எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 17, 2011

ஏமாற்றம் கொடுத்த நூலகம்

இன்னிக்கு மீனாக்ஷி கோயிலுக்குப் போனோம். நாலு வருஷங்கள் கழிச்சுப் போறோம். முதல்முதலா 2004-ல் போனப்போ கோயிலின் நூலகம் ஆனந்தத்தைக் கொடுத்தது. இரண்டாம் முறையாக 2007-ல் போனப்போ முதல் தரம் மாதிரி இல்லாட்டியும் ஓரளவுக்குப் புத்தகங்கள் இருந்தன. இந்தத் தரம் போகும் முன்னரே மருமகள் புத்தகங்கள் மிகவும் குறைச்சலாய் இருக்கும் எனச் சொல்லி இருந்தாள். சரி, என்ன இருந்தாலும் ஓரளவுக்கானும் பார்க்கலாம்னு போனால் அதிர்ச்சி! ஏமாற்றம்! மிக மிகக்குறைவான புத்தகங்களே இருக்கின்றன. பல புத்தகங்களும் விலைக்குனு வாங்கி வைச்சிருக்காங்க. முன்னைப் போல் புத்தகங்கள் எடுத்துப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் அளவுக்கு இல்லை; ஒருவேளை நிர்வாகம் மாறிவிட்டதோ என்னமோ! தெரியலை. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை. கோயில் வேறே இப்போ ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தூரத்தில் இருக்கிறது. முன்னைப் போல் அடிக்கடி போக முடியாது. கோயிலில் அதே பட்டர்; அதே குருக்கள்; புதுசா ஒருத்தர் பாலக்காட்டில் இருந்து வ்ந்திருக்காராம். பெருமாள் கோயிலில் பட்டாசாரியார்கள் புதுசு மாதிரித் தெரியறாங்க. அவங்களே தானா என்னனு தெரியலை.

கோயில் அடுத்த வாரம் தீபாவளி பஜாருக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறது. எல்லா இடங்களும் சுத்தம் செய்து கொண்டு இருக்காங்க. உடம்பு சரியில்லை; ரொம்பவே சரியில்லை. ஆகையால் சும்மா மெயில் மட்டும் பார்க்கிறேன். யு.எஸ். வந்து இப்படி உடல்நலம் சரியில்லாமல் போனது இதுவே முதல் தரம். போன இருமுறைகளும் இப்படி இல்லை. காட்டன் துணியை வாஷிங் மெஷினில் போட்டால் வழக்கம் போல் ரிப்பன் வருது; இரண்டு நல்ல புடைவை போச்சு! ஒண்ணு கோட்டா! இன்னொண்ணு செட்டிநாடு காட்டன். அவரோட எட்டு முழம் வேட்டியும் பூணூல் மாதிரி வந்திருக்கு. இங்கே வந்தால் வலுக்கட்டாயமா சிந்தடிக் கட்ட வேண்டி இருக்கு. எப்படிச் சமாளிக்கிறாங்க எல்லாரும்னு புரியலை!

22 comments:

 1. உடம்பை பார்த்துக்கொள்ளுங்க மாமி.நன்றாக ஓய்வு எடுத்துக்கோங்கோ.

  ReplyDelete
 2. இங்கே வந்தால் வலுக்கட்டாயமா சிந்தடிக் கட்ட வேண்டி இருக்கு.//

  சிந்தடிக் கட்ட வில்லை என்றால் நம் கைத்தறி சேலைகள் வீணாகிவிடும்.

  ReplyDelete
 3. engalamaathiri Kuppaayam poattuththaan :(( vanhthaeLaa enga vazhikku udambu saryaaka vaendikkiraen. chennaiyil irunhtha stress ippa poarathukku thaan . saryaayidum .

  ReplyDelete
 4. @ராம்வி, மருந்துகள் நிறையவே வாங்கி வந்தாச்சு. அதுக்கும் வேலை வேண்டாமா? சென்னையைப்பார்க்கையில் இங்கே ஓய்வு அதிகம் தான். நன்றி ராம்வி.

  ReplyDelete
 5. ஆமாம், கோமதி அரசு, நீங்க சொல்வது சரியே. ஆனால் நான் பல வருஷங்களாக சிந்தடிக்கே வாங்கலை. பதினைந்து வருஷங்கள் முன்னர் வாங்கிய ஒன்றிரண்டைத் தான் வைச்சு ஒப்பேத்தறேன்.

  ReplyDelete
 6. வாங்க ஜெயஶ்ரீ, ப்ளாகர் இன்னிக்கு அனுமதி கொடுத்துடுத்தா?? ரொம்ப நாளாக்காணோமே!

  குப்பாயம் இல்லைனாலும், சல்வார், குர்த்தா இருக்கு. ஆனால் அதுவும் காட்டன். மெஷினில் போட்டால் நூல் தான் தேறும்.

  ReplyDelete
 7. மாமி
  உடம்பை கவனிச்சுக்கோங்கோ.
  வால்மார்ட்ல collapasible hanger கிடைக்குமே. Bath tub லையே துணியை அலசி அந்த hangar ஐ exhaust fan கீழ வைத்து
  உலர்த்த வேண்டியது தான்.
  washing machine ல எட்டு முழ வேஷ்டி போட்டதற்கு பூணலாவது மிஞ்சித்தே. சிலருக்கு வேஷ்டியே காணமல் போயிருக்கு :).

  ReplyDelete
 8. புரியலையே! ஏன் அமெரிக்காவில், வாஷிங் மெஷின்லே காட்டன் துணி அப்படி ஆகிறது? நான் வெளிநாடெதுவும் போனதில்லை.
  கொஞ்சம் விளக்குங்களேன்.

  ReplyDelete
 9. உடம்பு சரியில்லாமலும் என்கூட பேசினீங்க கீதாம்மா. ரொம்ப சந்தோசம். உடம்பை பார்த்துகோங்க. உங்க கூட பேசும் போது ரொம்ப நாள் பழகினவங்க கூட பேசின மாதிரி தான் தோணித்து. புதுசா பேசுற மாதிரி தோணல. பேரப்பிள்ளைகள் கூட நன்னா என்ஜாய் பண்ணுங்கோ.. :-)Convey my regards to uncle and all u r family members..! Take care..!

  ReplyDelete
 10. Bath tub லையே துணியை அலசி அந்த hangar ஐ exhaust fan கீழ வைத்து
  உலர்த்த வேண்டியது தான்""!!!
  SG!!அப்பா! அப்புறம் எங்களுக்கெல்லாம் முதுகு பிடி வைத்யம் வேற பண்ணனும்சாமி!!:))இன்னும் கொஞ்சம் ஈஸியா சொல்லுங்கப்பா :))))

  ஏன் மிஸஸ் ஷிவம் மெஷின் ல காட்டன் ரிங்கிள் ஃப்ரீ ல ஸ்லோ ஸ்பின்ல போட்டுட்டு ஆனப்புறம் நல்லா உதறி மடிச்சு பேஸ்மென்ட் / சிலிண்டர் ரூம் ல போட்டு பாருங்களேன் . அது நல்லா தானே வரது ட்ரையர் ல போட்டாத்தான் ரொம்ப சுருணை யாகும்

  ReplyDelete
 11. அடராமா.......... உடம்பு படுத்தாறதா?????? கவனிச்சுப் பார்த்துக்கொள்ளுங்கள் கீதா.

  காட்டன் புடவைகளை வாஷிங் மெஷீனில் ரெகுலர் ஸைக்கிளில் போடாமல் உள்ளாடைகளுக்கான டெலிகேட்டில் போடுங்கோ. கடைசி ஸ்பின் வரும்போது அதுவா ஓடி நிக்காம ஒரு சில நிமிஷம் ஆனதும் pause பண்ணி துணிகளை வெளியில் எடுத்துட்டால் ஓரளவு துணிகள் காப்பாற்றப்படும்.

  ReplyDelete
 12. இங்க பட்டது அங்க படுத்தறதா கீதா.
  என் பெண் எனக்க்கு ட்ரைவாஷ் பை ஒண்ணு வாங்கிக் கொடுத்தா. அதிலதான் புடவையோ சல்வாரோ போட்டு முடிச்சுப் போட்டு வெளில எடுத்தேன். இல்லாட்ட பாட்டி அம்மாலாம் ச்எஞ்ச மாதிரி குளிக்கும் போதே ஷாம்பூ போட்டு துணியை டப்பிலயே அலசிட்டு, ஷவர் கர்டன் மேலயெ உலர்த்திட்டேன். என்ன செய்யரது. இல்லனா பேஸ்மெண்ட்ல கொடி கட்டிக்க வேண்டியதுதான்.
  உடம்பை கவனமா பார்த்துக்கவும்.
  ப்ராணாயாமமும் யோகாவும் உதவும். உங்களுக்கே தெரியும்.

  ReplyDelete
 13. துவையல் ஐடியா சொல்லலாம்னு வந்தேன், ஆனா வல்லிம்மாவும் துளசிம்மாவும் சொல்லிட்டாங்க! :)

  ஆனா இது எனக்கு தெரியறதுக்கு முன்னாடி, என் மாமியாரும் அம்மாவும் வந்த போது SG அவர்கள் சொன்ன மாதிரிதான் செய்தாங்க.

  உடல் நலத்தை கவனிச்சிக்கோங்கம்மா.

  ReplyDelete
 14. வாங்க ஶ்ரீநி, ஹாங்கர் வாங்கித் தான் உலர்த்தணும். இப்போதைக்கு சிந்தடிக் புடைவைகள் தான். :( வேறே வழியில்லை.

  ReplyDelete
 15. சாரங்கபாணி, வாஷரில் போட்டுத் துவைக்கையில் ஒன்றும் ஆகாது. அதுக்கப்புறமா டிரையரில் போட்டுக் காய வைக்க வேண்டும். அங்கே எல்லாம் நம் ஊர் மாதிரிக் கொடி கட்டி வெயிலில் தோட்டத்தில் காய வைப்பது முடியாது. காரஜில் கட்டலாமோ என்னமோ! தெரியவில்லை. Patio வில் கட்டிக்கோனு பையர் சொல்லி இருக்கார். அப்பா, பிள்ளை ரெண்டு பேருக்கும் கொடி கட்ட நேரம் இல்லை.

  ReplyDelete
 16. பப்லு, எனக்கும் உங்க எல்லோரடயும் பேசறதிலே, பேசினதிலே ரொம்ப சந்தோஷம்பா. முடிஞ்சா இங்கே நான் இருக்கிறதுக்குள்ளே வாங்க. எங்களாலே வரது கஷ்டம்.

  ReplyDelete
 17. ஶ்ரீநி சொல்லாமலேயே முதுகுப் பிடிப்பு வரும் போலிருக்கு ஜெயஶ்ரீ. நான் பேசாம சிந்தடிக்கே கட்டறதுனு முடிவு பண்ணிட்டேன். இங்கே பேஸ்மென்ட் இல்லை. காரஜ் அல்லது தோட்டத்தில் சிட் அவுட் என்று அழைக்கப்படும் உள் முற்றம் அங்கே தான் உலர்த்திக்கணும். இப்போதைக்கு பாத்ரூமில் உள்ள ஹாங்கரில் போட்டுக்கறேன்.

  ReplyDelete
 18. வாங்க துளசி, நான் ஹான்ட் வாஷில் போடறேன். எப்படி எடுத்தாலும் காட்டன் துணிகள் சுருங்கத் தான் செய்கின்றன. ரேவதி சொன்னாப்போல் பையில் எல்லாம் போனமுறையே போட்டுப் பார்த்தாச்சு. காட்டன் புடைவைகள், கதர் புடைவைகள் இந்த ஊர் வாஷிங் மெஷினுக்கு லாயக்கில்லை. நமக்கோ அதுதான் ஒத்துக்கும்.

  ReplyDelete
 19. பாட்டி அம்மாலாம் ச்எஞ்ச மாதிரி குளிக்கும் போதே ஷாம்பூ போட்டு துணியை டப்பிலயே அலசிட்டு, ஷவர் கர்டன் மேலயெ உலர்த்திட்டேன். //

  ஹிஹிஹி, முதல்முறை சமத்தாச் செய்யறாப்போல் நினைச்சுண்டு ஷவர் கர்டன் மேலே உலர்த்தி அது கையோட வந்து, அப்புறமா அதை ஃபிக்ஸ் பண்ணறதுக்குள்ளே எனக்கும், ரங்க்ஸுக்கும் தனியா எனர்ஜி டானிக் சாப்பிட வேண்டி வந்தது. பொண்ணு வெளியே போயிருந்தா. வரதுக்குள்ளே விஷயத்தை முடிச்சுட்டோமாக்கும்.

  ReplyDelete
 20. வாங்க கவிநயா, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. ஆஹா இன்னமும் மட்டை ஆடுறாங்களே கீதாபர்மசிவம்... என்னை நினைத்து எனக்கே வெட்கமா இருக்கு... சொம்பேறித்தனமா பதிவுக்கே வராம இருந்தேன் இப்போ கூட பதிவு போட சோம்பெறித்தனம், சும்மா கமெண்ட் போட்டுக்குக்கிட்டூ சுத்தி வரேன்!
  //புரியலையே! ஏன் அமெரிக்காவில், வாஷிங் மெஷின்லே காட்டன் துணி அப்படி ஆகிறது? நான் வெளிநாடெதுவும் போனதில்லை.
  கொஞ்சம் விளக்குங்களேன்.//

  அதே சந்தேகம் அடியேனுக்கும்!

  இங்கேலாம் ஒண்ணும் மெசின்ல பிரச்சினை இல்லை, நீங்க டிரயர் னால சொல்றிங்க, இந்தியாவில டிரயர் விலை ஒரு வாஷர் விலை, தனியா வாங்கி மண்டைல மாட்டிக்கணும், அதாவது மெசின் மண்டைல.

  நீங்க சொல்றது பார்த்தா அங்கே எல்லாம் வீணாப்போன மெசின் தானா? இங்கே இன்டென்ஸ் ஸ்பின் டிரய் அப்ஷனிலேயே எல்லா தன்ணியும் வத்திடும், பேன் காத்திலவே காய வச்சுடுவேன். நமக்கு எல்லாமே இன்டோர் தான்.(நம்மூர்ல அடிக்குற வெயிலுக்கு உடம்பு தண்ணியே வத்திடும்)

  அப்புறம் டெலிகேட், செபரேட் வாஷ் பேக் எல்லாம் கிடைக்குது , உங்களுக்கு தெரியாதா என்ன?

  உடல் நலத்திணை கவனித்துக்கோங்க(எனக்கு ஒரு சந்தேகம் உங்க பேருல யாரவது பதிவு போடுறாங்கோளோ என்று)

  ReplyDelete
 22. வாங்க வவ்வால் ,

  மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. என்னோட வலைப்பக்கம் சமயத்திலே என்னையே உள்ளே விட ஆயிரம் கேள்வி கேட்கும். விக்கிரமாதித்தன் பதுமைகள் போல அது கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னால் தான் உள்ளே அனுமதிக்கும். அதனாலே நான் நானே தான்; வேறு யாரும் இல்லை; செரியா???

  ReplyDelete