எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 24, 2010

மறு மகள் மெச்சிய மாமியார்

வா, வா, டிவி பாரு.

ம்ம்ம்ம்ம்?? நான் சீரியலெல்லாம் பார்க்கிறதில்லை. எதுவும் புரியாதே!

அதனால் என்ன?? இப்போப் பார்த்தியானா புரிஞ்சுடும். இப்போ மேகலா வரும், எனக்கு வேறே என்ன பொழுது போக்கு?? புஸ்தகமும் படிக்க முடியலை. இங்கே வாங்கறதே இல்லை. நீ நிறைய வாங்கிண்டு இருந்தியே?

இல்லை, இப்போ ஆநந்தவிகடன், குமுதம், சிநேகிதி, அவள் விகடன் எல்லாம் நிறுத்தியாச்சு. துக்ளக், கல்கி, சக்திவிகடன், குமுதம் பக்தி, மங்கையர் மலர் மட்டுமே வாங்கிண்டு இருக்கேன்.

அங்கே இருக்கும்போது படிச்சதுதான் எல்லாம். இங்கே துக்ளக் மட்டும் எப்போவானும் பேப்பர்காரர் போடுவார். இந்த சோ துக்ளக் மாநாடு பத்தி எழுதினதைப் படிச்சயோ??

ம்ம்ம் படிக்கிறேனே!

கோயமுத்தூரிலே தமிழ் மாநாடு நடக்கப் போறதாமே?

ஆமாம்,

புதுசா சட்டசபைக்கட்டிடம் கட்டித் திறப்புவிழாவாமே? சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் வராங்களாமே?

அப்படியா?? எனக்குத் தெரியாதே?

டிவியிலே சொன்னாங்களே, நீ பார்க்கலை??

இல்லை, பார்க்கலை. ஒருவேளை வந்திருக்கும் கவனிச்சிருக்க மாட்டேன்.

எஸ்.வி.சேகர் இப்போ அதிமுகவிலே இல்லையாமே??

அப்படியா?? அதிகாரபூர்வமாச் சேர்ந்தாப்பலே தெரியலையே!

பிஜேபிக்கு இப்போ அத்வானி போய்ப் புதுசா வேறே ஒருத்தர் வந்தாச்சாமே!

ஆமாம். படிச்சேன்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஏரியிலே விழுந்து செத்துட்டாராமே?

அட, ஆமாம்.

பாம்பேயிலே போன வருஷத்துக்கு முந்தின வருஷம் குண்டு வெடிச்சாங்களே, அந்த ஆளை அமெரிக்காவிலே பிடிச்சாச்சுனு பார்த்தேன். அப்படியா? அவனை இங்கே கொண்டு வந்து கேஸ் போடுவாங்களா??

இதுக்குள்ளே எதிராளி அழும் நிலைக்குத் தள்ளப்பட எழுந்து செல்கிறார். அந்த எதிராளி வேறே யாரும் இல்லை. நானே தான்!

மேலே நடந்த சம்பாஷணை கற்பனை அல்ல. நிஜம். எண்பத்தி ஆறு வயதாகும் என் மாமியார் என்னிடம் கேட்டவை. விரல் நுனியில் அனைத்துத் தகவல்களையும் வைத்திருக்கிறார். இப்போவும் ஆர்வமுடன் படிப்பது துக்ளக் பத்திரிகை. பல வருடங்கள் முன்னால் பத்திரிகைகளை வீட்டில் வாங்க முடியாத நிலை இருந்தப்போ, என் கணவர் அலுவலக நூலகத்தில் இருந்து எடுத்து வருவார். அப்போ துக்ளக் பத்திரிகை, மங்கையர்மலர் பத்திரிகை இரண்டும் வந்ததுமே ஒருத்தருக்கும் தெரியாமல் தனியா எடுத்து வச்சுண்டு, தினமும் ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும், அந்தப் புத்தகங்களுக்குள் வைத்துப் படித்துவிட்டுப் பின்னர் எடுத்தது தெரியாமல் வைத்துவிடுவார். அவ்வளவு ஆர்வம் புத்தகங்கள் மீதும் அரசியல் விஷயங்களிலும். எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும், நாங்களே புத்தகம் வந்ததும் எடுத்துப் படிக்கக் கொடுத்துடுவோம். இந்த வயசில் நான் இருப்பேனா என்பதே தெரியாது. இருந்தாலும் இவ்வளவு ஆர்வமும், துடிதுடிப்பும் இருக்குமா என்பதும் சந்தேகமே. அதே போல சீரியல்கள் பார்ப்பதிலும் தடுமாறாமல் கதைகளைச் சொல்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை. சாயந்திரம் ஆறரை மணிக்கு மேகலாவில் ஆரம்பித்தால், அடுத்த சீரியலின் பெயர், அதில் நடிப்பவர்கள் எனச் சொல்லப் படுகிறது. அதே போல் தினமும் எந்தத் தொலைக்காட்சியில் என்ன பக்தி நிகழ்ச்சி என நேரம் தப்பாமல் தெரிஞ்சு வைத்துக்கொண்டு போடச் சொல்லிப் பார்ப்பார். தினமும் சீரியல் பார்க்கும் என் கணவரோ, மேகலாவின் நடிப்பவளை மற்றொரு சீரியலிலும், செல்வத்தில் நடிப்பவளை மேகலாவில் என்றும் ஒரு நாளைக்கு ஒரு மாதிரி மாத்திச் சொல்லுவார். பெயரும் அவர் இஷ்டத்துக்கு மாத்திப்பார். என்ன பார்த்தார், என்ன கதைனு கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இங்கே கதை மட்டுமின்றி நடிகைகள் பெயரும் சரியாகச் சொல்லப் படுகிறது.

தலை வணங்குகிறோம்.


கொசுறுத் தகவல்: என் மாமியாரின் தந்தை ராதாகிருஷ்ண ஐயர், சுதந்திரப் போராட்டத் தியாகி. சிறை சென்று கஷ்டப் பட்டிருக்கிறார். இவரின் பேட்டியை சுதந்திர வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது மும்பை வானொலி நிலையம் ஒலிபரப்புச் செய்தது. ஒருவேளை தந்தையின் ஆர்வம் மகளிடம் இருக்கிறது போலும்!

32 comments:

  1. கொசுறுத் தகவல்: என் மாமியாரின் தந்தை ராதாகிருஷ்ண ஐயர், சுதந்திரப் போராட்டத் தியாகி. சிறை சென்று கஷ்டப் பட்டிருக்கிறார். இவரின் பேட்டியை சுதந்திர வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது மும்பை வானொலி நிலையம் ஒலிபரப்புச் செய்தது. ஒருவேளை தந்தையின் ஆர்வம் மகளிடம் இருக்கிறது போலும்!


    .......... கண்டிப்பாக இருக்க வேண்டும். நல்ல பதிவு!

    ReplyDelete
  2. சூப்பர் மாமியார்!!!!!

    ReplyDelete
  3. ரொம்ப நாளைக்கப்புறம் நான் கமெண்டு போடறாப்பல ஒரு பதிவு.

    உண்மையிலேயே உங்க மாமியார் சூப்பர் மாமியார் தான்.

    பாப்போம் இது மாதிரி "மருமகள் மெச்சிய மாமியார்"னு உங்க மருமகள் பதிவு போடற மாதிரி நீங்க நடந்துக்கறீங்களான்னு :)

    ReplyDelete
  4. சூப்பர் பாட்டி.. :)

    ReplyDelete
  5. வாய்ப்பே இல்ல அந்த வயசுல நான் கண்டிப்பா இருக்க மாட்டேன். அவங்களுக்கு என்னோட சாஷ்டங்க நமஸ்காரம்

    ReplyDelete
  6. ஆகா...தலைவிக்கே ஒரு தலைவி இருக்காங்க போல...சூப்பரு ;)

    ReplyDelete
  7. வாங்க சித்ரா, ரொம்ப நன்றி.

    ReplyDelete
  8. வாங்க துளசி, இப்போ எங்கே இருக்கீங்க?? புலிக்குகையா?? சிங்கக் குகையா??? :P

    ReplyDelete
  9. அட??? அட???? நம்ம அதியமான்! என்ன திடீர் விசிட்டு???? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே! நன்னிங்கோ, வந்ததுக்கும், பின்னூட்டத்துக்கும். ஒரு விழாவே எடுக்கணுமோ? :P:P:P:P

    ReplyDelete
  10. அப்புறம் ஒரு விஷயம்ல, என்னோட மறுமகள், நான், என் மாமியார் நாங்க மூணுபேரும் ஒரே கட்சி! :P:P:P:P

    ReplyDelete
  11. மெளலி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  12. வாங்க எல்கே, இந்தப் படம் பரவாயில்லை, ஆனால் சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆச்சு?????

    ReplyDelete
  13. உங்க வேழம் பத்திரிகையைத் திறந்து நாளைக்குப் படிக்கிறேன்.

    ReplyDelete
  14. அட?? கோபி, ஒரு வரி எழுதிட்டீங்க போல! :P:P:P:P

    ReplyDelete
  15. கீதா, உங்க மாமியாருக்கு என் நமஸ்காரங்கள்.

    அற்புதமான நினைவுத்திறன். ஆர்வம். அசாத்தியம்!!

    ReplyDelete
  16. உங்க பதில் கமெண்ட் தவிர மீதி எல்லா கமெண்டையும் நான் வழிமொழிகிறேன்.. பாட்டிக்கே பாட்டி.. கலக்கல் மாமியார்! :)

    ReplyDelete
  17. //மெளலி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்// இதுக்கு பதிலா நான் ரீப்பீட்டேஏஏஏஏ போட்டிருக்கலாமுன்னு நினைச்சீங்க தானே? :))

    ReplyDelete
  18. வாங்க ரேவதி, இது ஒரு சாம்பிள் தான்! எங்க பையரும், பெண்ணும் ஹை டெக் பாட்டினு கேலி செய்வாங்க! :)))))))))))

    ReplyDelete
  19. அட போர்க்கொடி??? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியத்துக்கு மேலே ஆச்ச்ச்ச்ச்சரியம்! என் கிட்டே இருந்த பயம் தெளிஞ்சு போச்சா?? :P:P:P நீங்க ஒண்ணும் மொழியவேண்டாம் போங்க! :P:P:P:P

    ReplyDelete
  20. மெளலி, என்னதிது?? ஒரு வரி எழுதிட்டீங்க?? :P:P:P

    ReplyDelete
  21. எங்க பசங்க சொல்லறமாதிரி Amazing Grans , Awesome Paas, Enterprising Mothers in law and Astute Ammas!!!!!!!!!!!!!!
    இவா எல்லாருக்கும் ஒரு ஜே போடுவோம்!:))) interest in learning, curiosity நம்மை chronologically old ஆனாலும் young mind ஓட வைச்சுக்கும் .. அது நமக்கு ரொம்ப தேவை.இல்லைனா rusted ஆகிடுவோம்!:(((

    ReplyDelete
  22. அந்தக் காலத்துப் பெரியவர்களைப் போல, நம்மாள் இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு முறையான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள். பெரியவர்களின் ஆசி என்றும் நமக்குத் தேவை. எனது நமஸ்காரங்கள். நான் அம்பத்தூர் வந்தது 1990களில் அப்ப எனக்குத் தெரியாது. அழைப்புக்கு மிக்க நன்றி.

    நீங்க அம்பத்தூரா?. எங்க இரண்டாவது மன்னி,அம்பத்தூரில் ராக்கி தியேட்டர் பின்னால் தான் பல வருடங்கள் குடியிருந்தார்கள். அண்ணா நகர் என்று நினைக்கின்றேன். சுதா பெயர். அப்பாவின் பெயர், பி.வி.இராமசுவாமி,சித்தப்பாவின் பெயர் பி.வி. இரங்கராஜன். டிபண்ஸ் அக்கவுண்ட்ஸ் ஆபீஸில் வேலை பார்த்தார். இப்ப நங்கனல்லூரில் உள்ளார்கள். உங்களுக்கு பழக்கமுண்டா?.

    என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  23. @geetha paati

    ini nan photo change panratha illa..amabttur area varapa oru camera edutukittu unga veetuku varen neengale oru photo edutu kudunga naan pottukaren :|

    ReplyDelete
  24. வாங்க பித்தனின் வாக்கு, ஹிஹிஹி, உங்க மன்னியோட ஜாதகமே நம்ம கையிலே கிடைச்சாச்சே! :)))))) அது அண்ணா நகர் இல்லை, ராம்நகர். :D ஒருவேளை அவங்க பாங்க் ஆப் ஹைதரபாத் காலனியாய் இருந்திருக்கலாம். நாங்களும் அங்கே ராம்நகரில் காமகோடி தெருவில் ஒன்றரை வருஷம் இருந்தோம்.

    ReplyDelete
  25. எல்கே தாத்தா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். காமிரா என் கிட்டேயே இருக்கு, வாங்க அம்பத்தூருக்கு, தாத்தா மாதிரியே ஒரு படம் எடுத்து போஸ்டும் போட்டுடறேன். :P:P:P:P

    ReplyDelete
  26. // ராம்நகர். :D ஒருவேளை அவங்க பாங்க் ஆப் ஹைதரபாத் காலனியாய் இருந்திருக்கலாம். நாங்களும் அங்கே ராம்நகரில் காமகோடி தெருவில் ஒன்றரை வருஷம் இருந்தோம். //
    ராம் நகர் தாங்க. மூனாது தெருவே என்னவே. ஒரு முட்டு சந்து. கடைசியில இவங்க வீடு இருக்கும். அண்ணா,தம்பி இருவரும் கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால் மிக்க சந்தேசம். (ராக்கி தியேட்டர் பின்னாடிப் பக்கம்)

    ReplyDelete
  27. அது அண்ணா தெருனு நினைக்கிறேன், பித்தனின் வாக்கு. நாங்க அங்கே குடி இருந்தது இருபது வருஷம் முன்னால். அப்புறம் அம்பத்தூரின் மற்றொரு பகுதிக்கு வந்துட்டோம்! உங்க மன்னியின் சித்தப்பா ரங்கராஜன் என் கணவருக்கு மிகவும் தெரிந்தவர். என் கணவரும் டிபென்ஸ் அக்கவுண்ட்ஸ் தான். :)))))))))))))))))))))

    ReplyDelete
  28. வரமாட்டேன்னு நினைக்காதீங்க அம்பத்தூர்ல என்னோட பெரிய மாமனார் வீடு இருக்கு . அங்க வரப்ப வரேன்

    ReplyDelete
  29. அட??? எல்கே தாத்தா, வரமாட்டீங்கனு எங்கே நினைச்சேன்??? வாங்க வாங்க, வரதுக்கு முன்னாலே என்ன பிடிக்காதுனு சொல்லிடுங்க. அதையே பண்ணி வைச்சு உங்களுக்குச் சிறப்பு வரவேற்பு கொடுப்போமில்ல??? :D :P

    ReplyDelete
  30. geetha, very nice keep it up. you kept ur abilities under warp from us for so long. tks to know at least now.
    anna, manni and all of us

    ReplyDelete
  31. Oh, Anna,?>??? really?? it is very nice of you to comment in my blog post. Thank You for your Ashirvadams. My Namaskarams to Manni and Ashirvadams to others. Once again Thank You Anna.

    ReplyDelete
  32. // என் கணவருக்கு மிகவும் தெரிந்தவர். என் கணவரும் டிபென்ஸ் அக்கவுண்ட்ஸ் தான். :))))))))))))))))))))) //
    அவர்தாங்க.. இப்ப நங்கனல்லூரில் இருக்கார். மன்னி கல்பாக்கத்தில் இருக்காங்க.
    கதை விறுவிறுப்பாக கொண்டு சொல்கின்றீர்கள். கண்ணனின் அழகில் மயங்கி என்ன தொல்லை கொடுக்கப் போறாங்களே என்று கவலையாகி விட்டது. மிக்க நன்றி.

    ReplyDelete