எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 03, 2022

என்னென்னமோ நினைப்புகள்!

 ஏன் பதிவுகள் போடலைனு கில்லர்ஜி கேட்டிருக்கார். போட்டிருக்கணும் தான். ஆனால் முடியலை. உட்கார்ந்து எழுத முடியலை என்பது ஒரு காரணம் என்றாலும் மனம் இருந்தால் உட்கார்ந்து எழுதிடுவேன் என்பதும் உண்மை. ஆனாலும் மனம் எழுதுவதில் பதியவில்லை. ஏதோ நாட்கள் ஓடுகின்றன என்ற அளவில் ஓடுகின்றன. எதையும் முன்போல் கவனித்துச் செய்வதில்லை. மனச்சோர்வு ஒரு காரணம் என்றாலும் எழுத நினைத்த/நினைக்கும் விஷயங்களை எழுதினால் பலருக்கும் கோபமும் வரும். இந்தக் கால கட்டத்தில் உருப்படியாய்ச் செய்தது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் படிச்சு முடிச்சேன் என்பது தான்.படிப்பதில் இருக்கும் சுவையும் ஆர்வமும் திரைப்படம் பார்க்கையில் இருக்குமானு தெரியலை.

இங்கே ஒரு திரை அரங்கில் சனி, ஞாயிறு மாலைக்காட்சியாகப் பொன்னியின் செல்வன் போடுவதாகச் சுற்றறிக்கை வந்தது. ஆனால் எங்களுக்கு அதில் ஆர்வம் எல்லாம் இல்லை என்பதால் போகவில்லை. இங்கே எனக்கு ஜியோ கொடுக்கும் திரைப்படங்களில் அது வந்தால் அப்போப் பார்க்கலாம். நான் அமேசான்/நெட்ஃப்ளிக்ஸ் எல்லாம் பணம் கட்டிப் பார்க்கும் ரகமும் இல்லை. இந்த ஓசிப்படங்களிலேயே கோமதி அரசு, ஸ்ரீராம் எல்லோரும் சொன்னாங்களே என்று ஹே சினாமிகா மட்டும் பார்த்தேன். அதுவும் சுமார் பத்து நாட்களுக்கு மேல் ஆச்சு. நான் படம் பார்க்க உட்கார்ந்தால் மின்சாரம் போயிடும் அல்லது இணைய இணைப்புப் போயிடும். இப்படியே இருந்து ஒரு நாள் சிரமப்பட்டு உட்கார்ந்து பார்த்து முடிச்சேன். காஜல் அகர்வால் வந்தப்புறமாப் படம் பரவாயில்லை ரகம்/பார்க்கவும் முடிந்தது. முடிவு எதிர்பார்த்தது தான். இம்மாதிரிப் பல படங்கள் தமிழ்/தெலுங்கு/கன்னடம்/மலையாளம்/ஹிந்தியில் வந்திருக்கு. 

நான் விமரிசனங்கள் படிச்சவையோ ராகெட்ரி/காஷ்மீரி ஃபைல்ஸ் போன்ற படங்களோ இந்த ஜியோவில் இல்லை. அதனாலும் படம் பார்க்கும் ஆவல் தோன்றவே இல்லை. இந்த சினாமிகா படத்தின் வெளிப்புறக் காட்சிகள் நன்றாக இருந்தன. இதுவரை அதிகம் பார்க்காத இடங்கள். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் படம் இல்லை என்பதே உண்மை. ஆனால் சொன்னால் நண்பர்கள் உனக்கு வயசாயிடுச்சு, ரசிக்கத் தெரியலை என்றெல்லாம் சொல்லலாம். சொல்லிட்டுப் போகட்டும். அழுத்தமான கதை, பொருள் செறிந்த பாடல்கள், காதுக்கு இனிமையான இசை எல்லாம் உள்ள படத்தைத் தேடித்தான் பிடிக்கணும்.

அதோடு இல்லாமல் இரண்டு மடிக்கணினியுமே என்னைப் பார்த்துட்டு அதுங்களும் அடிக்கடி உடம்பு முடியாமல் படுத்துக்குதுங்க! தோஷிபா கணினியில் உட்கார்ந்தால் எனக்கு வசதி. ஆனால் அதிலே எப்போவானும் இணைய இணைப்பு வரும். அதுக்கு வயசு ரொம்ப ஆகிவிட்டதால் பலவீனமான நிலையில் இருப்பதால் இணைப்புச் சரியாக வருவதில்லை. இந்த "டெல்" கணினியிலோ கீபோர்ட் ஓட்டமாய் ஓடிக்கொண்டே இருக்கும். நாலைந்து முறையாவது  ரீ ஸ்டார்ட் பண்ணினால் போனால் போகுது என்று ஏதோ ஒரு அரை மணி நேரம் ஒத்துழைக்கும். அதுவும் இதில் ஈ கலப்பை சரியா வரலை என்பதால் சுரதாவில் அடிச்சு ஃபான்ட் மாத்தி காப்பி, பேஸ்ட் பண்ணித் தான் போட வேண்டி இருக்கு. முக்கியமாய் மனச்சோர்வுக்கு இதெல்லாமும் ஒரு காரணம்.

இப்போக் கூடக் காலை ஐந்தே முக்காலில் இருந்து முயற்சி பண்ணினதில் இப்போத் தான் இந்தக் கணினி வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. கூகிள்க்ரோமைக் க்ளிக் செய்தால் பைத்தியம் மாதிரி வின்டோஸ் வேர்ட் திறக்கிறது. அதைக் கான்சல் செய்வதற்குள் போதும் போதும்னு ஆகிறது. இதெல்லாமும் சேர்ந்து இன்னமும் உடல்/மனம் சோர்வு அதிகம் ஆகிறது. ஏற்கெனவே எங்க பெண்ணிற்கு 2 வருடங்களாகத் தொடர்ந்து இருந்து வரும் வயிற்றுப் பிரச்னை வேறே இன்னமும் சரியாகலை என்பதாலும் மனம் அதிகம் சோர்வடைகிறது. மனசு பதிஞ்சு எதிலும் ஈடுபாட்டுடன் வேலை செய்யவே முடியறதில்லை. புத்தகங்கள் வெளியிடுவதற்கு எடிட் செய்யணும்னு நினைச்சால் கூட முடியறதில்லை. எப்போ முடியுமோ சரி அப்போப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.


காலங்கார்த்தாலே எல்லோருக்கும் மன வருத்தத்தைக் கொடுக்க வேண்டாம்னு இதை மத்தியானமா வெளியாகறாப்போல் வெளியிடுகிறேன். சரிதானே!

46 comments:

  1. இதைச் சொல்லிக் காண்பித்தே ஒரு பதிவை நேத்தி விட்டீர்களே... இந்த திறமை எனக்கு இல்லை.

    மனதில் பட்டதை துணிந்து எழுதுங்கள், இது நம்ம இடம். தவறாக எழுதாதவரை எதுவும் தவறில்லை.

    சரி இதுதான் உங்கள் ஊரில் மத்தியானமா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இந்த டெல் கணினியில் இருக்கும் அம்பேரிக்க நேரத்தை மாற்றலை. நான் மத்தியானத்துக்கு ஷெட்யூல் பண்ணினால் போகவே இல்லை. பிடிவாதமாகப் பப்ளிஷ் ஆயிடுச்சு. அந்த நேரப்படி அம்பேரிக்கா ஹூஸ்டனில் முதல் நாள் மாலை/இரவு நேரம்.

      Delete
  2. எப்போது முடியுமோ அப்போது செய்யலாம் என்பது சரியான முடிவாக இருப்பினும், மடைமாற்றத்திற்காக எழுதுவது சிறப்பு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து சிறப்பான கருத்தையும் கொடுத்தமைக்கு நன்றி முனைவரே!

      Delete
  3. //அழுத்தமான கதை, பொருட்செறிவு நிறைந்த பாடல்கள், காதுக்கு இனிமையான இசை// - சரி சரி.. தில்லானா மோகனாம்பாள், கர்ணன் படங்கள் வரும்போது சொல்றேன். இப்போ போய்த் தாச்சிக்கோங்க. சரியா

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீரி ஃபைல்ஸ், ராக்கெட்ரி, காந்தாரா போன்றவை சிறந்த படங்கள் தானே! அவற்றைப் பார்க்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கே!

      Delete
    2. ராக்கெட்ரி எனக்கு பார்க்க முடியும்.  ஆனால் ஏனோ என்னால் அதை அரை மணி நேரத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை!  காஷ்மீரி பைல்ஸ் தமிழிலேயே பார்த்தேன்.  மகாராணி பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொறுமை போய்விட்டது.  திருச்சிற்றம்பலம்,  நானே வருவேன், கணம் எல்லாம் பார்த்து விட்டேன்!

      Delete
    3. ஹூம், என்னவோ போங்க! கிடைச்சவங்களுக்குப் பார்க்கப் பிடிக்கலை. பிடிச்சவங்களுக்குக் கிடைக்கலை.

      Delete
    4. நெல்லை, எனக்கு அவ்வளவாப் பிடிக்காத சில படங்களில் தி.மோ.வும் உண்டு. அடிக்க வரும் முன்னர் ஓடிடறேன். அதிலும் பத்மினி ஆடும்போதெல்லாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    5. யாரேனும் அழகாகவும், நல்லா நடனமாடினாலும் எங்க கீசா மேடத்துக்குப் பிடிக்காதே...

      எனக்கு சிவாஜியின் நடிப்பு முழுமையாக அந்தப் படத்தில் பிடிக்கவில்லை. நாகேஷ், அவரது கேரக்டர் மீது கடும் கோபம் வரும்படி சூப்பராக நடித்திருப்பார்.

      Delete
    6. அழகான நடனங்களை நீங்க பார்த்ததே இல்லைனு நல்லாப் புரியுது நெல்லை! இஃகி,இஃகி,இஃகி! பெண்மையின் நளினம் சிறிதும் இல்லாத பத்மினியின் ஆட்டத்தை விட அவரது மருமகள் ஷோபனாவின் ஆட்டத்தைப் பார்த்திருக்கீங்களோ? அந்த உடலும், கைகால்களின் அசைவுகளும் சாதாரணமாகவே ஓர் நடனம் தான். பத்மினியின் காலத்தில் எனில் குமாரி கமலா! அவரை மிஞ்சிய நாட்டிய ராணி எவரும் இல்லை அந்தக் கால கட்டத்தில்.

      Delete
  4. இதுக்கெல்லாம் கவலைப்படுவாங்களா? அடுத்த முறை பையர்ட இல்லை பொண்ணுட்ட சொல்லிடுங்க...அங்க வர்றதானா புது மடிக்கணினி வாங்கித்தரணும், எல்லாத்தையும் இன்ஸ்டால் செய்து தரணும் என்று.

    ReplyDelete
    Replies
    1. பையர் போன முறை வந்தப்போவே புது மடிக்கணினி வாங்குனுவாங்கிக் கொடுக்கிறேன்னும் சொல்லிட்டார் எல்லாமும் இன்ஸ்டால் பண்ணியும் கொடுப்பாங்க. ஒண்ணும் பிரச்னை இல்லை. அநேகமாக இப்போ டிசம்பரில் பையர் வரச்சே அதான் நடக்கப் போறதுனு நினைக்கிறேன்.

      Delete
  5. மனத்தை இணையத்தில் ஈடுபடுத்திக்கிட்டா, நண்பர்கள்ட தொடர்பு வைத்துக்கொள்ள முடியும். வை கோ சார் மாதிரி, வாட்சப்பிலேயே இருந்துவிட்டால், தொடர்பு வெகுவாகக் குறைந்துவிடும். நினைவில் வைத்திருங்கள்

    ReplyDelete
    Replies
    1. முக்கியமாய் அதுக்காகத் தான் நான் இணையத்துக்கே வரேன். நீங்க சொல்றாப்போல் வாட்சப்பெல்லாம் பார்க்கிறதே இல்லை. பெண்/பிள்ளை அழைப்புகள் தவிர்த்து வேறே முக்கியமானவை இருந்தால் ஒரு கண்ணோட்டம் விடுவேன். அதிலேயே மூழ்குவதெல்லாம் கிடையாது.

      Delete
  6. ஸ்ரீரங்கத்தில் நல்ல ஹோட்டல்கள் என்ன என்ன? எங்கே பூரி மசால் நல்லா இருக்கும்? எங்கே அருமையான ரவா தோசை சாப்பிடலாம் என்றெல்லாம் சொன்னீங்கன்னா 7 நாளில் அங்கு வரும்போது உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அட? ஓட்டல்களில் சாப்பிடலாம்! எங்க வீட்டிலே சாப்பிடக்கூடாதா என்ன? எப்போ/என்னிக்கு/எத்தனை மணீக்கு வரீங்கனு சொல்லுங்க.

      Delete
    2. அப்புறம் நெல்லைக்கு நான் தோசை வார்த்தேன். என்று பதிவு போடவா? 
      Jayakumar

      Delete
    3. நான் தினம் இரவுக்கு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்று என யோசித்துத் தான் பண்ணிண்டு இருக்கேன் திரு ஜேகே அவர்களே! ஆகவே நெல்லை வரும்போது தோசை என்ன! மசால் தோசையே பண்ணித் தரலாம். அவர் மனைவியோடு வந்தப்போ இலுப்பச்சட்டி தோசை பண்ணிக் கொடுத்துட்டு அதைப் பத்தி எழுதியும் ஆச்சு.

      Delete
    4. ஜெயக்குமார் சார்....உங்க பின்னூட்டம் நகைச்சுவை என்றாலும் என்னால் ரசிக்க முடியவில்லை. கீசா மேடம் ரொம்பப் பெரியவங்க. அவங்களோட அன்பும் (அவங்க கணவரும்) மிகப் பெரியது. கொஞ்சம் அவங்களுக்கு இப்போ உடல்நிலை சரியில்லை. அவங்களோட knowledge on various subjects (ஆன்மீகம், சமையல், வரலாறு, தமிழ்...) ரொம்ப அதிகம். சில நேரங்களில் அவங்களைக் கலாய்க்கும்போது (பின்னூட்டங்களில்) மனதுக்கு வருத்தமாக இருக்கும், தவறா எடுத்துக்கொள்வார்களோ என்று.

      அவங்க கணவரும் ரொம்ப நன்றாகப் பேசக்கூடியவர். சில நேரங்களில் கீசா மேடம் வேலையில் இருந்தாங்கன்னா, நான் அவர் கணவர்கிட்டயே பேசிக்கிட்டிருப்பேன்.

      உங்க பின்னூட்டம் சட்னு தவறு மாதிரி (நீங்க கலாய்ப்பா எழுதியிருந்தாலும்) தோன்றியதால் இந்தப் பின்னூட்டம். மன்னிக்கவும்

      Delete
  7. வந்தேனய்யா, வந்தேனய்யா. வந்து நின்று சபையோர்க்கு வந்தனம் சொன்னேனய்யா.
    அது என்ன விண்டோஸ் வர்ட் மைக்ரோசாப்ட் வர்ட் தான் தெரியும். குரோமுக்கு அவனை பிடிக்காதே. 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? தெரியலை எனக்கு.

      Delete
  8. என் கணினி கூட 20 முறை ஆன் செய்தால் ஒருமுறை திறக்கும்.  அப்பொழுதும் பெரும்பாலான சமயங்களில் ஹார் டிஸ்க்கைக் காட்டாது...   கொடுமையாக இருக்கிறது.  இப்போது எங்கள் டிவியும் பாயைப் பிராண்டை ஆரம்பித்திருக்கிறது!  எட்டு வயது ஆகிறது அதற்கு.

    ReplyDelete
    Replies
    1. சொன்னால் நம்ப மாட்டீங்க ஸ்ரீராம். எங்க வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு 22 வயது முடிஞ்சு போச்சு. 2000 ஆம் வருஷம் மாமா ஊட்டி போகும்போது வீட்டில் இருந்த பிபிஎல் தொலைக்காட்சிப் பெட்டியை ஊட்டிக்கு எடுத்துச் சென்றதால் வீட்டிற்குப் புதிது வாங்கினோம். நான் தான் தேர்வு செய்தேன் ஃபிலிப்ஸ். தொந்திரவே கொடுத்ததில்லை. ஒரு தரம் சென்னை மழை/இடியில் ஐசி போயிட்டு வாங்கிப் போட்டதோடு சரி. நான்கைந்து வருஷம் முன்னால் என்ன காரணமோ வேலை செய்யலைனு டிவி மருத்துவரைக் கூப்பிட்டுப் பார்த்தால் டிவியில் ஒண்ணும் பிரச்னை இல்லை. ஸ்டெபிலைசர் மாத்துங்கனு சொன்னதோடு யாராவது இதிலே அந்த பாகம் போச்சு/இந்த பாகம் மாத்தணும்னா நம்பாதீங்க. அருமையா இருக்குனு சொல்லிட்டுப் போனார். நம்மவரும் ஸ்மார்ட் டிவி வாங்கத் தலைகீழாவெல்லாம் நின்னு பார்த்தார். இப்போ ஆகஸ்டில் மருமகள் கூடச் சொன்னாள். நான் ம்ஹூம் தான். வண்ணம், சப்தம், படம் தெரியறது எல்லாமே நல்லா இருக்கு! எதுக்கு மாத்திட்டுப் புதுசு வாங்கணும் ?

      Delete
    2. உங்க கணினியில் ஓ.எஸ். ரீ இன்ஸ்டால் பண்ணணுமோ? போடும்போது ஒரிஜினலாகப் போட்டுடுங்க கொஞ்சம் கூடுதல் செலவானாலும்.

      Delete
  9. ஹே சினாமிகா சில தத்துவ வசனங்கள், கேரக்டர் அமைப்புக்காக ரசிக்கலாம்.  பாம்பே ஜெயஸ்ரீ பாடல் நன்றாய் இருக்கும்   ஆனாலும் உங்களுக்கு வயசாகி விட்டதும் உண்மை!  பொன்னியின் செல்வன் நாளை முதல் அமேசானில் பார்க்கலாம்.  .

    ReplyDelete
    Replies
    1. krrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr @Sriram!

      Delete
    2. என்னாது...கீசா மேடத்துக்கு வயதாகிவிட்டதா? சரி சரி..நேரில் ஸ்ரீராம் பார்த்திருப்பாரோ? நான் சின்ன வயசு என்று நினைத்து ஏமாந்துவிட்டேனோ?

      பொ.செ. நேற்று வீட்டில் போட்டது. மனைவி பார்த்தார். நான் கொஞ்சம்தான் பார்த்தேன் (ஏற்கனவே இரண்டு முறை தியேட்டரில் பார்த்துவிட்டதால்).

      திரும்பத் திரும்பப் பார்க்கும்போது படத்தின் குறைகளும் ஓட்டைகளும் அதிகமாகத் தெரியுமோ?

      Delete
    3. என்னால் எல்லாம் பொ.செ..பார்க்க முடியும்னு தோணலை. முழுக்க முழுக்கக்கதையோடு சம்பந்தம் இருந்த ஓரளவு நடிப்பு, அமைப்பு,பாடல்கள், வசனங்கள் என எல்லாவற்றிலும் பரவாயில்லை ரகமாக இருந்த/இருக்கும் தி.மோ.வையே என்னால் சில காட்சிகளில் ரசிக்க முடியலை.

      Delete
  10. எல்லோருக்கும் சீக்கிரம் உடம்பு மனசு ரெண்டுமே சரியாகணும்..  அதுவே பிரார்த்தனை.  தொடந்தருவதை அவ்வப்போது எழுதுங்கள்.  அதுவே மனச்சோர்வைப் போக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கூடிய மட்டும் எழுத முயற்சி செய்யறேன்.

      Delete
    2. நான் பொடிப்பயலாக என்கருத்தைச் சொல்கிறேன். இணையத்துக்குத் தொடர்ந்து வந்து, நண்பர்களுடன் பின்னூட்டங்கள்/பதிவு மூலம் தொடர்பு வைத்துக்கொள்ளணும். அதுதான் யாருக்குமே நல்லதாக இருக்கும். ஆனால் எப்போதும் எதிர்மறையா எழுதாதீங்க (அரசியல் அசிங்கங்கள், நாட்டின் தவறுகள் போன்றவற்றை). அவற்றை மத்தவங்களுக்கு விட்டுடுங்க. எதிர்மறையில் எழுதினால் அது நம் மனதில் இருந்து நமக்குத்தான் கெட்டது.

      Delete
    3. என்ன சொல்லவர்றேன்னா...நான் நெகடிவ் ஆகப் பேசுபவர்களைப் பக்கத்திலேயே சேர்க்கமாட்டேன். எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை விளைவுகளை ரொம்பவே ஈர்க்கும்

      Delete
  11. மனது நன்றாக இருந்தால் உடல் ஒத்துழைக்கும் தான்.
    மனதை வலிய திரும்பி வந்தேன் மீள் பதிவு போட்டு.
    மீண்டும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது.
    இரண்டாம் ஆண்டு வர போகிறது. நினைவுகள் நினைவுகள் .


    எழுதுங்கள், உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
    எனக்கும் கால்வலி, கழுத்து வலி, முட்டி வலி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்களும் பேசிக் கொண்டோம். மறக்க முடியுமா? மனவலி தான் லேசில் தீருமா? உங்கள் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்திக்கிறேன் கோமதி!

      Delete
  12. வணக்கம் சகோதரி

    தங்கள் பதிவு ரொம்ப கலக்கத்தை தருகிறது. உடல் சோர்வும் மனச்சோர்வுக்கு ஒரு காரணம். எனவே உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்றாலும், உடலுக்கு ஒத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது வேறு படுத்தினால் உடம்பில் வேறு ஏதாவது உபாதைகள் புதுசாக வந்து சேரும்.

    இப்படிதான் இணையத்தில் வந்து பேசினால் எனக்கும் ஒரு உற்சாகம் வருகிறது. பின் உங்கள் நிலைதான். ஏன் வர வேண்டும்? இப்படி வந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம் என்றெல்லாம் ஒரு மன விசாரங்கள் வருகிறது. எல்லாம் உடம்பும் சேர்த்து படுத்துவதால்தான்.. என் மனதை ஒரு திருப்பு முனையாக வைத்துக் கொண்டு பதிவுகள் இடுகிறேன். முடிந்த வரை அனைவரின் பதிவுகளுக்கும் வருகிறேன். நீங்களும் உங்கள் மனதில் எழுபவைகளை முடிந்த வரை எழுதுங்கள். தங்களின் ஆர்வங்குறையாத எழுத்தை நாங்கள் ஆவலுடன் வரவேற்கிறோம்.

    தங்கள் மன விசாரங்கள் குறையவும், தங்களின் பெண் நல்லபடியாக குணமாகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். இறைவனிடம் நம் மன பாரத்தை ஒரு மனதாக இறக்கி வைத்தால் அவன் கண்டிப்பாக நமக்காக விரைவில வருவான். ஆன்மிகத்தில் அதிக நாட்டமுடன் இருக்கும் தங்களுக்குச் சொல்ல எனக்கு தகுதியில்லை. எனினும் தங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தருகிறேன். விரைவில் சுறுசுறுப்பான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.துன்பங்களையும், மன கவலைகளையும் நட்புகளிடத்தில் பகிர்ந்து கொண்டால் சற்று குறையும். இது இப்போதைய என் அனுபவத்தில் நான் கண்டு கொண்டது. ஏதேனும் தங்கள் மனம் வருந்துபடியாக நான் கூறியிருந்தால் மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட ஆறுதலான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி கமலா. இரண்டு வருஷங்களாக ஆகாரமே சரியாய்ச் சாப்பிட முடியாமல் தவிக்கிறாள். மருத்துவர்களாலேயே என்னனு கண்டு பிடிக்க முடியலை. எல்லாப் பரிசோதனைகளும் பார்த்தாச்சு. என்னவோ போங்க! இங்கே எங்களுக்குச் சாப்பிடும்போது நினைவு வந்துட்டால் அன்னிக்குச் சாப்பாடே இறங்காது! :(

      Delete
  13. அன்பின் கீதாமா,
    உடல் நலம் முக்கியம்.

    நீங்கள் எழுதாத விஷயம். பகவத் சங்கல்பத்தில் எப்போது மனம் ஈடுபடுகிறதோ
    உடம்பு ஈடு கொடுக்கிறதோ
    அப்போது எழுதலாம்.

    எனக்கும் விடாத தலைவலி டயபெடிக் நியூரோ பிரச்சினை.
    மகள் சுகம் பிரச்சினையும் சேர்ந்ததில்
    மனசு எதிலும் ஈடுபட மறுக்கிறது.

    இப்போது இவர் விசேஷமும் நாளை.
    என்ன தான் செய்தாலும் சூழ்னிலையிலிருந்து
    விடுபட முடியாத சிரமம்.

    இந்த உலகத்தில் நிறைய நாள் இருந்து விட்டதாக
    நினைப்பு வருகிறது:)

    ReplyDelete
  14. வாங்க வல்லி. நவம்பர் வரவுமே நினைத்துக்கொண்டேன். இந்த வருஷம் நீங்க வரலையேனு. பிள்ளைகள் இருக்கும் இடத்தில் செய்தாலே போதுமே! மகள் உடல்நலனையும் மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளவும். முக்கியமாய் உங்கள் உடம்பு. வயதாகி விட்டதாலோ என்னமோ அலுப்பும்/சலிப்பும் அதிகமாகத் தான் ஆகி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்குல்லாம் என்னவாகப் போகிறதோ......

      Delete
  15. பதிவுக்காகப் பதிவு..

    ஊரில் இருந்தால் கோயிலுக்குப் போகலாம்.. குளத்துக்குப் போகலாம் என்று தான் நினைத்தி ருந்தேன்.. ஆனால் நினைப்பது எல்லாம் நடப்பது இல்லையே..

    நேற்று என் தந்தைக்கு சிரார்த்தம்.. காவிரி, ஐயாறப்பர் கோயில்.. சென்ற மாதம் திரு ஆரூர்..

    இருக்கும் சிரமங்களுடன் வேறொன்றும் சேர்ந்து கொண்டது..

    இறைவன் கருணையுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றேன்..

    ஒருநிலையில்
    உங்கள் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்திக்கிறேன் அக்கா..

    வாழிய நலம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்களும் ஸ்ரீரங்கம் வந்தப்போ வாரம் ஒரு தரமாவது கோயிலுக்குப் போயிடலாம்னு தான் நினைச்சோம். ஆரம்பத்திலேயே மாசம் ஒரு முறை போவதே பெரும்பாடாக இருந்தது.. அப்படியும் ஜேஷ்டாபிஷேஹம், துலா மாச தரிசனம், தீபாவளி தரிசனம், மார்கழி மாத தரிசனம், அரையர் சேவை, வைகுண்ட ஏகாதசிக்குப் பணம் கட்டிப் போய்ப் பார்த்தல் எல்லாம் முதல் வருஷம் நடந்தன. பின்னர் மெல்ல மெல்லக் குறைந்து விட்டது. ஆனாலும் விடாமல் 2/3 மாதங்களுக்கு ஒரு முறையாவது ரங்கனை தரிசித்துக் கொண்டிருந்தோம். இப்போ 3 வருஷங்கள் ஆகிவிட்டன. சின்ன ரங்குவையாவது இங்கே மண்டகப்படிக்கு வரச்சே பார்த்துக்கலாம். பெரிய ரங்குவைப் பார்க்கவே போக முடியலை.

      Delete
    2. புதிதாகச் சேர்ந்த சிரமம் குறைந்து நல்லபடியாகத் தொல்லைகள் நீங்கப் பிரார்த்தனைகள்.

      Delete
  16. வணக்கம் சகோ !

    கணனியோடு ரொம்பத்தான் போராடி இருக்கீங்க நல்லது நீங்கள் ஓய்வா இருக்க கணனி ஒத்துழைக்கிறது வேறொன்றும் இல்லை மற்றும் தங்கள் மகள் பூரண நலம்பெற என் ஆசிகளும் வேண்டுதல்களும் சகோ வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீராளன்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் கணினியோடு போராட்டம் தான் நடத்தி வருகிறேன். இதன் மூலம் நிறைய விஷயங்களும் தெரிஞ்சுக்க முடிஞ்சது என்பதும் ஓர் நன்மை தானே! பெண்ணுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டதுக்கு நன்றி.

      Delete