எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 18, 2023

வந்தார், வந்தார், வந்தாரே விநாயகர்!


 இது ஆடி வெள்ளீக்குப் போட்ட மாவிளக்குகணபதியார் குளீச்சுப் புத்தாடை அணீந்து அலங்காரத்தில்


நெய் தீபம் காட்டும்போதுநம்ம ராமர் மேலே இருந்து எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கார்.


நிவேதனங்கள். வெற்றீலை, பாக்கு, பழங்கள், சாதம், இட்லி, வடை, அப்பம், உப்பு, வெல்லக் கொழுக்கட்டைகள், பருப்புப் பாயசம்


பூப் போட்டுக் கொன்டிருக்கார்


கற்பூர தீபாராதனை
.
ஆங்காங்கே இருக்கும் தட்டச்சுத் தவறூகள் மனதை நோகடிக்கிறது. மன்னிக்கவும்.

27 comments:

 1. தட்டச்சுத் தவறுகள் மனதை நோகடிக்கின்றதா...  கவலை வேண்டாம்.  என்னை நினைத்துக் கொள்ளுங்கள்..  "இவன் விடற தப்புக்கு நாம் எல்லாம் ஜுஜுபி... நாம எவ்வளவோ தேவலாம்" என்று ஆறுதல் வந்து விடும்.

  ReplyDelete
  Replies
  1. ஹூம், நீங்க வேறே ஶ்ரீராம். நானும் சுரதாவின் மூலமாத் தட்டச்சப் பார்த்தாலும் ஏனோ சுரதா வரவே இல்லை. ;(

   Delete
 2. விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டதா?  மகிழ்ச்சி.  கொழக்கட்டைகளுக்காகவே கிளம்பி ஸ்ரீரங்கம் வந்து விடலாமா என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வாங்க, அடிக்கடி பண்ணீட்டு இருந்தேன். இப்போல்லாம் முடியலை. இந்த வருஷம் கொழுக்கட்டை ரொம்பவே நல்லா வந்திருந்தது.

   Delete
 3. அதுசரி, திருவானைக்கா பார்த்தசாரதி விலாஸில் சூப்பர் ரோஸ்ட் டேஸ்ட் பண்ணி இருக்கிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஹையோ, ஹையோ! அது சூப்பர் ரோஸ்ட் இல்லை. சொதப்பல் ரோஸ்ட். :))))))

   Delete
  2. அவ்வளவு மோசமாக இல்லையே..... என்ன ஒன்று.... பல இடங்களுக்கும் சென்றிருப்பதால், சுத்தக் குறைவு பளிச்சுனு தெரியும்.

   Delete
  3. நான் போனதே இல்லை. ஒரு தரம் ரங்கு சாப்பிட்டுவிட்டு எனக்கும் வாங்கி வந்தார். அப்படியே தூக்கிப் போடும்படி ஆயிடுத்து! உதிர் உதிராக தோசை மாதிரியே இல்லை.

   Delete
 4. அருமையான விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்கள்.

  கொழுக்கட்டைகள், அப்பம், பாயசம் என அமர்க்களப்படுத்தியிருக்கிறீர்கள்.

  மாமா லைவ் ஸ்ட்ரீம் பண்ணுகிறாரா என்ன?

  இராமர் படம் பளிச் என்று உங்களைப் புகைப்படம் எடுக்க விடவில்லை போலிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நெல்லை. குட்டிக் குஞ்சுலுவுக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருப்பதால் பூஜை நடக்கும்போதே படங்கள் எடுத்து அனுப்பறேன். அதுவும் பார்த்துட்டு வாய்ஸ் மெசேஜில் பதில் கொடுக்கும்.

   Delete
  2. இன்னிக்குத் தாத்தா பிறந்த நாளைக்கு வாய்ஸ் மெசேஜில் வாழ்த்துச் சொல்லி இருக்குக் குட்டிப் பட்டுக் குஞ்சுலு,

   Delete
  3. Cute குட்டி பட்டுக் குஞ்சுலு!!!

   கீதா

   Delete
  4. குபகு வோட வாய்ஸ் மெசேஜ் எல்லாம் சேர்த்து வைச்சுக்கோங்க கீதாக்கா

   கீதா

   Delete
 5. நன்று விநாயகர் தரிசனம் கிடைத்தது நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி. நன்னியோ நன்னி.

   Delete
  2. புதுக் கணினியில் சுரதா நன்றாக வருது. தப்பே இல்லாமல்!

   Delete
 6. இங்கும் நேற்று பிள்ளைகள், பேரன் நேரலையாக பூஜை பார்த்தார்கள், பேரன் பாடினான்.
  பிரசாதங்களை உங்களிடமிருந்து பெற்று கொண்டார் விநாயகர்.(செய்யவைத்துவிட்டார்)
  பேத்தி பார்த்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 7. எத்தனை நைவேத்திய ஐட்டங்கள்! எப்படி முடிகிறது உங்களால்?!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்பாதுரை, கொழுக்கட்டைக்காகவாவது வந்தீங்களே! இரண்டு வருஷம் முன்னாடி கூட இதை விட அதிகமாய்ப் பண்ணி விநியோகம் செய்தேன். இப்போல்லாம் வேலை செய்யும் பெண்ணைத் தவிர்த்து யாருக்கும் கொடுப்பதில்லை. ஆகவே கொஞ்சமாய்ப் பண்ணுகிறேன்.

   Delete
 8. விநாயகர் சதுர்த்தி வழிபாடு அருமை.

  ஓம் கம் கணபதயே நம:

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை! இந்த "கம்"க்கு அர்த்தம் தேடினால்! மாளாது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னிடம் கூட "க"கார கணபதி ஸ்தோத்திரம் இருக்கு. முதலில் வாங்கிய டெஸ்க் டாப்பில். இப்போப் பென் டிரைவில் இருக்கணும். தேடித்தான் பார்க்கணும்.

   Delete
 9. செல்லினம் - என்று ஒன்றிருக்கின்றது..

  அதை முயற்சித்துப் பார்க்கவும்..

  ReplyDelete
 10. செல்லினம்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் அது மொபைலுக்கு மட்டுமோனு நினைச்சிருந்தேன். மடிக்கணினிக்கும் பயன்படுமா? பார்க்கிறேனே!

  ReplyDelete
 11. கீதாக்கா, நான் தாமதம் பிள்ளையார் பார்க்க!!! தொடர்ந்து வேலை. இன்று இனிமேல்தான் வரும் அதுக்கு முன்ன ஒரு ஓஒட்டம் ஓடிடலாம்னு

  படங்கள் எல்லாம் நல்லாருக்கு. குகு சந்தோஷப்பட்டிருக்கும் இங்கு இருந்திருந்தா....உங்களுக்கு உதவியிருக்கும்!!

  இங்கு பங்களூரில் இம்மாதிரியான கொண்டாட்டங்கள் அமோகமாக நடக்கும். பொதுவாகப் பிரச்சனைகள் இருப்பதில்லை. முக்குக்கு முக்கு விநாயகர் வைச்சு அலங்காரம் பூஜை எல்லாரும் வந்து வணங்குதல்னு...ரொம்ப நன்றாக இருக்கு. இங்கு செவ்வாய்க் கிழமை கொண்டாடினாங்க. நாங்களும் செவ்வாய்தான் கொண்டாடினோம். வழக்கம் போல பிரசாதங்கள்! ஒன்றே ஒன்று ...முன்ன இருந்த வீடு வரை அதிகமாகச் செய்து விநியோகம் நடக்கும் இப்ப இந்த வீட்டிற்கு அருகில் விநியோகத்திற்கு வழி இல்லை என்பதால் வீட்டளவில்.

  நீங்களும் விடாமல் மிக அருமையாக உங்க உடல் பிரச்சனைகளுக்கு நடுவில் எல்லாம் செய்து பூஜை செய்து அமர்க்களம் போங்க!

  ஹாஹாஹா அக்கா தட்டச்சுப் பிழைக்கு எல்லாம் நாங்க அப்ப என்ன சொல்றது. திருத்துவதற்கும் நேரம் இல்லாம போகிறது...

  வினை தீர்க்கும் விநாயகர் எல்லாருக்கும் நல்லது அருள வேண்டும்.

  கீதா

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை தங்கள் வீட்டில் விநாயகர் பூஜை சிறப்பாக நடந்தது குறித்து மிக்க சந்தோஷம். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. விநாயகருக்கு செய்த பிரசாதங்கள் அருமை. உங்கள் உடல் இயலாமையிலும் , அக்கறையுடன் விடாமல் பூஜை செய்து வழிபட்டமைக்கு விநாயகர் நல்ல பலனாக தருவார்.

  என் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் இந்தப் பதிவுக்கு உடனடியாக வர இயவில்லை. தாமதமாக வந்து விநாயகரை வழிபட்டுள்ளேன். பொறுத்துக் கொள்ளவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, உங்கள் உடல்நிலை, வீட்டினரின் உடல்நிலை ஆகியவற்றைப் பார்க்கையில் நீங்க வந்ததே பெரிய விஷயம். இது ஒண்ணும் உடனே பார்க்கணும்னு இல்லை. எப்போ வேணா முடிஞ்சப்போ வாங்க. அனைவரது உடல் நிலையும் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன்.

   Delete