இன்னிக்கு வீடு நிறைய விருந்தினர்கள். ஒரு குட்டிப் பயலும் வந்தான். வீட்டில் வாங்கி வைச்சிருந்த சின்ன வெங்காயத்தை எல்லாம் வாரி இறைச்சான். ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீட்டில் வைச்ச சாமான் வைச்ச இடத்தில் இருந்தால் அதில் என்ன அழகு இருக்கு! கலையணும் இல்லையா? அதுவும் சின்னக் கையால் கலைவதுன்னா! அதுவே ஒரு கவிதை!
அப்புறமா இப்போச் சொல்ல வந்தது ஒரு முக்கியமான விஷயம். ஹிஹிஹி! நேத்திக்கு ராத்திரிக்கு என்ன செய்யறதுனு மண்டை காய்ஞ்சது. ஏற்கெனவே குளிர்சாதனப் பெட்டியில் வெந்தய தோசை மாவு இருந்தது தான். ஆனால் அது இரண்டு நாட்களாகச் சாப்பிட்டாச்சு. ரவா இட்லி பண்ணலாமானு பார்த்தால் அதுக்குத் தோதாக எதுவும் கிடைக்கலை! சரி கோதுமை தோசை பண்ணலாம்னு நினைச்சால். கேழ்வரகு ரவா இட்லிக்காக வாங்கின எம்.டி.ஆர் கேழ்வரகு ரவா இட்லி மாவு இருக்குனு நினைவுக்கு வந்தது. அதோடு கிருஷ்ணன் பிறப்புக்காக மிக்சியில் பொடித்த அரிசி மாவுக் கப்பியும் இருந்ததா! போதாதுக்குக் கிருஷ்ணனுக்குத் தட்டின வடை போக மிச்ச மாவும் இருந்தது. இங்கே தினம் தினம் ராத்திரி மழை பெய்யுதா! சூடு அதிகம் இல்லை. ஆகவே வடை மாவும் புளிக்கலை!
ஆகவே ஒரு திப்பிச வேலை செய்யலாம்னு முடிவு பண்ணினேன். கேழ்வரகு ரவா இட்லி மாவு அரைக்கிண்ணமும், அரிசி ரவை பொடித்தது அரைக்கிண்ணமும், கோதுமை ரவை(சம்பா) அரைக்கிண்ணமும் எடுத்துக் களைந்து ஊற வைச்சேன். சாயந்திரமா எல்லாத்தையும் போட்டு அரைச்சு மிச்சம் இருந்த வடை மாவையும் (உளுந்து வடை மாவு) கலந்தேன். இஞ்சி, ப.மி. கருகப்பிலை, கொத்துமல்லி, வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன்.
அரைச்சுக் கலந்த மாவை தோசையாக ஊற்றியதன் படம். தோசையைத் திருப்பிப் போட்டதும் உள்ள படம் கீழே.
திருப்பிப் போடப்பட்டு வெந்து கொண்டிருக்கும் தோசை. சாம்பார், வத்தக்குழம்பு எல்லோத்தோடயும் நன்றாகவே இருக்கும்போல! :)
வாட்சப்பில் ஶ்ரீராமுக்குப் படத்தை அனுப்பினேன். அவர் என்னோட மெயிலுக்கு அனுப்பப் படத்தைப் போட்டாச்சு! இனிமே செல்லில் எடுக்கிறதுன்னா இன்னொரு செல்லில் தான் எடுக்கணும். இல்லைனா காமிராவிலேயே எடுத்துடணும்! :)
என்ன என்று ஆவலுடன் கேட்ட ரங்க்ஸிடம் விஷயத்தைப் பட்டென்று உடைக்க அவருக்கு பயம் வந்துடுச்சு. மறுபடி நான் சோதனை எலியா என்று கவலை வந்துடுச்சு. அவரைச் சமாதானம் செய்வதற்காகத் தேங்காய்ச் சட்னி என்னும் அஸ்திரப் பிரயோகம் பண்ணிச் சட்னி அரைச்சுட்டு தோசை வார்த்துக் கொடுத்தால் வாயே திறக்காமல் மூன்று தோசைகள் சாப்பிட்டார்.
தோசை நல்லாவே இருந்தது. நினைவாகப் படமும் எடுத்தேன். ஆனால் பாருங்க காமிராவில் எடுக்கலை. :( மொபைலில் எடுத்தேனா! அதை அங்கிருந்தே என்னோட மெயில் பாக்சுக்கு அனுப்பிப் பின்னர் அதைப் பதிவில் இணைப்பேன். ஆனால் மொபைல் டாட்டா டிசேபிள் பண்ணி இருக்காம். சரினு அதை எனேபிள் பண்ணினால் என்னஎன்னவோ சொல்லுது! மொத்தத்தில் படம் இங்கே போட முடியலை! :( என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். பார்க்கலாம். யாருக்கானும் என்ன செய்யணும்னு தெரிஞ்சால் சொல்லுங்க! இன்னிக்கு வந்திருந்த உறவினர்கள் இன்னும் சிறிது நேரம் இருந்திருந்தால் அவங்க கிட்டே கேட்டுப் போட்டிருக்கலாம். இன்னிக்கு முழுக்க கணினியைத் திறக்கவே இல்லை. நேத்திக்கு இடிச்ச இடியிலும், மின்னிய மின்னலிலும் காலை பத்து மணி வரை இணையமும் வரலை. தொலைக்காட்சியும் வரலை!