எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 08, 2009

அறுபதுக்கு அறுபதா?? மார்க் இல்லைங்க, வயசு!


கோபி பல விஷயங்கள் பற்றிய சந்தேகத்தைக் கேட்டிருக்கார். அதிலே பாண்டுவிற்கு இரு மனைவியர் என்பது அவர் அறியாத ஒன்று என்றும் இது பற்றிக்கொஞ்சம் விளக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். அது கண்ணன் வருவான் தொடரிலேயே இடம் பெறும் வகையில் எழுதிவிடுகிறேன். அதுக்குக் கொஞ்சம் நாட்கள் ஆகும். அதுக்கு முன்னால் அறுபதாம் கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி பற்றிக் கேட்டிருந்தார் கோபி. அது நடத்தச் சிறந்த கோயில் எது என்பதையும் கேட்டிருந்தார்.

நம்முடைய ஆண்டுக்கணக்கில் அறுபது ஆண்டுகள் கணக்கில் உள்ளன என்பதை அறிவோம். ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கின்றது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நக்ஷத்திரத்தில், எந்த திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும். இந்த அறுபதாம் ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒரு பெரும் விழாவாக அவர்கள் பெற்ற குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய் இருந்து வருகிறது. இது சமூகத்தில் எந்தப் பிரிவினராய் இருந்தாலும் பொருந்தும். சிலர் வீடுகளிலேயும், சிலர் சத்திரங்கள் வாடகைக்கு எடுத்துப் பெரிய அளவிலேயும் செய்து கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அனைவரும் சென்று அறுபதாம் கல்யாணம் நடத்திக்கொள்ளும் இடம் பழைய தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 23 கிமீ தூரத்தில் உள்ள திருக்கடையூர் என்னும் ஸ்தலம் தான். வேறு இடங்களில் நடத்த நேர்ந்தாலும் இந்த ஊர் ஸ்வாமியையும், அம்மனையும் நினைத்தே செய்யவேண்டும் என்பதும் மரபு.

இது அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்று. அட்ட வீரட்டானம் என்பது சிவனின் எட்டு வீரத் திருவிளையாடல்களைக் குறிக்கும் இடங்கள் கோயில்களாக அமைந்தவையைக் குறிக்கும். அது பற்றிப் பின்னர் பார்க்கலாம். இந்தத் திருக்கடையூர் மட்டுமில்லாது, தஞ்சை மாவட்டத்திலேயே திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர் போன்ற தலங்களும் எம பயத்தை நீக்க வல்ல தலங்கள் ஆகும். என்றாலும் திருக்கடையூர் சிறப்புப் பெற்றது மார்க்கண்டேயனால். இந்த ஊரின் தல வரலாறும், புராண வரலாறும் பின் வருமாறு கூறப் படுகின்றது.

பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவனை வழிபட, சிவனால் அளிக்கப் பட்ட வில்வ விதையைப் பெற்றுக் கொள்கின்றார். அந்த வில்வ விதையை நடப்பட்ட ஒரு முஹூர்த்த காலத்திற்குள் முளைவிடவேண்டும் எனவும் சிவன் சொல்ல, முளைவிட்ட இடத்தில் தன்னை வழிபடவேண்டும் என்றும் ஆணை இடுகின்றார். பிரம்மாவும் ஒவ்வொரு இடமாய்ச் சோதித்துப் பார்த்துத் திருக்கடையூரில் முளைவிடக் கண்டார். இந்த ஊரில் வில்வமரங்கள் நிறைந்திருந்ததாகவும், அதனால் இது வில்வவனம் என்ற பெயர் பெற்றதாகவும் கூறப் படுகின்றது.

மூலஸ்தானத்தில் குடி இருக்கும் லிங்க ஸ்வரூப மூர்த்திக்கு அமிர்த கடேஸ்வரர் எனப் பெயர். இந்தப் பெயர் வந்ததின் பின்னால் சொல்லப்படும் புராணக் கதை என்னவெனில், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துக் கொண்டு சென்ற தேவர்கள் அதை அசுரர்களிடமிருந்து ஒளித்து வைக்க எண்ணியும், நீராட வேண்டி இருந்ததாலும், இந்தத் தலத்தில் இறக்கி வைக்கின்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயன்றபோது எடுக்கவராமல் குடம் லிங்கமாய் மாறி நிலைத்து நிற்க லிங்கேஸ்வரர் அன்று முதல் அமிர்தகடேஸ்வரர் எனப் பெயர் பெறுகின்றார். இந்த ஊர் அன்னையின் பெயர் அபிராமி. அபிராமி அந்தாதி இவள் பெயரிலேயே அபிராமி பட்டர் பாடினார். இவர் வீடு இருந்த இடம் இன்னமும் பாதுகாக்கப் படுகின்றது. இதைத் தவிரவும் இந்த ஊருக்குப் பல சிறப்புக்கள் உண்டு. காலனைக் காலால் உதைத்த இடம் இது தான். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

10 comments:

 1. nalla padivu and nalla karuthukal maami...

  ReplyDelete
 2. சூப்பர். எங்க கோவில்களில் ஒன்று. ஆம் அங்கு 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் மிக விமர்சையாக நடத்தப்படும்.

  அதை நடத்தி தர உங்க பட்ஜெட் க்கு ஏற்ற பேக்கேஜ் உண்டு :))))

  இத் திருமணங்களுக்கு சைவ வைணவ வித்தியாசம் பெரும்பாலும் பார்க்க மாட்டார்கள். ஆனால் சில தீவிர வைணவர்கள் இக் கோவிலை தவிர்ப்பார்கள். திருவெண்காடு வில் பண்ணாவர்கள் என்று நினைக்கிறேன். அதை தவிர்த்து சீர்காழி க்கு முன்பு தம்பி பெருமாள் கோவில் என்று உள்ளது. அத்த கோவிலுடன் சேர்த்து சில வைணவ தலங்கள் உள்ளது. (அதில் பல 108 திருப்பதிகளில் அடங்கும்) கருட சேவைக்கும் அனைத்து கோவில்களில் ( 9 or 12) இருந்தும் சாமி புறப்பாடு நடைப்பெற்று ஒரு இடத்தில் தீர்த்தவாரி நடைபெறும் என்று நினைக்கிறேன். உறுதியாக தெரியவில்லை. விசாரித்து கூறுகிறேன்.

  ReplyDelete
 3. தலைவி....மிக்க நன்றி ;))

  என் கேள்விகளை எல்லாம் ஞாபகம் வைத்து பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி ;))

  விளக்கத்திற்க்கு மீண்டும் ஒரு நன்றி ;)

  ReplyDelete
 4. கீதாமா சரிதான் எல்லாம் ஆனா கொஞ்சம் விளக்கமா இருந்தா நல்லா இருந்து இருக்கும்.
  சிவா சொன்னது சரிமாயவரம் சீர்காழி ரோட்டிலே தம்பி பெருமாள் கோவில்ல தான் இன்றைக்கும் 60ம் கலயாணம் நடத்துறாங்க!

  இப்படிக்கு
  அபிஅம்மா

  ReplyDelete
 5. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்க பிளாக் பார்த்தேன். அதுக்கு அப்புறம் இப்பொ தான் பார்க்குறேன். ஆன்மீக பிளாகாக மாறி விட்டிருக்கிறது.

  ReplyDelete
 6. ஹை!! டிடி அக்கா, ரொம்ப நாட்கள் கழிச்சு??? வாங்க, வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 7. வாங்க புலி, இங்கே திருக்கடையூரிலும் பட்ஜெட்டிற்கு ஏற்ற பாக்கேஜ் தான்! உங்க தகவலை அபி அப்பா/அம்மாவும் உறுதி செய்திருக்காங்க! :D

  ReplyDelete
 8. விசாரிச்சுச் சொல்லுங்க புலி, நாம போன கோயிலா, போகாத கோயிலானும் பார்த்துக்கலாமே? :D

  வாங்க கோபி, பதிவுகள் தாமதமா வருவதற்கு மன்னிச்சுக்குங்க!

  ReplyDelete
 9. அபி அப்பா/அம்மா,

  நீங்களும் புலியும் கொடுத்திருக்கும் தகவல் இது வரை அறியாத ஒன்று. நானும் விசாரிச்சுக்கிறேன். நன்றி.

  வாங்க முருகேஷ், இரண்டு வருஷம் கழிச்சு அப்போ அப்போ ஆன்மீகம் வந்திருக்கும், என்றாலும் மெயின் அதுதான். மொக்கைக்குத் தனிக் கடை இருக்குங்க, இந்தப் பதிவிலேயே லிங்க் இருக்கும் பாருங்க! நினைவு வச்சுட்டு வந்ததுக்கு நன்றிங்கோ!

  ReplyDelete