எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 21, 2007

கும்மி அடிக்க வாரீஹளா?

எல்லாம் நேரம். வேறே என்னத்தைச் சொல்றது? ஏதோ நான் பாட்டுக்கு வலை பதிஞ்சுட்டு வர போற பின்னூட்டங்களைப் பார்த்து மகிழ்ந்துட்டு இருந்தேன். அது பொறுக்கலை ஒரு மனுஷனுக்கு. எட்டு விஷயங்கள் பத்திப் (அதுவும் என் சம்மந்தப்பட்ட குறிப்புக்களாம்) பதிவு போடுன்னு என்னோட பேரையும் போட்டதோடு அல்லாமல், ப்ளாகிற்கு வந்து வேறே மிரட்டி விட்டுப் போயிருக்கார்.. ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், இதிலே எட்டுக்கு எங்கே போகிறது? அதிலேயும் எட்டுப் பேரைக் கூப்பிடணுமாம். யார் வந்து மாட்டிப்பாங்க? பலி ஆடு மாதிரி? ஏற்கெனவே "வேதா(ள்) பிசி,இதிலே அழகு பத்தி எழுதச் சொன்னது வேறே இன்னும் எழுதலை! அதுக்குள்ளே என்ன ப்ளாக்கர் மீட்டிங்க் வேண்டிக் கிடக்கு தெரியலை! சரி, லதாவைச் சொல்லலாம்னா அவங்க தூசி தட்டறாங்க, தட்டறாங்க அப்படித் தட்டறாங்க. இங்கே எனக்கு "வீசிங்" வந்துடுச்சுன்னா பார்த்துக்குங்களேன்.

கைப்புள்ளை ஹிஹிஹி, புதுக் கல்யாண மயக்கமே இன்னும் தெளிஞ்சிருக்காது. அம்பியைக் கேட்போம்னா பூரிக்கட்டை அடி வாங்கியதில் கை வீங்கிப் போச்சுனு தனி மெயில் வந்திருக்கு! கார்த்திக் ஆள் அட்ரஸே இல்லை, அவ்வளவு ஆணிகள், ஆனால் பதிவு மட்டும் வருது! ஒரு வேளை வேதாளம் வேலையோ என்னமோ? மணிப்ரகாஷ் காலண்டர் கவிஞன், என்னோட 200 பதிவுக்கு வந்து கவிஜை, சீச்சீ, கவிதை எல்லாம் எழுதிச் சிறப்பித்த உண்மைத் தொண்டர், யார் கடத்தினாங்கன்னு தெரியலை. (ஹிஹிஹி, மணிப்ரகாஷ், இப்போ கவிதை எல்லாம் கேட்கலை, சும்மாஆஆச் சொன்னேன்). கோபிநாத், பரணி இரண்டு பேரும் வசூலைத் தூக்கிட்டுப் போனது தான், திரும்பியே பார்க்கலை. அபி அப்பா, இப்போத் தான் ஊருக்குப் போயிருக்கார். குழந்தை வேறே, அப்புறம் அபி பாப்பாதான் வந்து எழுதும். அவர் எழுதறதே தாங்கலை, இன்னும் அபிபாப்பா வேறே எழுத ஆரம்பிச்சால் யார் படிக்கிறது?

புலியைச் சொல்லலாம்னா அது என்னமோ முறைச்சுட்டு இருக்கு. ஒண்ணுமே சொல்லலைங்க. புலி ட்யுப்லைட்டுங்கற விஷயத்தைத் தனியாக மெயில் பண்ணினேன். அவ்வளவுதான். கொலைவெறியோடு அலையுது பாருங்க. பார்த்தால் கூட மூஞ்சியைத் திருப்பிக்குது. (அது என்னோட ப்ளாகுக்கு எல்லாம் வந்ததாலே தான் அப்படி ஆயிட்டேன்னு சொன்னதை மட்டும் சொல்லவே மாட்டேனே!) அடுத்தாப்பலே "ராயல் ராம்"ஐப் பாருங்க, சபையிலே வைச்சுச் சொன்னேன், நீங்க ட்யூப்லைட்டுன்னு. மரியாதையா ஒத்துக்கிட்டதோடு இல்லாமல், ஏன் வெளியிலே சொல்லிட்டுத் திரியுறீங்கன்னு மட்டும் கேட்டுது! இதை ஆதரித்து எல்லாரும் கமென்ட்டும் போட்டாங்க. தொண்டர்ன்னா இவரல்லவோ உண்மைத் தொண்டர்! இவரைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். அப்புறமா வல்லி சிம்ஹன் இருக்காங்க, அவங்களை மாட்டி விடலாம். கையிலே லாப்-டாப் வேறே இருக்கு. ஸ்விட்ஸர்லான்டைச் சுத்திக்கிட்டே எழுதிடலாமே! அடுத்து நம்ம தி.ரா.ச.சார் அவர்கள். அவரைச் சொல்லலாம்னா அவர் வந்து கமென்டுவதே வர வர அம்பியைக் கேட்டுக்க வேண்டி இருக்கு. இதிலே எங்கே இதெல்லாம் எழுதப் போறார்? ரொம்பவே கஷ்டம் தான். "பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்"ங்கிற மாதிரி அம்பியோட சேர்ந்தால் என்னன்னு நான் சொல்ல வேண்டாமே உங்க எல்லாருக்கும்!

இ.கொ. முதலில் எட்டு ஆளைத் தேத்திக் கொடுங்க, பதிவு போடறேன். அப்புறம் எட்டு விஷயம் எழுதறதுக்கு மண்டையைப் பிச்சுக்கிட்டதிலே தோணினது இது. எட்டு விஷயம் இன்னும் 2 நாளில் எழுத முயற்சி செய்யறேன். கடவுளே காப்பாத்து வலை உலக மக்களை!

டிஸ்கி: அம்பியின் வேண்டுகோளின்படி இந்தப் பதிவும் மிக நல்ல பதிவாக மதிப்பிடப் படுகிறது. இது 300-வது பதிவு.
"மேளங்கள் முழங்க,'
தாளங்கள் ஓங்க,
பாடல்கள் பாட,
இன்னிசைக் கருவிகள் ஒலிக்க
எல்லாரும் கொண்டாடுவோம்." தலைவியின் சிறப்புப் பதிவு.

18 comments:

 1. "ஆப்பு அம்பி"யோட விருப்பத்தின் பேரில் இந்தப் பதிவை "மிகச் சிறந்த பதிவு"ன்னு லேபல் கொடுத்தாச்சு. நல்ல நெய்சொட்டும் கேசரி, பாதாம் பால், கேக், காரம் எல்லாம் எனக்கே எனக்கு! @அம்பி, ஆசை, தோசை, அப்பளம், வடை! :P

  ReplyDelete
 2. 300 அடித்த தானை தலைவி(வலி) வாழ்க :)

  ReplyDelete
 3. எட்டுப் பதிவை போடாமல் எங்களை காப்பாற்றிய தலைவி(வலி) வாழ்க :)

  ReplyDelete
 4. அழகு பதிவை அழகா போட வேண்டாமா? நீங்க மட்டுமா போட சொன்னீங்க இன்னும் நிறைய பேர் அந்த பதிவுக்கு என்னை இழுத்து விட்டுருக்காங்க :)

  ReplyDelete
 5. /புலி ட்யுப்லைட்டுங்கற விஷயத்தைத் தனியாக மெயில் பண்ணினேன். அவ்வளவுதான். /
  அங்க தான் நீங்க தப்பு பண்ணிட்டீங்க. புலிய பாராட்டனும்னா நீங்க பப்ளிக்கா பாராட்டியிருக்கணும் அதான் அவருக்கு கோபம் :)

  ReplyDelete
 6. Now attendence only, will come back again for Gummi. :)

  //@அம்பி, ஆசை, தோசை, அப்பளம், வடை! //

  atleast ithuvaachum kudungo! :)

  ReplyDelete
 7. முதல்ல 300க்கு வாழ்த்துக்கள்! இதோ இப்ப திரும்ப வர்ரேன்:-))

  ReplyDelete
 8. 300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. pinootathai veliyidadha thalaiviyai vanmaiyaga kandikkiren ena koori kolla virumbugiren!!! :)

  ReplyDelete
 10. nei sottum kesariyam! vandha idathula kandadhaiyum saapitu sugarai ethindu sambu maamavai paduthadhinga!! mokkai pottoma momchai sundal saptoma nu irukkanum :)

  ReplyDelete
 11. //ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், //

  அதை படிக்க நாங்க படுற பாடு எங்களுக்கு தான் தெரியும். :p

  ReplyDelete
 12. நான் எங்கே சிறந்த பதிவு!னு மதிப்பிட்டேன்? அதுவும் உங்க மொக்கையை... :)

  கேக்கறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுது!னு சொல்வாங்களாம். :)

  ReplyDelete
 13. போனா போகுது!

  300 posts -மூவாயிரமாக(அப்பவும் மொக்கை தான்) வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் பாட்டி. :)

  ReplyDelete
 14. வாழ்த்துகள் கீதா.
  நல்ல ஒரு திறமைசாலி வலை நட்பில் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
  எல்லாரையும் ஒண்ணு சேர்த்து நட்பாக இருப்பதும் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

  சமையல்பகுதி ஆரம்பிங்களேன்.

  ReplyDelete
 15. 300 ஆவது பதிவா?

  வாழ்த்துகள் கீதா )))

  புதரகத்தில இருக்கும்போதே 500ம் அடிச்சுட்டு இந்தியாவுக்குப் போங்க .))

  ReplyDelete
 16. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்....

  ஒருவரே சீரியசான பதிவராகவும், மொக்கை பதிவிடுவதிலும் வல்லவராகவும் இருப்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துகாட்டு.

  ReplyDelete
 17. 300ஆஆஆஆஆஆ!!

  வாழ்த்துக்கள்!!

  ஆளுக்கு என்ன பஞ்சம். இங்க வந்து இருக்குற முதல் எட்டு பேரைப் பிடியுங்க. இந்த மாதிரி 'மிகச் சிறந்த பதிவு'க்கெல்லாம் ஓடோடி வந்தா வெட்டியாதானே இருக்காங்க.

  இல்லையா உங்க வயசு ஆண்டிங்க 3 (அட, என்றும் 16 கேட்டகிரிங்க, கோபம் மட்டும் வந்திடும் மூக்குக்கு மேல) அக்காமாருங்க 3, கூட நிக்கிற பால் வடியும் முகம் கொண்ட பாலகன்கள் (திரசாவை எல்லாம் சொல்லலை) 2 அப்படின்னு கணக்குப் போடுங்க.

  சீக்கிரம் பதிவைப் போடுங்க.

  ReplyDelete
 18. கீதாம்மா...
  300 பதிவுக்கு முன்னூறு வாழ்த்துக்கள்!
  முன்னூறு=முன் ஊறும் அன்பு வாழ்த்துக்கள்-ன்னு சொல்ல வந்தேன்!

  அன்பு ஊறுமான்னு எல்லாம் சந்தேகம் இருந்தாக்கா அம்பியைக் கேட்டுக் கொள்ளவும்! :-)

  //சமையல்பகுதி ஆரம்பிங்களேன்//

  Any takers? :-)

  ReplyDelete