நேத்திக்கு ஹோமம் செய்யும் இடத்தில் மாமா படம் வைச்சு மாலை எல்லாம் போட்டிருந்தோம். அதைத் தான் இங்கே பகிர்ந்திருக்கேன். கீழே எங்க வீட்டு ராமர் இப்போதைய நிலையில்.
ஜூன் ஆறாம் தேதி இங்கே ஸ்ரீரங்கம் வீட்டுக்கு வந்தோம். வந்ததில் இருந்து ஒரே அலைச்சல். இன்னிக்கு இப்போத் தான் கொஞ்சம் உட்கார நேரம் கிடைச்சிருக்கு. ஆறு, ஏழு தேதிகளில் வீட்டின் மின் சாதனங்களைச் சரி பண்ணவே நேரம் ஆகி விட்டது. திங்களன்று கண் பரிசோதனைக்கு இங்கே உள்ள ஜோசஃப் மருத்துவமனைக்குப் போனோம். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகப் போகிறதாம் இந்த மருத்துவமனைக்கு. எனக்கு மஹாத்மா காந்தி மருத்துவமனைக்குத் தான் போகவேண்டும் என்னும் எண்ணம். ஆனால் இப்போது அங்கே சேவை சரியில்லை எனச் சொல்லிட்டாங்க. நான் வலக்கண் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையின் மருத்துவர் இப்போ பாதி நாட்கள் இங்கேயும், பாதி நாட்கள் வெளி நாட்டிலேயும் இருக்காங்களாம். அவங்க உதவி மருத்துவர் தான் இப்போச் சிகிச்சை செய்வதாகச் சொன்னாங்க. காலையிலேயே போயிட்டு வீட்டுக்கு வர ஒன்றரை மணி. வந்து தான் சாப்பிட்டோம்.
மறுநாள் பரிசோதனைகள். அதுக்கும் காலையிலேயே போயிட்டு நேரம் எடுத்து விட்டது. வீட்டுக்குப் பதினொன்றரை மணிக்குத் தான் வந்தோம். இதெல்லாம் முடிஞ்ச மறு நாளே வருடாந்திரக் காரியங்கள் ஆரம்பிச்சு ஆச்சு. நல்லவேளையாக இம்முறை சமையலுக்கு ஆளைப் போட்டு விட்டேன். மனிதர்கள் நிறைய என்பதால் கூட ஒரு ஆளையும் வைச்சுக்கச் சொன்னேன். அவங்க கணவரே வந்துட்டார் அதுக்கு. எல்லாக் காரியங்களும் நல்ல முறையில் நடந்தது. கடைசி நாளான நேற்று மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என் அண்ணா, மன்னி, தம்பி, தம்பி மனைவி, தம்பியின் மருமகள், அண்ணா பெண், மற்றும் நாத்தனார்கள், மைத்துனர் குடும்பம், சம்பதி குடும்பம் எல்லோரும் வந்திருந்தனர். நேற்றிரவு எல்லோரும் ஊருக்குப் போயாச்சு.
இன்னிக்குத் தான் 3 நாட்கள் துணியைச் சேர்த்து வைச்சிருந்தேன். துவைச்சு உலர்த்தி எடுத்து வைச்சுட்டு மத்தியானம் கொஞ்சம் படுத்துக் கொண்டேன். .நாளை அறுவை சிகிச்சை என்பதால் இன்னிக்குக் கண்ணில் இரண்டு மணிக்கொரு தரம் மருந்து விட்டுக்கச் சொல்லி இருப்பதால் மருந்து விட்டுக் கொண்டிருக்கேன். அது என்னமோ மயக்க மருந்து கொடுத்துப் பண்ணப் போறாங்களாம். என்னனு புரியலை. :( நடுவில் கணினியில் சிறிது நேரம் உடகாரலாம்னு வந்திருக்கேன். நாளைக் காலையிலேயே மருத்துவமனைக்குப் போகணும். நாளைக்குத் தான் கண்ணில் அறுவை சிகிச்சை. ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்த வலக்கண்ணில் லென்ஸைச் சுத்தி ஏதோ முளைச்சிருக்காம். என்ன விதை விதைச்சாங்களோ தெரியலை. அதையும் சுத்தம் செய்யணும். ஆனால் இப்போ இல்லை. பத்துநாட்கள் கழிச்சு. இப்போதைக்கு நாளைக்குக் கண் அறுவை சிகிச்சை என்பதால் மறுபடி சில நாட்கள் வருவது கஷ்டம் தான். பார்க்கலாம்
No comments:
Post a Comment