எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 26, 2023

தற்போதைய நிலவரங்கள்! ஒரு பார்வை!

 குட்டிக்குஞ்சுலுவுக்குப் பால் பல் விழ ஆரம்பித்து விட்டது. நேற்றுக் கீழ்ப்பல் ஒன்று விழுந்திருக்கு. அதைக் காட்ட மாட்டேன்னு முகத்தை மூடிக்கொண்டு ரகளை. ஸ்கூல் போக மாட்டேன்னு அடம். பின்னர் சரியாப் போச்சு. குழந்தை நாம் அறியாமலேயே வளர்ந்து கொண்டு வருகிறாள். இன்னும் கொஞ்ச நாட்களில் மழலையும் காணாமல் போகும். ஒரு வகையில் வருத்தம்/வேறு வகையில் சந்தோஷம். படிப்புத் தான் நைஜீரிய ஆங்கிலப் பள்ளிப்படிப்பு எனக்கு அவ்வளவா நல்லா இருப்பதாகத் தெரியலை. எப்படியோ எங்கிருந்தாலும் நன்றாய்ப் படிக்கட்டும். 

ஒரு வழியாய்க் கண்ணில் அறுவை சிகிச்சை என்பது உறுதியாகி விட்டது. இரண்டு, மூன்று நாட்களாய் இதான் கவலை. நேற்று கண் மருத்துவரிடம் போய் மணிக்கணக்காய்க் காத்திருந்து எல்லா விபரங்களும் கேட்டுக் கொண்டு வந்தாச்சு. சனிக்கிழமையன்று எல்லாச் சோதனைகளும் செய்தாகணும். அதோடு இப்போ என்னமோ புதுசா ஸ்கான் பண்ணணும்னு வேறே சொல்றாங்க. எனக்கு மட்டுமா? அல்லது எல்லோருக்குமானு புரியலை. முதலில் எம் ஆர் ஐ ஸ்கான் என்கிறாப் போல் சொல்லவும் நடுங்கிட்டேன். யாரு உள்ளே போயிட்டு வரதுனு கவலையாப் போச்சு. இந்தப் பரிசோதனைகள் முடிஞ்சதும் ஸ்கான் பண்ணுவாங்களாம். என்னமோ போங்க. நம்மவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டப்போ இப்படி எல்லாம் கெடுபிடி இல்லை. நல்ல நாள் பார்த்துப் போனோம். அரை மணி நேரத்தில் சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு.  நமக்கு எப்படியோ!

இதிலே இன்னொரு கவலை என்னன்னா அறுவை சிகிச்சை அன்னிக்கு வயிறு தொந்திரவு இல்லாமல் இருக்கணும். இரண்டு நாட்கள் முன்னாடி இருந்தே சாப்பாட்டில் கவனமாக இருந்துக்கணும். அதோடு இல்லாமல் அந்த உசரமான டேபிள் மேலே ஏறிப் படுத்துக்கறதும் கஷ்டம்னு நம்மவர் சொல்றார். எனக்கு ஆட்டோவிலேயே ஏற முடியறதில்லை. என்ன பண்ணப் போறேனோ! எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக் கவலைப் பட்டுக்கலாம்.

நாளைக்குக் குலதெய்வம் கோயிலில் மாவிளக்குப் போட நினைத்து ஏற்பாடுகள் செய்யப் போனால் பூசாரிக்கு அண்ணன் திடீரென இறந்து போய் விட்டதால் தீட்டு வந்து விட்டது. ஒரு பத்து நாட்களுக்கு அவரால் கோயிலுக்கு வர முடியாது. அதுக்கப்புறமாக் கோயிலுக்குப் போகலாம்னா அறுவை சிகிச்சைக்குத் தேதி என்ன கொடுக்கிறாங்களோ தெரியலை. போகப் போகத் தான் பார்க்கணும்.

காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தைப் பார்த்துட்டு ரொம்பவே வருத்தமாக இருந்தது. நல்லா எடுத்திருக்காங்க. சப் டைடில்ஸ் இருப்பதாகப் போட்டிருந்தாலும் எனக்கு வரலை. நான் ஹி(கி)ந்தியிலேயே பார்த்தேன். மிதுன் சக்ரவர்த்தி நடிப்பும் அனுபம் கேரின் நடிப்பும் சொல்லவே வேண்டியதில்லை. பல்லவி ஜோஷி ஒரு காலத்தில் எங்களுக்குப் பிடித்த நடிகை. அவர் நடித்த ம்ருகநயனி தொலைக்காட்சித் தொடர் தூர்தர்ஷனில் வந்தப்போ விடாமல் பார்ப்போம். பின்னரும் பல தொடர்கள் பார்த்திருக்கோம். இதில் ஜேஎன் யூ விற்குப் பதிலாக ஏன் என் யூவின் ப்ரொஃபசராக வருகிறார். கடைசியில் கோபத்துடன் வெளியேறுகிறார். நம் நாட்டின் படித்த அறிவு ஜீவிகளை நன்கு எடுத்துக் காட்டி இருக்கார். ஒரு முறைக்கு மேல் பார்த்தால் தாங்காது மனம். :(

அந்தப் பழைய வேலை செய்யும் பெண்மணி அடிக்கடி விடுமுறை எடுப்பதைக் கண்டித்ததும் திடீரென நின்றதுக்கப்புறமாப் பழைய, மிகப் பழைய வேலை செய்த பெண்மணி வந்து கொண்டிருந்தாள். எப்போ வேண்டுமானாலும் வருவாள். அதிலும் கரெக்டாகப் பனிரண்டு மணிக்குச் சாப்பிட உட்காரும்போது வந்துடுவாள். சாப்பிடறோம், பாத்திரங்களைத் தேய் என்றால் பெருக்கித் தான் துடைப்பேன்னு பிடிவாதம் பிடிப்பாள். போன வாரம் வியாழக்கிழமை மின்சாரக் கட்டணம் கட்டணும்னு 500 ரூ வாங்கிக் கொண்டு போனாள். எனக்குக் கொடுக்க இஷ்டமில்லை. இல்லைனு சொல்லிட்டேன். ஆனால் நம்மவர் பாவம் படிக்கிற குழந்தைங்க இருக்கு, மின்சாரம் இல்லைனா கஷ்டம்னு கொடுத்தார். மறுநாளில் இருந்து ஆளே வரலை. தெரிஞ்சவங்க ஒருத்தர் மூலமா இன்னொரு பெண் இன்று வந்தாள். இன்றே வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன். பாத்திரங்கள் மட்டும் தேய்க்கும் வேலைதான். காலையில் குழந்தைகள் பள்ளிக்குப் போவதால் கொண்டு விட்டுக் கூட்டி வரணும்னு வரமுடியாதுனு சொல்லிட்டாங்க. ஆகவே மத்தியானம் மூன்றரை மணி போல் வந்து பாத்திரங்களைத் தேய்க்கச் சொல்லி இருக்கேன். போகப் போகப் பார்க்கணும்.

30 comments:

  1. ஆமாம். குழந்தையின் மழலை மறைவது வருத்தம் என்றாலும் வளர்ச்சி மகிழ்ச்சிதான் தரும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஸ்ரீராம்.

      Delete
  2. கண் அறுவை சிகிச்சைக்கு உங்களை நோ அப்ஜெக்ஷன் போல எதுவும் வாங்கி வரச் சொல்லவில்லையா?  இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் அபப்டிக் சொல்கிறார்கள்.  நான் என் கட்டுரையிலேயே சொல்லி இருந்தேனே, கேட்ராக்ட் செய்து கொள்ள இருந்த ஒரு தோழி நோ அப்ஜெக்ஷன் பார்மாலிட்டிக்கு அலைந்து கொண்டிருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. அது மாதிரி எல்லாம் இன்னமும் சொல்லலை. எல்லாச் சோதனைகளும் எடுத்துக் கொண்டு மறுபடி போகணும். அப்போ என்னவோ!

      Delete
  3. குலதெய்வம் கோவில் விஷயம் வருத்தம்தான்.  நாங்கள் கூட குலதெய்வம் கோவில் சென்று வந்து நாட்களாகி விட்டன.  சீக்கிரம் வாய்ப்பு வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க இப்போத் தான் மார்கழி மாதத்தில் பையர் குடும்பத்தோடு போயிட்டு அபிஷேஹமெல்லாம் பண்ணிட்டு வந்தோம். ஆனால் மாவிளக்குப் போடவில்லை. இன்னிக்குப் போக நினைச்சிருந்தால் அம்மன் வேறொன்று நினைத்து விட்டாள். :(

      Delete
  4. வீட்டுக்கு வேலை செய்ய வருபவர்களிடம் அனுசரித்து அடஜஸ்ட் செய்துதான் போகவேண்டியிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. எந்த அளவிற்கு? முன்னால் வேலை செய்த பெண்மணி தான் இல்லை எனில் இங்கே எதுவுமே நடக்காது என்னும் அளவில் நடந்து கொண்டார். எல்லாவற்றுக்கும் அவரைக் கெஞ்ச வேண்டும். விடுமுறை அடிக்கடி எடுத்தாலும் கேள்வியே கேட்கக் கூடாது. பாத்திரங்களைப் போட்டு வைக்கக் கூடாது. நாம சாப்பாடு கொடுத்தால் இஷ்டத்துக்குக் கேலி செய்வார். பொறுத்துக்கணும். இது போதாதோ? :(

      Delete
  5. பேத்தியை பற்றி பகிர்வு அருமை. நன்றாக படிப்பாள் குழந்தை.
    உங்கள் கண் ஆப்ரேஷன் நல்ல படியாக நடக்க வாழ்த்துகள்.
    கண் அறுவை சிகிட்சை இப்போது நிறைய மாற்றங்கள் உள்ளது கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டாம், மரத்து போக ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். ஸ்கான் செய்த மாதிரி தெரியவில்லை இது இன்னும் புதிதாக கேள்வி படுகிறேன்.
    நல்ல வேலையாள் கிடைக்கட்டும். கண் அறுவை சிகிட்சை முடித்து வந்தால் கண்டிப்பாய் தேவைபடுமே!

    ReplyDelete
    Replies
    1. வேலைக்கு ஆள் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை கோமதி! இப்போது சொல்லி இருக்கும் பெண்ணிற்குச் சின்னக் குழந்தைகள் என்பதால் காலை வேளையில் வர முடியாது. மாலை 3 மூன்றரைக்குள் வந்து பாத்திரங்களை மட்டும் தேய்த்துக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டிருக்கார். பார்ப்போம்.

      Delete
  6. குட்டிக் குஞ்சுலு...நன்றாகவே படிக்கும். கவலை வேண்டாம்.

    இருக்கற கஷ்டங்கள் போதாது என்று காஷ்மீரி ஃபைல்ஸ் போன்ற சோகப் படங்களைப் பார்த்தால் கவலை அதிகமாகாதோ?

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீரி ஃபைல்ஸ் நல்ல தரமான படம். பார்த்ததில் தவறேதும் இல்லை நெல்லை.

      Delete
  7. அறுவைச் சிகிச்சையெல்லாம் நல்லபடியா முடியும்.

    ReplyDelete
  8. நல்லபடியா நடக்கணும் என்பதே என் பிரார்த்தனையும் கூட.

    ReplyDelete
  9. குழந்தை வளர்வது மகிழ்வான விஷயம்தான் ஆனால் மழலை மாறும் போது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் நான் வளர்கிறேன் பாட்டின்னு வளர்வதுதான்...

    குகுவின் செய்கைகள் அந்த வயதிற்கே உரிய விளையாட்டு பிடிவாதம் எல்லாம்...மாறிவிடும் இன்னும் கொஞ்ச நாள் போகும் போது....குழந்தைகளின் ஒவ்வொரு பருவ செயல்களும் ஒரு வகை மகிழ்ச்சியைத் தரும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, கருத்துக்கு நன்றி. பிடிவாதம் சாப்பாட்டு விஷயத்தில் தான் அதிகம். :( அவளோட அத்தை மாதிரி இருக்கா இந்த விஷயத்தில்! :(

      Delete
  10. அறுவைச்சிகிச்சை நல்லபடியா நடக்கும் கீதாக்கா நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    காஷ்மீரி ஃபைல்ஸ் மனம் வேதனை தரும் படம்னு எங்கேயோ ரிவியூ பார்த்த நினைவு.

    வேலைக்கு ஆள் எல்லாம் கிடைப்பதும் கடினமா இருக்குன்னு உறவுகளில் சிலர் ரொம்ப வருத்தப்படுகிறாங்க. அதுவும் ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணனுமா இருக்கு என்றும். உங்களுக்கு இப்போதையவர் நல்லவிதமா அமைவாங்க கீதாக்கா...

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாட்களாக அந்தப் பெண் வந்து பாத்திரம் மட்டும் தேய்த்துக் கொடுத்துவிட்டுப் போகிறாள். அவங்களால் காலம்பர வரவே முடியாது. சாயங்காலம் பெருக்கித் துடைப்பது எனக்குச் சரியா வராது. போகட்டும். இன்னிக்கு எல்லாப் பரிசோதனையும் எடுத்தாச்சு. முடிவுக்குக் காத்திருக்கோம்.

      Delete
  11. கீதாக்கா குழந்தை நன்றாகப் படிப்பாள் கவலை வேண்டாம். நன்றாக வருவாள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றாய்ப் படிக்கணும். அதான் இப்போதைக்கு முக்கியம்.

      Delete
  12. அக்கா, நம்ம தளத்துப் பதிவுகள் 3,4 வந்திருக்கு உடற் பயிற்சிகள், ரப்பர்னு முடிஞ்சா கண்ணு ஒத்துழைச்சா பாருங்க உங்கள் ஹெல்த்துக்கு பாதகம் இல்லாம

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்க பதிவெல்லாம் பார்த்தேன்/ஒன்றிரண்டு படித்தேன். கருத்துச் சொல்லும்படி எதுவும் தோணவில்லை. :(

      Delete
  13. குட்டிக் குஞ்சுலு வளர்வது மகிழ்ச்சி.

    கண் ஆப்பரேசன் நலமாக முடியும் கவலை வேண்டாம். பிரார்த்திக்கிறோம்.

    வேலைக்கு ஆட்கள் அமைவதும் இக்காலத்தில் திருமணமே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, கருத்துக்கு நன்றி.

      Delete
  14. // ஒரு வகையில் வருத்தம்/வேறு வகையில் சந்தோஷம்.. //

    இது தான் நிதர்சனம்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தம்பி. தவிர்க்க முடியாததும் கூட!

      Delete
  15. பணியாளர் பிரச்னை..

    பிரச்னை தான்..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம் என்னைப் போன்றவர்களுக்குத் தான் பிரச்னைனு நினைச்சால் எல்லோருக்கும் இருக்கும் போல!

      Delete
  16. //எம். ஆர். ஐ. ஸ்கேன்...//

    //பூசாரியார் வீட்டில் துக்கம்.. //

    சோதனை மேல் சோதனை..

    இறைவன் துணை..

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே சோதனை தான். பார்க்கலாம். இனிமேல் தான் ஸ்கான் எடுக்கணும்.

      Delete