எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 14, 2009

குப்பன் யாஹூவிற்காக!


கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வரும் வழியில் கோனேரிராஜபுரத்துக்கு முன்னால் புதூருக்கு அருகே, வடமட்டம் என்னும் ஊர் வரூம். வடமட்டத்தில் இருந்து நேரே சென்றால் பரவாக்கரை என்னும் ஊர் வரும். இது மிக மிகப் பழமையான சிவபதி என்று பேராசிரியர் திரு சு.செளந்திரராஜன்,(ஓய்வு)Ph.D.,(MAdras)., C.Chem.,F.R.S.C(London),(Department of Inorganic and Physical Chemistry, Indian Institure of Science, Bangalore), அவர்கள் சொல்கின்றார். காஞ்சி பரமாச்சாரியாரின் அருளினால் திருமூலரின் திருமந்திரத்தை ஆய்வு செய்து அவர் தெரிந்து கொண்ட விஷயங்களைத் தொகுத்துப் புத்தகமாய்ப் போட்டு இருக்கின்றார். அதி இந்த ஊரின் கோயில்களின் பெருமையைப் பற்றியும் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்த ஊரின் கிழக்கே, திருவீழிமிழலை, தெற்கே, கொட்டிட்டை கருவிலி,(தற்சமயம் சற்குணேஸ்வரபுரம் என அழைக்கப் படுகிறது), மேற்கில் திருநாகேச்வரம், வடக்கில் திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுநாயகமாய் உள்ளது பரவாக்கரை என்னும் கிராமம், பண்டைய காலத்தில் இதை வண்தில்லை என்று அழைக்கப் பட்டதாய்ச் சொல்லுகின்றார்.

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாகக் கூந்தலூர் வந்து அங்கிருந்து சற்குணேஸ்வரபுரம் என்னும் கருவிலியில் இருந்தும் முட்டையாறு என்னும் ஆற்றைக் கடந்து பரவாக்கரை வரலாம். அந்தப் பெருமாளைப் பற்றி இப்போது. இவரைப் பற்றியும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கூறி இருக்கிறாராம். திருமந்திரம் 190-ம் பாடலில்,"வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத்துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகறியாதவர்தாங்க வல்லாருயிர் தாமறியாரே."என்று திரு சு.செளந்திர ராஜன் கூறுகிறார்.(அவருடைய இனிஷியல் "க" என்று நானாகப் போட்டு விட்டேன். இன்று தான் அவர் புத்தகம் பார்த்ததில் சு.செளந்திரராஜன் என்று புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.) இந்த வேங்கடநாதன் கோவில் யார் கட்டினது, எப்போ கட்டினது என்று எல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என் மாமனாரின் பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். என் மாமனாரின் பாட்டி குடும்பம் இங்கே விஷ்ணு கோவிலும், அந்தப் பாட்டியின் தங்கை குடும்பம் கருவிலியில் சிவன் கோவிலும் பராமரித்து வந்திருக்கிறார்கள். என் மாமனாரின் அண்ணா இருந்த சமயம் கும்பாபிஷேஹம் செய்வித்திருக்கிறார். பெருமாளுக்கு என்று நிலங்கள், இடம், தேர்முட்டி கோவிலில் பூஜை செய்யும் பட்டருக்கு வீடு என்று எல்லாம் இருந்து வந்தது. ஆனால் என் மாமனார் தன்னால் நிர்வகிக்க முடியாது என்பதாலும், அரசாங்கம் எல்லாக் கோவில்களையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த நேரம் தன் அறங்காவலர் பதவியை விட்டு விட்டார். அதற்குப்பின் வந்த யாரும் ஊரில் தங்கிப் பெருமாளுக்குப் பூஜை செய்யவில்லை. இங்கேயே இருந்த பட்டாச்சாரியாரும் வேறு ஊருக்குப் போய்விட வேறு ஊரில் இருந்து வந்தவர் நினைத்த நேரம் வர, பெருமாள் தனக்கு எப்போ குளியல், எப்போ படையல் எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆன இவர் மிக அழகான உருவமும் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் உள்ளமும் கொண்டவர். மாமனார் கருவிலியில் இருந்தவரை அவ்வப்போது நடந்த பூஜையும் இப்போது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. 41/2 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் உற்சவ மூர்த்தங்களுடன் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உண்டு. தற்சமயம் ஆஞ்சனேயர் சன்னதியில் ஆரம்பித்து அரச மரம் வேர் விட்டுப் பரவு சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது கோவில். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் முட்களும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கிறது. உள்ளே சன்னதியிலோ வவ்வால்களின் குடித்தனம்.

எப்போதாவது நாங்கள் போகும் சமயம் கோவிலைத் திறந்து வைக்கச் சொல்வது உண்டு, நாளாவட்டத்தில் கோவில் திறக்கக்கூட ஆள் இல்லாமல் போய் அந்த ஊரிலேயே போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறவர் பரிதாபப்பட்டுக் கோவிலைத் திறந்து வைத்து அபிஷேஹமும், நைவேத்யமும் ஒருமுறையாவது செய்து வந்தார். அவர் தாயின் உடல் நலம் குன்றியதால் அவரும் தற்சமயம் ஊரில் இல்லை. கோவிலின் நிலங்கள் போனவழி தெரியவில்லை. கோவிலின் முன்னே இருந்த தேர்முட்டி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டது. வேங்கடநாதன் தன் மனைவியருடனும், அத்யந்த சிநேகிதனான அனுமனுடனும் கோவிலில் சிறைப்பட்டு விட்டார். அவரை விடுவிக்கும் வழி தான் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி பலிக்க வில்லை. எல்லாம் தெரிந்த அந்த இறைவன் இதை அறிய மாட்டானா என்ன? அவனுக்கு அவன் தான் வழி தேடிக்கொள்ள வேண்டும். மூன்று முறை நாங்கள் முயற்சித்தும் புனருத்தாரண வேலை ஆரம்பிக்க முடியவில்லை. பொறுப்புப் பெரிதாக இருப்பதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் புரியவில்லை. ஒருத்தர் ஒருத்தருக்காத் தனியாப் பதில் சொல்ல முடியலை மன்னிக்கவும், நேரமின்மைதான் காரணம். தவிர இதுக்குப் பதில் சொல்ல ஆரம்பிச்சா ரொம்பவே பெரியதாய் ஒரு பதிவாப் போயிடும், சில விவாதங்களைத் தவிர்க்கவும் பதில் சொல்லவில்லை. பெருமாள் கோயிலின் உள்படம் தான் தேடினேன், கிடைக்கவில்லை, இது கோயிலின் வெளித் தோற்றம். உள்ளே இன்னும் சிதிலமடைந்துள்ளது. உள்படங்கள் போடவில்லை. சென்ற வாரம் போனபோது முன் மண்டபமே இடிய ஆரம்பித்துள்ளது தெரிய வருகிறது.

திரு குப்பன் யாஹூ கேட்டதின் பேரில் ஒரு மீள் பதிவு இது. எவ்வாறேனும் அறநிலையத் துறை அநுமதி பெற்று திருப்பணிகள் ஆரம்பிக்கவேண்டும் என்று முயல்கின்றோம். மற்றபடி சென்றபதிவிற்குப் பின்னூட்டம் இட்ட அனைவரும், தனிமடல் அனுப்பியவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். நேரமின்மையால் தனித்தனியாகப் பதில் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்.

6 comments:

  1. வடமட்டம் ஊர் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன் எங்கள் ஊர்லேர்ந்து டவுன் பஸ் போகுது அங்கு!

    வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக கோவில் தரிசனம் உண்டு :)

    ReplyDelete
  2. it is a shame that number of such places of worship are in such a dilapidated state and reduuced just to mere shacks. Even if there is a dispute to maintain it as a temple, can't they make it into a community centre atleast to utilise it for the purpose of children's education and feeding. Perumal would be sumptuously fed then .

    ReplyDelete
  3. மிக்க நன்றி, ஊர் பெயர், பேருந்தில் கோயிலுக்கு செல்லும் வழி போன்ற விளக்கங்களுடன் விரிவான பதிவிற்கு நன்றிகள் பல.

    என்னுடைய பின்னூட்டம் மன வருத்தத்தை உண்டு பண்ணி இருந்தால் வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன்.

    நீங்கள் சொல்வது போல கோவில்கள் சிறப்பாக இருந்தால் தான் அந்த ஊரும் நலமாக இருக்கும், மக்களும் வளமாக இருப்பார்கள்.

    ReplyDelete
  4. பரவாக்கரை சிவன் கோவில் - பெருமால் கோவில் தற்சமயம் எப்படி உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. http://sivamgss.blogspot.in/2011/05/blog-post_11.html பெருமாள் கோயிலுக்கு மிகுந்த முயற்சிகள் எடுத்து 2011 ஆம் ஆண்டில் கிரஹப்ரவேசம் செய்வித்தோம். சம்பத் பட்டாசாரியாரும், அவரது சீடர் ராகவனும் மாற்றி மாற்றி வந்து பெருமாளுக்கு தினப்படி கைங்கரியம் செய்து வருகிறார்கள். சம்பளம் என் கணவரின் பென்ஷன் பணத்திலிருந்து மாதாமாதம் கொடுத்து வருகிறோம்.

      Delete
    2. சிவன் கோயிலுக்கு குருக்கள் வருகிறார். அவரால் முடிந்தபோது பொய்யாப் பிள்ளையாரையும் கவனிக்கிறார். வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்திச் செலவை எங்கள் மாப்பிள்ளை செய்து வருகிறார். இப்போதெல்லாம் ஊர் மக்களும் பிள்ளையார் சதுர்த்திச் செலவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

      Delete