எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 11, 2012

?????கேள்விக்குறி!

படத்தோட பேரே அதான். ??க்வெஸ்டியன் மார்க். இது The Blair Witch Project என்ற ஆங்கிலப் படத்தின் காப்பி, பேஸ்ட் எனப் பையர் சொன்னார். கிட்டத்தட்ட அதே கதை தான் என்றும் சொன்னார். நான் அந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப் படலை. ஆகையால் இதைச் சுவாரசியத்துடன் பார்த்தேன். 3 பெண்களும், அவர்கள் நண்பர்களான நான்கு பையர்களும் அவர்களில் ஒருவருக்குச் சொந்த வீடு காட்டில் இருக்கிறது. அங்கே அவங்க ப்ராஜெக்டுக்காகப் படம் சுத்தி உள்ள காட்டில் எடுக்கப் போறாங்க.

 ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொள்வதும் அப்படியே செய்துக்கறாங்க. சொந்த வாழ்க்கையில் பேசிக்கிறாப் போல் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் சண்டையும் போட்டுக்கிறாங்க. கொஞ்சம் போரடிக்க ஆரம்பிக்குது. ரொம்பவே லேட்டாத் திகில் கிளப்பறாங்க. திகில் கிளப்பியதும் படம் கொஞ்சம் ஆவலைத் தூண்டியது. ஆனால் கதைப்படி கடைசியில் எல்லாரும் செத்துப் போறதும், மர்மம் விடுவிக்கப்படாததும் கொஞ்சம் புதுமையான முடிவு. அதான் ??? அப்படினு படத்துக்குப் பேராம். பரவாயில்லை.


 இளைஞர்களின் இயல்பான நடிப்புக்காகவும் படத்தின் காட்சிகளை அதில் குறிப்பிட்டிருக்கும் நேரமே கஷ்டப்பட்டு எடுத்திருப்பதற்காகவும் பார்க்கலாம். நல்லாவே பயமுறுத்தி இருக்காங்க. அதிலும் பேய் பிடிச்ச சிம்ரனா வரும் பெண் பெயரெல்லாம் தெரியலை. நல்லாவே பேய் பிடிச்சு ஆடி இருக்காங்க. காமிராக்காரரா வரும் பையரும் நல்லாப் பயப்படறார். எல்லாருமே பயத்திலே அழறாங்க. எங்க பையர் இதைப் பார்த்துட்டு நீ பயப்படப் போறேம்மானு சொன்னார். அதெல்லாம் பேயும், பிசாசும் தான் பயப்படணும். நான் ஏன் பயப்படப்போறேன்னு சொல்லிட்டுப் படத்தைப் பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். ஓகே.

13 comments:

 1. :)) என்ன !! ஒரே சினிமா மொழங்கறது !! எப்ப நாடாம்?ஆமாம் !!அந்த (வேர்வை) ஊத்துக்காட்டுக்குத்தான் !:( கரன்ட் வேற இல்லை . சும்மா அங்கேயே பேசாம இன்னும் நாலஞ்சு மாசம் தங்கிட்டு டிஸம்பர்ல போகலாம்

  ReplyDelete
 2. எதுக்குபா பேய்ப் படமெல்லாம் பாக்கறீங்க:)
  அதான் நம்ம ஊர்ல ஏகப்பட்ட நிஜப் பேய்கள் இருக்கே.

  ReplyDelete
 3. //அதெல்லாம் பேயும், பிசாசும் தான் பயப்படணும். நான் ஏன் பயப்படப்போறேன்னு //


  athaane hihihihih

  ReplyDelete
 4. நம்மளைப் பார்த்து தான் பேய் பயப்படணும் இல்லையா!.... :)

  சினிமா பதிவுகள் நிறைய வருது.... தினம் தினம் சினிமாவா? நல்லது....

  ReplyDelete
 5. நம்மளைப் பார்த்து தான் பேய் பயப்படணும் இல்லையா!.... :)

  சினிமா பதிவுகள் நிறைய வருது.... தினம் தினம் சினிமாவா? நல்லது....

  ReplyDelete
 6. பேய்படம்லாம் இப்ப காமெடி படம் போல கிசு கிசுதான் மூட்டுது. இந்தவாரம் சினிமா வாரமா. நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 7. ஹாஹா, வாங்க ஜெயஸ்ரீ, பசங்க போடறாங்க. அந்த நேரம் சும்மா இருந்தேன்னா பார்க்கிறது தான். அதுவும் அஞ்சு மனசும் குளிர்ந்து இருந்தால்! :))))))))நாட்டுக்கு வந்தாச்சு,

  அதான் வரச்சேயே லோ பிரஷரையும், மின்வெட்டுக்குத் தீர்வையும் கொண்டு வந்துட்டோமுல்ல! :)))))

  ReplyDelete
 8. ஹிஹிஹி, வல்லி, சினிமாப் பேய்னா ரசிச்சுச் சிரிக்கலாமே.

  ReplyDelete
 9. வாங்க எல்கே, எதானே? :))))))

  ReplyDelete
 10. வாங்க வெங்கட், அம்புடுதேன். இனிமே மூட் இருந்தாத் தான் பார்ப்பேன். அதென்னமோ இங்கே பார்க்கத் தோணாது. எப்போவானும் கணினியில் இருந்து மாறுதல் வேணும்னு தோணினாப் பார்ப்பேன். :))))

  ReplyDelete
 11. கெளதம் சார்,
  ???????:)))))

  ReplyDelete
 12. வாங்க லக்ஷ்மி, சினிமா வாஆஆஆஆரம் முடிஞ்சாச்ச்ச்ச்ச்ச்:)))

  ReplyDelete