எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 02, 2007

எல்லைப் பிரச்னை நீடிக்கிறது!!!!!!!!இந்திய பாக், எல்லைப் பிரச்னைகளோ என்று அல்லது, இந்திய சீன எல்லைப் பிரச்னைகள் என்றோ, வந்து பார்க்கும் என் அன்பான வலை உலக நண்பர்களே, இது அது இல்லை, அது இல்லை, அது இல்லவே இல்லை! பின்னே என்னதான் நடந்தது? கேளுங்கள் சொல்கிறேன். எங்க வீட்டில் வண்டிகள் இருந்தன என்று சொல்லி இருக்கேன் இல்லையா? அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு! அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது! முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ? இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன். அதிலும் பின்னால் ஸ்டெப்னி வைக்கிறதுனு ஒண்ணு இருக்கும், ஸ்கூட்டர்களிலே, அந்த ஸ்டெப்னியை எடுத்துட்டால் உயிரைக் கையிலே தான் பிடிச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனால் சீட் தனித்தனியாக இருக்கும் என்பதால் என் சீட்டில் நீ உட்கார்ந்தாய் என்றோ, எனக்கு இடமே இல்லை, நான் எங்கே உட்காருவேன் என்பதோ கிடையாது.

அதுக்குப் பின்னர், பையன் காலிபர் வாங்கினாலும் என்னோட ம.பா.வுக்கு அது என்னமோ பிடிக்கவே பிடிக்காது. அவர் ஏற்கெனவே அவசரத்துக்கு என டிவிஎஸ் வாங்கி வச்சிருந்தார். பையனை அதை வச்சுத் திருப்தி பண்ண நினைச்சாலும் அவன் அதுக்கெல்லாம் அசராமல் காலிபர் வாங்கிட்டு 6 மாசமே ஓட்டி விட்டு, அதை இங்கே அனுப்பிச்சுட்டான். ஆனாலும் அவர் அதை எடுத்துட்டு ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டார்ங்கிறப்போ என்னை எங்கே அழைச்சுட்டுப் போகப் போறார் அதிலே எல்லாம். ஆஃபீஸுக்கே டிவிஎஸ்ஸில் போக ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாளிலே மற்ற இரண்டு வண்டிகளையும் விற்கிறாப்போல ஆச்சு! அப்புறமா மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம்! இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது. அவர் ஆஃபீஸ் போக ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஒரே கிக்கில் கிளம்பிவிடும். அதே வண்டி நான் எங்கேயாவது போக ஏறி உட்கார நினைச்சுக் கிளம்பும்போது, "கிக்" வந்தாப்போலே ஆடிக் கொண்டு கிளம்பவே கிளம்பாது. ஒரு வழியா அரை மணி முன்னாலேயே வண்டியை ஸ்டார்ட்டும் பண்ணி, அதை அணைக்காமல் அவசரம், அவசரமா என்னைக் கிளம்பி வரச் சொல்லுவார். நானும் ரொம்பவே அப்பாவியாய்ப் போய் வண்டியில் ஏறி உட்காருவேனோ இல்லையோ, வண்டி நின்னுடும். "ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்" அப்படினு கமெண்ட் வரும்.

எல்லாம் நம்ம "ஹெட்லெட்டர்" அப்படினு சகிச்சுட்டுக் கீழே இறங்குவேன். மறுபடி வண்டியைக் கிளப்பி, மறுபடி ஏறி உட்கார்ந்து, வண்டி கிளம்ப மறுத்து அடம் பிடிக்க, மறுபடி முயன்று, "நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன்! நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக்! அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது? இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது! சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன்! "படக்!" டிக்கி திறந்து கொள்ளும்! ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் கையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி "மூட் அவுட்" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய்! மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் "படக்"! டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக்!!!!! இப்போ அவர் கிட்டே இருந்து வரும்!

"கொஞ்சம் தள்ளித் தான் உட்காரேன், பின்னாடி, எனக்கு இடமே இல்லை!"

"இன்னும் எங்கே உட்காருகிறது? ஏற்கெனவே, நான் தொங்கிட்டு வரேன்! இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும்!"

'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா? வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்?"

"நல்லா ஓட்டுங்க வண்டியை! நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன்! இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை!"

"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"

"வண்டியை நிறுத்துங்க, நான் ஆட்டோவிலே வந்துக்கறேன்!"

"சரியாப் போச்சு, இங்கே இருக்கிற அண்ணா நகருக்கு ஆட்டோவோட விலையையே கேட்கிறாங்க ஆட்டோக்காரங்க், பேசாமல் வாயை மூடிட்டு உட்காரு!"

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதெல்லாம் வண்டி ஓடும், ஓடின சப்தம் இல்லை, நாங்க ரெண்டு பேரும் கோபத்திலே ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுட்டு வந்த சப்தம் அது. அடுத்த முறை எங்கேயாவது போகும்போது இதே விஷயம் ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!

29 comments:

 1. படத்திலே இருக்கிற வண்டி சுட்டுப் போட்டிருக்கேன். எங்க வண்டி இல்லை! அதுக்குக் கோபம் வந்துடுச்சு, அதைப் படம் எடுக்கலைனு! :)))))

  ReplyDelete
 2. //ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!//

  இவ்வளவு பெரிய்ய்ய்ய ரிப்பீட்டே நீங்க போடக்கூடாது.. நாங்கதான் போடுவோம்...

  ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 3. மைஃபிரண்டு, இவ்வளவு கடமை உணர்ச்சியா உங்களுக்கு? புல்லரிக்குதுங்க, சனிக்கிழமை கூட வந்து கமெண்டறீங்களே? உங்களோட "பருப்பு" உணர்வைப் பாராட்டுகிறேன்! :P :P

  ReplyDelete
 4. // நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன்! நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக்!//
  கீதா அக்கா..ஒருவேளை அந்த வண்டி போன பிறவில உங்களுக்கு ஸ்டுடண்டா பொறந்து என்னிய போல திட்டு வாங்கியிருக்குமோ?..ஹிஹி..

  ReplyDelete
 5. // கையை எங்கே வைக்கிறது?//
  எங்க டீச்சருக்கே நா சொல்லித்தர வேண்டியிருக்கே.. சாம்பு மாமாவை கெட்டியா புடிச்சிக்க வேண்டியதுதான.. அதுக்காகத்தான வண்டிய டிசைன் பண்ணியிருக்காங்க..ஹிஹி..

  ReplyDelete
 6. என்னங்க நீங்க.. எங்க அப்பா டி.வி.எஸ். 50 ல 4 நபர்கள் போவோம். என்னை தவிர மற்ற மூவரும் மூணு மடங்கு இருப்பாங்க.. :)

  ReplyDelete
 7. \\"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"\\

  பாவம் தலைவி ம.பா :-)))

  ReplyDelete
 8. //கீதா சாம்பசிவம் said...
  மைஃபிரண்டு, இவ்வளவு கடமை உணர்ச்சியா உங்களுக்கு? புல்லரிக்குதுங்க, சனிக்கிழமை கூட வந்து கமெண்டறீங்களே? உங்களோட "பருப்பு" உணர்வைப் பாராட்டுகிறேன்! :P :P
  //

  நீங்க சனிகிழமை பதிவு போட வரும்போது நாங்க பின்னூட்டம் பொட வரமாட்டோமா என்ன பாட்டி. :-)

  இன்னைக்கு ஞாயிற்று கிழமைக்குட வந்திருக்கோமே.. ;-)

  ReplyDelete
 9. நான் சொல்லணும்னு நினைச்சேன் அதுக்குள்ள ரசிகன் சொல்லிட்டார். அப்படியே திடீர் பிரேக் போடும்போது கிள்ளறத்துக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் ஹா ஹா ஹா

  ReplyDelete
 10. ம்ம்ம்ம் - கீதாவுக்கும் அவரோட ம.பா வுக்கும் உள்ள எல்லைப் பிரச்னை வெடிக்கிறது. நல்லாவெ இருக்கு - படிக்கறதுக்கு. ரசிகன், மணிப்பயல் ஏதேதோ யோசனை யெல்லாம் சொல்றாங்க - பாத்துக்கங்க - பாவம் ம.பா -

  ReplyDelete
 11. //'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா? வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்?"

  "நல்லா ஓட்டுங்க வண்டியை! நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன்! இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை!"

  "வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"//

  நாவலோ நாவல்.....

  ஏதோ தேவனின் எழுத்தை படித்த உணர்வு......கண்முன் கோமளமும், சாம்புவும் வந்தார்கள்....ஹாஹாஹா

  ReplyDelete
 12. டிவிஸ் 50 ல ஆட்கள் மட்டும் தான் ஏற்றனும். லக்கேஜ் எல்லாம் ஏற்ற கூடாது!னு வாங்கும் போதே சொல்லி இருப்பாங்களே! :p

  ReplyDelete
 13. //நீங்க சனிகிழமை பதிவு போட வரும்போது நாங்க பின்னூட்டம் பொட வரமாட்டோமா என்ன பாட்டி//

  @my friend, ஹிஹி, அப்படி போடு அருவாள. :))

  என் தங்கைகள் எல்லாம் பட்டய கிளப்பறாங்க. :))

  ReplyDelete
 14. vandiyum sari, ambattur aagatum, electricity aagatum, ellam inga ungaloda thagaraaru thaan pola, baleh, innum thanni (drinking water) idhula ellam enna prachanainu sonna,
  oru pattam ungaluku kudukalaamnu thonudhu...

  ReplyDelete
 15. மை ஃப்ரெண்டு, ஃபிரண்டை, சீச்சீ, தப்பா வந்துடுச்சோ? ஹிஹிஹி, எ.பி. எல்லாம் எனக்கு அவ்வளவா வராது! தினம் தினம் வாங்க, வந்து போங்க, நல்வரவு தான் உங்களுக்கு! :P

  @ரசிகன், அது சரி, உங்க பதிவிலே திருத்தச் சொன்னதெல்லாம் திருத்தியாச்சா? இரண்டு நாளா வர முடியலை, இன்னிக்கு வந்து பார்க்கணும்! :P
  உங்க யோசனை எல்லாம் ஒண்ணும் பலிக்காது, சும்மாவே நாங்க ரெண்டு பேரும் யாரோ மாதிரி மூஞ்சியை வச்சுட்டு "உர்"ருனு போவோம், இதிலே இந்த மாதிரி காதல் சம்பாஷணைகள் வேறே! டூயட் எல்லாம் பாட முடியாதுங்க! :P :P

  ReplyDelete
 16. @புலி, சந்தடி சாக்கிலே ஏதோ உ.கு. கொடுக்கறாப்பலே இருக்கு, என்ன விஷயம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர் :P :P

  @ஹிஹிஹி, கோபிநாத், கஷ்டப் படறது நானு, அதென்ன எல்லாரும் அவருக்கே சப்போர்ட்? மேல் ஷாவ்னிஸ்ட்? :)))))))))))))))))

  ReplyDelete
 17. @ஹஹஹாஆஆ, மணிப்பயல், கிள்ளு வாங்கின அனுபவம் பேசுது போலிருக்கு! ஹா, ஹா, நினைச்சுப் பார்த்தாலே சந்தோஷமா இருக்கு! :P

  @சீனா, அதென்ன ஒரே நாளைக்குக் கமெண்ட் மழை? ம்ம்ம்ம், நீங்களும் அவருக்கா சப்போர்ட்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 18. @ஹிஹிஹி, மெளலி, அதிலே பாருங்க, கோமளம் இல்லை, கோமளி, அதுவும் அந்தக் கோமளி, வந்து "ஸ்ரீமான் சுதர்சனம்" கதையிலே வர சுதர்சனத்தோட மனைவி, சாம்புவோட மனைவி வேம்பு! ஹிஹிஹி, எங்கே ஓடறீங்க? இருங்க இன்னும் மிச்சம் இருக்கு! :))))))))

  @அம்பி, என்ன ஒரே துள்ளுத் துள்ளிட்டு இருக்கீங்க, ராத்திரி பாத்திரம் கணேசன் தேய்க்கிறதாச் சொல்லிட்டானா? :P :P :P

  @ஆணி, இவ்வளவு சந்தோஷமா? நல்லா இருங்கப்பா, நல்லா இருங்க! :))))))))

  ReplyDelete
 19. இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது

  அதையேன் கோவீச்சுகிறீங்க. அதுபாவம் எஜமானி அம்மா போலாஈருக்குன்னு அம்பி சொன்னார்

  ReplyDelete
 20. //கோமளி, அதுவும் அந்தக் கோமளி, வந்து "ஸ்ரீமான் சுதர்சனம்" கதையிலே வர சுதர்சனத்தோட மனைவி, சாம்புவோட மனைவி வேம்பு! //

  வயசாயிடுச்சே, எவ்வளவுதூரம் நியாபகம் இருக்குன்னு பார்த்தேன்....பரவாயில்லை...ஹிஹ்ஹீ (இல்லாத மீசைல ஒட்டியிருக்கும் மண்ணை தொடச்சாசு)

  ReplyDelete
 21. @திராச, சார், ம்ம்ம்ம், அம்பி அங்கே கிண்டிக்கு வராமல் இருக்க எப்படி எல்லாம் ஐஸ் வைக்கறீங்க சார்?

  @மெளலி, அதெல்லாம் இந்தக் கதைகள் விஷயத்தில் அபார ஞாபக சக்தியாக்கும்! அதுவும் "தேவன்" கதைகள் விஷயத்தில்! அது சரி, உங்களுக்கு வயசு ஆச்சுன்னு நீங்களே ஒத்துக்கிட்டீங்களே? திடீர்னு என்ன ஆச்சு? :P

  ReplyDelete
 22. சம காமெடி போங்க.. ஆனாலும் உங்க ம.பா பாவம் தான்.. இந்த சென்னையில வண்டி ஓட்டறதே பெரிசு.. இதுல ஸ்டாண்டிங்ல ஓட்டனுமா?? ஐயோ பாவம்!!

  எதோ ஒரு படத்தில பஸ் டிரைவர மிரட்டி நின்னுகிட்டே வண்டி ஓட்ட சொல்லுவாங்க.. அந்த சீன் தான் ஞாபகம் வருது :D

  ReplyDelete
 23. என்ன சிங்கம்? சாவகாசமா வந்து உறுமறீங்க? :P புலி கிட்டே தோத்துப் போனதிலேயா? :P
  அது என்ன சொல்லி வச்சாப்பலே எல்லா ஆம்பளைங்களும் அவருக்கே சப்போர்ட்? உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? பூரிக்கட்டைப் பழக்கம் உண்டா? :P

  ReplyDelete
 24. //
  இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன்.
  //
  என்ன பையன்ங்க ஒரு சின்ன விசயத்தைகூட சரியா செய்யாம.......
  :-))))))))

  சும்மா ஜோக்கு கோச்சுக்கப்டாது

  ReplyDelete
 25. மங்களூரு, வாங்க, வாங்க, இம்புட்டு நல்லவரா நீங்க? உங்களைப் போய்க் கோவிச்சுக்க முடியுமா? :P :P

  ReplyDelete
 26. //வண்டி நின்னுடும். "ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்" அப்படினு கமெண்ட் வரும்//

  ஹி...ஹி...தலைவியின் நகைச்சுவைக்கு அளவே இல்லை போலிருக்கு...ரசிச்சி படிச்சேன்.

  நான் அவள் இல்லையும் படிச்சிட்டேன்.

  அப்புறம் ஹேப்பி தீபாவளி டூ யூ மேடம். அங்கிளையும் டெல்லி பையன்(எ) அகமதாபாத் பையன்(எ) பெங்களூரு பையன் விசாரிச்சதாச் சொல்லுங்க.

  ReplyDelete
 27. @கைப்புள்ள, வாங்க, வாங்க, அதியமான் நெடுமானஞ்சி, இத்தனை நாள் கழிச்சு இந்த "ஒளவை"யை நினைப்பு வச்சு வந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸு, டாங்க்ஸு, தங்கமணி எப்படி இருக்காங்க? மாவு அவங்களே ஆட்டிக்கிறாங்களா? வழக்கம்போல நீங்கதானா?
  நீங்க சொன்னதை அப்படியே அவர் கிட்டே சொல்லிட்டேன். மூன்று தனித்தனி பையன்கள்னு நினைச்சுட்டு இருக்கார், பரவாயில்லையா? :))))))))
  டெல்லிக்கு அப்புறம் இருந்த ஊரு மறந்துட்டீங்களே? அதான் அவருக்குத் தெரியும்! :P :P

  ReplyDelete
 28. \\"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்!"\\

  இந்த டெக்னிக்கல் டிரைவிங் ஸ்கில்லை டிரைய்னிங் ஸ்கூல் ஆரம்பிச்சு பாடம் சொல்லித்தருவாரா? அம்பத்தூர் வந்து நான் வந்து கத்துக்குறேன்!

  எட்டு போட்டு வண்டி ஓட்ட லைசன்ஸ் வாங்கும் மூன்றாவது எட்டில் (வயது) சிங்கிள் சீட்ல டபுள்ஸ் அண்ட் ஸ்பீட் பிரேக்கர் இல்லாமலே சடன் ப்ரேக் போட்டு அஞ்சாம் எட்டில் ப்ரேக் டவுன் குடைச்சல் தாள மாட்டதவன்!

  மனுசன் பின்னாடி வர்ற வண்டி டிராபிக்கை ரியர் வியூ மிரரில் பார்த்தால் காரின் பின் சீட்ல உட்காந்துகிட்டு வரும் தங்கமணி என்னையா பார்த்தீங்கன்னு குடுக்குற குடைச்சல்ல இல்ல பின்னாடி ப்ளாஷ் அடிக்கிற வண்டியை கவனிச்சேன்னு உண்மையைச் சொன்னா "உங்களுக்கு ரொமான்ஸே வராதுன்னு" வாங்கிக்கட்டிகொள்ளும் அஃபீஷியல் அப்பாவி ஃபாமிலி டிரைவர்.

  ReplyDelete
 29. ஹிஹிஹி, ஹிரிஹிரன், வாங்க, வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க? என்ன தங்கமணி கிட்டே இவ்வளவு கோபம்? அவங்க சொல்றதிலே என்ன தப்புங்கறேன்? சரியாத் தான் சொல்லி இருப்பாங்க! :P

  என்னை விட அவருக்கு இல்லை ரசிகர் கூட்டம் அதிகமா இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete