எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 24, 2014

காஃபி வித் கீதா! கடைசியோ கடைசி

இப்போ அமெரிக்காவில் காஃபி குடிச்ச அனுபவம் பத்தி. முதல் முதலாப் போனப்போ ஃபில்டர் எல்லாம் எடுத்துட்டுப் போனோம்.  ஆனால் பையர் நெஸ்கஃபே வாங்கி வைச்சிருந்தார்.  ஆகவே பாலில் அதைக் கலந்து குடிச்சுப் பார்த்தோம்.  அது என்னமோ காஃபி குடிச்ச திருப்தியே வரலை. சரினு பையர் அதை அவசரத்துக்கு வைச்சுக்கலாம்னு வால்மார்ட் கூட்டிட்டுக் காஃபி செக்‌ஷனுக்கு அழைச்சுட்டுப் போனார்.அசந்துட்டோம்.  உலகத்திலே உள்ள அனைத்து ரகங்களும் அங்கே இருந்தன. பவுடர், கொட்டை, என விதம், விதமாக.  வறுத்த கொட்டைகள் இருந்தன. வறுக்காத கொட்டை அதிகம் காணப்படவில்லை.  வறுத்த கொட்டையைத் தேர்வு செய்து அங்கேயே இருக்கும் கிரைண்டரில் பொடியாக அரைச்சுக்கலாம். அப்படி சுமார் கால் கிலோ கொட்டையைத் தேர்ந்தெடுத்தோம்.  அங்கேயே மெஷினில்  போட்டுப் பொடியாக அரைத்தோம்.  அப்போப் பையர் கிட்டே ஒரே ஒரு மிக்சி தான் இருந்தது. அதிலே காப்பிக்கொட்டையெல்லாம் அரைக்க முடியாது. காஃபிக் கொட்டை அரைக்கும் ஜாரோடு கூடிய மிக்சியைப் பின்னர் தான் வாங்கினோம்.  காஃபி மேக்கரும் அப்போ இல்லை. ஆகவே அங்கேயே பொடியாக அரைத்துக் கொண்டோம்.  அதை மறுநாள் சென்னையிலிருந்து கொண்டு போன ஃபில்டரில் போட்டுக் காஃபி கலந்தால்!  கடவுளே!  காஃபியா அது!  மறுபடி நெஸ்கஃபேயே பரவாயில்லைனு தோணிச்சு.

பையருக்கு இந்த விஷயம் தீராத பிரச்னையாக இருந்திருக்கு. மீனாக்ஷி கோயிலுக்கு அழைத்துப் போகையில் அங்கே அனைவருக்கும் காஃபி குடிக்கவென (இலவசமாக) காஃபி மேக்கர் வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துப்போய்க் காஃபி குடிக்க வைத்தார்.  ம்ஹூம்! அதுவும் காஃபியே அல்ல. வெறும் வெந்நீர் தான்!  பின்னர் எங்க பொண்ணு வந்து மெம்பிஸ் அழைத்துச் சென்றாள். அவங்க கிட்டே காஃபி மேக்கர் இருந்தது.  பால் ஆர்கானிக் பால் வாங்கினாங்க.  அதிலே கொஞ்சம் சுமாராகக் காஃபி இருந்தது. ஆகவே இங்கே காஃபி குடிக்கணும்னா காஃபி மேக்கர் வேண்டும்னு தெரிஞ்சுண்டோம். அங்கிருந்து அட்லான்டாவில் இருந்த என் சித்தி பையர்(தம்பி) வீட்டுக்குப் போக அவர் கொடுத்தார் பாருங்க ஒரு காஃபி!  ஆஹா, அதன் சுவை இன்னமும் நாக்கிலே!

அவரும் காஃபி மேக்கரில் தான் டிகாக்‌ஷன் இறக்கினார். டிகாக்‌ஷனைக் கப்பில் விட்டு ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் பாலை அதில் சேர்த்துச் சர்க்கரையும் போட்டுக் காஃபி கலந்து கொண்டு அதை மைக்ரோவேவில் ஒரு நிமிடம் சூடு பண்ணிக் கொடுத்தார். நாங்க இங்கே செய்யறாப்போல பாலைக் காய்ச்சிக் கொண்டு பின்னர் டிகாக்‌ஷன் விட்டுக் கலந்து கொண்டிருந்தோம்.  அவர் செய்ததைப் பார்த்ததும், அது மாதிரி செய்யணுமானு புரிந்தது.  அதோடு பால் வேறே ஹாஃப்&ஹாஃப் என்னும் ரகம். க்ரீம் உள்ள பால். என்னதான் ஆர்கானிக் பால் வாங்கினாலும் இத்தனை ருசி அதில் வராதுனும் ஹாஃப்&ஹாஃப் பால் வாங்கி அதிலே கலந்து கொண்டு மைக்ரோவேவில் சர்க்கரை சேர்த்து சூடு பண்ணிட்டுக் குடிக்கச் சொன்னார்.  நம்ம ஊரில் ஃப்ரெஷ் பால் அப்போப்போ கறந்தது கிடைக்கும்.  அமெரிக்காவில் அப்படி எல்லாம் கிடைக்காது.  இந்த ஹாஃப் & ஹாஃப் பால் ரகம் நம்ம ஊர் கறந்த பாலைப்போல ருசியைக் கொடுக்கக் கூடியதுனு புரிஞ்சுண்டோம்.
அதுக்கு அப்புறமா இங்கே மெம்பிஸில் பெண்ணும் எங்களுக்கு எனத் தனியா ஹாஃப் அன்ட் ஹாஃப் வாங்கினாள்.  அங்கிருந்து மறுபடி ஹூஸ்டன் போகையில் ஒரு காஃபி மேக்கரும், பொண்ணு கிட்டே இருந்தாப்போல் கொட்டையைப்போட்டு பொடி அரைக்கும் சின்ன மிக்சியும் வாங்கிக் கொண்டு போனோம்.  அங்கே போய்ப் பையர் கிட்டே காஃபி பிரச்னையைத் தீர்த்த விதம் சொன்னோம்.  அவரும் ஹாஃப் அன்ட் ஹாஃப் வாங்கிக் கொடுத்தார். 

ஹூஸ்டனில் பையர் வீட்டுக்கு ஒரு தரம் சில விருந்தினர்கள் டாலஸில் இருந்து வந்தாங்க.  அவங்க எல்லாம் காஃபி குடிக்கிறவங்க.  ஆகையால் அவங்க நாங்களே கலந்துக்கறோம்னு சொன்னாங்க.  சரினு பேசாமல் இருந்தேன்.  அவங்கள்ளே ஒருத்தர் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு பாதிக்கு ஹாஃப் அன்ட் ஹாஃப் பாலை ஊற்றவே எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.  எல்லாருக்குமா கலக்கப் போறீங்கனு கேட்கவே, அவர் இல்லையே, எனக்கு மட்டும் தான் என்றார். கடவுளே, இவ்வளவு ஹாஃப் அன்ட் ஹாஃப் எடுத்துட்டால் அவ்வளவு தான் காஃபி காஃபியாக இருக்காது.  வெள்ளையா இருக்கும்னு சொல்லிட்டு அந்தக் கப்பில் இருந்த பாலை மற்றக் கப்புகளில் ஊற்றி சமன் செய்துவிட்டு டிகாக்‌ஷனை ஊற்றச் சொன்னேன்.  பின்னர் சர்க்கரை சேர்த்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்துவிட்டுக் குடிச்சுட்டுக் காஃபி நல்லா இருந்ததுனு சொன்னாங்க.அமெரிக்காவில் வெளியே போனால் மக்-டொனால்ட், ஸ்டார் பக்ஸ் போன்ற இடங்களில் காஃபி கிடைத்தாலும் ஸ்டார் பக்ஸில் தான் நல்ல காஃபி கிடைக்கும். ஆனால் ஒரு கப் என்பது நாம இங்கே மூணு வேளை குடிக்கும் மொத்தக் காஃபியும் சேர்ந்தால் அதைவிட அதிகம்.  


ஆகவே நாங்க ஒரே ஒரு காஃபி வாங்கிக் கொண்டு ரெண்டு பேரும் பகிர்ந்துப்போம்.  அதுவே 200 மில்லிக்குக் குறையாமல் இருக்கும். சின்ன கப்பும் கிடைக்கும்.  அது வாங்கினாலும் ஜாஸ்தி தான்.  அதோட இந்தியன் டீ என்று ஒரு தேநீர் கொடுக்கிறாங்க. மசாலா தேநீர்னு சொல்லிப் பொண்ணு வாங்கிக் கொடுத்தா.  எங்களுக்குப் பிடிக்கலை. :))))காஃபி மஹாத்மியம் முடிந்தது. அனைவரும் அவரவருக்குப் பிடித்தமான வகையில் காஃபி குடித்து மகிழ வாழ்த்துகள்.


படங்கள் உதவி: கூகிளார்.

24 comments:

 1. வெளிநாட்டில் காபி அனுபவங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொண்டேன்!

  ReplyDelete
 2. காஃபி மஹாத்மியம் முடிந்தது! :))))

  போன பதிவில் நீங்க காஃபி பிரியர் இல்லையா எனக் கேட்டது பார்த்தேன்.

  வீட்டில் நான் மட்டும் தான் காஃபி குடிப்பது. ஆதி இது வரை காஃபி குடித்ததே இல்லை. மகளும் அப்படியே!

  ReplyDelete
 3. காலங்கார்த்தாலேயே காஃபி குடிக்க வந்ததுக்கு நன்றி ஶ்ரீராம். உங்களையும் வைகோ சார் விமரிசனம் எழுதச் சொல்றார். ஏன் எழுதலைனும் கேட்டிருக்கார். அவரோட இரண்டாம்பரிசு குறித்த அறிவிப்புப் பதிவிலே கேட்டிருக்கார். நீங்களும் எழுதுங்க. :))))

  ReplyDelete
 4. வாங்க வெங்கட், காஃபி மேல் உங்களுக்கு உள்ள ஆர்வம் புரிஞ்சது. நீங்க காஃபிபிரியர் தானேனு கேட்டிருக்கணுமோ? மாத்திக் கேட்டுட்டேன்.

  போகட்டும், உங்களையும் விமரிசனம் எழுதச் சொல்லி வைகோ சார் கேட்டிருக்கார். எழுதுங்க. நீங்கல்லாம் எழுத ஆரம்பிச்சா அப்புறமா எனக்கெல்லாம் ஒண்ணும் கிடைக்காது. :)))) அதனால் பரவாயில்லை. எழுதுங்க. :)))))

  ReplyDelete
 5. காஃபி மஹாத்மியம் ரொம்பவே ரசனை அம்மா...

  அடுத்தது டீ உண்டா...?

  ReplyDelete
 6. யோசிக்கணும் டிடி. :))))

  ReplyDelete
 7. நல்ல காஃபி குடித்தத் திருப்தி. இவருக்கும் ஹாஃப் அண்ட் ஹாஃப் பிடிக்கும். போனதடவை எல்லாம் சின்ன க்ரைண்டரில் தினம் அரைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அந்த இண்டரஸ்டும் போயிடுத்து. ஹாஃப் அண்ட் ஹாஃபில் கொலஸ்ட்ரால் பயம். அதனால் ஹொரைசன் மில்க் தான்.2 பர்செண்ட். வெந்நீரில் நெஸ்கஃபே டோஸ்ட்மாச்டரைக் கலந்து அப்புறம் பால் விட்டு மைக்ரோவேவ் செய்து சாப்பிடுகிறேன். இவர்கள் லைட் வெரைட்டி. நான் டார்க் வெரைட்டி..நன்றி கீதா. பேஷ் பேஷ் ரொம்ப நன்றாக இருக்குன்னு சொல்லிக்கறேன். அப்புறம் 8 ஒ க்ளாக்னு ஒரு பொடி இருக்குனு பக்கத்துவீட்டுப் பெண் சொன்னாள். அதை முயற்சி செய்து பார்க்கவில்லை.

  ReplyDelete
 8. வெளிநாடு சென்றால் உள்ளூர் காபி சுவை கிடைக்காது போலும்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete

 9. காஃபி பெர்கொலேட்டரில் தயாரித்துக் குடித்ததுண்டா.?

  ReplyDelete

 10. நான் சிறுகதைக்கு மீதிக்கதை போட்டி அறிவித்தபோது ஒருவர் பின்னூட்டத்தில் மழை வேண்டுமென்றால் ருஷியசிருங்கரியம் போக வேண்டும் என்றார். அது இப்போது நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
 11. வாங்க வல்லி, இந்த 2% பாலே எனக்குப் பிடிக்காது. கொட்டிடணும்னு சொல்லும் ரகம் நான்! :))))

  8ஓ க்ளாக் காஃபி பவுடரும் உண்டு. அதை எங்க பொண்ணு ப்ரெக்ஃபாஸ்ட் காஃபினு சொல்வா. :))))

  ReplyDelete
 12. வாங்க தளிர் சுரேஷ், விமானத்தில் கொடுக்கிற காஃபியை மட்டும் குடிச்சீங்க, காஃபி குடிக்கும் ஆர்வமே சுத்தமாப் போயிடும்!:)))

  இதுக்காக ராயல் நேபாள் ஏர்வேஸில் கொஞ்சம் பரவாயில்லை. நல்ல காஃபியாக் கொடுத்தாங்க. :)))

  ReplyDelete
 13. ஜிஎம்பி சார், நிறையக் குடிச்சிருக்கேன். அந்த நுரை பாதி காஃபியைத் தடுத்துடறது. நுரை போனால் ஒரே வாய்க் காஃபி தான் மிஞ்சும். :)))))

  ReplyDelete
 14. //நான் சிறுகதைக்கு மீதிக்கதை போட்டி அறிவித்தபோது ஒருவர் பின்னூட்டத்தில் மழை வேண்டுமென்றால் ருஷியசிருங்கரியம் போக வேண்டும் என்றார். அது இப்போது நினைவுக்கு வந்தது//

  புரியலையே, ஜிஎம்பி சார். :(

  ReplyDelete

 15. /புரியலையே ஜிஎம்பி சார்./ நாம் பதிவெழுத அழைப்பது ரிஷ்ய சிருங்கரிடம் வேண்டுவதுபோல் இருக்கிறது. அது எனக்கு மட்டுமல்ல வைகோவுக்கும்தான் என்று தெரிகிறது உங்கள் மறு மொழிகளைப் படிக்கும்போது தோன்றிய எண்ணம். இப்போது புரிகிறதா.?

  ReplyDelete
 16. ஹாஹாஹா, ஜிஎம்பிசார், உண்மை தான். ஒவ்வொரு முறையும் இம்முறை விமரிசனம் எழுத வேண்டாம்னு இருப்பேன். ஆனால் வைகோ சாரிடமிருந்து நினைவூட்டல் கடிதம் வந்துடும். அப்புறமாத் தான் விமரிசன நோக்கில் அந்தக் கதையையே படிக்க ஆரம்பிப்பேன். சில சமயம் படிச்சுட்டு விட்டுடுவேன். ஒண்ணுமே தோணாது! :))))

  அப்படித்தான் உங்களோட கதைக்கு எழுதினதும். திடீர்னு ஒரு உத்வேகம் வந்து தான் எழுத வேண்டி இருக்கு! :))) மற்ற சாதாரணப் பதிவுகளுக்கெல்லாம் தூண்டுகோல் தேவைப்படலை. போட்டினாலே அலர்ஜியா விலகியே இருப்பேன். பள்ளி நாட்களிலேயே போட்டி போட்டதில்லை. :)))))

  ReplyDelete
 17. இருந்தாலும் ஸ்டார்பக்ஸ் காபியை இருனூறு மில்லி சமாசாரமாக்கினது நீங்க தான்..

  ReplyDelete
 18. @அப்பாதுரை, எப்படியெல்லாம் ஜிந்திக்கிறீங்கப்பா! :)))))))

  ReplyDelete
 19. காபி மஹாத்மியம் ஜோர்...:) எனக்கு காபி கலந்து கொடுத்து தான் பழக்கம்.. இதுவரை ஏனோ குடிக்க தோன்றவில்லை.. மகளையும் பழக்கப்படுத்தவில்லை. முன்பு தில்லிக்கு மாமனார் மாமியார் வரும் போதே இங்கயிருந்து பத்மா காபி அவர்கள் தங்கும் நாட்களுக்கு தகுந்தாற்போல் வாங்கி வந்துடுவாங்க... அவங்களுக்கு அது தான் பிடிக்கும்.மாமனார் டார்க் காபியா குடிப்பார். மாமியார் நார்மல்..

  சில சமயம் என்னவருக்கு என்று ஒரு கால் கிலோ பொடி வாங்கி வைத்துக் கொண்டு மாலை அலுவலகம் விட்டு வந்ததும் கலந்து கொடுப்பேன். கால் தம்ளருக்கு மேல் அரை தம்ளருக்கு கீழ் என்பது தான் அவர் அளவு....:)) இப்போ இங்க வந்த பின், தில்லியிலிருந்து இங்கே வரும் போதெல்லாம் காபி குடிக்க அவருடைய பிறந்த வீட்டுக்கு சென்று விடுகிறார்...:)))

  ராஜ கோபுரத்தின் அருகே முரளி காபிக் கடையில் குடித்திருக்கிறீர்களா மாமி?

  ReplyDelete
 20. அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் காப்பி நன்றாக இருக்கும் என்று என் பிள்ளையும் சொல்லுவான்.
  @ஆதி! நீங்கள் சொல்லுமிடத்தில் நாங்கள் காப்பி குடித்திருக்கிறோம். ஸ்ரீரங்கம் வந்தால் காலையில் மட்டும் வீட்டில் காப்பி. மாலையில் முரளி கடை காப்பிதான்!

  ReplyDelete
 21. வாங்க ஆதி, முரளி காஃபிக் கடையில் காஃபியை விடக் கூட்டம் தான் அதிகம். :))) அப்படி ஒண்ணும் பெரிசாத் தெரியலை. இருமுறை குடிச்சோம். :)))) ஹோட்டல்களில் நல்ல காஃபி குடிக்கணும்னா உட்லன்ட்ஸ், சென்னை பாண்டி பஜார் கீதா கஃபே இரண்டு இடங்களில் தான் நல்ல சுத்தமான சிகரி கலக்காத காஃபி கிடைக்கும். இங்கே கும்பகோணம் டிக்ரி காஃபி கூட ரங்கா கோபுரத்துக்கு எதிரே இருக்கும் கடையில் குடிச்சோம். ம்ஹூம், சொதப்பல்! :)))

  ReplyDelete
 22. வாங்க ரஞ்சனி, இனிமே ஶ்ரீரங்கம் வந்தால் மாலை காஃபி எங்க வீட்டில் வைச்சுக்குங்க. :)))

  ReplyDelete
 23. ஸ்டார் பக்ஸ் காஃபி நன்றாக இருக்கும்.

  நானும் சிக்கரி கலக்காத காபிதான் வீட்டில்

  ஆமாம் கீதாக்கா பாண்டி பஜார் கீதா கஃபே யில் காபி நன்றாக இருக்கும்.

  கீதா

  ReplyDelete
 24. காபி குடிக்கறவங்கள்லாம், அதை ஏனோ, ஒரு மஹாத்மியம் ரேஞ்சுக்கு ஓட்டறாங்க. நான் காஃபி பக்கமே போவதில்லை என்பதால், அதில் உள்ள ரசனை எனக்குப் புரியலை..ஹாஹா

  ReplyDelete