அப்புவோட தலையாய சந்தேகம், பாட்டி நீ எப்போவுமே பாட்டியாத் தான் இருந்தியா? ஹிஹிஹி, நான் குழந்தைதான் அப்படினு சொன்னா இல்லைங்கறது. தினம் ராத்திரி என்னைப் படுக்கச் சொல்லி ரஜாயால் போர்த்திவிட்டு, அது போர்த்தும்போது கைகளையும் ரஜாய்க்குள்ளே வைச்சுக்கணும். கை கொஞ்சம் வெளியே தெரிஞ்சால் கூட, put your hands inside the comforter or else you will freeze அப்படினு குட்டிக்குரலில் சொல்லி என்னை பயமுறுத்தும். கதை சொல்லவானு கேட்டுக்கும். ஏன் டெடி வைச்சுக்கலை? நான் தரட்டா? டெடி வைச்சுக்காமலா தூங்கறேனு ஆச்சரியமாக் கேட்கிறது. நேத்திக்கு அவ அம்மாவும், அப்பாவும் வேலையா வெளியே போக வேண்டி இருந்தது. அப்புவோட அக்காவும் கூடப் போயிருந்தாள். ஆதலால் அப்புவை மட்டும் எங்க கிட்டே விட்டுட்டுப் போனாங்க. சமத்தா இருந்தது.
ஆனால் அதுக்கு சந்தேகம்! அது நாலு மணிக்கு "கமகம்" குடிக்கும். இங்கே கமகம் என்பது பால்னு அர்த்தம் பண்ணிக்கணும். குடிக்கிற எல்லாமே அப்புவுக்கு இன்னமும் கமகம் தான். சாப்பிடறச்சே கமகம்னு கேட்டால் தண்ணீர்னு புரிஞ்சுக்கணும். மற்ற நேரங்களில் பால். நாலுமணிக்குள்ளே அம்மாவோ,அப்பாவோ வரலைனா என்ன செய்யறது? Patti do you know how to heat the Gamagam? னு கேள்வி. எனக்கு கமகம் சூடு பண்ணிக்கொடுக்கத்தெரியுமானு ஒரே கவலை. நான் மைக்ரோவேவில் வைத்துச் சூடு பண்ணித் தரேன்னு சொன்னேன். அரை மனசா சரினு சொன்னது. அப்போவும் கமகம் இருக்கிற இடம் தெரியுமானு கேட்டது. ஃப்ரிஜிலே இருந்து எடுத்துக்கறேன்னு சொன்னேன். அது குடிக்கிற கமகம் ஆர்கானிக் கமகம்.அதனாலே அது நான் காட்டறேன்னு சொன்னாள்.
அப்பு நான் இப்போத் தான் முதல்லே இங்கே வரேன்னு நினைச்சுட்டு இருக்கு. திங்களன்று வீட்டுக்கு வந்ததும், நடந்த நிகழ்ச்சியால் அவளோட அப்பாவும், அம்மாவும் அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளில் மூழ்கிப் போக அப்பு என்னை அழைத்துக்கொண்டு நான் இந்த வீட்டுக்குப் புதுசு என்ற நினைப்பில் நாங்க தங்கப்போற ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் ரூமைக் காட்டி இங்கே தான் நீயும் தாத்தாவும் தங்கணும்; இந்தக் கட்டிலில் பெட்டெல்லாம்போட்டு உனக்கும் தாத்தாவுக்கும் நான், அம்மா, அக்கா தயார் செய்தோம்னு சொல்லிட்டு, சாமிரூமைக் காட்டி இது உம்மாச்சி ரூம்னு சொன்னது. அதுக்கப்புறமா என்னைத் தட்டித் தூங்க வைத்துவிட்டு வெளியே வந்து ஹாலில் சோபாவில் படுத்துக்கொண்டு உடனேயே தூங்கிப் போனது!
பாட்டியோட பேர் என்னனு கேட்டா, பாட்டிதான் அப்படினு சொல்றது. ஹிஹிஹி, எனக்குப் பேரே இல்லையாம். சின்னக் குழந்தையா இருந்திருக்கேன்னு சொன்னா ஃபோட்டோ காட்டுனு சொல்றது, எங்க பையரை அவ அம்மாவோட பேபி பிரதர்னு சொன்னா சிரிப்பு வருது அப்புவுக்கு. பேபி பிரதர், பேபி சிஸ்டர் எல்லாம் அப்பு மாதிரி பேபியாத்தான் இருப்பாங்களாம். எங்க பையரை he is too big; he is not a baby அப்படினு சொல்லிச் சிரிக்கிறது. வீடு முழுதும் தலையணைக்கப்பலில் உலா! எங்களையும் அதிலே பிரயாணம் செய்யச் சொல்லிக் கூப்பிடும். அவங்க ஸ்கூலில் அவளோட டீச்சர் அவ கிட்டே what are you going to get for this Christmas? அப்படினு கேட்டிருக்காங்க. அதுக்கு அவ, I am going to get my thatha and patti. னு சொல்லி இருக்கா. டீச்சர் எங்க பொண்ணு கிட்டே, what are thatha and patti?னு கேட்டிருக்காங்க. பொண்ணு விளக்கினதும் டீச்சருக்கு ரொம்ப சந்தோஷமாம். அடுத்தவாரம் என்னையும் ஸ்கூலுக்குக்கூட்டிட்டுப் போய் அவங்க டீச்சரை விட்டு எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்கச் சொல்றதா அப்பு சொல்லி இருக்கு.
ஹிஹிஹிஹி, அது பிறந்தப்போ நான் வந்திருந்தது அதுக்குத் தெரியலை; பாவம். கொஞ்ச நாள் போனால் புரிஞ்சுக்கும். அப்போப் பெரிய பெண்ணா ஆயிடுவா. என்ன இருந்தாலும் இந்த சுகம் தனி.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நானும் சங்கி பாப்பாவை பாக்க கிளம்பப்போறேன்! :P
ReplyDelete//பாவம். கொஞ்ச நாள் போனால் புரிஞ்சுக்கும். அப்போப் பெரிய பெண்ணா ஆயிடுவா. //
ReplyDeleteஅப்போ இந்த சார்ம் போயிடும்!
'கமகம்'-- நன்னா இருக்கே!
ReplyDelete'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று'ங்கறாங்களே, எவ்வளவு உண்மை!
அடுத்த வாரம் 'டே கேர்' போயிட்டு வாங்க!
நீங்க பாத்ததை, நாங்க பதிவுலே பாக்கறோம்.
கிடைக்கிறப்போ அனுபவங்களை ரசிச்சுடணும். அழகா சொன்னீங்க.
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யம்.
ReplyDeleteஇந்த சுவாரசியம் வளர்ந்தபிறகு அனுபவிக்க கிடைக்காதே,.
ReplyDeleteappu samatthu !!
ReplyDeleteneengalum samatthaa :)
[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
ReplyDeleteபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
வாங்க வா.தி. சங்கிப் பாப்பா எப்படி இருக்கா? ஆமாம், கொஞ்சம் பெரிய பெண்ணா ஆயிட்டா இந்த சார்ம் இருக்காதுதான். :(
ReplyDeleteவாங்க ஜீவி, சார், அடுத்தவாரம் கூட்டிட்டுப் போய் எல்லாரையும் அறிமுகம் செய்து வைக்கிறதாச் சொல்லிட்டு இருக்கா. அப்படியே எங்களுக்கு எழுதப் படிக்கவும் சொல்லித் தரப் போறா. :))))))))
ReplyDeleteவாங்க அப்பாதுரை, ஸ்மரண யாத்திரை எங்கே நடக்குதுனு பார்க்கவே முடியலை. வரணும். :)))))) நன்றிங்க.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்
ReplyDeleteஉண்மைதான் லக்ஷ்மி. நன்றிங்க.
ReplyDeleteவாங்க ப்ரியா, ஹிஹிஹி, அப்பு என்னைக் கொண்டிருக்கா. அதான் சமத்து. :))))
ReplyDeleteஅப்பாதுரை, உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க வெற்றிமகன், நாங்க எப்போவோ கோவா போயிட்டு வந்தாச்சு; பத்து நாட்களுக்கும் மேல் தங்கி இருந்து எல்லாமும் பார்த்திருக்கோம். உங்க அறிவிப்புக்கு நன்றி.
ReplyDeleteஅதோடு நான் இம்மாதிரியான போட்டிகளில் எல்லாம் கலந்துகொள்வதும் இல்லை. போட்டி என்றாலே விலகி விடுவேன். :)))))) தவறாய் நினைக்கவேண்டாம்.
ReplyDeleteஓட்டு கேட்ட கீதாஜீக்கு போட்டியில் நம்பிக்கை இல்லையா?
ReplyDelete#நான் குழம்பிட்டேன்.
ச்சோ க்யூட்! (கண்டிப்பா உங்களைச் சொல்லலை, பாட்டீ!). குட்டி அப்புவுக்குக் என்னோட கட்டி முத்தங்கள் :)
ReplyDelete//பாட்டி நீ எப்போவுமே பாட்டியாத் தான் இருந்தியா//
ReplyDeleteஎனக்கும் இந்த சந்தேகம் அடிக்கடி வரும்! சிலரைப் பார்க்கும்போது எப்பவுமே பெரியவங்களாவே இருந்திருப்பாங்களோன்னு தோணும், சிலர் எப்பவும் குழந்தையா இருக்கிற மாதிரி இருக்கும் :)