எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 20, 2013

உங்க ஊரில் மழை பெய்யணுமா?

உங்க ஊரில் மழை பெய்யணுமா?

.  சஹஸ்ர காயத்ரி ஹோமமும் தேவையில்லை; தண்ணியே இல்லாத நதியில் நட்ட நடு மத்தியானம் நின்னுண்டும் வருண ஜபம் செய்ய வேண்டாம்.  அல்லது மழை பெய்யறதுக்குனு பிரார்த்தனைகள், அபிஷேஹங்கள், மழையை வரவழைக்கும் அமிர்த வர்ஷிணி ராகத்தை விடாமல் பாடறது, அல்லது வாசிக்கிறது எதுவும் வேண்டாம்.  நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
என்னை அழைத்து கருவடாம் போடச் சொல்லுங்கள்.  குறைந்த பட்சமாக சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தல், அவரை, கொத்தவரை வத்தல் போன்றவையாவது போட அணுகுங்கள்.  இவற்றை வெந்நீரில் போட்டதுமே வானம் கறுக்க நான் உத்தரவாதம்.  இல்லையா, அரை கிலோ அரிசியையோ, அரை கிலோ ஜவ்வரிசியையோ கருவடாம் போடக் கிளறினால் போதுமானது.  நீங்க அன்னிக்குப் பூரா பெய்யும் மழையைப் பார்த்து ஆனந்தப் படுவதா, அல்லது வெயிலில் காயாத கருவடாத்தைப் பார்த்து வருந்துவதா எனத் தவிப்புக்கு உள்ளாவீர்கள்.  எதையும் கண்டு கலங்காத மனம் எனில் கிளறிய மாவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு, அல்லது மாவு கிளறும்போதே மழை வரும் போல் தெரிந்ததும், அரைத்த மாவை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு மறுநாள் கிளறும் மன உறுதியும் தேவை.  இவற்றுக்கெல்லாம் நீங்கள் தரவேண்டிய கட்டணம் அதிகமில்லை.

மழை இல்லாட்டியும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையோடு கூடிய மேக மூட்டத்துக்கு உத்தரவாதம்.  வானத்தின் நிலைக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.   எந்த ஊராக இருந்தாலும் மழை இல்லாட்டியும் மேக மூட்டத்துக்கு உத்தரவாதம்.

27 comments:

 1. நல்ல அனுபவம்.!ஏமாற்றம் ஒரு பதிவுக்கு வழி வகுத்து விட்டது. ஆனால் இந்த அனுபவம் புதுசில்லை என்கிறாள் என் மனைவி.!

  ReplyDelete
 2. வாங்க ஜிஎம்பி சார், முதல் பின்னூட்டத்துக்கு நன்றி. இது ஏமாற்றமெல்லாம் இல்லை. என்னிக்கோ ஒரு நாள் மழை பெய்ஞ்சதுனா ஏமாற்றம்னு சொல்லலாம். எப்போவும், எந்தப் பருவ காலங்களிலும் இதேதான் தொடர்கதை! :))) நல்ல வெயில் அடிக்கும் அக்னி நக்ஷத்திரத்திலும்! :))))))

  ReplyDelete
 3. தெரிஞ்ச கதைதானே!

  ReplyDelete
 4. எப்படியோ மழை பெய்தால் சரி...

  ReplyDelete
 5. மிக மிக நல்ல அனுபவம்

  ReplyDelete
 6. ஆமாம்...ஆமாம்... இங்கயும் அதே கதைதான்...

  ஆமாம்.. உங்க ஊர்ல கொசு எப்படி? ஸ்பெஷல் டைப்/சைஸ் கொசு உங்கள் ஊரிலும் திடீரென அதிகமா இருக்கா?

  ReplyDelete
 7. சந்தோசமாய் சொல்லவில்லை உங்களின் வருத்தம் புரிகிறது

  ReplyDelete
 8. கீதாம்மாவா-? மழைநாட்டில்லிருந்து வந்திருப்பாங்களோ-? டவுட்டு. செவ்வாய் கிழமை மதுரை திருச்சியில் மழை. நானும் செவ்வாய் புதன் மதுரை திருச்சி சுற்றுப் பயணம் சென்று இன்னிக்கு காலையில் தான் வீடு வந்து சேர்ந்தேன்.

  ReplyDelete
 9. நீங்க போடற வற்றல், வடாத்து மேல வருண பகவானுக்கு அவ்ளோ பிரியம். சாப்பிடுறதுக்காக வர்றார் கீத்தாம்மா :-)))

  ReplyDelete
 10. ஹா..ஹா.... மேடம் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கே.
  எங்க அம்மா வடாம போட தண்ணி வைத்த உடன் மூடிக்கொண்டிருக்கும் வானம் கூட வெளுத்து வெய்யில் வர ஆரம்பித்துவிடும்.ஒவ்வொருவருக்கு ஒருவிதமான அனுபவம்.

  ReplyDelete
 11. வாங்க வா.தி. எல்லாருக்கும் தெரியணுமுல்ல!:))))))

  ReplyDelete
 12. வாங்க டிடி, மானம் இங்கே மூடத்தான் செய்கிறதே தவிர, மழைனு பெரிசாப் பெய்யறதில்லை. :))))) சும்ம்ம்ம்ம்ம்மா ஒரு போஸ்ட் தேத்தினேன்.

  ReplyDelete
 13. வாங்க பாலாஜி கண்ணன், முதல் வருகை??? வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 14. ஹாஹா, கவியாழி கண்ணதாசன், வருத்தம்? எனக்கு?? ஹிஹிஹிஹி

  ReplyDelete
 15. விக்னேஷ்ஜி, எங்கே இந்தப் பக்கம்? மறந்து வந்துட்டீங்களா? திருச்சியில் மழை பெய்தாலும் இங்கே ஸ்ரீரங்கத்திலே பெய்யறதில்லை.

  ReplyDelete
 16. வாங்க அமைதி, வருணனுக்குப் பிரியமோ இல்லையோ, நான் வத்தல் போடறது சூரியனுக்குப் பிடிக்கலைனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 17. வாங்க ராம்வி, எங்க அம்மாவுக்கு அப்படித்தான். :)))))எனக்கு மட்டும் இந்த ராசி.

  ReplyDelete
 18. ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு மழை பத்தி பேசலாமோ மாமி...:))

  வானம் மூடாப்பு போட்டா வடாம் காயாது தான்....

  இங்கயும் மாமியார் வடாம் போடலாம்னு சொல்றா.....ஆனா குரங்கு கிட்டயிருந்து வடாத்தை காப்பாத்தறது பெரிய பாடு...:)

  ReplyDelete
 19. உங்க புண்ணியத்தில் மழை பெய்யட்டும்.
  சீக்கீரம் வத்தல் வடாம் போட ஆரம்பியுங்கள். மதுரையில் தண்ணீர் கஷ்டம். அதனால் மதுரைக்கு உங்களை அழைக்கலாம் என்று எண்ணம், அங்குள்ள மக்களுக்கு உதவி செய்ய.

  ReplyDelete
 20. Ha ! ha! Ippa enga oor la veyyil koluthinathu Konya neram varai! Ippa inhtha pathivai padichcha udaneye moodinduduththu:)

  ReplyDelete
 21. வாங்க கோவை2தில்லி, ஸ்ரீரங்கத்தில் மழை தான் பெய்யாதே! :))))நல்லவேளையா இங்கே குரங்குகள் இல்லை. டெல்லியில் நிறைய. என் மைத்துனர் இருக்கும் குர்காமில் சர்வசகஜமாப்பக்கத்திலே வந்து உட்கார்ந்துக்குது! :P :P :P

  ReplyDelete
 22. ஹாஹா, வாங்க கோமதி அரசு, நாளைக்கு மதுரைப் பயணமாக்கும்! வடாம் இரண்டு நாட்களாய்ப் போடவில்லை. கொஞ்சம் முடியலைனு. நல்ல வெயில் காயுது! :)))))

  ReplyDelete
 23. வாங்க ஜெயஸ்ரீ, அடிக்கடி பார்க்க முடியலை இப்போல்லாம். அது சரி, உங்களுக்கு ஆகாயம் மூடிக்கணும்னா என்னோட பதிவை வந்து படிச்சாலே போதும்! :)))))

  ReplyDelete
 24. சரியாகச் சொன்னீர்கள். எங்கள் அம்மா முன்பு வடாம் போடும்போது இதேதான் சொல்லி சலிப்படைவார்.:)

  எனக்கும் இந்த அனுபவம் சில தடவை பட்டிருக்கின்றேன். காயவைத்ததை எடுத்துக்கொண்டு ஓடி குக்கருக்குப் பக்கத்தில் வைத்து :))) மறுநாள் சூரியனை வேண்டி காயவைத்து எடுப்பது பெரிய கதைதான்.

  ReplyDelete
 25. வாங்க மாதேவி, எனக்கும் ஜோடிக்கு ஆள் இருப்பது குறித்து மகிழ்ச்சியே! :)))))

  ReplyDelete
 26. 'நான் வந்து வடாம், வத்தல் போட்டால் கட்டாயம் மழை பெய்யும்' அப்படின்னு சொல்லி காப்பிரைட் வாங்கி வைத்துக் கொள்ளுங்க கீதா!

  அபூர்வ சகோதரர்கள் பாட்டு நினைவுக்கு வந்தது!  ReplyDelete
 27. அருமையான யோசனை ரஞ்சனி! காப்பி ரைட் தான் வாங்கிக்கணும். :)))))
  அபூர்வ சகோதரர்கள் பாட்டு?? எந்த அபூர்வ சகோதரர்கள்?? முன்னாடி வந்தது? அல்லது பின்னாடி கமல்ஹாசன் நடிச்சு வந்தது???

  ReplyDelete