எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 19, 2015

நரசிம்மா எழுதிய "பஞ்ச நாராயணக் கோட்டம்!"

"காலச்சக்கரம்" நரசிம்மாவின் "பஞ்சநாராயணக்கோட்டம்" புத்தம்புதிய வெளியீடு! இன்னும் அதிகம் விளம்பரம் ஆகவில்லை. இப்போச் சென்னை வந்ததில் தம்பி வாசக சாலையில் எடுத்து வந்து கொடுத்ததன் மூலம் படிக்கக் கிடைத்தது. இதுவும் ஒரு சரித்திர நாவலே. ஹொய்சாளர்கள் குறித்தது. அதிலும் முற்றிலும் புதிய தகவல்களைக்கொடுக்கிறார் நரசிம்மா.  கர்நாடகப் பிரதேசத்தில் ஹொய்சாளர்கள் ஆட்சிசெய்தபோது நடந்ததாகச் சொல்கிறார். அந்தக் காலகட்டதில் ஶ்ரீராமாநுஜரும் வாழ்ந்திருக்கிறார். திரு அரங்கத்தில் இருந்த ராமாநுஜரைக் குலோத்துங்கன் தொந்திரவு பொறுக்க முடியாமல் அவரின் சீடர்கள் அவனுக்குத் தெரியாமல்  கர்நாடகம் அனுப்பி வைக்கின்றனர். இந்த நாவலின் நிகழ்வுகள் கிட்டத்தட்ட அந்தச் சமயங்களில் நடப்பவையே! அப்போது ஹொய்சாள மன்னனாக இருந்தவன் பிட்டி தேவன் என்னும் சமண மதத்தைச் சேர்ந்த மன்னன். (இவனுடைய பெயர் பின்னாட்களில் இவன் வைணவத்துக்கு மாறியதும், ஶ்ரீராமாநுஜரால் விஷ்ணுவர்த்தனன் என மாற்றப்பட்டது. இவன் அரசாண்டபோது நிகழ்ந்த சம்பவங்களே இந்தக் கதையில் சொல்லப்படுகின்றன.

முக்கியமாக இந்த அரசன் கர்நாடகாவில் எழுப்பியதாகச் சொல்லப்படும் ஐந்து விஷ்ணு கோயில்களுமே இங்கே பஞ்ச நாராயணக் கோட்டமாகச் சொல்லப்படுகிறது. அவை தொண்டனூரில் நம்பி நாராயணர் கோயில் கொண்டிருக்கும் நம்பி நாராயணக் கோட்டம், தலக்காடில் கோயில் கொண்டிருக்கும் கீர்த்தி நாராயணன், மேல் கோட்டையில் கோயில் கொண்டிருக்கும் செல்வப் பிள்ளையான செல்வ நாராயணன், வேளாபுரி என அப்போது அழைக்கப்பட்ட பேலூரில் உள்ள விஜய நாராயணன், மற்றும் வட கர்நாடகாவின் கதக் நகரில் கட்டப்பட்ட வீர நாராயணன் ஆகிய ஐந்து நாராயணர் கோயிலும் குறித்து இங்கே சொல்லப்படுகிறதுலொவ்வொரு கோயிலும் கட்டும்போது நடந்த நிகழ்வுகள்! அவற்றில் பங்கு பெற்றவர்கள்! அவற்றிற்குப் பின்னர் தான் எத்தனை எத்தனை உணர்ச்சிகரமான சம்பவங்கள்! எத்தனை சதிகள்! எத்தனை பேரின்  வாழ்வு ஒன்றோடு ஒன்று எப்படி எல்லாம் பின்னிப் பிணைந்து இருக்கிறது! எவ்வளவு மர்மங்கள்? இடையில் வந்து புகுந்து கொள்ளும் பிரம்ம ராக்ஷஸியின் பழிவாங்குதல்! மன்னனின் முதல் மனைவிக்குப் பிறந்த ஆண் குழந்தையைக் கோரமாகப் பழிவாங்கி ஒன்றுமில்லாமல் செய்யும் இளைய  ராணியின் கொடூரம்! இவ்வளவுக்கும் பின்னர் கோயில்கள் எழும்பும் விதம். ஏற்படுத்தப்பட்ட கோயில்களில் வழிபாடுகள் நடத்தவிடாமல் செய்யப்பட்ட சதிவலை! என ஒவ்வொன்றையும் விவரிக்கிறார் ஆசிரியர். கடைசி வரை விறுவிறுப்பாகவே போகிறது.

மனதை உறுத்தும் பகுதி என்னவெனில் கதை ஆரம்பிக்கும்முன்னரே முன்னுரையாகச் சொல்லப்பட்ட தன்னுரையில் காலச்சக்கரம் நரசிம்மா, தேவையில்லாமல் பிரபலமான சரித்திர நாவலாசிரியரை மறைமுகமாகச் சாடி இருக்கிறார். "ச்ருங்கார ரசத்தில் தமிழ்ச் சொற்களைத் தோய்த்தெடுத்து, சரித்திர சம்பவங்கள் சிலவற்றை அவற்றுடன் கோர்த்து நான் ஒரு சரித்திர நாவலாசிரியர் என்று கூறிக் கொள்பவர்களின் பட்டியலில் சேர விரும்பவில்லை." என்கிறார். அந்தக் காலத்துக்கு அது தேவை! இப்போதைய காலத்துக்கு இது சரி!ஆகவே இந்த ஒப்புவமை எதுக்கு? அதுவும் உயிருடன் இல்லாத ஒருவரிடம்? இது நிச்சயம் தவிர்க்கவேண்டிய ஒன்று. அடுத்துக் கதையின் நிகழ்வுகளிலும் சில நெருடல்கள். அவற்றில் முக்கியமானது :


 சிற்பி ஜெக்கன்னா சிற்ப வேலை தொடங்குகையில் முதல் முதல் விநாயகரைச் சிலையாக வடிக்கத் தான் கல் கொண்டு வருகிறார். ஆனால் வைணவரான தாசரதி விநாயகரை வடிக்கக் கூடாது என்கிறார். இது கொஞ்சம் மனதை நெருடுகிறது. இதைத் தவிர்த்திருந்தால் கதையின் சுவாரசியம் குறைந்திருக்காது. அதே போல் சிவாலயங்களில் விஷ்ணுவை இழிவு செய்யும் வகையில் சிற்பங்கள் இருக்கும் என்றும் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்கிறார். இதுவும் தேவை இல்லை. ஏனெனில் நரசிம்மா சிவன் கோயிலுக்குப் போனாரோ போகவே இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாங்க நிறைய  சிவன் கோயில்களுக்குச் செல்கிறோமே. எல்லா சிவன் கோயிலிலும் சிவனுக்குப் பின்னர் அவரோடு இணைந்தவர் விஷ்ணு என்று சொல்லும்படி விஷ்ணுவின் சிற்பம் தான் இருக்கும் (கோஷ்டத்தில்) அதை இழிவு என எப்படிச் சொல்ல முடியும்? அதே போல் எல்லா சிவன் கோயிலிலும் நுழையும்போது த்வாரபாலகர்கள் இருக்கும் வாயிலில் மேலே பார்த்தீர்கள் ஆனால் மகாலக்ஷ்மி இருப்பாள். மகாலக்ஷ்மிக்கு முக்கியத்துவம் கொடுக்காத சிவன் கோயிலே இல்லை. இதையும் அவர் தவிர்த்திருக்கலாம். வைணவர்கள் மறந்தும் புறம் தொழமாட்டார்கள் என்றாலும் அவர்கள் கதைகளிலோ, புராணங்களிலோ விஷ்ணுவோடு சேர்ந்து சங்கரன் எனப்படும் ஈசனும் இடம் பெற்றே தீருவார். அவங்க ரெண்டு பேரும் நான் உயர்வா, நீ உயர்வா எனச் சண்டை போட்டுக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. மனிதர்களான நாம் தான் போட்டுக்கிறோம். :)

 இம்மாதிரி ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் கதை நன்றாகவே இருக்கிறது. பேலூர், ஹளேபேடு, ஆகிய இடங்கள் சென்று தரிசிக்காததால் அந்தக் கோயில்களின் அருமை, பெருமை புரியவில்லை தான். அங்குள்ள சிற்பங்களைக் குறித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பெயர் பெற்ற சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில்கள் என்ற அளவில் தெரியும். ருசிகரமாகக் கதை சொல்லும் திறமை கைவரப் பெற்றிருக்கும் திரு நரசிம்மா இம்மாதிரி ஒன்றிரண்டு குறைகளைத் திருத்திக் கொண்டால் நல்லது. மொத்தத்தில் பஞ்ச நாராயணக் கோட்டம் அருமையான நாவல்

கிடைக்கும் இடம்

வானதி பதிப்பகம்,
சென்னை 17.
விலை 300ரூ


இதைச் சென்னையிலேயே அங்கே சென்றபோது சுரதா.காம் மூலமாக எழுதி வைத்துவிட்டேன். என்றாலும் ஒரு சில எழுத்துக்கள் அதிலே வராது. முக்கியமாக "ஹ" "ஷ" "ஸ" போன்றவை! ஆகவே திருத்த வேண்டியதைத் திருத்திச் சேர்க்கவேண்டியதைச் சேர்த்து இன்று வெளியிடுகிறேன்.  நிறையப் புத்தகங்கள் படித்தேன்.  

25 comments:

  1. படிக்க வேண்டும். படிச்சுடுவோம்..

    ReplyDelete
    Replies
    1. விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை! :)

      Delete
  2. சிறப்பான நூல் விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாசகசாலையில் கிடைச்சால் வாங்கிப் படிங்க சுரேஷ்! நிறையத் தகவல்கள்!

      Delete
  3. இம்மாதிரி சரித்திரப் பின்னணிகளைக் கொண்ட கதை பின்னுவது எனக்கு உடன் பாடில்லை. வாசிப்பவருக்கு எது சரித்திர நிகழ்வு எது கற்பனை என்னும் வித்தியாசம் புலப்படாமல் சரித்திரததையே தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் பல சரித்திர நிகழ்வுகள் தவறாக சித்தரிக்கப்படும் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எது நிஜம், எது கற்பனை என்பது நன்கு புரியும்! எனக்குச் சரித்திரத்தில் ஆர்வம் உண்டு. இதற்கென ஆய்வாளர்கள் ஆய்வுகள் செய்து ஆதாரங்களுடன் எழுதி உள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டே சரித்திரக் கதைகள் எழுதப்படுகின்றன.

      Delete
  4. படிக்கத் தோன்றினாலும் சாண்டில்யன் மாதிரியெல்லாம் நரசிம்மனால் எழுதவே முடியாதென்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சாண்டில்யனின் எழுத்துத் திறமை வேறு! நரசிம்மாவின் திறமை வேறு. இரண்டும் எதிர் எதிர் துருவங்கள். ஆனால் நரசிம்மாவும் ஆய்வுகள் செய்து தான் எழுதுகிறார். :)

      Delete
  5. சரியாச் சொன்னீங்க ஜிம் எம் பி சார். சரித்திரத்துல சாம்பார் மசாலா சேர்த்ததுனால பாருங்க இப்ப.. அவதாரம்ன்றோம்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கண்ணோட்டம்!

      Delete
  6. //காலச்சக்கரம் நரசிம்மா, தேவையில்லாமல் பிரபலமான சரித்திர நாவலாசிரியரை மறைமுகமாகச் சாடி இருக்கிறார்.//

    முன்னோடிகளைச் சாடினால், சுலபமாக பிறரால் கவனிக்கப்படுவோம் என்பது ஒரு வியாபார தந்திரம்.

    அதிக விலையுள்ள இந்த மாதிரி நூல்களை லெண்டிங் லைப்ரரிகளில் வாங்கிப் படிப்பது நல்ல ஏற்பாடு. ஸ்ரீராமிற்கும் பலதடவைகள் இதைச் சொல்லியிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தெரியலை! இனிமேல் பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்னும் அளவுக்கு நரசிம்மா இல்லை. ஏற்கெனவே பிரபலம் தானே! அவரோட கருத்து அப்படியே இருந்திருக்கலாம். அது தன்னையும் அறியாமல் வெளிப்பட்டிருக்கிறது என எண்ணுகிறேன். பல புத்தகங்களையும் என் தம்பி லென்டிங் லைப்ரரியில் தான் வாங்கி வருகிறார்.

      Delete
    2. //அவரோட கருத்து அப்படியே இருந்திருக்கலாம். அது தன்னையும் அறியாமல் வெளிப்பட்டிருக்கிறது என எண்ணுகிறேன்.//

      அது என்ன தன்னையும் அறியாமல்?.. கருத்தை வெளிப்படுத்தத் தானே எழுதுகிறார்?,, அப்படிப்பார்த்தால் அதிலேதும் குறைசொல்வதற்கில்லை. இதுவே சாண்டில்யன் என்கிற ஒரு எழுத்தாளரைப் பற்றிய விமரிசனக் கட்டுரை என்றால் ஓ.கே. தன் புத்தகத்தின் முன்னுரையில் என்று வரும் பொழுது தான் 'அவரைப் போல் நானில்லை' என்பது துண்டாகத் தெரிந்து இடிக்கிறது.

      தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இன்னொருவர் தேவையில்லாமலேயே தேவையாக இருப்பது தான் இங்கு விஷயம்.

      உங்களுக்கு அந்தக் கருத்து இல்லையாதலால், 'தன்னை அறியாமல்' என்று சொல்கிறீர்கள் போலிருக்கு.

      'சங்கதாரா'விற்கு கல்கி. இதற்கு சாண்டில்யன். அது சரி, சங்கதாராவா, ஷங்கதாரவா?

      ஷங்கதார -- பெயர் உபயம், சாட்சாத் காலச்சக்ரம் நரசிம்மாவே தான்!

      Delete
    3. //ஏற்கெனவே பிரபலம் தானே! //

      அப்போ இனிமே 'காலச்சக்கரம்' நரசிம்மா தேவையில்லை. நரசிம்மா என்று அழைத்தாலே போதுமே!

      'பொன்னியின் செல்வன்' கல்கி, 'யவனராணி' சாண்டில்யன் என்று யாரும் சொல்வதில்லையே! அதைப் போல.

      Delete
    4. //'சங்கதாரா'விற்கு கல்கி. இதற்கு சாண்டில்யன். அது சரி, சங்கதாராவா, ஷங்கதாரவா?

      (ஷ)சங்கதாராவிற்குப் பொன்னியின் செல்வன் தான் அடிப்படை! அதை அவரே மறுக்கவில்லை. அவர் கோணத்தில் ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார். நமக்குத் தான் குந்தவையும், வந்தியத்தேவனும், அருள்மொழித்தேவனும் ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் (பீடத்தில்?) அமர்ந்திருப்பதால் அவர்களைக் கீழே இறக்கிப் பார்க்கத் தோன்றவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் சிறப்பான எழுத்து என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதிர்ச்சிகள் அளித்த நாவல் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது!

      //ஷங்கதார -- பெயர் உபயம், சாட்சாத் காலச்சக்ரம் நரசிம்மாவே தான்!
      நரசிம்மா அங்கெல்லாம் சென்று பார்த்திருக்கிறார். ஆகவே சங்கதாராவோ, ஷங்கதாராவோ அப்படி ஒன்று இருந்திருக்கலாம். :))))

      Delete
    5. //அப்போ இனிமே 'காலச்சக்கரம்' நரசிம்மா தேவையில்லை. நரசிம்மா என்று அழைத்தாலே போதுமே!//

      இது நம்மைப் போன்ற வாசகர்கள் கொடுத்த அடைமொழி தானே! அவராகப் போட்டுக்கலையே! :))))

      //'பொன்னியின் செல்வன்' கல்கி, 'யவனராணி' சாண்டில்யன் என்று யாரும் சொல்வதில்லையே! அதைப் போல.//

      சரித்திர நாவல்களைப் பொறுத்தமட்டில் எனக்கு யார் எழுதினாலும் பிடிக்கும். சரித்திரத்தில் அவ்வளவு ருசி. "பாலகுமாரன்" எழுதிய "உடையார்" தான் படிக்கவில்லை. அதன் விமரிசனங்களைப் படித்ததிலேயே அதைப் படிக்கும் ஆவல் இல்லாமல் போய் விட்டது. அந்த விஷயத்தில் நரசிம்மா இந்தக்காலத்திற்கு ஏற்றாற்போல் சுருக்கமாகவும் தெளிவாகவும், அதே சமயம் விபரங்களையும் நன்றாகக் கொடுத்து எழுதுகிறார்.

      Delete
    6. நரசிம்மாவுக்கு நான் எழுப்பின குற்றச்சாட்டுக்களுக்கு விரைவில் பதில் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார். முதலில் அந்த மடலைப் பகிரலாமா வேண்டாமா என யோசித்தேன். ஆனால் அவரைப் பற்றிய தவறான கண்ணோட்டத்துக்கு இடம் அளிக்கும் விதமாக விமரிசனம் எழுதி இருக்கிறேன் என்பதால் அதை வெளியிடுவது தான் சரி எனத் தோன்றுகிறது. கீழே அதை வெளியிடுகிறேன்.

      Delete
    7. Madam Geetha Sambasivam,

      I was delighted to read Your reviews. Since I do not have the Tamil font facility in my system, as I am working as Chief News Editor in The Hindu, I request You to bear with me for some time. I will definitely reply to all the reviews soon in Tamil, not in chaste Chandilyan Tamil but in my own Tamil.. Thanks for promply reviewing Pancha Narayana Kottam. But let me tell You, Madam. You yourself have said in your reviews of Kalachakaram and Kuberavana Kaaval, that I have written about the essence of Bharath. I have written about Shiva and Shakthi cult. So your charge in the review of PNK that I should have avoided some anti-Saiva remarks may not hold good. Also I want to explain about the Munnurai. I was not taunting Sandilyan. I just said, I cannot communicate with the present generation youth in that Tamil and if you feel You cannot call me historic writer since I do not write in Ilakkiya Tamil do not call me so. I have great regards for Sandilyan and his son Sadagopan is my personal friend. In fact he is a far relative of me. How could I make fun of him.

      Will soon write to You. Thanks for all the support.
      Regards
      Kalachakaram Narasimma @ T.A.Narasimhan
      98417 61552

      Delete
    8. திரு. நரசிம்மாவுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்.

      பொதுவாக எந்த தமிழ் எழுத்தாளரும் தன் சம்பந்தப்பட்டதாக இணையத்தில் எழுதியிருக்கும் எந்த கருத்திற்கும் வாசித்து பொறுமையாக, அதுவும் பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொண்டு பதில் அளித்து நான் அறிந்ததில்லை. இது . எனக்குத் தெரிந்து இரண்டாவது முறை. முதலாவது 'எங்கள் பிலாக்'கில் 'பதிலளித்திருந்தது; 'சங்கதாரா'விற்கு ஸ்ரீராம் எழுதியிருந்த விமரிசனத்திற்கு அப்பொழுது பதிலளித்திருந்தார்.

      இந்த விஷயத்தில் புதுமையான சரித்திரம் படைத்திருக்கிறீர்கள், நண்பரே! இணைய எழுத்துக்களுடனான உங்கள் தொடர்பும், ஆர்வமும், மதிப்பும் நிச்சயம் உங்கள் மேற்கொண்டான வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும்.

      மீண்டும் வாழ்த்துக்கள், திரு. நரசிம்மா!

      மிக்க அன்புடன்,
      ஜீவி

      Delete
  7. எல்லா சிவன் கோயிலிலும் சிவனுக்குப் பின்னர் அவரோடு இணைந்தவர் விஷ்ணு என்று சொல்லும்படி விஷ்ணுவின் சிற்பம் தான் இருக்கும் (கோஷ்டத்தில்) அதை இழிவு என எப்படிச் சொல்ல முடியும்? அதே போல் எல்லா சிவன் கோயிலிலும் நுழையும்போது த்வாரபாலகர்கள் இருக்கும் வாயிலில் மேலே பார்த்தீர்கள் ஆனால் மகாலக்ஷ்மி இருப்பாள். மகாலக்ஷ்மிக்கு முக்கியத்துவம் கொடுக்காத சிவன் கோயிலே இல்லை. //

    உண்மை. ஆசிரியர் ஏன் இவ்வாறு குறிப்பிட்டார் என தெரியவில்லை. ஒருவேளை, கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் என ஒரு கதா பாத்திரம் கொண்டு வந்தது போல் கொண்டு வர எண்ணி இருந்தாரோ என்னவோ. ஆனால் காலம் மாறி விட்டது. இப்போது சைவ வைணவ ஒற்றுமை எங்கும் உள்ளது. புது புது காலனிகளில் கோவில்களில் இந்துக்கள் அனைவரும் இணைந்து தான் வழிபடுகிறார்கள்.
    ஆகவே, ஆசிரியர் தனது அடுத்த பதிப்பில் இவற்றை நீக்க வேண்டுமாய் விரும்புகிறேன்.
    உங்கள் பதிவு மூலம் சிறந்த ஒரு பப்ளிசிட்டி கொடுத்து உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் விளம்பரம் தான் கொடுத்தேனா? தெரியலை திரு பரமசிவம். ஆனால் திரு நரசிம்மா நொந்து நூலாகி விட்டார் என்பது அவர் பாலகணேஷுக்கு அளித்திருக்கும் பதிலில் இருந்து தெரிகிறது. போகப் போகச் சரியாகும். இதுவும் கடந்து போகும்! :)

      Delete
    2. Thiru Paramasivam, Narasimma's reply to your comment!

      Madam Geetha,
      I am not able to post my replies in your blog. Hence I am mailing it to you. Kindly post the following reply under the one commented by one Mr. Paramasivam...who has lastly said about Saiva-Vainava otrumai.
      பரமசிவம் அய்யா,
      அடியேன் எழுதிய நாவல், சைவ, வைணவ மற்றும் சமண பேதங்களால் நிகழ்ந்த அரசியல் குழப்பங்களை பற்றியது. தாங்கள் எனது நாவலை படிக்காமல் அதை நீக்கு இதை நீக்கு என்று கூறுவது பேதமைத்தனம். உங்களுக்காக ராமானுஜரும், குலோத்துங்கனும், முகம்மது கஜிநியும் சரவண பவனில் காப்பி அருந்தினார்கள் என்று நான் எழுதினால் கூட, பில் யார் செலுத்தினார்கள் என்று தகராறு மூளும். காரணம், நாவல் இட்டு, ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாதப்போர் புரிந்தனர். நாவல் செடியை முன் வைத்து வாதம் நடத்தி, யார் வாதம் புரியும் போது நாவல் சேடி வாடுகிறதோ, அவர்கள் தோல்வி அடைந்திதாக தீர்மானிதனர். நா வன்மையை நிர்ணாயிப்ப்தால், நா வல் மரம் என்று பெயர் பெற்றது.
      திருமங்கை ஆழ்வாரும், திருஞான சம்பந்தரும், சைவம் பெரிதா, வைணவம் பெரிதா என்று 18 நாள் வாதம் புரிந்துள்ளனர். இன்று தி மு க, அ தி மு க, போன்றுதான் அன்று சைவமும் வைணவமும் சண்டை போட்டனர். ஷன்மத ஒற்றுமை எல்லாம் ஏ பி நாகராஜன் புராண படம் எடுக்க தொடங்கிய பிறகே.......
      Kindly read my novel, before posting comments. Nowhere I have called any sect izhivu. When you write about Ramayana, do you mean to say, Ravana worshipped shiva and Rama was Vishnu's incarnation and since Siva and Vishnu are same, certain portions of Ramayana should be removed. Ridiculous...
      Kalachakaram Narasimma

      Delete
  8. //அவராகப் போட்டுக்கலையே! :)))//

    Kalachakaram Narasimma

    ReplyDelete
  9. அக்கா நீங்க உண்மையாலும் சிங்கம் தான் :)
    கருத்துக்களை சொன்னதுக்கு சொன்னேன்
    .பொறுமையாக பதில் அளிக்கும் விதம் பார்க்கும்போது நரசிம்மா அவர்கள் மீது மதிப்பு கூடுது . //குலோத்துங்கனும், முகம்மது கஜிநியும் சரவண பவனில் காப்பி அருந்தினார்கள் என்று நான் எழுதினால் கூட, பில் யார் செலுத்தினார்கள் என்று தகராறு மூளும்.//

    ஹாஹ்ஹா :) உண்மையில் சிரித்தேன் .

    //

    ReplyDelete
    Replies
    1. நன்னி ஏஞ்சல். கடமை அழைச்சாச்சு. இனி பிச்சைக்காரனுக்குத் தான்! :)

      Delete