எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 27, 2007

செந்தமிழ் நாடென்னும் போதினிலே!

யு.எஸ்ஸில் இருந்து வந்து நாளைக்கோட ஒரு மாசம் ஆகப் போகுது. ஒரு ஆறு மாசம் அங்கே இருந்துட்டு வந்ததிலே , இங்கே வந்ததும் நம்ம ரிஃபிரிஜிரேட்டரைப் பார்க்கவும், வாஷிங் மெஷினைப் பார்க்கவுமே ஏதோ எறும்பைப் பார்க்கிறாப்போல இருந்தது. அதே மாதிரி டீ, காஃபி கப்பும், ஆனால் ஃபிளைட்டில் மட்டும் சின்ன ஸ்பூனிலே தான் காஃபி, டீ தராங்க! :P அந்தத் திகைப்பு போகும் முன்னரே வரிசையாக ஒவ்வொரு சாமானாக ரிப்பேர் செய்ய வேண்டி வந்தது. அங்கே குழாயில் வெந்நீர் கொதிக்கும், தண்ணீர் ஜில்லுனு வரும், இங்கே தண்ணீரே இல்லை! மோட்டாரே வேலை செய்யலை, முனிசிபாலிட்டித் தண்ணீரோ வர அன்னைக்குத் தான் நிச்சயம், வீடுகளுக்கு இணைப்பும் இல்லை, தெருக்குழாயில் போய்ச் சண்டை போடத் தெம்பும் கிடையாது. ஆகவே குடிக்கத் தனியாக மினரல் வாட்டர் என்ற பேரில் வரும் தண்ணீர் விலை கொடுத்துத் தான் வாங்கறோம் பல வருஷமா, சமையல் மற்றத் தேவைகளுக்குக் கிணற்றில் நீர் இறைத்தும் எடுக்க ஆரம்பிச்சோம். இதிலே என் ம.பா.வுக்குத் தான் ரொம்ப சந்தோஷம். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே மோட்டார் போட இஷ்டம் இல்லை, போர் போட எனக்கு இஷ்டம் இல்லை. ஆகக் கூடி இரண்டு பேரும் எதிலும் ஒத்துப் போகவே மாட்டோம்! :)

தினசரி, பள்ளிக்குப் போகிற மாதிரி ப்ளம்பர் வந்து மோட்டாரைச் சரி பார்க்க அது அடம் பிடிக்கும் குழந்தையைப் போல் அவருக்கு எதிரே ஒழுங்காக வேலை செய்யும், அவர் கிளம்பிப் போனதும் தகராறு செய்யும். அவரும் முதலில் கொஞ்சம் பொறுமையாகவே, தண்ணீர் ஊற்றி விட்டுப் போடுங்கள் என்று சொல்லிப் பார்த்தார். இந்த மோட்டார் கேட்டால் தானே! அது சுத்தமாய் நின்று போச்சு! எல்லாம் கிடக்க, சரஸ்வதி பூஜை அன்று காலை நான் வீடு சுத்தம் செய்து விட்டுக் கை அலம்பக் கிணற்றடியில் உள்ள குழாயைத் திறந்தேன். ஏத்தின தண்ணீர் கொஞ்சமானும் இருக்குமே! குழாயைத் திறந்தேனோ இல்லையோ, சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அபிஷேஹம் ஆனது! குழாய் என் கையில்! எப்படி வந்தது? எனக்கே தெரியாது. வாசலில் நின்றிருந்த என்னோட ம.பா.வைக் கூப்பிட்டேன். அவர் முக்கியமான சமயங்களில் ஆளே அகப்பட மாட்டார். எங்கேதான் போவாரோ? கிட்டத் தட்ட தொலைபேசியில் கூப்பிடுகிற மாதிரி தூரத்தில் நின்று கொண்டிருப்பார். இந்த மாதிரி முக்கியமான சமயம் வெளியே சொல்லி வச்சாப்போல போய் நிற்பார். அவரைக் கூப்பிட்டு (சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே போய்த் தான்) மேலே டாங்கில் இருந்து தண்ணீர் வரும் வால்வை மூடச் சொன்னேன். கரெக்டா இந்த மாதிரியானது எல்லாம் எனக்கு மட்டுமே எங்க வீட்டில் நடக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறேன். இதே அவர் திறக்கும்போது அந்தக் குழாய் "தேமே"னு சமர்த்தாக இருக்கும்.

பால் காய்ச்சப் பாலை எடுத்தால் பால் உறைந்து விட்டது. ஃபிரிஜில் தெர்மாஸ்டாட் சரியில்லை. கெல்வினேட்டர் கம்பெனி இருக்கும் இடம் தெரியாததால் எலக்ட்ரோலக்ஸிற்குத் தொலைபேசினால் அவங்க இன்னி வரை பிசி, ஃபோனை எடுக்கவே இல்லை. ஏ.சி. கம்ப்ரெஸரை மாத்திட்டுப் போட்டால் கொஞ்ச நேரம் ஓடியது. அப்புறம் மூச்! என்ன ஆச்சுனு பார்த்தால் ஒரு பல்லி உள்ளே போயிருக்கு! அதுக்கும் வேர்த்து விறுத்துப் போயிடுச்சு போலிருக்கு! அதை இன்னும் சரி பண்ணலை! கணினியிலே யுபிஎஸ்ஸில் பாட்டரி வீக்காகி இருக்கு, அதை மாத்தணும். மழை பெய்து தெருவிலே ஒரே தண்ணீர்க் குளமாகி உள்ளது. அதை இறைக்கவோ, அல்லது, தண்ணீர் வெளியே போகுமாறு வெட்டி விடவோ முனிசிபாலிட்டியில் பணம் இல்லை எனக் கவுன்சிலர் சொல்லி விட்டார். அதுவும் நாங்களே செய்து கொண்டோம். அம்பத்தூர் முனிசிபாலிட்டியில் பணம் இல்லை என்பது ரொம்ப ஆச்சரியமாத் தான் இருக்கு. இப்போ ரோடு எதுவும் போட மாட்டாங்களாம். ட்ரெயினேஜ் வந்ததும் தானாம். இதைக் கிட்டத் தட்ட பல வருஷங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். தெருக்களோ ரொம்ப மோசம்! தெருக்களில் மேடு, பள்ளம் தெரிவது இல்லை. மழை பெய்கிற வேகத்தில் மேடு பள்ளமாயும், பள்ளம் மேடாயும் மாறிடுதா? தெருவில் நடக்கவே பயமா இருக்கு! பஸ் போகும் ரோடு எல்லாம் பஸ்ஸில் பயணிக்கவே பயமா இருக்கு. ஆனாலும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்களுக்கு சகிப்புத் தன்மை அதிகமாவே இருக்கு போலிருக்கு!

பத்தாக் குறைக்கு எங்க வீட்டுக்குப் பக்கத்திலே வந்திருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள எட்டுக் குடித்தனக்காரர்களும் போடும் குப்பைகள் எங்க வீட்டுப் பக்கம் தான். அவங்க கிட்டே சொல்லவும் முடியலை, என்ன சொன்னாலும் திரும்ப இங்கே தான் போடுவாங்க! அது தவிர, அவங்க செப்டிக் டாங்க் நிரம்பி வழிவதால் அதைக் குழாய் போட்டு அதன் மூலம் எங்க வீட்டுப் பக்கம் திருப்பி விடப் பார்த்திருக்காங்க. எங்க வீட்டிலே இருந்த கேர்டேக்கர் சண்டை போடவே அதைத் தெருவில் விட்டுட்டாங்க. மழை நீர் சேகரிப்புக்குனு கட்டி இருக்கும் கால்வாயில் அது நிரம்பி வழிகிறது. அதையும் கவுன்சிலரிடம் சொன்னால் அந்த அம்மா வெளியேவே வர மாட்டாங்க! அவங்க கணவருக்கும் முனிசிபல் சேர்மனுக்கும் சொந்தத் தகராறாம். அதனால் சேர்மன் 6-வது வார்டுக்கு ஒண்ணும் செய்து தரமுடியாதுனு சொல்லிட்டாராம். இதுவும் தெருக்காரங்க் சொன்ன தகவல். பக்கத்துக் குடியிருப்புக்கோ அல்லது அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு வரும் வண்டிகள் டாடா சுமோ, க்வாலிஸ், பெரிய வான்கள் போன்றவைகளுக்கு எங்க வீட்டு வாசலில்தான் நிறுத்த இடம் பார்ப்பாங்க! கேட்டுக்கு நேர் எதிரே நிறுத்தாதீங்க, கொஞ்சம் தள்ளி நிறுத்துங்கனு அவங்க கிட்டே சொல்ல முடியாது. மீறிச் சொன்னால் அவங்க பேசற பேச்சுக்குத் தலை குனியணும், சிலர் வேப்ப மரத்தை வெட்டி விடுங்க, அப்புறமா ஏன் நிறுத்தறோம்னு வேறே சொல்லுவாங்க. எத்தனை வருஷமாக் குழந்தை மாதிரி வளர்த்து வர மரம்? எப்படி வெட்ட மனசு வரும்? எல்லாத்துக்கும் மேலே எலி வேறே எங்கே ஒளிஞ்சுட்டு இருக்குனே தெரியலை! மஞ்சூர் ராஜா ஏதோ பசை மாதிரி பொருள் இருப்பதாயும் அதை ஒரு பேப்பரில் விட்டு விட்டால் எலி வந்து ஒட்டிக் கொள்ளும், பிடிக்கலாம் என்று யோசனை சொன்னார். எலி எங்கே மாட்டிக்கும்? அது சாமர்த்தியாத் தப்பிச்சுடும், நான் தான் காலில் ஒட்டிட்டுத் தவிப்பேன்னு சொல்லிட்டேன்! பத்தாக்குறைக்கு அப்போ அப்போ அறிவிக்கப் படாத மின் தடை வேறே! எப்போ வரும் எப்போ போகும்னே சொல்ல முடியாது!

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் இங்கே தான் Peace of Mind அப்படினு ம.பா. சொல்லறார். இங்கே வந்து தான் என் முகமே பளிச்சுனு இருக்காம்,. அங்கே ஒரே டல் அடிச்சுக் கிடந்தேனாம். சொந்த ஊர், சொந்த ஊர்தான், அப்படினு சொல்றார். அது சரி, தமிழ்நாட்டைப் போல வருமா? அதான் "மீண்ட சொர்க்கம்"னு சொல்லிக்கறேன்! ஆஹா, இந்தியா, இது தான் இந்தியா, வாழ்விலே ஒரு ரசம் தேவைனு மக்களை இப்போதே தயார்ப்படுத்தும் இந்தியா! சொர்க்கம் என்பது இது தானோ?

22 comments:

 1. ஆயிரம் தொல்லைகள் இருந்தாலும் நம் நாடு நம் நாடு தானே... சுகந்திரமா இருக்கும் நம்மளுக்கு...

  உங்க ஏரியா ரோடுகளை பத்தி சொல்லவே வேணாம்.. ரொம்பவே சூப்பரா இருக்கும்... இப்ப மழை வேறு பெய்து இருக்கா.. படு சூப்பர் தான் போங்க... :)

  ReplyDelete
 2. திரும்ப யு.எஸ் க்கு எப்ப?
  :-))

  ReplyDelete
 3. புலி, அதான் தாய்நாட்டுப் பற்றுப் பொங்கிப் போய்த்தானே எழுதி இருக்கேன், புரியலை? :P

  @வடுவூர், எதுக்குத் திரும்ப யுஎஸ்ஸுக்கு? சினிமா பார்க்கவா? :P

  ReplyDelete
 4. தூங்கிகிட்டு இருக்கிற குழந்தையை கன்னத்திலே நறுக்குன்னு கிள்ளிட்டு, 'நெசமாவே செவக்குதான்னு பார்த்தேன்' ன்னு சொல்றாப்பல இருக்கு :-)

  ReplyDelete
 5. ஹிஹிஹி, ஐகாரஸ், அப்படீங்கறீங்க, இருக்கும், இருக்கும், நீங்க சொன்னா சரியாத் தானிருக்கும்! :)))))))))))

  புரிஞ்சதுக்கு நன்றி!

  ReplyDelete
 6. //வாழ்விலே ஒரு ரசம் தேவைனு மக்களை இப்போதே தயார்ப்படுத்தும் இந்தியா! சொர்க்கம் என்பது இது தானோ?//

  Meedhi enge pogum ..navarasangalum ulla punya bhoomi namadhu Bharatha naadu !!
  Andha rasangalai anubhavithhe naatkalai otta vendum..Adhu sari andha moonjur eli enna aachu ?
  TC
  CU

  ReplyDelete
 7. வாங்க TC CU, ரொம்ப நாளாக் காணோம்? தீபாவளி பர்ச்சேஸில் பிசியா? மூஞ்சூறு வரலை, எலி தான், நிஜ எலி, பெரியதாயும் இருக்கு! ஆறு மாசமா வாடகை கொடுக்காமக் குடி இருந்துடுச்சா, எங்களோட சண்டை போடுது! அதான் எழுதி இருக்கேனே, பசை வச்சு ஒட்டச் சொன்னார், மஞ்சூர் ராஜானு, எலி எங்கே ஒட்டிக்கும்? நான் ஒட்டிட்டு நிக்கணும்! :P

  ReplyDelete
 8. \\"செந்தமிழ் நாடென்னும் போதினிலே!"\\\

  பதிவுக்கு ஏற்ற தலைப்பு ;))

  சொக்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா..!!!

  ReplyDelete
 9. இது என்ன வஞ்சப்புகழ்ச்சியா இல்ல நிஜமாவே சொல்றீங்களா??

  என்ன தான் இருந்தாலும், நம்ம நாடு நம்ம நாடு தான்..

  ReplyDelete
 10. பாரதியார் சொன்னதைச் சரியாக் கவனிச்சீங்களா மேடம், இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றார். காதில் தேன் பாய்ந்தால் என்ன ஆகுமோ அந்த மாதிரி காது உடையவர்கள் தான் இங்கே அதிகம். இதனைத் தந்தையர் நாடு என்று யாரும் பேசுவதே இல்லை; எனவே தான் நமது மூச்சிலும் சக்தி பிறப்பதில்லை.

  ReplyDelete
 11. @கோபிநாத், மூன்றாவது முறையா ப்ளாக்கர் என்னோட கமெண்டை ஏத்துக்கலை! என்ன செய்யலாம்?

  @சிங்கம், மேலே சொல்லி இருக்கேன் பாருங்க, இது எல்லாம் இந்தியாவில் தான் நடக்குது, இப்போ சொல்லுங்க இந்தியா சொர்க்கம் தானே? :P

  ReplyDelete
 12. அப்ப்பாஆஆஅ, மூன்று முறை நேத்திலே இருந்து முயற்சித்து இப்போத் தான் ஏத்துக்கிட்டது ப்ளாக்கர். :P

  வாங்க ரத்னேஷ், முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. சிந்திக்கிற மக்கள் இருந்தால் "சக்தி" தானே வரும், நம்ம மக்கள் இலவசம் தானே எதிர்பார்க்கிறாங்க?

  ReplyDelete
 13. இந்திய ரசம் அருமை:-)

  ReplyDelete
 14. அட, வாங்க மதுமிதா, வராத ஆட்களெல்லாம் நம்ம பக்கம் வரீங்க? அதான் சென்னையிலே இத்தனை மழையா? :P

  ReplyDelete
 15. //"செந்தமிழ் நாடென்னும் போதினிலே!"//

  சென்னையை பத்தி சொல்லும் போது தலைப்பு இப்படி இருக்கவேண்டும்..."செந்தமிழ் நாடுன்னு சொல்லோச் சொல்லோ...தேன்வந்து பாயுது காதுக்குள்ளோ...";)

  ReplyDelete
 16. @சீனா, அதான் ஒரு சினிமாவிலே பாட்டே போட்டுட்டாங்களே? "சென்னைச் செந்தமிழ்" னு? கேட்டதில்லை? :)))))))))))

  ReplyDelete
 17. // கரெக்டா இந்த மாதிரியானது எல்லாம் எனக்கு மட்டுமே எங்க வீட்டில் நடக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.//
  // இந்த மாதிரி முக்கியமான சமயம் வெளியே சொல்லி வச்சாப்போல போய் நிற்பார்//

  கீதா அக்கா எதுக்கும் சாம்பு மாமாவை அதிகமா திட்டாதிங்க...அவரோட ஜடியாவோன்னு தோனுது.. ஹிஹி..

  // அதையும் கவுன்சிலரிடம் சொன்னால் அந்த அம்மா வெளியேவே வர மாட்டாங்க!//
  எம் பேர சொல்லியிருக்க மாட்டிங்க..(அது தான் நல்லது..).ஹிஹிஹி...

  //எங்க வீட்டுக்குப் பக்கத்திலே வந்திருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள எட்டுக் குடித்தனக்காரர்களும் போடும் குப்பைகள் எங்க வீட்டுப் பக்கம் தான்.//
  இத ஏன் எங்கிட்ட அப்பவே. சொல்லல.. சரி..சரி.. இந்தியாவுக்கு ஒரு நாலஞ்சி டிக்கெட் எடுத்து வைய்யிங்க.. ஒடனே..லீவு போட்டுட்டு நம்ப வாலுபட்டாளத்த கூட்டிகின்னு வர்ரேன்.நாங்க பண்ணுர அலும்புல பக்கத்து வீட்டுகாரங்க வீட்ட காலி பண்ணிக்கின்னு ஓடனும்.(அப்புறமா.. வாலு போயி, கத்தி வந்தது டும் டும் ன்னு பதிவு போடக்கூடாது ஆமாம்.)

  ReplyDelete
 18. @ரசிகன், சரியான ட்யூப்லைட் போங்க, அவரோட ஐடியாவோன்னு தோணுதா? இத்தனைக்கும் மேலே, அவரோட ஐடியாவே தான் இது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,
  வாங்க, வாங்க எல்லாம் அரபுக் குடியரசிலே இருக்கிற தெம்பு, சொல்லுது, வந்து பார்த்தால் தெரியும்! :P

  ReplyDelete
 19. pazhagiya idam yenrum sorgam. enaku madras sorgam ellai. kumbakonam pakathil oru village than with no toilet and no bathroom. pazhagiya edamum, vazhtha oorum ovarutharukum sorgam than elliya.?

  ReplyDelete
 20. கீதா!
  இவ்ளோ தொல்லைகள் இருந்தாலும்
  ஸ்வட்டர் மேலே கோட்டு, க்ளவுஸ், ஸ்கார்ப், ஸாக்ஸ், ஷூ, இதுக்கும் மேலே கிடுகிடு என்று நடுங்காமல் விஸ்ராந்தியா இருக்கமுடிவது நமது சொர்க்கத்தில்தானே?
  என்ன நாஞ்சொல்ரது?

  ReplyDelete
 21. @நானானி, அதிகமாக் குளிர் இருக்கும் குறைந்த பட்சமாய் ஜீரோ டிகிரியில் போகும் ராஜஸ்தான், குஜராத், ஊட்டி போன்ற இடங்களில் வசித்த காரணமோ, அல்லது என்னோட உடல் நிலைக்குக் குளிர் தான் ஒத்துக்கறதினாலேயோ தெரியாது, எனக்கு அது ஒண்ணும் பெரிசாத் தெரியலை, ஆனால் பாஸ்டன், மின்னியாபோலிஸ், நியூயார்க், நியூஜெர்சி, சின்சினாட்டி, போன்ற வட கிழக்கு நகரங்களில் கஷ்டமா இருந்திருக்கும்னு நம்பறேன். மனசு என்னமோ இங்கே தான் பதியுது, அதுவரை உண்மை! அங்கே பதியலை. வேர் ஓடிப் போச்சு இல்லையா?

  ReplyDelete
 22. நானும் ஒரு அயல் நாட்டுக்கு ஒரு 45 நாள் சென்று வந்தேன். வந்த உடனே இங்கே உள்ள எல்லாப் பிரச்னைகளையும் அங்கே உள்ள எல்லா வசதிகளையும்(அங்கே பிரச்னையே இல்லையா ?) நினைத்து நினைத்து எல்லோரிடமும் பேசுவேன்.

  மிக்க மகிழ்ச்சி - கீதாவோட ம.பா எதுலேயும் கீதாவோடு ஒத்துப் போக மாட்டாராம். கீதா பயங்கர சுதந்திரம் - உரிமை கொடுத்துட்டீங்களே !!

  பிளம்வர் - குழாய் - கீதா உண்மையிலேயே நீங்க பாவம்தான். ஆமா.

  ஆமா இங்கே எல்லாம் சாதரணமா நடக்குறது தான் - தண்ணி வர்லே, பிரிஜ் வேலை செய்யலெ,வாசிங் மெஷின், டி.வி எதுவுமே வேலை செய்யாது. ஏன் தொலைபேசி கூடத்தான். எல்லாம் சரி செய்யுறதுக்குள்ளெ தாவு தீந்துடும்.
  என்ன பண்றது. இதுக்கெல்லாம் கீதா BPயை எகிற வைக்கக் கூடாது.

  ம.பா சரியாச் சொல்லி இருக்கார். பாரத தேசம் பழம்பெரும் தேசம். நமக்கிருக்கும் பொறுமை உலகில் எவருக்கும் இருக்காது. எது இருந்தாலும் இல்லை என்றாலும் நம்மால் உயிர் வாழ முடியும். மாற்று உண்டு இங்கு. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை - இது இப்படித்தான் - பிரம்மாவாலே கூடத் திருத்த முடியாது என்னும் மனப்பான்மை - இதெல்லாம் நம்மளோட பொக்கிஷம்.

  ReplyDelete