எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 01, 2013

ஏப்ரல் ஃபூல், ஏப்ரல் ஃபூல்.

ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி,

என்றும் ஃபூல் என்றொரு ஜாதி!

இன்னிக்கு பிஎஸ் என் எல் எல்லாரையும் ஏப்ரல் முட்டாளாக்கிடுச்சு.  அதே சமயம் மின் வாரியமும்.  காலம்பர இருந்து மொத்தமா இரண்டரை மணி நேரமே மின்சாரம் போயிருக்கு.  ஆஹானு நினைச்சுட்டு ஜாலியாக் கணினியிலே உட்கார்ந்தால், நோ இணையம்.  ஹா,ஹா என்னனு நினைச்சேனு பிஎஸ் என்னெலோட அட்டஹாசச் சிரிப்பு.

ஒரு மணி நேரம் காத்துட்டு இருந்தும் வரலை.  வெறுத்துப் போய் புகார் கொடுக்க விழைந்தால் தானியங்கிப் புகார் கொடுக்கிறதுக்குள்ளே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.  வந்த ஒன்றிரண்டு லான்ட்லைன் தொலைபேசி அழைப்பும் பாதியிலே நின்று போக நேரே ஸ்ரீரங்கம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அழைத்தால் , மேடம், இது தேசியப் பிரச்னை;  உங்களுக்கு மட்டும் இல்லை!" னு சொல்லி சமாதானம் செய்தாங்க. அப்புறமாத் தொலைக்காட்சியைப் பார்த்தால் அங்கேயும் கிட்டத்தட்ட இந்த சைபர் அட்டாக்கினால் பதினைந்து நாடுகளின் இணைய இணைப்பு சேதமாகி இருப்பதாகவும், விரைவில் சரியாகும் என்றும் சொல்றாங்க.

இப்போ மூணு மணிக்கப்புறமாத் தான் இணையம் வந்தது.  உங்களுக்கு???  கடைசியிலே இணையம் ஏப்ரல் முட்டாளாக்கி விட்டது. :))))))

13 comments:

 1. காலையில் தில்லியிலும் இதே பிரச்சனை தான். நான் மாலை வந்து பார்த்துக்கொள்ளலாம் என அலுவலகம் சென்று விட்டேன்! :)

  இப்போது வேலை செய்கிறது - நல்லவேளையாக.

  ReplyDelete
 2. நான்தான் அப்பவே சொன்னேன் இல்லே! எங்களைப் பற்றிச் சொன்னால் கண்ணு விழுந்துடும்!!!!! ;))

  ReplyDelete
 3. அக்கா நானும் இப்போ திருவானைக்காவல்லதான் இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க

  ReplyDelete
 4. எதையோ தேடப்போன உங்கள் கண்களுக்கு என் ஆலய தரிசனப் பதிவு கண்ணில் பட்டு உங்களால் கருத்துக் கூறப் பெற்றது என் பாக்கியம். உங்கள் ஊர் எது என்று எனக்கு எப்படித்தெரியும்.? உங்களை நான் எப்படிக் கேட்டிருக்கமுடியும்.? என் பதிவு மூன்று கோயில்களைப் பற்றி இருக்கிறது. இதில் எந்தக் கோயில் பரவாக்கரை பக்கம் இருக்கிறது.?வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. காலையில் மின்வெட்டு, 10 மணிக்கு மேல் இணையம் வேலை செய்யவில்லை,மதியம் மூன்று மணிக்கு மேல் தான் இணையம் வந்தது இங்கும்.

  ReplyDelete
 6. வாங்க டிடி, நமக்கெல்லாம் எப்போத் தான் விடிவோ?

  ReplyDelete
 7. வாங்க வெங்கட், இன்னிக்கும் இணையம் சொதப்பல் தான். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. :)

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீராம், அதிர்ஷ்டக்காரங்க நீங்க! :)))))))

  ReplyDelete
 9. வாங்க ஜெய்சங்கர், ஸ்ரீரங்கத்தில் இருக்கோம்.

  ReplyDelete
 10. வாங்க ஜிஎம்பி சார், ஹிஹிஹி, என்னோட பழைய பதிவுகளை நீங்க படிச்சிருப்பீங்க என்ற எண்ணத்திலே போட்டுட்டேன். :)))) மன்னிக்கவும்.சர்வாங்க சுந்தரி பத்தியும் கருவிலி பத்தியும் நிறைய எழுதி இருக்கேன். கருவிலியில் இருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள பரவாக்கரை பக்கம் இருப்பது கோனேரிராஜபுரம் சிவன், பெருமாள்கோயில்கள். திருவீழிமிழலை கோயில் போன்றவை.

  பரவாக்கரைப் பெருமாள் கோயில், சிவன் கோயில் பரவாக்கரையிலேயே உள்ளது. பெருமாள் கோயிலுக்குத் தான் நாங்க முயற்சி செய்து 2011-ஆம் வருடம் கும்பாபிஷேஹம் இறை அருளாலும் பல நண்பர்கள் உதவியினாலும் நடத்தப்பட்டது.

  ReplyDelete
 11. எனக்கு நேற்று மாலை திக்க ஆரம்பித்து, பிறகு மௌனமான இணையம் இன்று சற்று முன்தான் பேசத் தொடங்கியுள்ளது.

  ReplyDelete
 12. வாங்க கெளதம் சார், நேற்று மாலை நான்கு மணியிலிருந்து இங்கேயும் இணையம் சொதப்பல் தான். ஐந்து மணிக்கப்புறமா சுத்தமா வரலை. :))))

  ReplyDelete