எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 31, 2007

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!

நேத்துத் தி.நகர் போயிருந்தேன், தவிர்க்க முடியாமல், மழை காரணமாக எந்த ஆட்டோவும் உள்ளே வராததால் அம்பத்தூர் பஸ் நிலையம் வரை எங்க வண்டியிலேயே போனோம், வீட்டில் முன்னாடி 3 வண்டிகள் இருந்தன. ஸ்கூட்டர் , பையனோட காலிபர், இங்கே உள்நாட்டிலேயே செல்ல வசதியாக டிவிஎஸ் என்று. பையன் அமெரிக்காவும் போனப்புறம் காலிபர் அவருக்கு உபயோகமும் இல்லை, ஓட்டவும் முடியாது, கழுத்துப் பிரச்னையால். ஸ்கூட்டரும் ஓட்ட முடியவில்லை, எல்லாத்தையும் வித்தாச்சு, டிவிஎஸ்ஸை மட்டும் வச்சுட்டு. இந்த வண்டியிலேயே ஒரு காலத்தில் (ஒரு 4,5 வருஷம் முன்னால் வரைதான்) மடிப்பாக்கம் வரை போனோம் என்றாலும், இப்போ இருக்கும் சூழ்நிலைக்கு அதை நம்ப முடியாது. மாநரகப் பேருந்துகள் இப்போ சொகுசுப் பேருந்துகள் வந்திருக்குனு சொன்னதாலே அதிலேயே போக முடிவெடுத்தோம். அது எங்கே வந்தது? வந்தது எல்லாம் நரகப் பேருந்து தான். போயிட்டு, நாங்க மத்தியானமே திரும்பணும், இங்கே வேலை செய்யும் அம்மா, பால்காரர்னு எல்லார் கிட்டேயும் முன் கூட்டியே சொன்னால் தான் சாயந்திரம் சீக்கிரம் திரும்பலாம். பக்கத்து வீடுகள் எல்லாம் அடுத்த தீவில் இருப்பதால் நீந்திப் போய்ச் சொல்ல முடியாது, அவங்க யாரும் வெளியே வரவும் முடியாது. எல்லாரும் நீர் சூழ இருக்கோம்.

கிடைச்ச பேருந்து போதும்னு ஏறினால் அது சென்னை பூராச் சுற்றிக் காட்டும் டி41 ரூட் பஸ். 10 மணிக்குப் பஸ் ஏறினால் பஸ்ஸை விட்டு எப்போ இறங்குவோம்னு ஆயிடுச்சு, ஆனால் இயற்கைக் காட்சிகள் இருக்கே, கண்ணை விட்டு மறையலை, அதுவும் நுங்கம்பாக்கத்தில் ஜெமினிக்குத் திரும்பும் முனையில் "ஹோட்டல் ரஞ்சித்" வாசலில் பூராப் பூராத் தண்ணீர் மயம். அம்பத்தூர் எஸ்டேட் பூராவும், தொழிற்சாலைகள் பூராவும் மிதக்கின்றன. எஸ்டேட் பஸ்ஸ்டாண்டிற்குள் தண்ணீர் புகுந்து பெரிய குழாய் போட்டுத் தண்ணீர் நாங்க போகும்போது இறைக்க ஆரம்பிச்சது திரும்பி வர வரைக்கும் இறைச்சுட்டு இருந்தாங்க. இந்த லட்சணத்தில் சாலைகள் இருக்கும்போது, சுகமான பயணமாவது ஒண்ணாவது! தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அந்தத் தண்ணீரில் சைக்கிளை அல்லது இரண்டு சக்கர வாகனத்தைச் சிரமப்பட்டு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். மழைன்னா வேலைக்கு வராமல் இருக்க முடியுமா? அம்பத்தூர் க்ளோதிங் ஃபாக்டரி பக்கத்துத் தெரு சுகாதாரத்துக்கேக் கேடு விளைவிக்கும் அழகில் இருக்கிறது. டிசிஎஸ், ஹெச்சிஎல் போன்ற ஐடி நிறுவனங்களின் உள்ளே செல்லும் வழி பூராத் தண்ணீர் மயம். அவங்க எல்லாரிடமும் 2 சக்கர வண்டி இருப்பதால் நேரே சிரமப் படாமல் உள்ளே போகின்றனர். ஆனால் மற்றத் தொழிற்சாலைகளின் நிலையும், தொழிலாளர்களின் நிலையும் ரொம்பவே மோசம்! முகப் பேர் வரை இப்படி இருக்கிறது. கலெக்டர் நகரில் இருந்து கொஞ்சம் பரவாயில்லை. பெரும்பாலான தெருக்களின் நிலைமை அப்படித்தான் என்றாலும் அண்ணா நகரின் முக்கியச் சாலைகள் பரவாயில்லை.

ஷெனாய் நகரின் பிரசித்தி பெற்ற திருவிக பூங்காவின் நிலைமையைப் பார்த்தால் அழுகையே வந்துடும் போலிருக்கு! நல்லவேளையாத் திநகர் பஸ்ஸ்டாண்ட் பக்கமோ, கடைகள் பக்கமோ போகிற வேலை இல்லை. பஸ்ஸ்டாண்ட் போன வருஷ மழையில் மூழ்கிக் கிடந்தது. இப்போ எப்படி இருக்கோ? பிழைச்சோம். ஆனால் ஆட்டோக் காரர்கள் எல்லாம் ஆட்டோவின் விலையையே கேட்கிறார்கள், டிஎம் எஸ்ஸில் இருந்து ஜிஎன். செட்டி தெரு செல்வதற்கு. இன்னும் நுங்கம்பாக்கத்தில் சில தெருக்கள், முகப்பேர் செல்லும் வழியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கள், இதில் ஒரு வளாகத்துக்கு "மகிழ்ச்சி காலனி" என்றும், இன்னொரு வளாகத்துக்கு "இந்தியன் காலனி" என்றும் பெயர், கொடுமையான நகைச்சுவையாக இருந்தது. நிஜமான நரகத்தில் இருக்கும் மக்களுக்குச் சகிப்புத் தன்மை மிக அதிகம். இதெல்லாம் எப்போ சரியாகும்? நான் பார்த்தது நிறைய, ஆனால் சொல்லி இருப்பது கொஞ்சமே கொஞ்சம்! மனசு கிடந்து தவிக்கிறது, இதை எல்லாம் பார்த்து! எந்த தேவதூதன் வந்து இதற்கு ஒரு வழி காட்டப் போகிறான்? மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!

14 comments:

 1. ப்ளாகர் பப்ளிஷ் பண்ண மாட்டேன்னு ஒரே பிடிவாதம், மெட்ராசைப் பத்தி எழுதிட்டேனாம், அதனாலே, விடுவேனா? விடேன், தொடேன் என்று முயன்று போட்டுட்டேன். இருங்க நம்ம நாகை காட்டறாங்க பொதிகையிலே பார்த்துட்டு வரேன்.

  ReplyDelete
 2. So சென்னையில தண்ணி பஞ்சம் தீந்திடிச்சி. நல்ல விசயம் தானே?

  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. அட எங்க நீங்க வேற.. எங்களுக்கு ராமர் டாக்டருக்கு படிச்சாரா இல்லையா, கலை டிவிக்கு ஷகிலாவ நடுவரா ஆக்கலாம யோசிக்கவே வழி இல்ல... இதுல இதை எல்லாம் எங்க பாக்க..

  இதை கேட்டா போன ஆட்சியிலையும் இப்படி தானே இருந்துச்சு அப்ப கேட்டியானு ஒரு கேள்வி... அவங்க செய்யலனு தான் நீங்க வந்தீங்க.. அப்ப நீங்களும் செய்ய மாட்டீங்களானு தலையில் அடிச்சுக்கிட்டு போக வேண்டியது தான்..

  நீர் நிலைகளின் ஆக்கிரப்புகளை அகற்ற சொல்லி கோர்ட் உத்தரவு அப்படியே இருக்கு.. அதை செய்யாதலே போதும்...

  ReplyDelete
 4. Chennai இயற்க்கையில் அழகாக தான் இருந்தது, பணம் தேடி Chennai வருப்பவர்களில் சிலர் மணமும், குணமும், எண்ணங்கள் விதக்கின்ற விஷச விதைகள் தான் இப்போது நிங்கள் பார்ப்பது. விரைவில் நாங்கள் அதைப் பார்த்து குறை கூறாமல் அதை நிறை ஆக்குவோம். இனியும் நீங்கள் பணம் பெற உங்களை தாங்கி நிற்க்கும் எங்கள் Chennai-i கூறை கூறாதிர்கள்...

  தினேஷ்

  ReplyDelete
 5. Chennai இயற்க்கையில் அழகாக தான் இருந்தது, பணம் தேடி Chennai வருப்பவர்களில் சிலர் மணமும், குணமும், எண்ணங்கள் விதக்கின்ற விஷச விதைகள் தான் இப்போது நிங்கள் பார்ப்பது. விரைவில் நாங்கள் அதைப் பார்த்து குறை கூறாமல் அதை நிறை ஆக்குவோம். இனியும் நீங்கள் பணம் பெற உங்களை தாங்கி நிற்க்கும் எங்கள் Chennai-i கூறை கூறாதிர்கள்...

  தினேஷ்

  ReplyDelete
 6. ஆமாம் பித்தளையைப் பார்த்து இளிச்சதாம் ஈயம். அம்பத்தூர் டி'னகரை பாத்து கிண்டலா. அப்போ எதுக்கு ரிவெர்சிபிள் சாரி வாங்க வரனும்.
  சரி வந்ததுதாம் வந்தோமே அப்படியே கிண்டிக்கும் வரலாம்லே. ஆனா போன்லேயே அடயாளம் தெரியலை நேரிலேயா தெரியப்போறது

  ReplyDelete
 7. வாங்க தினேஷ், முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. சென்னைக் காதலரா நீங்க, வாழ்த்துக்கள், அப்புறம் நாங்க இங்கே பணம் ஒண்ணும் பண்ண வரலை சார், மத்திய அரசுப்பணியில் சென்னைக்கு மாத்தினதைத் தவிர, மற்றபடி சென்னைக்கு வரணும்னோ, இங்கே இருக்கணும்னோ ஆசை ஒண்ணும் பெரிசாக் கிடையாது. உண்மையில் நான் தவிர்க்க நினைச்ச நகரம் சென்னை! ஆனால் விதியோ, அல்லது வேறே ஏதோ இங்கேயே இருக்கும்படி வச்சுட்டது. அவ்வளவு தான்!

  ReplyDelete
 8. தி.ரா.ச.சார், சரியாப் போச்சு, நான் தான் தீபாவளி பர்ச்சேஸ் பத்தி ஏற்கெனவே எழுதிட்டேனே? வலை உலகம் பூரா அந்தப் பதிவு பிரசித்தி ஆயும் உங்க கண்ணிலே படலையா? நான் ஆரெம்கேவி பக்கமே போனதில்லை சார், அது எல்லாம் அம்பி வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டார், தெரியாது? தி.நகருக்கு வேறே சொந்த வேலையா வந்தேன். :)))))))))) அப்போ உங்க வீட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் வர முடியுமா? அப்புறம் என்னை வரவேற்க நீங்க எப்படி ஏற்பாடு செய்ய முடியும்? குறைந்த பட்சமாய் ஒரு அலங்கார வளைவோ, அல்லது, மலர்க்கிரீடமோ இல்லாமல் வரவேற்க முடியுமா சொல்லுங்க, அதனால் சொல்லிட்டே வரேன், உங்க வீட்டுக்கு! அப்புறம் மறந்துட்டேனே, எடைக்கு எடை பொன்னோ, வெள்ளியோ வேறே கொடுக்கணும் சார், பதிலை வந்து பாருங்க கட்டாயமா, நீங்க என்னோட பதிலைப் படிக்கிறதே இல்லை! :))))))))))

  ReplyDelete
 9. ஆகா ஆகா - கீதாவுக்கே பிடிக்காத சென்னைக்கு ம.பா அலுவலகத்துலே சொல்லி மாற்றலே வாங்கிட்டு வந்திருக்கார். வேணும்னே செஞ்சுருக்கார். கவணிங்க அவரெ !!
  தி.ரா.ச் இனிமே ஜென்மத்துக்கும் கீதாவெ வூட்டுக்குக் கூப்பிட்டுடாதேங்கோ !!

  ஆமா, கீதா, உங்க பதிலெ அவர் படிக்கலேன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறிங்க ? ( எனக்குத் தெரிலே - அப்படி ஒரு வசதி இருந்தா சொல்லிக் கொடுங்களேன் - பிளீஸ்)

  ReplyDelete
 10. உங்கள் பதிலை தற்பொழுது தான் பார்த்தேன். நான் சென்னையை மட்டும் நெசிப்பவன் அல்ல, என் தாய் திருநாட்டின் எல்லா நகரங்களையும் கிராமங்களையும் நேசிப்பவன் நான். என் தாய் திருநாட்டின் எந்த நகரத்தையும் கிராமத்தையும் யார் குறைச் சொன்னாலும், எதிர் கருத்து தெரிப்பேன். அந்த கருத்து அவர்களை புண்படுத்தினால் அதற்காக வருத்தம் ஏன் மன்னிப்பு கூட தெரிப்பேன். நம் நகரங்களையும் கிராமங்களையும் பற்றி குறைக்கூறாமல், எல்லோரும் நம்மால் முடிந்த நிறையை செய்தால் கண்டிப்பாக நம்மால் நல்ல நகரங்களையும் கிராமங்களையும் உருவாக்க முடியும். நான் என்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்தேன். என் கருத்து உங்களை மணதை புண்படுத்திருந்தால் மன்னிக்கவும்.

  தினேஷ்

  ReplyDelete
 11. // டிஎம் எஸ்ஸில் இருந்து ஜிஎன். செட்டி தெரு செல்வதற்கு//


  டிஎம் எஸ்?????

  எங்கே இருக்கு?

  தண்ணீர் தேங்குனா கொசு வந்துருமே.

  சரியான வடிகால்கள் அமைக்கணும்.

  ReplyDelete
 12. போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

  பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.

  இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.

  ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

  இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..

  ReplyDelete
 13. என்னங்க பன்னுறது. எங்க (அ)சிங்காரச் சென்னையின் நிலைமை அப்படி. மாநரகா(?)ட்சிகாரர்களுக்கு தொப்பி தூக்கவே சரியா இருக்கு. ஆளுங்கட்சிகாரங்களுக்கும் எதிர்கட்சிகாரங்களும் ஒருத்தர ஒருத்தர் திட்டவே நேரமில்லாமல் ஓவர் டைம் போட்டு கரிச்சுகிட்டிருக்காங்க...

  சென்னைவாசிகளுக்கோ குப்பைய கூட குப்பை தொட்டியில தான் போடனும்ன்னு தெரியாது. எல்லாம் சாக்கடையில தான்.

  எதன்னு சரி பன்னுறது?

  ReplyDelete
 14. உங்கள் ஊரில் மழை வந்தால் எந்த தெருவிலும் , சாலைகளிலும் தண்ணீர் நிற்காதா
  என்ன ...?மழை பெய்யும் நாட்களில் உங்கள் ஊர் இவ்வாறு
  இருந்ததே இல்லை என்றால் ..நீங்கள் சொல்வதை 25 வருட சென்னை வாசியான நான் ஒத்துக்கொள்கிறேன்.உங்களின் ஒருநாள் மழை பயணத்தால், சென்னையை
  குறை கூறுவது நியாயம் அல்ல.

  ReplyDelete