எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 09, 2007

ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்!இன்று காலை தற்செயலாய் ஜெயா டிவியின் "காலை மலர்" நிகழ்ச்சியினைக் கேட்க நேர்ந்தது. பேராசிரியர் திரு டி.என்.கணபதி என்பவர் பேசிக் கொண்டிருந்தார். தலைப்பு என்னவெனத் தெரியாவிட்டாலும், (பாதியில் தான் கேட்க ஆரம்பித்தேன்) ஆன்மீகம் பற்றியும், மதங்களைப் பற்றியும் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். வேதங்களில் இறை வழிபாடு பற்றிக் குறிப்பிடப் படவில்லை எனத் தெளிவாய்ச் சொன்னார். அதே சமயம் நம் சித்தர்களும் அதைக் குறிப்பிட்டிருப்பதாயும் சொன்னார். வேதங்களில் இயற்கையாக நாம் தினசரி பார்க்கும், சூரியன், சந்திரன், மழை, காற்று, நெருப்பு, நீர் போன்ற பஞ்ச பூதங்களின் சக்தியையே குறிப்பிட்டிருப்பதாயும்,சொன்ன அவர், சித்தர்கள் குறிப்பிடும் "சிவம்" என்னும் பரம்பொருள், தற்சமயம் வழிபாட்டில் இருக்கும் சைவ ஆகமங்கள் குறிப்பிடும், பரமசிவன், எனவும், சிவபெருமான் எனவும் நாம் குறிப்பிடும் சிவனும் அல்ல, ருத்ரன் எனப்படும் கடவுளும் அல்ல என்றார்.

பொதுவான ஒரு பரம்பொருளை "அது" எனக் குறிப்பிடுவோம் என்கிறார் அவர். இந்த "அது" வே "சிவம் எனச் சித்தர்களால் குறிப்பிடப் பட்டது எனக்கூறும் அவர், சித்தர்கள் எந்தக் குறிப்பிட்டக் கடவுளையோ, கோவில்களையோ, ஊர்களையோ, நீர்நிலைகளையோ குறிப்பிட்டுப் பாடியதில்லை எனவும் சொல்கிறார். இந்த வகையில் பார்த்தால் "பட்டினத்தார்" ஒரு சித்தரே அல்ல, சிவனடியார் எனவும் சொல்கின்றார். மேலும் சித்தர்கள் பதினெட்டு என்ற கணக்கும் சரி அல்ல என்கின்றார். பதினெட்டுக்கு மேல் சித்தர்கள் இருப்பதாயும், பொதுவாய் "நவகோடி சித்தர்கள்" எனச் சொல்லுவதாயும் கூறுகின்றார். அடையவேண்டிய சித்திகள் பதினெட்டு எனவும், அவற்றை அடைந்தவர்களே பதினெட்டு சித்தர்கள் எனப் பெயர் பெற்றதாயும் சொல்கின்றார். கீதையிலும் இந்தச் சித்திகளைப் பற்றிக் கூறும்போது கண்ணன், அர்ஜுனனிடம், "அர்ஜுனா! சித்திகள் மொத்தம் பதினெட்டு! என்னிடம் பத்தும், உலகத்துக்கு என எட்டும் உள்ளன. இந்த எட்டைக் கடந்து, என்னிடம் உள்ள பத்தையும் கடந்தால் சித்தன் ஆவாய்!" என்று கூறியதாயும் அதற்கான ஸ்லோகத்துடன் எடுத்துச் சொன்னார். (ஸ்லோகம் தேடவில்லை)

நம் உடலில் உள்ள சஹஸ்ராரங்களையுமே ஆறுமுகன் என்று சொல்லும் இவர் இந்த ஆறுமுகமும் இணைந்து செயல்படும் சக்தியே, வித்தே, "ஸ்கந்தன்" "முருகு" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளதாயும் சொல்கின்றார். ஆறுமுகம் ஆனதுக்கு ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு பொருள் என நான் நினைத்துக் கொண்டிருக்க அவர் மூலாதாரத்தில் இருந்து, சஹஸ்ராரம் வரை உள்ள ஆறு ஆதாரங்களையும் சொல்லி, இந்த சித்தர்களின் "முருக வழிபாடு" என்பதே யோகத்துடன் சம்மந்தப் பட்டது எனவும், இதைப் "பர்யாங்க யோகம்" எனச் சொல்லுவார்கள் என்றும் இந்த யோகத்தின் முடிவின் விளைவே "ஸ்கந்தன்" எனப்படும் ஆனந்தத்தின் பிறப்பு என்கின்றார். திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பற்றி விளக்கி இருப்பதாயும் கூறுகின்றார். மனதை அடக்கிக் குண்டலினியை மேலெழுப்பிப் பின் அதற்கும் மேல் பதினெட்டு நிலைகள் இருப்பதாயும் அவற்றையும் கடந்தவர்களே பதினெட்டு சித்தர்கள் எனவும் கூறுகின்றார். ஆகவே தான் சித்தர் வழிபாட்டில் முருகனுக்குத் தனி இடம் எனவும் இது முழுக்க முழுக்க யோக முறை, தனியொரு கடவுளுக்கு இல்லை எனவும் கூறினார்.

காலையில் இருந்து "பர்யாங்க யோகம்" பற்றி அறிய அலையாய் அலைந்தும் ஒண்ணும் தேறவில்லை. விக்கிக் கொண்டும், விக்காமலும் தேடியாச்சு. ஸ்ரீபீடியாவில் ஹயக்ரீவ ஸ்தோத்திரம் விளக்கத்தில் "பாரா வித்யா" என 32 இருப்பதாயும் அதில் விளக்கம் இல்லாமல் பேர்கள் மட்டும் போட்டுப் பத்தொன்பது வித்யைகளையும் போட்டு அவற்றில் பதினெட்டாவது வித்யை "பர்யாங்க வித்யை" எனப் போட்டிருக்கிறது. மெளலியோ, கணேசனோ தான் உதவ வேண்டும். :((((


1.Madhu Vidhyai

2.Gaayathri Brahma Vidhyai. This one is
particularly appropriate on this day after
Gaayathri Japam to reflect upon.

3.Koukshaya JyOthir Vidhyai

4.SaanDilya Vidhyai

5.Kosa Vij~Nanam

6.Purusha Vidhyai

7.Raigva Vidhyai

8.ShOdasa Kalaa Brahma Vidhyai

9.PrANa Vidhyai

10.PanchAgni Vidhyai

11.VaisvAnara Vidhyai

12. Sadh Vidhyai

13. BhUma Vidhyai

14.Dahara Vidhyai

15. PurushAthma Vidhyai

16.BaalAki Vidhyai

17. MythrEyi Vidhyai

18. Paryanga Vidhyai

19.Pradhardhana Vidhyai et al

5 comments:

 1. ம்ம்ம்ம்ம்? தமிழிலே தானே எழுதி இருக்கேன்? :))))
  மறுபடி படிச்சால் புரியும், படிச்சுப் பாருங்க! :)

  ReplyDelete
 2. //வேதா said..
  // வருகை பதிவுக்காக இந்த பின்னூட்டம் மத்தபடி நீங்க எழுதியிருக்கறதை புரிஞ்சக்கற அளவு எனக்கு ஞானம் இல்லை :)////
  ரிப்பீட்டே.. (ரெண்டாவது தடவை படிச்சாலும்..ஹிஹி..)

  ReplyDelete
 3. miga nandraga irundadu..grahitthukkolla vendum
  tc
  cu

  ReplyDelete
 4. கொஞ்சம் குழப்பம் தான் மிஞ்சுது :)

  ReplyDelete
 5. @ரசிகன், புரியலைனா விடுங்க, புரியவேண்டியவங்களுக்குப் புரியும், உங்களுக்கு இன்னும் அதற்கான ஞானம் வரலை, :)))))

  @tc,cu, ஆம், உண்மையிலேயே கிரஹித்துக் கொள்ள வேண்டிய விஷயம்தான் இது! ரொம்ப நன்றி.

  @புலி, ஒரு குழப்பமும் இல்லை, போய்க் குகையில் பதுங்கிக்குங்க! :)))

  ReplyDelete