எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 25, 2019

ஹவுடி மோதி! நிகழ்வில் நாங்கள்!

நாங்க யு.எஸ். போகப் பயணச் சீட்டு வாங்கியதுமே சில நாட்களில் பையர் மோதியும் செப்டெம்பரில் அங்கே வரப்போவதாகவும் ஹூஸ்டனில் ஒரு மாபெரும் சந்திப்பு நிகழப்போவதாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்    பலரும் வரப்போவதாகவும் இந்திய வம்சாவளியினர் மாபெரும் அளவில் இந்நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார்.    நாமெல்லாம் எங்கே போகப் போறோம்னு தான் நான் நினைச்சேன். திடீரெனப் பையருக்கே என்ன தோன்றியதோ தான் அந்த நிகழ்ச்சிக்குப் போகப் போவதாகவும் நீங்கள் இருவரும் கலந்து கொள்ள விரும்பினால் உங்கள் பெயரையும் கொடுக்கிறேன் எனச் சொல்லவும், நாங்களும் வருவதாகத் தெரிவித்திருந்தோம். எங்கள் பெயரையும் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கிவிட்டதாகவும் பின்னர் சொன்னார். நாங்கள் அம்பேரிக்கா வந்ததில் இருந்தே இந்நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் நடுவில் பையர் நெதர்லான்ட்ஸுக்கு அலுவலகவேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. அந்தச் சமயம் பார்த்து இங்கே புயல், மழைனு ஒரே அமர்க்களம். நிகழ்ச்சி நடப்பது சந்தேகம் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். பையர் வேறே நிகழ்ச்சி நடைபெறும் முதல்நாள் மாலை தான் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஹூஸ்டன் வந்தார். அவர் வந்த விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதம் என்பதால் மாலை நான்கு மணி சுமாருக்குத் தான் வந்து சேர்ந்தார். நிகழ்ச்சி நடந்த என்.ஆர்.ஜி. ஸ்டேடியம். அட! என்னோட இனிஷியலும் என்.ஆர்.ஜி. தான். அப்போ?


                                                  இன்னொரு கோணத்தில் ஸ்டேடியம்


கார் பார்க்கில் இருந்து மக்கள் வந்து கொண்டிருக்கும் காட்சி


அந்தக் காலை ஏழு மணிக்கே ஆண்களும், பெண்களுமாய்க் குடும்பத்தோடு

சக்கர நாற்காலியில் அமர்ந்தும் பார்வையாளர்கள் வருகை


ஒரு குடும்பம் செல்கிறது. மராட்டி உடையில் இருக்கும் பெண் குழந்தை கலாசார நிகழ்ச்சிகளில் ஆடுவதற்காக உடை அலங்காரத்தோடு வருகிறாள். இம்மாதிரி நிறையக் குழந்தைகளைப் பார்க்க முடிந்தது. அந்தச் சிறுவனும் ஆடுவதற்கான ஆயத்த உடையில்


சிறியவர் முதல் பெரியவர் வரை சாரி சாரியாய் வருகின்றனர்.இன்னொரு சக்கர நாற்காலிப் பார்வையாளர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பலருக்கும் இந்தச் சக்கர நாற்காலியைக் கொடுத்து உதவினார்கள். பலருக்கு அவர்களில் தன்னார்வலர்கள் சக்கரநாற்காலியைத் தள்ளிக் கொண்டும் வந்தார்கள். ஏற்பாடுகள் குற்றம், குறை சொல்ல முடியாத அளவுக்கு அருமையாக இருந்தது.


                                            பத்தடிக்கு ஒரு குப்பைத்தொட்டி ஆங்காங்கே!


எங்களை ஸ்டேடியத்தின் அருகே விட்டுவிட்டுப் பையர் காரைப் பார்க் செய்யப் போயிருந்தபோது


கார் பார்க்கில் இருந்து நடந்து வர முடியாதவர்களுக்காக பாட்டரி கார்களும் ஓடிக் கொண்டிருந்தன. மூத்த குடிமக்கள் மட்டும் ஸ்டேடியம் அருகே வந்து இறங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகவே நாங்கள் கொஞ்சம் கிட்டவே இறங்கிக் கொண்டோம்.


ஒரு குட்டி இந்தியாவே அங்கே காண முடிந்தது.


உள்ளே செல்ல வரிசையில் நிற்கும் மக்கள்


ஸ்டேடியத்தின் உள்ளே! விபரங்கள் பின்னால்!

பையர் ஆம்ஸ்டர்டாமில் இருந்தே நிகழ்ச்சிக்குக் காலை ஆறு மணிக்கே செல்ல வேண்டும் எனவும் நிகழ்வு முடிய மதியம் மூன்று மணி ஆகும் எனவும் சொல்லிவிட்டு என்னிடம் உன் வயித்துக்கு என்ன ஒத்துக்குமோ அந்த உணவை எடுத்துக்கொள் என்றும் சொல்லி இருந்தார். ஆகவே தயிர்சாதம் கையில் கொண்டு போகலாம் என முடிவு செய்தோம். இரண்டு காரணங்கள். ஒன்று மஹாலயம் என்பதால் வெளியே சாப்பிட முடியாது; இரண்டு அங்கே கொடுக்கும் உணவு என்ன தான் சைவ உணவு என்றாலும் ஒத்துக்குமா என்பது சந்தேகமே! ஆனால் சனிக்கிழமை மாலை வந்த பையர் நிகழ்ச்சியில் அமெரிக்கக் குடியரசுத்தலைவரும் கலந்து கொள்ளப் போவதால் உணவெல்லாம் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அங்கே கிடைப்பதைத் தான் சாப்பிடணும் என்றும் சொல்லிவிட்டார். ஆனால் சாப்பாடு செய்து எடுத்துக்கோ, அனுமதிச்சால் கொண்டு போகலாம். இல்லைனா குப்பைத்தொட்டி தான் என்றும் சொன்னார். வண்டியிலேயே வைச்சுட்டுப் போகலாம். நிகழ்ச்சி முடிஞ்சு வந்து சாப்பிடலாம் என நாங்க சொன்னோம். ஒரே குழப்பம். கடைசியில் நாங்க இருவருமாகச் சேர்ந்து கையில் பழங்கள், பிஸ்கட்டுகள், குடிநீர் எனக் கொண்டு போகலாம், அனுமதிச்சால் உள்ளே கொண்டு போகலாம் இல்லைனால் தூக்கிப் போட வேண்டியது தான் என முடிவு செய்தோம்.

47 comments:

 1. என்னடா உங்களிடம் இருந்து இது பற்றி பதிவு வரலைன்ன்னு யோசிச்சு கிட்டு இருந்தேன்.... இன்று பதிவு வந்து இருக்கிறது.. ஆனால் தொடர்கதை போல போகும் போல இருக்கிறதே......

  ReplyDelete
 2. என்னடா உங்களிடம் இருந்து இது பற்றி பதிவு வரலைன்ன்னு யோசிச்சு கிட்டு இருந்தேன்.... இன்று பதிவு வந்து இருக்கிறது.. ஆனால் தொடர்கதை போல போகும் போல இருக்கிறதே......

  ReplyDelete
  Replies
  1. வாங்க தமிழரே, முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. இரண்டு நாட்களாய்ப் படங்களைக் கணினியில் ஏற்ற நேரம் கிடைக்கவில்லை. இன்று தான் படங்களை ஏற்றினேன். அதிகம் தகவல்கள் இல்லை. எல்லோரும் தான் பார்த்திருக்காங்களே. படங்கள் பகிர்வு மட்டும் தான்! :))))

   Delete
 3. நேர்முக வர்ணனை அருமை...

  வாழ்க நலம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. மிக அருமை கீதா மா. சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். உண்மையாகவே பெருமைக்குரிய விஷயம்.
  நீங்கள் சென்று வந்தது இன்னும் பெருமை.
  படங்களும் உங்கள் விவரிப்பும் அருமை.
  இன்னும் விவரங்களை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. நிகழ்வு பிரம்மாண்டமாய் இருந்தது. மதுரையில் இருந்தப்போ நாங்க இருந்த தெரு மூலையிலேயே அரசியல் கூட்டங்கள், நிகழ்வுகள் நடக்கும். வீட்டுத் திண்ணையில் அமர்ந்த வண்ணம் பார்க்க முடியும். இம்மாதிரிப் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

   Delete
 5. ஆஹா பதிவு கோலாகலமாக செல்கிறது தொடர்கிறேன்...

  மோடிஜியா... கொக்கானானாம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, நிகழ்ச்சி ஏற்பாடுகள் அங்குள்ள இந்திய வம்சாவளியினர். ஆகவே எல்லாப் பெருமைக்கும் அவர்களே சொந்தம்.

   Delete
 6. அட்டா.... ஆரம்பப் படங்களே இவ்வளவு எடுத்துட்டீங்களே... மோடி அவர்களோட செல்ஃபி எடுக்கும்வரை மொபைலில் பேட்டரி சார்ஜ் இருக்கணுமே என்று வேண்டிக்கறேன். அந்த செல்ஃபி இல்லாம இடுகை நிறைவு பெறாதுன்னும் சொல்லிக்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. படங்கள் இன்னமும் நிறையவே எடுத்திருக்கேன். சிலவற்றைத் தான் இங்கே பகிர்ந்திருக்கேன். பத்தடிக்கு ஒரு தன்னார்வலர், ஒரு பாதுகாவலர். இந்த அழகில் செல்ஃபியாவது ஒண்ணாவது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 7. மாமாவுக்கு சாக்லேட் பிஸ்கட்தானா பிடிக்கும்? வேறு பிடிக்காதா?

  குடுகுடுன்னு முன்னால ஓடிப்போய் ஒரு படம், அவர் முகம் தெரியும்படியா எடுத்திருந்தா என்னவாம்? அவர் சுறுசுறுப்பு வரலையே

  ReplyDelete
  Replies
  1. இந்த சாக்லேட், பிஸ்கட் எல்லாத்துக்கும் நான் தான் ஏகபோக ரசிகை. உங்களோட அனுமானம் assumption எப்போவும் தவறாகவே இருக்கிறது. மாமா தான் துபாய் பார்க்க ஆசைப்படுகிறார் என்கிறாப்போல் சொல்லி இருந்தீங்க. இப்போ இது! இஃகி,இஃகி,இஃகி! அவர் ரொம்பவே கன்சர்வேடிவ். சீடை, முறுக்குக்குத் தான் முன்னுரிமை. எங்க குழந்தைங்களுக்குக் கூட அவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்தது இல்லை. :))))) பிடிக்காது. எங்க பொண்ணு இப்போவும் அப்பாவிடம் சொல்லுவா! சுறுசுறுப்புக்கான உங்களோட assumption அனுமானமும் 100/100 % தப்பு, தவளை, தஞ்சாவூர் மாப்பிள்ளை. எங்கே கிளம்பணும்னாலும் நான் தான் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு இருபது நிமிடமாவது முன்னால் தயாராகிக் காத்திருப்பேன்.

   Delete
 8. அடடா....தீர்மானத்துக்கு வந்தாகி விட்டது. :)

  தொடர்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, நன்றி.

   Delete
 9. அப் பார் ட்ரம்ப் கி சர்க்கார்

  ReplyDelete
 10. சில தருணங்கள் முக்கியமானவைகளாக அமைந்து விடுகின்றன. அதில் இது ஒன்று என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீவி சார், நீங்க சொல்லுவது சரி. இது நாங்களே எதிர்பாராதது!

   Delete
 11. வணக்கம் சகோதரி

  பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. எப்படியோ நீங்களும் அதிர்வை போல் பெரிய தலைகளை சந்தித்து விட்டீர்கள். எல்லாம் அமெரிக்கா உபயம். ஹா. ஹா. ஹா. படங்கள் மிகவும் நன்றாக வந்திருக்கின்றன. அங்கு சென்றும் மஹாளயத்தை மறவாமல் இருந்தது மகிழ்வாக இருக்கிறது. என்ன இருந்தாலும் நம் வீட்டு உணவுக்கு நிகர் ஏது? அதை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதித்தார்களா? இல்லையெனில் அந்த கொண்டு சென்ற தயிர் சாதத்தை என்ன செய்தீர்கள். தங்கள் ஐடியாபடி பின்பு காரிலேயே வைத்து உண்ணலாமே.! தங்கள் பேத்தி கலை நிகழ்ச்சிகளை முழுமையாக கண்டு களிக்க அனுமதித்தாளா? கலை நிகழ்ச்சிகளை பிரதமருடன் கண்டு ரசித்த அடுத்த பதிவை ஆவலாக எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, அமெரிக்கா போனதால் கிடைத்த ஓர் அதிசயமான நிகழ்வு தான் இது. மஹாலயத்தை எப்படி மறக்க முடியும்? நாங்க எங்கே போனாலும் இவற்றைக் கடைப்பிடிப்பதால் பிறருக்கு அசௌகரியங்கள் ஏற்படும் என்றாலும் விடுவதில்லை. மற்றபடி சாப்பாடுக்கு என்ன செய்தோம் என்பதெல்லாம் அடுத்த பதிவில் வரும். :)

   Delete
 12. ஸ்டேடியதின் வெளியே இவ்வளவு போட்டோக்கள் எடுத்திருக்கிறீர்கள்.  உள்ளே எவ்வளவு எடுத்திருப்பீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், ஸ்டேடியத்தின் வெளியே எடுத்த எல்லாப் படங்களையும் இங்கே பகிரவில்லை. கொஞ்சம் தான்!

   Delete
 13. மாமா ஆர்வமாக உள்ளே செல்வதை நைஸாக அவருக்குத் தெரியாமல் படம் எடுத்து விட்டீர்கள்.  உணவுக்கு என்ன செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், மாமாவுக்கு நான் படம் எடுப்பது தெரியும். நன்றாகத் தெரியும். அவர் தான் பையர் காரைப் பார்க் செய்துட்டு வரதுக்குள்ளே படங்களை எடுத்துக்கோ, அவன் வந்தா அவசரப் படுத்துவான் என்றார். :)))) உணவுக்கு என்ன செய்தோம் என்பதை வரும் பதிவில் சொல்லுகிறேன்.

   Delete
  2. ஓ அவர்தான் கீசாக்காவின் மாமாவோ.. முகம் தெரியாது எனக்கு..:)

   Delete
 14. கடைசி படத்தில் சார் தானே?
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  //ஒரு குட்டி இந்தியாவே அங்கே காண முடிந்தது.//

  வெளி நாட்டில் நம் மக்களை பார்த்தால் மகிழ்ச்சிதான்.
  மோதியை பார்த்த விபரம் படிக்க வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, கடைசிப் படம் கிட்டக்க எடுத்தது. அதற்கு முன்னாலும் 2 படங்கள் தள்ளி இருந்து எடுத்தவையும் போட்டிருக்கேன். பத்துப் பதினைந்து படங்களில் அவர் இருக்கிறார். நான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துப் போடுகிறேன்.

   Delete
 15. ஒரு விஷயத்தில் அமேரிக்கா இங்கிலாந்து மாபெரும் ஒற்றுமை .அது இங்கேயும் மழை கொட்டோகொட்டுனு கொட்டுது :)குஜராத்தியர் மராத்தியர் பஞ்சாபிஸ் பெரும்பாலும் இப்படி நிகழ்வுகளில் பாரம்பரிய நடனம் கலை நிகழ்வுன்னு அருமையா செய்வாங்க .ஸ்டேடியம் பெரியதா இருக்கும்போலிருக்கு படத்தில் பார்க்க.நமக்கும் ஒரு குட்டி தயிர்சாத கட்டுதான் இப்போலாம் உதவுது :) பாதுகாப்பும் உடலுக்கும் உகந்தது .
  ட்ரம்ப் அங்கிளையும் சந்தித்தீர்களா :))) 

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், எல்லா மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் இருந்தன. எல்லாமே சின்னக் குழந்தைகள். ஆனால் அவர்களைத் திரையில் பார்க்கையில் பெரியவர்களைப் போல் இருந்தனர். ட்ரம்ப் அங்கிளும் வந்தார்.

   Delete
 16. 3 படங்களில் மாமா இருக்கிறார்... உங்கள் விரலைத் தவிர படங்களில் நீங்கள் இல்லையே

  ReplyDelete
  Replies
  1. ஒரே ஊராக இருந்தும், அந்த விரலும், என் கண்களுக்கு தெரியவில்லையே..!கிடைக்குமா என ஒவ்வொன்றாக பெரிது பண்ணிப் பார்க்கிறேன். (விரல்களை அல்ல! படங்களை...)

   Delete
  2. வாங்க நெ.த. எந்தப் படத்திலும் என் விரல் விழவில்லை. ஏனெனில் பையர் அவசரப்படுத்துவார் என நினைத்ததற்கு மாறாக, "அம்மா ! மணி ஏழேகால் தான் ஆகிறது. நிதானமாக எத்தனை படம் எடுக்கணுமோ எடுத்துக்கோ. அவசரமே இல்லை என்றார்!" ஆகவே படங்கள் நிதானமாக எடுக்கப்பட்டவை.

   Delete
  3. கமலா, அவர் சும்மாவே வம்பிழுப்பார். அதெல்லாம் விரல் எங்கேயும் விழவில்லை.

   Delete
  4. கார் பார்க்கில் இருந்து நடந்து, பத்தடிக்கி ஒரு குப்பைத்தொட்டி - இவற்றின் கீழே உள்ள படங்களில் இடது மேல்புறம் பாருங்க. லென்ஸை விரலால் கொஞ்சம் மறைத்ததனால் விரல் நிழல் விழுந்திருப்பது தெரியும்.

   Delete
  5. உங்களுக்குத் தான் அப்படித் தெரிகிறது நெல்லைத்தமிழரே, படத்தை நன்கு பெரிது படுத்தியும் பார்த்துவிட்டேன். எங்கேயும் விரல் நிழலே இல்லை. மேலே தெரிவது படத்தின் பார்டர் போல் அமைந்துள்ளது. அதை நீங்க விரல் நிழல் என நினைக்கிறீர்கள் போலும்! கீழே தெரிவது மாமாவின் கை. குப்பையைப் போடப் போகும்போது எடுத்த படம் என்பதால் கை மட்டும் விழுந்திருக்கிறது.

   Delete
 17. ஸ்வாரஸ்யம்.... தொடர்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட். தொடருங்கள்.

   Delete
 18. மோதி அவர்களின் விழாவை நேரில் கண்டு ரசித்து இருகிறீர்கள்..மிக மகிழ்ச்சி

  படங்களும் விரிவான தகவல்களும் மிக சிறப்பு ..

  ReplyDelete
 19. ஆஆஆஆஆ இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது... ஒரே நாளில் நிறையப் போஸ்ட் வந்தமையால இது எனக்கு தெரியவில்லை...

  மோடி அங்கிளைப் பார்த்தீங்களோ கீசாக்கா? ட்றுத் பற்றியும் மறக்காமல் பத்தி வச்சிடுங்கோ பிளீஸ்ஸ் ஹா ஹா ஹா:)..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, அதிரடி! நான் தான் ஏற்கெனவே சொன்னேனே! பார்க்கப் போறேன்னு! நீங்க நல்லாத் தூங்கிட்டு மெதுவா வரீங்க!

   Delete
 20. ஊர் ஆட்களை எல்லாம் தயங்காமல் பக்குப் பகெனப் படம் புடிச்சுப் போட்டிட்டீங்க[அனுமதி இல்லாமல் கர்ர்ர்:)] ஆனா உங்க வீட்டுப் படம் ஒன்றுகூடப் போடல்லியே:) விபரமான ஆள்தான் நீங்க:)) ரம் அங்கிளைக் கொஞ்ச நாளைக்குக் கவனமாக இருக்கச் சொல்லோணும்:))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, இந்த மாதிரி என்னை/எங்களை எத்தனை பேர் எடுத்திருக்காங்களோ! :))))

   Delete
 21. //அங்கே கொடுக்கும் உணவு என்ன தான் சைவ உணவு என்றாலும் ஒத்துக்குமா என்பது சந்தேகமே! //

  ஹையோ ஆண்டவா எங்கின போனாலும் சாப்பாட்டுப் பிரச்சனைதான் கர்ர்ர்:)) ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் என்னவாம்ம்ம்ம்ம்:)).. ஹா ஹா ஹா சரி மீ ஓடிடுறேன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கடைசியிலே நீங்க சொன்னது தான் நடந்துச்சு! ஏற்கெனவே தெரிஞ்சு வைச்சிருந்தீங்களோ? :)))))

   Delete
  2. ஹா ஹா ஹா இதனாலதான் கீசாக்கா, விரத காலங்களில் நாம் எங்கும் போவதில்லை.. முடிஞ்சவரை வீட்டுணவுதான்.. ஆனா நீங்க எப்பவும் சைவம் என்பதால் என்ன பண்ண முடியும்.. அஜஸ்ட் பண்ணித்தான் ஆகோணும்.

   Delete