எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 08, 2011

நீ தானா அந்தக் குயில்? கூகிளின் கேள்வி!

நேத்திக்கு மத்தியானமா மின் தமிழ்க் குழுமத்தின் பழைய மடல் ஒன்றைத் தேட வேண்டி இருந்தது. அக்டோபர் மாதத்து இழை அது. இழையோட தலைப்பைக் கொடுத்துத் தேடினால் அதன் முதல் பகுதி மட்டுமே வருது. இரண்டுனு எண்ணைக் கொடுத்தும் தேடினாக் கிடைக்கவே இல்லை. சரினு குழுமத்துக்குள்ளே போய் எல்லா விவாத இழைகளையும் திறந்து கொண்டு, அக்டோபர் மாத இழையின் தலைப்பைக் கொடுத்துத் தேடினேன். அப்படியும் அந்தக் குறிப்பிட்ட இழை மட்டும் வரவில்லை. இனி வேறு வழி இல்லை. பின்னாலே போய்த் தான் தேடணும் போலிருக்குனு பழைய இழைக்குக் கொடுத்திருக்கும் oldest க்ளிக் பண்ணினால் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பழைய இழையாய் வந்துடுச்சு! க்ர்ர்ர்ர்ர்னு திட்டிட்டு பின்னாலே போகவேண்டாம், முன்னாலே இருந்து பின்னாலே போகலாம்னு முடிவு செய்து பெப்ரவரியில் இருந்து ஒவ்வொரு மாசமாப் பின்னாலே போனேன். டிசம்பர் வந்துடுச்சு. டண்டடண்டடய்ங்க்க்க்க்க்க்க்க்! டிசம்பர் முடிஞ்சு, நவம்பருக்குப் போகணும். அதுக்குப் பதிலா என்ன வந்ததுனு நினைக்கறீங்க?

நீ தானா அந்தக் குயில்? அப்படினு கூகிள் பாட்டுப் பாடுது! ஹிஹிஹி! கூகிள் திட்ட ஆரம்பிச்சுடுச்சு. மனசே சரியில்லை! என்ன சொன்னதுன்னா, "ரொம்ப நேரமா இந்தக் குழுமத்தோட விவாத இழைகளிலே இந்தக் குறிப்பிட்ட ஐ.பி.யிலே இருந்து யாரோ விளையாடறாங்க போலிருக்கே! அது நீ இல்லைனு நம்பறோம். வேறு யாரோவா இருக்கும்னு சந்தேகமா இருக்கே, கொஞ்சம் நடந்து காட்டு! சீச்சீ, கொஞ்சம் இந்த word verification எழுதிக் காட்டு"னு சொல்லிடுச்சு. சிக்கலான வேர்ட் வெரிபிகேஷன்! எல்லாம் நேரம்! ஆடிப்போயிட்டேன் இல்ல! தேடறது நான் தான்னு சொல்றதுக்காக என்னோட விதியை நொந்து கொண்டே வேர்ட் வெரிபிகேஷனை முடிச்சேன். அப்ப்ப்ப்ப்பாடா! முதல் அட்டெம்ப்டிலேயே பாஸ்ஸ்ஸ் டிஸ்டிங்ஷனோட. அப்புறமா சரி, நீ தான் அந்தக் குயில்னு சொல்லிட்டு கூகிள் பின் வாங்கிடுச்சு. அப்பா, எவ்வளவு சந்தேகப் பிராணி? :P

இப்போ என்னோட சந்தேகம் இம்மாதிரி யாருக்கானும் ஏற்பட்டிருக்கா? (இந்த விசித்திரம் எல்லாம் உங்களுக்குத் தான் ஏற்படும்னு சொல்லுறது புரியுது) இருந்தாலும் இது ஏன் ஏற்படுகிறது. இப்போ எனக்கு ஒரு குழுமத்தின் ஆறு மாசத்துக்கு முந்திய இழை அவசரமாத் தேவைன்னா எப்படித் தேடறது? இழையின் தலைப்புக் கொடுத்துத் தேடினாலும் பல சமயங்களிலும் கிடைக்கறதில்லை. சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டு வாங்கறேன். அவங்களுக்கு சேமிப்பில் வைச்சிருப்பாங்கனு நினைக்கிறேன். உடனே அனுப்பிடறாங்க. ஆனால் அவங்களை உடனடியாத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தால் என்ன செய்யறது? அல்லது அவங்க கிட்டேயும் அந்த இழை இல்லைனா என்ன செய்யறது? எப்படித் தேடணும்?

யாருங்க அங்கே தொழில் நுட்பக் குழுவோட ஆட்களை உடனடியாகக் கூட்டி இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விபரமாய் அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லுங்க. ஏன்னா அடிக்கடி இப்படித் தேடறேன், தேடறேன், தேடிக்கொண்டே இருக்கேன்! தேடாமல் கிடைக்க என்ன வழி?

46 comments:

 1. வாங்க கொச்சு ரவி, தமிழ் படிப்பீங்களா? வாழ்த்துகள். உங்க வீட்டிலே நீங்கதான் கடைசியா? போகட்டும், குறைந்த பக்ஷம் மலையாளத்திலாவது இதுக்கு என்ன செய்யலாம்னு பறைஞ்சிருக்கலாம்! :P

  ReplyDelete
 2. அப்பாவியோட பதிவுக்கு போயிட்டு வந்ததிலே இருந்து நீங்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சாச்சா !

  நான் கத்து குட்டி தான் :)

  யாமிருக்க பயமேன் அப்படின்னு யாராவது வந்து பதில் சொல்ல மாட்டாங்களா என்ன !

  ReplyDelete
 3. கீதாம்மா ! நீங்க பன்மொழி புலவரா ........தங்களுக்கு எத்தனை மொழி தெரியும் .,

  தெரிந்து கொள்ள ஆசை ..

  ReplyDelete
 4. வேர்ட் வெரிபிகேஷன்க்கு இப்படி அலப்பறை பன்ற ஒன் அண்ட் ஒன்லி சீதா பாட்டி (பாருங்க கீதா பாட்டின்னு நா சொல்லவே இல்லை ;என்னே என் தலைவி பற்று!) கொடி மாதிரி யாராவது சொன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன் :( :(

  ReplyDelete
 5. கீதாம்மா ! ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் கொஞ்சம் இடைவெளி விடலாமே ! என்று முதலில் சொல்ல தான் நினைத்தேன்

  அப்புறம் தான் மொக்கை பதிவுகளை போடாமல் நல்ல நல்ல பதிவுகளை போடும் தங்களை போன்றோரை உற்சாக படுத்தி இன்னும் நிறைய பதிவுகளை உங்களிடம் இருந்து கிடைக்க செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது :) :)

  ReplyDelete
 6. வாங்க ப்ரியா, எல்லாம் நேரம்! அப்பாவியைப் பார்த்தா நான் கேள்வி கேட்கணும்? நாம தான் கேள்வியின் நாயகி ஆச்சே? :D

  ம்ஹும், இன்னும் யாரும் வரலை, கடை விரித்தேன் கொள்வாரில்லை. எல்லாருக்கும் அலுத்துப்போயிருக்கும் போல, இவங்களுக்கு வேறே வேலை இல்லை, எப்போப் பார்த்தாலும் ஏதானும் விஷமம் பண்ணிட்டு முழிக்கிறாங்கனு போயிட்டிருப்பாங்க! :)))))))))

  ReplyDelete
 7. ஹிஹ்ஹிஹி, நான் பன்மொழிப் புலவர் க.நா. அப்பாதுரைக்கு அடுத்தபடியா பெயர் சொல்லத் தக்க புலவராக்கும்! :))))

  ReplyDelete
 8. வேர்ட் வெரிபிகேஷன்க்கு இப்படி அலப்பறை பன்ற ஒன் அண்ட் ஒன்லி சீதா பாட்டி //
  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதென்ன சேம் சைட் கோல்?? உ.கு.????? :P

  ReplyDelete
 9. ஹிஹிஹி, மொக்கைதான் இடைவெளி இல்லாமல் வரும்! :))))) நல்ல பதிவுகள் எல்லாம் யோசிச்சு எழுதணும் இல்ல??

  ReplyDelete
 10. //வேர்ட் வெரிபிகேஷன்க்கு இப்படி அலப்பறை பன்ற ஒன் அண்ட் ஒன்லி சீதா பாட்டி //
  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதென்ன சேம் சைட் கோல்?? உ.கு.????? :P //

  ஐயகோ ! கீதாம்மா ஆஆஆஆஆஆ ! முழுவதும் படிக்காமல் இதென்ன என் மேல் இப்படி ஒரு அபாண்டமான பழி !

  ReplyDelete
 11. //ஹிஹிஹி, மொக்கைதான் இடைவெளி இல்லாமல் வரும்! :))))) நல்ல பதிவுகள் எல்லாம் யோசிச்சு எழுதணும் இல்ல??//

  என் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர்றீங்க கீதாம்மா ;இதை வைத்து கேசரி கட்சிகாரீங்க என்னவெல்லாம் சொல்ல போறாங்களோ !

  ReplyDelete
 12. இது கூகிள் மட்டும் அல்ல, பல இணையத் தளங்களில் உள்ள பிரச்சனை. ஸ்பேம் பிரச்சனை வர ஆரம்பித்ததில் இருந்து இந்த வேர்ட் வெரிபிகேசன் கொண்டு வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. இதுக்கு ஒன்னும் பண்ணா இயலாது. சில விசமிகள் பண்ற வேலையினால் எல்லோரும் பாதிக்கப் படறோம் :(

  ReplyDelete
 13. ஐயகோ ! கீதாம்மா ஆஆஆஆஆஆ ! முழுவதும் படிக்காமல் இதென்ன என் மேல் இப்படி ஒரு அபாண்டமான பழி !//

  ஹிஹிஹி, அது!!!! அந்த பயம் இருக்கட்டும்! :D

  ReplyDelete
 14. கீதாம்மா ;இதை வைத்து கேசரி கட்சிகாரீங்க என்னவெல்லாம் சொல்ல போறாங்களோ !//

  அட விடுங்க, இதெல்லாம் ஜுஜுபி! அவங்க மண்டபத்திலே இல்லை எழுதி வாங்கி போஸ்ட் போடறாங்க?? அதை எடுத்து விடமாட்டோமா? :))))))

  ReplyDelete
 15. வாங்க எல்கே, நான் கேட்டது வேர்ட் வெரிபிகேஷன் பத்தி இல்லை. குழுமம் ஒன்றின் பழைய மடலைத் தேடி எடுக்க எந்த வழி சுலபமானது என்பதே! தெரிஞ்சால் சொல்லுங்கள். நன்றி.

  ReplyDelete
 16. கூகுளாரை இந்தப் பாடு படுத்தினால் அதுவும் தான் என்ன செய்யும், பாவம்!
  (நீதானா அந்தக் குயில்?'ன்னு கேட்ட மாத்திரத்திலேயே மொத்தக் கோபமும் புஸ்வாணம் ஆயிடுத்துன்னு தெரியும்)
  அந்த வெளிக்குக் காட்டிக்காத சந்தோஷத்திலேயே வெரிபிகேஷனுக்கு ஆட்படுத்திக் கொண்டது! என்ன யான் சொல்றது?...

  ReplyDelete
 17. நான் எந்தக் குழுமத்திலும் கிடையாது. அதனால் எனக்கு இது பத்தித் தெரியாது.

  தேடினது கிடைக்கலைன்னா அதுதேவியில்லைன்னு அர்த்தம்:-)

  ReplyDelete
 18. i cudnt complete that comment... but by mistake the previous comment got posted... dont publish that... ofcourse this too.. what you can do is move the mails which you think as important, into a folder.. or you can label it... so all those mails will be under one label.... eg.. you can create a label in the name of mine.. so whenever i send any mail or any mails related to me can be under the label BALAJI... you dont want to do this for every individual mail.. in hte setting of gnail you can set auto labeling ... so that all the mails from any particular subject or sender will be automatically moved... these solutions are for your future ... but for the old messages there are no other way as the script is written in such a way that soem digging very old mails continously, it is better to do that word verification.... so that your maill box is secured from unauth access...

  ReplyDelete
 19. நீதானா அந்தக் குயில்?'ன்னு கேட்ட மாத்திரத்திலேயே மொத்தக் கோபமும் புஸ்வாணம் ஆயிடுத்துன்னு தெரியும்)//

  வாங்க ஜீவி சார், ஹிஹிஹி, நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்! :D

  ReplyDelete
 20. @கோபி ராமமூர்த்தி, அதைத் தேடினதே தேவைனு தானே! :P

  ReplyDelete
 21. பாலாஜி அங்கிள், உங்க யோசனையைச் செயல்படுத்தறேன். நன்னிங்கோ!

  ReplyDelete
 22. //priya.r said...
  வேர்ட் வெரிபிகேஷன்க்கு இப்படி அலப்பறை பன்ற ஒன் அண்ட் ஒன்லி சீதா பாட்டி(பாருங்க கீதா பாட்டின்னு நா சொல்லவே இல்லை//

  மாமி உங்களுக்கு எதிர் கட்சினு தனியா யாரும் வேண்டாம்... :))))

  ReplyDelete
 23. // கீதா சாம்பசிவம் said...வாங்க ப்ரியா, எல்லாம் நேரம்! அப்பாவியைப் பார்த்தா நான் கேள்வி கேட்கணும்? நாம தான் கேள்வியின் நாயகி ஆச்சே?//

  அதானே... ஆனா எனக்கும் கேள்வி கேக்கதான் பிடிக்கும்... நாங்கெல்லாம் "தருமி" பரம்பரையாக்கும்... ஹி ஹி ஹி...:)))

  ReplyDelete
 24. //priya.r said...//ஹிஹிஹி, மொக்கைதான் இடைவெளி இல்லாமல் வரும்! :))))) நல்ல பதிவுகள் எல்லாம் யோசிச்சு எழுதணும் இல்ல??// என் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர்றீங்க கீதாம்மா ;இதை வைத்து கேசரி கட்சிகாரீங்க என்னவெல்லாம் சொல்ல போறாங்களோ//

  மறுபடியும் பாயிண்ட் எடுத்து குடுக்கறது யாருன்னு நான் சொல்ல வேண்டியதில்லனு நினைக்கிறேன்... :)))

  ReplyDelete
 25. இந்த தமிழ் மின் குழுமம் பத்தி யாரோ எப்பவோ எங்கயோ சொன்ன நினைவு இருக்கு... அது என்ன? அந்த இதழ்கள் நாங்களும் படிக்க முடியுமா? முடியும்னா இப்படி? "கண்ணுல தான்"னு பதில் சொன்னா உங்களுக்கு தினமும் word verification வரணும்னு கூகிளாண்டவர்கிட்ட வேண்டிப்பேன்... :)

  ReplyDelete
 26. .//அப்பாவி தங்கமணி said...
  இந்த தமிழ் மின் குழுமம் பத்தி யாரோ எப்பவோ எங்கயோ சொன்ன நினைவு இருக்கு... அது என்ன? அந்த இதழ்கள் நாங்களும் படிக்க முடியுமா? /

  அந்தக் குழுமத்தில் இணைந்தால் படிக்கலாம். இதைப் பத்தி நாந்தான் சொன்னேன்

  ReplyDelete
 27. //கீதாம்மா ;இதை வைத்து கேசரி கட்சிகாரீங்க என்னவெல்லாம் சொல்ல போறாங்களோ !//

  அட விடுங்க, இதெல்லாம் ஜுஜுபி! அவங்க மண்டபத்திலே இல்லை எழுதி வாங்கி போஸ்ட் போடறாங்க?? அதை எடுத்து விடமாட்டோமா? :))))))//

  ரசித்து சிரித்தேன் :)

  பாருங்க கீதாம்மா !நீங்க சொல்லி வாய் மூடலே! அதுக்குள்ளே ஒருத்தர் வந்து நாங்க தருமி பரம்பரையாக்கும் என்று ஒத்து கொண்டு போறாங்க !!!!!!!!

  எப்படி உங்களுக்கு இப்படி ஒரு தீர்க்க தரிசனம் ! தங்க தலைவி கீதாம்மா வாழ்க !

  ReplyDelete
 28. சரியான வார்த்தைகளை உள்ளிட்டா சுலபமா தெரியும். இல்லைன்னா தேடித்தேடித்தான் எடுக்கணும்.
  மின்தமிழ் குழும மடல்களை யார் வேணுமானாலும் படிக்கலாம். மெம்பரா இருக்க வேண்டியதில்லை. இங்கே: http://tinyurl.com/4j5b8h8
  பாலாஜி அங்கிள் கமென்ட் எங்கே? குயில் தூக்கிண்டு போச்சா?

  ReplyDelete
 29. @திவா, சரியான வார்த்தைகளை உள்ளிட்டா சுலபமா தெரியும். இல்லைன்னா தேடித்தேடித்தான் எடுக்கணும்.//

  கீழே பாருங்க எழுதினதை. எப்போவும் தலைப்பைக் கொடுத்துத் தான் தேடுவேன். உடனே வந்துடும், அன்னிக்கு என்னமோ........ :P :P :P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்



  இழையோட தலைப்பைக் கொடுத்துத் தேடினால் அதன் முதல் பகுதி மட்டுமே வருது. இரண்டுனு எண்ணைக் கொடுத்தும் தேடினாக் கிடைக்கவே இல்லை.

  ReplyDelete
 30. @திவா, சரியான வார்த்தைகளை உள்ளிட்டா சுலபமா தெரியும். இல்லைன்னா தேடித்தேடித்தான் எடுக்கணும்.//

  கீழே பாருங்க எழுதினதை. எப்போவும் தலைப்பைக் கொடுத்துத் தான் தேடுவேன். உடனே வந்துடும், அன்னிக்கு என்னமோ........ :P :P :P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்



  இழையோட தலைப்பைக் கொடுத்துத் தேடினால் அதன் முதல் பகுதி மட்டுமே வருது. இரண்டுனு எண்ணைக் கொடுத்தும் தேடினாக் கிடைக்கவே இல்லை.

  ReplyDelete
 31. பாலாஜி அங்கிள் பப்ளிஷ் பண்ணவேண்டாம்னு சொல்லி இருந்தார். அப்படியும் பப்ளிஷ் பண்ணினேன். அது என்னமோ தெரியலை, ஒளிஞ்சுட்டு இருந்திருக்கு போல. இப்போக் கண்டு பிடிச்சு இழுத்துட்டு வந்தாச்சு! :)))))))

  ReplyDelete
 32. ஏடிஎம், அதெல்லாம் ப்ரியாவையும் என்னையும் பிரிக்க நீங்க செய்யற முயற்சி எதுவும் பலிக்காது! :)))))

  ஹிஹிஹி, ஏடிஎம், உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்னிங்கோ. அதான் ஏற்கெனவே சொல்லிட்டேனே , மண்டபத்திலே எழுதி வாங்கிட்டு வராங்கனு! :)))))))

  வேண்டாம், வேண்டாம், ப்ரியாவோட லேட்டஸ்ட் கமெண்டைப் பாருங்க போதும்! :)))))))

  ReplyDelete
 33. ஏடிஎம், அதான் திவா லிங்க் கொடுத்திருக்கார் பாருங்க. கார்த்திக் இப்போச் சேர்ந்திருக்கார், ரெண்டு மாசமோ என்னமோ ஆகுது. நீங்களும் வேணும்னா சேரலாம்.

  ஹிஹிஹி, ப்ரியா, அடுத்த கொ.ப.செ, நீங்க தான், இப்போத் தான் அஷ்வின் கேட்டார் பஸ்ஸிலே கொ.ப.செ. யாருன்னு, வரிசையிலே இருக்காங்களேனு சொன்னேன். அதை வாபஸ் வாங்கிக்கறேன். சரியா? :))))))

  ReplyDelete
 34. //ஏடிஎம், அதெல்லாம் ப்ரியாவையும் என்னையும் பிரிக்க நீங்க செய்யற முயற்சி எதுவும் பலிக்காது! :)))))//

  நன்றி கீதாம்மா ! இந்த அப்பாவி முதலில் எல்லாம் பாசமா தான் இருந்தா ..... இப்போ தான் இப்படி ...........

  ஒருவேளை அவளுக்கு தட்டு வடை கொடுத்து எனக்கு விலையுர்ந்த வெங்காய மாலை கொடுத்தது தான் காரணமோ ..........

  இதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன் .,மாலையில் பாதி அவங்க கேட்கிறாங்க .,கொடுத்தடுட்டுமா என்று !

  நீங்க தான் கொடுக்க கூடாது ன்னு என்ன காரணமோ மறுத்து விட்டீங்க..............
  தலைவி நீங்க ! என்ன செய்தாலும் சொன்னாலும் அதுக்கு ஒரு நியாயம் இருக்கும் :) :)

  ReplyDelete
 35. //ஹிஹிஹி, ப்ரியா, அடுத்த கொ.ப.செ, நீங்க தான், இப்போத் தான் அஷ்வின் கேட்டார் பஸ்ஸிலே கொ.ப.செ. யாருன்னு, வரிசையிலே இருக்காங்களேனு சொன்னேன். அதை வாபஸ் வாங்கிக்கறேன். சரியா? :))))))//

  சரி சரி சரியோ சரி கீதாம்மா !!!!!!!!!

  முதலில் தொண்டர் படையில் சேர்த்தீர்கள்.,கட்சி நுணுக்கங்களை சொல்லி கொடுத்தீர்கள் .,

  பின்னர் வைர மாலை அணிவித்து அழகு படுத்தி பார்த்தீர்கள் .,உங்கள் அரசாங்கத்தில் நிதி மந்திரி பதவியும் கொடுத்து

  பெருமை செய்தீர்கள் ;இப்போது எல்லாவற்றிக்கும் மேலாக கொ ப செ .,

  என்னே நான் பெற்ற பாக்கியம் ! என்னே நான் பெற்ற பேறு !

  வாழ்க கீதாம்மா ! வளர்க அவர் தம் தொண்டு !!

  ReplyDelete
 36. பாருங்க கீதாம்மா இந்த கேசரி கட்சி காரிங்க சொல்வதை !

  ஆடை குளிப்பாட்டி ,பூசை செய்து ,நல்லா உணவு கொடுத்து மாலை போட்டு மரியாதை செய்வது எதுக்குன்னு நினைக்கிறே ப்ரியாக்கா

  என்றுசொல்வதை .................

  ReplyDelete
 37. ஆனால் நான் தெளிவா சொல்லிட்டேன் கீதாம்மா !

  மண்ணானாலும் எண்ணங்களில் மண் ஆவேன் - ஒரு
  மரமானாலும் ஆன்மிக பயணங்களில் மரம் ஆவேன் - கருங்
  கல்லானாலும் பேசும் பொற்சித்திரமே கல் ஆவேன் - பசும்
  புல்லானாலும் கண்ண(னுக்காக)ன் அருளால் பூ ஆவேன்!

  என்னை ஆசிர்வதியுங்கள் தமிழகத்தின் தங்க தலைவியே !!!!!!

  ReplyDelete
 38. Chanceless comments Priya...ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha.........

  ReplyDelete
 39. //priya.r said...
  பாருங்க கீதாம்மா இந்த கேசரி கட்சி காரிங்க சொல்வதை ! ஆடை குளிப்பாட்டி ,பூசை செய்து ,நல்லா உணவு கொடுத்து மாலை போட்டு மரியாதை செய்வது எதுக்குன்னு நினைக்கிறே ப்ரியாக்கா... என்றுசொல்வதை .......//

  மறுபடியும் சொல்றேன்... உங்களுக்கு எதிரி வெளில இல்ல மாமி... :))))))))))))

  ReplyDelete
 40. நீ தானா அந்தக் குயில்? கூகிளின் கேள்வி//
  கூகிளுக்கும் சந்தேகமா??

  ReplyDelete
 41. சந்ரு, நன்றி. உங்களுக்கு "த" எழுத வராதா? :P

  ReplyDelete
 42. இராஜராஜேஸ்வரி, முதல்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
  கூகிளுக்கு ஒருவேளை என்னோட குரலில் திடீர்னு தெரிந்த இனிமையிலே சந்தேகம் வந்திருக்குமோ? திடீர்னு இனிமையா இருந்திருக்கும், அதான் சந்தேகம்னு நினைக்கிறேன். :)))))))))

  ReplyDelete