எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 14, 2012

அப்பு டேட்ஸ்! அப்புவின் கோபம்! :(

வேறே வழியில்லாமல் மெம்பிஸில் இருந்து கிளம்பறாப்போல் ஆச்சு. அங்கே குளியலறை ஒன்றில் நீர்க்கசிவுக்காக ரிப்பேர் செய்யணும். இன்னொரு குளியலறை+டாய்லெட்டில் ம்ஹ்ஹும்,,,, முடியலை! :)))) டோக்கன் சிஸ்டம்! அதோட குளிர் வேறே நம்ம ரங்க்ஸுக்கு ஒத்துக்கலை. ஜன்னல் வழியே வெளியே பார்த்தா ஜவ்வரிசி கொட்டறாப்போல் சிலநாட்கள், பஞ்சுப்பொதி போல் சிலநாட்கள் ஐஸ் பொழியும். அதைப் பார்த்ததும் இங்கே இவருக்கு இன்னமும் குளிர ஆரம்பிக்கும். :(

நம்ம கதையே வேறே. அன்டார்டிகா குளிரில் கூடத் தாக்குப் பிடிக்கும் அதிசய ஆஸ்த்மா நமக்கு. ஆனால் நம்ம தோல் இருக்கே ரொம்ப ரொம்ப சென்சிடிவ் டைப். அது ரொம்பவ்வ்வ்வ்வ்வ்வே வறண்டு போய் அரிப்பு அதிகம் ஆகி, ரத்தம் வந்து, அதைத் தொடர்ந்து மூக்கில் இருந்தும் ரத்தம் வர ஆரம்பிச்சு, இருக்கிற தொல்லை போதாதுனு என்னோட ருமாட்டிக் பிரச்னையும் ஜாஸ்தி ஆக, அங்கே இருப்பது ஆபத்து என மண்டையில் விளக்குப் பளிச்சிட, ஹூஸ்டன் வந்து விட்டோம். அப்புவுக்குக் கோபம். கிளம்பும் அன்று முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. ஒருமாதிரியாகப் புரிய வைச்சிருந்தது. அப்புறமா திடீர்னு கிளம்பறதைப் பார்த்தா அழுமேனு சொல்லிக் கொண்டே இருந்தோம். ஆனாலும் அதுக்குக் கோபம். கோபம் கோபம் தான்.

I miss you very much thatha & patti. will you remember me? அப்படினு கேட்டது.

என்னத்தைச் சொல்ல! எப்படியானாலும் இந்தியா போயாகணுமேனு சொன்னோம். இங்கேயே இருக்க முடியாது என்பதையும் சொன்னோம். இந்த விசா விசானு ஒண்ணு இருக்கே அதைப் பத்தி எல்லாம் அப்புவுக்கு என்ன புரியும். பல வருடங்கள் முன்னர் ஹிந்துப் பத்திரிகையில் ஒரு ஞாயிறில் இதைக் குறித்த ஒரு கட்டுரை வந்திருந்தது. கட்டிங் கூட வைச்சிருக்கேன், (இந்தியாவில்) வெகுநாட்கள் கழித்து மகளைப் பார்க்கக் காத்திருந்த தந்தை, மகளுக்கு க்ரீன் கார்ட் பிரச்னையால் கடைசியில் வரமுடியாமல் போனதைப் பற்றியது. இதே கூத்து எங்க வீட்டிலும் நடந்திருக்கு.

என்னவோ! :(

34 comments:

  1. வருத்தம் தான்...ஆனா என்ன செய்ய..!

    ReplyDelete
  2. // வெளிநாடுகளில் இது அன்பைக் காட்டும் ஒரு தினமே. எங்கே சென்றாலும் தெரிந்தவரோ, தெரியாதவரோ நாளைய தினம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளுவார்கள். குழந்தைகள் அவர்கள் ஆசிரியர், சக மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் என அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். வாழ்த்து அட்டையைக்கைகளால் தயாரித்துக் கொடுப்பது அங்கே மிகவும் பெருமையான ஒன்றாகும். எங்கள் அப்பு கூட இதற்கென ஒரு பேப்பர் தயார் செய்து அதிலே அதற்குத் தெரிந்தவரையிலும் வண்ணம் அடித்து அவங்க வகுப்பு ஆசிரியருக்குக் கொடுக்கப்போகிறது. அப்புவின் வயது மூன்று. ஆக இது காதலருக்கு மட்டுமான தினம் அல்ல என்பது புரிந்ததா? என்னையும் கூப்பிட்டு நாளைக்கு அப்பு வாழ்த்துச் சொல்லும்! என்னிடம் உள்ள அன்பை அது வாழ்த்துச் சொல்லுவதன் மூலம் வெளிப்படுத்தும். ஆகவே நாளைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் தம் தம் சகோதர அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம்.//

    சென்ற வருடம் நீங்கள் எழுதியது தான் !
    இந்த வருடம் அப்புவுடன் இருப்பது உங்களுக்கு மகிழ்வை தந்து கொண்டு இருக்கும் தானே .....
    அன்பான வாழ்த்துக்கள் கீதாமா

    ReplyDelete
  3. miss you very much thatha & patti. will you remember me? அப்படினு கேட்டது. //

    அப்பு கேட்டது மனசை நெகிழ வைக்கிறது ....

    ReplyDelete
  4. CAn we have the Scanned copy of the Cutting in the blog?

    ReplyDelete
  5. //I miss you very much thatha & patti. will you remember me? அப்படினு கேட்டது.

    என்னத்தைச் சொல்ல..//

    ஆமாம், என்னத்தைச் சொல்ல?..

    சொற்கள் சில சமயங்களில் தங்கள் சக்தியை இழந்து விடுகின்றன.

    ReplyDelete
  6. வாங்க கோபி, வருத்தமாத் தான் இருக்கு. :(((((

    ReplyDelete
  7. அப்பு மெம்பிசில்; நாங்க ஹூஸ்டனில். நடுவே கிட்டத்தட்ட எழுநூறு மைல்களுக்கும் மேலே. :( அப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

    ReplyDelete
  8. அப்பு கேட்டது மனசை நெகிழ வைக்கிறது ....//

    ஆமாம், அதுவும் நேரில் பார்க்கையில் இன்னமும். :(((((((

    ReplyDelete
  9. வாங்க விவசாயி, முயற்சி பண்ணறேன். ஏனெனில் ஒரு காலமோ, இரண்டு காலமோ மட்டும் வந்த சின்னக் கட்டுரை அது. பல்லாண்டுகள் ஆகிவிட்டன. இந்தியா போய்ப்பார்க்கிறேன். 2000-ஆம் வருஷமோ என்னமோ வந்ததுனு நினைக்கிறேன். அந்த வருஷம் தான் நாங்க ஊட்டியிலே இருக்கிறச்சே எங்க பொண்ணு வரப் போறதாச் சொல்லி டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டுக் கடைசியில் பரோல் விசா என்பதால் கான்சல் பண்ணினாள். இப்படி இருமுறை நடந்தது.

    ReplyDelete
  10. வாங்க ஜீவி சார், சொல்லுக்குச்சக்தியும் இல்லை; சொற்கள் கிடைக்கவும் இல்லை. :(((((

    ReplyDelete
  11. // அப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.//

    நிச்சயம் மறக்காது என்றே நினைக்கிறேன். நடு நடுவெ 'ஸ்கைப்'பில் வேறு பார்க்கிறார்களா,
    நீங்கள் அடுத்த தடவை வந்து, வீட்டுக்குள்ளே நுழையறச்சேயே,
    குதியாட்டம் தான்!

    ReplyDelete
  12. வருத்தமான பிரிவுதான். குழந்தையின் வருத்தம் மனதை நெருடும். கள்ளமில்லா அன்பு. ஜீவி சார் சொல்வது மாதிரி தூரத்தை மறக்க வைக்க ஸ்கைப் போன்ற உதவிகள் இருக்கின்றன.

    ReplyDelete
  13. பிரிவு என்பதே வருத்தமானது. அதுவும் குட்டிப் பாப்பா இப்படில்லாம் கேட்டா? :(

    ReplyDelete
  14. //miss you very much thatha & patti. will you remember me? அப்படினு கேட்டது. //

    பாவம் குழந்தை.
    ரொம்ப வருத்தமாக இருக்கு,மாமி.

    ReplyDelete
  15. நல்ல வேளை. ஸ்கைப் இருக்கு.
    பாவம் குழந்தை. கஷ்டமா இருக்கும்.
    உங்களுக்கும் தான்.
    உடம்பு அசௌகர்யம் பட முடியாது.
    நம்ம ஊர்ல வெய்யில் ஆரம்பம் ஆயிடுத்து.

    ReplyDelete
  16. பிரிவு என்பதே சோகம் தான்... என்ன செய்வது...

    ஸ்கைப் மூலமாவது இப்போது பார்க்க முடிகிறதே.. அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்...

    ReplyDelete
  17. நிச்சயம் மறக்காது என்றே நினைக்கிறேன். நடு நடுவெ 'ஸ்கைப்'பில் வேறு பார்க்கிறார்களா,
    நீங்கள் அடுத்த தடவை வந்து, வீட்டுக்குள்ளே நுழையறச்சேயே,
    குதியாட்டம் தான்!//

    மறு வரவுக்கு நன்றி ஜீவிசார். அப்பு அடுத்த முறை இன்னும் பெரியவளாக இருப்பாள். இந்தக் குழந்தைத் தனம் போயிருக்கும். ஒருவிதத்தில் அதில் சந்தோஷம் என்றாலும் இன்னொரு விதத்தில் வருத்தமும் இருக்கு. :(

    ReplyDelete
  18. வாங்க ஶ்ரீராம், ஆமாம் இப்போ இந்தக் கணினி முன்னேற்றத்தினால் அதிகம் பிரிவு யாரையும் தாக்குவதில்லை என்று தான் நினைக்கிறேன். வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. வாங்க கவிநயா, அப்புவோட கோபம் உங்களையும் இழுத்து வந்திருக்கே! ஆச்சரியம் தான்! :))))

    ReplyDelete
  20. வாங்க ராம்வி, வருத்தமாய்த் தான் இருக்கு. இங்கே பேசிக் கொண்டே இருக்கோம். :(

    ReplyDelete
  21. வாங்க வல்லி, குழந்தைக்கும் கஷ்டம் தான்; எங்களுக்கும் கஷ்டம் தான். உடம்பு தான் முக்கியக் காரணம்; அதோடு பாத்ரூம் பிரச்னை வேறே; தகுதி வாய்ந்தவர்களுக்கே முன்னுரிமை. நாங்க வீட்டிலேயே இருப்பதால் முன்னுரிமை கிடைக்கிறதில்லை! :)))))))))))

    ReplyDelete
  22. நம்ம ஊர்லே வெயில் மட்டுமா ஆரம்பம்? பவர்கட்டும் தான்! நினைச்சாலே நடுங்குது! :(

    ReplyDelete
  23. வாங்க வெங்கட் நாகராஜ், எப்படியே மனசைத் தேத்திக்க வேண்டியது தான். இல்லையா!

    ReplyDelete
  24. இதுதான் மிகப் பெரிய வருத்தம். குழந்தையின் மழலையும் அவர்கள் அறிவுத் திறன் வளர்ச்சியும் கண்டு களிப்பது தான் எத்தனை சுகம்!

    இப்போது ஒரு ஆறுதல். ஸ்கைப் ஜபோன் என்று கொஞ்சமாவது பேசலாம்.

    ReplyDelete
  25. பேரக்குழந்தைகளை விட்டு பிரிவது கஷ்ட்டம் தான் போல இருக்கு. நம்ப குழந்தைகள் விட்டுவிட்டு போகும் போது அது rational ஆ தோனறது !

    ReplyDelete
  26. பேரக்குழந்தைகளை விட்டு பிரிவது கஷ்ட்டம் தான் போல இருக்கு. நம்ப குழந்தைகள் விட்டுவிட்டு போகும் போது அது rational ஆ தோனறது !

    ReplyDelete
  27. வாங்க வெற்றிமகள், குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அணு அணுவாக ரசிக்கவேண்டும். அதற்கு எல்லாருக்கும் கொடுத்து வைப்பதில்லை.

    ReplyDelete
  28. வாங்க ஜெயஶ்ரீ, ரொம்ப நாளாச்சு பார்த்து. பிசி போல! :))))

    நீங்க சொல்வது ஒரு விதத்தில் உண்மைதான். ஆனாலும் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையைத் தேடித் தனியாகப் போனபின்னர் ஒரு வெறுமை தாக்குவதைத் தவிர்க்க முடியவில்லை. :((((( எங்கேயோ சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று ஆறுதல் அடையவேண்டி இருக்கு. வேறே வழியில்லை. :((((

    ReplyDelete
  29. வாங்க ஏடிஎம், ஹிஹிஹி, அப்பு பாவம் தான். :))))

    ReplyDelete
  30. மகிழ்ச்சியான தருணங்களை விட்டு வருவது என்பது வருத்தமானதுதான்.

    ReplyDelete
  31. வாங்க மாதேவி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  32. ரொம்ப ஆல்கா வைக்கக்கூடாது. ஆசை அறுமின்....

    ReplyDelete