எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 10, 2015

தீபாவளி வந்துட்டுச் சட்டுனு போயாச்சு! :)


ஶ்ரீராமர் வழக்கம் போல் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கார் கீழே தீபாவளிக்கு வைக்க வேண்டியவற்றை வைத்திருக்கிறேன். பலகையில் எண்ணெய், கங்கை நீர், சீயக்காய் கரைச்சது, மஞ்சள் தூள், வெற்றிலை, பாக்கு, பழம், தீபாவளி மருந்து ஆகியன. இடப்பக்கம் வைத்திருக்கும் புடைவை கோவைப் பருத்திச்சேலை, போச்சம்பள்ளி டிசைன்! வலப்பக்கம் வைத்திருக்கும் க்ரே கலர் புடைவை கோரா பட்டு/சில்க் காட்டன்(?), பக்கத்தில் ரங்க்ஸுக்கு வாங்கிய காதி சட்டை(ஆயத்த ஆடை), வேஷ்டிகள், துண்டுகள்.


டப்பாவில் ஒன்றில் மாவு லாடு, இன்னொன்றில் முள்ளுத் தேன்குழல், சின்ன டப்பாவில் கொஞ்சம் போல் ரிப்பன் பக்கோடா!

 நிவேதனம் செய்யத் திறந்து வைத்திருக்கும் டப்பாக்கள். :)

புடைவை ஒரு கிட்டப்பார்வையில்! இது தான் (சில்க் காட்டன்) கோரா பட்டுக் கைத்தறிப் புடைவை. மேலே காணப்படும் அட்டையில் புடைவையின் நீள, அகலங்கள், ரவிக்கைத்துணி இணைக்கப்பட்டிருக்கும் விஷயம், நெசவுக்கு எத்தனை நாட்கள் ஆனது, எத்தனை நபர்களால் நெய்யப்பட்டது, முக்கிய நெசவாளர் பெயர் ஆகியன குறிப்பிடப் பட்டிருக்கும் சீட்டு! புடைவையின் விலை. இதற்கான தள்ளுபடி! ஆகியனவும் இருக்கின்றன. நெசவாளருக்கு இந்தப் புடைவையின் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியனவும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்! :)  இந்தப் புடைவையை இரண்டு நாட்கள் நெய்திருக்கின்றனர். புடைவையின் மேலே இருக்கும் ரவிக்கைத் துணி நான் என்னிடம் இருப்பவையிலிருந்து வைத்தது. புடைவையில் கிழிக்கவில்லை. கட்டிக்கும்போது தான் முந்தானைப்பகுதியில் ரவிக்கைத் துணி இணைத்திருப்பதால் கிழிக்கும்படி ஆகிவிட்டது.  வெறும் புடைவை வைக்கக் கூடாது என்பதால் என்னிடம் இருக்கும் ஒரு ரவிக்கைத் துணியை வைத்திருக்கிறேன்.


இது இன்னொரு புடைவை. இதுவும் கைத்தறிப் புடைவை தான். நெசவாளரின் படம் சீட்டில் மிக லேசாகத் தெரிகிறது. இதை நெய்யவும் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. கோ ஆப்டெக்ஸில் தான் பட்டு நம்பிக்கையுடன் வாங்கலாம். ஆனால் பட்டுப் புடைவை நிறைய இருப்பதால் பட்டு இப்போதெல்லாம் அதிகம் எடுப்பதில்லை.  வருஷத்திற்கு ஒரு தரம் நடைபெறும் கண்காட்சியில் அனைத்து மாநிலங்களின் கைத்தறிகளும் கிடைக்கும். சென்னை எழும்பூரில் அப்படி நடைபெற்ற ஒரு கைத்தறிக் கண்காட்சியில் வாங்கிய சேலைகள் மிக அருமையாக இருந்தன. கைத்தறிப் புடைவைகள்  கட்டப் பிடிப்பவர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு!   ரொம்ப நாட்கள் கழிச்சு இன்னிக்கு சூரிய பகவானும் தீபாவளிக் கொண்டாட்டங்களைப் பார்க்க வந்திருக்கார். ஆனால் வெடிச் சப்தத்துக்குப் பயந்து கொண்டு மேகப் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டுப் பாதி விலக்கிக் கொண்டு பார்க்கிறார். இதுவும் ஒரு அற்புதமான காட்சி தான்! வெடிச் சப்தம் அதிகமாய் இருப்பதால் தொலைபேச முடியவில்லை. பட்சிகள் சப்தமின்றி மரங்களில் போய் அடைந்து கொண்டு விட்டன! :(

15 comments:

 1. ஆமாம் இல்லை! நிமிஷமா காலம் போறது. விசேஷமெல்லாம் கல கலன்னு வீடு நிறைய ஆட்களும் சந்தோஷமும் பேச்சும் சத்தமும் குழந்தைகளும் அதன் அழகே தனி தான் இல்லியா? என்ன ரெண்டு பேருக்கு ன்னு சில சமயம் தோன்றது:) சம்புடம் உள்ள என்ன ? உக்காரையா ? வரகு தேன்குழலா? . தட்டுல ஒன்னு இஞ்சி மருந்தாத்தான் இருக்கணும் மத்தது என்ன ?நான் சாப்பிட்டுட்டு சம்படம் மூடியாச்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ரெண்டு பேருக்குன்னா அலுப்பும் வந்துடுது! :( சம்புடம் உள்ளே ரிப்பன் பக்கோடா. இங்கே மாமியார் வீட்டில் உக்காரையே பழக்கம் இல்லை! வரகு தேன்குழல் நடு சம்புடம். பலகையின் மேல் கிண்ணத்தில் இஞ்சி மருந்து! :) ஸ்பூன் போட்டு வைச்சிருக்கேனே!

   Delete
 2. தீபாவளியின் சத்தங்கள் எங்கள் ஏரியாவில் காலை இல்லை. இப்போதுதான் தொடங்குகின்றன. நான் கூட கதர்ச் சட்டை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். மிஸ் ஆகிவிட்டது.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே சத்தம் இன்னமும் ஓயவில்லை! அதுக்கு நடுவே தான் வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க வேண்டி இருக்கு! வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் ஒரு மாதிரியான வானம்! :) காதியில் இன்னமும் விற்பனை உண்டே! அதுவும் சென்னை, ஜார்ஜ் டவுன், காதி எனில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கடை! நிறையக் கிடைக்கும். முன்னெல்லாம் சாயந்திரமாய்க் கொண்டைக்கடலைச் சுண்டல், சுக்கு மல்லிக் காஃபி விற்பாங்க. இப்போ இங்கே திருச்சி சிந்தாமணியில் விற்கிறதாப் பையர் சொன்னார். போய்ப் பார்க்கலை! ஜிடி, காதியில் சாப்பிட்டிருக்கேன் :)

   Delete
 3. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி டிடி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

   Delete
 4. 6 மணிதானே ஆச்சு அதற்க்குள் முடிந்து விட்டதா...... .தங்களுக்கு தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்

  Reply

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெஹெ, முடிஞ்சுடுச்சு! :)

   Delete
 5. Replies
  1. மௌலி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

   Delete
 6. மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நண்றி அம்மா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். உங்கள் ஆசிகளுக்கு வந்தனம்.

   Delete
 7. இன்றைக்கு தான் இங்கே தீபாவளி. வெடிச்சத்தத்துடன் கழிந்து கொண்டிருக்கிறது தீபாவளி.....

  உங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், அங்கே இன்னமும் தீபாவளிக் கோலாகலம் மறைந்திருக்காது. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். அடுத்த வருடம் உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் தீபாவளி கொண்டாடப்பிரார்த்தனைகள்.

   Delete
 8. நுணுக்கமான விவரிப்புக்கள்! புடவை அழகாய் இருக்கிறது! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete