எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 10, 2014

என்னவோ போங்க! ஒண்ணுமே சொல்ல முடியலை! :(

இன்று கல்கத்தாவில் ஒரு பள்ளியில் ஐந்து வயதுப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கிறது.  இது எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்க இதற்கான காரணங்களில் பெற்றோருக்கும் சம பங்கு உண்டு என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?  சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் என்றெல்லாம் போட்டிகள்.  அதிலே ஜூனியர், சீனியர் என்றும் போட்டி.  வயது வித்தியாசமே இல்லாமல்  தான் பாடுவதன் உண்மையான பொருள் புரியாமல் குழந்தைகள் பாடுகின்றன.  போட்டிக்குத் தான் என்றாலும் பாட்டின் பொருளைப் புரிந்து கொள்கின்றனரா?  அதற்கேற்ற அபிநயங்கள் வேறு.


சில நாட்கள் முன்னர் ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை, "பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு" பாடலை அவளைவிட ஐந்து மடங்கு பெரிய ஒரு ஆணோடு சேர்ந்து பாடினாள்  அங்கு கூடி இருந்த கூட்டமே அந்தப் பெண்ணின் அங்க அசைவுகளையும், கண்ணின் சுழற்றல்களையும் கண்டு குதூகலித்து ஆர்ப்பரிக்கிறது.  ஆனால் எனக்கோ?? அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து மனம் வேதனை கொண்டது.  அந்தப் பாடலை வேறு யாரேனும் இளம்பெண்களை வைத்துப் பாட வைத்திருக்கலாமோ என்றும் தோன்றியது.  ஒரு கோணத்தில் அதுவும் தப்பு என்றாலும் குறைந்த பக்ஷமாக அந்தப் பெண்ணிற்குப் பாடலின் அர்த்தம் புரிந்திருக்கும்.  ஆகவே கவனமாக இருக்கலாமே என்றும் தோன்றியது.


சின்னக் குழந்தைகள் கூட இப்படி வெளிப்படையாக நடக்க ஆரம்பிப்பது அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நடந்து கொள்ள வைப்பது என்று சொல்லலாமோ?  இவைதான்  இம்மாதிரியான குற்றங்களுக்கு மூல காரணம் என்று தோன்றுகிறது.  இன்னொன்று இதை ஒரு குற்றமாகக் கூட இப்போதெல்லாம் சொல்ல முடியவில்லை.  சிலநாட்கள் முன்னர் சொன்னபோது பெரியவர்கள் கூட அதற்கு வக்காலத்து வாங்கினார்கள் என்பது வருத்தத்துக்கு உரிய ஒன்று. ஆண்டாள் சொல்லாததா? ஆண்டாள் எழுதாததா என்றெல்லாம் சொல்கின்றனர்.  ஆண்டாளின் பக்தியைப் போன்றதா இப்போதைய பாடல்களைப் பாடும் குழந்தைகளின் நிலை?  குழந்தைகள் பக்தியுடன் திருப்பாவையையா பாடுகின்றனர்?  இல்லையே!  அவர்கள் பாடுவது திரைப்படப் பாடல்.  உருகி உருகிப் பாடுகின்றனர்!  கடவுளை நினைத்தா உருகுகின்றனர்? பெரியவர் கேட்டதும், நான் அளித்த பதிலும் கீழுள்ள சுட்டிகளில்.

 இங்கே

பதில்


இந்தச் சுட்டிகள் இடம் மாறி வெகு கீழே போயிருக்கின்றன.  இன்று தான் கவனித்தேன்.  இப்போது திருத்தி விட்டேன்.


இதே பெரியவர்கள் ஒரு காலத்தில் நான் ஒரு கதையைப் பாராட்டி எழுதியதற்குக் கொடுத்த கருத்தும், அதற்கு நான் பதிவாகக் கொடுத்த பதிலும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம். :)))) அதே பெரியவர்கள் இந்த மூன்று வருடத்தில் எவ்வளவு மாறி விட்டார்கள்.  ஐந்து வயதுக் குழந்தை சிருங்காரப் பாடல்களைப் பாடி அபிநயிப்பதில் என்ன தவறு எனக்கேட்கும் அளவுக்கு மாற்றம். ஆண்டாள் சொன்னதை விடவா என்றெல்லாம் சொல்கின்றனர்.  பக்தி முத்தின நிலையில் ஆண்டாள் சொன்னதுக்கும், இங்கே விளம்பரத்துக்காகவும், பணத்துக்காகவும் பாடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு என்பது நான் சொல்லித் தெரிய வேண்டாம்.  ஆனால் இன்னமும்  நான் தான் மாறவில்லை! :)))) மாறுவேனா?  சந்தேகமே!  மாறுவதைக்  குறித்து எனக்கும் தம்பிக்கும்

தம்பி

அடிக்கடி பேச்சு வார்த்தை நடக்கும்.  தம்பி எவ்வளவோ மாறிவிட்டார்.  நீங்க இன்னமும் மாற மாட்டீங்கறீங்களேனு கேட்பார்.  அதே போல் நான் பக்தி நிலையில் கீழ்ப்படியில் இருப்பது குறித்தும் அவருக்கு விசாரம்.  எனக்கு அந்த நிலையே ஜாஸ்தி! நான் அதே நிலையில்! :))) ஆனால் என்னைப் பொறுத்த வரை நான் இருக்கும் இந்நிலையே எனக்கு  சொர்க்கம்! :)))) இன்னொரு விஷயம் பல நாட்களாக மனதில் இருந்தது.  இதுவும் அனைவரும் அறிந்த ஒன்றே!  சில நாட்கள் முன்னர் திரு யேசுதாஸ் அவர்கள் பெண்களின் உடை குறித்த கருத்தைப் பகிர, அவரைத் திட்டாத பெண்ணே இல்லை.  பெண் சுதந்திரம் உடையில் தான் இருக்கிறது எனச் சொன்னவர் யார்?  நம் நாட்டுக் க்லாசாரத்துக்கு சற்றும் ஏற்காத உடை எனச் சொல்லி இருந்ததும் பலருக்குப் பிடிக்கவில்லை.  கலாசாரத்தை விடுங்கள். சீதோஷ்ண நிலையைப் பாருங்கள்.  இத்தகைய உடை இந்த சீதோஷ்ணத்துக்குச் சரி வருமா?


இதை எல்லாம் சொல்லப் போனால் நீட்டி, முழக்கிக் கொண்டு பெண் சுதந்திரம் என ஆரம்பிக்கின்றனர்.  உண்மையான பெண் சுதந்திரம் இப்படியான உடைகளிலோ, அதற்காகப் போராடுவதிலோ இல்லை;  படிப்புக்காகப் போராடுங்கள்.  வேலைகளில் போட்டியிடுங்கள்.  சிறப்பான பணியில் போட்டியிடுங்கள்.  குடும்ப நிர்வாகத்தில் போட்டியிடுங்கள்.  குடும்ப நிர்வாகம் பெண்களின் கைகளில் இருந்தால் தான் சமூகப் பொருளாதாரம் மேம்படும்.  இது சத்தியம். அதே போல் குழந்தை வளர்ப்பும்.  பெண் தான் வளர்க்க வேண்டுமா?  ஆண்களுக்குப் பங்கில்லையா என்று இன்று கேட்கின்றனர்.  ஆண்களுக்கும் பங்கு உண்டு தான். ஆனால் பெண்ணின் மேற்பார்வைக்கும், ஆணின் மேற்பார்வைக்கும் வேறுபாடு நிச்சயம் உண்டு.

அன்பையும் கண்டிப்பையும் ஒரு சேரக் காட்ட தாய்மார்களால் தான் இயலும்.  ஆண்களால் ஒன்று அதிகக் கண்டிப்பு, அல்லது அதிகமான அன்பு இவை இரண்டு தான் முடியும்.  ஒரு சிலர் மாறுபட்டிருக்கலாம்.  என்றாலும் நம்மை நம் தாய்   அன்பைக் கொட்டி  வளர்த்தாற்போல் நாமும் நம் குழந்தைகளை அதே அன்போடும், கண்டிப்போடும், சமூகச் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் வளர்க்க வேண்டாமா?  இங்கேயும் இப்போதெல்லாம் பெண் சுதந்திரம் குறுக்கிடுகிறது. சுதந்திரம் என்னும் பெயரில் கட்டுப்பாடற்ற ஓர் நிலைக்குப் பெண்கள் செல்கின்றனரோ என்னும் அச்சமும் ஏற்படுகிறது.


இன்னொரு விஷயம்.  இப்போதெல்லாம் திருமணத்திற்குப் பெண்களே கிடைப்பதில்லை.  பெரும்பாலான பெண்கள் அவர்களாகவே திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது ஒரு காரணம்.  இன்னொரு காரணம் பெண்ணின் பெற்றோர் போடும் நிபந்தனைகள். "ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு இன்னொரு காலம் வராமலா போகும்!" வந்தே விட்டது.  ஆனாலும் இந்த ஆண்கள் அப்படியும் திருந்தின பாடில்லை.  திருமணத்திற்காகப் பெண்கள் கேட்டு விண்ணப்பிக்கும் பெரும்பாலான ஆண்கள் பெண் அழகாயும், சிவப்பாகவும் இருக்கவே விரும்புகின்றனர்.  எல்லாப் பெண்களுமே அழகாயும் சிவப்பாகவுமா இருக்க முடியும்?  அப்போக் கறுப்பான பெண்கள் என்ன செய்வார்களாம்?   பெண்ணின் அழகைப் பார்க்காமல், குணத்தைப் பாருங்கள்.


தொடரலாமா?  தெரியலை.  நேரம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்துத் தான் தொடருவதைக் குறித்துச் சொல்ல முடியும்.18 comments:

 1. எல்லா ஆதங்கத்தையும் ஒரேடியாக கொட்டிபடா எப்படி பதில் சொல்றது. போகட்டும் ஒரு வரி பதில்கள்கள்:

  1. கல்கத்தா வன்முறை பலாத்காரம் வகை. அந்த மாதிரி குற்றவாளிகளை, அமெரிக்கா போல் பூட்டி வைத்து, சமுதாயத்திலிருந்தி ஒதுக்கி வைக்கவேண்டும் அது வர்மா கமிஷனுக்கு என் பரிந்துரை. மோடியாவாது கேட்கட்டும்.
  2. அப்பனும் ஆத்தாளும் முட்டாள்கள். என் செய்வது?
  3. தற்கால பெண்ணியுத்துடன் எனக்கு ஒவ்வாமை!

  ReplyDelete
 2. பெண் குழந்தைகள் பலாத்காரப் படுத்துவது பெரும்பாலான நேரங்களில் குடியால் தன் வசமிழந்தவர்களால் என்று நினைக்கிறேன் குடித்தவனின் தாய் என்றும் தாரமென்றும் குழந்தை என்றும் தெரியாத வக்கிர குண வெளிப்பாடே இம்மாதிரிச் செயல்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் ஒரு குழந்தையைப் பார்த்து காம வேகம் எப்படி வரும்? தருமி அவர்கள் பதிவில்குடிக்கெதிராக ஒரு பெடிஷன் அரசாங்கத்துக்கு அனுப்புகிறார். பாருங்களேன்

  ReplyDelete
 3. சில விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடிவதே இல்லை. யேசுதாஸ் சொன்னதில் எனக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் இதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

  சுட்டிகளுக்குச் சென்று படித்தேன்.

  ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்று என்னும் போக்கில் எல்லா வேலைகளையும் பிரித்துக் கொள்ள முடியுமா தெரியவில்லை.

  குழந்தைகளை இதுபோலப் பாலியல் பலாத்காரத்தில் சீரழிக்கும் கயவர்களுக்கு உடனடி தண்டனை, அதுவும் கடுமையான தண்டனை அளித்தாலொழிய இவர்கள் திருந்தப் போவதில்லை.

  சிவப்புப் பெண்கள்தான் வேண்டும் என்று ஆண்கள் ஆசைப் படுவதாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். ஓரிரண்டு உதாரணங்களும் இருக்கலாம். ஆனால் தற்காலப் பெண்களின் விருப்பங்களை மாட்ரிமோனியல் சைட்களில் போய்ப் பார்த்திருக்கிறீர்கள். நீங்களே சொல்லியுமிருக்கிறீர்கள். :))))

  ReplyDelete
 4. அன்புடையீர்,

  வணக்கம்.

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

  அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 5. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 6. ம்ஹூம் நான் எதுவுமே கேட்கலே.

  ReplyDelete
 7. வாங்க "இ" சார், ஒரேயடியாக் கொட்டாம என்ன செய்யறது சொல்லுங்க!

  குழந்தைகளிடம் போய்த் தங்கள் வக்கிர புத்தியைக் காட்டுவதை நினைத்தால் அந்த ஆண்களைச் சுட்டுப் பொசுக்கத் தோன்றுகிறது. :(

  ReplyDelete
 8. வாங்க ஜிஎம்பிசார், இங்கே வன்முறைக்கு அந்தக் குழந்தையை ஆட்படுத்தியது குடிகாரன் எல்லாம் இல்லை. பள்ளி ஆசிரியரே, பெங்களூரு விவகாரத்தில் பள்ளியில் வேலை செய்பவர்களே சம்பந்தப்பட்டிருந்தனர்! :(

  ReplyDelete
 9. வாங்க ஶ்ரீராம், யேசுதாஸுக்கு எவ்வளவு எதிர்ப்பு! எத்தனை பேச்சுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டார்! :(

  சுட்டிகளுக்குச் சென்று படித்ததில் சந்தோஷம்.

  பெரும்பாலான இளைஞர்கள் இப்போதும் சிவப்பான, அழகான பெண் வேண்டும் என்று கேட்பதைப் படித்ததால் தான் எழுதினேன். மற்றபடி தற்காலப் பெண்களின் மனப்போக்கும் புரிந்து தான் இருக்கிறது. இரண்டுமே சரியல்ல! :(

  ReplyDelete
 10. வாங்க வைகோ சார், வங்கியில் இருந்து எனக்கு எஸ்.எம்.எஸ். ஏதும் இதுவரை வரவில்லை. வங்கிக்குச் சென்று சரிபார்த்துவிட்டுச் சொல்லுகிறேன். இப்போது வீட்டில் வேலைகள் நடைபெறுவதால் உடனடியாகப் போக முடியவில்லை. மிகவும் மன்னிக்கவும்.

  ReplyDelete
 11. வாங்க காசிராஜலிங்கம், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 12. அப்பாதுரை! புரியலையே? அல்லது என் குழப்பமான மனோநிலையில் புரிந்து கொள்ள முடியலை! :)

  ReplyDelete
 13. பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுவதே கொடுமை... இதில் சிறுமிகள் குழந்தைகள் வேறு... இப்போதெல்லாம் அடிக்கடி செய்தித்தாள்களிலும் தொலைகாட்சி செய்திகளிலும் காணமுடிகிறது என்பது வேதனையான உண்மை....

  ReplyDelete
 14. அம்மா, நான் உங்க பக்கம்!

  ReplyDelete
 15. வாங்க ஸ்.பை. வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 16. வாங்க கவிநயா, தொலைபேசியில் பார்வதி இந்தப் பதிவைப் பாராட்டினாலும் பதிவில் கருத்தைப் பகிரவில்லை. ஆக இந்தப் பதிவில் கருத்துச் சொன்ன ஒரே பெண்மணி நீங்கள் தான்! :)))) ஹிஹிஹிஹி! மற்றவர்களுக்கு நேரம் இல்லை னு நினைக்கிறேன். :)

  ReplyDelete
 17. இந்தக்கால கொடுமைகள் தினம் வளர்ந்து கொண்டு போவது கவலை அளிக்கிறது.
  செய்திதாளிலும், தொலைக்காட்சியிலும் அடிக்கடி சொல்வதால் இந்த நிலை தொடர்கிறதோ! என்று எண்ண வைக்கிறது. கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இவை குறையும் என்று நினைக்கிறேன்.
  படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பாரபட்சமே இல்லாமல் கொடுமை செய்கிறார்கள். யாரை நம்புவது?

  சமூகமும், குழந்தை வளர்ப்பு முறைகளும் மாறி வருவதும் கொடுமைகளுக்கு காரணமாக ஆகி வருகிறது.

  அழகை பார்க்காமல் குணத்தை எப்படிப் பார்ப்பது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றாலும், திருமணத்திற்கு முன் அக்கம் பக்கம் நன்கு விசாரித்து கொடுத்தாலும் சிலர் படும் துனபம் சொல்லி மாளது.

  நல்ல மணமகனா? நல்ல மணமகளா? அது இறைவனின் அருள் என்றாகி விட்டது. இன்றைய நிலை.

  ReplyDelete
 18. எனக்கும் உங்களைப்போல இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றிய மிகப்பெரிய ஆதங்கம் உண்டு. கையாலாகாமல் பார்த்துக்கொண்டு உட்காருவதைத் தவிர வேறு வழியில்லையோ என்று தோன்றுகிறது.
  எங்கள் வீட்டிற்கு ஒரு பெண் ஏழாம் வகுப்பு படிக்கும் பெண் வந்தாள். ரொம்ப நன்றாகப்பாடுவாள் என்றார் அந்தப் பெண்ணின் அம்மா. என்ன பாட்டுத் தெரியுமா? 'நீ இல்லாமால் இந்த வாழ்வு ஒரு வாழ்வா?' என்று பொருள் படும் கன்னடப் பாடல். எத்தனை புரந்தரதாசர் பாடல்கள் இருக்கின்றன? அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இந்தப் பாடல்? தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிக்காகவே பாடல்கள் சொல்லித் தரும் நிறுவனங்கள் இருக்கின்றனவாம். ஆயிரம் ஆயிரமாக பணத்தைக் கொட்டி இந்த நிறுவனங்களில் சேர்ந்து இதுமாதிரியான பாடல்கள் கற்றுக்கொள்ளுகின்றன இந்தக் காலத்துக் பெண் குழந்தைகள் என்ன செய்ய?

  அந்தக்காலத்தில் இருந்த யுனிபார்ம் பாவாடை சட்டை. 7ஆம் வகுப்பு வந்துவிட்டால் கட்டாயம் பாவாடை தாவணி. இப்போது இதையெல்லாம் சொன்னால் நம்மை பட்டிக்காடு பெண்களே பெண்கள் சுதந்திரத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று ஏசுகிறார்கள், என்ன செய்ய?

  ReplyDelete