எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 16, 2007

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நவராத்திரி
இந்த உலகுக்கு ஆதாரமாக இருப்பவளே பெண்தான். அவள்தான் மூலாதார சக்தி. பெண் இல்லையேல் சிருஷ்டி இல்லை. உலகம் இல்லை. உயிர்ப்பு இல்லை. பூக்களிலே, புழு, பூச்சிகளிலே, நீர் வாழ் ஜந்துக்களிலே, மிருகங்களிலே என்று எல்லாவற்றிலும் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு. எல்லாமே இரண்டு தான் ஒன்றில்லை. ஆனால் அந்த இரண்டும் சேர்ந்த ஒன்று தான் உயிரைக் கொடுத்து சிருஷ்டிக்கிறது. அப்படி இருக்கும்போது பெண்ணை நவராத்திரி பெருமைப் படுத்தாமல் வேறு எந்த சமயம் பெருமைப் படுத்தும். நிச்சயமாயும், சத்தியமாயும் நவராத்திரி பெண்ணைப் பெருமைப் படுத்துவது தான்.

மஹாலயம் என்று சொல்லப் படும் ஆவணி மாதப் பெளர்ணமியிலிருந்து பதினைந்து நாட்கள் எவ்வாறு முன்னோர்களுக்கு என்று ஏற்பட்டு, அவர்களை நினைத்து முன்னோருக்கான நீத்தார் கடன்களைச் செய்கிறோமோ அவ்வாறே, அடுத்த பதினைந்து நாட்கள், அதாவது மஹாலய அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களும், "மாத்ருகா பட்சம்" என்று சொல்லப் பட்டு அந்த நாட்களில், அனைத்துப் பெண்களையும், தாயாகவும், சகோதரியாகவும் வரித்து அவர்களுக்கு உரிய மரியாதை செய்யப் படுகிறது. அதுவும் எப்படி? பெண் எப்படிக் குழந்தையில் இருந்து மங்கைப் பருவம் எய்துவாளோ படிப்படியாக அப்படியே சின்னக் குழந்தையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்ணின் ஒவ்வொரு பருவத்தையும் ஒவ்வொரு நாள் கொண்டாடி, அவள் இல்லையேல் வாழ்வின் ஆதாரம் இல்லை என உணர்த்தும் பண்டிகை இது. அம்மா என்பவள் நமக்கு உணவு அளிப்பாள். நாம் எவ்வளவு தவறு செய்தாலும், அம்மாவைச் சாப்பிட்டாயா எனக் கூடக் கேட்காமல் இருந்தாலும், அவள் நம்மை முதலில் கேட்கும் கேள்வியே, "சாப்பிடுகிறாயா?" என்பது தான். தாய் நம்மைப் பட்டினி போடுவாளா? ஆகையால் தான் அம்பிகையைத் தாயாகவும், மற்றப் பெண்களை, அம்பிகையாகவும் வரித்து அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள், பட்சணங்கள், பழங்கள், பூ வகைகள், வெற்றிலை, பாக்கு, துணி போன்றவை கொடுத்து சந்தோஷப் படுத்துகிறோம். இது ஒருவிதமான நன்றி அறிவித்தல் என்றும் கொள்ளலாம்.

இந்த அம்பிகை சக்தி வடிவத்தில் அனைவரிடமும் நிறைந்திருக்கிறாள். பிரம்மாவிடம் ஆக்கும் சக்தியாக இருக்கும் இவள், விஷ்ணுவிடம் காக்கும் சக்தியாக இருக்கிறாள். சர்வேஸ்வரனிடமோ அழிக்கும் சக்தியாக இருக்கிறாள். புல், பூண்டு முதல், எறும்பு முதல் அனைத்து ஜீவராசிகளிடமும் இந்த சக்தியானவள் நிரம்பி இருக்கிறாள். இவளுடைய சக்தி அளவிட முடியாது. நம்முடைய பாவங்களையும், மூடத் தனங்களையும் பெருக்கிக் கொட்டும் மூதேவியாகக் கையில் முறம், துடைப்பத்துடனும் இவளே காட்சி அளிக்கிறாள். இவள் கையில் வைத்திருக்கும் இந்த முறமும், துடைப்பமும் நமக்காகத் தான். நம் வீட்டை நாம் சுத்தப் படுத்த முடியவில்லை என்பதால் அவளே வந்து சுத்தம் செய்கிறாள். மனமாகிய காட்டில் இருண்டு கிடக்கும் இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து விளக்கு ஏற்றித் தன் சகோதரியான ஸ்ரீதேவியை வரச் செய்கிறாள். வட இந்தியாவில் இன்றளவும் துடைப்பத்தையோ, முறத்தையோ காலால் மிதிக்கவோ, அலட்சியமாக வைக்கவோ மாட்டார்கள். அதுவும் பூஜைக்கு உரியது எனச் சொல்லுவார்கள். இந்த சக்தியின் சொரூபங்கள் சிலவற்றைப் பின்னர் பார்க்கலாம்.

12 comments:

 1. யப்பா! நெட் கனக்ஷன் வந்தாலும் வந்தது, ஒரே பதிவு மயம் தான். :D

  பாவம் சாம்பு மாமா! வீட்டுல சமையலும் பண்ணி, நவராத்திரிக்கு சுண்டலும் பண்ணி எவ்ளோ வேலை அவருக்கு. :)))

  ReplyDelete
 2. துடைப்பத்தில் இப்படி ஒரு சேதி இருக்கா....

  ReplyDelete
 3. /அப்படி இருக்கும்போது பெண்ணை நவராத்திரி பெருமைப் படுத்தாமல் வேறு எந்த சமயம் பெருமைப் படுத்தும். நிச்சயமாயும், சத்தியமாயும் நவராத்திரி பெண்ணைப் பெருமைப் படுத்துவது தான்/

  எனக்கு புரியுது :)

  ReplyDelete
 4. /அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள், பட்சணங்கள், பழங்கள், பூ வகைகள், வெற்றிலை, பாக்கு, துணி போன்றவை கொடுத்து சந்தோஷப் படுத்துகிறோம்./
  இந்த துணி வைத்து கொடுக்கற பழக்கம் உண்மையிலேயே வசதியில்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டுமென தான் ஆரம்பிக்கப்பட்டது என நான் நம்புகிறேன். வெறும் பெருமைக்காக சிலர் கொடுப்பது பார்க்கும் போது வருத்தம் வருகிறது. அது போல் சுமங்கலிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதில் எனக்கு(சுமங்கலி என்ற வார்த்தையிலேயே எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்) உடன்பாடில்லை. நான் இப்படி சொல்லுவதால் தவறாக நினைக்க வேண்டாம். நான் அக்கம்பக்கத்தில் போய் அழைக்கும் போது இந்த மாதிரி பாகுபாடில்லாமல் தான் அழைப்பதுண்டு, சிலர் புரிந்துக்கொள்வார்கள், என் வீட்டில் அருகே இருக்கும் ஒரு பெண்மணி நான் மட்டும் தான் அவரை அழைத்ததாகவும் அதற்காகவே தான் வந்ததாகவும் சொல்லி மகிழ்வார்.

  ReplyDelete
 5. /மூடத் தனங்களையும் பெருக்கிக் கொட்டும் மூதேவியாகக் கையில் முறம், துடைப்பத்துடனும் இவளே காட்சி அளிக்கிறாள்./
  இந்த மாதிரி ஒரு படத்தை தான் சமீபத்தில் பார்த்தேன் ஆனால் அது மூதேவியின் படம் என்று நீங்க சொல்லி தான் தெரியுது. முறத்துக்கும் துடைப்பத்தும் இது தான் விளக்கமா? :)

  ReplyDelete
 6. அது என்ன பெண்களுக்கு மட்டும் துணி வைத்து கொடுக்கற பழக்கம்?

  இனி சிவ ராத்திரியன்று ஆண்களுக்கு வெத்திலை பாக்கு, பழம், மற்றும் முண்டா பனியன் வைத்து குடுக்க வேண்டும்!

  இதை பற்றி உங்கள் கருத்து என்ன வேதா அவர்களே? :)))

  ReplyDelete
 7. Naatamai blog vazhiya inga vandhen..navarattiri pathi nalla aanmeega vilakkam..adutha padhivukkaga kathukittu irukken..

  P.S: sorry for typin in english..

  ReplyDelete
 8. அம்பி இதிலேயும் பெண்களுக்கு போட்டியா நீங்க வரணுமா? :)

  ReplyDelete
 9. படம் வெகு அருமை. நவராத்திரிப் பெண்,நாயகி என்று ப்பாட்டி சொல்லுவார்.
  அத்தனை பேரையும் கௌரவப் படுத்த வேண்டும் என்று கார்த்தாலேயெ மஞ்சள் கும்குமம் வெற்றிலை,பாகு எல்லாம் அழகாக அடுக்கி வைத்து விடுவார்.
  இப்போது ஒரு நாள் கூப்பிடுவது அப்போது கிடையாது,எல்லா நாட்களும் மகிழ்ச்சி,ஆட்டம்தான்.

  ReplyDelete
 10. சரி அம்பி, எங்க வீட்டுக்கு வந்தா, இனி உங்களுக்கு பனியன், உங்க வூட்டமாவுக்கு மட்டும் சுண்டல். சரியா?

  ReplyDelete
 11. //யாரு உங்க தமிழ் டீச்சர்? அந்த "உண்மை" எனக்குத் தெரிஞ்சாகணும்! ///

  கீதாக்கா .. அந்த " உண்மை "யை பின்னூட்டத்துலயே பதிலா சொல்லிட்டேன்..வந்து தெரிஞ்சிட்டுப் போங்க..
  உபயோகமான குறிப்பு : படிக்கும் போது ..சாம்பு மாமாவும் கூட இருப்பது அவசியம்.

  ReplyDelete