சுட்டி கிடைச்சுப்பதிவை எடுத்திருக்கேன். கொஞ்சம் இல்லை ரொம்பப்பெரிதாக இருக்கும். இருமுறை வந்திருக்கோனு சந்தேகம்.
உடையவர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீது ஏறி அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தாரா?!
Dev Raj அவர்களின் அற்புதமான பதிவு!!
ஸ்ரீராமாநுஜர் திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி நின்றுகொண்டு மக்கள் அனைவரையும் கூவிக்கூவி அழைத்து அஷ்டாக்ஷரம் சொன்னதாக ஒரு கட்டுக்கதை......
பூதூர் மாமுனி புதுமை செய்தார், புரட்சி செய்தார், தாமரைப் புரட்சி என்றெல்லாம் கதைகள் பரப்பி சுகம் தேடுதல் ஒரு பொழுதுபோக்காகவும் ஆகி விட்டுள்ளது!
'புரட்சி' என்ற சொல் பாரதியாரின் 20ம் நூற்0 புத்துருவாக்கம். பாரதியாரின் 'புதிய ருஷியா' பாடலில் ஜார் சக்ரவர்த்தியின் வீழ்ச்சியைச் சொல்லுமிடத்தில் "அங்கே, ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி......" என்கிறார். அதற்குமுன் தமிழிலக்கியத்தில் இச்சொற்பயன்பாடு கிடையாது.
ஆமுதல்வர் ஆசார நெகிழ்ச்சி செய்தருளியது பரம பாகவதர் விஷயத்தில் மட்டுமே, அதுவும் ஆசார்யவர்யர் ஆளவந்தார் காட்டிச்சென்ற வழியைப் பின்பற்றியே!
ஆமுதல்வர் இராமாநுசர் செய்தருளிய ஆனைத் தொழில்கள் எல்லாம் பகவத் கைங்கர்யத்தோடுதான் சேரும்; அவற்றின் மீது எந்தச் சாயமும் பூச வழியில்லை.
ஸ்ரீராமாநுஜர் திருக்கோட்டியூரில் வரம்பறுத்து பேதமின்றி அனைவருக்கும் உபதேசித்தார் என்றால், அவர் திருவரங்கம் திரும்பிய பின்னர் தமக்கு மிகவும் அணுக்கமான கூரத்தாழ்வானுக்கு ஏன் அவ்வாறு உடனே உபதேசம் செய்யவில்லை?
Krishna Krupa Rajagopalan:
ஸ்ரீ ராமானுஜரின் கோபுர ஆரோஹணம் உண்மையா ?🛕
திருக்கோஷ்டியூரில் தெற்காழ்வான் ஸந்நிதி என்று ஒரு நரசிம்மர் ஸந்நிதி உள்ளது. அதன் திருமுற்றம் சுமார் 50 பேர்கள் அமரக் கூடிய ஒரு கூடம். அங்கே அமர்ந்து தான் ஸ்ரீ ராமானுஜர் திருவஷ்டாக்ஷரத்தை உபதேசித்தார்.
அதுவும் தெருவில் போவோர், வருவோரை எல்லாம் கூப்பிட்டு மந்த்ரோபதேசம் செய்ததாக எந்த க்ரந்தங்களிலும் இல்லை .
அன்றைய தினம் திருக்கோஷ்டியூருக்கு சுமார் 45 ஸ்ரீவைஷ்ணவர்கள் உத்ஸவத்தில் சௌம்ய நாராயணப் பெருமாளை சேவிக்க வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் உயர்ந்த வைணவக் குடியில் பிறந்தவர்கள். திருமந்த்ரத்தின் பெருமை தெரிந்தவர்கள். திருவஷ்டாக்ஷரத்தை ஜபிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்கு தான் பரீக்ஷை செய்யாமல் மந்த்ரோபதேசம் செய்தார் யதிராஜர். இந்த நிகழ்வுதான் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலம் ஸ்ரீ ராமானுஜர் 'எம்பெருமானார்' என்று பெயர் பெறக் காரணம் ஆகியது.
ராமானுஜர் திருக்கோஷ்டியூரில் மந்த்ரோபதேசம் செய்தார் என்பது உண்மை. ஆனால், அவர் கோபுரத்தில் ஏறி மந்த்ரோபதேசம் செய்தார் என்பது தவறான கருத்து. இது சமீப காலமாகத்தான் சொல்லப்பட்டு வருகிறது. ஸ்ரீவைஷ்ணவர்கள் யாரும் இவ்வாறு சொல்லுவதில்லை. எந்த ப்ரமாண நூல்களிலும் இவ்வாறு இல்லை.
1)முதலில் உடையவர் காலத்தில் திருக்கோஷ்டியூர் கோபுரத்திற்கு / அஷ்டாங்க விமானத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் கட்டவேயில்லை.
2)ஒருவேளை ராமானுஜர் ஸர்ப்ப கதியில்🪱 ஏறியிருந்தால், சாமான்யர்கள் யாரும் அவர் கிட்டயே வந்திருக்க மாட்டார்கள்.
இந்தக் கட்டுக் கதையை மெய்யாக்க வேண்டி, பிற்காலத்தில் திருக்கோஷ்டியூரில் கோபுரத் திருப்பணி செய்தவர்கள் அங்கே ஒரு ராமானுஜர் விக்ரஹத்தையும் ப்ரதிஷ்டை செய்து விட்டனர்.
இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், திருக்கோஷ்டியூர் நம்பிகள், தான் உபதேசித்த இந்த மந்த்ரத்தை வெளியே சொன்னால் மண்டை வெடித்து விடும் ; தேவ ரகசியம்! என்றெல்லாம் சொன்னதாகவும் கதை அளக்கிறார்கள். எல்லோரும் உபந்யாஸ பீடத்தில் அமர்ந்தால் இது தான் நிலை ! 🥺
கத்ய த்ரயத்தின் சரணாகதி கத்யத்திலும் 'அத்ர த்வயம்' என்ற இடத்தில் கோஷ்டியில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மனத்தால் த்வய அநுஸந்தானம் செய்து கொள்வரேயன்றி த்வயத்தை உரக்கச் சொல்ல மாட்டார்கள். ஸ்ரீ ராமானுஜரும் இவ்விடத்தில் 'அத்ர த்வயம்' என்று மட்டும் சொல்லி வைத்தாரேயன்றி த்வயத்தை எழுதி வைக்கவில்லை.
எழுத்து : கிருஷ்ண கிருபா ✍️.
Nandhitha Kaappiyan:
ஸ்ரீமத் ராமானுஜர் அனைவரையும் கூட்டி அஷ்டாக்ஷரம் உபதேசித்தார் என்பது கட்டுக்கதை. ஸ்ரீ எம்பெருமானார் அனைவைரையும் அழைத்து மண்டபத்தில் அமரச் செய்து த்வயத்தை மிக விரிவாக விளக்கினார், விருப்பமுள்ளவர்கள் அணுகினால் திருவெட்டெழுத்தின் உட்பொருளை விளக்குகிறேன் என்று அருளினார், அந்த விருப்ப,ம் கொண்டவர்கள் ஸ்ரீ எம்பெருனார் பாதம் பணிந்து வேண்டினர், அவர்களுக்கு முறையாகப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து திருவெட்டெழுத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை விளக்கினார் என்பதே உண்மை.
"गुरुं प्रकाशयेत् धीमान् ,मन्त्रं यत्नेन गोपयेत्" என்பது விதி,
இன்றும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவாராதனத்தின் போது அஷ்டாக்ஷரத்தை முழுமையாகச் சொல்வது இல்லை; அவர்கள் 'ஓம் இதி ஏகாக்ஷரம், நம இதி த்வே அக்ஷரே, நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி' (1+2+5) என்று தான் சொல்வார்கள். நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் இந்த அஷ்டாக்ஷரம் முழுமையாக இடம் பெறவில்லை என்பது குறித்துக் கொள்ள வேண்டும்.
படம்: திருக்கோட்டியூர் விண்ணகரத்தின் தண்டமேந்திய உடையவர்.
·
No comments:
Post a Comment