எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 28, 2017

வறண்ட காவிரி! :(


அமெரிக்காவிலே இருந்து வந்ததும் ஓரிரு முறை மாடிக்குப் போயிருந்தாலும் நின்று பார்க்கவில்லை. இன்னிக்குக் காலம்பர மறுபடி நடைப்பயிற்சியை ஆரம்பிக்கச் சென்ற போது கையில் அலைபேசி இருந்தது. ஆகவே அதன் மூலம் காவிரியைப் படம் எடுத்தேன். பார்க்கவே கண்ணில் தண்ணீர் வருகிறது. கல்லணைப்பக்கம் வறண்ட காவிரியைப்  படம் பிடித்து சக பதிவர் திரு தமிழ் இளங்கோ அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்! அதையும் பார்த்தேன். இப்போ இரண்டு, மூன்று நாட்களாகத் தான் இங்கே காற்று அடிக்கிறது. அப்போ மேற்கே மழை பெய்கிறது என்று அர்த்தம். இத்தனை நாட்கள் காய்ந்த வெயில் மாதிரி இதற்கு முன்னால் பார்த்ததே இல்லை! அனல் காற்று வீசியது! 
காவிரி ஆற்றைச் சில கோணங்களில் எடுத்த படங்கள் தான் இவை எல்லாம். கடவுள் தான் கண் திறக்க வேண்டும். அந்த ரங்கநாதன் பார்வையில் தானே இருக்கு காவிரியும்! 

10 comments:

 1. நல்லதே நடக்கும் நம்பிக்கையே வாழ்க்கை.

  ReplyDelete
 2. சரி.. தண்ணீர் இல்லை. ஆனால் அருமையான ஆற்று மணல் இருக்கிறதே.. மாலை நேரம், கொஞ்சம் வெயில் தாழ்ந்ததும் கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு, பொடி நடையா போயிட்டு அங்கேயே சாப்பிட்டுட்டு வரலாமே (என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை கை கழுவுவதற்கும் தண்ணீர் இல்லாம சுத்தமா வறண்டுபோச்சா?)

  ReplyDelete
 3. வறண்ட காவிரி வேதனதான் கர்நாடகத்திலும் அணைக்கு வெள்ளம் தரும் / வரும்பகுதிகளில் மழை இல்லையாம்

  ReplyDelete
 4. கடவுள் கண்ணைத் திறப்பார் என்று நம்புவோம்.

  ReplyDelete
 5. உங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து காவிரியைப் பார்த்த நினைவு எனக்கும் வருகிறது. ஆனால் அப்போதும் தண்ணீர் (அவ்வளவாக) இல்லை என்றே ஞாபகம். இனி பழைய நாட்கள் போல புரண்டோடும் காவிரியைப் பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன். ம்....ஹூம்.

  ReplyDelete
 6. ம்... வருத்தம் தான் மேலிடுகிறது...

  ReplyDelete
 7. வேதனைதான் அக்கா! நடந்தாய் வாழி காவேரி! என்று காவிரியைப் பாடிய பொன்னியன் செல்வனில் சொல்லப்பட்ட காவிரி எல்லாம் இனி பார்க்க முடியுமா என்பது கனவுதானோ....

  கீதா

  ReplyDelete
 8. இந்த பதிவிலுள்ள படங்களைப் பார்த்ததும், சென்ற ஆண்டு (2016) உங்கள் இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பும், அப்போது அனைவரும் உங்கள் குடியிருப்பு மாடிக்குப் போய் மாலைநேரக் காவிரியின் அழகைக் கண்டு ரசித்ததும் நினைவிற்கு வந்தன. அப்போது காவிரியில், தண்ணீர் வாய்க்கால் போல ஓடிக் கொண்டு இருந்தது. இப்போது ’வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி’யும் பொய்த்து விட்டதே எனும்போது, கம்பனின் "நதியின் பிழையன்று நறும்புனலின்மை ... ... விதியின் பிழை" என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 9. காவிரியைப் பார்த்துக் கண்ணீர் விட்டவர்கள் அனைவரின் கண்ணீரும் சேர்ந்தாவது வெள்ளமாகக் காவிரியில் பெருக்கெடுத்து ஓட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வேறென்ன சொல்வது! :(

  ReplyDelete