எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 26, 2017

சித்தப்பாவுக்கு ஜெயமோகன் அளித்த பரிசு! :(

அசோகமித்திரன் க்கான பட முடிவு


சித்தப்பாவின் எதிர்பாரா மரணம் எங்கள் குடும்பத்திற்கு அளித்த அதிர்ச்சியைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது திருவாளர் ஜெயமோகன் அவர்களின் எஸ்.பி.எஸ். என்னும் வானொலிக்கு அவர் அளித்த பேட்டி! அதைப் பற்றி முழு விபரமும் காலையில் தெரியவரவில்லை. ஆனால் சித்தப்பாவின் கடைசி மகனும் ஹிந்துவில் பணி புரிபவருமான என் தம்பி திரு ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவு போட்டிருந்தார். என்ன விஷயம் என்று தெரியாத குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். இப்போது சற்று முன்னர் முகநூலில் நண்பர் ஒருவர் என்னை "செல்வம் நாயகம்" என்பவரின் பதிவில் என்னைப் படித்துக் கருத்துச் சொல்ல அழைத்திருந்தார். படித்ததும் அதிர்ச்சியாகிவிட்டது.

சாவி அவர்கள் சாவியைத் தொடங்கியபோதோ அல்லது அதற்குப் பிறகோ ஒருபோதும் சித்தப்பா அங்கே வேலை செய்ததே இல்லை. அதுவும் எல்லோருக்கும் தேநீர் வாங்கி வரும் பணியாளராக வேலை செய்ததே இல்லை! இது அப்பட்டமான பொய்! ஏற்கெனவே ஜெயமோகன் சித்தப்பாவைப் பற்றிய ஒரு பதிவில் உண்மையில்லாத சில கருத்துகள் இருந்தன. அவற்றிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்துவிட்டேன். முதல் காரணம் ஜெயமோகனின் பதிவில் என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. இரண்டாவது காரணம் அப்போது சித்தப்பா உயிருடன் இருந்தார். 

ஆனால் இப்போது அப்படி இல்லை. ஜெயமோகன் எம்.எஸ். அம்மாவைக்  குறித்து அவதூறான பதிவு போட்டிருந்தபோதே அங்கே போய் என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தேன். அதே போல் இப்போதும் திரு ஜெயமோகனின் இந்தக் கருத்துக்கு முக்கியமாய்ச் சித்தப்பா "சாவி" அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளராக வேலை செய்தார் என்று சொல்லி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனக்குப் பத்து வயதிலிருந்து அவர் சித்தப்பாவாக இருக்கிறார். ஒருபோதும் எந்த நிலைமையிலும், எந்தச் சூழ்நிலையிலும் அவரால் இப்படி ஓர் பணியைச் செய்திருக்க முடியாது. அப்படிப்பட்ட குடும்பச் சூழ்நிலையும் அவருக்கு இல்லை. அதற்காகக் கடைநிலைப் பணியாளர்களின் வேலைகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் பணி போற்றத் தக்கதே!

சென்னை தியாகராய நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகே தாமோதர ரெட்டித் தெருவில் புராதன வீட்டில் குடியிருந்து வந்த சித்தப்பாவுக்கு வேலை இல்லை என்பது ஒரு சாதாரணக் காரணம் தான்! ஜெமினி அலுவலக வேலையை அவராகத் தான் விட்டார். யாரும் வேலையை விட்டுப் போகச் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 1967 ஆம் ஆண்டிலிருந்து என் கல்யாணம் வரை சித்தப்பாவின் வீட்டில் மாறி மாறி இருந்திருக்கிறேன். என் கல்யாணத்தை ஏற்பாடு செய்ததே அவரும் என் சித்தியும் தான். எங்கள் குடும்பத்து முக்கியமான விஷயங்கள் அவரிடமும் சித்தியிடமும் சொல்லிக் கலந்து ஆலோசித்தே எல்லோரும் முடிவெடுப்போம். அறுபதுகளின் மத்தியில் "கணையாழி" பத்திரிகை அச்சகத்திலிருந்து வந்ததும் சந்தாதாரர்கள், முக்கியமானவர்கள் என அந்தப் பத்திரிகையை அனுப்பி வரும் வேலையை நான் செய்திருக்கிறேன். அவருக்கு அந்த வேலையே நாள் முழுவதும் சரியாக இருக்கும்.  அதோடு பார்க்க வருபவர்கள் வேறு அப்போதே நிறைய வருவார்கள். 

நான் மட்டுமில்லாமல் என் பெரியம்மா, சித்தி குழந்தைகள், மாமா குழந்தைகள் என்று மட்டுமில்லாமல் சித்தப்பாவின் சகோதர, சகோதரிகளின் குழந்தைகள் என எல்லோருமே அந்தத் தியாகராய நகர் வீட்டில் வளர்ந்தவர்களே! எல்லோரையும் ஆதரித்த ஓர் ஆலமரமாக அந்த வீடும் சித்தப்பா, சித்தியும் இருந்தார்கள்! இப்படிப் பட்ட ஒரு மனிதரைக் கேவலம் பிழைப்புக்காகத் தேநீர் வாங்கிக் கொடுத்து வயிற்றைக் கழுவினார் என்று சொல்லி இருப்பது ஜெயமோகனுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் அவரின் கற்பனைகளை அவர் தன் கதைகளோடு நிறுத்திக்கொள்வதே நல்லது எனத் தோன்றுகிறது. "வெண்முரசு" கற்பனைகளோடு நிறுத்திக்கொள்வது நல்லது! இப்படி எல்லாம் தேவையில்லாக் கற்பனைகள் வேண்டாம். 


http://jeyamohanav.blogspot.sg/

 முன்னர் எம்.எஸ். அம்மாவைப் பற்றிக் கூறி இருந்தது போல் இப்போது சித்தப்பாவைப் பற்றியும் வக்கிரமாகக் கூறியுள்ளார் ஜெயமோகன். இதில் அவருக்கு ஏதேனும் சந்தோஷம் கிடைக்குமானால் கிடைக்கட்டும். ஆனால் இனிமேல் "நான் அசோகமித்திரனின் ரசிகன்" என்று சொல்லிக் கொள்வதை நிறுத்திக்கொள்ளட்டும். சித்தப்பாவுக்கு   ஞானபீட விருது கொடுக்கவில்லை என்பதால் ஜெயமோகன் இப்படி ஒரு விருதைக் கொடுத்து விட்டாரோ? எங்கள் குடும்பத்தினர் அனைவரின் சார்பாகவும் எங்கள் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். :( அவரைக் குறித்து அறியாதவர்கள் இது தான் உண்மை என நினைக்க நேரலாம். :( இது அப்பட்டமான பொய்!

இன்னொரு நண்பரின் முகநூல் பதிவில் எழுத்தாளர் இந்துமதியின் காரோட்டியாக இருந்தார் என்றும் சொன்னதாக எழுதப் பட்டு இருக்கிறது. சித்தப்பாவுக்குக் கார் ஓட்டவே தெரியாது! ஆகவே அதுவும் ஒரு பொய்யே!

41 comments:

 1. விளக்கத்துக்கு நன்றி

  தேவ்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! நீங்கள் சுட்டிக்காட்டவில்லை எனில் எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! :(

   Delete
 2. தங்களது கோபம் நியாயமானதே
  எதற்கு இந்த அவசியமில்லாத வேலை.

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு இதுவே வழக்கம்!

   Delete
 3. அன்பு கீதா, நான் ஜெமோ படிப்பதில்லை. அதுவுமிந்த மாதிரி
  தரக்குறைவாக, இறந்த ஒரு பெரிய எழுத்தாளரைப் பற்றி எழுதுவது எத்தனை

  பித்தம் பிடித்த வேலை. மிக வருத்தமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நான் முதலில் படித்துக் கொண்டு தான் இருந்தேன். பின்னர் விட்டு விட்டேன். ஒரே பேத்தல்! :(

   Delete
 4. அவ்வப்போது இப்படி எதையாவது எழுதி தன்னைப் பற்றிய செய்தி வருமாறு பார்த்துக் கொள்வதில் என்ன ஆசையோ.....

  உங்களின் கோபம் நியாயமானது....

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

   Delete
 5. கண்டனங்கள். ஜெயமோகன் மகாபாரதத்தில் கற்பனை கலந்து கெடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். மகா மனிதர்களை அவதூறு சொல்வதை நிறுத்தவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நியாயமான் வார்த்தை.

   Delete
  2. ஆமாம், ஶ்ரீராம், மஹாபாரதத்தை எவ்வளவு முடியுமே அவ்வளவுக்குக் கெடுத்து வருகிறார். :(

   Delete
  3. நன்றி ஜீயெஸ்!

   Delete
 6. கடந்த இரு நாட்களாக தி இந்து (தமிழ்) நாளிதழில் நடுப்பக்கத்தில் மறைந்த அசோகமித்திரன் அவர்களைப் பற்றி ஏராளமான பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. பார்த்தீர்களோ?

  ReplyDelete
  Replies
  1. தமிழ் த கிந்து படிப்பதில்லை. ஆனால் மாமா சொல்லுவார். :)

   Delete
 7. கண்டனத்துக்கு உரியது :(

  ReplyDelete
 8. Replies
  1. ம்ம்ம்ம், என்ன சொல்றது!

   Delete
 9. இலக்கியத்தில் சுடர் விட்ட அசோகமித்திரன் அவர்களின் பின்புலத்தையும், பொதுவாக எழுத்தாளர்களுக்கு தமிழகத்தில் நிகழும் புறக்கணிப்பையும் (சமூகம் அவர்களைக் கொண்டாடுவதில்லை. கேரளாவில், எழுத்தாளர்களுக்கு மிகுந்த மரியாதையும் சமூக அந்தஸ்தும் உண்டு. கேரளாவில், எழுத்தும் அதை எழுதும் எழுத்தாளரும் கொண்டாடப்படுவார். அவர் என்ன மதம், என்ன ஜாதி என்பதெல்லாம் ஒருபோதும் முதன்மையாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, அவர்கள்தான் உண்மையாகவே 'மலையாளி' என்ற உணர்வு கொண்டவர்கள். நாம் 'தமிழன்' என்று பேசுவதோடு சரி) ஜெயமோகன் இந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால் FACTS பிறழ்ந்துவிடக்கூடாது. 'புதுமைப்பித்தன்' போன்ற கடந்த காலத்தவர்களைப் பற்றிப்பேசும்போது பலருக்கு உண்மைகள் தெரியாது. ஆனால் அசோகமித்திரன் போன்ற ஆளுமை, மிகச்சமீப காலத்தவர். அவருடைய உறவினர்கள், பழகிய நண்பர்கள், இலக்கியரீதியாக அவரை அறிந்தவர்கள் ஏராளமாக உண்டு. அதனால் ஜெயமோகன், அசோகமித்திரன் அவர்கள் பின்புலம் பற்றிச் சொல்லும்போது மிக கவனமாக இருந்திருக்கவேண்டும்.

  ஜெமினி ஸ்டூடியோவில், எழுதுவதைத் தவிர, MAN MANAGEMENTல் ஈடுபட நேர்ந்ததால்தான் வேலை பிடிக்காமல் விலக நேர்ந்தது என்று அவரது நேர்காணலில் படித்த ஞாபகம் இருக்கிறது. ஜெமோ, 'காரைத் துடைக்கச் சொன்னதால்' என்று சொல்லியிருக்கிறார். இது தவறு என்று தெரிகிறது. இதைப்போலவே மற்ற தவறுகளை நீங்கள் சுட்டிக்காண்பித்திருக்கிறீர்கள்.

  ஒன்றை அழுத்திச் சொல்லவந்து, அதற்காக உண்மையல்லாதனவைகள் பேட்டியில் சேர்ந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஜெமினி ஸ்டுடியோ வேலையைச் சித்தப்பா தானாகத் தான் விட்டார்! அதன் பின்னரும் வாசனுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. ஜெமோ சொல்லி இருப்பது எல்லாமே பொய்! எழுபதுகளில் தான் 1973 ஆம் ஆண்டில் தான் உலக எழுத்தாளர் பட்டறையில் கலந்து கொள்ள அழைப்பின் பேரில் ஐயோவா வுக்குச் சென்றார்.(அமெரிக்காவில்) அப்போது அங்கே ஏழு மாதங்கள் தங்கி இருந்தார். அதன் பின்னரும் ஒரு முறை சென்றார் என நினைக்கிறேன். ஜெயமோகன் எழுபதுகளில் தான் சித்தப்பா வறுமையில் வாடியதாகவும் அந்த நாற்பதுக்கு மேற்பட்ட வயதில் கார் ஓட்டுநராகவும், தேநீர் விநியோகம் செய்பவராகவும் இருந்து வயிற்றைக் கழுவியதாகச் சொல்லி வருகிறார். :( பலரும் எழுத்தாளர் இந்துமதியிடமே கேட்டு விட்டனர். ஜெயமோகன் சொன்னது தப்பு என்று அவரும் உறுதி செய்திருக்கிறார். சாப்பாட்டுக்கு இல்லாத வறுமை எல்லாம் இல்லை. இந்த ஒலிபரப்பில் ஓட்டு வீடு என்றும் சொல்கிறார். வீடு முன்னால் அந்தக்காலத்து கெட்டிக்கட்டடம் என அழைக்கப்படும் மெட்ராஸ் டெரஸ்,மாடியும் கீழும் ஒரே மாதிரியான அமைப்புடன் கட்டப்பட்டது. கொல்லைப்பக்கம் தான் மூன்று போர்ஷன் ஓடு வேய்ந்திருந்தது. ஒன்றில் அவர் சொந்தத் தங்கையும் மற்ற இரண்டிலும் வாடகைக்கும் இருந்தார்கள்!

   Delete
 10. I am surprised to know he is your sithappa.

  I haven't read the writer's comments on your siththappa.

  But I read his apology that is appearing today.

  ReplyDelete
  Replies
  1. அவர் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. தன்னிடம் அந்தரங்கமாகச் சொல்லி இருப்பதாகத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். சித்தப்பாவின் சுபாவம் தெரிந்தவர்கள் அவர் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார் என்பதை நன்கறிவார்கள். அதிலும் எழுபதுகளில் அவருக்கு நாற்பது வயதுக்கு மேல் ஆன கால கட்டத்தில் பிறரிடம் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்தார் என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. ஜெமினியில் அவர் பிஆர். ஓ என்னும் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆஃபீசராகத் தான் இருந்து வந்தார். அத்தகைய வேலையில் இருந்தவர் பின்னால் கார் ஓட்டுநராகவும், தேநீர் கொண்டு கொடுப்பவராகவும் இருந்தார் என்று சொல்வது எத்தகைய புரட்டு!

   Delete
 11. என்னத்தை சொல்ல ..:( வேதனையான விஷயம் ..மறைந்தவர்கள் பற்றி மட்டுமே இந்த பிரபலங்கள் ( அவலங்கள்) ..இப்படி எல்லாம் தெரிந்தாற்போல் பேசுவாங்க . கேள்வி கேட்க அவர்கள் வர மாட்டார்கள் என்ற அசட்டு தைரியம்தான் ...இப்போ இந்த வீண் பேச்சுக்கள் அவசியமா ? என்பதை யோசிக்கும் திறன் கூட இல்லை பாருங்க இவர்களிடம் ..

  ReplyDelete
  Replies
  1. அவர் ஏதோ கனவுலகில் கற்பனை செய்து கொண்டு இருக்கிறார். யதார்த்தத்தை உணரும் மனப்பக்குவம் அவரிடம் இல்லை.

   Delete
 12. உண்மையை'ப்' பகுத்து அறிந்து தராமல்,
  'த்'திரித்து தர முயலும் திரிபுவா(ந்)திகள்
  காலமமிது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், உண்மை தான்!

   Delete
 13. தங்கள் பதிவு எங்கள் வருத்தத்தையும் சினத்தையும் ஓரளவு குறைத்தது. ஆனாலும்....

  ReplyDelete
 14. வக்கிரமும் வன்மமும் மட்டுமே அவரது வாழ்க்கையாகி விட்டது. உங்களைப் போன்ற உறவினர்கள் இருக்கையிலேயே இப்படி எழுதுகிறார் என்றால் அதிலிருந்தே அவரது குணாம்சம் தெரிகிறது.

  ReplyDelete
 15. சுட்டிக்காட்டப்பட்ட பிறகாவது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதே நம் அவா. ஆனால் ஒன்று, அசோகமித்திரன் இம்மாதிரியான தவறுகளை 'விட்டுத்தள்ளுங்கள்' என்று போய்க்கொண்டே இருப்பார். அவரது பெருந்தன்மையும் அனுபவமும் அப்படிப்பட்டது.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரி தான். சித்தப்பா அப்படிப்பட்ட மனிதர் தான்! ஆனால் இவர் இப்படி அப்பட்டமான பொய்யை ஏன் சொல்ல வேண்டும் என்பதே புரியவில்லை. எழுபதுகளில் தான் சித்தப்பாவின் அமெரிக்கப் பயணம் ஏற்பட்டது. அப்போது தான் வறுமையில் வாடியதாகவும் அடிமட்ட வேலைகள் செய்து பிழைப்பு நடத்தியதாகவும் சொல்கிறார். :(

   Delete
 16. மிகவும் வருத்தமாக இருக்கிறது..

  ReplyDelete
 17. சிலருக்கு இம்மாதிரி பிரபலங்களைப் பற்றி தாழ்வாகப் பேசுவதில் தன்னைப் பற்றிய ஈகோவுக்குத் தீனி முயல்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அதிலும் திரு ஜெயமோகனுக்குக் கொஞ்சம் அதிகம்! :(

   Delete
 18. உங்களுடைய இந்த பதிவும், இதில் உள்ள தகவல்களும், உங்களுடைய சித்தப்பா, மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றிய மற்றவர்களது தவறான புரிதலுக்கு சரியான மறுப்புரை ஆகும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! சித்தப்பாவின் மூன்று மகன்களும் மறுப்புத் தெரிவித்திருப்பது இந்து தமிழ் நாளிதழில் வெளியாகி உள்ளது.

   Delete
 19. நான் ஜெயமோகன் அதிகம் படித்ததில்லை. இதற்குப் பிறகு படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பத்தில் கொஞ்சம் ஆவலுடன் படிக்கும்படி தான் இருந்தது. போகப் போக அலுப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது! :) ஒருவேளை என் ரசனை அப்படி இருக்கலாம்! :) அதிலும் "வெண் முரசு" என்னும் பெயரில் அவர் எழுதும் மஹாபாரதம்! கற்பனைக்கு அளவே இல்லை! :(

   Delete
 20. ஏனொ தெரியவில்லை ஜெமோவை வாசிப்பதில்லை...விரும்புவதுமில்லை. தலைக்கனம்...அவதூறு மற்றும் சக எழுத்தாளரை பல சமயங்களில் விமர்சிப்பது என்ற பல காரணங்கள்....அவர் வார்த்தைகள் கண்டனத்திற்குரியது. நன்றாகச் சொன்னீர்கள். நல்ல பதிவு அக்கா

  கீதா

  ReplyDelete
 21. உங்களது பதிவுக்கு இன்றுதான் வரநேர்ந்தது. அசோகமித்திரன் உங்களது சித்தப்பா என்றதும் என்னமோ அவர் வீட்டுக்குள் நான் வந்துவிட்டதுபோல் தோன்றியது.Pleasant surprise.

  அசோகமித்திரனைப் பற்றி ஜெயமோகன் அளந்துவிட்டிருப்பதைப்பற்றிக் கண்டனங்களைப் படித்துவருகிறேன். குறிப்பாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன். அவருடைய ‘ஜெயமோகன் என்கிற வாழும் பொய்’ கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டவைகளைக் குறிப்பிட்டு, ஜெயமோகனைக் கடுமையாக விமரிசித்திருக்கிறார். ஜெயமோகன் எழுதியதையும் முதலில் எழுதி, கீழே விளாசியுள்ளார் மாமல்லன்.கூடவே பலவிஷயங்களையும் மாமல்லன் கட்டுரையில் படிக்கலாம். அவசியம் வாசிக்கவும்: http://www.maamallan.com/2017/03/blog-post_74.html

  ReplyDelete