அரும்பு, பூக்கள், காய்கள், கனிகள் என்று தோன்றுகிறாப் போல் அம்பிகையும் தோன்றுகின்றாள் என்பதை நன்கு புரிய வைத்தது அந்த இடியும், மின்னலும். இந்த தேவியரின் மந்திர வடிவங்களில் முக்கியமானவை நவாக்ஷரியும், ஸப்த ஸதீ மாலா மந்திரமும். நவாக்ஷரி மந்திர உபதேசம் பெற்றவர்கள் அங்கமாய் ஸப்தஸதீயும், ஸப்த ஸதீ உபதேசம் பெற்றவர்களின் அங்கமாய் நவாக்ஷரியும் விளங்குகின்றது. மேலும் சிதம்பர ரகசியத்தில் பரமசிவன், பார்வதிக்கு இந்த ஸப்தசதீயின் மகிமை பற்றிக் கூறுகின்றார்.

இந்த ஸப்தசதியைப் படிப்பவர்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும். பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் ஏற்படும் காரணமற்ற அச்சம் போன்றவை விலகும். தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுக் காலி, காளி என்னும் பெயருடன் தோன்றிய பரதேவதை காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும், சரஸ்வதியாகவும் தோன்றினாள். மூன்று வடிவு கொண்ட அவளின் உருவை சின்மயம் என்று சொல்லுவதுண்டு. திரிபுரா என்ற பெயரில் அவளை அழைப்பார்கள். இந்த தேவி மகாத்மியம் மார்க்கண்டேயபுராணத்தில் எழுநூறு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் எவ்வாறு எழுநூறு ஸ்லோகங்களில் பகவத்கீதை அமைந்துள்ளதோ அதே போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திர வடிவங்களில் அமைந்துள்ள இந்த தேவி மகாத்மியத்தைப் படிப்பவர்கள் , ஒரே தடவையில் பாராயணம் செய்ய அவகாசம் இல்லை என்றாலும் மத்திம சரித்திரத்தை மட்டும் படிக்கலாம். அல்லது நவாஹ பாராயாணம், சப்தாஹ பாராயணம் என்ற முறையிலும் படிக்கலாம். சில சரித்திரங்கள் அரை, குறையாகப் படிக்கக் கூடாது, படிக்க முடியாது என்ற நியமங்கள் உண்டு. அத்தகையதொரு எந்தவிதமான நியமும் இதற்குக் கிடையாது.

பரமேசுவரியைச் சரணடைந்து அவளின் பாதாரவிந்தங்களில் ஆராதனைகள் பலவும் செய்து வந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சாதனைகளாலும், வழிபாடுகளாலும் பவதாரிணி என்ற உருவில் அன்னை வழிபடப்பட்டு அவள் பெருமை எடுத்து உரைக்கப் பட்டிருக்கின்றது. மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டான அவரின் மொழியமுதத்தைப் படித்தாலே அன்னையின் ஆற்றல்கள் அளப்பரியது என்பது நன்கு விளங்கும். யுக, யுகமாய் விளையும் தீமைகள் அனைத்தையும் அவளின் கடைக்கண் பார்வையாலேயே பொசுக்கி ரட்சிக்கின்றாள். தீயவற்றைப் பொசுக்கும் பேரொளியாக வந்தவளே அந்த துர்க்கா தேவி. மகா காலி, லக்ஷ்மி, சரஸ்வதி என்று சொல்லலாம். ராமகிருஷ்ணருக்குப் பின்னர் பெரும் சக்தி உபாசகரும், இன்றளவும் கவிதை உலகில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாத அளவுக்குக் கவிதைகள் எழுதியவரும் ஆன நம் பாரதியும் ஒரு மகத்தான சான்று.

சக்தியைப் பற்றி எழுதிவிட்டு பாரதியைச் சொல்லாமல் இருக்க முடியுமா?? மிகச் சிறந்த சக்தி உபாசகர் ஆன அவர் தன் பெயரையே சக்தி தாசர் என்றும் வைத்துக் கொண்டார். பராசக்தியை அக்னிக்குஞ்சு வடிவில் காண்டு அது தன் மனதில் உள்ள மாசுக்களைப் பொசுக்கியதையும் உள்ளத்தில் பரவிய பேரொளியையும் தன் அக்னிக்குஞ்சு பாடல் மூலம் இரண்டே வரிகளில் காட்டுகின்றார். மேலும் தேவி மகாத்மியத்தில் தேவியின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்களுக்குச் சமானமாக அவரின் சக்திப் பாடல்கள் பலவும் கூறலாம். காளியானவள் யாதுமாகி அனைவரிடத்திலும் நின்றதைக் குறிக்கும் பாடல் கீழே
.
“யாதுமாகி நின்றாய் காளி,
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் காளி
தெய்வ லீலையன்றோ

பூதமைந்தும் ஆனாய் காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய்

\இன்பமாகி விட்டாய் காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்
பிறிது நானுமுண்டோ?

அன்பு தந்துவிட்டாய் காளி- காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி
துயரழித்துவிட்டாய்.”
சரியோ, தப்போ, தெரியாது என் மனசில் தோன்றியதை எழுதி இருக்கின்றேன்.

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர் - 4

இப்போ அடுத்து நமஸ்கார ஸ்லோகங்கள்: இதைத் தினமும் காலை, மாலை இருவேளையும் கூடச் சொல்லலாம். நவராத்திரிக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டாம்.
1. யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஷப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த யோக மாயா என்பவளே காலி, காளி எனப்படுவாள். மாரி என்றும் சொல்லப் படுவாள். கருமாரி என்பவளும் இவளே. கருவிலே அந்த ஆதிநாராயணன் குழந்தையாக தேவகியின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவன், மாறி, அல்லது மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு விஷ்ணுமாயா வந்து சேருகின்றாள். ஆகவே கருமாறி வந்ததால் கருமாரி என்று சொல்லலாமோ??? இவள் கம்சனின் பிடிக்கும் அகப்படாமல் தப்பித்துச் செல்கின்றாள். பெண் குழந்தையாகிய இவளைக் கொல்ல இரு கால்களையும் பிடித்துக் கொண்டு கம்சன் வாளை உருவுகின்றான். என்ன ஆச்சரியம்?? அதோ! தேவி! பூர்ண அலங்கார பூஷிதையாக கம்சனின் தோளுக்கு மேலே, மேலே, மேலே, மேலே தோன்றுகின்றாள் அன்றோ!! கம்சனின் வாழ்வு முடியப் போகின்றது என எச்சரிக்கையும் கொடுத்து, அவன் திருந்த ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றாள் அல்லவா?? அந்தக் கருணைத் தேவிக்கு நமஸ்காரங்கள்.

2. யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன, காட்டு மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச்சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக இருக்கின்றாளோ அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த உலகம் இயங்க சக்தி தேவைப்படுகின்றது. விளக்கு எரியவும், மழை பொழியவும், காற்று வீசவும், வெயில் அடிக்கவும், நிழல் தோன்றவும் என அனைத்திற்கும் சக்தி தேவைப்படுகின்றது. இப்படி அனைத்துச் சக்திகளிலும் உறைந்திருப்பவள் அந்த ஆதிபராசக்தியானவளே. அவளுக்கு நமஸ்காரங்கள்.

3. யாதேவி ஸர்வ பூதேஷு புத்திரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். இங்கே புத்தி எனப்படுவது வெறுமே கற்றறியும் திறமையை மட்டுமே சுட்டுவது அல்ல. பார்க்க, கேட்க, நினைக்க, தெளிய, அறிய, சிந்திக்க, ஆலோசிக்க, பகுத்தறிந்து புரிந்து கொள்ள என அனைத்துக்கும் தேவைப்படுவது புத்தி என்று கொள்ள வேண்டும். இது சரியாக இல்லை எனில் ஏதாவது ஒரு குறை கட்டாயமாய் வாழ்க்கையில் ஏற்படுகின்றது. ஆகவே நம் தேவைகள் சகலத்துக்கும் சரியான புத்தியைக் கொடுப்பவள் அந்த அம்பிகையே!அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.


இப்போதைய சேர்க்கை: நேற்று வியாழன் அக்டோபர் 2-ம் தேதிய நிகழ்ச்சி:

தசமஹா சக்தியின் 4-வது சக்தியான புவனேஸ்வரியைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு கொடுக்கப் பட்டது. சகல உலகங்களயும் ஆளும் இவளின் சிந்தாமணி க்ருஹம் அமைந்திருக்கும் மணித்வீபம் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. மும்மூர்த்திகளும் இவளின் அருள் பெற்றே தங்கள் முத்தொழிலையும் தொடங்குகின்றனர். எல்லையற்று விரிந்து பரந்திருக்கும் இந்த புவனத்தைப் போல் விரிந்து பரந்த இவளின் கருணையைச் சொல்லவும் முடியுமோ?? "ஹ்ரீம்" எனப்படும் இவளுக்கு உரிய மந்திரத்திலே அடங்கி இருக்கும் ஐந்து மூர்த்திகள் விநாயகர், விஷ்ணு, சூரியன், சிவன், சக்தி ஆகியோர் ஆவார்கள். நாதத்திலே தோன்றி, பிந்துவிலே பரிணமித்து சகல ஜீவராசிகளிடத்திலும் கலைகளாக, உயிர்களாக, ஜீவ சக்திகளாகப் பரிணமித்து அங்கு, இங்கு எனாதபடி அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக, அநாத ரட்சகியான அந்த புவனேஸ்வரியைப் போற்றி வணங்குவோம்.இன்றைய நைவேத்தியம் கடலைப்பருப்புச் சுண்டல். வெள்ளிக்கிழமை அம்பாளுக்குக் கடலைப்பருப்புச் சுண்டலோ, அல்லது புட்டோ நைவேத்தியம் செய்யலாம். சீக்கிரமா வாங்க, இடியும், மின்னலுமாக இருக்கின்றாள் அன்னை பராசக்தி!, பாரதியின் ஊழிக்கூத்தாடும் காளியைப் போல் மழை எப்போ வேணாலும் கொட்டும் போல் இருக்கு.

Thursday, October 02, 2008

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர்- 3

4.துர்க்காயை துர்க்கபாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை
க்யாத்யை ததைவ க்ருஷ்ணாயை தூம்ராயை ஸததம் நம:

துன்பங்களில் இருந்து விடுவிப்பவளே துர்கா. அவளே நம்மை இந்தத் துன்பத்தில் இருந்தும் விடுவிக்க வேண்டும். சகலத்தையும் ஆக்குபவளும் அவளே, அழிப்பவளும் அவளே. அனைத்திலும் பொருள் வடிவினள் அவளே. அனைத்திலும் உறைந்திருக்கும் ஜீவ சக்தியும் அவளே. அவளே அனைத்துக்கும் காரிய காரணமும் ஆகின்றாள். க்யாத்யை= கீர்த்தி வடிவானவளும் அவளே. க்ருஷ்ணாயை= கரிய நிறத்தினளான காளியும் அவளே. தூம்ராயை= புகை வடிவினளும் அவளே. இப்படி அனைத்திலு நிறைந்திருக்கும் தேவிக்கு என்றென்றும் நமஸ்காரங்கள்.

5. அதிசெளம்யாதி-ரெளத்ராயை நதாஸ்-தஸ்யை நமோ நம:
நமோ ஜகத்ப்ரதிஷ்ட்டாயை தேவ்யை க்ருத்யை நமோ நம:

அதி செளம்யாதி= மிக மிக இனிமையான வடிவான தேவியைக் குறிக்கின்றது. அடுத்து உடனே ரெளத்ராயை= பயங்கர வடிவினளைக் குறிக்கின்றது. நம்ம அம்மா நம்ம கிட்டே ஒரு சமயம் கொஞ்சுகின்றாள். மறு சமயம் கண்டிக்கின்றாள். சில சமயங்கள் தண்டனை மிகக் கடுமையாகவும் இருக்கின்றது அல்லவா?? அதே தான் இங்கேயும். இப்படி மாறி மாறித் தோற்றமளித்து நம்மைக் காக்கும் அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள்.

ஜகத்ப்ரதிஷ்ட்டாயை= அகில உலகுக்கும் ஆதார சுருதி அம்பிகையே தான். அந்த ஆதார சக்தியாக, சுருதியாக விளங்குபவளுக்கு நமஸ்காரங்கள். க்ருத்யை= அனைத்திலும் காரியமாக, இயங்கும் சக்தியாக விளங்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.

இப்போதைய சேர்க்கை:
இந்த பொதிகை நிகழ்ச்சி தினமும் காலையிலும், 6-45 மணிக்கு இந்திய நேரப்படி மறு ஒளிபரப்பு செய்யப் படுகின்றது. இது நேற்று புதன்கிழமை 1-ம் தேதி சொன்னது. மூன்றாம் நாள் சக்தியான மகா திரிபுர சுந்தரியைப் பற்றியது. இவளைக் காமாட்சி என்றும் ஸ்ரீலலிதை என்றும் அழைக்கலாம். மனிதர்களின் காமங்களை ஆட்சி புரிந்து, அந்தக் காமங்களில் இருந்து அவர்களை விடுவித்து முக்தியை அருளுபவள் இவளே. இங்கே காமம் என்ற சொல் ஆசை, விருப்பம் என்ற பொருளிலே வருகின்றது. இந்த உலகின் அனைத்து சிருஷ்டிகளுக்கும் இவளே காரணகர்த்தாவாய்ச் சொல்லப்படுகின்றது. அனைத்து உயிர்களிடத்திலும் நிறைந்து இருக்கும் அனைத்து ஆசைகளுக்கும் இவளே காரணமாய் அமைவதோட் அந்த ஆசைகளில் இருந்து அனைவரையும் விடுவிப்பவளும் இவளே.இவளின் திவ்ய மங்கள சொரூபம் காணக்கிடைக்காத ஒன்றாய் வர்ணிக்கப் படுகின்றது. பேரழகுப் பெட்டகம் ஆன இவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இவளைக் குறித்தே அழகு அலைகள் என்ற ஸ்தோத்திரங்களை ஆதிசங்கரர் பாடி இருக்கின்றார் என்பது குறிப்பிடத் தக்கது. ஸ்ரீபுரத்தில் நான்கு மூர்த்திகளும் காலாக, சதாசிவனே பலகையாகக் கொண்டு, நான்கு வேதங்களையும் சங்கிலியாகக் கொண்டு காமேஸ்வரனும், காமேஸ்வரியும் அமர்ந்து ஊஞ்சலில் ஆடும் கோலத்தைப் பாடும் ஊஞ்சல் பாட்டு இன்றளவும் திருமணங்களில் பாடப் படுவதாயும் சொல்கின்றார். மூன்று உலகங்களையும் ஆளும் இவளின் கீர்த்தியை அனுபவங்களால் மட்டுமே உணர முடியும்.இன்றைய நைவேத்தியம் பாசிப்பருப்புச் சுண்டல். நேத்திக்குச் சீக்கிரமாத் தீர்ந்து போச்சு, அதனால் அனைவரும் சீக்கிரமாய் வந்து எடுத்துக்குங்க! :)))

Wednesday, October 01, 2008

அழகு தெய்வம் - நவராத்திரி நாயகியர் - 2

இந்த நவராத்திரியில் பலரும் தேவி மஹாத்மியம் படிப்பது வழக்கம். இங்கே நாம் கொஞ்சமே கொஞ்சமாய் அதில் ஒரு சிறு பகுதியைப் பார்க்கப் போகின்றோம். இது தேவி மஹாத்மியத்தில் அத உத்தம சரித்திரத்திற்குப் பின்னர் வரும் ஐந்தாம் அத்தியாயத்தில் இருந்து எடுக்கப் பட்டது. சில முக்கிய ஸ்லோகங்களையும், அதற்கான அர்த்தங்களும் மட்டுமே அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லப் படும்.

சும்ப, நிசும்பர்களால் அவதிப்பட்ட தேவர்கள் ஆதி பராசக்தியை நினைத்துத் தொழுகின்றனர். கஷ்டப் படும் வேளையின் தன் உதவி கிட்டும் எனத் தேவி அளித்திருந்த வாக்குறுதியை நினைவு கொண்டனர். எவராலும் வெல்ல முடியாத அந்தத் தேவி ஒருவளால் மட்டுமே நாம் காப்பாற்றப் படுவோம் என்ற உண்மையை நன்குணர்ந்து தேவியைப் பல்வேறு துதிகளால் துதிக்க ஆரம்பித்தனர்.

1.“நமோ தேவ்யை மஹா தேவ்யை சிவாயை ஸததம் நம:
நம:ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதாஸ்ம தாம்”

தேவிக்கு நமஸ்காரங்கள், மஹா தேவிக்கு நமஸ்காரங்கள், சிவ வடிவினள் ஆனவளுக்கு சுபமானவளுக்கு என்றும் நமஸ்காரம். ப்ரக்ருதி வடிவானவளும், பத்ரை எனப்படும் நியதிகளின் வடிவானவளும் ஆன அந்த தேவியை நமஸ்கரிக்கின்றோம்.

இங்கே பத்ரை எனப்படுபவள் பசுமாட்டை மட்டுமில்லாமல் மாதங்களில் வரும் வளர்பிறை, தேய்பிறைத் திதிகள் ஆன த்விதியை, ஸப்தமி, த்வாதசி போன்ற திதிகளையும், பத்ரா நதியையும் குறிப்பிடுகின்றது. ஆகவே அம்பிகையை ஒட்டியே இயற்கையும் அமைந்துள்ளது என்பதை ப்ரக்ருதியானவளே என்ற சொல்லில் இருந்தும் தெரிந்து கொள்கின்றோம்.

2.ரெளத்ராயை நமோ நித்யாயை கெள்ர்யை தாத்ர்யை நமோ நம:
ஜ்யோத்ஸ்ணாயை சேந்துரூபிண்யை ஸுகாயை ஸததம் நம:


2. ப்ரக்ருதி என்னும் இயற்கை வடிவான இந்த அன்னை ஒரு சமயம் பயங்கர உரு எடுத்தும் வருகின்றாள். அந்த பயங்கர வடிவினளையும் நமஸ்கரிக்கின்றோம். ரெளத்ராயை நமோ, இந்த ப்ரக்ருதி அழிந்தாலும் அம்பிகை நித்திய ஸ்வரூபிணி. என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவள். அந்த நித்திய கல்யாணிக்கு நமஸ்காரங்கள். நித்யாயை நம:

கெளர்யை நம: கெளரி என்றால் வெண்மை கலந்த மஞ்சள் நிறமுள்ள பெண் என்ற பொருளில் வரும். இந்த பூமியும் அப்படியே. பச்சை, வெண்மை, மஞ்சள் கலந்தே காணப்படுகின்றது. பூமி என்ற பொருளும் வரும். பேச்சு என்ற பொருளும் வரும். அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் பூமியாக மட்டுமின்றி அனைவருக்கும் வார்த்தையாகவும், பேச்சாகவும் வெளிப்படுகின்றாள் அன்னை. நம் வாக்கினிலே சரஸ்வதி உறைகின்றாள் எனப் புரிந்து கொண்டோமானால் அமங்கலமான பேச்சுக்களே எழாதல்லவா?? எல்லாவற்றிற்கும் மேல் இமவான் புத்திரி கெளரி, பருவமடையான எட்டு வயதே ஆன கன்னிப் பெண்ணான இவளே அந்த ஈசனைக் குறித்துத் தவம் இருந்தாள். அவளை நமஸ்கரிக்கின்றோம்.

3.கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நம:
நைர்ருத்யை பூப்ருதாம் லக்ஷ்ம்யை சர்வாண்யை தே நமோ நம:””


கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்த்யை ஸித்த்யை குர்மோ நமோ நம: நின்னைச் சரணடைந்தேன் என்கின்றார் பாரதியார். அது போல் தேவியைச் சரணடைந்தவர்க்குச் சகல கல்யாணங்களும், சகல நன்மைகளும், சகல முன்னேற்றங்களும் அளிப்பவள் ஆன அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள். அரசருக்கு வெற்றியை ஈட்டித் தரும் விஜயலட்சுமியும் அவளே, முறையற்ற போர்களில் தோல்வியைத் தருபவளும் அவளே. இப்படி அரசரின் நெறியைக் காக்கும் அந்த சிவபத்தினிக்கு மீண்டும் நமஸ்காரங்கள்.


இன்றைய சேர்க்கை:
இன்று பொதிகையில் (செப்டம்பர் 30 செவ்வாய்) வந்தது "தாரா" தேவியைப் பற்றிய கருத்து. தசமஹா சக்தியில் 7-வது சக்தியாகக் கொண்டாடப் படும் இவள் ஒலி வடிவினள். வாக்கு தேவியானவள். தாரா என்றால் நட்சத்திரம், கண்ணின் மணி என்ற பொருள் வந்தாலும் இந்த இடத்தில் அவள் சம்சார சாகரத்தைக் கடக்க உதவுகின்றவள் என்ற பொருளில் கொள்ள வேண்டும். தாரா வான இவள் உதவி இல்லாமல் பிறவிக்கடலைக் கடக்க முடியாது. உலகில் தோன்றிய முதல் ஒலி ஸ்வரூபம் ஆன இவள் தோன்றியதும் நீரிலேயே. தாமரைப்பூவில் மலர்ந்த இவளின் தோற்றமும் காணக் கிடைக்காத சொரூபமே. இவளைத் தொழுதால், வணங்கி வழிபட்டால் கல்வி, கேள்வி, ஞானம் போன்றவற்றை அமுத தாரையாகப் பொழிவாள். ஸ்ரீராமருக்கு இவளை வழிபட்டதன் மூலமே சகலமும் கிடைக்கப் பெற்றதாகவும் சொல்கின்றார்கள். சம்சாரம் என்னும் கடலைக் கடக்க உதவும் இவள் நீல சரஸ்வதி எனவும் அழைக்கப் படும் இவள் விண்ணின் நீலத்திலும், பயிர், பச்சைகளின் கரும்பச்சை கலந்த நீலத்திலும், கடல் நீரின் நீலத்திலும் என சகலத்திலும் உறைந்து இருப்பதாய்க் கருதப் படுகின்றாள். இந்த தாரா தேவியே அக்ஷரத்தின் ஆரம்பம். இவள் இல்லையே வாக்கு இல்லை. நாம் பேசுவது என்பது இல்லை.
படம் சரியாகக் கிடைக்கவில்லை. தாரா தேவி நாகாபரணங்கள் பூண்டு, யானைத் தோலை ஆடையாகத் தரித்து எலும்பும், நாகமும் மாலையாக அணிந்து நான்கு தெற்றிப் பற்களுடன் காட்சி அளிக்கின்றாள். ஸ்ரீராமரின் சக்தியாகவே வர்ணிக்கப்படும் இவள் தோன்றிய அந்தப் பிரணவத்தையும் தாரகா பிரணவம் என்றே சொல்லப்படுகின்றது. காஷ்மீரத்தில் உள்ள மக்கள் பிறந்து மூன்று நாட்கள் ஆன குழந்தையின் நாக்கில் இந்தத் தாரா தேவியின் காயத்ரியை தர்ப்பையைத் தேனில் நனைத்து எழுதுவார்கள் என்றும், நாலந்தாவில் பல்கலைக்கழகம் இருந்த சமயம் அங்கே பெருமளவில் வழிபட்டு வந்ததாய் அங்கே கிடைக்கும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் சொல்லுவதாயும் தெரிய வருகின்றது.

ஒவ்வொரு நாளும் தீட்சிதரின் நவாவர்ணக் கீர்த்தனைகள் தவிர, அபிராமி அந்தாதியும், ஊத்துக்காடு கவிஞரின் காமாட்சி நவாவர்ணக் கீர்த்தனைகளும் பாடப் படுகின்றது இந்த நிகழ்ச்சியில். ஆனால் அந்த அந்த நாட்களுக்கு உரிய தேவியரை கிரமப்படி சொல்லாமல் ஏன் முன், பின்னாகச் சொல்கின்றனர் என்று புரியவில்லை. இதுவும் பொதிகையின் முத்திரையோ என்னமோ? என்றாலும் நிகழ்ச்சி ரசிக்கும்படியாக இருப்பதற்குப் பாராட்டுகள்..இன்றைய நைவேத்தியம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல். படம் வழக்கம்போல் சுட்டுத் தான் போட்டிருக்கேன்.