எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 30, 2018

மறுபடியும் சித்தப்பா! :(

நடிகர் சூரியா ரசிகர்களையும் அவங்களோட அதீத ஆர்வத்தையும் குறித்து ஏதோ ஒரு கருத்தை "தமிழ் தி இந்து" வில் எழுதி இருக்கார் போல! அதற்குப் பதிலாக எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதி இருப்பதில் சித்தப்பாவுக்கு வீட்டில் எழுத இடமே இல்லாதமாதிரியும், சாப்பாடு கூடச் சாப்பிடாமல் வறுமையில் உழன்றதாகவும், பிள்ளைகள் தலைஎடுத்துத் தான் சாப்பிடவே முடிஞ்சது என்பது போலவும் எழுதி இருக்கார். இதில் கொஞ்சம் கூட உண்மையே இல்லை. தி.நகரில் சொந்த வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். கூடவே அம்மா, தங்கை, தம்பி, அக்கா இருந்தனர். அதன் பின்னர் கல்யாணம் ஆனதும் சித்தி, குழந்தைகள், தம்பி, தம்பி மனைவி, அக்கா ஆகியோருடன் இருந்தார். கொல்லைப்பக்கம் ஒரு போர்ஷனில் அவர் தங்கை கணவர் குழந்தைகளுடன் இருந்தார். இன்னொரு போர்ஷனையும், அவுட் ஹவுஸ் எனப்படும் சிறிய ஓட்டு வீட்டையும் வாடகைக்கு விட்டிருந்தார்கள். இவங்க இருந்தது நல்ல கெட்டிக் கட்டிடம். வறுமையில் உழன்றவரால் எங்களைப் போல மச்சினி குழந்தைகள், மச்சினர் குழந்தைகள், அக்கா, தங்கை குழந்தைகள் என வருவோரும் போவோருமாய் இருக்கும் வீட்டை எப்படி சம்ரக்ஷனை செய்திருக்க முடியும்? அதுவும் நாங்க எல்லாம் மாசக்கணக்கில் தங்கி இருந்திருக்கோம். எங்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டவருக்குச் சாப்பிட முடியாமல் வறுமையா? வாய்ப்பே இல்லை. என்னோட பத்து வயசில் இருந்து அவருடைய வாழ்க்கையை நன்கு கவனிச்சு வந்திருக்கேன். எங்க வீடுகளில் அவருடைய கருத்துக்கு எப்போதும் மதிப்பு உண்டு. அவர் தன் வீட்டில் மனைவியின் பிறந்தக உறவினர்களைப் பல காலம் தங்க வைத்து அவங்க முன்னுக்கு வரும்வரை ஆதரவு காட்டி இருக்கார். பின்னரும் எங்களோட நலன்களில் ஆழ்ந்த கவனம் வைத்து விசாரிப்பார்.

எல்லாம் சரி, அசோகமித்திரன் போன்ற பிரபலங்கள் கவனிக்கப்படவில்லை என்பது குறித்தச்சாரு நிவேதிதா வருத்தப்படுவதாகவே   ஒத்துக்கொள்ளலாம்.எதில் இதைக் குறித்துச் சித்தப்பா சொல்லி இருக்கார்? அவர் அப்படி எல்லாம் சொல்லுபவரே இல்லை.     மற்றவை எப்படியோ பரவி இருக்கிறது. இதை யார் ஆரம்பிச்சு வைச்சாங்க என்பது தெரியவில்லை. ஆனால் சித்தப்பா வறுமையில் உழன்றார். வீட்டில் எழுத இடம் இல்லை என்பதெல்லாம் சரியாய்த் தெரியலை. இதைச் சித்தப்பா எங்கே எப்போது யாரிடம் சொன்னார் அல்லது எழுதினார் என்பது தெரியவில்லை. ஏனெனில் தி.நகர் தாமோதர ரெட்டித் தெருவில் அவங்க வீடு ஓர் ஆலமரம். எங்களைப் போல் பலர் அங்கே தங்கிச் சாப்பிட்டுக் கொண்டு எங்கள் எதிர்காலங்களை நிச்சயித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளும் சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட்டதில்லை. ஆஸ்த்மா தொந்திரவு உண்டு தான்! அதனால் தான் சாப்பிட முடியாமல் போயிருக்குமே தவிர்த்து வறுமையினால் அல்ல. அவர் வீடு சொந்த வீடு! கீழேயும் மேலேயும் ஒரே மாதிரியான அமைப்புடன் கட்டிய அந்தக் கால மெட்ராஸ் டெரஸ் என்பது போடப்பட்ட வீடு. கொல்லைப்பக்கம் ஓடு வேய்ந்து இரு போர்ஷன்கள். அவங்க வீட்டுப் பிரபலமான மாமரத்துக்கு அருகில் அவுட்ஹவுஸ் எனப்படும் சின்ன ஓட்டு வீடு! சுமார் ஒன்றரை கிரவுண்டுக்குக் குறையாது. வீட்டில் அவருடன் மனைவி குழந்தைகள் தவிர்த்துத் தம்பி, அக்கா ஆகியோரும் இருந்திருக்கின்றனர். தம்பி மனைவி எனக்குச் சொந்த நாத்தனார். யாரும் எப்போதும் வறுமையில் உழன்று சாப்பாடு கூடச் சாப்பிட முடியாமல் இருந்தது இல்லை. சித்தப்பா வீட்டுக்கு எதிரே எருமைமாடு கறந்து அந்தப் பால் தான் வாங்கிக் காஃபி போடுவார். காப்பிக்கொட்டையை வறுத்து அன்றன்று மிஷினில் அரைத்து டிகாக்ஷன் போட்டுத் தான் காஃபி. அந்தக் காஃபி ஒன்றே சொல்லும் அவர் வறுமையில் உழன்றாரா இல்லையா என்பதை! பட்டினி கிடந்தார் என்பதும் பிள்ளைகள் தலையெடுத்துத் தான் சாப்பிட முடிந்தது என்பதெல்லாம் அவர் நிழலில் எங்கள் எதிர்காலத்தை நிச்சயித்துக் கொண்ட எங்களுக்கெல்லாம் ஏற்க முடியாத ஒன்று.

விஷயம் என்னவென்று புரியாதவர்களுக்காக என் பழைய பதிவின் சுட்டியை இங்கே இணைத்துள்ளேன். எழுத்தாளர் அசோகமித்திரன் என் சித்தப்பா. அவர் வாழ்க்கையில் நடக்காதவைகளை எல்லாம் நடந்ததாகச் சொல்லுகின்றனர் சில சக எழுத்தாளர்கள். அதில் ஜெயமோகன் முன்னிலையில் இருந்தார். இப்போது சாரு நிவேதிதா! :(  எனக்கு அடுத்தடுத்து இவை வரவே நானும் தமிழ் தி இந்துவில் தான் சாரு நிவேதிதா பதில் கொடுத்திருக்காரோ என நினைத்து அங்கேயே பதில் கொடுக்கலாம் என எண்ணியபோது மின் தமிழ்க் குழுமத்தில் சிநேகிதி இது சாரு நிவேதிதா தன் தளத்திலும் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டது என்பதைச் சொன்னார். அங்கேயே போய் பதில் கொடுக்க நினைத்தாலும் அது பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே பதிலோ கருத்தோ சொல்லலாம் என்னும் அமைப்பில் உள்ளது. ஆகவே  இங்கே பதிவாகவும் முகநூலில் இதன் சுட்டியும் கொடுத்துள்ளேன்.

ஜெயமோகன் சொன்னது

37 comments:

 1. இந்த பதிவு மூலம் உண்மை தெரிகிறது அம்மா...

  ReplyDelete
 2. இது என்ன விஷயம் என்று புரிய வில்லையே!..:(

  ReplyDelete
  Replies
  1. துரை! எழுத்தாளர் அசோகமித்திரன் என் சித்தப்பா! அவரைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சக எழுத்தாளர்கள் சிலர் சொல்கின்றனர். அதை மறுக்கவே இந்தப் பதிவு. ஏற்கெனவே சித்தப்பா இறந்தபோது ஜெயமோகன் சொன்னவற்றுக்கு நான் மறுப்புத் தெரிவித்தது மேற்கண்ட சுட்டியில் உள்ளது.

   Delete
 3. தங்களுக்கு உண்மை நிலை நன்கு தெரியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. சேர்ந்தே இருப்பது என்று நாகேஷ் கேட்க புலவனும் வறுமையும் என்று சிவாஜி கூறுவார் திருவிளையாடல் புராணம் என்ற திரைப்படத்தில்.புதுமைப்பித்தன் பாரதியார் போன்றோரும் வறுமையில் உழன்றவரே. அதே போன்று அசோகமித்திரன் வறுமையில் இருந்தார் என்று எண்ணியிருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா, எழுதுவதற்கு முன்னால் குறைந்தது அவர் பிள்ளைகளிடம் கேட்டுக் கொண்டாவது எழுதலாம். இன்னும் சிலர் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை என்பதால் ராமகிருஷ்ணா பள்ளியில் சேர்த்தார் என்கிறார்கள். உண்மை என்னவெனில் ராமகிருஷ்ணா மடத்துடனும் அப்போது இருந்த குருவுடனும் சித்தப்பாவிற்கு நெருங்கிய பழக்கம் உண்டு. ஆகவே அங்கே தான் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே சேர்த்தார்.

   Delete
 5. அக்கா இப்படித்தான் பல ஃபேமஸ் நபர்களைப் பற்றியும் ஒவ்வொருவரும் கண்டதைப் பரப்பி விடுவது அதுவும் இப்போதுள்ள ஊடகங்கள் பற்றி சொல்லனுமா?

  நீங்களே கூட தி ஹிந்துவுக்கு எழுதிப் போடலாமே அக்கா....இங்கு சொல்லியிருப்பதை....அப்போ எல்லாருக்கும் தெரிய வருமில்லையா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, நானும் தமிழ் தி இந்துவுக்குத் தான் எழுத இருந்தேன். ஆனால் சாருநிவேதிதா தன்னுடைய வலைப்பக்கமும் முகநூல் பக்கமும் பகிர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே தவிர்த்து விட்டேன்.

   Delete
 6. வணக்கம். ஏதோ நீங்கள் படித்துப் பதில் எழுதியதால் உண்மையை அறிந்து கொண்டோம். இல்லையேல் ‘சாரு நிவேதிதா’ எழுதியுள்ள http://charuonline.com/blog/?p=7270 செய்தியே உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்போம். எழுத்தாளர்கள் ‘பில்டப்’ கொடுப்பதற்காகப் பதில்சொல்ல வாய்ப்பில்லாதவர்களது பெயர்களைச் சொல்லிவிடுவார்கள் போலிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரரே, முதல் வருகைக்கு நன்றி. எனக்கு இதை அனுப்பி வைத்திருந்தார்கள். யாரோ, எவரோ தெரியலை. முதலில் இது ஏதோ புரளினு நினைச்சால் மின் தமிழ்க்குழுமத்தில் செல்வனும் பகிர்ந்திருந்தார். பின்னர் தேடிக் கண்டு பிடித்துப் பார்த்ததும் தான்புரிந்தது. மின் தமிழிலும் என் மறுப்புப் பதிவுக்கான சுட்டியைக் கொடுத்திருக்கேன்.

   Delete
 7. சித்தப்பா என்றபோது புரியவில்லை அசோக மித்திரன்ர் உங்கள் சித்தப்பா என்று புரிகிறது வறுமையில் இருந்தார் என்பதை மிகைப்படுத்தி கூறி இருப்பாரோ என்னவோஅசோக மித்திரன் வாரிசுகள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, அவங்க ஏற்கெனவே ஜெயமோகனுக்கு பதில் கொடுத்தாச்சு! சும்மாச் சும்மாப் புரளி கிளப்புவர்களிடம் பேசவா முடியும்!

   Delete
 8. உண்மையைத் தெரிந்துகொண்டோம். தெளிவாக்கியமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete
 9. நான் பெரிய ஆளு. கண்டுக்காத நீங்க எல்லாம் முட்டாப்பசங்கன்னு சொல்ல வந்து சித்தப்பாவ இழுத்திருக்கார் போலிருக்கு.ஹும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி.வா. ஆமாம், அப்படித் தான் என் தம்பியும் (சித்தப்பாவின் கடைசி மகன்) சொல்கிறார்.

   Delete
 10. அவரவர்க்கு மனதில் தோன்றிய கதையெல்லாம் விடுவார்கள் போல... இந்து பேப்பரிலேயே நீங்கள் பதில் சொல்லலாமே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எல்லோருக்கும் தாங்கள் அவரோடு நெருக்கமானவர்களாக இருந்தாப்போல் காட்டிக்க எண்ணம். அதுக்காகச் சொல்லாததை எல்லாமா சொல்லுவது! இந்து தமிழில் சூரியா எழுதியதுக்கு பதிலாக சாரு நிவேதிதா தன்னோட வலைப்பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் பதிலாக இதைக் கொடுத்திருக்கார். சுட்டி தரேன். பாருங்க. அங்கே போய்ச் சொல்லலாம் எனில் எங்குமே கருத்திட முடியாமல் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி! (

   Delete
 11. நான் அவ்வபோது நமது எழுத்தாளப் பெருந்தகைகளின் பக்கங்களுக்கு சென்று படிப்பது வழக்கம் - கிட்டத்தட்ட 10 வருடங்களாக. பழக்க தோஷத்தினால் சா.நி.யின் பக்கத்துக்கும் போனதால், நேற்று அவருடைய கட்டுரையைப் படித்தேன் (நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்). தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சினிமா சரக்குபோல, அடுத்தாற்போல் கஞ்சா கருப்பு, யோகிபாபுவுக்கும் இவர் எழுதக்கூடும். கவனமாய் இருந்து அவசியம் படிக்கவேண்டும் என ஆரம்பத்தில் நினைத்துக்கொண்டேன்..!

  அசோகமித்திரன்பற்றி அவர் எழுதியிருந்த அழகை, நானும் படித்து சிலிர்த்தேன். வேறென்ன சொல்வது. அரைநூற்றாண்டுக்காலம் இலக்கியத்தில் இயங்கிய தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரனை கவனிக்க, அவர் எழுத்துபற்றி சிலாகிக்க, கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தமிழின் இலக்கிய பெரிசுகளுக்கு நேரம் கிடைத்திருக்கவில்லை. என்னமோ அவர் மறைவதற்கு சில வருடங்கள்முன், ஏதோ நாலாநாளிலிலிருந்து தான் அவர் எழுதுவதுபோல், இலக்கிய எழுத்தாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் அதைக் ‘கண்டு பிடித்து’ ஆஹா.. உண்டா இவர்மாதிரி.. என்பதுபோல் புகழ ஆரம்பித்திருந்ததையும் கவனித்திருக்கிறேன். Better late, than never.. I thought.

  ஆனால் தன் கட்டுரை சுவாரஸ்யமாக அமைய வேண்டும் என்பதற்காக, இதையெல்லாம் யார் சரிபார்க்கப்போகிறார்கள் என்கிற நிலையில் தன்னைத்தானே சிலசமயங்களில் ’ஆசான்’ என்று தனது வலைப்பக்கத்தில் கூறிக்கொண்ட இந்தப்பெரிசு, அவ்வப்போது இப்படியெல்லாம் அடித்துவிடுகிறது என்பது பலரால் கவனிக்கப்பட்டிருக்கும்தான். இப்படி அளப்பது இதுவல்ல முதல்தடவை. யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லைபோலும். சா.நி.யைத் தெரிந்தவர்களுக்கு இதில் அதிர்ச்சி ஏதுமிருக்காது!

  எனினும், அருகிலிருந்து அவரது வாழ்க்கையை கவனித்த உறவினர் என்கிற நிலையில், அசோகமித்திரனின் ‘வறுமை’யைப்பற்றி ஒரு பதிவின்மூலம் நீங்கள் தெளிவுபடுத்தியது சரிதான். தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் - பலரில்லை எனினும், அவர்களுக்கு உண்மை தெரிவதே நல்லது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், இன்னும் சொல்லப் போனால் அவருக்குக் குழந்தைகள் பிறக்கும் முன்னர் இருந்தே அவர் கல்யாணத்தில் இருந்தே எங்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் வறுமையில் வாடி இருந்தால் எங்க தாத்தா, பாட்டி பெண்ணைக் கொடுத்திருப்பாங்களா? கொஞ்சமும் யோசிக்காமல் கன்னாபின்னாவென ஏதேனும் புளுகுவதே இவங்களுக்கெல்லாம் வேலை!

   Delete
 12. இப்படியும் சிலர்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றி.

   Delete
 13. Replies
  1. வாங்க நடராஜன் மீனாக்ஷிசுந்தரம், பகிர்ந்துக்கலாம். இதன் மூலம் போய்ச் சேரவேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் நல்லது தானே!

   Delete
 14. நீங்கள் உங்கள் சித்தப்பா பற்றி விரிவாக சொன்னது நல்லது தான்.
  ஒருவரை பற்றி எழுதும் போது நன்கு தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.
  அவர் எங்கு சொல்லி இருந்தாரோ அங்கும் இதை சொல்லுங்கள்.
  எல்லோரும் தெரிந்து கொள்ள வேன்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் சொல்லி இருக்கார். பின்னர் முகநூல் பக்கத்திலும் சொல்லி இருக்கார். அங்கே உள்ளே போய்ப் பதில் கொடுக்க முடியவில்லை.

   Delete
 15. https://www.facebook.com/charu.nivedita.9/posts/1946356472067662 முகநூலில் அவர் பகிர்ந்திருப்பது. இதே தான் தன்னுடைய வலைப்பக்கும் பகிர்ந்திருக்கார். புத்தகங்கள் எங்கே என இவர் கேட்டாராம். அதுக்குச் சித்தப்பா புத்தகங்கள் வைக்க இடமே இல்லை என்றாராம். ஹூம்! தி.நகர் வீட்டில் அதை இடிச்சுக் கட்டும் முன்னர் மாடியில் வராந்தாவை அடுத்த பெரிய கூடத்தில் நான்கு அலமாரிகள் முழுக்கப் புத்தக மயமாக இருந்ததைச் சாரு நிவேதிதா பார்த்திருப்பாரா? சந்தேகமே! அதை இடித்துக் கட்டும்போது தான் புத்தகங்களை எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொடுத்தார். தில்லானா மோகனாம்பாள் அவரிடமிருந்தே நேரடியாகப் படம் எடுக்கையில் வாங்கிப் போனதாகச் சொல்லுவார். பின்னரும் அவருக்கு வரும் புத்தகங்களை எங்களைப் போன்ற உறவினர்களுக்குக் கொடுத்திருக்கார். இடம் இல்லாமல் எல்லாம் இல்லை. அவர் மூத்தமகன் வீட்டில் இடம் இல்லை எனில் அந்தச் செய்தியே பொய்! சாரு நிவேதிதா நிஜமாகவே அந்த வீட்டைப் பார்த்திருப்பாரா சந்தேகம் தான்! கண் பிரச்னையால் முன்னைப் போல் படிக்க முடியவில்லை என்று வருந்துவார். ஆபரேஷன் செய்து கொண்டும் கண்களில் அவருக்குச் சில குறைபாடுகள் இருந்து வந்தன. அதனால் படிக்கவோ, கணினியைப் பார்க்கவே முடியலை என வருந்துவார்.

  ReplyDelete
 16. மன எரிச்சல் அதிகமாகிறது. ஒரு சாது மனுஷனை அவர் மறைந்த பிறகு பேசுபவர்கள் தங்கள் மேன்மைக்காகவே பொய் உரைக்கிறார்கள்.
  உங்க சித்தப்பாவை விட நேர்மையான எளிமையான மனிதரைப் பார்த்ததே இல்லை. இத்தனை
  பெரிய அறிவாளியை இவ்வாறு மனம் போன போக்கில்
  எழுதுவதற்கு எத்தனை மனக் கொடூரம் வேண்டும்.

  ReplyDelete
 17. பொதுவா எழுத்தாளர் கஷ்டப்பட்டார் என்பதைச் சொல்லவும், அவருக்கு போதுமான அளவு ரெகக்னிஷன் மக்களிடையே இல்லை என்பதைச் சொல்லவும் எக்சாஜரேட் செய்து எழுதுவார்கள் (மறுக்க எழுத்தாளர் இருக்கமாட்டாரே). இதைப்போலத்தான் அனேகமாக எல்லா எழுத்தாளர்களையும் கவிஞர்களைப் பற்றியும் செய்திகள் அவர்கள் மறைந்தபிறகு வரும்.

  முழுமையாகத் தெரியாமல் மசாலாவுக்காக இவற்றை இப்படி எழுதுவது என்பது சரியில்லைதான். அதுவும் 'சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார்' என்று பொய் உரைப்பது பெருமை சேர்ப்பது இல்லை.

  உங்கள் பதில்கள் குறைந்தபட்சம் ஆவணமாக இருக்கும். நீங்களும் 'முன்னுரை' என்று சொல்லி உங்கள் உறவையும் அனுபவங்களையும்' சுருக்கமா ஒவ்வொரு பதிவுலும் எழுதினால், பிற்காலத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் என்று தேடுபவர்கள் உண்மைச் செய்திகளையும் அறிந்துகொள்ள உபயோகமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன், இதைத் தான் என் தம்பியும் சொன்னார். நான் அதைக் குறித்து எழுதுவதற்குத் தான் இப்போது என்னைத் தயார் செய்து கொள்கிறேன்.

   Delete
 18. மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்தவர்களை பற்றி எழுதும் போதே இவ்வளவு முரண்பாடு என்றால், என்ன சொல்ல முடியும்? எழுதும் முன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு வேண்டாமா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, வறுமையில் வாடினார், மனைவி அப்பளம் இட்டு வீடு வீடாகப் போய் விற்றார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். :( இன்னும் சிலர் அவங்க உறவினர்களுக்கு அவர் வறுமை பத்திப் பேச விருப்பம் இல்லாமையால் மறுப்புச் சொல்றாங்க என்கிறார்கள்.

   Delete
 19. நான் ரொம்ப லேட், லேட் என்பதை விட ஒருநாள் வராமல் விட்டாலே கண்ணுக்கு பல போஸ் தெரியாமல் போய் விடுது.

  உயிருடன் இருக்கும்போதுதான் கண்டபடி பேசுவார்கள், ஆள் இல்லை எனில் பொதுவா நல்லதை மட்டுமே பேசுவார்கள், இது எழுத்தாளர்களே எதுக்கு இப்படி இல்லாததை எல்லாம் இருந்ததாகச் சொல்கின்றனரோ.. ஒவ்வொன்றும் விளக்கம் சொல்லிப் பலன் இல்லை கீசாக்கா.. சிலதை கடவுளின் பொறுப்பில் விட்டுவிடுவதே மேல் என நான் நினைப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. இல்லை அதிரடி, சில எழுத்தாளர்கள் இறந்தவர்களைப் பத்தித் தான் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி வருகின்றனர்.

   Delete