எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 26, 2019

மின் தூக்கியில் செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயம்!

நேற்று வந்த விருந்தினருக்காக உளுந்து வடை மாவு தனியாகக்  கொஞ்சம்  அரைத்து வெங்காயம் போட்டுக் கலந்து வைத்தேன். வரவிருந்தது சென்னையில் எங்க வீட்டை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பில்டர்/தமிழில் என்ன? கட்டிடம் கட்டுபவர் என்னும் பொதுவான விளக்கமே வருது. அவர் மனைவியுடன் வரப்போவதாகச் சொன்னதால் இனிப்பு என்ன செய்வது என யோசித்துவிட்டுப் பின்னர் கிச்சாப்பயலுக்காகப் பண்ணின திரட்டுப் பாலே போதும் என முடிவு செய்தோம். கடைசியில் அவங்க சனிக்கிழமை கோயிலுக்குப் போய்க் கிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டங்களில் மாட்டிக் கொண்டதில் வரவில்லை. ஆகவே நேற்று வருவதாகச் சொல்லி இருந்தார்கள். அவங்க ஓர் கல்யாணத்துக்காக வருவது தெரியும். மண்டபமும் எதிரே தான்! என்றாலும் நாங்களும் முறையாக உபசரிக்கணும்னு தயாராக இருந்தோம்.

பதினோரு மணிக்கு மேல் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது வந்து கொண்டிருப்பதாக! சரினு காத்திருந்தோம். சில நிமிடங்களில் அவரிடமிருந்து அழைப்பு. லிஃப்டில் மாட்டிக் கொண்டிருப்பதாக! கடவுளே! கலங்கிப் போனோம் முதலில் நினைத்தது மின்சாரம் இல்லையோ என. உடனே பாதுகாவலரைக் கூப்பிட்டு ஜெனரேட்டர் போடச் சொன்னதில் அப்போதும் லிஃப்ட் எடுக்கவில்லை.  சாவியைப் போட்டு லிஃப்டைத் திறக்கச் சொல்லிச் சொன்னால் அவர் மொட்டை மாடியில் லிஃப்ட் ரூமிற்குப் போகிறார். அவரைப் பார்த்து நான் மொட்டை மாடிக்குப் போகவேண்டாம். கீழே போய்த் திறங்க என்று சொல்லிவிட்டு நானும் கீழே இறங்க ஆரம்பித்தேன்.. கீழே இறங்கும் முன்னர் பிள்ளையாரிடம் ஒரு ரூபாய் வைத்துவிட்டுக் காப்பாத்திக்கோ, இது உன் பிரச்னை எனச் சொல்லிட்டுக் கீழே இறங்கினேன். அதற்குள்ளாக அங்கே கூட்டம் கூடி விட்டிருக்கிறது. நம்மவர் முன்னாடியே போய்விட்டார்.

ஒவ்வொரு தளத்திலும் கீழே போகாமல் இருந்தவர்கள் அனைவருமே இப்போது என்னைக் கீழே இறங்காதீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க எனக்கோ கவலை பிடுங்கித் தின்றது. அதற்குள்ளாகக் குடி இருப்புவாசி ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் விஷயம் தெரிந்து உடனே கீழே வந்து லிஃப்டின் சாவியைக் கேட்டு வாங்கிக் கதவை திறந்து அவர்களை வெளியே விட்டார். சுமார் ஆறு நபர்கள். அனைவருமே பெரியவர்கள். நாங்க நினைச்சது பில்டரும் அவர் மனைவியும் மட்டும் என. நபர்கள் அதிகம் ஆகவே லிஃப்ட் அதிக கனம் தாங்காமல் இயங்க மறுத்திருக்கிறது. நம்ம நண்பர் ஓர் பில்டர். அவருக்குக் கூடத் தெரியலையேனு நினைத்தால் அவர் சொன்னார், இப்போதெல்லாம் லோட் ஜாஸ்தி ஆனால் லிஃப்ட் தானாக இயங்கிக் கதவைத் திறந்து ஆட்கள் வெளியே போகும்வரை இயங்காது! ஆகவே இதுவும் அப்படித் தான் என நினைத்தேன் என்றார். எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு! மூன்று பெண்கள்.மூன்று ஆண்கள். குடி இருப்பு வளாகமே ஆடிப் போய்விட்டது.  இனி லிஃப்டுக்கு வெளியே நான்கு பேருக்கு மேல் உள்ளே செல்லவேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வைக்கலாம் என யோசனை! அனைவரும் ஒரு மனதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் சமயங்களில் குழந்தைகள் விளையாடும்போது போய் மாட்டிக் கொள்கின்றனர்.

ஒரு வழியாக வந்தவர்களை உபசரித்து அனுப்பினோம், ஆனால் அவங்க வடை எல்லாம் சாப்பிடவில்லை. காஃபி கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
வடை மாவை என்ன செய்யறது?  சாயங்காலமா அந்த மாவை வடை தட்டினேன். நேத்திக்குனு பார்த்து  வீட்டு வேலை செய்யும் பெண்மணி வேறே விடுமுறை.  பாத்திரங்கள் தேய்த்து, வீடு பெருக்கித் துடைத்து வடை தட்டினு வேலை சரியாப் போச்சு! சரி அவங்க தான் சாப்பிடலையே, இனிமே நாம தானேனு கிச்சாப்பயல் பிறந்த நாளுக்குச் செய்த வடை மாவும் கொஞ்சம் போல் மிச்சம் இருந்ததையும் இதில் சேர்த்துக் கொண்டேன். வடைகளாகத் தட்டித் தேநீருடன் சாப்பிட்டாச்சு. மிச்சம் 3 அல்லது 4 இருந்தது. காலையில் மைக்ரோவேவில் சூடாக்கி வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துட்டேன். நம்ம நெல்லைத் தமிழரை வெறுப்பேத்தணும்னு திடீர்னு தோணவே வடை தட்டும்போதும் மாவையும் படம் எடுத்து எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் பகிர்ந்தேன். ஜன்மம் சாபல்யம் ஆச்சு. முதலில் இந்த எண்ணம் இல்லாததால் உளுந்தை ஊற வைச்சதில் இருந்து எடுக்கலை. வடை மாவில் வெங்காயம் போட்டு வைத்திருப்பது தான் கீழே பார்ப்பது. 


வெந்து கொண்டிருக்கும் வடைகள். பெரிதாகத் தட்டியதால் இரண்டு இரண்டாகப் போட்டிருக்கிறேன்.


ஆக நாமும் "திங்க"க்கிழமை "திங்க"ற பதிவு போட்டாச்சு! இப்போவும் ஜன்மம் சாபல்யம் ஆயிடும். 

50 comments:

  1. இதைப்பார்த்து நெல்லைத்தமிழர் மட்டும்தான் வெறுப்பேறணுமா ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, கில்லர்ஜி! ஜாலியா இருக்கு! :)

      Delete
  2. இதுக்கு வெங்காயம்னு சொல்லும்போது சின்ன வெங்காயம் உபயோகிப்பீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு, முன்கூட்டியே தயார் செய்யும்போது சி.வெ.தான். அவசரம்னால் பெரியவெங்காயம். ஆனால் எதாக இருந்தாலும் மெலிதாகப் பொடியாக நறுக்குவேன். பெரிது பெரிதாக வாயில் அகப்பட்டால் பிடிக்காது!

      Delete
  3. லிஃப்ட் - கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்தான். நான்கூட மொபைல் இல்லாம லிஃப்ட்ல போனா கொஞ்சம் சங்கடமா உணர்வேன். இப்போதான் சில நாட்களுக்கு முன்னால் ரிப்பேர் செய்தார்கள். அதனால இன்னுமே கொஞ்சம் நெருடலா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் உள்ளூரக்கொஞ்சம் பயமாத் தான் இருக்கும். சஷ்டி கவசமோ ஸ்ரீராமஜயமோ ஜபித்துக் கொண்டே இருப்பதால் கொஞ்சம் கலவரம் இல்லாமல் இருக்கும். முன்னால் எல்லாம் நாங்க இங்கே வந்த புதுசில் மின்சாரம் அடிக்கடி போகுமா, அப்போக் கண்டிப்பாக யாரானும் மாட்டிப்பாங்க! ஆனால் உடனே ஜெனரேட்டர் போட்டுவிடுவதால் பத்து நிமிஷத்துக்குள் சரியாகி விடும். இது சுத்தமாக இயங்கவே இல்லை.எங்க வளாகத்து லிஃப்டில் உள்ளேயும் தொலைபேசி (இன்டர்காம்) உள்ளது. நம்மவர் மாட்டிக் கொண்டப்போ என்னைக் கூப்பிட்டுத் தான் பாதுகாவலருக்குச் சொல்லச் சொன்னார்.

      Delete
  4. எ.பில ரெகுலரா வரும் இடுகைக்குக் கீழ தொடர்ச்சியா வேற ஏதேனும் போடுவாங்க...விமர்சனம் என்பது போல. இங்க என்னன்னா முதல்ல வயத்தக் கலக்கற நியூஸ் போட்டுட்டு அதுக்குக் கீழ திங்கற பதிவு போடறீங்க.

    நான்லாம் வெறும் வெங்காய வடையை விட, மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வடை, சட்னி காஃபியோடு சாப்பிட்டார். எனக்கு என்னமோ சட்னி பிடிக்காது. பொதுவா சாம்பார் வடை உளுந்து வடையிலே பிடிக்கும். ஆமவடைன்னா ரசவடை! எங்கம்மா அதுக்குன்னே தனியா அரைச்சுத் தட்டி ரசமும் வைப்பார். ஜீரகம், மிளகு தூக்கலாக இருக்கும் ரசத்தில் ஊறிய வடைகள்! சொர்க்கம்!

      Delete
  5. நான் காசிக்குப் போனபோது வாரணாசியில் தங்கியிருந்த இடத்தில் ரிசப்ஷனில் இருந்தவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மக்கள் மதிக்காமல் லிப்ட் கொள்ளும் அளவு ஏறி இறங்கி கொண்டிருந்தார்கள்! நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக நம்ம மக்கள் ஆபத்தை எதிர்கொண்டால் தான் கொஞ்ச நாளைக்குக் கவனமா இருப்பாங்க. அப்புறமாப் பழைய குருடி கதவைத் திறடி தான்! இப்படித் தான் குற்றாலத்தில் ஐந்தருவியில் குளித்த பெண்கள் மேல் கற்கள் விழுந்து ஐந்து பேர் காயம். அதுக்காகக் குளிக்காமலோ அங்கே போகாமலோ இருக்க மாட்டாங்களே! ஆபத்தை விலை கொடுத்து வாங்குவாங்க!

      Delete
  6. வடைமாவு இன்னும் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டாமோ... கொஞ்சம் தளர இருக்கிறதோ... அது இருக்கும் பதத்துக்கு தட்டி எண்ணெயில் போட்டால் உருண்டையாக வழித்துக்கொண்டு விழும் போல தோன்றுகிறதே...

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம், ஹாஹா, நெல்லைத் தமிழரின் காற்று உங்களுக்கும் வீசி விட்டது போல! சட்டியில் வெந்து கொண்டிருக்கும் வடைகளைப் பாருங்கள். பெரிதாகத் தட்டியதால் இரண்டு இரண்டாகவே போட்டு எடுத்தேன்.

      Delete
    2. உளுந்து வடைகு, மா எப்பவும் தளதளப்பாக இருந்தால்தான் வடை பொங்கு சொஃப்ட்டாக வரும் ஸ்ரீராம்.. அழகாக வட்டமாகத் தட்டுவதும் ஒரு கைதேர்ந்த கலை.. எங்கள் வீட்டில் அக்கா அண்ணி நான் நல்ல வட்டமாகத் தட்டுவோம் ஆனா அம்மாவுக்கு வரவே வராது ஹா ஹா ஹா.

      கீஸாக்கா சுட்டதே ரெண்டு வடைதான் போல:)) கர்ர்ர்ர்ர்ர்:)) இதில பில்டப்பூ வேறு:))

      Delete
    3. இரண்டு வடைக்கா அம்புட்டு மாவு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சுமார் பத்து வடைகள் தட்டினேன் அந்த மாவில்.

      Delete
  7. லிப்டில் மாட்டிக்கொண்ட பதட்டத்தில் யாருக்கும் ஒன்றும் ஆகாமல் இருந்ததே... அதையும் சொல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்ரீராம், அது தான் எங்கள் கவலையே. நல்லவேளையாக் கடவுள் காப்பாற்றினார். சுமார் 45 நிமிஷம் லிஃப்டில் இருந்தனர்.

      Delete
  8. Ahaaaaaaஒரு வடைக்குப் பின்னால இவ்வளவு விஷயமா.
    உண்மைதான் இங்கே எல்லாம் அதிகம் எண்ணிக்கை இருந்தால் லிஃப்ட் கதவு மூடாது.
    நீங்க போகும் போது நீங்கள் இருவர் மட்டும் போகவும். அதிக ஆள் வேண்டாம்.
    நினைக்கவே பயமாக இருக்கிறது.
    வடை மாவே அட்டகாசமாக இருக்கிறது.
    வடை இன்னும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி அமைப்பில் லிஃப்ட் வந்திருப்பதே எங்களுக்கு பில்டர் சொல்லித் தான் தெரியும். நல்லவேளையாக ஒருத்தருக்கும் ஒண்ணும் ஆகலை. நாங்க கவனமாவே போவோம். விமான நிலையத்தில் வீல் சேருக்குச் சொல்லிவிட்டதால் அங்கேயும் ஒண்ணும் பிரச்னை இருக்காது. இரண்டு தரமாகவே வீல் சேர் ஏற்பாடு செய்து விடுகிறோம். சாப்பாடும் ஜெயின் மீல்ஸ் தான். வயிற்றை எதுவும் பண்ணாது.

      Delete
  9. சுவையான வடையுடன் பகீரென்று மின்தூக்கி கலவரத்தையும் எழுதி விட்டீர்கள்! சில இடங்களில் மின் தூக்கிகள் திறந்த அடுத்த கணமே நாம் சாவாதனமாக நுழைந்து கொண்டிருக்கும்போதே படாரென்று மூடிக்கொள்ளும்! இங்கே எங்கள் தளத்திற்கு வரும் மின் தூக்கி அப்படித்தான்! அதன் சிக்னலில் கையை வைத்தவாறே உள்ளே நுழைவதற்கு இப்போது பழகி விட்டது.

    வடை மாவு காலையில் அரைத்து மாலையில் செய்தால் எண்ணெய் குடிக்காதா?

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே நான் உருட்டும் பதத்தில் தான் அரைப்பேன். அன்றும் அப்படித்தான். வெங்காயம் நறுக்கிச் சேர்த்ததும் அதன் நீர் கொஞ்சம் சேர்ந்திருப்பதால் ஸ்ரீராம் சொன்னாப்போல் தளரக் காணப்படுகிறது. ஆனால் உருட்ட வரும். என்றாலும் உங்களுக்கு யோசனையாக இருந்தால். அரை மணிநேரம் மாவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டுப் பின்னர் வெளியே எடுத்து வடையை அடுப்பில் காயும் எண்ணெயில் போடும்போது வெங்காயத்தைச் சேர்க்கவும். சரியாக வரும். சில சமயங்களில் அப்படியும் சரியாக வரலைனால் நான் அரை உளுத்தம்பருப்பைக் களைந்து ஓரிரு நிமிடங்கள் வைத்துவிட்டு அதை ஒன்றிரண்டாக மிக்சியில் அரைத்து வடை மாவில் கலந்து விடுவேன். பத்து நிமிஷம் கழிச்சு வடை தட்டினால் நன்றாக வரும். அந்த உளுத்தம்பருப்பெல்லாம் மொறுமொறுவென்று பொரிந்து நன்றாக இருக்கும்.எங்கள் மின் தூக்கியிலும் கையை வைத்துக் கொள்வோம். எங்களுக்கும் அது பழகி விட்டது. சில சமயங்களில் கொண்டு செல்லும் பையை வைப்பதும் உண்டு.

      Delete
  10. வீட்டுக்கு வந்த விருந்தினர் நல்லபடியாக பிள்ளையார் அருளால் தப்பினார்.
    அவர்களுக்கு வடை கொடுத்து வைக்கவில்லை.

    மாவை காலி செய்ய பெரிது பெரிதாக தட்டி விட்டீர்களா?

    படுக்கையை விட்டு கீழே இறங்க கூடாது என்ற வைத்தியர் வியந்து போய் இருப்பார், படிகளில் இறங்கியதை கேள்வி பட்டால். இறைவன் அருளால் மனபலம், தேகபலம் கூடியது.
    நெல்லைத்தமிழன் தினம் பிரார்த்தனை வேறு உங்களுக்கு செய்து இருக்கிறார். மற்றும் எல்லோர் பிரார்த்தனையால் உடல் நலத்தோடு இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி, உண்மையாகவே வடை அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் திரட்டுப்பாலைக் கொடுத்துவிட்டேன். ருசித்துச் சாப்பிட்டார்கள், பசும்பால் திரட்டுப் பால்! சுவைக்குக் கேட்கணுமா? வைத்தியரிடம் போய் இதை எல்லாம் சொல்ல முடியுமா? என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் ஓரளவுக்கானும் வேலைகளைச் செய்யத் தான் வேண்டி இருக்கிறது. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்மணி பெரிய குடும்பம் என்பதால் மாற்றி மாற்றி ஏதேனும் காரணத்தைச் சொல்லி மாதம் பத்து நாளாவது விடுமுறை எடுத்து விடுகிறார். என்ன செய்ய முடியும்! :))))) இதை எல்லாம் யோசித்தே நான் ஆளே வைக்காமல் இத்தனை வருஷங்களைக் கடத்தினேன். :))))))

      Delete
    2. நெல்லைத்தமிழர் மட்டுமில்லை, வல்லி, நீங்கள், ஸ்ரீராம், தி/கீதா, கமலா, பானுமதி, துரை போன்ற அனைவருமே பிரார்த்தனைகள் செய்தீர்கள். அதனால் தான் கொஞ்சமானும் முன்னேற்றம் இருக்கிறது. வல்லி அடிக்கடி தொலைபேசியில் விசாரிப்பார்.

      Delete
  11. ///////////மின் தூக்கியில்///

    ஆஆஆஆஆஆ சுத்த டமில் டமில்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா,ஹாஹா, நாங்க யாரு? மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் முதல் வகுப்பாக்கும்! நீங்க தான் தமிழிலே "டி"எல்லோனு சொல்லுவீங்களோ? நாங்களும் சொல்லுவோமே!

      Delete
  12. //கிச்சாப்பயலுக்காகப் பண்ணின திரட்டுப் பாலே போதும் என முடிவு செய்தோம்//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இருப்பதை வச்சுச் சமாளிக்கலாம் எனப் பார்த்தீங்க.. நீங்கதான் ஏமாந்திட்டீங்க ஹா ஹா ஹா.. அதிரா வந்தால் இப்பூடி ஜமாளிக்காமல் நிறைய செய்து தரோணுமாக்கும்:))

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தால் எங்க வீட்டுக்குத் தான் வருவீங்க. இவங்க எல்லோரும் கல்யாணத்துக்கு வந்ததால் அப்படியே எங்களை வந்து பார்த்தாங்க. திரட்டுப்பால் கடையில் வாங்கிப் பாருங்க, என்ன விலைனு புரியும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவங்க அதைச் சாப்பிட்டாங்களே!

      Delete
  13. //கீழே இறங்கும் முன்னர் பிள்ளையாரிடம் ஒரு ரூபாய் வைத்துவிட்டுக் காப்பாத்திக்கோ, இது உன் பிரச்னை எனச் சொல்லிட்டுக் கீழே இறங்கினேன். //

    ஹா ஹா ஹா அவர்களை உங்கள் வீட்டுக்கு வரவிடாமல் ஏதோ ஒரு ஆவி தடுக்குது போலும்:))

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் இல்லை. அவங்க வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தாங்களே! :)))))

      Delete
  14. //ஆக நாமும் "திங்க"க்கிழமை "திங்க"ற பதிவு போட்டாச்சு! //

    ம்ஹூம்ம்.. ஒரு லிஃப்ட் இடையில நிண்டதை வச்சு.. ஊரைக்கூப்பிட்டு பிள்ளையாரை டிசுரேப்புப் பண்ணி:)) ஒரு போஸ்ட்டும் போடும் திறமை.. கீசாக்காவை விட வேறு ஆருக்கு வரும்:)) ஹா ஹா ஹா நேக்கு வடை வாணாம் மீ ஓடிடுறேன்ன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா. நாங்க யாரு?

      Delete
    2. வடை வேணாம்னா உங்களுக்குத் தான் நஷ்டம்! இஃகி, இஃகி,இஃகி!

      Delete
  15. லிப்டில் மாட்டிக்கொண்ட அனுபவம் எனக்கும் உண்டு. பெங்களூரில் புகழ்பெற்ற ஊட்டலின் ஏழாம் மாடியில் லிப்டில் ஏறினேன். கீழே தரைத்தளத்தில் இறங்குவதற்காக. அப்போது ஐந்தாம் மாடியில் லிப்ட் நின்றது. திபுதிபுவென்று பத்துப்பேர் உள்ளே நுழைந்துவிட்டார்கள். கதவு மூடிகொண்டது. ஆனால் லிப்ட் கிளம்பவில்லை. அலாரத்தை அடித்தோம். ஆனாலும் பத்து நிமிடத்திற்குப் பிறகே கதவைத் திறக்க முடிந்தது. பெரிய ஓட்டலிலேயே இந்த நிலை என்றால்? விழாதகுறையாக வெளியே நாங்கள் வந்து விழுந்தோம். அதற்குள் வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டோம். பத்துப்பேரில் ஒருவர் எம் எல் ஏ வாம். பெருத்த சரீரம் வேறு. கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்டிருந்தார்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்லப்பா சார், இம்மாதிரிப் பல நிகழ்வுகள் கேள்விப் பட்டிருக்கேன். சென்னையில் வேளச்சேரியிலோ என்னமோ நினைவில் இல்லை. மகன் கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுக்கப் போன பெற்றோரில் தாய் லிஃப்டில் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் உயிரை இழந்தார்! ரொம்ப நாட்களுக்கு அதன் தாக்கம் மனதை விட்டு நீங்கவில்லை!

      Delete
    2. நல்லவேளையாக வெளியில் வந்தீர்களே! இம்மாதிரிப் பல மாடிக் கட்டிடங்களின் மின் தூக்கியில் பொதுவாக நாங்கள் ஏற மாட்டோம். அவர் ஏறலாம்னாக் கூட நான் தடுத்துடுவேன். லிஃப்ட் ஆபரேட்டர் இருந்தால் மட்டும் ஏறுவோம். பெரிய கடைகளில் கூட அப்படித்தான். லிஃப்ட் ஆபரேட்டர் இருப்பதால் நாலு மாடி, ஐந்து மாடிக்குச் செல்லுவோம். இல்லைனாப் போகவே மாட்டோம். சமீபத்தில் சென்னையில் ஒருவர் வாங்கிய புதுவீடு 17 ஆம் மாடி எனச் சொன்னார். ஆனால் லிஃப்ட் சரியாக இயங்குவதில்லை எனவும் ஜெனரேட்டர் போடுவதில்லை எனவும், மின்சாரம் அடிக்கடி போய்விடுவதாகவும் சொன்னார். சமயங்களில் 17 மாடியும் இறங்க வேண்டி வரும் என்றார். தண்ணீர்ப் பிரச்னை வேறே. அதிலும் இப்போ சமீபத்திய அரசாங்க உத்தரவின் பேரில் நாலு மாடி அல்லது ஐந்து மாடிக்குத் தான் தண்ணீர் ஏற்றலாம். மற்ற மாடிகளில் வசிப்பவர்கள் லாரித் தண்ணீர் வாங்கி அவங்க தண்ணீர்த் தொட்டியை நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று படித்தேன். இது சமீபத்திய தண்ணீர்க் கஷ்டத்தினாலா, அல்லது எப்போவுமா எனத் தெரியவில்லை. என்றாலும் தண்ணீர் ஆதாரம் இல்லாத சென்னை போன்ற நகரங்களில் 3 மாடிக்கு மேல் கட்டுவது உசிதமே இல்லை.

      Delete
    3. //ஜெனரேட்டர் போடுவதில்லை எனவும், மின்சாரம் அடிக்கடி போய்விடுவதாகவும் சொன்னார். சமயங்களில் 17 மாடியும் இறங்க வேண்டி வரும் என்றார். // - அடப்பாவீ...இப்படீல்லாமா பில்டிங் கட்டுவாங்க? நடு வெயில்ல வீட்டுக்கு வந்து, கரண்ட் இல்லை, 17 மாடி ஏறுங்க என்று சொன்னால் செத்தாங்க.

      சென்னைல, முதல்ல தண்ணி, மின்சாரம் பற்றிக் கவலைப்படாம காசு வாங்கிக்கிட்டு பில்டிங் கட்ட அனுமதி கொடுத்துடறாங்க. 20 மாடிக் கட்டிடங்கள்லாம் சகஜம். எந்த அரசோ.. என்ன முனிசிபாலிட்டியோ. இதுக்கு பெங்களூர் எவ்வளவோ தேவலை

      Delete
    4. இப்போக்கூட "பெண்"களூரில் இருந்து ஓர் உறவினர் பேசினார். சென்னையில் அபார்ட்மென்டைப் பார்த்துவிட்டு பயந்து கொண்டிருந்ததாகவும், இங்கே இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பே 1300 சதுர அடியில் பெரியதாக இருப்பதாகவும், சாப்பாட்டுக்கூடம் தனியாகக் கட்டிக் கொடுப்பதாகவும் சொன்னார். விலையும் சென்னையை விடக் குறைவு தான்! சர் சிவி. ராமன் நகரில். ம்ம்ம்ம்ம்ம், நாங்கள் அங்கே கிட்டத்தட்ட ஒரு வீடு பேசி முடிச்சோம், 2003 ஆம் ஆண்டில். 1500 சதுர அடிக்கு! அப்போப் பத்து, அல்லது பதினைந்து லட்சத்துக்குள்! இப்போத் தமிழ்நாட்டுக்கும் குறிப்பாச் சென்னைக்கும் அடுக்குமாடி கட்டப் பல சட்டதிட்டங்கள் வந்து விட்டன. ஒரு கிரவுண்டு நிலத்தில் எட்டு, பத்துக் குடியிருப்புக்கள் கட்டினாலோ, கீழே பார்க்கிங் வசதி இல்லை என்றாலோ அனுமதி கொடுப்பதில்லைனு சட்டமாகவே வந்திருக்கு.

      Delete
  16. ஒவ்வொருத்தரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் பகிர்வில்...

    விழிப்புணர்வு பதிவு என்று என்னால், சர்வ சாதாரணமாக ஒதுக்கிக் கொள்ள முடியவில்லை எனக்கு...

    மரம் வளர்ப்போம்... மேலும் மேலும் மரம் வளர்ப்போம்... இன்றைய நேரத்திற்கு அதுவே ஒரு சிறு துணை...

    ReplyDelete
    Replies
    1. கருத்து மாறி வந்தாலும் தேவையான கருத்துத் தான் டிடி. ஆகவே வருந்த வேண்டாம்.

      Delete
  17. மன்னிக்க வேண்டும் அம்மா... (https://iniangovindaraju.blogspot.com/2019/08/blog-post_27.html) அவர்களின் இட்ட கருத்துரை...

    கைபேசியில் தவறுதலாக இட்ட கருத்துரை...

    ஒவ்வொருத்தரும் குறைந்தபட்சம் 80-கிலோ இருக்குமோ...?> ஹிஹி...

    ஆனாலும் அந்த கடைசி படம்...***

    எண்ணெய்யில் பொறிக்கிறது இரண்டு...

    சாப்பிட்டதற்கு ஒரு மனம் இருந்தால்
    மருத்துவரை மறந்து விடலாம் - வடையை
    மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
    மருந்தைவிட்டு விடலாம் - ஆனால்
    இருப்பதோ ஒரு மனம்
    நான் என்ன செய்வேன் ஹ ஹ ஹ...!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா டிடி அனைவருமே எல்லாத்திலுமே கனமான ஆட்கள் தான்! உளுந்து வடை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் எனக் கேள்விப் பட்டிருக்கேனே!

      Delete
  18. வணக்கம் சகோதரி

    விருந்தினர்கள் மின்தூக்கியில் மாட்டிக் கொண்ட சம்பவம் படித்த பின் எனக்கு இனி அதில் செல்லவே பயமாக இருக்கிறது. இன்று மதியும் குழந்தையை (பேத்தி) பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு அதிலதான் அதுவும் தனியாக பயணித்து வந்தேன். வீடு மூன்றாவது மாடிதான். எனினும்,"ஈஸ்வரா" என்று அவன் நாமத்தை சொல்லியபடியேதான் வருவேன்.

    ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டு மின்தூக்கியில் எங்கள் மாட்டுப்பெண், அவரின் தாய், தந்தை மூவரும் மாட்டிக் கொண்டு நான் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது, உதவிக்கு செக்யூரிட்டி மற்றும் பலர் வந்து எப்படியோ கதவை திறந்து அந்தரத்தில் நின்று கொண்டிருந்த அவர்களை உயரமான நாற்காலியின் உதவி கொண்டு அதில் கால்வைத்து அவர்களை கீழே இறக்கி போதும் போதுமென்று ஆகி விட்டது. அதன் பின் கொஞ்ச நாள் படி ஏறி, இறங்கிச் சென்றோம். இப்போது மறுபடியும் பயம் தெளிந்து அதில்தான் செல்கிறோம். தங்கள் பதிவை பார்த்ததும் பயம் "வரவா?" என மறுபடியும் துணிச்சலுடன் கேட்கிறது. ஹா.ஹா.ஹா.

    வந்த விருந்தினரை தங்கள் பிராத்தனைப்படி கடவுள்தான் காப்பாற்றியுள்ளார். அவர்களுக்கு உபசாரம் செய்வதற்காக ஏகப்பட்ட வேலைகள்.. நடுவே அவர்கள் மாட்டிக் கொண்டார்களே என்ற கவலை கலந்த படபடப்பு.. எவ்வளவு டென்சன்.. அன்றைய தினம் உங்களுக்கு...

    கடவுள்தான் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் துணையாக நிற்கிறார். ஆனால் அவர்களுக்கு இருந்த படபடப்பில் "வடை போச்சே" என நினைத்திருக்க மாட்டார்கள்.அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லையே என எனக்குத் தோணியது. வடைகள் பார்க்க மிகவும் அழகாக இருந்தன. படம் பார்த்த எனக்கே மொறு மொறு வென்ற வடையை சாப்பிட தோணியது. வடை செய்முறைகள் மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டிலும் என் பெரிய நாத்தனார், என் கணவரின் மாமா, என் மன்னி ஆகியோர் மின் தூக்கியில் செல்லப் பயப்படுவார்கள். எனக்கு இங்கே பழகி விட்டாலும் மின்சாரம் இல்லாமல் ஜெனரேட்டர் போட்டிருந்தால் துணையோடு தான் செல்வேன். :))))

      Delete
  19. அடடா... மின் தூக்கிகளில் இந்த மாதிரி சமயத்தில் தானாகவே அடுத்த மாடியில், அல்லது தரைத் தளத்திற்குச் சென்று திறக்கும் வசதி உண்டு. ஆனால் உள்ளே இருப்பவர்கள் பதட்டத்தில் எல்லா பட்டன்களையும் அழுத்தி மின் தூக்கியில் இயங்கும் கருவியையே குழப்பி விடுகிறார்கள்! சில சமயம் இப்படி நடப்பது, அதில் மாட்டிக் கொண்டவர்களுக்கு ரொம்பவே பயம் தரும் விஷயம் தான்.

    மீண்டும் வடை! :) வேற வழியில்லை. இன்னிக்கும் கரோல் Bபாக்g மூலைக் கடைக்குச் சென்று விட வேண்டியது தான்! ஹாஹா...

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் தானாகச் செல்லும் வெங்கட். ஆனால் ஏறும்போதே தரைத்தளத்திலேயே நகரவில்லை.நகரமுடியவில்லை! அதான்! :)))) ஹாஹா, நீங்கள் வரும்போது ஒரு தரம் வடை தட்டிக் கொடுத்துடலாம். :)))))

      Delete
  20. மின் தூக்கியில் செல்லும்போது நிச்சியம் மிக கவனம் வேணும் மா...
    எங்க அப்பார்ட்மெண்ட் ல் மின் தூக்கி இருந்தாலும் நாங்க தரைதளம் ..அதனால் உபயோகம் குறைவு தான் ...


    வடை வழமை போல அட்டகாசம் ..

    ReplyDelete
  21. வாங்க அனு, எனக்கு என்னமோ மேல் மாடியில் தான் குடியிருக்கப் பிடிக்கும். காற்று, வெளிச்சம் தரைத்தளம், முதல் தளங்களில் அவ்வளவாக இருப்பதில்லை. வடைக்குப் பாராட்டுகளுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  22. இந்தியாவில் இந்த லிஃப்ட்டுகள் இருக்கின்றனவே.. ஏதும் சொல்வதற்கில்லை. Siemens, Otis, Johnson, Kone போன்ற இறக்குமதிசெய்யப்பட்ட (அல்லது வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும்) லிஃப்ட்டுகளை reputed builders, realestate co.s-களின் கட்டிடங்களில்தான் பார்க்கமுடிகிறது. மற்ற கட்டிடங்களில் ஏனோதானொவென ஒரு லிஃப்ட்-ஐப் (அவற்றின் பெயரைக்கூட இதற்குமுன் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்) பொருத்திவிட்டு பில்டர்கள் தப்பித்துவிடுகிறார்கள். அவைகளில் இத்தகைய பிரச்னைகள் எழத்தான் செய்யும்.
    எப்படியிருப்பினும், குடியிருப்பு வளாகத்தின் லிஃப்ட்டை அடிக்கடி சர்வீஸ் செய்து, பராமரிப்பது முக்கியம். லிஃப்ட் ஆபரேட்டர் இருந்தால் அவர் வேலை தெரிந்தவரா எனக் கவனித்து வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இத்தகைய சிக்கலில் யாராவது மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பதறியதுபோல் யாராவது அவ்வப்போது பதட்டமடையவேண்டியிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், இங்கே ஜான்சன்ஸ் கம்பெனியின் மின் தூக்கித் தான் போட்டிருக்கிறார்கள். தவறு கம்பெனி மீதோ மின் தூக்கி மீதோ கட்டிடம் கட்டியவர்கள் மீதோ இல்லை. அதில் இத்தனை எடை தான் இருக்க வேண்டும் என்பதற்கு மேல் எடைகளை வைத்தால் கிளம்பாது. ஆனால் இவங்க உள்ளே போய் விட்டதோடு இல்லாமல் கதவையும் சார்த்திவிட்டு பட்டன்கள் எல்லாவற்றையும் அழுத்தி இருக்கின்றனர் போலும்! அதோடு இந்த மின் தூக்கியில் எடை அதிகமானால் தானே திறந்து கொள்ளும் வசதி இல்லை. மற்றபடி வருடாந்திர சேவை இருக்கிறது. 2 மாசத்துக்கு ஒரு தரம் கம்பெனி ஆட்கள் வந்து பார்த்து வேண்டிய மருத்துவம் செய்துவிட்டுப் போவார்கள். நேற்று யாரோ வெளியூர் போகையிலோ என்னமோ அதிக எடை உள்ள பெட்டிகளை வைத்து எடுத்துச் சென்றதில் மறுபடி வேலை செய்யவில்லை. வீடு காலி செய்யும்போது குளிர்சாதனப்பெட்டி, பீரோ எல்லாவற்றையும் மின் தூக்கி மூலம் கீழே இறக்குவார்கள். அதற்காகவே யாரானும் காலி செய்தால் பாதுகாவலரைக் கிட்டேவெ இருந்து கவனிக்கச் சொல்லுவோம்.

      Delete
  23. நடைமேடையில் கீழே விழுந்து உருண்ட பின்னர் இன்னும் எழுந்திருக்க வில்லையா?
    Jayakumar

    ReplyDelete