எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 19, 2010

அணிலே அணிலே ஓடி வா!

நெஸ்லே கிட்காட் விளம்பரம் இரண்டு, மூன்று நாட்களாய்ப் பார்க்கிறவங்க அதில் உள்ள கவிதைத்தனமான ரசனையையும், நகைச்சுவையையும் கண்டிருப்பார்கள். இரண்டு இளைஞர்கள் ஒரு பூங்காவில் அமர்ந்து கிட் காட்டைப் பிரிக்கும்போது ஒரு துண்டு கீழே விழ அதை ஒரு அணில் ஓடி வந்து பொறுக்கும். (கவிதாவோட அணில் குட்டி இல்லை, இது பெரிய அணில் :P) இதுதான் சமயம்னு பொறுக்கும் அணிலை(பெண் அணிலோ) மற்றொரு (ஆண் அணில்?)அணில் வந்து சீண்டும். அது கண்டுக்காமல் இருக்க உடனே டூயட் பாடி ஆடறது பாருங்க. என்ன ஒரு கற்பனா வளம் மிகுந்த அனிமேஷன். ரெட் ரோஸ் தான் கொடுக்கலை. நல்ல பாடலும் கூட. இளைஞன் ஆச்சரியமாய்ப் பார்த்துட்டு இருப்பான்.
ஆனாலும் அதுக்கெல்லாம் மசியாமல் அந்த அணில் மரத்தை நோக்கி ஓட, பின் தொடரும் அணில் இளைஞனைப் பார்த்துக் கண்ணடிக்கும் பாருங்க ஹையோ!! இவ்வளவு ரசனையான விளம்பரத்தைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. இதுக்காகவே டிவி முன்னாடி உட்காருகிறேன்னா பாருங்களேன்!

15 comments:

 1. அமெரிக்காவில் குண்டு குண்டாக அணில்கள் குட்டி பெருச்சாளி போல இருக்கின்றன. ஆனால், அவற்றின் முதுகில் அந்த மூன்று கோடுகளைப் பார்க்காதது அதிசயம்.

  ReplyDelete
 2. :) :) correct geetha mam!! :D :D nanga paaththom engaathla.. rendu naalaa antha ad eppa pottaalum odi vanthu paaththndrukkom! athu- Mr. India cinema-lernthu "I love you" paattu padarathodu mattumilla- choreography kooda excellent! :D :D


  PS: oru post en blog-la- neenga padikkanumnu priya padaren.. "Paatti Samayal" paththi! :D

  ReplyDelete
 3. வல்லி, இரவு எட்டு மணிக்குக் கட்டாயமா வருது, பாருங்க நாளைக்கு!

  ReplyDelete
 4. ம்ம்ம்ம், ஜீவி சார், இந்திய அணில் ராமரால் முதுகில் கோடு போடப் பட்டவைனு ஒரு கருத்து உண்டே?

  ReplyDelete
 5. வாங்க மாதங்கி, பார்த்தாச்ச்ச், படிச்சாச்ச், பின்னூட்டம் போட்டாச்ச்ச்ச், நல்லா இருக்கு!

  ReplyDelete
 6. என்ன தலைவி டக்குன்னு அணிலுக்கு வந்துட்டிங்க....கதை என்ன ஆச்சு?!! ;)

  இன்னும் அந்த விளம்பரத்தை பார்க்கவில்லை....தேடிக்கிட்டு இருக்கேன் ;))

  ReplyDelete
 7. அதான் அதிசயம். மூன்று கோடுகளைச் சுமந்திருக்கும் வம்சாவளி இந்தியாவிலேயே தங்கிவிட்டனவோ என்னவோ.. இந்த உங்கள் பதிவில் முதல் படத்தில் இருக்கும் அணிலுக்குக் கூட முதுகில் கோடுகள் இல்லை, பார்த்தீர்களா?..

  ReplyDelete
 8. கீதாஜி... அணில்'னாவே அது என்னுது தான் :))

  அதுவும்..இது கண்டிப்பா என் அணில் தான்.. பிகாஸ் பிகாஸ்... மை அணில் நோஸ் ஹிந்தி.வெரி வெரி வெல்லு...:))))).

  ReplyDelete
 9. நானும் பார்த்தேன் கீத்தா மாத்தா! அருண் வருண் எங்கே இருந்தாலும் ஓடி வந்து அணில் டூயட்டை பார்த்து கேட்டு சிரித்து ரசிக்கிறார்கள்! :) மிஸ்டர் இந்தியா படப்பாட்டு!

  ReplyDelete
 10. வாங்க கோபி, கதை பாட்டுக்குக் கதை, அதுக்கும் இதுக்கும் என்ன?? நினைச்சேன் உடனே எழுதிடணுமே நமக்கு. அதான் அணில்! :)))))))

  ReplyDelete
 11. ஜீவி சார், போடும்போதே தேர்ந்தெடுத்தேன் ஒரு அணில் நாட்டு அணிலும் ஒரு அணில் வெளிநாட்டு அணிலுமாக! அதை நீங்க உன்னிப்பாக் கவனிச்சதும் ஆச்சரியம் தான். நன்றி மீண்டும் வந்ததுக்கு.

  ReplyDelete
 12. வாங்க கவிதா, 'உங்க பார்வையில்" எல்லாமே உங்க அணிலா இருக்கும்தான்! :D "என் பார்வையில்"அது என்னோட அணில்! அப்புறம் எனக்கும் ஹிந்தி தெரியுமே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?? :P:P

  ReplyDelete
 13. அநன்யா அக்கா??? அட அதிசயமா???? அது சரி,இந்தியாவா துபாயா?? எங்கே இருக்கீங்க இப்போ?
  இந்த விளம்பரம் எல்லாருக்கும் பிடிக்கும், வருண், அருணுக்குப் பிடிச்சதில் ஆச்சரியமே இல்லை!

  ReplyDelete
 14. ஆஹா... நான் பாக்கலையே... ரெம்ப நல்லா இருக்கும் போல இருக்கு... கெடைச்சா பாக்குறேன்...

  ReplyDelete