எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 09, 2014

வெண்கலப் பானையே சிறந்தது! என்னோட ஓட்டு வெண்கலப்பானைக்கே!

16x9  அடி சமையலறையில் ஒரு பக்கம் சாமான்கள் வைக்கும் அலமாரியும், கிழக்கே பார்த்துச் சமைக்கும்படியான சமையல் மேடையும் உண்டு.  சமையல் மேடைக்கு எதிரே பெரிய ஜன்னல்.  ஜன்னலுக்குக் கீழே தான் எல்லோரும் சாப்பிட உட்காருவாங்க.  ஒரே சமயம் நாலு பேர் சாப்பிடலாம்.  அங்கே அப்போ அடுப்புக்கு நேரே இருந்தது பெண்ணரசி.  குக்கரைக் காணோமேனு அடுப்படியில் நான் திகைத்து நிற்க, அரிசியும், ஜலமுமாக அபிஷேஹம் பண்ணிக் கொண்ட மாமனாரும், பெண்ணும் என்னையே பார்க்க, கொல்லையிலிருந்து ரங்க்ஸ், பையர், மாமியார் மூணு பேரும் ஓடோடி வர, குடி இருக்கும் மாமி பாதி சமையலில் ஓட்டமாய் ஓடி வர, அக்கம்பக்கம், எதிர் வீடு, பக்கத்து வீடுகள், பின்னால் இருக்கும் வீட்டு மனிதர்கள் பின்னாலிருந்து தாவிக் குதித்து வர ஒரே அமர்க்களம்.

சமையலறைக்குக் கூட்டமாய் வந்த எல்லோரும் என்னனு கேட்க,  என் உச்சந்தலையிலேயும் அரிசியெல்லாம் விழுந்து இருக்கவே அதைப் பார்த்துப் பையருக்குச் சிரிப்பு வந்திருக்கு போல.  இருந்தாலும் நடந்தது என்னனு புரியலையே?  குக்கரைக் காணோம்னு நான் சொல்ல, சுத்தித் தேட ஆரம்பிச்சாங்க.  அப்போது தான் குக்கர் வெடிச்சிருக்குனே புரிய வந்தது. அன்று வரை குக்கர் வெடிக்கும்னே தெரியாது. குக்கர் மூடி மட்டும் தொட்டி முத்தத்தில் கிடக்க, எகிறிப் பறந்த குக்கர் அங்கே சமையலுக்கு நீர் பிடிக்கும் வாளிக்குள் போய்ச் சமர்த்தாக விழுந்திருந்தது.  அது மேலே எகிறிக் கீழே விழுந்திருந்தால் ஒண்ணு என் மண்டை உடைஞ்சிருக்கும்.  அல்லது கீழே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கோ, மாமனாருக்கோ அல்லது இருவருக்குமோ அடி பட்டிருக்கணும்.  எல்லோரும் பிழைச்சோம். ஒருவழியாக் குக்கரைக் கண்டு பிடிச்சாச்சு. உள்ளிருந்த பாத்திரம் இன்னொரு பக்கம் போயிருந்தது. அதையும் கண்டு பிடிச்சோம்.

அரிசி வீடு முழுதும் சிந்தி இருக்க அதை நானும், என் மாமியாருமா சுத்தம் பண்ணினோம்.  பாதிச் சாப்பாட்டில், இந்த மட்டில் விட்டாங்களேங்கற நினைப்போட எழுந்த பெண்ணரசி, என்னிடம் மெதுவா வந்து, "கோபத்திலே நீ சாதத்தைத் தட்டில் போடறதுக்கு பதிலா தலையிலே போட்டியோனு நினைச்சுட்டேன்!" என்றாளே பார்க்கலாம். எல்லாரிடமிருந்தும் வெடிச்சிரிப்புக் கிளம்பியது.  என்னைக் குழந்தையா இருக்கும்போது சாப்பிடப் படுத்தினால் சாப்பிடலைனா எல்லாச் சாதத்தையும் தலையில் வைச்சுக் கட்டுவேன்னு அம்மா சொல்லுவா.  அதே கதை இங்கே என் பெண்ணிடமும் நான் சொல்லி இருக்க, அவளோ நிஜம்மாவே அப்படிப் பண்ணிட்டேன்னு நினைச்சிருக்கா. அதுக்கப்புறமா அக்கம்பக்கம் சில வீடுகளில் தொடர்கதையாகக் குக்கர் வெடிக்க ஆரம்பிச்சது.  அதுவும் எழுபதுகளில் வாங்கிய குக்கர் தான் வெடிக்கும்.

அப்புறமா லஸ்ஸில் இருக்கும் டிடி கம்பெனிக்கு வெடிச்சகுக்கரை எடுத்துப் போய் அதைக் கொடுத்துட்டுப் புது குக்கர் வாங்கி வந்தேன்.  இப்போ அதுவும் பயன்படுத்தறது இல்லை.  அது ரொம்பப் பெரிசு.  அதுக்கப்புறமா ஒரு ஏழு லிட்டர் குக்கர் வாங்கி அதுவும் பெரிசா இருந்ததுனு சின்ன குக்கர்  3 லிட்டர் வாங்கினோம்.  அதனோட பாத்திரத்தில் தான் இன்றும் சாதம் வைக்கிறேன்.  3 லிட்டர் குக்கரும் சீக்கிரமே வீணாகி விட்டது.  ஹாக்கின்ஸ் குக்கரில் அந்தப் பிரச்னையே இல்லைனு சொல்றாங்க.  ஆனால் அதை மூடுவதற்குள் போதும், போதும்னு ஆயிடுது.  இன்னமும் மூட வருவதில்லை என்பதே உண்மை! :(  இப்போதைக்கு இன்டக்‌ஷன் ஸ்டவிலும் வைக்கிறாப்போல் ஒரு குக்கர் வாங்கி அதிலே தான் சாதம் வைக்கிறேன்.   ஆனால் வெண்கலப் பானை தான் பெஸ்ட்.

அதிலே கஞ்சி வடிக்கையில் சூடு தாங்காமல் ஒரு நாள் சாதமெல்லாம் கொட்டத் தெரிஞ்சதிலே இருந்து ரங்க்ஸ் வெண்கலப் பானையே வேண்டாம். நாள், கிழமைக்கு மட்டும் வைச்சுக்கோனு தடை உத்தரவு போட்டுட்டார். 

13 comments:

 1. அப்பாடி... யார் மேலயாவது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்! கிரேட் எஸ்கேப்.

  ReplyDelete
 2. குக்கர் வெடிச்ச அனுபவம் கிடையாது. சேஃப்டி வால்வ் ஃபெயிலியர் ஆனதுண்டு.வெயிட் எகிறினதுண்டு. சாதம் வடிப்பதில் அரிசியின் சத்து கஞ்சியில் போய்விடும் என்பார்கள்.

  ReplyDelete
 3. வாங்க ஶ்ரீராம், உண்மை தான். அதுவும் குக்கர் வெயிட் பல நாட்களுக்குக் கிடைக்கவில்லை. அப்புறமாத் தேடினதில் சமையலறைப் பரணில் விழுந்திருந்தது. :)))))

  ReplyDelete
 4. வாங்க ஜிஎம்பி சார், அரிசியின் சத்துப் போகாது. அதில் உள்ள ஸ்டார்ச் நீக்கப்படும். ஆகவே உடலுக்கு நன்மையே தரும். அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு, மூட்டு வலி இருப்பவர்களுக்குக் கஞ்சி வடித்த சாதமே நன்மை தரும்.

  ReplyDelete
 5. வாங்க டிடி, நன்றிப்பா.

  ReplyDelete
 6. எனக்கும் குக்கர் வெடித்த அனுபவம் உண்டு. அதை பதிவிடுகிறேன். ஆனாலும் குக்கர் காணவில்லை என்று நீங்கள்
  போலீசார் சொல்லாமல் விட்டீரகளே. ஹா.....ஹா.......
  நன்கு ரசித்தேன் உங்கள் சுவாரஸ்யமான பதிவை.

  ReplyDelete
 7. நீங்க வேறே ராஜலக்ஷ்மி!! குண்டைக் காணோம்னு போலீஸுக்குப் போறதாத் தான் இருந்தேன். அப்புறமா மேலே இருந்து ஏதோ சாமான் எடுக்க ஏறினால் அங்கே ஒரு ஓரமா ஒளிஞ்சுட்டு இருந்தது குண்டு! :))))

  ReplyDelete
 8. ஸ்டார்ச் வடித்த சாதம் உடலுக்கு நல்லது என்றே நானும் படித்திருக்கிறேன். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அரிசி உண்பதைத் தவிர்க்க முடியாவிட்டால் இது போல் ஸ்டார்ச் வடிந்த சாதத்தை உட்கொள்வது சற்றே நல்லது.

  ReplyDelete
 9. அதிசயம் ஆனால் உண்மை என்கிற ரீதியில் இருக்கிறது கீதா. எத்தனை பெரிய ஆபத்து. நல்ல வேளை அரிசி மழையோடு நின்றுவிட்டது. எனக்கு சாதம் ஒருவேளையாவது சாப்பிடவேண்டும். இவர்கள் யாருக்கும் வேண்டாம். குண்டுக்காகப் போலீஸுக்குப் போவதாக இருந்தீர்களா. தமாஷ்:)))

  ReplyDelete
 10. இங்கேயும் ஒரே வேளை தான் சாதம் வல்லி. அதுவே எவ்வளவு குறைச்சலா வைச்சாலும் மிஞ்சிப் போயிடுது. :(

  ReplyDelete
 11. அரிசி மழை பொழிந்ததா..... :))))

  நல்ல வேளை யாருக்கும் அடி படாமல் போனதே......

  ReplyDelete
 12. தப்பித்தீர்கள்.

  ReplyDelete