எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 21, 2022

நெல்லைத்தமிழருக்காக மட்டுமில்லை, அனைவரும் அறிவதற்கு! :)

 3. செண்டலங்காரர் (நினைவு மஞ்சரி பாகம் 1) உ.வே.சா.


வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர் களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று. சங்ககாலத்திலே பாரதம் ஒன்று இருந்தது. ஆனால், உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப் பெற்றமையின் சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது உயிர்தரித்து நிற்கின்றன. அதற்குப் பிறகு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்று உண்டு. அது முற் றும் கிடைக்கவில்லை. அதைப் படித்து இன்புறுவார் அரியர். பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்ததுபோல வேறு எந்தப் பாரதமும் கவர வில்லை. இப்பொழுதும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலே தமிழறிந்தோர் வில்லிபாரதப் பிரசங்கம் செய்வதைக் காணலாம். தமிழ்நூலை முறையாகப் பாடங் கேட்பவர்கள் வில்லிபாரதத்தைத் தவறாமற் கேட்பது வழக்கம்.


நன் இளமையிலே அந்நூலைப் படித்தகாலத்தில் அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்தேன். அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும் தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலே இலிக்கும். வடமொழிச்சொற்களையும் தொடர்களையும் வில்லிபுத்தூரார் தடையின்றி மிகுதியாக எடுத்து ஆளுகின்றார்.


சபாபருவத்திலே சூதுபோர்ச் சருக்கத்தில் தரும புத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப்படுகிறது. சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரும்வண்ணம் தன தம்பி துச்சாதனனுக்குக் கட்டளை-யிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான்.


"தண்டார் விடலை தாயுரைப்பத்

      தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்

செண்டால் அவள்பைங் குழல்பற்றித்

      தீண்டா னாகிச் செல்கின்றான்

வண்டார் குழலு முடன்குலைய

      மானங் குலைய மனங்குலையக்

கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்

      கொண்டா ளந்தோ கொடியாளே"


என்ற செய்யுளில், அவன் திரௌபதியைப் பற்றி இழுத்துச் செல்லும் செய்தி கூறப்படுகின்றது. "தன்னுடைய தாயாகிய காந்தாரி, 'நீ போய் வா' என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலை பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி அந்தோ! தன் குழல் குலைய மானங் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்" என்பது இச்செய்யுளின் பொருள்.


திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில்,

"தீண்டாத கற்புடைய செழுந்திருவை"


என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன்.

'கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி'


என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். 'துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்லலாமா? பாட்டில் தெளிவாகக் கைச்செண்டாலென்று சொல்லப் பட்டிருக்கிறதே. தீண்டாத நிலையில் உள்ள அவள் கூந்தலில் மாலை அணிவதும் கையில் செண்டு வைத்திருப்பதும் இயல்பல்லவே? செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள் உண்டு. அதை அமைத்துப் பார்க்கலாமா? பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம்?' என்று இவ்வாறெல்லாம் எனக்கு அடிக்கடி ஐயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன.


திருவிளையாடற்புராணத்தில் சோமசுந்தரக் கடவுள் உக்கிரகுமாரருக்கு வேல் வளை செண்டு வழங்கியதாக ஒரு திருவிளையாடல் இருக்கிறது. அங்கே கூறப்படும் செண்டு எது? அந்தச் செண்டைக் கொண்டு அவர் மேருவை எறிந்ததாகப் புராணம் கூறுகின்றது. பலர் அதற்குப் பந்தென்றும், பூச்செண்டு போன்ற ஆயுதமென்றும் பொருள் கூறினர். ஐயனார் திருக்கரத்தில் செண்டு இருக்கிறதென்றும், கரிகாற்சோழன் இமயமலையைச் செண்டாலடித்துத் திரித்தானென்றும் சில செய்திகள் நூல்களால் தெரிந்தன. அந்தச் செண்டுகள் யாவை? பந்தா? மலர்ச்செண்டா? செண்டு போன்ற ஆயுதமா? எல்லாம் சந்தேகமாகவே இருந்தன. நான் பலரைக் கேட்டுப் பார்த்தேன். சமயம் போல அவர்கள் விடை பகர்ந்தார்கள்.


சற்றேறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவிபுரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்ம கர்த்தாவும் வேறு சிலரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக் கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டா ரென்று ஊகித்தேன். அந்தக் கலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும் போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடை யணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார், "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.


யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்து கொண்டு நின்றனர். பிரஸாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு ஸித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை. அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப்பட்டவரென்றோ தான் தீர்மானித்திருக்க வேண்டும். தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துசு சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார்.


ஆனாலும் அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர் பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரஸாதங்களும் கிடைத்தன.


தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டதில்லை; ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதா யிருக்கிறதே; என்ன?" என்று கேட்டேன். "அது தான் செண்டு" என்று அவர் கூறினார். "செண்டா!" என்று சொல்லி அப்படியே சின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.


கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரௌபதியின் உருவம் வந்து நின்றது; துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத் தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைக ளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக் காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.


அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிரகுமார், கரிகாலன், ஐயனாரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னது தானென்று அறியும்படியும் செய்தது.


" ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள். பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டைப் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்" என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.


" இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிரு்க்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.


" சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்" என்று கூறி விடை பெற்றுக்கொணடேன்.


அன்றுமுதல் என் சந்தேகம் பறந்துபோய் விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்யென்று தர்ம கர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். ' செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்' என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண் டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.

**********************************************************************************

வடுவூர் பெருமாளைப் பற்றி உ.வே.சா அவர்கள் குறிப்பிடவில்லை. அநேகமாக "தெய்வத்தின் குரலில்" படிச்சிருப்பேன். அதையும் தேடி எடுக்கணும். தேடி எடுக்கிறேன். ஆறுபாதி வழியாகவே பலமுறை போயும் உள்ளே போய்ப் பெருமாளைப் பார்க்கலை. :(

25 comments:

 1. சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் அறிந்தேன் நன்றி.

  தலைப்பு "நெல்லைத்தமிழருக்காக" என்று இருக்கிறது அப்ப நாங்க படிக்க கூடாதோ என்ற எண்ணமும் வருகிறதே...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா! கில்லர்ஜி, தலைப்பை மாத்திட்டேனே! :) நன்றி சுட்டிக்காட்டியதுக்கு.

   Delete
  2. அதே அதே கில்லர்ஜியின் கிளவிதான்... சே..சே.. கால் வைக்க ம்ுன்னமே டங்கு ச்ஜிலிபாகுதே:)).. அதே கேள்வியுடந்தான் விடாப்பிடியாக உள்ளே வந்தேன்.. மிக நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட காலத்துக்குப் பின்பு கொம்பியூட்டரைத் தூசு தட்டி எட்டிப் பார்த்தால் கீசாக்கா போஸ்ட் தான் கண்ணில தெரிஞ்சது காலை டமாலென உள்ளே வச்சிட்டேன்...

   ஏன் நெ. தமிழனுக்கு இந்த ஆன்மீகக் கதை தெரியாதாமோ?:).. சரி சரி வந்ததும் வராததுமாக எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. பிறகு வாறேன் கீசாக்கா... எல்லோரும் அக்டிவாக இருப்பதைப்பார்க்க, ஊரே நலமாக இருப்பது தெரியுது மகிழ்ச்சி.

   Delete
  3. ஹாஹாஹா அதிரடி, அதிரடியாக வந்ததோடு அல்லாமல் கேள்விகளும் அதிரடியாக இருக்கே! என்னோட பதிவுக்கு வந்துக் கருத்துங்கற பேரிலே வம்பு பண்ணிட்டுப்போவதை ரசித்தேன். :)))) மீண்டும் வருக. கருத்துச் சொல்லுவதில் உள்ள ருசி/ஆர்வம் எல்லாமும் நீங்களும் ஏஞ்சலும் இல்லைனா குறைந்து தான் போகுது. :))))

   Delete
 2. வில்லிபுத்தூர் ஆழ்வார் இயற்றிய வில்லிபாரத விரிவுரைகளை அவ்வளவு அழகாக நடத்துவார் அந்த காலத்தில் புலவர் கீரன் என்னும் இலக்கிய ப் பேருரையாளர்..

  அரசர் குலம் அழிவதற்கென்றே அக்கினியில் அவதரித்தவள் திரௌபதி என்று வில்லிபாரதத்தில் வருகின்றது...

  ஆதலினாலே விநாச காலே விபரீத புத்தி..

  அன்னையின் கூந்தலைப் பற்றியிழுத்த பாதகத்தால் தடந்தோள் பிய்க்கப்பட்டு மாண்டொழிந்தான்..

  பெண்களை சொல்லாலும் செயலாலும் சிறுமைப்படுத்துவோர் எவருக்கும் இதுவே கதி..

  ReplyDelete
  Replies
  1. திரு கீரன் அவர்களின் வில்லிபாரதம் நிறையக் கேட்டிருக்கேன். திடீரென அவர் இறந்தது இலக்கிய உலகுக்கே பேரிழப்பு.

   Delete
 3. செண்டு என்பதற்கு வளைதடி என்றொரு பொருளும் உண்டே.. என்று பதிவைப் படித்துக் கொண்டு வரும்போதே புரிந்தது.. நிறைவில் நிறைவான மகிழ்ச்சி..

  தவக்களைகள் (தமிழ்த்) தாமரையின் மணம் அறிவதே இல்லை..

  தவக்களைகள் தமிழ் மணம் அறிந்து ஆகப்போவது தான் என்ன?..

  ReplyDelete
  Replies
  1. திருவிளையாடல் புராணத்தில் படிச்சிருக்கேன். மேருமலையைச் செண்டால் அடித்த படலம். அப்போத் தான் இதன் விளக்கமும் புரிய வந்தது. ஆனால் மன்னார்குடிக்காரனை எல்லாம் பற்றிப் பின்னால் தான் தெரியும்.

   Delete
 4. சுவாரஸ்யமான விவரங்கள்.  சட்டென டுதானே தேடி எடுத்து விட்டீர்கள்.  உங்கள் ஞாபக சக்தியை வியக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அட? புத்தகம் கைவாக்கில் அடிக்கடி எடுக்கும்படி வைச்சிருக்கேன். என்னுடைய இரண்டாம் பதிப்பு. 1945 ஆம் ஆண்டில் திரு உ.வேசா. அவர்களின் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. விலை ஒரு ரூபாய் எட்டு அணாக்கள்.

   Delete
  2. அட ஸ்ரீராமுக்கு எப்பவும் எல்லோரது நியாபக ஜக்தியைப் பார்த்து வியப்பதே தொழிலாப் போச்ச்ச்ச்ச்ச்ச்.. அந்த லிஸ்ட்டில இப்போ கீசாக்காவுமோ:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

   Delete
  3. ஹாஹாஹா, ஆமா இல்ல!

   Delete
 5. தீக்குழி இறங்குவதை  பூக்குழி றங்குவதாகச் சொல்வார்கள்.  அது போல ஒரு ஆயுதத்துக்கு செண்டு என்று பெயர் போலும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் நடக்கும் மட்டையடித்திருவிழாவில் பூச்செண்டுகள் தான் பயன்படுத்துவாங்க. :)

   Delete
 6. மிக்க நன்றி. இதனைப் படித்த நினைவு வருகிறது. ஆறுபாதி என்ற ஊர் அருகிலா? (மாயவரம் பக்கத்தில்). எனக்கென்னவோ அந்த ஊர் உற்சவர் சிலைகள்தாம் பாதுகாப்புக்காக திருச்சேறை பெருமாள் கோவிலில் இருக்கிறது என நினைக்கிறேன். அர்ச்சகர், இந்தச் சிலையைக் காண்பித்து, மன்னார்குடி ராஜகோபாலனைச் செய்த அதே சிற்பி செய்தது என்றார்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை! நீங்கள் அறிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. எங்க வீட்டுக்கு எதிரே ஆறுபாதி ஊர்க்காரங்க ஶ்ரீவைணவர்கள் இருந்தும் அவங்களுக்கு இது பற்றிக் கேட்டப்போ தெரியலை. அப்படியானு சொன்னாங்க. :)

   Delete
  2. பார்த்தீங்களோ மீ ஜொள்ளிட்டேன்ன்.. நெ தமிழனுக்கும் நினைவு வருதாம்ம்.. இவரின் ஞியாபக ஜக்தியைப் பார்த்து, ஸ்ரீராமுக்கு முன்னம் மீ வியக்கேன்:)).. ஆவ்வ்வ்வ் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரன்னிங்:))

   Delete
  3. வாங்க, மீண்டும் வந்து வம்பு வளர்க்க!

   Delete
 7. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. நிறைய விஷயங்களளை படித்து தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  அந்த செய்யுள் அருமை. இந்த செண்டாயுதம் பற்றி எங்கோ படித்த நினைவு உள்ளது. ஆனால் தங்கள் அளவுக்கு எதுவும் நினைவில் இருப்பதில்லை. திரௌபதி சபையில் வந்து நிற்க முடியாத நிலை பற்றி கதை கூறும் போது கேள்விபட்டுள்ளேன். இது கதைக்காக உண்டானதா ? இல்லை....இயல்பானதா?தன்னையும், தன் கணவர்களையும் நம்பி இருந்தவள் இறுதியில் கிருஷ்ணனே அபயம் என தன் நம்பிக்கை முழுவதும் அவனிடம் வைத்த பின் கிருஷ்ணன் அவள் மானம் காக்க வந்தான். இறை நம்பிக்கைக்கான என்ன அழகாக நிகழ்வு. தாங்கள் இந்த்த ஆயுதம் பற்றி குறிப்பிட்டதும் இது நினைவில் வருகிறது. அந்த கிருஷ்ணன் வேறு ராஜகோபாலன் வேறு அல்லவே... தங்களது விபரமான பதிவுக்கு மிக்க நன்றி. மேலும் பல தகவல்களை அறிய காத்திருக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா. அநேகமா இந்தப் புத்தகத்தை என்னுடைய பத்தாம் வயதில் இருந்து படிச்சுட்டு இருக்கேனே! இது நாங்க குடியிருந்த வீட்டின் சக குடித்தனக்கார மாமா கடையநல்லூர் கிருஷ்ணையருடையது. என்னுடைய தமிழார்வத்தை (???????????????????) பார்த்துவிட்டு அவர் இம்மாதிரிப் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பார். பின்னாட்களில் அவர் அங்கே இருந்து காலி செய்யும்போது என்னையே வைச்சுக்கச் சொல்லிட்டுப் போனார். இதுவும் தனிப்பாடல் திரட்டும் அதில் முக்கியமானது. தனிப்பாடல் திரட்டு எப்படியோ காணாமல் போய் விட்டது.

   Delete
 8. தாலாட்டு பாடலில் அத்தை அடித்தாலோ அரளிப்பூ செண்டாலே! என்று வரும்
  செண்டுலங்காரப்பெருமாள் விவரம் அருமை. திருநெல்வேலி பக்கம் சிக்கென இருக்கும் பெண்களை "செண்டு போல இருக்கா பெண்" என்பார்கள்.

  கோவில் அர்ச்சகர் கற்பூர ஒளியில் காட்டிய செண்டாயுதம் பார்த்தவுடன் திரெள்பதி நினைவு வந்தது அருமை.
  பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி. இப்போத்தான் உங்க பதிவுகளுக்கும் போயிட்டு வந்தேன். வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஒரு காலத்தில் என்னையும் "செண்டு" போல் இருக்காள் பெண் எனப் புக்ககத்தில் சொல்லுவார்கள். இப்போ? இஃகி,இஃகி,இஃகி! :)))))

   Delete
 9. ஆ நேற்று போட்ட கமென்ட் என்னாச்சு?!!!! காணாமப் போச்சா...

  ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது இப்படியான விளக்கம் இதுவரை படித்ததில்லை. ரசனையான எழுத்து...ரசித்து வாசித்தேன். ஏதோ நம்மிடம் தன் அனுபவத்தைச் சொல்லுவது போல...

  சென்டு என்ற பெயர் கூட உண்டே தெற்குப் பக்கங்களில்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. @தி/கீதா! வரலையே, ஸ்பாமில் கூடக் குலுக்கிப் பார்த்துட்டேன். எதுவும் இல்லை.

   Delete
 10. செண்டலங்காரப் பெருமாள்.....ஆஹா அற்புதமான தகவல்கள்....

  ReplyDelete