எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 22, 2007

எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!

எட்டுப் போடறது எவ்வளவு கஷ்டம்னு வண்டி லைசென்ஸ் இந்தியாவிலே வாங்கறவங்களுக்குத் தெரியும். இப்போ என்னடான்னா நம்ம இ.கொ. வந்து எட்டு போடுன்னு மிரட்டறதோடு இல்லாமல், எட்டு ஆள் வேறே பிடிக்கச் சொல்றார். எல்லாம் ஹெட் லெட்டர். வேறே என்ன? அதிலும் சாதனையா வேறே இருக்கணுமாமே! நான் ப்ளாக் எழுதறதே ஒரு சாதனைன்னு சொன்னால் அது பப்ளிஷ் ஆகிறது அதைவிட சாதனை. வரவர கணினி கிட்டே வரக் கூட முடியாமல் ஆணிகள் அதிகமா இருக்கு. "சிதம்பர ரகசியம்" ஒரு பக்கம் வா, வான்னு கூப்பிடுது, இன்னொரு பக்கம் "பம்பாய் ராயல் நேவி" புரட்சி என்னை அநாதையா விட்டுட்டியேனு கேட்குது. முதலில் இந்த எட்டைப் போட்டுடறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&படிப்பிலே நல்லாப் படிப்பேன்னாலும், சாதனை எல்லாம் ஒண்ணும் பண்ணினதில்லை. இந்தக் கணக்கு வந்து காலை வாரும். அதிலும் கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், அம்பிக்கும் எனக்கும் மாதிரி. எனக்குக் கூட ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னோட கணக்கு டீச்சர் தான் அம்பியா மறுபிறவி எடுத்து வந்திருக்காங்களோன்னு. :P

1. கணக்கே வராத நான் பள்ளி நாட்களில் எடுத்துப் படித்தது அக்கவுன்டன்ஸியும், காமர்ஸும். நாளாவட்டத்தில் பாடத்தில் விருப்பம் அதிகரிக்கவே, பின்னால் ஆடிட்டர் ஆகலாம் என்ற ஆசையும் இருந்தது. இத்தனைக்கும் அம்மாவோட விருப்பம் வேறேயா இருக்க அப்பா தன் விருப்பப் படி என்னை அதிலே சேர்த்திருந்தார். ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும். பாருங்க, உங்க எல்லாருக்கும் போட்டியே இல்லாமப் போச்சு! ஒரே சாதனை பாதிப் படிப்பில் கல்யாணம் செய்து கொண்டது தான். இதுவும் அப்பாவின் விருப்பம்தான். ஆகவே திருமணம் ஆகிப் பத்து வருஷம் கழித்துப் பட்டம் மொழிப்பாடத்தில் வாங்க முடிந்ததே ஒரு சாதனை தான் என்னளவில்.

2.நான் படிச்ச நாட்களில் என் தோழிகள் அனைவரும் "ஷுக்லா" புத்தகம் வைத்துப் படிக்க எனக்குக் கிடைத்ததோ என்னோட அப்பா படிச்சு, மாமாவுக்குக் கொடுத்து, பின்னால் பெரியப்பா பையன், என்னோட அண்ணா அனைவருக்கும் வந்து அதுவரை கிழியாமல் இருந்த "சுப்ரமணியம்" புத்தகம் தான். நான் ரொம்ப அடம் பிடித்ததன் பேரில் அப்பா யார் கிட்டேயோ போய்க் கேட்டு நான் பிறக்கும் முன்னேயே பப்ளிஷ் செய்யப் பட்ட "பாட்லிபாய்" புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதை நான் கல்யாணம் செய்து கொள்ளும் வரை விட்டுப் பிரியவே இல்லை. அரை மனத்துடன் "பிரியா வடை" கொடுத்தேன், அதுக்கு.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது) அடைப்புக்குறிக்குள் வழக்கம் போல் ம.சா. தான். நறநறநற. எனக்கு அப்புறம் படிச்ச என் தம்பி "ஷுக்லா" புத்தகம் புத்தம்புதியதாய் வாங்கிக் கொண்டதைப் பார்த்து அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டதும் ஒரு சாதனை தான்.

3. கொஞ்சமாவது ஆங்கிலம் எனக்கு வருதுன்னா என்னோட ஆசிரியைகள் தான் காரணம். முதலில் ஆரம்பிச்சு வச்ச ரூபி டீச்சர், பின்னர் பள்ளி இறுதி நாட்களில் பாடம் சொல்லிக் கொடுத்த மிஸ்.ஜேகப் இருவரும் ஆங்கிலப் பாடம் நடத்துவதே தனி சுகம். அதுவும் மிஸ் ஜேக்கப் ஆங்கிலக் கவிதைகளுக்கு நடித்தே காட்டுவார், எங்களையும் நடித்துக் காட்டச் சொல்லுவார். ஒரு முறை நாங்கள் அனைவரும் பேசி வைத்துக் கொண்டு ஆசிரியையைத் திகைக்க வைத்தோம். வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் ஒரு கவிதையில், "Books, 'tis an endless strife, come, hear the woodlands cry என்ற , வாசகங்கள் வரும். அதை என்னை நடித்துக் காட்டச் சொல்லும் போது நான் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வெளியே சென்று சைகை காட்ட மொத்த வகுப்பும் என்னோடு வெளியேற திகைத்த ஆசிரியை பின்னர் நினைத்து நினைத்துச் சிரித்ததும் ஒரு சாதனை தான்.

4. பரிட்சை நாட்களில் அப்பாவுக்குத் தெரியாமல் பாட புத்தகங்களுக்குள் கதைப் புத்தகமோ, ஆனந்தவிகடனோ, கல்கியோ படிக்கிற சுகம் இனி எப்போ வரும்? சொல்லுங்க? அதுவும் ஒரு சாதனை தான். (என்னடா, அப்பா, அப்பான்னே சொல்றேன்னு பார்க்கிறீங்களா< எங்க வீட்டிலே அப்பா ஆட்சிதான். ரொம்பக் கண்டிப்பான அப்பா.)

5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.

6. அமெரிக்கா எல்லாம் வருவேன்னு நினைச்சே பார்க்கலை. நான் போக ஆசைப் பட்ட இடம்னு பார்த்தால் இங்கிலாந்து ஒன்றுதான். அதுவும் அதிகமான அகதா க்ரிஸ்டி கதைகளின் வர்ணனையைப் படித்ததால் இருக்கலாம். அயர்லாந்தின் வடமுனையைப் பற்றிய அவரின் வர்ணனை ஒரு கதையில் வரும். அவரின் துப்பறியும் நிபுணர் ஆன " Hercule Poirot" அங்கே போயிருப்பார். அந்த இடம் செல்ல ஆசை.

7. இரண்டு முறை அமெரிக்கா வந்தும் எந்த இடமும் சுற்றிப் பார்க்காமல் இருப்பதும் நாங்களாய்த் தான் இருக்கும். அதுவும் ஒரு சாதனைதான். சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும் அம்மாதிரி அமைகின்றது. ஆகவே போக முடியவில்லை. தவிர, சாப்பாடு வேறே ஒரு பிரச்னை.

8. என்வாழ்நாளில் நிஜமான சாதனை என்றால் "திருக்கைலாய யாத்திரை" சென்றது தான். உண்மையில் நான் போவதாய் இல்லை. என் கணவர் தனியாகப் போக இருந்தார். என்னை அதிலே இழுத்துவிட்டது ட்ராவல்ஸ் ஏஜென்ட் தான். மனதில் எந்த உணர்வுகளும் இல்லாமல் தான் பிரயாணத்தை ஆரம்பித்தேன். வெற்றியாக முடித்து வைத்தது இறைவன். மற்றபடி நான் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவது ஒரு சாதனை என்றால் அதன் மூலம் இத்தனை நண்பர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதும், ஒரு சாதனை தான். மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை! இது ஒன்றுதான். மனம் நெகிழ்ந்து போகிறது.
************************************************************************************
அப்பாடா, இ.கொ. என்னைப் போய் எழுதச் சொன்னீங்க இல்லை? நல்லா வேணும் உங்களுக்கு! நான் மாட்டி விடப் போகும் பலி ஆடுகள் முறையே:

1.தி.ரா.ச. (ரொம்ப நாளா பதிவுப் பக்கமே வரலையா, அதான் தண்டனை)
2.மணிப்பயல் (4 எழுதி இருக்கீங்க இல்லை, எட்டும் எழுதுங்க! ஜோதியிலே ஐக்கியம் ஆகுங்க)
3.நந்தா: (வலை உலகுக்குப் புதுசு இல்லை, எனக்குப் புதிய நண்பர். நான் மொக்கையா எழுதறேன்னு சொல்லாமல் சொன்னவர் (நறநறநற) பாவம், புதுசு,நம்ம கலாய்த்தலுக்கு, விட்டுடறேன்!
4.வல்லி சிம்ஹன்: (கையிலே லாப்-டாப், மனதிலே எண்ண ஓட்டம் வெளுத்துக் கட்டுவாங்க!)
5.டுபுக்கு டிசைப்பிள்:(அம்பிக்கு ஓசிச் சாப்பாடு கொடுத்த காரணத்துக்குத் தண்டனை)
6.நாகை சிவா: (இப்போ என்னோட பதிவுக்கு வரதில்லைங்கறதாலே இவருக்கும் தண்டனை)
7.மணிப்ரகாஷ்: ஆள் எங்கேன்னு தேடிக் கண்டுபிடிக்கணும். முடிஞ்சால் வந்து பார்த்துட்டுப் போய் எழுதுங்க. உங்களுக்கும் தண்டனை தான்! :P
8.ராயல் ராம்: பாவம், ட்யூப்லைட்டுன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டாரே, தண்டனை கொடுக்கலாமா? வேணாமா? வேணாம், அப்போ வேறே யாரு? ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க!

28 comments:

 1. //8.ராயல் ராம்: பாவம், ட்யூப்லைட்டுன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டாரே, தண்டனை கொடுக்கலாமா? வேணாமா? வேணாம், அப்போ வேறே யாரு? ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க!//

  தலைவலி,

  நான் எழுதனுமா?? இல்லை தள.சிபி எழுதனுமா? தெளிவா சொல்லுங்க.... :)

  ReplyDelete
 2. எட்டாக் கனியாக்கிடுவீங்களோன்னு நினைச்சேன். எட்டு பதிவு போட்டுட்டேன்னு ஒரு எட்டு வந்து சொன்னீங்க பாருங்க. இந்த எட்டுப் பதிவு எட்டு பதிவுகளுக்கு சமம். (அதுக்காக எட்டு பின்னூட்டம் போடுங்கன்னு அடமெல்லாம் பிடிக்கக்கூடாது.)

  எட்டா? ச்சீ. வர்ட்டா!! :))

  ReplyDelete
 3. சிபியை குசும்பன் கூப்பிட்டாச்சி வேற யாராவது கூப்பிடுங்க... :)

  ReplyDelete
 4. "எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!"
  //

  லைசன்ஸ் குடுத்துடுவாங்க தைரியமா போங்க.. :)

  ReplyDelete
 5. //.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது//

  இதுலே ஏதும் உ.கு. இருக்கா?

  ReplyDelete
 6. உங்கள் அன்பான அழைப்பை ஏற்று இங்கே எட்டு பதிவு போட்டிருக்கிறேன்

  ReplyDelete
 7. //சிபியை குசும்பன் கூப்பிட்டாச்சி வேற யாராவது கூப்பிடுங்க... :) //

  யோவ் மின்னலு! பலநாளா கத்துகிட்டிருந்ததுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு! அதப் போய்!

  ReplyDelete
 8. உண்மையிலேயே கைலாயத்துல காப்பி கேட்டது பெரிய சாதனை தான்! :)

  thanks God i'm not in the list.

  TRC சாரை இழுத்து விட்டதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். :p

  அவரை ஒரு சிறிய எட்டுக்குள் அடைக்க வேண்டாம். ஏனேனில் அவர் ஒரு Living Legend. :)

  ReplyDelete
 9. சோதனையாச் சாதனை போடச் சொல்றீங்களே கீதா.
  நான் வேற, எட்டுப் பேரைச் சொல்லணுமா.

  இரண்டு வேலையையும் சரியா முடிக்க ,
  கணேசாஆஆஆஆஆஆஆஆஆ
  பானை வயிற்றோன்,
  பக்தர்களைக் காப்பவனே,
  மோனைப் பொருளே மூத்தவனெ

  ஏனென்று கேளுமைய்யா.
  ஏழைமுகம் பாருமைய்யா..............

  ReplyDelete
 10. //5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை//

  மேடம்!
  2001ல ராஜஸ்தான் மாநிலம் பிவாடிக்கு போறதுக்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல நான் அப்படித்தான் போனேன்!

  முதல் வகுப்பு டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் ஆயிடுச்சு! டிக்கெட்டை கேன்சல் பண்ணி ஓப்பன் டிக்கட் வாங்க டைம் இல்லாம அடிச்சி பிடிச்சி ட்ரெயின்ல ஏறி அதுக்கப்புறம் என்ன பண்ணுறதுன்னு தெரியாம அதுலயேதான் (அன்ரிசர்வ்ட்டு கம்பார்ட்மெண்ட்) போனேன்!

  ReplyDelete
 11. எட்டு போட்டு இருக்குகீங்களே ஒரு எட்டு பாத்துட்டு போகலாம் என்று வந்தால் நான் இங்க எட்டி பார்ப்பதே இல்லனு குற்றப்பத்திரிக்கை வாசிச்சா என்ன அர்த்தம்... :-((((

  இருந்தாலும் நீங்க ஒரு எட்டு அங்க எட்டி பாத்து என்ன எட்டு எழுத எத்தனித்தால் நானும் ஒரு எட்டு பதிவு போட்டு ஒரு எட்டு எட்டி இங்க வந்து சொல்லுறேன்.

  ReplyDelete
 12. @ராயல், சிபிதான் கவுத்துட்டாரே! நீங்களாவது கை கொடுங்க! தலைவியைக் காப்பது தொண்டரின் கடமை அல்லவோ!

  @இ.கொ. நீங்க எல்லாம் என்னோட பதிவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டதே பெரிய விஷயம், இதிலே எட்டுப் பின்னூட்டமா? வேணாம், என் வாழ்நாளில் நான் படிச்ச ஒரே நோட்ஸே நீங்களும், ராமநாதனும் கொடுத்த "பின்னூட்டக் கோனார் நோட்ஸ்" தான். அதான் பின்னூட்டம் எகிறாமல் பார்த்துக்கறேன். :P

  @மின்னல், சிபியை யாரும் கூப்பிடலைனு எனக்கும் தெரியும், வந்து மின்னிட்டுப் போகாம, என்ன ஒருத்தர் ஒருத்தருக்கா வக்காலத்து வேறேயா? :P

  ReplyDelete
 13. @மின்னல், நான் வண்டி ஓட்ட ஆரம்பிச்சதும் முதலில் உங்களை ஏத்திட்டுப் போய் எங்கேயாவது மின்னிட்டு இருங்கன்னு அனுப்பி வச்சுடறேன். நறநறநற .......:D

  @துளசி, ஹிஹிஹி, அதிலே பாருங்க, நீங்க முன்னாலேயே வந்து "யானை, வடை" எல்லாத்துக்கும் பேடென்ட் வாங்கி வச்சுட்டீங்களா? எனக்குச் சொல்ல நேரமே வாய்க்கலை. பத்தாக்குறைக்கு "பொன்ஸ்"வேறே உங்க வாரிசுன்னு அறிவிச்சாச்சு, சரி, யானை அழகுப் பட்டியலில் சேர்க்கலாம்னா இந்தத் தி.ரா.ச. எழுதி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டார். இன்னிக்கு அதான் மெதுவா வடை பத்தி நியூஸ் கொடுத்தேன். சும்மா சின்ன மாலைன்னா நம்ம அகராதியிலே குறைஞ்சது ஒரு 108 வடையாவதுன்னு அர்த்தம்! :)))))))))

  @சிபி, நறநறநறநறநறநற, இந்த அழகிலே மின்னலை வேறே மிரட்டலா? நீங்க பயப்படாதீங்க மின்னல், நான் இருக்கேன், உங்களுக்கு வக்காலத்து வாங்க!

  ReplyDelete
 14. @ஆப்பு, எத்தனை முறை சொல்றது? படிக்கிறதை ஒழுங்கப் படிக்கச் சொல்லி, எப்படித்தான் படிச்சு முன்னுக்கு வந்தீங்களோ தெரியலை! நான் காஃபி கேட்கலை, மொத்தக் குழுவுமே காஃபி எதிர்பார்த்தது, காட்மாண்டுவில் நாங்க தங்கின ஸ்டார் ஹோட்டலில். கைலாயத்தில் அருமையான காஃபி கிடைத்தது! :P தமிழும் தடவலா? இங்கிலீஷ் இழுவை, கணக்கு, கடுப்பு, சைன்ஸ் சங்கடம், சோஷியல் சோகம் உங்களுக்குன்னு தெரியும், கடவுளே, தமிழுமா?

  @சிபி, போட்டிக்கு வராதீங்க, இதுவரை இந்தப் பெருமையை யாருமே தட்டியதில்லை, என்ன நீங்க ஒருமுறைதானே போயிருப்பீங்க, நாங்க ஒவ்வொரு முறையும் போனோமே!

  ReplyDelete
 15. @வல்லி, அதெல்லாம் வெளுத்துக் கட்டுவீங்க, நீங்க, உங்க பலம் உங்களுக்கே தெரியலைன்னு நினைக்கிறேன்.
  @புலி, எல்லாம் அங்கே சூடானுக்கு வந்து குகையிலேயே பதிலைக் கொடுத்தாச்சு!
  @டெல்ஃபைன், வாங்க, அடிக்கடி பார்க்க முடியலை, உங்களோட கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 16. யு. ஸ் போயும் இந்த "எட்டப்பன்" வேலைதானா. உம் சரி நான் கட்டபொம்மனாகவே இருக்கேன்.
  @அம்பி குரல் கொஞசம் தூக்கலாவே வருது.ஜாக்கிரதை யு ஸ் லிருந்து பூரிகட்டையுடன் நேரா பங்களுர்தான்.

  ReplyDelete
 17. போடர மொக்கைகள் போதாதுங்கர மாதிரி தனியா 8-10 அப்படி, இப்படின்னு வேற மொக்கையா?...நடத்துங்க, நடத்துங்க....

  ஆரம்பித்த தொடர்களை முடிக்காம இன்னுமே நீங்க வேற எந்த பதிவும் போடக் கூடாதுன்னு சங்கத்திலிருந்து கட்டளை இடப்படுகிறது.....

  ReplyDelete
 18. //ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும்.//

  கொத்ஸ் ஆடிட்டரா? அது அந்த காலம்...

  தற்சமயம் அவர் ஆட்டிட்டர்-னா? ஆணியை ஆட்டி ஆட்டி சும்மா டர் டர்னு பிடுங்கிடுவேன்னு அவரே சொல்லியிருக்காரே.... கவனிக்கலையா? :-))

  ReplyDelete
 19. @வால்டர் வெற்றிவேல், உங்களோட கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி.

  @தி.ரா.ச.சார், முதல்லே எட்டியோ எட்டாமலோ எட்டுப் போட்டுட்டு, அப்புறமா எட்டி இருக்கிற அம்பியை எட்டலாம், எட்டுங்க உங்க பதிவை. எட்டாம் வாய்ப்பாடு நினைவு வச்சுக்குங்க, தானே வரும்! :P

  @மதுரையம்பதி, இங்கே நான் தானே தலை(வலி)வி, அதனாலே எனக்கு நானே கட்டளை இட முடியுமா என்ன? :P
  பக்கத்திலே சிதம்பரம் புதுசா எழுதி இருக்கேனே, பார்க்கலை?

  @ஸ்ரீதர் வெங்கட், முதல் வரவு? வாங்க, உங்க நண்பர் பத்தி உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் நான் செய்த "தியாக"த்தைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது இல்லை? :))))))))

  ReplyDelete
 20. @ஸ்ரீதர் வெங்கட், என்ன உங்க வலைப்பக்கத்துக்கு இவ்வளவு "டைட் செக்யூரிட்டி?" :)

  ReplyDelete
 21. //"டைட் செக்யூரிட்டி?" //

  செக்யூரிட்டியா? மடியில கனம் இருந்தாத்தானே வழியில பயம்? நாங்கதான் 'கனமே' இல்லாத ப்ளாக் இல்ல வச்சிருக்கோம் :-)))) அப்புறம் எதுக்கு செக்யூரிட்டி :-))

  ஆச்சு ஒரு வருஷம் ப்ளாக் தொடங்கி. அடுத்த வருஷத்துக்குள்ளயாவது பதிவு போட ஆரம்பிச்சுடுவேன்னு நினைக்கிறேன் :-)))).

  ReplyDelete
 22. நல்ல சுறுசுறுப்பான ஆள் தான் போங்க! :P

  ReplyDelete
 23. //போடர மொக்கைகள் போதாதுங்கர மாதிரி தனியா 8-10 அப்படி, இப்படின்னு வேற மொக்கையா?...நடத்துங்க, நடத்துங்க....//

  @maduraimpathi, அப்படி சொல்லுங்க மதுரையம்பதி.

  @geetha paati, எங்க கட்சிக்கு எவ்ளோ கூட்டம் வருது பாருங்க பாட்டி!

  ReplyDelete
 24. //நந்தா: (வலை உலகுக்குப் புதுசு இல்லை, எனக்குப் புதிய நண்பர். நான் மொக்கையா எழுதறேன்னு சொல்லாமல் சொன்னவர் (நறநறநற) பாவம், புதுசு,நம்ம கலாய்த்தலுக்கு, விட்டுடறேன்!//

  அழைத்ததுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் பட்டை போட்டுடறேன். ச்சீ எட்டு போட்டுடறேன்.

  உங்க எட்டு அளவுக்கு எல்லாம் வராது. ஏதாவது உருப்படியா பண்ணியிருந்தா எழுதலாம். இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை. நல்ல வேளையா நல்லா பொய் பேச தெரியும். அதை வெச்சு ஒப்பேத்தறேன்.

  ReplyDelete
 25. மூனு நாளா நீங்க எந்த பதிவும் போடலையா... என்ன ஆச்சு....

  ஏன் இந்த தீடிர் மாற்றம்....

  எங்க மேல உள்ள இரக்கம் காரணமா.... இல்ல வேற ஏதுமா....

  ReplyDelete
 26. @மதுரையம்பதி, எல்லாம் இந்த இ.கொ. வேலை, என்ன செய்ய ஒரு விதத்தில் குருவாப் போயிட்டார், தட்ட முடியலை, அதான்! :P

  @அம்பி, அதெல்லாம் ஒண்ணும் இல்லை, எனக்குத் தனியா மெயில் அனுப்பிட்டுத் தான் மெளலி பின்னூட்டமே போடறார், இதைப் புரிஞ்சு வச்சுக்குங்க முதலில், ரொம்பவே "தையா, தக்கா"னு குதிக்க வேண்டாம், பூரிக்கட்டை நினைவிருக்கட்டும்.

  @நந்தா, கடைசியில் என்னை மாதிரி "மொக்கை" போட மாட்டேன்னு உறுதிமொழி கொடுத்ததுக்கு நன்றிங்கோவ்! :))))))

  @புலி, புலிக்கு இப்போ சந்தோஷமா இருக்கா? அப்போ சரி, க்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் உங்க மாதிரி ஆளுங்க கண்ணு பட்டுத் தான் இப்போ எழுதவே நேரம் இல்லை! :P

  ReplyDelete
 27. இப்பதான் 4 போடுட்டு டையர்டா உக்காந்திருக்கேன்.ஒரு 4 நாள் ரிலாக்ஸ் பண்ண்லாம்னு பார்த்தா அதுக்குள்ள் தலைவியின் அன்புக்கட்டளை எப்பிடியும் 8 நாளைக்குள்ள 8 போடுவேன்னு உறுதிமொழி அளிக்கிறேன்.

  ReplyDelete
 28. ஆஹா, மணிப்பயல், இந்த விஷயத்தை "ஆப்பு அம்பி" கிட்டே முதலில் சொல்லீட்டீங்களா? என்னைத் தலை(வலி)வின்னு நீங்க ஒத்துக்கிட்டு ஜோதியிலே ஐக்கியம் ஆனது பார்த்தால் அம்பிக்குப் புகையா வருமே கண்ணு, காது, மூக்கில் இருந்து எல்லாம். :P ரொம்பவே சந்தோஷமா இருக்கு அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நினைச்சா! :)))))))

  ReplyDelete