எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 12, 2019

மோர்க்கூழ் சாப்பிடறீங்களா?

எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும் இப்போல்லாம் யாரும் பண்ணிச் சாப்பிடுவதாத் தெரியலை! எல்லாரும் ஸ்விகி, ஜொமோட்டோ என ஆர்டர் பண்ணி பிட்சா, பர்கர், ஃபிங்கர் சிப்ஸ் என வாங்கிச் சாப்பிடும்போது இதைச் சீண்டுவது யாரு? யாரும் இல்லை. ஆனால் நாங்க இருக்கோமே! திடீர் திடீர்னு நம்ம ரங்க்ஸுக்கு மசக்கை வரும்! இப்படி ஏதேனும் பண்ணச் சொல்லுவார். புளி உப்புமா உங்க வீட்டிலே பண்ணுறாப்போல் பண்ணு என்பார். இங்கே மாமியார் வீட்டிலே அது அதிகம் பண்ண மாட்டாங்க! நாங்க வெங்காயம் எல்லாம் போட்டுப் பண்ணுவோம். அரைச்சும் பண்ணுவோம். அரைக்காமல் அரிசிமாவில் புளி ஜலம் விட்டும் பண்ணுவோம். அதை அப்புறமாப் பார்த்துக்கலாம். அதோ பானுமதிக்குக் கோபம் வருது பாருங்க! விஷயத்தை விட்டுட்டுக் கதை சொல்றாங்களேனு சொல்றாங்க! ஹிஹிஹி! அ.வ.சி. பானுமதி!

திடீர்னு இன்னிக்குக் காலம்பர டிஃபனுக்கு மோர்க்கூழ் பண்ணலாம்னு தோணிச்சு! இம்முறை எனக்கு! என்னடா கஞ்சி இல்லையானு பார்க்கிறீங்களா! இல்லை! மருத்துவர் காலம்பர கஞ்சி குடிக்கக் கூடாது! டிஃபன் தான் சாப்பிடணும்! வேணும்னா கேழ்வரகிலே மோர் விட்டுக் கூழ் செய்து சாப்பிடுங்க! இல்லைனா கம்பு மாவிலே, தினை மாவிலேனு சொல்லிட்டாங்க! சிறு தானியத்தை இப்படித் தான் சேர்க்கலாமாம். ஆகவே இப்போப் பழைய குருடி கதவைத் திறடி கதையாக காலையிலே டிஃப்ப்ப்ப்பன்!  நம்மவருக்கு இது ஒத்து வரலைங்கறதாலே மறுபடி கஞ்சிக்கு மாறியாச்சு! :)))) ஒரு வாரமாக் கஞ்சி தான்.


அரிசி மாவு இரண்டு கரண்டி

 இன்னிக்கு என்னனு யோசிச்சதிலே தோன்றியது தான் இந்த மோர்க்கூழ் பண்ணும் எண்ணம். உடனடியாக மோரை எடுத்து வைத்துவிட்டு சம்புடத்தில் இருந்து இரண்டு கரண்டி (போதும் இரண்டு பேருக்கு! மோர் விட்டுக் கரைத்தால் நிறைய ஆயிடும். இதிலேயே கொஞ்சம் எடுத்து வைச்சுட்டேன்!) அரிசிமாவு எடுத்துக் கொண்டு அதில் உப்புச் சேர்த்து மோரை விட்டு நன்றாகத் தளரப் பிசைந்தேன். ஓடும்படி கூட இருக்கலாம். தப்பில்லை.

                                   
                                        இதுக்குக் கொஞ்சம் புளிச்ச மோர் தான் நல்லா இருக்கும். மோர் அந்தப் பாத்திரத்திலே இருக்கு!

கொஞ்ச நேரம் பிசைந்த மாவை ஊற வைக்கவும். பின்னர் கடாய் அல்லது உருளி அல்லது கல்சட்டியை எடுத்துக்கொள்ளவும். நான் இன்னிக்குக் கல்சட்டியைப் பயன்படுத்தலை! அதுக்கு வேறே வேலை இருந்தது.  ஆகவே அலுமினியம் சட்டியை எடுத்துக் கொண்டேன். அதில் நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உபருப்பு, கபருப்பு, பச்சை மிளகாய், மோர்மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம், இஞ்சி எல்லாம் போட்டுக் கொண்டேன். மோர் மிளகாயை முதலில் காய்ந்த எண்ணெயில் போட்டு வறுத்துக்கலாம். இங்கே நம்ம ரங்க்ஸுக்கு மோர் மிளகாயெல்லாம் கறுப்பாக வறுத்தால் தீய்ந்து விட்டதுனு சொல்லிடுவார். ஆகவே கறுப்பாகும் வரை வறுக்கலை. எண்ணெய் கொஞ்சம் அதிகம் இருந்தால் நல்லது.

மாவில் உப்புச் சேர்த்துக் கொண்டு மோரை விட்டுக் கலந்து தளரப் பிசைந்து கொள்ள வேண்டும்.
தாளிக்கும் பொருட்கள்: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தவிர்த்துப் பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, மோர்மிளகாய். அந்த மிளகாய் உண்மையில் மோரில் போட்டு ஊற வைத்துக் காய வைச்சதில்லை. புளி ஜலத்தில் போட்டுக் காய வைச்சது. இதுவும் நல்லா இருக்கும்/இருந்தது.


கடாயில் எண்ணெய் காய்கிறது.தாளிதம் செய்தது


மாவுக்கரைசலை ஊற்றிய போது 

அதன் பின் கரைத்து வைத்திருக்கும் மாவுக்கரைசலை எண்ணெயில் உள்ள தாளிதத்தில் விடவும். விட்டதும் மாவைச் சுற்றி எண்ணெய் தெரிய வேண்டும் படத்தில் உள்ளது போல்! வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம். பின்னர் கைவிடாமல் கிளறவும். கிளறியதும் பாத்திரத்தை விட்டுச் சுருண்டு கொண்டு அல்வா மாதிரி வரும்.கடைசியில் மாவு சுருண்டு வரும்போது எடுக்கணும். அதிகப்படி எண்ணெய் இருந்தால் அதுவும் கசிய ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைக்கவும். பார்க்க, கடைசிப் படம்! கையால் எடுத்தால் உருட்டும் பதம் இருக்கணும். இதான் மோர்க்கூழ்! இன்னும் கொஞ்சம் தளர வேண்டுமானாலும் எடுக்கலாம். சிலர் நல்ல ஓட ஓட மாவைக் கரைத்துக் கொண்டு கூழையும் தளர எடுத்துக் கொண்டு விரலால் எடுத்துச் சாப்பிடும்படி வைத்துக் கொள்வார்கள். நம்ம வீட்டில் அல்வா பதம் தான் பிடிக்கும்.

ஆகவே இப்படியே எடுத்தாச்சு. இது காலை வேளையில் சாப்பிடவே லாயக்கானது. மாலை வேளையில் அல்லது இரவில் ஜீரணம் ஆவது கடினம். எண்ணெய் அதிகம் என்பதால் காலை ஆகாரத்தில் வைத்துக் கொள்வதே சிறந்தது.  பிடிச்சவங்க செய்து பார்க்கலாம். இப்போதைய காலத்தில் பெரும்பாலோர் எண்ணெய் அதிகம், அதோடு புளித்த மோர் என்றெல்லாம் யோசிப்பார்கள். ரொம்பப் புளிப்பான மோரும் பயன்படுத்தக் கூடாது!

 இதைத் "திங்கற" கிழமைக்குப் போட ஶ்ரீராமுக்குத் தான் அனுப்பி வைச்சேன். அதுக்குள்ளே நெ.த.வோட மோர்க்கூழ் வெளிவந்து விட்டது. அப்புறமா இது போணியாகாதுனு தோணவே ஶ்ரீராமை இதைப் போடவேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனாலும் மெனக்கெட்டுப் படங்கள் எல்லாம் எடுத்தது! மனசு கேட்கலை! என்னோட வலைப்பக்கத்தில் வெளியிட்டு விட்டேன். நாளைக்கு/இன்னிக்கு எ.பி.யில் என்ன வருதுனு பார்த்துட்டு இதை வெளியிடணும். :))))))

31 comments:

 1. மோர்க்கூழ் நல்லா இருக்கிறது.
  படங்களுடன் செய்முறை குறிப்பும் நன்றாக இருக்கிறது.
  முன்பு செய்து இருக்கிறேன். இப்போது செய்வது இல்லை. விரும்பி கேட்டால் செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! இங்கே மோர் அடிக்கடி மிஞ்சும். வேலை செய்யும் பெண்ணுக்குக் கொடுத்தது போக மிச்சம் இருக்கும்.அப்போ இம்மாதிரி ஏதேனும் செய்வேன். சில சமயம் ரவா உப்புமாவுக்குக் கூட ஜலம் விடாமல் மோரே விட்டுக் கிளறி விடுவேன்.

   Delete
 2. கடைசியில் அல்வா போலவே இருக்கிறது பிய்த்துதான் திங்கணுமோ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, அல்வா பதம் தான் நம்ம வீட்டிலே பிடிக்கும்!

   Delete
  2. அல்வா பதம்தான். ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட நன்றாய் இருக்கும். சில இடங்களில் டைமண்ட் டைமண்டாக துண்டங்கள் போட்டுக்கூட தருவார்கள்.

   Delete
  3. வாங்க ஶ்ரீராம். உங்களுக்கும் அல்வா பதம் தான் பிடிக்குமா? ஆமாம், துண்டங்கள் போட்டும் பார்த்திருக்கேன்.

   Delete
  4. அல்வா பத்மேதான் இங்கும். ஸ்பூன் போட்டு சாப்பிட செமையா இருக்கும்....துண்டங்களும் போட்டுச் செய்ததுண்டு. ரைஸ் ஸால்டி கேக் நு பேர் எல்லாம் சூட்டி...ஹிஹிஹி...டைமன்ட், சதுரம் ஷேப், ரவுண்ட் ஷேப் கூட பிஸ்கட் கட்டர் வைச்சு கட் செஞ்சு அதுலயும் ஒரு பரவை ஷேப் ஒன்னு உண்டு அந்தக் கட்டரை வைச்சு கட் செய்து மூக்கிற்கு மிளகாய் துண்டை வைத்து காலுக்கும் அதே மிளகாய் துண்டை வைத்து, கொண்டைக்கு கறிவேப்பிலை, கண்ணுக்கு கடுகு என்று குட்டீஸுக்காக. பறவையின் நுனியில் கத்தி வைத்து கீறி இறகு இருப்பது போல் ...அதெல்லாம் ஒரு காலம்...

   கீதா

   கீதா

   Delete
 3. மோர்க்கூழ் - என் தில்லி நண்பர் ஒருவர் வீட்டில் பெரியவருக்கு இது ரொம்பப் பிடித்தது - தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்டவர்! அடிக்கடி மோர்க்கூழ் இருக்கும் காலை உணவாக! அங்கே சாப்பிட்டதுண்டு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், செய்முறை எளிது தான்! ஆனாலும் ஒருத்தருக்குனு பண்ணும்போது கொஞ்சம் கஷ்டம் தான்!

   Delete
 4. இரண்டு பேர் ஒரே ரிசிப்பி பதிவை எழுதி இருந்தால் அந்த இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிடலாமே

  ReplyDelete
  Replies
  1. அட! ஆமா இல்ல! இப்படியும் செய்திருக்கலாமே! ஶ்ரீராம், குறிச்சுக்குங்க! ஆறு வித்தியாசங்களாவது கண்டு பிடிக்கலாமே! :))))

   Delete
  2. அப்புறம் ரெண்டு ரெசிப்பியையும் கலந்து கட்டி, புதுவித உணவைக் கண்டுபிடிக்க ஆசையா மதுரைத் தமிழன்?

   Delete
  3. இரண்டுமே ஒரே உணவு தானே! இதில் புதுசாக் கண்டுபிடிக்க எதுவும் இல்லை.

   Delete
  4. செய்திருக்கலாம்!

   Delete
  5. இஃகி,இஃகி,இஃகி,இஃகி! போட்டுட்டுப் படிக்கிறவங்களை ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொல்லிப் பரிசு கொடுத்திருக்கலாம்.

   Delete
 5. மோர்கூழை நான் மறக்கவே மாட்டேன் அது போல நெல்லைத்தமிழனையும்தான்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, மதுரைத் தமிழரே! நெல்லைத் தமிழர் சொன்னமாதிரிச் செய்து வாயைத் திறக்க முடியாமல் போயிடுத்தோ? இஃகி,இஃகி,இஃகி!

   Delete
 6. ம்ம்ம்..செய்முறை நல்லாத்தான் இருக்கு. என் பையன் இன்னும் அதிகமா மோர்மிளகாய் போடணும் என்பான்.

  எனக்கு மோர்க்கூழ்லாம் அவ்வளவாகப் பிடிக்காது. அதுக்கு வெறும் உப்புமாவே பரவாயில்லை.

  இதுல ஒரு அட்வாண்டேஜ் என்னன்னா, பெண்கள் மோர்க்கூழ் சாப்பிட ஆரம்பிச்சாங்கன்னா, வாய்ல ஒட்டிக்கிட்டு கொஞ்சம் பேசாம இருப்பாங்க. அவ்ளோதான்.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. எங்க பிறந்த வீட்டில் பச்சை மிளகாய் போடாமல் மோர்மிளகாய் மட்டுமே தாளிப்பில் இருக்கும். ஆனால் இங்கே அவ்வளவாப் பிடிக்காது. சொல்லப் போனால் கீரையில் கூட மோர்மிளகாய், குழம்புக் கருவடாம் எல்லாம் அம்மா வறுத்துச் சேர்ப்பார். இங்கே அதெல்லாம் பிடிக்காது! என்னிக்காவது தோன்றினால் எனக்கு மட்டும் தனியே வறுத்துச் சேர்த்துப்பேன்!

   Delete
 7. நான் இஞ்சி போடலை... அடுத்த முறை அதையும் சேர்த்துப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பச்சை மிளகாய், இஞ்சி இரண்டின் ருசியும் நன்றாக இருக்கும் மோர்க்கூழில்!

   Delete
 8. இந்த அல்வா பதம் தான் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்...

  அங்கு "மோர்க்கூழ்" வெளியிட்டிருந்தால், ஒரு போட்டி வைத்திருக்கலாம்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் டிடி. அல்வா பதம் தான்! எல்லோருக்கும் "அல்வா" கொடுக்கலாமே! அங்கே மோர்க்கூழ் வெளிவந்துவிட்டதே! மறந்துட்டீங்க போல!

   Delete
 9. வணக்கம் சகோதரி

  மோர்க்கூழ் படங்களுடன் ரொம்ப அருமையாய் பண்ணியுள்ளீர்கள் செய்முறை விளக்கங்களும் மிக அழகாக தெளிவாக எழுதியுள்ளீர்கள். எனக்கு மோர்க்கூழ் பிடிக்கும். அம்மா வீட்டில் இருந்த போது பாட்டி செய்து தந்து சாப்பிட்டுள்ளேன். இங்கு எங்கள் மாமியாருக்கும் பிடிக்கும். அவர்களுக்காக செய்துள்ளேன். வீட்டில் மற்றவர்களுக்கு அவ்வளவாக பிடித்தமில்லை. அதையே அடுப்பில் சிம்மில் வைத்து நன்றாக உதிர்த்து அரிசிமாவு உப்புமாவாக செய்து கொடுத்தால், என் கணவர், குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு தொட்டுக்கொள்ள கூடவே தேங்காய் சட்னியும் கேட்பார்கள். நான் வெறும் உளுந்து அப்பளம் சுட்டு அதனுடன் கலந்து சாப்பிடுவேன். இது இரண்டுக்கும் பொருத்தம் எனக்கு மிக நன்றாக இருக்கும்.

  எண்ணெய் விட்டு வெறும் மோர்க்கூழாக சாப்பிட்டால், இப்போதெல்லாம் எனக்கும் செரிமான பிரச்சனை வருகிறது. அதனால்,அப்போது அம்மா வீட்டில் சாப்பிட்ட பழைய நினைவுகளை மட்டுமே நினைத்து வருகிறேன். அன்று எ. பியில் சகோதரர் நெல்லைத் தமிழர் செய்து பகிர்ந்ததையும், இன்று தாங்கள் செய்த பகிர்ந்த மோர்க்கூழையும் மானசீகமாக சுவைத்து திருப்தி அடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, இங்கே எங்க மாமியார் வீட்டில் அபூர்வமாகத் தான்! என் அம்மா வீட்டில் அடிக்கடி காலம்பர சாப்பாடு சமைக்கையிலேயே சின்ன இரும்புச் சட்டியில் அம்மா கிளறிக் கொடுப்பார். என்னதான் இருந்தாலும் அந்த ருசி இப்போ இல்லை தான். இதற்கு நாங்க எதுவும் தொட்டுக்க மாட்டோம். சூடாக இருக்கும்போதே சாப்பிடுவோம். கேழ்வரகு மாவு, தினை, கம்பு, போன்ற சிறுதானிய மாவுகளிலும் இப்படிப் பண்ணலாம்.

   Delete
  2. இதுக்கு தொட்டுக்க ஒன்றுமே வேண்டாம். மோர் மிளகாய் வத்தலின் சுவையில் நல்லெண்ணெய் பெருங்காயம் வாசத்துடன் அப்படியே சாப்பிட்டு விடலாம். அதிலும் தாங்கள் ப. மிளகாய் இஞ்சி வேறு சேர்த்திருக்கிறீர்கள். (ஆகா.. சொல்ல. சொல்ல இனி(உறை)க்குதடா என பாட வேண்டும் போல் உள்ளது.ஹா. ஹா. ஹா.) தயிர் ஊற்றி அல்லது புளி கரைத்து விட்ட கலந்த அரிசிமாவு உதிர்த்த உப்புமா வுக்கு சுட்ட அப்பளம் தொட்டுக்க எனக்கு பிடிக்கும்னு சொன்னேன். என் கணவர் அதற்கும் தேங்காய் சட்னி கேட்பார்.ஆம்.. சிறுதானிய மாவு வகைகளிலும் பண்ணலாம். நன்றி.

   Delete
  3. வாங்க கமலா, மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. சுட்ட அப்பளத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட எனக்குப் பிடிக்கும்.

   Delete
 10. நம் உரையாடல்களுக்குப் பிறகு மறுபடி எடுத்து வைத்திருந்தேன். நீங்கள் இங்கே போட்டு விட்டீர்கள்!​

  ReplyDelete
  Replies
  1. அட? அப்படியா ஶ்ரீராம்? நான் வந்ததே மறுபடி வர வேண்டாமேனு நினைச்சேன். அம்புடுதேன்! :))))

   Delete
 11. ஹை கீதாக்கா நம்ம வீட்டுல இது நல்லா செல்லுபடியாகும். (நம்ம வீட்டுல எதுதான் செல்லாது?!!!!!!! எல்லாமே செல்லும்)

  இதே தான் நம் வீட்டிலும்...அல்வா பதம்தான். நான் ஒரு 10 நாள் முன்னாடினு நினைக்கிறேன் ராகி மொத்தே அதான் ராகி கூழ் புளிச்ச மோர் கரைத்து தாளித்துச் செய்தேன். அப்புறம் இதுவும் தான். புளிச்ச மோர் ரொம்ப நல்லாருக்கும் இதுக்கு.

  நெல்லைக்கு கூட ஃபோட்டோ அனுப்பியிருந்த நினைவு...

  ஜூப்பரா இருக்கு பார்க்க. நானும் பெரும்பாலும் காலையில்தான் செய்வது வழக்கம். மாலை எல்லாம் ஜீரணம் ஆவதில்லை. உங்க ஃபோட்டோ பார்த்ததும் ஒரே நாவில் நீர்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இப்போல்லாம் இதை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள் இல்லை. பண்ணவும் தெரியறதில்லை. ராகி முத்தே/மொத்தே வேறே மாதிரி இல்லையோ?

   Delete