எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 09, 2011

அப்பாடா! "ஜில்"லைவிடச் சீக்கிரமா முடிச்சுட்டேனே! :P

அன்றிரவு முழுதும் யோசனையில் இருந்துட்டுக் காலை எழுந்ததும், எழுந்திருக்காததுமா, என் கணவர் காப்பி குடித்துவிட்டு உடனே அந்த வீட்டிற்குப்போய்ப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். சாதாரணமாகவே பேச்சுக் கொடுத்தால் எல்லாத்தையும் வெளிப்படையாகக் கொட்டிவிடும் சுபாவம் கொண்ட நான் அன்னிக்கு மாடியில் வீட்டுக்காரங்க போர்ஷன் பக்கம் இருந்த ராட்டினத்தில் தண்ணீர் இழுக்கையில் ரொம்பக் கஷ்டப் பட்டேன். அதைப் பார்த்த வீட்டுக்கார அம்மா, "வேலைக்கு உதவிக்கு யாரையானும் வைச்சுக்கோ; தண்ணீர் அவங்க சேந்திக் (எங்க ஊரிலே சேந்தி என்றால் பரண் :P) கொடுத்தால் நீ எடுத்து விட்டுக்கோ." என்று யோசனை சொல்லவே, நான் வெள்ளந்தியாக(ஹிஹி பத்திரிகைகள்; சினிமா தயவு :P)(வெகுளியாக) "எதுக்குங்க , அதெல்லாம்? இன்னும் ஒரு வாரமோ; பத்து நாளோ; நாங்க அம்பத்தூர் போறோம்" னு சொல்லிட்டேன். அவங்க ஒரு மாதிரியாப் பார்த்திருக்காங்க. முட்டாள்: மண்டு: அசடு: அது கூடத் தெரியாமல் உள்ளே வந்துட்டேன். அந்த அம்மா கறுவிக்கொண்டு இருந்திருக்காங்க.

கணவர் வருகையில் ஒன்பது மணி ஆயிடுச்சு. நான் அதுக்குள்ளே குளிச்சுட்டுச் சமைச்சு வைச்சிருந்தேன். (நல்லாச் சமைப்பேனாக்கும்.:D) வந்ததும், அவரும் குளிச்சுச் சாப்பிட்டுட்டு, (உடனே விஷயத்தைச் சொல்லற வழக்கம் கிடையாது; இப்போவும், :D அப்போ புதுசா, நானா எதுவும் கேட்டுக்கலை; இப்போ துளைச்சு எடுத்துடுவேன் சொல்ற வரைக்கும்.:)))))))))) மெதுவா, "அங்கேயே வாத்தியாரைப் பார்த்து நாள் பார்த்துட்டேன். இன்னிக்கே நாள் நல்லா இருக்காம்; சாயந்திரமா மூணு மணிக்குக் கிளம்பிப் போய்ப் பால் காய்ச்சிடலாம்; 2-50க்கு ரயில் இருக்கு. அதில் போனால் மூணு மணிக்குப் போயிடலாம். ஸ்டேஷன்லே இருந்து வீடு கிட்டக்க. என் நண்பன் வீட்டிலே பால் வாங்கி வைப்பாங்க. அவன் அதை எடுத்துட்டு நேரே வீட்டுக்கு வந்துடுவான். பால் காய்ச்சிச் சாப்பிட்டுட்டு, நாளைக்கு உடனே சாமானை எடுத்துடலாம். நான் நாளைக்கு லீவ் போட்டுக்கறேன். நண்பன் கிட்டேயே சொல்லி அனுப்பிடுவேன்." என்றார்.

வீட்டுக்கார அம்மாவுக்கு இதை ஒரு செய்தி என்ற அளவிலேயே நான் சொல்லி இருந்ததால் அவங்க கிட்டே சொல்லிட்டேன் என்பதை என் கணவர் கிட்டே சொல்லத் தோணலை. அந்த அம்மாவும் ஒண்ணும் கேட்டுக்கலை. இதிலே ஒரு ஜோக் என்னன்னா அந்த அம்மாட்டே பேசறச்சே அவங்களோட குழந்தைங்க யாருமே அங்கே இல்லாததால், குழந்தைங்க இல்லையானு கேட்டேன். அவங்க, "மூணு பசங்க இருக்காங்க"னு சொல்லி இருந்தாங்க. நான் புரிஞ்சுண்டது மூணும் ஆண் பிள்ளைகள்னு. ஆனால் அவங்களுக்கு மூணும் பெண் குழந்தைகள். அந்தப் பொண்ணுங்க எல்லாம் அவங்க சொந்தக்காரங்க வீட்டிற்கு லீவுக்குப் போனவங்க அன்னிக்கு வரவும், அவங்களைக் காட்டி அந்த அம்மா, இவங்க தான் என்னோட பசங்க னு சொல்லவும் என் வழக்கம் போல் சிரிப்பு வந்தது. நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

சிரிப்பாய்ச் சிரிக்கப் போற விஷயம் யாருக்குத் தெரியும்? அன்னிக்கு மத்தியானம் போய்ப் பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிட்டு, நண்பரோட அம்மா, அப்பா வயசானவங்க வந்திருந்தாங்க. அவங்களை வைச்சுச் சம்பிரதாயப்படி பால் காய்ச்சி, ஸ்வாமி படத்தை வைத்து விளக்கேற்றி நிவேதனம் செய்து, எல்லாருக்கும் கொடுத்துட்டு, கொஞ்சம் அரிசி, பருப்பு, மஞ்சள், வெல்லம் போன்றவைகளையும் வைத்து நிவேதனம் செய்து அவற்றையும் ஸ்வாமி படங்கள், விளக்கு போன்றவைகளையும் அங்கேயே வைச்சுட்டுத் திரும்ப வில்லிவாக்கம் வந்தோம். மறுநாள் வீடு மாத்தணும். காலம்பர சீக்கிரம் எழுந்து குளிச்சுச் சமைச்சாச்சுன்னா கிளம்பறதுக்குள்ளே சாப்பாட்டுக் கடையை முடிச்சுக்கலாம். அப்புறம் அங்கே போய்ப் பார்த்துக்கலாம்னு நினைச்சுச் சமைக்க ஆரம்பிக்கையில் என் சித்தி பையர்கள் இருவர் என்னைப் பார்க்கத் தேடிப் பிடிச்சுக்கொண்டு வந்தார்கள். நல்லதாப் போச்சு, வீடு மாத்த உதவிக்கும் ஆள் கிடைச்சதுனு நினைச்சு அவங்களையும் வரவேற்று சமைச்சுப் போட்டு, சாமான்களை(நல்லவேளையா முழுதும் பிரிக்கலை) எடுத்துக் கட்ட ஆரம்பித்தோம். அதுக்குள்ளே என் கணவர் ஒரு வான் பார்த்துக்கொண்டு வந்தார். அந்த வானில் சாமான்களைப் போட்டுவிட்டு, முன்னாலேயே நாங்க இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டு போயிடலாம்னு பேசி இருந்தார். அவங்களும் ஒத்துக்கொண்டு வந்தாங்க.

சாமானை இறக்க ஆரம்பிச்சோமோ இல்லையோ வீட்டுக்காரரும், அவர் மனைவியும் வந்து தடுத்தாங்க. காலி பண்ண விடமாட்டோம்னு ஒரே சத்தம், சண்டை. எனக்குப் பயமாப் போச்சு. ஆனால் என் தம்பிங்க எதையும் கண்டுக்காம அவங்களை நகர்த்திவிட்டு சாமான்களை எடுத்துச் செல்ல ஆரம்பிக்க ஒரே களேபரம். ஒரு மாசம் முன்னால் சொல்லணுமாம். இல்லாட்டி அட்வான்ஸ் திருப்பித் தர மாட்டாங்களாம். நல்லவேளையா ஒரு மாசம் தான் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். மூணு மாதம் அட்வான்ஸுக்கு மிச்சம் அப்புறமாத் தரேன்னு சொல்லி இருந்திருக்கார். அது கொடுக்கிறதுக்குள்ளே இவ்வளவும் கண் மூடித் திறக்கிறாப்போல் என்பார்களே அப்படி நடந்துடுச்சு. அதனால் நாங்க இருந்த நாட்கள் போக மிச்சம் பணம் இருந்ததைக் குறித்துக் கவலைப்படாமல் போனால் போகட்டும்னு சொல்லிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தோம். ஓரிரு குடித்தனக்காரர்களும் எங்க பக்கம் பேசினாங்க. தண்ணீரே இல்லாமல் எல்லாத்துக்கும் கீழே வந்து இறங்க வேண்டி இருக்கு; இதுக்கு நூறு ரூபாய் வாடகை கொடுக்க முடியுமா என அவங்களும் கேட்டனர். அம்பத்தூர் வீட்டுக்கு அப்போ அறுபது ரூபாய் வாடகை. கிட்டத்தட்ட அறுநூறு சதுர அடிக்கும் மேலே இருக்கும். அப்போ அந்தக் கணக்கெல்லாம் தெரியாது என்றாலும் வீடு நல்ல பெரிய வீடு, சகல வசதிகளோடும். அந்த வீட்டில் நாங்கள் குடித்தனம் இருந்த போது அடுக்கடுக்காக வந்த அனைத்து விருந்தாளிகளையும் தாங்கியது. நேற்றுத்தான் அம்பத்தூர் வந்தாப்போல் இருக்கிற எங்கள் குடித்தனம் இப்படியாக அம்பத்தூரில் ஆரம்பித்து --------- (D)வருடங்களைக் கடந்துவிட்டது. அப்போ அம்பத்தூர் வந்தது அதிலிருந்து திரும்பத் திரும்ப இங்கே வரதும், வெளிமாநிலங்கள் போறதுமாக இருந்த வாழ்க்கையில் சில வருடங்கள் முன்னால் என் கணவர் பணி ஓய்வு பெற்றதிலிருந்து அம்பத்தூரே நிரந்தரம் என ஆகிவிட்டது.

19 comments:

 1. சுவாரஸ்யமான பகிர்வு, நன்றிகள்

  ReplyDelete
 2. அருமையான நிறைய படிப்பினைகள் தெரிந்துகொண்ட பகிர்வு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. கீதா மாமி உங்க மலரும் நினைவுகள் ரொம்ப நன்னயிருந்துது.ஏன் இப்படி அவசரமா முடிச்சுடீங்க? இன்னும் எழுதி இருக்கலாமே??

  ReplyDelete
 4. அந்தக் காலக்கட்டதிற்கே எங்களை அழைச்சுண்டு போய்ட்டேள். very nice :)
  போன பதிவில் கேட்ட கேள்விக்கு பதிலும் கிடைத்தது.

  ReplyDelete
 5. வாங்க ராம்ஜி யாஹூ, ரசனைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 6. வாங்க ராஜராஜேஸ்வரி, உண்மைதான், பழைய வாழ்க்கையிலிருந்து நிறையவே படிப்பினைகள் கற்றுக்கொள்ளலாம், எனினும் அப்போது நமக்குப் புரிவதில்லை.

  ReplyDelete
 7. வாங்க ராம்வி, ரொம்பவே சொல்லிட்டுப் போனால் சுவை இருக்காது இல்லையா, ஏற்கெனவே கல்யாணம், கிரஹப்ரவேசத்தோடு நிறுத்தணும்னு இருந்தேன், கொஞ்சம் வளர்ந்துடுச்சு. :))))))

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீநி, பாராட்டுகளுக்கு நன்றி, என்ன கேள்விக்கு பதில் கிடைச்சது?? புரியலை!

  ReplyDelete
 9. ம்ம்...அடுத்து அம்பத்தூர் பயணமா தலைவி ;)

  ReplyDelete
 10. மாமி
  ஒன்றும் இல்லை - போன பதிவுல அம்பத்தூர் வாசம் பற்றி கேட்டிருந்தேன். அதுக்கு பதில் இங்கே இருந்தது.

  மேலும் வரும் வியாச பூர்ணிமா லேர்ந்து பகவத் கீதை பற்றி எழுத நினைத்திருக்கிறேன். கீதா மகாத்மியம் mudinthathu, நாளை தியான ஸ்லோகமும் எழுத உத்தேசம் - ஈஸ்வர சித்தத்தில். எழுபது வாரங்கள் - சுமார் அடுத்த நவம்பர் கீதா ஜெயந்தி சமயம் முடிக்கும் எண்ணம் - வாரம் பத்து என்ற கணக்கில். முடிந்த பொழுது வந்து கருத்து தெரிவியுங்கள்.

  ReplyDelete
 11. வாங்க கோபி, அடுத்தும் அம்பத்தூர் தான், சொந்த அநுபவமே தான். ஏற்கெனவே வல்லமையிலும், சில குழுமங்களிலும் வந்தது. இங்கே வலைப்பக்கத்தில் அதன் விளைவுகள் எப்படினு பார்க்கணும்! :))))))))))

  ReplyDelete
 12. ஸ்ரீநி, எங்கேயோ போயிட்டீங்க, எனக்கெல்லாம் கீதையைப் படிச்சுப் புரிஞ்சுக்கறதே பெரிய விஷயம்; நீங்க அதைக் குறித்துப் பதிவு எழுதறதுன்னா பிரமிப்பா இருக்கு. வாழ்த்துகள்; ஆசிகள்.

  ReplyDelete
 13. மாமி
  ஆசிகளுக்கு நன்றி. எத்தனையோ மகான்கள் கீதைக்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள். சாதாரணமான மனிதன் தான் நான். எனக்கு தெரிந்த அளவில், புரிந்த அளவில் எழுத முயற்சிக்கிறேன். எனக்கு கிடைத்த சத்சங்கமே இதற்கு காரணம்.

  ReplyDelete
 14. //நான் வெள்ளந்தியாக(ஹிஹி பத்திரிகைகள்; சினிமா தயவு :P)(வெகுளியாக) "எதுக்குங்க , அதெல்லாம்? இன்னும் ஒரு வாரமோ; பத்து நாளோ; நாங்க அம்பத்தூர் போறோம்" னு சொல்லிட்டேன். அவங்க ஒரு மாதிரியாப் பார்த்திருக்காங்க. முட்டாள்: மண்டு: அசடு: அது கூடத் தெரியாமல் உள்ளே வந்துட்டேன். //

  அப்படி இருந்த நீங்க எப்படி ஆகிடீங்க பார்த்திங்களா ? ஹ ஹா

  என்னடா நம்ம குருஜியை யார் திட்டறதுன்னு ஆவேசப்பட்டு உங்களை நீங்களேதிட்டிகிட்டதை பார்த்து அமைதியாகி விட்டேன் கீதாமா :))

  ReplyDelete
 15. என்னவோ உறவு காரர்களின் திருமண வைபவங்களை நேரில் கலந்து கொண்டு பார்த்து ரசித்தது போல

  சந்தோசம் கிட்டியது கீதாம்மா

  நீங்கள் நகைச்சுவையோடு எழுதிய விதம் ,அதில் உண்டான திருப்பங்கள் ,கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்து நிகழ்ச்சிகளை கொண்டு சென்ற பாங்கு எல்லாமே அழகு ;எவ்வளோ பாராட்டினாலும் தகும் ..........

  சுவையான பதிவை கொடுத்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள் கீதாம்மா

  எல்லாம் வல்ல இறை அருள் உங்கள் இருவருக்கும் நல்ல உடல் நலம் ,நீண்ட ஆயுள் ,நிறைந்த செல்வம் ,உயர்ந்த புகழ் ,மெய்ஞானம் கொடுத்து அருளுமாக ..

  ReplyDelete
 16. அன்புள்ள கோபால் அண்ணா,
  ஆச்சார்யாளின் அனுக்ரஹத்தால் நீங்கள் எடுத்துக் கொள்ள போகும் இந்த சத்காரியம் நல்ல படியாக வளர அடியேனின் ப்ரார்தனைகள்.

  இன்னோரு விஷயம் தெரியுமோ? நீங்க தான் தக்குடுனு எல்லாரும் நினைச்சுண்டு இருக்கா...:) (ஒரு விதத்துல அதுவும் கரெக்டுதான்)

  ReplyDelete
 17. (ஒரு விதத்துல அதுவும் கரெக்டுதான்) !!

  எந்த வகையில்,விதத்தில்
  காரணம் என்று தெளிவாக சொல்லலாமே :)

  ReplyDelete
 18. அம்பத்தூர் நன்றாக ஒட்டிவிட்டது.

  ReplyDelete
 19. தெரியுமா கீதாமா!
  ATM ஜில்லையும் முடிச்சுட்டாங்களே :)))))))))

  ReplyDelete