எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 31, 2007

நான் அவளில்லை!

இந்த மாசம் மங்கையர் மலரின் முதல் புத்தகத்தில் 104-ம் பக்கத்தில் ஒரு செய்தித் துணுக்கும், கீழே எழுதியவர் பெயர் என "கீதா சாம்பசிவம், சென்னை -97" அப்படினு போட்டிருக்கு, நான் அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லவே இல்லை! அது எழுதினது நான் இல்லை, என் நேரம், அவங்களுக்கு ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டு இருக்கேன் அவ்வளவு தான், மற்றபடி அதைப் பார்த்துட்டு ஏற்கெனவே ஷைலஜா கேட்டுட்டாங்க, நீங்களான்னு, நாம எழுதினது தான் என்றால் ஒரு கிறுக்குத் தனமான முத்திரை கட்டாயம் வைப்போமே, அது இல்லை, அதிலே, அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன். நான் தான் உங்க ஒரே தனிப்பெரும் தலைவி, வேறே யாராவது என் பேரிலே வந்தால் ஏமாந்துடாதீங்க! என்னைப் பார்த்த சாட்சிகளான திரு திராச, திரு பாலராஜன்கீதா, திருமதி கீதா, திரு கண்ணபிரான்,முதல்லே பார்த்ததாய்ப் பெருமை அடிச்சுட்டு இருக்கும் அம்பி, பல முறை பார்த்தும் அடக்கத்தின் அவதாரமான வேதா(ள்), சூடான் புலி இத்தனை பேரு இருக்காங்க! அதனாலே பயமில்லைனாலும் நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு! யார் வேலை இதுனு தெரியலையே? ம்ம்ம்ம்ம்ம்., ரொம்ப பயமா இருக்கே! :P :P :P

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!

நேத்துத் தி.நகர் போயிருந்தேன், தவிர்க்க முடியாமல், மழை காரணமாக எந்த ஆட்டோவும் உள்ளே வராததால் அம்பத்தூர் பஸ் நிலையம் வரை எங்க வண்டியிலேயே போனோம், வீட்டில் முன்னாடி 3 வண்டிகள் இருந்தன. ஸ்கூட்டர் , பையனோட காலிபர், இங்கே உள்நாட்டிலேயே செல்ல வசதியாக டிவிஎஸ் என்று. பையன் அமெரிக்காவும் போனப்புறம் காலிபர் அவருக்கு உபயோகமும் இல்லை, ஓட்டவும் முடியாது, கழுத்துப் பிரச்னையால். ஸ்கூட்டரும் ஓட்ட முடியவில்லை, எல்லாத்தையும் வித்தாச்சு, டிவிஎஸ்ஸை மட்டும் வச்சுட்டு. இந்த வண்டியிலேயே ஒரு காலத்தில் (ஒரு 4,5 வருஷம் முன்னால் வரைதான்) மடிப்பாக்கம் வரை போனோம் என்றாலும், இப்போ இருக்கும் சூழ்நிலைக்கு அதை நம்ப முடியாது. மாநரகப் பேருந்துகள் இப்போ சொகுசுப் பேருந்துகள் வந்திருக்குனு சொன்னதாலே அதிலேயே போக முடிவெடுத்தோம். அது எங்கே வந்தது? வந்தது எல்லாம் நரகப் பேருந்து தான். போயிட்டு, நாங்க மத்தியானமே திரும்பணும், இங்கே வேலை செய்யும் அம்மா, பால்காரர்னு எல்லார் கிட்டேயும் முன் கூட்டியே சொன்னால் தான் சாயந்திரம் சீக்கிரம் திரும்பலாம். பக்கத்து வீடுகள் எல்லாம் அடுத்த தீவில் இருப்பதால் நீந்திப் போய்ச் சொல்ல முடியாது, அவங்க யாரும் வெளியே வரவும் முடியாது. எல்லாரும் நீர் சூழ இருக்கோம்.

கிடைச்ச பேருந்து போதும்னு ஏறினால் அது சென்னை பூராச் சுற்றிக் காட்டும் டி41 ரூட் பஸ். 10 மணிக்குப் பஸ் ஏறினால் பஸ்ஸை விட்டு எப்போ இறங்குவோம்னு ஆயிடுச்சு, ஆனால் இயற்கைக் காட்சிகள் இருக்கே, கண்ணை விட்டு மறையலை, அதுவும் நுங்கம்பாக்கத்தில் ஜெமினிக்குத் திரும்பும் முனையில் "ஹோட்டல் ரஞ்சித்" வாசலில் பூராப் பூராத் தண்ணீர் மயம். அம்பத்தூர் எஸ்டேட் பூராவும், தொழிற்சாலைகள் பூராவும் மிதக்கின்றன. எஸ்டேட் பஸ்ஸ்டாண்டிற்குள் தண்ணீர் புகுந்து பெரிய குழாய் போட்டுத் தண்ணீர் நாங்க போகும்போது இறைக்க ஆரம்பிச்சது திரும்பி வர வரைக்கும் இறைச்சுட்டு இருந்தாங்க. இந்த லட்சணத்தில் சாலைகள் இருக்கும்போது, சுகமான பயணமாவது ஒண்ணாவது! தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அந்தத் தண்ணீரில் சைக்கிளை அல்லது இரண்டு சக்கர வாகனத்தைச் சிரமப்பட்டு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். மழைன்னா வேலைக்கு வராமல் இருக்க முடியுமா? அம்பத்தூர் க்ளோதிங் ஃபாக்டரி பக்கத்துத் தெரு சுகாதாரத்துக்கேக் கேடு விளைவிக்கும் அழகில் இருக்கிறது. டிசிஎஸ், ஹெச்சிஎல் போன்ற ஐடி நிறுவனங்களின் உள்ளே செல்லும் வழி பூராத் தண்ணீர் மயம். அவங்க எல்லாரிடமும் 2 சக்கர வண்டி இருப்பதால் நேரே சிரமப் படாமல் உள்ளே போகின்றனர். ஆனால் மற்றத் தொழிற்சாலைகளின் நிலையும், தொழிலாளர்களின் நிலையும் ரொம்பவே மோசம்! முகப் பேர் வரை இப்படி இருக்கிறது. கலெக்டர் நகரில் இருந்து கொஞ்சம் பரவாயில்லை. பெரும்பாலான தெருக்களின் நிலைமை அப்படித்தான் என்றாலும் அண்ணா நகரின் முக்கியச் சாலைகள் பரவாயில்லை.

ஷெனாய் நகரின் பிரசித்தி பெற்ற திருவிக பூங்காவின் நிலைமையைப் பார்த்தால் அழுகையே வந்துடும் போலிருக்கு! நல்லவேளையாத் திநகர் பஸ்ஸ்டாண்ட் பக்கமோ, கடைகள் பக்கமோ போகிற வேலை இல்லை. பஸ்ஸ்டாண்ட் போன வருஷ மழையில் மூழ்கிக் கிடந்தது. இப்போ எப்படி இருக்கோ? பிழைச்சோம். ஆனால் ஆட்டோக் காரர்கள் எல்லாம் ஆட்டோவின் விலையையே கேட்கிறார்கள், டிஎம் எஸ்ஸில் இருந்து ஜிஎன். செட்டி தெரு செல்வதற்கு. இன்னும் நுங்கம்பாக்கத்தில் சில தெருக்கள், முகப்பேர் செல்லும் வழியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கள், இதில் ஒரு வளாகத்துக்கு "மகிழ்ச்சி காலனி" என்றும், இன்னொரு வளாகத்துக்கு "இந்தியன் காலனி" என்றும் பெயர், கொடுமையான நகைச்சுவையாக இருந்தது. நிஜமான நரகத்தில் இருக்கும் மக்களுக்குச் சகிப்புத் தன்மை மிக அதிகம். இதெல்லாம் எப்போ சரியாகும்? நான் பார்த்தது நிறைய, ஆனால் சொல்லி இருப்பது கொஞ்சமே கொஞ்சம்! மனசு கிடந்து தவிக்கிறது, இதை எல்லாம் பார்த்து! எந்த தேவதூதன் வந்து இதற்கு ஒரு வழி காட்டப் போகிறான்? மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!

Monday, October 29, 2007

நீயெல்லாம் ஒரு பொம்பளையா?

சும்மா எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கோமே, கொஞ்சம் சீரியஸா எழுதலாமேனு தான் இந்தப் பதிவு, அப்படினு நினைச்சுக்கிட்டு வந்தால் ஏமாந்து தான் போவீங்க! இந்தத் தலைப்பில் ஏற்கெனவே, இலவசம், அபி அப்பா, மோகன் தாஸ் (இவர் தான் ஆரம்பிச்சு வச்சார்னு நினைக்கிறேன்) அப்புறம் முத்துலட்சுமியா லட்சுமியா தெரியலை எல்லாரும் எழுதிட்டாங்க. அதனாலே நான் என்ன புதுசா எழுதப் போறேன். சும்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ இந்தத் தலைப்பு மனசிலே உறுத்திட்டே இருந்தது, அந்த டைரக்டர் கேட்டாலும் கேட்டார், அந்த நடிகையைப் பார்த்து ஒரு வாரமா எங்கே போனாலும் இந்தத் தலைப்புத் தான், அதான் நானும் போட்டிருக்கேன், வேறே ஒண்ணுமில்லை. தவிர, ப்ளாகர் பப்ளிஷ் பண்ணுதானும் சோதனை செய்யணும், அதுக்காகவும் தான். :)))))))))))))

சோதனையோ சோதனை!!!!!!!!!!

Saturday, October 27, 2007

செந்தமிழ் நாடென்னும் போதினிலே!

யு.எஸ்ஸில் இருந்து வந்து நாளைக்கோட ஒரு மாசம் ஆகப் போகுது. ஒரு ஆறு மாசம் அங்கே இருந்துட்டு வந்ததிலே , இங்கே வந்ததும் நம்ம ரிஃபிரிஜிரேட்டரைப் பார்க்கவும், வாஷிங் மெஷினைப் பார்க்கவுமே ஏதோ எறும்பைப் பார்க்கிறாப்போல இருந்தது. அதே மாதிரி டீ, காஃபி கப்பும், ஆனால் ஃபிளைட்டில் மட்டும் சின்ன ஸ்பூனிலே தான் காஃபி, டீ தராங்க! :P அந்தத் திகைப்பு போகும் முன்னரே வரிசையாக ஒவ்வொரு சாமானாக ரிப்பேர் செய்ய வேண்டி வந்தது. அங்கே குழாயில் வெந்நீர் கொதிக்கும், தண்ணீர் ஜில்லுனு வரும், இங்கே தண்ணீரே இல்லை! மோட்டாரே வேலை செய்யலை, முனிசிபாலிட்டித் தண்ணீரோ வர அன்னைக்குத் தான் நிச்சயம், வீடுகளுக்கு இணைப்பும் இல்லை, தெருக்குழாயில் போய்ச் சண்டை போடத் தெம்பும் கிடையாது. ஆகவே குடிக்கத் தனியாக மினரல் வாட்டர் என்ற பேரில் வரும் தண்ணீர் விலை கொடுத்துத் தான் வாங்கறோம் பல வருஷமா, சமையல் மற்றத் தேவைகளுக்குக் கிணற்றில் நீர் இறைத்தும் எடுக்க ஆரம்பிச்சோம். இதிலே என் ம.பா.வுக்குத் தான் ரொம்ப சந்தோஷம். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே மோட்டார் போட இஷ்டம் இல்லை, போர் போட எனக்கு இஷ்டம் இல்லை. ஆகக் கூடி இரண்டு பேரும் எதிலும் ஒத்துப் போகவே மாட்டோம்! :)

தினசரி, பள்ளிக்குப் போகிற மாதிரி ப்ளம்பர் வந்து மோட்டாரைச் சரி பார்க்க அது அடம் பிடிக்கும் குழந்தையைப் போல் அவருக்கு எதிரே ஒழுங்காக வேலை செய்யும், அவர் கிளம்பிப் போனதும் தகராறு செய்யும். அவரும் முதலில் கொஞ்சம் பொறுமையாகவே, தண்ணீர் ஊற்றி விட்டுப் போடுங்கள் என்று சொல்லிப் பார்த்தார். இந்த மோட்டார் கேட்டால் தானே! அது சுத்தமாய் நின்று போச்சு! எல்லாம் கிடக்க, சரஸ்வதி பூஜை அன்று காலை நான் வீடு சுத்தம் செய்து விட்டுக் கை அலம்பக் கிணற்றடியில் உள்ள குழாயைத் திறந்தேன். ஏத்தின தண்ணீர் கொஞ்சமானும் இருக்குமே! குழாயைத் திறந்தேனோ இல்லையோ, சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அபிஷேஹம் ஆனது! குழாய் என் கையில்! எப்படி வந்தது? எனக்கே தெரியாது. வாசலில் நின்றிருந்த என்னோட ம.பா.வைக் கூப்பிட்டேன். அவர் முக்கியமான சமயங்களில் ஆளே அகப்பட மாட்டார். எங்கேதான் போவாரோ? கிட்டத் தட்ட தொலைபேசியில் கூப்பிடுகிற மாதிரி தூரத்தில் நின்று கொண்டிருப்பார். இந்த மாதிரி முக்கியமான சமயம் வெளியே சொல்லி வச்சாப்போல போய் நிற்பார். அவரைக் கூப்பிட்டு (சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே போய்த் தான்) மேலே டாங்கில் இருந்து தண்ணீர் வரும் வால்வை மூடச் சொன்னேன். கரெக்டா இந்த மாதிரியானது எல்லாம் எனக்கு மட்டுமே எங்க வீட்டில் நடக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறேன். இதே அவர் திறக்கும்போது அந்தக் குழாய் "தேமே"னு சமர்த்தாக இருக்கும்.

பால் காய்ச்சப் பாலை எடுத்தால் பால் உறைந்து விட்டது. ஃபிரிஜில் தெர்மாஸ்டாட் சரியில்லை. கெல்வினேட்டர் கம்பெனி இருக்கும் இடம் தெரியாததால் எலக்ட்ரோலக்ஸிற்குத் தொலைபேசினால் அவங்க இன்னி வரை பிசி, ஃபோனை எடுக்கவே இல்லை. ஏ.சி. கம்ப்ரெஸரை மாத்திட்டுப் போட்டால் கொஞ்ச நேரம் ஓடியது. அப்புறம் மூச்! என்ன ஆச்சுனு பார்த்தால் ஒரு பல்லி உள்ளே போயிருக்கு! அதுக்கும் வேர்த்து விறுத்துப் போயிடுச்சு போலிருக்கு! அதை இன்னும் சரி பண்ணலை! கணினியிலே யுபிஎஸ்ஸில் பாட்டரி வீக்காகி இருக்கு, அதை மாத்தணும். மழை பெய்து தெருவிலே ஒரே தண்ணீர்க் குளமாகி உள்ளது. அதை இறைக்கவோ, அல்லது, தண்ணீர் வெளியே போகுமாறு வெட்டி விடவோ முனிசிபாலிட்டியில் பணம் இல்லை எனக் கவுன்சிலர் சொல்லி விட்டார். அதுவும் நாங்களே செய்து கொண்டோம். அம்பத்தூர் முனிசிபாலிட்டியில் பணம் இல்லை என்பது ரொம்ப ஆச்சரியமாத் தான் இருக்கு. இப்போ ரோடு எதுவும் போட மாட்டாங்களாம். ட்ரெயினேஜ் வந்ததும் தானாம். இதைக் கிட்டத் தட்ட பல வருஷங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். தெருக்களோ ரொம்ப மோசம்! தெருக்களில் மேடு, பள்ளம் தெரிவது இல்லை. மழை பெய்கிற வேகத்தில் மேடு பள்ளமாயும், பள்ளம் மேடாயும் மாறிடுதா? தெருவில் நடக்கவே பயமா இருக்கு! பஸ் போகும் ரோடு எல்லாம் பஸ்ஸில் பயணிக்கவே பயமா இருக்கு. ஆனாலும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்களுக்கு சகிப்புத் தன்மை அதிகமாவே இருக்கு போலிருக்கு!

பத்தாக் குறைக்கு எங்க வீட்டுக்குப் பக்கத்திலே வந்திருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள எட்டுக் குடித்தனக்காரர்களும் போடும் குப்பைகள் எங்க வீட்டுப் பக்கம் தான். அவங்க கிட்டே சொல்லவும் முடியலை, என்ன சொன்னாலும் திரும்ப இங்கே தான் போடுவாங்க! அது தவிர, அவங்க செப்டிக் டாங்க் நிரம்பி வழிவதால் அதைக் குழாய் போட்டு அதன் மூலம் எங்க வீட்டுப் பக்கம் திருப்பி விடப் பார்த்திருக்காங்க. எங்க வீட்டிலே இருந்த கேர்டேக்கர் சண்டை போடவே அதைத் தெருவில் விட்டுட்டாங்க. மழை நீர் சேகரிப்புக்குனு கட்டி இருக்கும் கால்வாயில் அது நிரம்பி வழிகிறது. அதையும் கவுன்சிலரிடம் சொன்னால் அந்த அம்மா வெளியேவே வர மாட்டாங்க! அவங்க கணவருக்கும் முனிசிபல் சேர்மனுக்கும் சொந்தத் தகராறாம். அதனால் சேர்மன் 6-வது வார்டுக்கு ஒண்ணும் செய்து தரமுடியாதுனு சொல்லிட்டாராம். இதுவும் தெருக்காரங்க் சொன்ன தகவல். பக்கத்துக் குடியிருப்புக்கோ அல்லது அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு வரும் வண்டிகள் டாடா சுமோ, க்வாலிஸ், பெரிய வான்கள் போன்றவைகளுக்கு எங்க வீட்டு வாசலில்தான் நிறுத்த இடம் பார்ப்பாங்க! கேட்டுக்கு நேர் எதிரே நிறுத்தாதீங்க, கொஞ்சம் தள்ளி நிறுத்துங்கனு அவங்க கிட்டே சொல்ல முடியாது. மீறிச் சொன்னால் அவங்க பேசற பேச்சுக்குத் தலை குனியணும், சிலர் வேப்ப மரத்தை வெட்டி விடுங்க, அப்புறமா ஏன் நிறுத்தறோம்னு வேறே சொல்லுவாங்க. எத்தனை வருஷமாக் குழந்தை மாதிரி வளர்த்து வர மரம்? எப்படி வெட்ட மனசு வரும்? எல்லாத்துக்கும் மேலே எலி வேறே எங்கே ஒளிஞ்சுட்டு இருக்குனே தெரியலை! மஞ்சூர் ராஜா ஏதோ பசை மாதிரி பொருள் இருப்பதாயும் அதை ஒரு பேப்பரில் விட்டு விட்டால் எலி வந்து ஒட்டிக் கொள்ளும், பிடிக்கலாம் என்று யோசனை சொன்னார். எலி எங்கே மாட்டிக்கும்? அது சாமர்த்தியாத் தப்பிச்சுடும், நான் தான் காலில் ஒட்டிட்டுத் தவிப்பேன்னு சொல்லிட்டேன்! பத்தாக்குறைக்கு அப்போ அப்போ அறிவிக்கப் படாத மின் தடை வேறே! எப்போ வரும் எப்போ போகும்னே சொல்ல முடியாது!

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் இங்கே தான் Peace of Mind அப்படினு ம.பா. சொல்லறார். இங்கே வந்து தான் என் முகமே பளிச்சுனு இருக்காம்,. அங்கே ஒரே டல் அடிச்சுக் கிடந்தேனாம். சொந்த ஊர், சொந்த ஊர்தான், அப்படினு சொல்றார். அது சரி, தமிழ்நாட்டைப் போல வருமா? அதான் "மீண்ட சொர்க்கம்"னு சொல்லிக்கறேன்! ஆஹா, இந்தியா, இது தான் இந்தியா, வாழ்விலே ஒரு ரசம் தேவைனு மக்களை இப்போதே தயார்ப்படுத்தும் இந்தியா! சொர்க்கம் என்பது இது தானோ?

Friday, October 26, 2007

ஐகாரஸ் கேட்டதுக்காக ஒரு விமரிசனம்!

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தாப்பலே, இந்த ஐகாரஸ் வந்து, சினிமா விமரிசனம் எழுதுனு சொன்னாரா? :P சரி, வராத மனுஷன், அவரெல்லாம் நம்ம வீடு தேடி வரப்பட்டவர் இல்லை, பெரிய மனுஷன், வந்து நம்ம பதிவையும் மதிச்சுக் கேட்டிருக்கார். விமரிசனம் பண்ணுங்கனு, :P அதுவும் ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி படமாக் கேட்கறாரேனு "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முதலாக"க் காட்டற படங்களிலே வரும் பார்க்கலாம்னு பார்த்தா ஒரு வாரமா முடியவே இல்லை. கட்டாய ஓய்வு எடுக்க வேண்டியதாப் போச்சு! அம்பி வேறே தியாகராஜ பாகவதர் காலத்துப் படத்தைப் பத்தி ஆசையாக் கேட்டிருந்தார். அவர் வயசுக்கு இன்னும் முன்னாலே "பேசாத படம்" தான் கேட்டிருக்கணும். பொதிகையிலே தினம் மத்தியானம் பழைய படம் பத்திப் போடறாங்கனு பார்க்கலாம்னா அதுக்கும் முடியலை. இந்த ஐகாரஸ் வந்து ஏற்கெனவே வச்ச கண்ணு பத்தாதுனு நான் சினிமா பார்க்கிறதை, பார்க்கிறதை என்ன பார்க்கிறதை, பார்த்ததைக் கிண்டல் அடிச்சுட்டுப் போனாரா? என்னாலே இப்போ எல்லாம், "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" வரும் படங்களைக் கூடப் பார்க்க நேரம் இல்லை. எல்லாம் யு.எஸ்ஸிலே பார்த்ததோடு சரி! :P

ஆனால் என்னோட் ம.பா.வுக்கு வேறே கவலை. ஆறு மாசத்துக்கு முன்னாலே அவர் பார்த்துட்டிருந்த சீரியல்கள் எல்லாம் இன்னும் புதுக்கருக்கு அழியாமல் தொடருகிறதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுட்டு இருந்தாரா? இந்த நவராத்திரி சமயத்தில் "ஆனந்தம்" தொடரில் வரும் டெல்லி குமாரின் மனைவியாக நடிப்பவரை இறந்து விட்டதாய்க் காட்டினாங்க, சரியா 9 நாளும் தினம் சாயங்காலம் 7 மணிக்கு அழுதுட்டு இருப்பாங்க எல்லா வீட்டிலேயும், நவராத்திரிக்கு வரும் பெண்களும் சேர்ந்து! :P பாருங்க, அதுக்கப்புறம் தான் அவர் சோகத்தின் உச்சிக்கே போயிட்டார். அந்த அம்மா இறந்ததுக்கு எல்லாம் இல்லை, அவங்க கலைஞர் டி.வி.யிலே வேறே மெகாத் தொடருக்கு நடிக்கப் போயிட்டாங்க போலிருக்கு, இதிலே சாகடிச்சுட்டாங்களாம். அவர் தான் சொன்னார். இந்த லேட்டஸ்ட் மெகாத் தொடர் நியூஸெல்லாம் அவருக்குத் தான் அத்துபடி! சோகக் கதையின் காரணம் கேட்கலையே!



ஆனந்தம் தொடரில் அவங்களுக்கு 2 பொண்ணுங்க இருப்பாங்க! 2 பொண்ணோட மாப்பிள்ளைங்களும், அந்த அம்மா செத்தப்போ வந்திருக்காங்களாம், சம்மந்திகளோ, பொண்ணுங்களோ வரலையாம். மாப்பிள்ளைங்க 2 பேரும் வந்திருக்கும்போது பொண்ணுங்க அம்மா செத்தப்போக் கூட வரலையேனு அவருக்குத் தலையைப் பிச்சுக்கணும் போலிருக்கு. சண்டை போட்டுட்டுப் போன மூத்த மருமகள் ஆன அபிராமி கூட வந்துட்டாளாம். அவளோட தம்பி, தங்கை வரலையாம். அப்புறம் சேர்ந்து இருக்கும் மருமகள் வரலையாம். வெளியூர் எங்கேயோ போயிட்டாங்களாம். அவங்க என்ன ஆனாங்கனு ஒரே கவலை. அது மட்டுமா? கோலங்களில் அபிக்கு அடி எப்படிப் பட்டது? இந்த தீபா வெங்கட்டுக்கு ஒரு குழந்தை இருந்துச்சே அது என்ன ஆனது? அப்புறம் அனுவாக நடிக்கிற பொண்ணு மாசமா இருந்தாளே, அவ குழந்தை என்ன ஆனதுனு ஒரே கவலை! மலர்கள்னு ஒரு தொடர் வந்துட்டு இருந்ததே, அது எப்படி முடிஞ்சதுனும் ரொம்பவே கவலைப்படறார். "கஸ்தூரி"யை இன்னும் எத்தனை நாட்களுக்குக் கஷ்டப் படுத்தப் போறாங்கனு வேறே கவலை. என்ன ஒரே ஆறுதல்னா அவளோட மாமியார், மாமனார் கஸ்தூரிக்கு ஆறுதலா இருக்காங்களாம். மத்தபடி கதை எங்கே போகுதுனு புரியவே இல்லையாம். யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா!

இந்த லட்சணத்திலே நான் சினிமா என்னத்தைப் பார்க்கிறது? மத்தியானம் போடற ஏதாவது படம் பார்க்கலாம்னு இன்னிக்கு உட்கார்ந்தா ஒரு ஜெய்சங்கர் படம் கேடிவியிலோ, சன் டிவியிலோ ஓட்டிட்டு இருந்தாங்க. அது ஜெய்சங்கர் வில்லனா நடிக்க ஆரம்பிச்சப்புறம் வந்த படம். ஐகாரஸ் கேட்டது அது இல்லையே. இப்படி சானல் மாத்தினேனா, ராஜ் டிவியிலே "கர்ணன்" படம் போட்டாங்க. நான் பார்த்ததே இல்லை. சிவாஜி நடிச்ச பல படங்கள் பார்த்திருந்தாலும் எனக்குப் பிடிச்சது, அவர் நடிக்காத ஒரே படமான "முதல் மரியாதை" மட்டும் தான். கர்ணன் படம் பார்க்கலாம்னு உட்கார்ந்தேன்.

வெறும் வாயை மென்னுட்டு இருக்கிற எனக்கு அவல் கிடைச்சாப்பலேன்னு என்னோட ம.பா. கிண்டல் செய்ததையும் பொறுத்துட்டுப் படம் பார்த்தேன். அதிலே எனக்குச் சிலசந்தேகங்கள் வந்துடுச்சு. .

1.கர்ணன் தன்னோட் கவச, குண்டலத்தைப் பாண்டவர் வனவாசத்துக்குப் போகும் முன்னரே இந்திரனுக்குத் தானம் கொடுக்கிறானா? அல்லது யுத்தம் ஆரம்பிக்கும் முன்னரா? வியாச பாரதத்தில் இப்படி இருக்கிறதா?

2.கர்ணனுக்குப் பையன் பிறப்பதாயும் அந்தப் பையன் யுத்தத்தில் இறந்து போவதாயும் காட்டுகிறார்கள். அதுவும் மகாபாரதத்திலே உண்டா? வியாசர் இப்படி எழுதி இருக்கிறாரா?

3.குந்தி ஏதோ புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டு தான் கர்ணனின் தாய் என நிரூபிப்பதாய் வருகிறது. அதுவும் உண்டா? இந்தப் புடவை விஷயம் வியாசர் எழுதின மகாபாரதத்தில் படிச்ச நினைப்பு இல்லை.

4. துரியோதனன் கர்ணனை அங்க தேசத்து அரசனாக்கிய பின்னர் தான் கர்ணன் பரசுராமரிடம் வித்தை கற்றுக் கொள்ளச் சென்றானா?

5.பானுமதி (துரியோதனன் மனைவி)க்கும், கர்ணனுக்கும் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையும் "எடுக்கவோ, கோர்க்கவோ" என துரியோதனன் கேட்டதும் வில்லி பாரதத்தில் உண்டு. வியாச பாரதத்தில் உண்டா?

ஒரே குழப்பமா இருக்கு. யாராவது வந்து தெளிய வைங்களேன், ப்ளீஸ்! ஐகாரஸ், இதுவும் விமரிசனம் தான், இனிமேல் விமரிசனம் பண்ணுங்கனு கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன். :P

Monday, October 22, 2007

"நகாசு" பட்டு தான் தீபாவளிக்கு!

கொலு முடிஞ்சாச்சு, இனிமேல் வழக்கம் போல் மொக்கை போடலாமானு நினைச்சேன். இந்த தீபாவளி ஒண்ணு வருதே, அது பத்தி ஒண்ணுமே எழுதலைனு வலை உலக மக்கள் தவிக்க
மாட்டாங்களா? தீபாவளி பர்ச்சேஸ் பத்தி எழுதலாம்னு நினைச்சேன். சின்ன வயசிலே
அப்பா எடுக்கிறது பிடிக்காதுங்கிற நிலைமை வந்ததிலே இருந்து நான் தான் கடைக்குப் போய் எனக்குப் பிடிச்ச மாதிரியில் எடுக்க ஆரம்பிச்சேன். பேர் தான் எனக்குப் பிடிச்ச மாதிரினு, ஆனால் அப்பா முன்னாலேயே கடைக்காரர் கிட்டே சொல்லி வச்சுடுவார். அப்போ எல்லாம் அந்த வருஷம் என்ன லேட்டஸ்ட் ஃபாஷனோ அது தான்! அப்படினு சொல்லி அப்பா இஷ்டத்துக்கு ஒண்ணுக்கு ரெண்டா டிரஸ் கிடைக்கும்

அதுக்காகக் கடை கடையா ஏறி இறங்கற வழக்கம் எல்லாம் இல்லை. ஒரே கடைதான், அதுவும் குறைந்த பட்சமாய் 20 நிமிஷங்களுக்கு மேல் என்னோட பொன்னான நேரத்தைச் செலவிட்டதில்லை! உண்மை, நம்புங்கள். புடவை கட்ட ஆரம்பிச்சதிலே இருந்து புடவை கலருக்கு மாட்சிங் ப்ளவுஸ் என்றும் அலைந்ததில்லை. அது என்னமோ தெரியலை, அந்தப் புடவை சம்மந்தப் பட்ட ஏதோ ஒரு கலரில் என்னிடம் ப்ளவுஸ் இருந்து விடும். ஆகவே டெய்லரிடம் தீபாவளிக்குத் தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு ப்ளவுஸுக்கு
அலைந்ததும் இல்லை.

அம்பி போன வருஷம் அவங்க அம்மாவுக்குப் புடவை எடுக்கக் கடை கடையாய் அலைந்ததை வர்ணித்தபோது எனக்குச் சிரிப்பாய் வந்தது. எனக்குக் கல்யாணம் ஆனதும்
தீபாவளி பர்ச்சேஸ் என்றால் விஜயதசமி அன்னிக்குத் தான் என்று , நானும், என்னோட
மறுபாதியும் முடிவு செய்து கொண்டோம். ரெண்டு பேரும் ஏற்கெனவே பேசி முடிவு பண்ணி
இருப்போம், எந்தக் கடைனு! என்ன அவர் முடிவு செய்வார், நான் தலை ஆட்டுவேன்,
அதான் நடக்கும். அநேகமாய் அம்பத்தூரிலேயே இருக்கும் எங்கள் குடும்பக் கடையான "அம்பிகா ஸ்டோர்ஸ்" தான். அங்கே தானே வீட்டிலே மொத்தப் பேருக்கும் கடனில் எடுக்க முடியும். அந்த ராஜஸ்தானத்தைச் சேர்ந்த கடைக்காரருக்கும் எங்களுக்கும் பூர்வஜன்ம பந்தம் ஏதோ இருந்திருக்கணும். நாங்க எப்போவாவது இந்த வருஷம் கையில் கொஞ்சம் பணம் புரட்டி வெளியிலே எங்கேயாவது எடுக்கலாமானு நினைக்கறதுக்குள்ளே
அவர் கூப்பிட்டு விடுவார், ஏன் வரலைனு கேட்டு.

அதை விட்டால் இருக்கவே இருக்கு ஹாண்ட்லூம் ஹவுஸும், கோ-ஆப்டெக்ஸும். இதில்
கோ-ஆப்டெக்ஸில் நிஜமாவே எல்லாத் துணி வகைகளும், அதுவும் பட்டு நல்லாவே இருக்கும். ஆனால் அப்போதெல்லாம் வருகிற அடிப்படைச் சம்பளத்துக்குக் கொடுக்கிற கடனில் எனக்கு மட்டும்தான் பட்டு எடுத்துட்டு எல்லாரும் மாத்தி மாத்திக் கட்டிக்கும்படியா இருந்திருக்கும். அப்புறம் மத்தவங்க முக்கியமாய் ஆண்கள் எல்லாம் என்னத்தைக்
கட்டிக்கிறது? ஆகவே பாலியெஸ்டர் கூடக் கோ-ஆப்டெக்ஸிலேயே எடுத்துக் கட்டி
இருக்கேன். அது சலிப்பா இருந்தால் என்.டி.சி. என்.டி.சி. பாலியெஸ்டர் துணி
சூப்பர் துணி, கிழியவே கிழியாது. நானாய்க் கத்திரிக்கோல் எடுத்துக் கிழிச்சால்தான்
உண்டு.

கடைக்குப் போகும் முன்னர் எங்க வீட்டிலே ஒரு சின்ன டிஸ்கஷன் நடக்கும்.என் கணவர் கேட்பார் என் கிட்டே என்ன எஸ்டிமேட்னு முதலிலேயே சொல்லிடுனு,ஏதோ உலக வங்கி கிட்டே கடன் கேட்கும்படியா ஆயிடுச்சேங்கிற நினைப்பிலே. எனக்கு எப்படி முன் கூட்டியே இது தெரியணும்னு அவர் நினைப்பார்ங்கிறது இன்னி வரை எனக்குப் புரியாத புதிர். சிலசமயம் 500/-ரூக்குள் எடுக்கணும்னு நினைச்சால், அது 50, அல்லது 100 வரை கூட ஆகிறது உண்டு. அதுவும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கப் போவதும் இல்லை. நேரே
போய்த் துணியை எடுத்துட்டு ஃபார்மில் ஃபில்-அப் செய்து கொடுத்தால் தீபாவளிக்கு அடுத்த மாசச் சம்பளத்தில் இருந்து தான் பிடிக்க ஆரம்பிப்பாங்க.

அதிலேயும் கோ-ஆப்டெக்ஸுக்கு வருகை தரும் நம்ம மாதிரி நடுத்தர ஆத்மாக்கள்
சிலருக்கு எங்க ஃபார்மில் உள்ள தொகையே விஸ்வரூபமாய்த் தெரியும். புகை விடுறது நல்லாவே தெரியும். அப்போ அவங்க நிலைமை இன்னும் மோசம், நாம் பரவாயில்லைனு சமாதானப் படுத்திப்பேன். இந்த பட்ஜெட்டை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே! நான் ஒவ்வொருத்தர் பேரையும் எழுதி அவங்க பேருக்கு முன்னால் ஒருத்தருக்கு இத்தனை ரூபாய்
அதிக பட்சம்னு போட்டுக் கொடுப்பேன் முன்னாலேயே ஒரு 100ரூ வரை எல்லாருக்கும் ஜாஸ்தியாவே போட்டுடுவேன்.என்னோட கொட்டேஷனை, எங்க வீட்டு நிரந்தரப் பிரதம+நிதி அமைச்சர் (இன்னும் அவர்தான் கெட்டியாப் பிடிச்சுட்டு இருக்கார். :P) அதைப் பார்த்துட்டுச்
சில,பல கட் செய்துவிட்டு (எல்லாம் ஆப்பீச்ச்ச்சிலே ஆடிட் அப்ஜெக்க்ஷன் போட்டுப் போட்டு, கர்னல், பிரிகேடியரை எல்லாம் அலற விட்டதின் பாதிப்புத் தான், இ.கொ. இப்போப் புரியுதா? நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு, நான் என்ன சொன்னாலும் எதிராய்ச் சொல்லுவதே என் ம.பா.க்கு வேலைனு)

அப்புறமாய் நான் ஒரு ஓபன் டெண்டர் கொடுக்கணும். அதிலேயும் சிலபல டிஸ்கவுண்டுகள்
நடக்கும். அதுக்கப்புறம் கடைக்கு இரண்டு பேரும் கிளம்புவோம். என்னைப் பார்த்துப்
பரிதாபப்படுவதைத் தவிர வேறு ஒண்ணும் செய்ய முடியாத என் மாமியார் வெற்றித்
திலகம் இட்டு வழி அனுப்ப இரண்டு பேரும் போவோம். வழியில் ஒரு ஜூஸ்,
இல்லைனா ஒரு காஃபி, டிஃபன்? ஒரு கடலை மிட்டாய்? மூச்! சாயந்திரம் டிஃபனுக்கு வீட்டுக்கு வந்துடணும். நாங்க சாப்பிட்டுட்டுக் கிளம்பும்போதே மணி 12-00 ஆகி இருக்கும். 4 மணிக்குள் வீட்டுக்கு வரணும்னு முடிவு பண்ணிட்டு (அவர் தான் முடிவு பண்ணுவார் வழக்கம்போல்) போவோம்.

அங்கே பையன், பொண்ணு, அவரோட தம்பி, அப்பா, அம்மா வரை ஒண்ணும் பிரச்னை வராது. கடைசியில் அவருக்கு வேஷ்டி மட்டும் போதும்னு தியாகம் பண்ணிட்டு என்னோட
பட்ஜெட்டுக்கு வருவார். இந்தப் புடவையா, நல்லாவே இல்லைம்பார். எனக்கு
என்னமோ அது தான் உலகத்திலேயே உசத்தியாய்த் தெரியும். நாங்க புடவை
செக்க்ஷனுக்கு வரும்போதே 2-00 மணி ஆகி இருக்கும். இந்தக் கலர் உனக்கு
நல்லா இருக்காது, அந்தக்கலர் எனக்குப் பிடிக்கலைனு சொல்லிட்டுக் கடைசியில்
அவருக்குப் பிடிச்ச பச்சைக் கலரிலேயே எனக்கு ஒரு புடவை செலக்ட் செய்வார்.
ஏற்கெனவே அந்தப் பச்சையில் என் கிட்டே 6 புடவையாவது இருக்கும். சொன்னால் அதனால் என்ன? இது ஆலிவ் க்ரீன், மண்டு, உனக்கு இந்தக் கலர் நல்லா இருக்கும், இந்தக் கலரோ, டிசைனோ இதுவரை நீ கட்டினதே இல்லைனுடுவார். இப்போப் புரியுதா மாட்சிங் ப்ளவுஸுக்கு ஏன் அலையலைனு. அதான் பச்சை, பச்சையா ஏகப் பட்ட ப்ளவுஸ் இருக்குமே! ஆனால் ஒண்ணு, 15 லிருந்து 20 நிமிஷத்துக்குள்ளே எடுத்து முடிச்சுடுவோம். நானும் ஒருவழியா மனதைத் தேத்திட்டு வந்துடுவேன்.

இப்படியாக என் கணவருக்குப் பிடிச்சப் பச்சைக் கலரின் கிட்டத் தட்ட ஒரு 20,25
புடவையாவது கட்டி இருப்பேன். எங்க அப்பா வேறே மாதிரி. அவருக்குப் புடவை
என்றால் பட்டுத் தான். அதுவும் எனக்கு என்றால் அரக்குக் கலர் தான். அரக்கில்
என்ன எல்லாம் ஷேட் உண்டோ அதில் எல்லாம் வாங்கி விடுவார். அவரிடமும்
நம்ம பாச்சா ஒண்ணும் பலிக்காது. அப்படியே வேறே கலரில் வாங்கிட்டு வந்துட்டாலும் உடனேயே ஊரையே கூட்டி இந்தக் கலர் நல்லாவே இல்லை, உடனே மாத்தச் சொல்லுங்கனு சொல்லிட்டு அன்னிக்கு ஃப்ளாஷ் நியூஸிலும் போய்ச் சொல்லிட்டு வருவார்.

இப்போப் பையன் கொஞ்சம் மாடர்னா இருக்கானே, அவனாவது கொஞ்சம் மாறுதலாய் எடுத்துத் தருவான்னு நம்பினேன். கடைசியில் பார்த்தால் மஞ்சள் கலர் அவனுக்குப் பிடிக்குமா, அந்தக் கலரிலேயே ஒவ்வொரு முறையும் புடவை வாங்கி வர ஆரம்பிச்சான்.
வேணாம்பானுட்டேன். வெளியே போனால் பச்சைப் புடவை கட்டும்போது பச்சைக்
காளினும், அரக்குக் கட்டும்போது சிவப்புக் காளினும், மஞ்சள் கட்டும்போது மஞ்சள்
காளினும் இன்னும் எத்தனை நாள் யார் பேர் வாங்கறது? இந்த முறை வித்தியாசமாய்ப் புடவை வாங்கணும்னு நினைச்சேன். நல்லிக்கெல்லாம் வரமாட்டேனு எங்க வீட்டு சர்வாதிகாரி சொல்லிட்டதாலே அம்பிகா ஸ்டோர்ஸிலேயே திருப்தி அடைய வேண்டியதாப் போயிடுச்சு. விஜயதசமி அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை 4-30 லிருந்து 6-00 வரை ராகு காலம்னு 4 மணிக்கே புறப்பட்டோம். 4-10க்குக் கடைக்குப் போய்ப் புடவை எடுத்து பில் போட்டுப் பணம் கொடுத்து 4--30க்கு வீட்டுக்குத் திரும்பியாச்சு. கலர் என்னனு கேட்காதீங்க.
பச்சையில் இரண்டும், மஞ்சளில் ஒன்றும்.

:P :P :P

பி.கு. அம்பி, நீங்க எடுக்கிறதாச் சொன்ன "நகாசு" பட்டு மட்டும் வேறே கலரில் எடுத்துட்டு வந்துடுங்க. பச்சை, மஞ்சள், அரக்கு வேணாம். கல்யாணத்துக்கு எடுத்து வச்ச ரிவெர்சிபிள் புடவையும் மறக்காமல் எடுத்துட்டு வந்துடுங்க. டாங்ஸு, டாங்ஸு!

Sunday, October 21, 2007

வெற்றியைக் குறிக்கும் நாள் இது!




விஜயதசமி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்தாலும், பொதுவாக மஹாபாரத்ததில் அர்ஜுனனும், பாண்டவர்களும் அஞ்ஞாத வாசத்தில் இருந்த பின்னர், நவராத்திரி விரதம் இருந்து, தேவியைப் பூஜித்து, அது முடிவடைந்த நாளில், தங்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்த "வன்னி" மரத்தடியில் இருந்து எடுத்துப் பூஜை செய்து, போருக்குத் தயார் ஆன நாளாகக் குறிப்பிடப் படுகிறது. அதன் காரணமாகவே முதல்நாளான நவமி அன்று இன்றளவும், ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்தபின்னரே எடுக்கும் வழக்கமாக உள்ளது. அது புதியதாய் வாங்கிய ஆயுதமானாலும் சரி, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதானாலும் சரி, பூஜை போட்டுவிட்டே உபயோகிப்பார்கள்.

இது தவிர மற்றொரு கருத்தும் உண்டு. பர்வத ராஜன் குமாரியான "பார்வதி" தேவியைப் பெண்ணாகப் பெற அதிர்ஷ்டம் அடைந்த பர்வத ராஜன் தன்னுடைய குமாரி, மற்ற உலகத்துப் பெண்களைப் போல் சில நாட்கள் பிறந்தகம் வந்து ஓய்வெடுக்க வேண்டும் என இறைவனை வேண்ட, இறைவனும் அவ்வாறே தேவியை அனுப்பி வைத்ததாகவும், தேவி பத்து நாட்கள் பிறந்தகத்தில் தங்கியதாயும், பத்தாம் நாட்கள் தேவியைச் சகலவிதமான ஆடை, ஆபரணங்கள், பூஜைகள் செய்தும், பல்வேறு விதமான ஆயுதங்கள், வாகனங்கள் கொடுத்தும், பட்சண, பலகார வகைகளுடனும், பெண்ணைப் புகுந்த வீட்டுக்கு இமவான் அனுப்பி வைத்ததாய்ச் செவிவழிக் கதை ஒன்று கூறுகிறது. சில வடமாநிலங்களில், குறிப்பாக வங்காளத்தில் இன்றளவும் அன்னையைத் தங்கள் பெண்ணாகக் கருதி வீட்டுக்கு அழைக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கிறார்கள். மேலும் மது, கைடபர்களையும், மஹிஷனையும், சும்ப நிசும்பர்களையும் வதம் செய்து முடித்த தேவியானவள் ஓய்வு வேண்டித் தன் ஆயுதங்களை எல்லாம் அன்றொரு நாள் வைத்துவிட்டு, ஆனந்தத்தில் திளைத்ததாகவும், அன்னை ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்த நாளே "ஆயுத பூஜை" எனவும் கொண்டாடப் படுவதாயும், மற்ற நாளான "விஜயதசமி" வெற்றியைக் குறிக்கும் ஆனந்த நாளாகக் கொண்டாடப் படுவதாயும் ஒரு கதை கூறுகிறது. இப்போதும் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நவராத்திரி பத்து நாட்களில் ஒரு நாள் பெண்ணைப் பிறந்த வீட்டுக்கு அழைத்து விருந்து படைத்துத் துணிவகைகள், பொம்மைகள், வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், குங்குமம், பலகாரங்களுடன் புகுந்த வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் உண்டு. குறிப்பாக மதுரை மாவட்டக் காரர்கள் இதை ஒரு கட்டாயமாகப் பின்பற்றுகின்றனர்.

மற்றொரு கதையானது, ஸ்ரீராமர், ராவணனை வதம் செய்வதற்கு முன்னர், அகஸ்தியரின் ஆலோசனைப் படி, தேவி மஹாத்மியம் படிக்கச் சொல்லிக் கேட்டுத் தேவியின் புகழை அறிந்து அவளை வணங்கித் துதித்தித் தன் ஆயுதங்களைத் தேவியின் காலடியில் வைத்துப் பூஜித்து அவள் அருளுடன், மறுநாளான "விஜயதசமி" அன்று ராவணனை வதம் செய்ததாகக் கூறுகிறது. இந்நிகழ்வு தான் "ராம்லீலா" என்ற பெயரில் பெரும்பாலான வடமாநிலங்களில் கொண்டாடப் படுகிறது. "தஷ் ஹரா" தசகண்ட ராவணனை ஸ்ரீராமர் வதம் செய்ததைக் குறிக்கும் இச்சொல் பின்னாளில் திரிந்து "தஷரா" எனப் பெயர் பெற்றதாயும் கூறுவர். ஆனால் பெரும்பாலாகக் குழந்தைகளைப் படிக்க வைக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்ப்போமா?

ஆதிசங்கரர், தன்னுடைய சுற்றுப் பயணத்தின் போது "மண்டனமிஸ்ரர்" என்னும் மீமாம்சையைப் பின்பற்றும் ஞானியுடன் விவாதம் செய்ய நேர்ந்தது. அப்போது அவர்கள் இருவரில் யார் ஜெயிப்பார்களோ அவர்களைக் கண்டுபிடிக்கவும், தோற்றவர் வெற்றி பெற்றவரின் சீடராக ஆவது எனவும் முடிவு செய்யப் பட்டது. மண்டனமிஸ்ரர் தோற்றால், ஆதிசங்கரரின் சீடராக ஆவது எனவும், சங்கரர் தோற்றால் துறவறத்தைக் கைவிடுவது எனவும் முடிவு செய்யப் பட்டது. இதற்கு நீதிபதியாக இருந்தவள் மண்டனமிஸ்ரரின் பத்தினியான சரஸவாணி எனவும் உபயபாரதி எனவும் அழைக்கப் பட்ட மண்டனமிஸ்ரரின் மனைவியானவளே. இவள் வாக்தேவியான சரஸ்வதியின் அம்சம் எனவும், மண்டனமிஸ்ரர் பிரம்மாவின் அம்சம் எனவும் ஐதீகம். சரஸவாணி தன் பதி தோற்றுப் போவதைக் கண்டபின்னர் சங்கரரிடம் அவர் இல்வாழ்க்கையில் அனுபவம் இல்லாதவர் என்பதால், அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்குமாறு மண்டனமிஸ்ரரைக் கேட்க அவரும் அவ்வாறே சங்கரரிடம் இல்வாழ்வின் அனுபவங்களைச் சொல்லுமாறு கேட்டார். ஒரு மாதம் அவகாசம் கேட்ட சங்கரர், அப்போதே தன்னுடைய பயணத்தைத் தொடரும்போது பக்கத்து நாட்டு அரசன் இறந்ததைக் கேள்விப் பட்டு, தன்னுடைய உடலை நீத்து, உயிரை அவன் உடலில் செலுத்தினார். ஒரு மாதம் அந்த மன்னன் உடலில் வாழ்ந்த சங்கரர், பின்னர் தன் உடலில் மறுபடியும் புகுந்து இல்வாழ்வின் நுணுக்கங்களைப் பற்றியும் கூறவே, மண்டனமிஸ்ரர் தோல்வியை ஒப்புக் கொண்டு, சங்கரரின் சீடர் ஆகிறார்.

பர்த்தாவைப் பிரிய மனமில்லாத சரசவாணி தானும் அவர்களுடன் வருவதாய்க் கூறுகிறாள். பெண்ணைத் தன் சிஷ்யையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனச் சங்கரர் கூறவே, தான் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வருவதாயும், சங்கரரோ, சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்துத் தான் வருவதை அறியலாம் எனவும், திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை எனவும் கூறவே அவ்வாறே பயணம் தொடருகிறது. சிருங்கேரி, (சிருங்க கிரி) மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் பயணத்தைத் தொடரும் முன்னர், அங்கே ஒரு கர்ப்பிணியான பிரசவித்துக் கொண்டிருந்த தவளைக்குப் பாம்பு வெயில் தாக்காமல் குடை பிடிப்பதைப் பார்த்துவிட்டு ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் அது என அறிந்தார். இந்த இடமே தான் சிஷ்யர்களுடன் இருக்கத் தகுந்த இடம் எனத் தீர்மானித்துத் திரும்பி பார்க்கவே சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவில் உறைந்தாள். சங்கரருக்கு அசரீரியாகத் தான் "சாரதை"யாக இங்கேயே இருப்பதாயும், தன்னைப் பூஜித்து வருமாறும் கூறினாள். தன்னைப் பூஜித்து வருபவர்களுக்குத் தன்னுடைய அருள் பரிபூரணமாகக் கிட்டும் எனவும் கூறினாள். சிருங்கேரியில் 'சாரதை" குடி கொண்டநாள் "விஜயதசமி" எனவும், அன்று அவளைப் பூஜித்துப் படிக்க வைக்க ஆரம்பித்தாலோ, அன்று கொஞ்சமாவது படித்தாலோ சாரதையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பதும் ஐதீகம். இன்றளவும் சிருங்கேரியில் நவராத்திரி பத்து நாட்களும் சாரதைக்குப் பூஜைகள் செய்து பத்தாம் நாளான இன்று "விஜயதசமி" கோலாகலமாய்க் கொண்டாடப் படுகிறது. பல மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டும், மாணவர்கள் புத்தகங்களை எடுத்துக் கொண்டும் வந்து பூஜையில் வைத்துப்பின் திரும்பப் பெற்றுச் செல்வதும் நடந்து வருகிறது.

அனைவர் இல்லங்களிலும் "விஜயதசமி" நாளான இன்று அனைத்துச் செல்வங்களையும் அன்னை மஹாசக்தி வாரி வழங்குமாறு பிரார்த்தித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

சிருங்கேரி "சாரதா பீடம்" கோவில் படம் மேலே உள்ளது. அது மட்டும் தான் அப்லோட் ஆயிருக்கு. :D "சாரதை" படம் அப்லோட் ஆகலை. விஷயத்தைச் சொல்லிட்டேன். இல்லாட்டி டாக்டர் வந்து படம் இதோ இருக்கே ஏன் போடலைனு கேட்டு மானத்தை வாங்குவார். :P
மூணாவது (லட்சத்து?) முறையாகப் படம் போட முயன்றிருக்கிறேன். வருதா தெரியலை! :((((

Saturday, October 20, 2007

காயத்திரி மந்திரத்தை!

scientific meaning for Gaytri Manthra



பார்வமணி



GAYATRI MANTRA

Gayatri mantra has been bestowed the greatest importance in Vedic dharma.This mantra has also been termed as Savitri and Ved-Mata, the mother of the Vedas.

Om bhur bhuvah swah

Tat savitur varenyam

Bhargo devasya dheemahi
Dhiyo yo nah prachodayat

The literal meaning of the mantra is:

O God! You are Omnipresent, Omnipotent and Almighty. You are all Light. You are all Knowledge and Bliss. You are Destroyer of fear, You are Creator of this Universe, You are the Greatest of all. We bow and meditate upon Your light. You guide our intellect in the right direction. The mantra, however, has a great scientific import too, which somehow got lost in the literary tradition. The modern astrophysics and astronomy tell us that our Galaxy called Milky Way or Akash-Ganga contains
approximately 100,000 million of stars. Each star is like our sun having its own planet system. We know that the moon moves round the earth and the earth moves round the sun along with the moon. All planets round the sun. Each of the above bodies revolves round at its own axis as well. Our sun along with its family takes one round of the galactic center in 22.5 crore
years. All galaxies including ours are moving away at a terrific velocity of 20,000 miles per second.



And now the alternative scientific meaning of the mantra step by step:

(A) OM BHUR BHUVAH SWAH:

Bhur the earth, bhuvah the planets (solar family), swah the Galaxy. We observe that when an ordinary fan with a speed of 900 RPM(rotations Per minute) moves, it makes noise. Then, one can imagine, what great noise would be created when the galaxies move with a speed of 20,000 miles per second. This is what this portion of the mantra explains that the sound produced due to the fast-moving earth, planets and galaxies is Om. The sound was heard during meditation by Rishi Vishvamitra, who mentioned it to other colleagues. All of them, then unanimously decided to call this sound Om the
name of God, because this sound is available in all the three periods of time, hence it is set (permanent). Therefore, it was the first ever revolutionary idea to identify formless God with a specific title (form) called upadhi. Until that time, everybody recognized God as formless and nobody was prepared to accept this new idea. In the Gita also, it is said, "Omiti ekaksharam brahma", meaning that the name of the Supreme is Om, which contains only one syllable (8/12). This sound Om heard during samadhi was called by all the seers nada-brahma a very great noise), but not a noise that is normally heard beyond a specific amplitude and limits of decibels suited to human hearing. Hence the rishis called this sound Udgith musical sound of the above, i.e., heaven. They also noticed that the infinite mass of galaxies moving with a velocity of 20,000 miles/second was generating a kinetic energy = 1/2 MV2 and this was balancing the total energy consumption of the cosmos. Hence they named it Pranavah, which means the body (vapu) or store house of energy (prana).

B. TAT SAVITUR VARENYAM:

Tat that (God), savitur the sun (star), varenyam worthy of bowing or respect. Once the form of a person along with the name is known to us, we may locate the specific person.Hence the two titles (upadhi) provide the solid ground to identify the formless God, Vishvamitra suggested. He told us that we could know (realize) the unknowable formless God through the
known factors, viz., sound Om and light of suns (stars). A mathematician can solve an equation x2+y2=4; if x=2; then y can be known and so on. An engineer can measure the width of a river even by standing at the riverbank just by drawing a triangle. So was the scientific method suggested by Vishvamitra in the mantra in the next portion as under:-

C ) BHARGO DEVASYA DHEEMAHI:

Bhargo the light, devasya of the deity, dheemahi we should meditate. The rishi instructs us to meditate upon the available form (light of suns) to discover the formless Creator (God). Also he wants us to do japa of the word Om (this is understood in the Mantra). This is how the sage wants us to proceed, but there is a great problem to realize it, as the human mind is so shaky and restless that without the grace of the Supreme (Brahma) it cannot be controlled. Hence Vishvamitra suggests the way to pray Him as under:


D) DHIYO YO NAH PRACHODAYAT:

Dhiyo (intellect), yo (who), nah (we all), prachodayat (guide to right Direction). O God! Deploy our intellect on the right path. Full scientific interpretation of the Mantra: The earth (bhur), the planets (bhuvah), and the galaxies (swah) are moving at a very great velocity, the sound produced is Om, (the name of formless God.) That God (tat), who manifests Himself in the form of light of suns (savitur) is worthy of bowing/respect (varenyam). We all, therefore, should meditate (dheemahi) upon the light (bhargo) of that deity (devasya) and also do chanting of Om. May He (yo) guide in right direction (prachodayat) our(nah) intellect dhiyo So we notice that the important points hinted in the mantra are:-



1)The total kinetic energy generated by the movement galaxies acts as an umbrella and balances the total energy consumption of the cosmos. Hence it was named as the Pranavah (body of energy). This is equal to 1/2 mv2 (Mass of galaxies x velocity2).

2)The God could be realized through the saguna (gross), upasana (method), i.e., a. by chanting the name of the supreme as OM and b. by meditating upon the light emitted by stars (suns).

டிஸ்கி:- திரு பார்வமணி அனுப்பிய காயத்திரி மந்திரத்தின் விஞ்ஞானபூர்வ விளக்கத்தைத் தாமதமாய் அளிப்பதற்கு வருந்துகிறேன்.

Friday, October 19, 2007

யாதுமாகி நின்றாள் அன்னை!






மஹிஷனைப் போலவே "சும்ப, நிசும்பர்"களும் தேவர்களை வெற்றி கொண்டு அதன் காரணமாக மமதையால் அனைவரையும் துன்புறுத்தினர். இவர்களும் "பெண்" என்றால் துச்சமாகக் கருதினார்கள். ஏற்கெனவே அதீத பலம் பெற்ற இவர்களுடன், சண்டன், முண்டன், குரூரன், ரக்தபீஜன், தூம்ரலோசனன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.
இவர்களின் தொல்லை அதிகம் ஆயிற்று. ஒளிந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளாயினர் தேவாதிதேவர்கள். தீமையும், நன்மையும் சமனாக இருக்க வேண்டிய பூமியில் தீமை ஓங்கவே தேவர்கள் தங்கள் குருவான பிரகஸ்பதியின் துணையுடன் அம்பிகையைப் பிரார்த்திக்கலாயினர். எப்படி என்றால் :


எல்லா உயிர்களிடத்தும் "விஷ்ணுமாயை" ஆனவளும்,
அனைத்து உயிர்களிடத்தும் "சைதன்ய" வடிவானவளும்,
"புத்தி" வடிவானவளும்,
"நித்திரை" வடிவானவளும்,
"பசி" வடிவானவளும்,
"நிழல்" வடிவானவளும்,
"சக்தி" வடிவானவளும்,
"ஆசை" வடிவானவளும்,
"பொறுமை" வடிவானவளும்,
"ஜாதி" வடிவானவளும்,
"வெட்கம்" வடிவானவளும்,
"அமைதி" வடிவானவளும்,
"சிரத்தை" (திட நம்பிக்கை) வடிவானவளும்,
"ஒளி" வடிவானவளும்,
"செல்வம்" வடிவானவளும்,
"தொழில்" வடிவானவளும்,
"நினைவு" (ஞாபகசக்தி) வடிவானவளும்,
"கருணை" வடிவானவளும்,
"திருப்தி" வடிவானவளும்,
"தாய்" வடிவானவளும்
:ஞானம்" வடிவானவளும்,
ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றவளாயும் விளங்கும் தேவிக்கு நமஸ்காரம்."

என்று தேவியின் ஒவ்வொரு வடிவையும் தனித்தனியாகக் குறிக்கும் தோத்திரத்தால்
தேவியை வணங்கிப் பூசிக்கவே, மனம் மகிழ்ந்த தேவியானவள், தன்னிலிருந்து
தோற்றுவிக்கப் பட்ட "கெளசிகி"யின் காந்தியால் சும்ப, நிசும்பர்களைக் கவர்ந்தாள். கெளசிகியின் இனிய கானத்தால் அசுரர்கள் கவரப் பட்டனர். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட சும்ப, நிசும்பர்கள் அவளுக்குத் தூது அனுப்பினார்கள். தேவி
அப்போது அந்தத் தூதுவனிடம் தான் தன்னால் வெல்லப் பட்டவனையே திருமணம் செய்து கொள்ள நிச்சயித்திருப்பதாய்க் கூறினாள். கோபம் கொண்ட தூதுவன் திரும்பி வந்து சும்ப,
நிசும்பர்களிடம் நடந்ததைக் கூறினார்கள். அவனும் முதலில் தூம்ரலோசனன், சண்ட,
முண்டர்கள், ரக்த பீஜன், பின்னர் நிசும்பன், கடைசியில் சும்பன் என்று வரிசைகிரமமாக
வந்து தாயைப் பெண்டாள நினைத்த தங்கள் துர் எண்ணத்தால் அன்னையால் வதம் செய்யப் பட்டனர்.

மனம் மகிழ்ந்த தேவர்கள் எவ்வாறு ஒரு விதையில் இருந்து செடியானது, மரமாகி,
இலை, கிளைகளுடன், பூ, காய், கனியாகிப் பெரிய விருட்சமாகிறதோ அது போலப்
புவனேஸ்வரியான அந்த சக்தி பீஜத்தில் இருந்து தோன்றிய தேவியர்களே இத்தனை
வடிவங்களும் எனத் தெளிந்து கொண்டனர். தேவியைப் பலவாறு துதித்துப்
போற்றினார்கள்.

உலகுக்கு அன்னை அவளே!
அவளே நாராயணி,
அவளே ஸ்ரீவித்யா!
அவளே ஸ்ரீகெளரி,
அவளே கெளமாரி,
அவளே காத்யாயினி,
அவளே மஹாலட்சுமி,
அவளே சரஸ்வதி,
அவளே பரப்பிரும்மம். அனைத்துக்கும் ஆதாரமாயும், அனைத்திலும் நிறைந்திருப்பவளும், அனைத்துக்கும் உயிர் கொடுப்பவளும், அனைத்தையும் காப்பவளும், அனைத்தையும் அழித்துத் தன்னில் ஒடுங்கச்செய்பவளும் அவளே! அந்த ஆதிசக்தியை வணங்கிப்
போற்றுவோம்.

"ஆதிப்பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப் பணிதல் ஆக்கம்:
சூதில்லை காணுமிந்த நாட்டீர் - மற்றத்
தொல்லை மதங்கல் செய்யும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் -இந்த
மூன்று புவியும் தன் ஆட்டம் :
காலப் பெருங்களடஹ்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி -அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி:
நீல விசும்பினிடை இரவில் -சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரணனென்று பழவேதம் -சொல்லும்
நாயகன் சக்தி திருப்பாதம்:
சேரத் தவம் புரிந்து பெறுவார் இங்குச்
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி -எங்கள்
அன்னையருள் பெறுதல் முக்தி:
மீதி உயிரிருக்கும்போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி -வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி,
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் -பல
கற்றலில்லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று, பொருள் ஒன்று -அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று:
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று."

-சுப்ரமணிய பாரதியின் இந்த "சக்தி விளக்கம்' கவிதையைப் பார்த்துத் தான் எழுதி இருக்கேன்.

மஹிஷனை வதம் செய்தாள், அன்னை மஹா சக்தி!




மஹிஷாசுரன் தேவர்கள் அனைவரையும் வென்று விட்டான். வெற்றி பெற்ற மமதையில், அவன் பூவுலக மக்களையும், மற்ற உலக மக்களையும் மிகுந்த தொந்திரவுக்கு உள்ளாக்கினான். இந்த இடத்தில் அசுரர், தேவர் என்பது நம்மிடையே உள்ள துர்க்குணம், நற்குணம் இரண்டையும் குறிக்கும். துர்க்குணம் அதிகம் ஆகும்போது அவர்களை நாம்
அசுரர்கள் எனச்சொல்லுகிறோம். ஹிட்லர் ஒரு மனிதன் தான் என்றாலும், தன்னுடைய
அடக்குமுறையாலும், அப்பாவி மனிதர்களைத் தேவை இல்லாமல் அழித்ததாலும் கொடுங்கோலன் என்று சொல்வதில்லையா? அது போலத் தான். அசுரன் என்றாலே நீண்ட கோரைப் பற்களுடனும், பரட்டைத் தலையுடனும், பெரிய விழிகளுடனும் என்று நினைத்துக்
கொள்ள வேண்டாம். அவர்களின் கொடுமையை எடுத்துச் சொல்லும் விதமாய்
அவ்வாறு உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் சுய உருவை மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் என்று சொல்வதும், வேறு வேறு விதமான வேஷங்கள் போட்டுக் கொண்டு ஏமாற்றும் திறமை உள்ளவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மஹிஷாசுரன் ஆண்களான தேவர்களையும், மற்ற தெய்வங்களையும் தவிரப் பெண் தெய்வங்களையோ, பெண்களையோ ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆகவே பெண்ணால்
என்ன செய்ய முடியும் என நினைத்துப் பெண்ணால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்ற வரத்தை வேண்டிப் பெற்றான். அவனின் கொடுங்கோன்மை அதிகம் ஆகவே தேவர்கள்
மும்மூர்த்திகளைச் சரணடைந்தனர். மும்மூர்த்திகளும், தங்கள் சக்திகளாலும், தேவர்கள் அனைவரும் தங்கள் சக்திகளாலும் ஒரு பெண்ணை உருவாக்கினர். ஆதாரசக்தியாகச் சிவன்
விளங்கினார்.

சிவசக்தி -திருமுகம்,
யமசக்தி -கேசங்கள்
அக்னி சக்தி- 3 கண்கள்
சந்தியா சக்தி -புருவங்கள்
குபேர சக்தி- மூக்கு
பிரம்ம சக்தி - பல் வரிசை
அருண சக்தி - 18 திருக்கரங்கள்
இந்திர சக்தி - இடை
சந்திர சக்தி - மார்புகள்
வசுக்கள் சக்தி - நகங்கள்
வருண சக்தி - துடை மற்றும் முழங்கால்கள்.

இவ்வாறு அனைத்து சக்திகளையும் கொண்டு தேவி உருவானாள். இந்த இடத்தில் விஞ்ஞான பூர்வமாய்ப் பார்த்தால் நம் வீட்டிலேயே புதிதாய் ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தையைச் சுமக்கிறவள் தாய். உயிர் கொடுத்தது தகப்பன் என்றாலும் பிறந்ததும் என்ன
சொல்கிறோம்? தாத்தா போல உயரம், கை, கால்கள், அத்தையின் நிறம், மாமாவின்
கை, கால் அமைப்பு, பாட்டி போலப் புருவங்கள், அப்பா போல உருண்டை முகம், அம்மா மாதிரித் தலை முடி என்றெல்லாம் வர்ணிக்கிறோம். குழந்தை என்னமோ ஒன்றுதான். இருந்தாலும் அவரவர் மனதிற்கு ஏற்றவர் போல் குழந்தை இருப்பதாய் வர்ணிக்கிறோம்.
இன்னும் சில வீடுகளில் தாயோ, தந்தையோ கறுப்பாக இருக்கும்போது குழந்தை மட்டும் சிவப்பாக இருப்பது உண்டு. மாறுதலாய்த் தாய், தந்தை நிறமாக இருந்தால் குழந்தை நிறம் கறுப்பாக இருப்பதும் உண்டு. என்ன காரணம் சொல்லுவோம்?. முன்னோர்களில் ஒருத்தர்
குழந்தைக்குக் கொள்ளு, எள்ளு தாத்தாவோ, பாட்டியோ அந்த நிறமாக இருந்தார்களாம், குழந்தை அதைக் கொண்டு விட்டது எனச் சொல்லுவதுண்டு அல்லவா?

அதே நியதிதான் இங்கேயும். மனிதக் குழந்தைக்கே இப்படி இருக்கும்போது அனைத்திலும்
நிறைந்திருக்கும் சக்தியானவள், இவ்வாறு அனைத்து ஜீவராசிகளின் சக்தியைத் தான் வாங்கிக் கொண்டதில் என்ன தப்பு? தான் கொடுத்து வைத்த தன்னுடைய சக்தியையே
திரும்ப வாங்கிக் கொள்கிறாள். ஜோதி சொரூபமான அன்னை பலப் பல மாய வடிவங்கள் எடுத்த மஹிஷனைக் கடைசியில் சிம்ஹ வாஹினியாக வந்து சம்ஹாரம் செய்கிறாள். நடு மூன்று நாட்கள் இந்த அன்னையை நினைத்தே மஹாலட்சுமியாக வழிபடுகிறோம்.

மஹிஷனை வதம் செய்கிற இந்தத் தேவியை வதம் செய்து முடித்ததும் தேவர்கள் சும்மா ஒன்றும் உட்காரவில்லை. பலவித துதிகளால் அவளை மகிழ்வித்தார்கள். எப்படி என்றால்

"உலகனைத்துக்கும் காரணம் நீ: முக்குண வடிவினள் நீ: எல்லோருக்கும் புகலிடம் நீ:
இவ்வுலகே உன்னுடைய அம்சம்: மூலப்ரக்ருதி நீ: சப்த வடிவினள் நீ:
பரிசுத்தமான ரிக்வேத வடிவும் நீ: யஜுர் வேதவடிவும் நீ: பாடுவதற்கினிய
பதங்களுடன் கூடிய சாமவேத வடிவும் நீ: மருத்துவத்துகெல்லாம் வழிகாட்டும்
அதர்வண வேத வடிவும் நீ: வேத வடிவே நீ: உலகனைத்துக்கும் துன்பத்தைப்
போக்கும் தேவி நீயே: புத்தி வடிவானவளும் நீயே! துர்க்கா தேவியும் நீயே! விஷ்ணுவின் இதயகமலவாசினியும் நீயே!"

என்றெல்லாம் அவளைத் துதித்தார்கள். இது தேவி மஹாத்மியத்தில் உள்ள மத்திம சரித்திரத்தில், மஹிஷன் வதத்துக்குப் பின்னர் வரும் நாலாவது அத்தியாத்தில் "தேவி ஸ்துதி" என்றவாறு இடம் பெறுகிறது. அடுத்து சும்ப, நிசும்ப வதமும் சரஸ்வதி ஆவாஹனமும், பூஜையும். எல்லாரும் வந்து இருந்து நடத்திக் கொடுங்க.

Thursday, October 18, 2007

என்னத்தை எழுதினேன் போங்க!

நான் எழுதி முடிக்கிறதுக்குள்ளே கொலுவே முடிஞ்சுடும் போலிருக்கு. இரண்டு நாளா ரொம்ப பிசி. ஞாயிறு அன்று கொஞ்சம் வெளியே போயிட்டேன்.சாயந்திரம் சுண்டல் போட முடியலை. அன்னிக்குன்னு 4 பேர் வந்து மானத்தை வாங்கினாங்க. திங்கள் அன்று சுண்டல் போட்டுட்டு உட்கார்ந்திருந்தால் "போணி"யே ஆகலை. சரினு மறுநாள் வேர்க்கடலை கொஞ்சம் போலப் போட்டுட்டு உட்கார்ந்தேன். அன்னிக்குனு பார்த்து சுண்டல் விநியோகம் ஏக பிசி. நான் விநியோகம் செய்ததிலே பழம், பாக்கு, வெற்றிலை, சுண்டல்னு எல்லாம் காலியாகி, நான் வசூல் செய்த சுண்டல் வகைகளும் விநியோகம் செய்யப் பட்டது. இதிலே யாருக்கு அவங்க வீட்டுச் சுண்டலே திரும்பிக் கொடுத்திருக்கேனோ தெரியாது! :D நேத்திக்கும் அப்படித்தான் ஆயிடுச்சு.

எங்க வீட்டுச் சுண்டல் என்னன்னு அந்தப் பருப்பு வகைகளை நனைக்கும்போது நான் பார்த்தது தான் அப்புறம் ஒரு பருப்பு கிடைக்கலை. :P நேத்திக்கு நம்ம வேதா(ள்), வீட்டுக்கு ஜி3 வரதா இருந்திருக்காங்க. அவங்களை எங்க வீட்டுக்கும் வரச் சொன்னேன். அவங்க என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். :P புதன் கிழமை நான் வரப்போறேன்னு செவ்வாயன்றே வேதா(ள்) வீட்டுக்குப் போய் விருந்து எல்லாம் சாப்பிட்டுவிட்டு, (வேதா(ள்) எனக்கு ஒண்ணுமே கொடுக்கலை, தனியாக் கவனிச்சுக்கறேன். அப்புறம் ஜி3யை எஸ்கேஎம் கூப்பிட்டு இருக்கிறதாலே அவங்க எஸ்கேஎம். வீட்டுக்குப் போகப் போவதாய் உளவுத்துறைத் தகவல் தெரிவிச்சது. சரி, அவங்க வரலைனா பரவாயில்லை, அவங்க மிதிச்ச புண்ணிய பூமியையாவது நாமளும் மிதிப்போம்னு நேத்திலே இருந்து வேதா(ள்) கிட்டே இதோ வந்துட்டேன், வந்துட்டே இருக்கேன், வரப் போறேன், வந்தே விடுவேன்னு பூச்சாண்டி காண்பிச்சுட்டே இருந்தேன். அவங்களும் வேறே வேலை இல்லாமல் நான் வரப் போவதை எதிர்பார்த்து, தோரணவாயில், அலங்கார வளைவுகள், குழந்தைகள் கூட்டம் எல்லாம் ஏற்பாடு பண்ணி வச்சுட்டு, என்னோட எடைக்கு எடை தங்கமும் கொடுக்க முடிவு செய்து அதுக்கும் ஏற்பாடு செய்தாங்க. இந்த இடத்திலே என்னோட எடை 100 கிலோனு ரொம்ப அடக்கமாத் தெரிவிச்சுக்கறேன்.

அடுத்து என்னைக் கூப்பிடறவங்களுக்குத் தங்கமோ, வெள்ளியோ வாங்கறதுக்குத் தெரியணுமே? அதுக்குள்ளே எடை அதிகரிக்கவும் சான்ஸ் இருக்கு. அது அப்படியே இருக்கட்டும். மெதுவாய் ஒரு வழியாய் இன்னிக்கு வேதா(ள்) வீட்டுக்குப் போனேன். ரயிலடிக்கே மலர்மாலை, பூச்செண்டு, பொன்னாடை வகைகளுடன் என்னை எதிர்பார்த்து வேதா(ள்) வந்ததைப் பார்த்த என்னோட மறுபாதி அசந்து போயிட்டார். அப்புறம் அவர் போகவேண்டிய சிட்கோ நகருக்கு அவர் கிளம்பிப் போகவும் கூட்டம் தாங்க முடியாமல் மெதுவாக நாங்கள் போகவேண்டி வந்தது. மெதுவாய்ப் போய் வீட்டில் இறங்கினேனோ இல்லையோ வருணபகவான் சந்தோஷமடைந்து மழையாகப் பொழிய ஆரம்பிக்கவே மக்கள் கூட்டம் ரிஷ்யசிருங்கர் வரவால் மகிழ்வடைந்த அங்க தேச மக்களைப் போல் மகிழ்ந்தனர். (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)

மெதுவாய் மாடிக்குக் கூட்டத்தை மீறிக்கொண்டு என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தார் வேதா. அங்கே அவர் பாட்டி என்னோட வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவரிடம் வணக்கம் தெரிவிச்சபின்னர், வேதாவிற்கும், எனக்கும் தனிப்பட்ட முறையிலான பேச்சு, வார்த்தை நடந்து ஒரு முடிவுக்கு வந்தோம், இருவரும். (என்ன, காபியா, டீயானு கேட்டதுக்கு, டீயே மதுரம்னு சொன்னேன், அதான்! :D) வேறே ஒண்ணையும் கண்ணிலே காட்டலை, பொம்மையைத் தவிர, க்ர்ர்ர்ர்ர், ஜி3க்கு மட்டும் பிஸ்கட், ஸ்வீட், இத்யாதி, இத்யாதியா? அதுக்குப் பின்னர் நல்ல கொட்டுகிற மழையில் மக்கள் கூட்டம் என்னைக் காண அலைமோதுவதைத் தெரிந்து கொண்டு வெளியில் வந்து தரிசனம் தந்துவிட்டுப் பின்னர் அம்பத்தூருக்குத் திரும்பினேன். வேதா, நீங்க சொன்ன மாதிரியே பதிவு போட்டாச்சு, சரியா? :P

கொலு ஏன் வைக்கிறோம்?




பொதுவாக முதல் மூன்று நாட்கள் தேவியை "துர்கை" வடிவிலும், பின்னர் "மஹாலட்சுமி" வடிவிலும், பின்னர் "சரஸ்வதி" வடிவிலும் பூஜை செய்து வருவது வழக்கம். நீரால் சூழப் பட்ட இவ்வுலகம் ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கிய
வேளையில், மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள், அடுத்த படைப்புக்காகத் தயார் நிலையில் இருந்த பிரம்மாவைக் கொல்ல முயன்றனர். அவர்கள் அம்பிகையிடம் வாங்கி வந்த வரம் அவர்களுக்கு அவ்வளவு தைரியத்தைக் கொடுத்தது. அப்போது மஹாவிஷ்ணுவானவர் தேவியின் யோகமாயையால் அந்த அசுரர்களைக்
கொன்றது, முதல் மூன்றுநாள். இவளைத் தான் "துர்கை" எவராலும் வெல்ல
முடியாதவள் என வணங்குகிறோம்.

இவ்வுலகம் நீரினால்தான் சூழப் பட்டிருந்தது என்பதைக் குறிக்கும் விதமாயும், நீர் வாழ் ஜந்துக்கள் தான் முதன் முதல் தோன்றியவை என்பதையும் குறிக்கும் விதமாயும், நாம் கொலுவிலும் கீழே தெப்பக்குளம் மாதிரிக் கட்டி அதில் நீர்வாழ் ஜந்துக்களான மீன், ஆமை,
போன்ற பொம்மைகளை மிதக்க விடுகிறோம். இறைவனின் முதல் அவதாரமும் மச்சம் என்று சொல்லப் படும் மீன் தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவற்றோடுதான் செடி,கொடிகள், மரங்கள், மலைகள் போன்றவையும் இடம் பெறும்.

இரண்டு, மூன்று படிகளில் மற்ற உயிரினங்களான பறவைகள், ஊர்வன, மிருகங்கள் போன்றவையும்,. அதற்கு மேல் ஆதிமனிதர்களைப் போன்ற குறவன், குறத்தி, செட்டியார் பொம்மை, வேடுவன், வேடுவப் பெண்மணி, பாம்பாட்டி போன்றவர்களும் வைக்கப் படுவார்கள். அதற்கு மேல் படியில் சாதாரணமனிதர்களும், ஆதிசங்கரர், விவேகானந்தர், புத்தர், ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான்களும் இடம் பெறுவார்கள். அதற்கடுத்து படிகளில் தெய்வத்தின் அவதாரங்கள், திருவிளையாடல்களைக் குறிக்கும் பொம்மைகளும், எல்லாவற்றுக்கும் மேல்படியில் அம்பிகையின் கலசமும், அம்பிகையின் உருவப் பொம்மையும் இடம் பெறும்.

மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பும் குண்டலினி சக்தியானது எப்படி சஹஸ்ராரத்தை அடைகிறதோ, படிப்படியாக அவ்வாறே படிகளையும் வைத்துப் பொம்மைகளையும் வைத்து மனித வாழ்வின் கடைசி எல்லை, பரப் பிரம்மப் பேரானந்தமய நிலையை அடைவது தான்
என்பதைக் குறிப்பால் உணர்த்துவதே கொலுவைப்பதின் உண்மையான தாத்பரியம்.

இறைவனின் பத்து அவதாரங்களும் அவ்வாறே மனிதனின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டும் விதமாகவே அமைந்துள்ளது. மீனாக, ஆமையாக, பன்றியாக, சிங்கமாக, வடிவெடுத்தவர் ஆதிமனிதனை நினைவு படுத்தும் விதமாய்க் குட்டையான மனிதனாகவும்,
சற்றே கோபமுள்ள பரசுராமனாகவும், சர்வ தகுதிகளும் நிரம்பப் பெற்ற பூரண மனிதன்
ஆன ராமன் ஆகவும், இந்த மாதிரியான மனிதன் அடுத்து அடைவது தெய்வ நிலை
என்பதைக் குறிக்கும் பலராம, கிருஷ்ண அவதாரமாகவும், கடைசியில் அனைத்து உயிர்ச்சக்தியும் ஒடுங்கும் இடம் இறைசக்தியிடமே என்பதைக் குறிக்கும் கல்கி அவதாரம்
கடைசி என்றும் வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். கொலுவில் இருந்து
எங்கேயோ போயிட்டதாய் நினைக்க வேண்டாம். கொலுவும் தொடரும், இன்னும்
இரண்டு நாள் தானே! வருவேன்!

Tuesday, October 16, 2007

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நவராத்திரி




இந்த உலகுக்கு ஆதாரமாக இருப்பவளே பெண்தான். அவள்தான் மூலாதார சக்தி. பெண் இல்லையேல் சிருஷ்டி இல்லை. உலகம் இல்லை. உயிர்ப்பு இல்லை. பூக்களிலே, புழு, பூச்சிகளிலே, நீர் வாழ் ஜந்துக்களிலே, மிருகங்களிலே என்று எல்லாவற்றிலும் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு. எல்லாமே இரண்டு தான் ஒன்றில்லை. ஆனால் அந்த இரண்டும் சேர்ந்த ஒன்று தான் உயிரைக் கொடுத்து சிருஷ்டிக்கிறது. அப்படி இருக்கும்போது பெண்ணை நவராத்திரி பெருமைப் படுத்தாமல் வேறு எந்த சமயம் பெருமைப் படுத்தும். நிச்சயமாயும், சத்தியமாயும் நவராத்திரி பெண்ணைப் பெருமைப் படுத்துவது தான்.

மஹாலயம் என்று சொல்லப் படும் ஆவணி மாதப் பெளர்ணமியிலிருந்து பதினைந்து நாட்கள் எவ்வாறு முன்னோர்களுக்கு என்று ஏற்பட்டு, அவர்களை நினைத்து முன்னோருக்கான நீத்தார் கடன்களைச் செய்கிறோமோ அவ்வாறே, அடுத்த பதினைந்து நாட்கள், அதாவது மஹாலய அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், "மாத்ருகா பட்சம்" என்று சொல்லப் பட்டு அந்த நாட்களில், அனைத்துப் பெண்களையும், தாயாகவும், சகோதரியாகவும் வரித்து அவர்களுக்கு உரிய மரியாதை செய்யப் படுகிறது. அதுவும் எப்படி? பெண் எப்படிக் குழந்தையில் இருந்து மங்கைப் பருவம் எய்துவாளோ படிப்படியாக அப்படியே சின்னக் குழந்தையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்ணின் ஒவ்வொரு பருவத்தையும் ஒவ்வொரு நாள் கொண்டாடி, அவள் இல்லையேல் வாழ்வின் ஆதாரம் இல்லை என உணர்த்தும் பண்டிகை இது. அம்மா என்பவள் நமக்கு உணவு அளிப்பாள். நாம் எவ்வளவு தவறு செய்தாலும், அம்மாவைச் சாப்பிட்டாயா எனக் கூடக் கேட்காமல் இருந்தாலும், அவள் நம்மை முதலில் கேட்கும் கேள்வியே, "சாப்பிடுகிறாயா?" என்பது தான். தாய் நம்மைப் பட்டினி போடுவாளா? ஆகையால் தான் அம்பிகையைத் தாயாகவும், மற்றப் பெண்களை, அம்பிகையாகவும் வரித்து அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள், பட்சணங்கள், பழங்கள், பூ வகைகள், வெற்றிலை, பாக்கு, துணி போன்றவை கொடுத்து சந்தோஷப் படுத்துகிறோம். இது ஒருவிதமான நன்றி அறிவித்தல் என்றும் கொள்ளலாம்.

இந்த அம்பிகை சக்தி வடிவத்தில் அனைவரிடமும் நிறைந்திருக்கிறாள். பிரம்மாவிடம் ஆக்கும் சக்தியாக இருக்கும் இவள், விஷ்ணுவிடம் காக்கும் சக்தியாக இருக்கிறாள். சர்வேஸ்வரனிடமோ அழிக்கும் சக்தியாக இருக்கிறாள். புல், பூண்டு முதல், எறும்பு முதல் அனைத்து ஜீவராசிகளிடமும் இந்த சக்தியானவள் நிரம்பி இருக்கிறாள். இவளுடைய சக்தி அளவிட முடியாது. நம்முடைய பாவங்களையும், மூடத் தனங்களையும் பெருக்கிக் கொட்டும் மூதேவியாகக் கையில் முறம், துடைப்பத்துடனும் இவளே காட்சி அளிக்கிறாள். இவள் கையில் வைத்திருக்கும் இந்த முறமும், துடைப்பமும் நமக்காகத் தான். நம் வீட்டை நாம் சுத்தப் படுத்த முடியவில்லை என்பதால் அவளே வந்து சுத்தம் செய்கிறாள். மனமாகிய காட்டில் இருண்டு கிடக்கும் இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து விளக்கு ஏற்றித் தன் சகோதரியான ஸ்ரீதேவியை வரச் செய்கிறாள். வட இந்தியாவில் இன்றளவும் துடைப்பத்தையோ, முறத்தையோ காலால் மிதிக்கவோ, அலட்சியமாக வைக்கவோ மாட்டார்கள். அதுவும் பூஜைக்கு உரியது எனச் சொல்லுவார்கள். இந்த சக்தியின் சொரூபங்கள் சிலவற்றைப் பின்னர் பார்க்கலாம்.

Monday, October 15, 2007

இப்போ கொஞ்சம் மொக்கை!

வந்து விட்டது, உங்கள் அபிமான "எண்ணங்கள்".
பல்வேறு விதமான கருத்துக்களுடனும், வித்தியாசமான மொக்கைகளுடனும் கூடிய "உ....ங்க.....ள் எண்ணங்கள், உங்கள் அபிமான எண்ணங்கள்.
உங்களுக்குத் தேவையான நவரசங்களும், ஏற்கெனவே கூறியபடி, தக்காளி, மிளகு, கூடுதலாய்ச் சீரக ரசத்துடன் காணப் படும் ஒரே பதிவு
"உங்கள் அபிமான எண்ணங்கள்"

வலை உலக வரலாற்றிலே முதல் முறையாகத் தலைப்பிலேயே "மொக்கை" போடும் ஒரே பதிவு, உங்கள் எண்ணங்கள்!

மொக்கையா, ஆன்மீகமா, இலக்கியமா, தரித்திரமா, சீச்சீ, சரித்திரமா? எது வேண்டுமானாலும் ஒரே இடத்தில் கிடைக்கும் "உங்கள் அபிமான எண்ணங்கள்!"

பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் படாத ஒரே பதிவு உங்கள் எண்ணங்கள்! இன்றே பாருங்கள், உங்கள் எண்ணங்கள்.

கொலு இன்னும் முடியலை!



நவராத்திரி பற்றிப் பலரும் எழுதியாச்சு, நான் புதிசா என்ன சொல்றது? பொதுவாய் எல்லாருமே அம்மாவிடம் இருந்து தான் பிறக்கிறோம். நம் பிறவிக்குத் தாயாக இருப்பவள் எப்படி ஒரு பெண்ணோ, அது போல சகல ஜீவராசிகளையும் பிறப்பித்தவள் தான் அந்த
"ஆதி பராசக்தி, ஜகன்மாதா" ஆவாள். அவளுடைய கருணையை நம்மால் அளந்து பார்க்க முடியாது. அளவிட முடியாத கருணை கொண்ட அவளின் சக்தியும் அளவிடமுடியாதது. அவள் சக்தியைப் போற்றும் விதமாய்த் தான் "நவராத்திரி" மூன்று தேவியரையும் நினைவு கூரும் விதத்தில் கொண்டாடப் படுகிறது. நம் போன்ற சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதற்காகவே, அதை உணர்த்தும் விதமாய் இந்தப் பண்டிகை நாட்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப் படுகிறது. அதற்காக மற்ற நாட்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை எனவும், ஆணாதிக்கம் எனவும் அர்த்தம் ஆகாது. பெண்ணின் சக்தியை நினைவு கூரவும், அது இல்லை எனில் இவ்வுலக மாந்தருக்கு வாழ்வாதாரம் இல்லை என்பதையும் நினைவு கூரவே இந்தப் பண்டிகை.

புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் நடு இரவு எனச்சொல்லுவதுண்டு. மிகவும் அமைதியாக இருந்து முன்னோர்களை வழிபடுவதற்கும், தெய்வ வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் இது தான். கடும் வெயிலும் சரி, மழைக்காலமும் சரி நமக்கு உடலில் பல்வேறு விதமான வியாதிகளையே உண்டாக்கும். இந்தக் காலங்களை யமனின் கோரைப் பற்கள் எனச் சொல்லுவதுண்டு. ஆகவே இந்த உபாதைகளில் இருந்து விடுபடவும், மனம் இறைவனிடம் ஆழ்ந்து போகவும் ஏற்பட்டதே மஹாலயம் என்று சொல்லப் படும் மஹாலயக் காலத்தில் செய்யப் படும் கர்மாக்களும் அதன் பின்னர் வரும் 10 நாட்கள் முழுக்க முழுக்க படைத்துக் காத்த இறைவிக்கு நன்றி செலுத்தும் விதமாயும் கொண்டாடப் படுகிறது.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்களில் தேவியைத் "துர்க்கை"யாகவும், அடுத்த மூன்று நாட்கள் "மஹாலட்சுமி"யாகவும், கடைசி மூன்று நாட்கள் "சரஸ்வதி"யாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுகிறோம். கோபம் கொண்ட மனம் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தம் அடைந்து ஞானவழிக்குத் திரும்புவதையும் இது குறிக்கிறது. துர்கை கோபக் காரி, அடுத்த மஹாலட்சுமி கொஞ்சம் சாந்தம் என்றாலும் அவளும், தேவை எனில் கோபம் கொள்ளுபவள் மட்டுமில்லாமல், அவள் நம்மை விட்டு விலகியும் போய் விடுவாள். அடுத்து சரஸ்வதியைத் தஞ்சம் அடைந்தால் நமக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் பிறக்கும் என்பதற்கும் இந்த வழிபாட்டு முறை என்றாலும், தேவி பாகவதம் சொல்லும் படி மது,கைடப சம்ஹாரத்தைத் துர்கையும், மஹிஷனை மஹாலட்சுமியும், சும்ப, நிசும்பர்களைச் சரஸ்வதியும் சம்ஹாரம் செய்ததாகக் கூறுகிறது. இது எல்லாவற்றையும் செய்தவள் "தேவி" ஒருவளே என்றாலும் அவளின் அந்த அந்தக் கோலத்தையும், அவளின் சக்தி வெளிப்பாட்டையும் வைத்து வெவ்வேறு பெயர்களில் வணங்குகிறோம். இது பற்றி இன்னும் தொடரும், எண்ணங்களுடன்.

Saturday, October 13, 2007

ஆஹா வந்திடுச்சு, ஓடி வாங்க!




கொலுவுக்கு வந்து பார்த்து விமரிசனம் பண்ணின எல்லாருக்கும் நன்றி. ராத்திரி எல்லாம் பொம்மை எல்லாம் ஒரே சண்டை, பூசல், சச்சரவு. எங்க வீட்டுக் கொலுவிலேங்க, பொம்மை எல்லாம் இட நெருக்கடியில் தவிக்குது. ஒரு பெட்டி பொம்மையை எடுக்கவே இல்லை, பெரிய பொம்மை 2 அல்லது 3 தான் வச்சிருக்கு, அப்படியும் இந்த வெயிலில் எல்லாம் இப்படிப் போட்டு அடைச்சு வச்சிருக்கியேன்னு என் கிட்டே சண்டை, ஹிஹிஹி, தூக்கத்திலே தான், சொப்பனம்! நான் என்ன சொன்னேன் தெரியுமா? இது என்ன பெரிய இட நெருக்கடி, நாங்க லுஃப்தான்ஸா ஏர்வேஸில் வந்தோமே அதை விடவான்னு திருப்பிக் கத்தினேன். எல்லாம் வாயை முடிக்கிட்டது, அப்புறம் திறக்கவே இல்லையே!

சென்னை -ஃப்ராங்க்பர்ட், ப்ராங்க்பர்ட் -சென்னை வழியே லுப்தான்ஸா ஏர்வேஸில் எகானமி கிளாசில் பயணிக்கும் எங்களைப் போன்ற அல்ப ஜன்மங்கள் படும் அவதி இருக்கே சொல்லி முடியாது. போன முறை என்ன பண்ணிட்டாங்கன்னா, நடுவிலே உள்ள 4 பேர் உட்காரும் சீட்டில் நடு இரண்டு சீட்டைக் கொடுத்துட்டாங்க. யார் கிட்டே போய்ச் சொல்றது? இது என்ன ரயிலா டி.டி.ஆரிடம் சண்டை போட? ஆஹா, அந்த சுகம் வருமா டிடிஆரிடம் சண்டை போட்டு இடம் மாற்றிக் கொள்வது ஒரு அற்புத சுக அனுபவம். இங்கே என்ன செய்யறது வாயை மூடிக்கிட்டோம். அப்படியும் எங்க இரண்டு பேருக்கும் எல்லைப் பிரச்னை வந்துடுச்சு. இரண்டு பக்கத்திலேயும் உள்ளவங்களுக்கு மொழி புரியாதுனாலும் சண்டைனு புரிஞ்சு போய் ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. முறைப்புடன் அப்புறம் வச்சுக்கறேன்னு சொல்லி இரண்டு பேரும் வெற்றிகரமாய்ப் பின் வாங்கினோம். இம்முறை அதுக்கு வழியே இல்லாமல் என்னோட மறுபாதி டிக்கெட் புக் செய்யும்போதே போக வர, இரண்டு சீட்டுத்தான் வேணும்னு கேட்டு வாங்கிட்டார் ஏஜெண்ட் கிட்டே சொல்லி.

போகும்போது 22-ம் நம்பர்ங்கிறதாலே முன்னாலே கிடைச்சுடுச்சா, அதிகம் பிரச்னை இல்லை. என்ன இந்தக் கை வைக்கும் ஹாண்டில் பார் இருக்கே, அதிலே இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கையை வைக்க முயற்சி செய்வோம். இந்த வம்பே வேணாம்னு அதை எடுத்துவிட்டு, நாங்க தான் "ஆதர்சத் தம்பதிகள்" னு காட்டிக்கலாமேனு ஒரு அல்ப ஆசையில் உட்கார்ந்தோம். இப்போ வந்தது இடப் பற்றாக்குறை. எனக்கு இடமே இல்லை. எல்லாம் அவரோட ஆக்கிரமிப்பு, அநியாயம். அவர் கிட்டே சொல்லிக் கொஞ்சம் நகர்ந்து உட்காரச் சொன்னால், முறைப்பு. மிஞ்சிப் போனால், "நீ இத்தனூண்டு இருக்கே, இந்த இடம் போதும் உனக்கு, எங்க அம்மா என்னை இவ்வளவு உயரமும், பருமனுமாப் பெத்து வச்சுட்டாளே! என்னை என்ன பண்ணச் சொல்றே"ன்னு சொல்றார். என்னத்தைச் சொல்றது. சரினு இந்தத் தகராறே வேணாம்னு மறுபடியும் ஹாண்டில் பாரைப் போட்டு விட்டேன். அப்போ கை வைக்கிறதிலே மறுபடி சண்டை. இந்திய, பாக் பிரிவினைக்கு எவ்வளவு கஷ்டப் பட்டு எல்லைக் கோடு போட்டிருப்பாங்கன்னு இப்போத் தான் புரியுது! இரண்டு பேரும் கை வச்சுக்கலாம்னு சமாதான உடன்படிக்கை வாய் மொழியாக ஏற்பட்டது.

என்ன உடன்படிக்கை ஏற்பட்டாலும் என்ன? திரும்பி வரும்போது கடைசியில் போட்டுட்டாங்க, இரண்டு சீட்டுத் தான் என்றாலும், பின்னால் ஒரு "தமிழ்குடிமகன்" வந்து உட்கார்ந்து கொண்டு பியரால் தனக்குத் தானே அபிஷேஹம் செய்து கொண்டு வந்ததோடு அல்லாமல், என்னையும் கூப்பிட்டுக் கையை இப்படி வைக்காதே, தலையை நேராய் வைனு ஒரே தொந்திரவு. என் கையும், தலையும், என்னோட உடம்பில் இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கும்னு அவருக்குப் புரிய வைக்க முடியாமல் கஷ்டப் பட்டேன். ஏகக் கூட்டமா, பசங்க எல்லாம் நின்று கொண்டே வந்ததில் சரிதான், ஸ்டாண்டிங் கூட அனுமதிக்கிறாங்க போலிருக்குனு ஆச்சரியப் பட்டேன். கடைசியில் பார்த்தால் எல்லாரும் இந்த 4 சீட்டில் உட்கார முடியாமல் அதுக்கு நிக்கலாம்னு முடிவு பண்ணி நின்னுட்டிருக்காங்க. தலையில் அடிச்சுக்கறதைத் தவிர வேறே வழியே இல்லை. இந்த லுப்தான்ஸாவில் சீட்டை அதிகரிச்சுட்டு, சாமான் எடுத்துப் போறதை எடை குறைச்சுட்டாங்க அநியாயமா! அதோட சாமான் எல்லாம் வேறே சென்னையில் இருந்து போகும்போது சரியா வரதில்லை. எங்க வீட்டிலே ஒரு சூட்கேஸ் கிட்டத் தட்ட ஒரு லட்சம் மதிப்பான பொருட்களுடன் வராமல் போய்க் கிளைம் பண்ணியதில் அல்பத் தனமா 22,000/- கொடுத்தாங்க.

இதை எல்லாம் ராத்திரி பொம்மைங்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வச்சதும் இப்போக் கொஞ்சம் பேசாமல் இருக்கு. கொலு படம் எங்க வீட்டுக் கொலு இல்லைன்னாலும், கொலு வச்சிருக்கறது, சுண்டல் செய்யறது எல்லாம் உண்மைதான். உங்களுக்குத் தான் கொடுத்து வைக்கலை, என்ன செய்யறது. தலைப்புக்கும், பதிவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்றவங்களுக்கு, இன்னிக்கு இணைய இணைப்பு வந்திடுச்சு, அதுக்குத் தான் தலைப்பு! அப்புறம் அம்பி, ஒரு விஷயம், பால்காரரும் பால் ஒரு வாரமாக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சுட்டார். ஆகையால் நல்ல காஃபி குடிக்கிறோம். உங்களுக்குத் தனியா பருத்திக் கொட்டை வாங்கி வச்சிருக்கேன். அதை அரைச்சுப் பால் எடுத்து வைக்கிறேன். கேசரிக்கும் விளக்கெண்ணெய் தயார். க்ர்ர்ர்ர்ர்,. பாட்டியா நான்? நல்ல பையன் சந்திரமெளலியைத் தூண்டியா விடறீங்க? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது! :P
test

Friday, October 12, 2007

கொலு வச்சிருக்கேன், எல்லாரும் வாங்க!




என்னடா, கமென்ட்ஸ் எல்லாம் வந்திருக்கு ஒண்ணுமே பதிலைக் காணோமேன்னு நினைக்காதீங்க. வழக்கம் போல் உ.பி.ச. கமென்ட்ஸ் பப்ளிஷ் பண்ணறாங்க கடமை உணர்ச்சியோட! அவங்களுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ! இப்போ எங்க வீட்டுக் கொலு பத்திச் சில வரிகள். அம்மா வீட்டிலேயும் கொலு வைக்கிற பழக்கம் உண்டு, கல்யாணம் ஆகி இங்கே வந்தும் தொடருது, இன்னும் சொல்லப் போனால் ராஜஸ்தான், குஜராத்திலே எல்லாம் கூட நம்ம கொலு ஒரு கலக்கு கலக்கி இருக்கு. இங்கே கேட்கணுமா? ஆனால் பாருங்க, கொஞ்ச நாளாவே என்னாலே இந்தக் கீழ் அலங்காரம், அதான், பார்க், தெப்பக்குளம், மலை எல்லாம் கட்ட முடியறதில்லை, ஒவ்வொரு வருஷமும் சரியாக் கொலு சமயம் எல்லாரும் பாட்டுப் பாட பயிற்சி எடுத்துட்டால் நான், இருமல் வராமல் இருக்கப் பயிற்சி எடுத்துப்பேன். அப்போதான் மழையும், வெயிலுமா மாறி மாறி வருமா? எல்லார் வீட்டுக்கும் போனால் நம்ம இருமல் தான் பாட்டுக் கச்சேரி செய்யும். அதனால் என்னோட மறுபாதி ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டாச்சு, பேசாமல் படியில் நாலு பொம்மையை வைச்சுட்டு உட்காருன்னு. நானும் சேர்ந்து உட்கார்ந்தால் படி தாங்காதேனு தோணும். இருந்தாலும் அந்த மாதிரித் தான் செய்துட்டு வரேன். ஹிஹிஹி, படியில் உட்காருவது இல்லை. பேசாமல் பொம்மையை வச்சுட்டுக் கீழே மேலே எல்லாம் அலங்காரம் செய்யறதை விட்டாச்சு.

இந்தப்படி கட்டறதுக்கு ஒவ்வொரு வருஷமும், நாங்க படற கஷ்டம் இருக்கே, ஊஞ்சலைக் கழட்டிப் பலகையை எடுத்துப்போம். உட்காரவும், படுக்கவும் உள்ள தீவானையும் எடுத்துக்குவோம். அப்புறம் அக்கம்பக்கம் வீடு கட்டினாலோ அல்லது, தெரிஞ்சவங்க கிட்டேயோ சொல்லி வச்சு 100 செங்கல் வாங்கி வச்சுக்குவோம். வீட்டிலே உள்ள ப்ளைவுட் எல்லாம் எடுத்துத் தயாரா வச்சுப் படி கட்டுவோம். அப்படியும் 5 படி தான் வரும். அந்த 5 படிக்குள்ளே எல்லா பொம்மையையும் வைக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும். அப்படியும், மரச்சொப்புக்கள், பித்தளை, வெங்கலப் பாத்திர செட்டுக்கள், செட்டியாரின் கடைபோடும் செட்டுகள், சங்கு, கிளிஞ்சல் வகைகள், மற்ற இதர அலங்காரப் பொருட்களை வைக்க முடியாது. பொம்மை எல்லாமே இட நெருக்கடியில் தவிக்கும். சாஸ்திரப் படி மேல் படியில் முதலில் தசாவதார செட் வைக்கணும். நான் பிறந்தப்போ (ஹிஹிஹி, நிஜம் தான்) வாங்கினாங்களோ என்னமோ தெரியலை, அது ரொம்பவே சின்ன செட்டா இருக்குமா, பக்கத்தில் உள்ள பெரிய பொம்மைகள் மறைக்கும். சரினு குருவாயூரப்பன் பொம்மையை விராட புருஷனா உருவகம் செய்து நடுவில் வச்சுட்டுப் பக்கத்தில் தசாவதாரத்தை வரிசைப் படி வச்சால், இந்தக் கூர்மாவதாரத்துக்குக் கோபம் வந்து, மூக்கில் இருக்கும் பூமி உருண்டையை உடைச்சு வச்சுடுச்சு. மற்றப் பொம்மைகளும் பயங்கர இட நெருக்கடின்னு கோவிச்சுட்டு திரும்பிக்கிட்டது. என்ன செய்யறதுன்னு புரியலை.

புலி பக்கத்தில் மானையும், கருடன் பக்கத்தில் கிளியையும் வைக்க வேண்டி இருக்கு. பொம்மையின் அமைப்பு அந்த மாதிரி இருக்கு. ஏதோ ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி வச்சால், ராத்திரி எலி வந்துடுது. இது நிஜ எலி. எலியோட ஒரு என்கவுன்டர் நடத்தி அதைச் சாகடிக்கலாம்னால் அது "எதிரி" படத்திலே மாதவன் தப்பிக்கிற மாதிரி கூட்டத்தோடு கூட்டமா ஓடிப் போயிடுச்சு. ஒரே தலை சுத்தல். அப்புறம் எலியை விஷம் வச்சுத்தான் கொல்லணும்னு முடிவு செஞ்சிருக்கோம். ரகசியமா அதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. இத்தனை அமர்க்களத்திலேயும் இன்னும் மோட்டார் சரியாகலை, ஏ.ஸி.னு எழுதிப்பார்த்துட்டு இருக்கோம், ஃபிரிட்ஜ்னால் என்ன சீட்டாட்டமானு கேட்டுட்டு இருக்கோம். பி.எஸ்.என்.எல். காரங்க கிட்டே இன்டெர்னெட்டுக்குப் போனால் (அம்பி, வேறே வழியே இல்லை, சொல்லித் தான் ஆவேன், நீங்க இதைப் படிக்காமல் தாண்டிப் போய்க்குங்க) அங்கே நாங்களே செர்வெர் ஓவர்லோடிலே இருக்கிற கனெக்க்ஷனை டிஸ்கனெக்ட் செய்துட்டு இருக்கோம், எதுக்கும் அப்ளிகேஷனை வாங்கி எழுதிக் கொடுங்க, ஒரு மாசத்திலே சரியாப் போச்சுன்னால் உங்களுக்கு கனெக்க்ஷன் வரும்னு சொல்லிட்டாங்க, சரினு ஏர்டெல்லுக்குப் போனால் இதோ வீட்டுக்குப் ப்ளானை எடுத்துட்டு வரோம்னு சொன்னாங்க, இன்னும் வீட்டைத் தேடிட்டு இருக்காங்க, போலிருக்கு, பத்து நாளா வரலை, தலை விதியை யாரால் மாத்த முடியும்னு, முந்தாநாள் என்னோட மறுபாதி வி.எஸ்.என்.எல்லுக்குப் போய்ப் பணம் கட்டிட்டு வந்துட்டார். இதோ, வந்துடும்னு மூணு நாளா சொல்லிட்டு இருக்காங்க, மூணு நாளா வீட்டை விட்டு வெளியே போக முடியலை. யாராவது வீட்டிலே இருக்க வேண்டி இருக்கு. அதான் ஓ.சி. கணினியிலே வேலை செய்யக் கூட வர முடியலை. எதிர்க் கட்சிகளுக்கு சந்தோஷமா இருக்கும். அவங்க சதி பலிச்சுடுச்சுனு. ம்ம்ம்ம்., புயல் போல் பொங்கி, கடல் அலை போல் வீறு கொண்டு எழுந்து, இதோ வந்துடுவேன். அதுவரை எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!! மறந்துட்டேனே, கொலுவுக்குச் சுண்டல் தினமும் உண்டு, உங்க எல்லார் பேரையும் சொல்லிட்டு நான் சாப்பிட்டுக்கறேன்!

கொலு படம் கடனாக் கொடுத்தப் "பிரியமான நேரம்" "கண்ணாளனே" "பிரியா"வுக்கு நன்றி.

Monday, October 08, 2007

இன்னும் கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணுங்க!




ரொம்பவே நாளாச்சு, நான் வந்து. எல்லாரும் ரொம்பவே சந்தோஷமா இருந்திருப்பீங்கனு தெரியுது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஒருத்தி கொஞ்சம் வேலைனு வரலைனா இத்தனை சந்தோஷமா? இன்னும் ப்ராட்பான்ட் கனெக்ஷன் வரலைங்கிறது ஒரு காரணம்னா, முக்கியமான காரணம், கொஞ்சம் வேலையும் அதிகம். எல்லா ஆணியையும் பிடுங்கிட்டு வரதுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இன்னும் சில ஆணிகளைக் கொஞ்சம் கொஞ்சமா பிடுங்கிக்கலாம். அதுக்குள்ளே நவராத்திரி வந்துடும்.

எலி வேறே ரொம்பவே தொந்திரவு பண்ணிட்டு இருக்கு. ஆறு மாசமா வாடகை கொடுக்காமல் குடி இருந்துட்டு, இப்போ எங்களையே மிரட்ட ஆரம்பிச்சிருக்கு. எப்படி வெளியே அனுப்பினாலும் உள்ளே வந்துடுது. அதுகளோட குஞ்சுகளை நான் வெளியே தூக்கிப் போட்டதுக்குக் கோபம் போலிருக்கு. கடிக்க வருது! ராத்திரி இதை நினைச்சே தூங்க முடியறதில்லை. ஆனால் நாங்க எங்கே போனாலும் இம்மாதிரித் தான் குடியும், குடித்தனமுமாய் இருந்திருக்கோம். இங்கே பரவாயில்லை. பகலில் எலி வெளியே வரதில்லை. ராஜஸ்தானில் இருந்தப்போக் கூடவே வந்து சமைக்கும். சாப்பிடும்போதும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்து கொண்டு அதுக்கும் ஒரு தட்டுப் போட்டு சாப்பாடு பறிமாறணும்னு சொல்ற அளவுக்கு ஸ்வாதீனமாய் இருக்கும். ஒரு சாமானை வெளியே வைக்க முடியாது.

ஒரு முறை இந்த எலிகளின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் மருந்து வச்சோம். எலியும் செத்து விழுந்தது. அப்போ ராத்திரி நேரமா? தூங்கிட்டு இருந்தோம். பையன் பார்த்துட்டுச் சொன்னதும் எல்லாரும் போய்ப் பார்த்துட்டு செத்துப் போனதை உறுதி செய்து கொண்டு, காலையில் எடுக்கலாம் குளிக்கும் முன்னர்னு முடிவு செய்து வந்து படுத்து விட்டோம் காலையில் எழுந்து பார்த்தால் எலியின் பாடியைக் காணோம். தமிழ் சினிமாவில் செத்துப் போன வில்லன் மறைந்து போவது போல் மறைந்து விட்டது. தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இன்னிவரையில் அது ஓர் மர்மம்.

அப்புறம் இந்தப் பால் வேறே தொந்திரவு. அர்ஜுன் அம்மா தான் வாங்கறாங்களே, அர்ஜுன் மாதிரி நமக்கும் புத்திசாலித் தனம் வரட்டும்னு 41/2ப் பால் வாங்க ஆரம்பிச்சேன். 41/2 அவுன்ஸ் காஃபி கூடக் குடிக்கப் பிடிக்கலை. எங்க பால்காரரைக் கோயில் கட்டிக் கும்பிடணும். பொதுவா எல்லாப் பால்காரங்களும் விலையை 2 வருஷத்துக்கு ஒருமுறையாவது ஏத்துவாங்க. வாடிக்கைக் காரங்க சண்டை போடறது உண்டு. இவரிடம் நாங்க விலையை ஏத்துங்கனு பத்து வருஷமா சண்டை போட்டு இப்போ ஜனவரி 2007-ல் இருந்து தான் லிட்டர் 12 ரூக்கு ஏத்தினார். இப்போ 15 ரூ கூடக் கொடுக்க ரெடியா இருக்கோம். பால் தான் இன்னும் கொடுக்க ஆரம்பிக்கலை. அமெரிக்காவில் தான் வேறே வழியே இல்லை. டின்னில் அடைத்த பால், இங்கே வந்தாவது புதிய பால் கிடைக்கும்னு நம்பினதுக்கு நல்ல ஏமாற்றம் தான்.

யு.எஸ்ஸில் 1%, 2% என்று ஆரம்பித்து, பரிட்சை மார்க்குகள் மாதிரி பாலின் சதவீதம் கூடிப் போனாலும், அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. நாங்களும் ஆர்கானிக் பால், ஹோல் மில்க், என்று எல்லாம் வாங்கிப் பரிட்சை செய்து பார்த்து விட்டுக் கடைசியில் ஹாஃப் அன்ட் ஹாஃப் பாலில்தான் காஃபி கொஞ்சம் குடிக்கிறாப்போல் இருக்கும்னு ஒரு ஆய்வே செய்து கண்டு பிடித்தோம். இந்த ஹாஃப் அன்ட் ஹாஃப் பால் பத்தி ஒரு சிறப்பு நிகழ்ச்சியே இருக்கு. அதை அப்புறமா எழுதறேன். மெளலிக்கு ரொம்பவே மண்டையைக் குடைஞ்சிருக்கு, மாடு வச்சிருக்கோமானு. இதுக்காக வேலை மெனக்கெட்டு ஆணி பிடுங்கிறதையும் விட்டுட்டு தொலைபேசித் தெரிந்து கொண்டார். மாடு இருக்குனு தெரிஞ்சால் அங்கே கூட ஒண்ணு ஓட்டி விட்டிருக்கச் சொல்லுவாரோ என்னமோ? :P அப்புறம் வல்லி அங்கே சாப்பிடக் கூப்பிட்டாங்க, அவ்வளவு தூரம் யார் போய்ச் சாப்பிடறது? ஒருவேளை மைலாப்பூருக்கேக் குடித்தனம் வந்தால் வந்து சாப்பிடறேன்னு சொல்லிட்டு வச்சேன், தொலைபேசியை. நம்ம அருமை உ.பி.ச.வும் ஊரிலிருந்து வந்ததும் வராததுமா பேசினாங்க. உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்கள் தெரிஞ்சுக்கறதுக்கு அவங்களை விட்டால் யாரு நமக்குச் சொல்லப் போறாங்க?

ரெண்டு பேருக்கும் ஒரு டைலமா! மணிப்ரகாஷுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு அவங்களும், இல்லைனு நானும் சொல்லிட்டு இருந்தோம். அவங்க போய் வாழ்த்திட்டு வந்து இருக்காங்க, இருந்தும் சந்தேகம் வந்துடுச்சு. இப்போ மணிப்ரகாஷ் தான் வந்து சொல்லணும். அப்புறம் வரேன். அதுக்குள்ளே வீட்டுக்குக் கனெக்ஷன் வரணும்னு நான் வேண்டிக்கிறேன். என்னோட மறுபாதி நான் தண்ணிரில் இருந்து எடுத்துப் போடப் பட்ட மீனைப் போல் தவிப்பதாய் பிட் நோட்டிஸ் அடிச்சு விநியோகம் செய்துட்டு இருக்கார். என்னத்தைச் சொல்றது? எல்லாம் என்னோட ஹெட்லெட்டர்! அது சரி, எங்கே அபி அப்பா காணோம்? நான் வரலைன்னதும் தப்புத் தப்பாப் போஸ்ட் போட ஆரம்பிச்சுட்டாரா என்ன?

என்னத்தைச் சொல்றது? இந்தக் கணினியும் சதி வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு! பாப்-அப் ப்ளாக் ஆகிப் படம் போட வரலை, ஜி3 செய்ய முடியலை. ஒரு 4 நாள் வரலைன்னதும் இதுவும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிருக்கே, பாப்-அப்பை ரிமூவ் செய்து விட்டுப் படம் போட்டிருக்கேன். ரொம்பக் கஷ்டப் பட்டு ஜி3 செய்திருக்கேன், கடவுளே, ஏன் என்னோட அனுபவங்கள் மட்டும் விசித்திரமாயே இருக்கு? :P

Thursday, October 04, 2007

என்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை!




கொஞ்ச நாளைக்குத் தலைமறைவா இருக்கலாம் போலிருக்கே? கமென்ட் மழை பொழிஞ்சிருக்கீங்க எல்லாரும்? உங்க பாசத்தை நினைச்சால்............ கண்ணீர் மழை போல் கொட்டுது!, இன்னும் "broadband connection" வாங்கலை, அதுக்கு ஒரு யுத்தம் நடந்துட்டு இருக்கு. ஆகவே உங்க எல்லாருக்கும் இப்போ ரொம்ப நல்ல நேரம்னு நினைக்கிறேன். எலியை ஒரு மாதிரியா விரட்டிட்டுப் பார்த்தால், அடுத்தது குளிர்சாதனப் பெட்டி. அதைச் சுத்தம் செய்துவிட்டுப் போட்டால் ஸ்டெபிலைசர் எரியவே இல்லை.
ச்டெபிலைசர் இல்லாமல் அப்படியே போட்டால் குளிரோ குளிர், அது தாங்காமல் காய், கனி, பால் எல்லாம் விறைச்சுப் போகுது. புத்தம்புது ஃப்ரிஜ். க்ர்ர்ர்ர்ர்ர்., இப்போ அது வேறே ரிப்பேர் பார்த்தாகணும். ஏற்கெனவே தண்ணீருக்கு மோட்டார் இல்லை, ஏ.சி. இல்லை, இப்போ ஃப்ரிஜும் இல்லையா? அடுத்துப் பால், காஃபி தான்! அதுக்கும் வந்ததே வினை!

எங்க வீட்டுக் காஃபி உலகப் பிரசித்தி பெற்றது! இங்கே வந்து ஒரு முறை சாப்பிட்டவர்கள் அந்தக் காஃபி பத்தி ஒரு புராணமே எழுதி இருக்காங்கன்னா பார்த்துக்குங்களேன். முன்பெல்லாம் பத்து வருஷங்கள் முன்பு வரை கொட்டையை வீட்டிலேயே வறுத்து, வீட்டிலேயே அரைத்து, வீட்டிலேயே மாடு கறந்து காஃபி! இது எல்லாம்தான் நடந்தது! ஆனால் இப்போ எங்கே? இருந்தாலும் பால் மட்டும் இந்தப் பாக்கெட் பால், ஆவின், ஆவின் இல்லாத பாவின், ஆரோக்கியா, ஆரோக்கியம் இல்லாதது வாங்கியதே இல்லை. சுத்தமான கறந்த புதுப் பால்தான் 6 மாதம் முன்பு வரை! அதுக்கும் வந்தது வேட்டு! இம்முறை எங்க பால்காரர் மாடு கன்னு போட்டுப் பால் நிறையக் கறந்தால் தான் பால் எடுத்து வரமுடியும்னு திட்டவட்டமாய் அறிவித்து விட்டார்.

வாழ்நாளிலேயே முதன்முறையாக பாக்கெட் பால் வாங்க ஆரம்பிச்சிருக்கேன். ஒரு ஆறு மாசம் போனதுக்கே இப்படி ஆயிடுச்சு பாருங்க! லிட்டர் 12 ரூக்குப் பால் வாங்கிட்டு இருந்தது போய் இப்போ அரை லிட்டரே பத்து ரூபாய்க்கு வாங்கும்படி ஆயிடுச்சு! :( இதிலே போய்க் காஃபி வேறேயா? காஃபியையே ஒழிச்சுக் கட்டிடலாமானு இருக்கு! @அம்பி, இப்போ சந்தோஷமா? ஃபோனிலே கூட அண்ணனும், தம்பியும் காஃபிக்குக் கரிச்சுக் கொட்டினீங்களே, அது வாயிலேயும் மண்ணு இப்போ! ஆனால் இந்தப் பால் வராததுக்கு நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க முடியலை! அது கொஞ்சம் வருத்தமாய் இருந்தாலும், அடுத்து ப்ராட்பான்டுக்கு இப்போ சண்டை நடந்துட்டு இருக்கு! அதிலே என்னனு புரியலை. இன்னிக்கு வரை எந்தக் கனெக்ஷனுக்கும் முயற்சி செய்யலை.

எனக்கு தெரியாத வேதாளத்தை விடத் தெரிந்த பேயான "டாட்டா இன்டிகாமே" பரவாயில்லைனு தோணிச்சு. பணம் வேறே அவங்க கிட்டே மிச்சம் இருக்கு! ஆனால் என்னவருக்கோ நான் என்ன சொல்றேனோ அதுக்கு மறுப்பு தெரிவிப்பது தான் முதல் வேலை ஆச்சே! ஆகவே, ம்ம்ம், சரி, பார்க்கலாம், நான் போய் நேரிலே பணத்தைக் கட்டிட்டு அவங்களை நாக்குப் பிடுங்கிக்கிறாப்பலே நாலு வார்த்தை கேட்டுட்டு வந்துடறேன்னு சொல்லிட்டாரா? நாம் மகிழ்ந்து போய் நிஜம்னு நம்பி எல்லாம் ஹெட் லெட்டர்! செவ்வாயன்று போகிறேன்னு சொன்னவர் இன்றுவரை அங்கே தவிர மற்ற இடங்களுக்கு எல்லாம் போய் விட்டுப் போன மற்ற வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டார். இது பற்றிய ஆய்வு இன்னும் நடந்துட்டு இருக்கு, ஒவ்வொருத்தரோடா பேசிட்டு இருக்கார். இன்னிக்கு ஏர்டெல், பி.எஸ்.என்.எல். எல்லாத்துக்கும் பேசிப் பார்த்தாச்சு, இன்னும் ஒரு முடிவும் செய்யலை, உன் இஷ்டம், உன் இஷ்டம்னு சொல்லிட்டே, கடைசியில் அவர் இஷ்டம் போல் நடத்திக்குவார். ஆனால் எனக்கு அது கடைசியில் தான் புரியும். என்னை மாதிரி ஒரு அ.ச.டி. யாரு இருப்பாங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இப்போ எனக்கே தெரியாது, வரப் போகிறது பி.எஸ்.என்.எல்.? ஏர்டெல்? டாட்டா இன்டிகாம்? இங்கே ஒரு பெரிய வாத விவாதமே நடந்துட்டு இருக்கு. போகிற இடங்களில் எல்லாம் தகவல் சேகரிக்கிறார்.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை விட நான் இப்போது ப்ராட்பன்டுக்குப் போடப் போகும் ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு எனக்கே தோண ஆரம்பிச்சு இருக்கு! அந்த அளவுக்கு வேலை செய்யறார். என்ன முடிவுன்னு எனக்குத் தெரிஞ்சால் உங்களுக்கும் அது தானாவே தெரியும்! அது வரை விட்டேன் ஜூட்! அப்புறம் நான் தனித்தனியாப் பதில் போடலைனு யாரும் தப்பா எல்லாம் நினைச்சுக்க மாட்டீங்க, அப்பாடா தொல்லை விட்டதுன்னு தான் நினைச்சுப்பீங்க! நல்லாத் தெரியும், இருந்தாலும் ஒரு ஃபார்மாலிடிக்குச் சொல்றேன், யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம், வந்து வட்டியும் முதலுமாப் பதில் சொல்றேன், ஹிட் லிஸ்டாவது எகிறும்! விட்டுக்கு கனெக்ஷன் வரட்டும்னு பார்க்கிறேன். இன்னொருத்தர் வீட்டிலே எத்தனை நாள் உட்கார்ந்து மணிக்கணக்காய் வேலை செய்யறது? வல்லி, உங்க டெலிபோன் நம்பர் இங்கே கம்ப்யூட்டரிலேயே இருக்கா, அதான் உங்களுக்கு பதில் சொல்ல முடியலை. எங்க வீட்டிலே காலர் ஐடி இல்லை! :(

Tuesday, October 02, 2007

ஜெயிக்கப் போறது யாரு? டாமா? ஜெரியா?




அமெரிக்காவுக்குக் கிளம்பும்போதே ஒரு வாரம் முன்னாலேயே ஏசி. "அஸ்து" கொட்டி விட்டது. ரொம்ப நல்லதாப் போச்சுனு கம்ப்ரெசரைக் கழட்டி வச்சுட்டு நிம்மதியாக் கிளம்பினோம். அங்கே போன சில நாட்களிலேயே போர்வெல் மோட்டாருக்குச் சனி பிடிச்சிருக்கு. அதைச் சரி பண்ணி, சரி பண்ணி அலுத்துப் போன எங்க வீடு கேர் டேக்கர் ஒரு நிலையில் மனம் நொந்து போய், கிணற்றில் தண்ணீர் நிறையவே வந்திருப்பதால், கைவிட்டு எடுக்க முடியும், நான் அதை உபயோகித்துக் கொள்கிறேன், உங்க பாடு, உங்க மோட்டார் பாடுனு சொல்லிட்டார். திரும்ப இன்னும் ஒரு மாசம் இருக்கையிலே அவர் தயவு வேணுமேனு அவரை ஒரு வழியா சமாதானப் படுத்தி வச்சோம். இதுக்குள்ளே எங்க ரெண்டு பேருக்கும் எத்தனை சண்டைனு சொல்றீங்க?

"முதலில் இருந்தே சொல்லிட்டு இருந்தேன், கிணற்றுத் தண்ணீரே போதும், போர்வெல் வேண்டாம்னு" இது நான்.

"உனக்கென்ன தெரியும்? அங்கங்கே ஃப்ளாட் கட்டி தண்ணீரை உறிஞ்சறாங்க, நமக்குக் கிணற்றிலே கடும் கோடையிலே தவிக்குமேன்னு நான் முன் யோசனையுடன் செய்திருக்கேனாக்கும்" இது அவர். இப்படி ரெண்டு பேரும் மோதிக் கொள்வதில் எந்தப் பக்கம் யார் ஜெயிப்பாங்கனு சொல்ல முடியலை. யார் கை வேணும்னாலும் ஓங்கும்! ஹிஹி அடிக்கு எல்லாம் இல்லை. பயந்துடாதீங்க! ஒரு மாதிரி பயத்துடனேயே தான் ரெண்டு பேரும் சென்னை வந்தோம். இங்கே வந்ததும் இன்னும் என்ன என்ன போயிருக்கோனு, ஒரு வாத, விவாதமே நடந்தது. இதை சரியா மூடவிடலை, நீ, கடைசி வரை சமயல் அறையில் என்னதான் பண்ணினாயோ? என்று அவரும், சமையல் அறைப் பொருட்களை நான் வச்சால்தான் திரும்ப எடுக்கும்போது வசதியா இருக்கும்னு நானும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டோம். ஹிஹி, இதெல்லாம் சண்டை இல்லை. இனிமேல் வரும் பாருங்க!

ஆச்சு, வந்தாச்சு, வீட்டுக்குள்ளும் நுழைந்தாச்சு! வந்த கதை எல்லாம் தனியா வச்சுக்கலாம். வரும்போது இந்திய நேரப்படி மணி மூன்று ஆகி விட்டது. வீட்டுக்குக் காவல் இருந்தவரைப் படுக்கச் சொல்லி விட்டுப் பூட்டி இருந்த ஒவ்வொரு அறையாத் திறந்தோம். முதலில் பெரிய படுக்கை அறையும், சின்ன அறையும் திறந்து பார்த்து விட்டு, குப்பையா இருந்ததை மட்டும் சுத்தம் செய்தேன். அந்தச் சமயம் என் கணவர் போய்ச் சமையல் அறையையும், சாப்பிடும் அறையையும் போய்த் திறந்தார். சமையல் அறை பூரா ஒரே அரிசி வாரிக் கொட்டிக் கிடந்தது. என்னனு புரியாமல் விழிச்சால் ஒரு பெரிய சத்தம், தடால்னு பாத்திரம் வச்சிருக்கும் பகுதிக்குள். பாத்திரங்களை ஒரு பெரிய பையில் போட்டுக் கட்டி இருந்தோம். சரினு அதைப் போய்த் திறந்தால் "கீச், கீச், கீச்"னு ஒரே சத்தம். ஒரு பெரிய எலி வெளியே குதித்துத் தைரியமாக எங்களை முறைத்தது. உள்ளே சிறிய எலிக்குஞ்சுகள், இன்னும் கண்ணைத் திறக்கவில்லை. பாத்திரங்கள் இருந்த பைக்குள் எலியை வச்சுக் கட்டி இருக்கீங்களே? இது நான். அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் கட்டும்போது எலியே இல்லை, அதுக்கு முன்னாலேயே நீதான் உள்ளே விட்டு இத வளர்த்திருக்கே! இது அவர். பத்தாக் குறைக்கு அந்த எலி உப்பு இல்லாமல், புளி இல்லாமல் சாப்பிடாது போல! மிச்சம் இருந்த மளிகை சாமான்களைக் கட்டி வாச்சிருந்த பாக்கிங்கை எப்படியோ பிரிச்சு உள்ளே போய்ச் சரியாக உப்பு, புளியை மட்டும் வெளியே எடுத்து வாரி இறைச்சிருந்தது. நல்லவேளை சாம்பார் பொடி இல்லை, பருப்பு இல்லை. இருந்தால் அதையும் போட்டு சாம்பர் வச்சுச் சாப்பிட்டுட்டு எங்களுக்கும் வச்சுக் கொடுத்திருக்கும். அதுக்குள்ளே நாங்க வந்துட்டோமேனு அதுக்கு ஒரே ஆத்திரம். வேகமாய ஓடிப் போய் சமையல மேடைக்கு அடியிலே ஒளிந்து கொண்டது. இதை எப்படி விரட்டறது?

எலி இங்கே வந்து கல்யாணம் பண்ணிட்டுக் குடித்தனமும் பண்ணி இருக்கே, அப்படின்னா முன்னாலேயே வந்திருக்கும்னு என்னோட மறுபாதி என்னைக் குற்றம், சாட்ட, அதெல்லாம் இல்லை, எலிக்குக் கர்ப்ப காலம் 45 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் தான், அதனால் அப்புறம்தான் வந்திருக்கும்னு நானும் சொல்ல ரெண்டு பேருக்கும் எலியை எப்படி விரட்டறதுங்கிறதிலே இருந்து பிரசனை எலியின் கர்ப்ப காலம் எவ்வளவுங்கறதிலே போயிடுச்சு! இப்போ தலையாய கேள்வியே அதுதான். யாராவது தெரிஞ்சா சொல்லுங்க, எலிக்குக் கர்ப்ப காலம் எத்தனை மாதம் அல்லது நாட்கள்?
இப்போதான், நாங்க ரெண்டு பேரும், எலியை யார் உள்ளே விட்டதுன்ங்கிற சர்ச்சையிலே ஒருத்தர் டாம் ஆகவும், இன்னொருத்தர் ஜெர்ரியாகவும் மாறி விட்டோமே. சண்டை தொடர்ந்தது. மிச்சம் நாளைக்கு, வரேன், இப்போ!

டாம் யாரு, ஜெரி யாருங்கறதை உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்!

Monday, October 01, 2007

தாயகம் திரும்பிய தலைவி, தொண்டர்கள் உற்சாகம்!

6 மாத காலச் சுற்றுப்பயணத்தில் இருந்த தலைவி திடீரெனத் தாயகம் திரும்பினார். (6 மாசம் முடியப் போகுது, அப்படி இருந்தும் இந்த பில்ட்-அப்பா?) நாசாச் சுற்றுப் பயணம் செல்லவிருந்த தன் பயணத்தை ரத்து செய்து விட்டுத் தாயகம் திரும்பிய தலைவி, தன் பயணத்தை மிக மிக ரகசியமாக வைத்திருந்தும், விமான நிலையத்தில் தொண்டர்கள் கூட்டம் தாங்கவில்லை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் திரண்டிருந்து பெரும் வரவேற்பு அளித்திருந்தனர். (விமானத்தில் ஸ்டான்டிங்க் அனுமதித்தால் கூட வருவாங்க போல, அவ்வளவு கூட்டம் சென்னைக்கு! அவங்களை வரவேற்க வரும் கூட்டத்துக்குக் கேட்கணுமா? அதைத் தான் சொல்றாங்க!) ஹிஹிஹி, கண்டுக்காதீங்க, வழக்கம் போல் மனசாட்சி புலம்பல்.

புஷைச் சந்திக்கும் நோக்கத்துக்கும், (எல்லாம் இந்த அணுசக்தி விவகாரத்துக்குத் தான்! :P), ஹிலாரி கிளின்டனின் உதவிக்காகவும் சென்றிருந்த அவர், தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாய் முடித்துக் கொண்டு திரும்பினார். திரும்பிய அவரைத் திரு தி.ரா.ச. அவர்கள், அம்பியின் எதிர்ப்பையும் மீறி வரவேற்றார் என்பது குறிப்பிடத் தகுந்தது. (அவர் கூப்பிட்டுப் பேசும்போது, வேறு யாரோனு "தலைவி" அசடு வழிஞ்சது தனிக் கதை!)

தலைவி அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள இருந்தபோதும், திரு தி.ரா.ச. அவர்கள், இதே மாதிரியாக அவர் பயணம் வெற்றி பெற வாழ்த்தினார் என்பதும் அம்பியால் கவனிக்கத் தகுந்தது. அவரைப் பயணம் வெற்றிகரமாய் முடிந்து தாயகம் திரும்பும் வேளையில் வாழ்த்தி வழி அனுப்பிய தொண்டர்களில் ஒருவரான திரு கண்ணபிரான் ரவிசங்கருக்கும் தலைவி தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். அவர் தலைவியைத் தாயகம் திரும்பும் வேளையில் சூடான் சென்றுப் புலியை ஒரு உலுக்கு உலுக்கச் சொல்லி இருந்தும் தலைவி பெருமனதுடன் புலியை முறத்தால் அடிக்க விரும்பால் விட்டு விட்டார். புலியும் அந்த நன்றியை மறவாமல் தலைவி ஜிமெயிலைத் திறந்ததுமே வந்து தாயகம் திரும்பியதற்கு வாழ்த்தும், தன்னைச் சும்மா விட்டதுக்கு நன்றியும் தெரிவித்தார். அவருக்குத் தலைவி பார்த்து வைத்திருக்கும் பொண்ணு இம்முறையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம், கோவிச்சுக்கிட்டார்! :P இதற்காகத் தலைவி கூடிய விரைவில் நாகைப் பயணம் மேற்கொள்ளுவார் எனத் தெரிகிறது.

அப்புறம் அம்பி, நீங்க மெயில் கொடுத்தாப்பலேயே பதிவு போட்டுட்டேன். பிடிச்சதா?
கண்ணன், நீங்க சொன்னாப்பலேயே "புலி"யைப் பத்தி எழுதிட்டேன், புலிகிட்டே சாட்டிங்கிலேயும் சொல்லிட்டேன்! சரியா?

அம்பி, நீங்க திருந்தவே மாட்டீங்களா?

TBCD நீங்க திருந்த மாட்டீங்கனு புரிஞ்சு தான் "லூசுலே" விட்டுட்டேன்! தலை எழுத்து! நச், நச், நச்,

அடிச்சுக்கிறாங்க போல ரெண்டு பேரும் சத்தம் இங்கே வந்து கேட்குது! என்னனு பார்த்துட்டு வரேன்!