எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 26, 2018

எல்லாம் சகவாச தோஷம் தான்!

நம்ம நெல்லைத் தமிழர் வந்தப்போ அவருக்கு இலுப்பச்சட்டி தோசை (ரெட்டை விளிம்பு தோசைனு காமாக்ஷி அம்மா சொல்வாங்களே அது) வார்த்துக் கொடுத்தேன். அன்னிக்குப் பேச்சு மும்முரத்தில் அவங்களையே படம் எடுக்க மறந்துட்டேன். இதை எப்படி எடுத்திருப்பேன். மறந்தே போச்சு. இப்போ இரண்டு நாட்கள் முந்தி ராத்திரிக்கு நம்ம ரங்க்ஸுக்கும் எனக்கும் இதே இலுப்பச்சட்டி தோசை வார்த்தேனா! அப்போ திடீர்னு நினைப்பு வந்து  படம் எடுத்தேன். ஏற்கெனவே இரண்டு, மூணு முறை போட்டிருக்கேன். இது எத்தனாவது தரம்னு தெரியலை! பரவாயில்லை. பார்த்து ரசிக்காதவங்க ரசிக்கலாமே!சட்டியில் தோசை மாவு ஊற்றியவுடன் மேலே இப்படி உப்பிக் கொண்டு வரணும். தோசை ஓரங்களில் மெலிதாக மொறு மொறுவென்றும் நடுவில் கனமாக உள்ளே ஸ்பாஞ்ச் போலவும் வரும். 


உள்ளேயும் வேக வேண்டும் என்பதற்காக மாவை ஊற்றிய உடனே  கரண்டியை ஒரு 2 செகண்ட் மாவின் நடுவில் வைச்சுட்டு உடனே எடுக்கணும். அதிக நேரம் இருந்தால் கரண்டியில் ஒட்டி இருக்கும் மாவும் சேர்ந்து வேகும். அப்படி எடுத்ததைத் திருப்பிப் போட்டுக் கொஞ்சம் கூட நேரம் வேக விட்டால் ஓட்டை போட்டுக் கொண்டு தோசை நன்றாக இருக்கும். ஓரத்து விளிம்பைத் தவிர்த்து தோசையின் நடுபாகத்திலும் ஓர் விளிம்பு உருவாகும்.   இதுக்குத் தொட்டுக்க மி.பொ. நன்றாக இருக்கும் என்றாலும் எனக்கு வெங்காயச் சட்னி தான் பிடிக்கும். இப்போத் தக்காளித் தொக்குப் பண்ணி வைச்சிருப்பதால் அதையே தொட்டுண்டோம். கூடக் கொத்துமல்லி மி.பொ. இந்தப் பதிவு எழுதக் காரணமே நம்ம ரங்க்ஸ்தான். எனக்குத் தான் திப்பிசம் தெரியும்னு நினைச்சால், ஹிஹி அவருக்கும் வந்திருக்கு. கார்த்திகை தீபத்தன்று காலை வடை தட்டினேனா! நம்ம வீட்டில் முப்பருப்பு வடை தான்! அந்த வடை மாவு மிஞ்சிப் போச்சு! அதை சனிக்கிழமை தட்டலாம்னு நினைச்சிட்டு இருந்தப்போ நம்ம ரங்க்ஸுக்கு திடீர்னு ஏதோ பொறி தட்டி இருக்கு. பீன்ஸ் மிச்சம் இருக்கு இல்லையா? இந்த மாவை வைச்சுப் பருப்பு உசிலி பண்ணலாமா, சரியா வருமானு கேட்டார். பருப்பு உசிலிக்கே எதிரியா இருந்தவர் திடீர்னு இப்போ நண்பராயிட்ட சந்தோஷத்தில் நான் மாவைத் தூக்கி உடனேயே மறுபடி குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டேன். அதோட என்ன நினைச்சேன்னா, நாம தான் திப்பிசமெல்லாம் செய்வோம், ஏகபோக உரிமையாளர்னு நினைச்சது எல்லாம் ஒரு செகண்டில் காணாத அடிச்சுட்டாரேனு தோணித்து. கூடவே சமாதானமும் செய்து கொண்டேன். இது சகவாச தோஷம் அப்படினு! என்ன நான் சொல்றது சரி தானே! அந்தப் படங்களைத் தான் கீழே பார்க்கறீங்க! 


வடை மாவை அலுமினியம் சட்டியில் போட்டதும் தான் நினைவு வந்தது இதை வைச்சு ஒரு "திங்க"ற பதிவு ஸ்ரீராமுக்குப் போட்டியா போடலாமேனு! ஆகவே கிளறிக் கொடுப்பதற்கு முன்னாடி தாளிதத்தில் மாவைச் சேர்த்ததும் படம் எடுத்தேன். பீன்ஸையும் ஏற்கெனவே வேக வைச்சதால் வெந்த பீன்ஸை வடிகட்டி வைச்சிருக்கும் படம். 

பருப்பு உசிலி அதிகமாயிருக்குமோனு நினைச்சதாலே கொஞ்சத்தைத் தனியா எடுத்து வைச்சேன். மற்றதில் பீன்ஸைப் போட்டுக் கிளறியாச்சு. தனியா எடுத்து வைச்சதை சாதத்தோடு சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம்.

இந்தத் திப்பிசம் முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம்! நான் இல்லை; இல்லை; இல்லவே இல்லை! :))))

36 comments:

 1. நாங்கள் வந்தபோது கடையில் இருந்து தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தீர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, நீங்க வந்தது காலை பதினோரு மணி அளவில்/ சாப்பாடு சாப்பிட முடியாதுனு ஏற்கெனவே சொல்லி இருந்தீங்க! அப்போ எனக்கு வழக்கம்போல் உடம்பு சரியில்லாமையால் கீழே போய் வாங்கி வந்தார். எங்க வீட்டில் நடந்த ப்ளாகர் மீட்டிங்கின் போதும் வீசிங் இருந்தது. கீழே தான் வாங்கிக் கொடுத்தோம். இப்போக் கீழே அந்தக் கடையையே மூடிட்டாங்க! :)))))

   Delete
 2. ஆகா...! யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்...?

  அனைவருக்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, எங்கேயோ போக வேண்டிய கருத்தோ?

   Delete
 3. //நடுவில் கனமாக உள்ளே ஸ்பாஞ்ச் போலவும் வரும்//

  நான்கூட நடுவில் ஸ்பாஞ்ச் வைக்கணுமோனு நினைச்சுட்டேன்.
  படங்கள் அருமையாக இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! ஒரு முறை உங்க அம்மாவைச் செய்து தரச் சொல்லுங்க! சாப்பிட்டால் விட மாட்டீங்க!

   Delete
 4. அவகாசமே கொடுக்காமல், திடுமென்று வந்த எங்களுக்கு வார்த்துப்போட்ட இலுப்புச் சட்டி தோசை ரொம்பவே நன்றாக இருந்தது. வழக்கத்தைவிட அதிகமாகவே சாப்பிட்டேன். ஹஸ்பண்டும் நன்றாக இருந்ததுன்னு சொன்னா. பதிவர்கள் வீட்டுக்குப் (யாருடைய) போனாலும், நமக்கு நெருக்கமாகத் தெரிந்தவராக ஆகிவிடுகிறார்கள், அவர்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதனால். இந்தச் சந்தர்ப்பத்துல அந்த இரட்டைமடி தோசைகளுக்கு நன்றி சொல்லிக்கறேன். அதற்குப் பிறகு எங்க ஆச்ரமத்துக்குச் சென்றபோது அங்கேயும் அவங்க வற்புறுத்தல் காரணமாக பிரசாதமாக காலை உணவு உண்டோம்.

  எனக்கு உங்களுக்குத் தொந்தரவு கொடுக்ககூடாதுன்னு எண்ணம். அதனால்தான் நீங்க முன்னமேயே சொல்லியிருந்தபோதும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிட்டோம்.

  பருப்புசிலியாக்கிட்டீங்க சரி. அன்றைய குழம்பு என்ன? பருப்புசிலி, மோர்க்குழம்பு போன்றவற்றிர்க்குத்தானே சுவையாக இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. அதிகமா எல்லாம் சாப்பிடலை! சரியாத் தான் சாப்பிட்டீங்க! ஆசிரமத்தில் உணவு கொடுக்காம இருக்க மாட்டாங்களே! எனக்குத் தொந்திரவு கொடுக்கக் கூடாதுனு தான் சாப்பாடு வேண்டாம்னு சொன்னீங்க என்று எங்களுக்கு நன்றாகப் புரிந்தது. திடீர்னு வந்தால் தான் கொஞ்சம் கஷ்டம்! சொல்லிவிட்டு வரும்போது என்ன சிரமம்! திடீர் விருந்தாளிகளைக் கூடச் சமாளிச்சிருக்கேனே! அன்னிக்குக் குழம்பு மோர்க்குழம்பு தான்!

   Delete
 5. நான் மனசுல நினைத்தமாதிரி உங்க பில்டிங் இல்லை. நான் பில்டிங் கீழேயே பஜ்ஜிக்கடை இருக்கும்னு நினைத்தேன். ஆனால் உங்க பில்டிங் தனி வளாகத்துல இருக்கறமாதிரி இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. எங்க குடியிருப்பு வளாகம் முன்னாடி நவாப் தோட்டம் என்னும் தோட்டமாக இருந்திருக்கிறது. அதற்குப் பக்கத்தில் உள்ள இன்னொரு வளாகத்தில் தான் ஓட்டல்/பஜ்ஜிக்கடை இல்லை! :))) முதலில் பாலாஜி பவன் காரங்க நடத்தினாங்க! அப்புறமா வேறே யாரோ லீசுக்கு எடுத்தாங்க. இப்போ ஒரு மாசமா மூடிக் கிடக்கு! நீங்க சென்னை அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்துட்டு அது போல் நெருக்கமா இருக்கும்னு நினைச்சிருப்பீங்க! :)))) அப்படி இருந்திருந்தா முதலே இருந்த வீட்டுக்குக் குடித்தனமே வந்திருக்க மாட்டோம். :)))) சென்னையில் கூட நாங்க குடியிருப்புனு விலைக்குப் பார்த்தது அலாக்ரிடியின் கட்டமைப்பில் பழைய குடியிருப்பு வளாகத்தில் கிடைச்சால் போகலாம். இல்லைனா தோஷி&தோஷி! கிட்டத்தட்ட தோஷி&தோஷி யில் முடிச்சுட்டோம். அப்புறமாத் தான் தெரிஞ்சது பின்னாடி மயானம் இருப்பதும் அங்கே கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டுத் திரும்ப வரும் என்பதும்! நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் முறையாகச் சுத்தம் செய்து வந்தாலே பிரச்னை! எல்லாத்தையும் யோசிச்சுட்டுக் கொடுத்த அட்வான்ஸைத் திரும்ப வாங்கினோம். அரங்கன் அழைப்பு இருக்கு என்னும்போது அங்கெல்லாம் வாங்க முடியுமா என்ன! :)))))

   Delete
  2. அந்த அரங்கன் அழைப்பு எனக்கு (எங்களுக்கு) இருக்கான்னு தெரியலையே... அதுக்காக தனியா ப்ரார்த்திக்கணும் போல...ம்..ம்..

   Delete
  3. நீங்க தான் "பெண்"களூரில் செட்டில் ஆகப் போவதாய்ச் சொன்னீர்கள்! ஏற்பாடுகள் கூட நடக்கின்றனவோ? இப்போத் திடீர்னு அரங்கத்தின் மேல் ஆசை! :)))) அவன் அழைச்சால் நீங்க இங்கே தான் வருவீங்க! நாங்களும் வேறே எங்கோ போக வேண்டியவங்க தானே!

   Delete
  4. எல்லாம் உங்க பில்டிங்கையும் ஆஸ்ரமங்கள், கோவில்கள் பார்த்ததினால்தான். பார்க்கலாம் வாழ்க்கை எப்படிப் போகிறதென்று.

   Delete
 6. ஒருவேளை, அதே மாவை வைத்து 'அடை' தட்டி அதைச் சாப்பிடவேண்டி வந்துவிடுமோ என்பதற்காக, அவரே முந்திக்கொண்டு 'பருப்புசிலி' (அதற்கு இது பரவாயில்லை என்ற கணக்கில்) என்று சொல்லியிருப்பாரோ?

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி, இஃகி, அடை தட்டும் ஐடியாவும் இருந்தது. ஆனால் தோசை மாவு நிறைய இருந்ததால் அந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரலை! :))))

   Delete
 7. உங்களிடம் பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. அதைப் பேசவே ஆரம்பிக்கமுடியலை. அவ்வளவு நேரப்பற்றாக்குறை.

  சரி... அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நெ.த. இவரும் சொல்லிட்டு இருக்கார், அரைகுறையான சந்திப்பு என! :))))

   Delete
 8. பார்க்கவே அருமையாக இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. அட ஸ்வாதி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 9. இரட்டை விளிம்பு தோசை நன்றாக இருக்கிறது. என் மாமியார் இலுப்பச்சட்டி தோசைஎன்று சொல்வார்கள் அவர்களுக்கு ஒரு தோசை மட்டும் சாப்பிட்டால் போதும் போல இருந்தால் உடனே இப்படி செய்து சாப்பிட்டு விடுவார்கள். மாவு வேக முறுக்கு எடுக்கும் கருதகம்பியால் இரண்டு மூன்று இடங்களில் குத்தி விடுவார்கள்.
  வெந்துவிடும்..

  உசுலி நல்ல யோசனை.

  //இது சகவாச தோஷம் அப்படினு! என்ன நான் சொல்றது சரி தானே! //
  நீங்கள் சொல்வது சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, எங்க வீட்டிலும் இலுப்பச்சட்டி தோசை தான் சொல்வோம். இது எங்க குடும்பத்தில் ரொம்பவே பிரபலம். எல்லோருக்கும் இது பிடிக்கும். அதே போல் மோர்க்குழம்பு, கத்திரிக்காய்ப் புளி விட்ட கூட்டுன்னா சொர்க்கம் கூட வேண்டாம்னு சொல்லிடுவோம்! என் கசின்ஸ் எல்லோருமே அப்படித் தான்! :))))

   Delete
  2. //மோர்க்குழம்பு, கத்திரிக்காய்ப் புளி விட்ட கூட்டுன்னா சொர்க்கம் // - அதுவும் சுடச் சுட... பரவாயில்லையே.. என்னை மாதிரி நல்ல காம்பினேஷன்ல உங்களுக்கும் ரசனை இருக்கு போலிருக்கே. நான் வாழைக்காய் புளிக்கூட்டும் அதற்குத் தொட்டுப்பேன்.

   Delete
  3. நெ.த. வாழைக்காய் அதுவும் கச்சல் வாழைக்காயில் இந்தக் கூட்டும் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் கத்திரிக்காய்னா ஸ்பெஷல் தான்! அம்மா கொத்தவரைக்காய், அவரைக்காய் போன்றவற்றிலும் பண்ணுவா கொஞ்சம் தளர! அதுக்குப் பச்சடி தொட்டுக்க, அப்பளம் பொரித்துப் போடுவா!

   Delete
 10. மாவரைத்த மூணாம். நாள் இதுதான் ஆகி வந்தது. அம்மா, கெட்டித் தயிரும். மி. பொடியும் கலந்து கொடுப்பார். நன்றி மா கீதா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரேவதி, எங்க வீட்டிலேயும் அம்மா மிளகாய்ப்பொடியும் தயிருமாய்த் தருவார். இல்லைனா வெங்காயச் சட்னி!

   Delete
 11. திப்பிசம் அவருக்கும் பழகிவிட்டது போலும்.

  இலுப்ப சட்டி தோசை இன்றைக்கு எங்கள் வீட்டிலும்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், முகநூலில் ஆதி போட்டிருந்ததையும் பார்த்தேன். ஆனால் என்னோட சட்டி சின்ன்ன்ன்ன்ன்னது! :) மொட்டைச்சட்டி என்போம். காது கிடையாது! ஆகவே எதுவும் கேட்காது! சமர்த்தாக தோசையைத் தூக்கிக் கொடுத்துடும். :)))))

   Delete
 12. ஆஹா திங்கக் கிழமைக்குப் போட்டியாக பருப்பு உசிலியோ.. நல்லாத்தான் இருக்கு பார்க்க. தோசையும் பான்கேக் போல வந்திருக்கு அழகா.. கிட்டத்தட்ட அடை போலவும் இருக்கே...

  நானும் திங்களுக்குப் போட்டியாகப் போட்டிட்டேன் போஸ்ட்:) ஸ்ரீராமுக்குச் சொல்லிடாதீங்கோ.. :).

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராமுக்குச் சொல்லாமலேயே நானும் வந்து பார்த்துட்டேன். அதியரதம் செய்ததை! இந்தச் செய்முறையில் ஒரு நாள் செய்து பார்க்கணும். அதுக்கு முன்னாலே சாப்பிட ஆள் தேடணும்! :)))))

   Delete
 13. கீதாக்கா ..இந்த மடிப்பு விளிம்பு தோசையை non ஸ்டிக் ஆப்ப சட்டியில் செய்யலாமா ??
  பார்க்க மெத்துன்னு இருக்கு ..இதுக்கு வற்றல்குழம்பும் நலல இருக்கும்

  நீங்க முதலில் திப்பிசத்துக்கு பேடண்ட் வாங்கி வச்சிடுங்க :)
  ஒரு வீட்டில் (காட்டில்) ஒரு சிங்கம் தான் இருக்கணும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், அபூர்வமா ஆயிடுச்சு உங்களோட வருகை! இன்னமும் வேலைகள் மும்முரமா? இந்த தோசையை நான் ஸ்டிக்கில் செய்தால் அவ்வளவு ருசி வருமானு தெரியலை! ஆதி வெங்கட் கொஞ்சம் பெரிய இரும்புச் சட்டியில் செய்திருக்காங்க! அது இருந்தால் கூடச் செய்து பார்க்கலாம்.

   ஆமா இல்ல, திப்பிசத்துக்குப் பேடன்ட் வாங்கி இருக்கணும். தோணவே இல்லையே! ஒரு நாள் அறிவிச்சுட வேண்டியது தான்.

   Delete
 14. சுவையான பதிவு...

  அதுசரி...

  உசிலி... உசிலி...ந்றேளே!..
  அவா யாரு?...
  உசில மணிக்கு சொந்தக்காராளா!?...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, துவரம்பருப்பு+கடலைப்பருப்பு அல்லது இரண்டிலே ஏதேனும் ஒண்ணு தனித்தனியாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஊற வைச்சு மி.வத்தல் உப்பு, பெருங்காயம் போட்டு அரைச்சு எடுத்துக்கணும். அதை எங்க வீட்டில் இட்லித் தட்டில் வேக வைப்பதில்லை. பிடிக்காது. உங்களுக்குப் பிடித்தம் எனில் இட்லித் தட்டில் வேக வைச்சுக்கணும். பின்னர் எண்ணெயில் கடுகு, உபருப்பு தாளித்துக் கொண்டு கருகப்பிலை போட்டு வேக வைத்த பருப்புக்கலவையையோ அல்லது அரைத்து வைத்திருக்கும் கலவையையோ போட்டுக் கிளறி உதிர்க்கணும். தேவையான காய்களைத் தனியாக வேக வைத்துக் கொண்டு நீரை வடிகட்டிவிட்டுப் பின்னர் இந்தப் பருப்பு உசிலியோடு போட்டு நன்கு கலக்கணும். இந்தப் பருப்பு உசிலியைக் காய்கள் போடாமல் தனியாகச் செய்தும் பண்ணிச் சாப்பிடலாம். கிராமங்களில் எல்லாம் காய்கள் கிடைக்காத சமயம் இதைத் தான் பண்ணுவாங்க. கீரை வகைகளில் பருப்பு உசிலி எனில் கீரையை நறுக்கி அரைத்த பருப்பு விழுதுடன் கலந்து கட்டாயமாக இட்லித் தட்டில் வேக வைத்துப் பின்னர் தாளித்துக் கிளறணும்.

   Delete
 15. ரசிக்கும்படியான, அதேசமயம் ருசிக்கும்படியான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete
 16. ஹா ஹா ஹா அக்கா திப்பிஸம் செம...நானும் வடை அடையாக்கியதுண்டு, உசிலி செய்ததுண்டு...இப்படித்தான்...உசிலிக்கு அரைத்தது கொஞ்சம் அதிகமாகிவிட்டால் (எப்போதாவதுதான்) வடை...இப்படியான மாற்றங்கள் நிறைய நடக்கும்...

  ஆமாம் அக்கா அதை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்...நல்லாருக்கும்

  கீதா

  ReplyDelete