எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 01, 2011

கல்யாணமாம் கல்யாணம், தொடர்ச்சி!

மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் காலையிலே வருவாங்க. குறைஞ்ச பக்ஷமாய் 200 பேர் வருவோம்னு சொல்லி இருக்காங்க. அதனால் வண்டி வேண்டும் என அப்பா, சம்பந்திகளுக்கும் அவங்க குடும்பத்துக்கும் இரண்டு காரும், மத்தவங்களுக்கு இரண்டு வானும் ஏற்பாடு பண்ணி இருந்தார். என்னோட சொந்த அண்ணாவும், பெரியப்பா வழி அண்ணாவும், பெரியம்மாவோடு போய் அழைத்துவரணும்னு ஏற்பாடு. ஆனால் அவங்க எல்லாம் டவுனிலே இருக்காங்க. அதுக்குள்ளே இங்கே இவங்க வந்தாச்சு. காலையிலே வரேன்னு சொன்னவங்க திடீர்னு இப்போ வரப் போறது யாருக்குத் தெரியும்?? மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்திக் கொட்டி உள்ளே அழைக்கணும். அதோட ஏற்பாடு பண்ணி இருக்கிற வீட்டிலே இருக்கிறவங்களை வேறே எழுப்பித் தொந்திரவு செய்யணும். வீட்டைக் காலையிலே தான் ஒழிச்சுக் கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க. என்னோட பாட்டி மாமிகளை எழுப்பி அவங்களை வரவேற்கச் சொல்லிட்டு, பக்கத்து வீட்டிலேயும் ஆளை அனுப்பி எழுப்பச் சொன்னாங்க. மாமிகள்போய் ஆரத்தி எடுத்து வரவேற்றுப் பக்கத்து வீட்டிலே கொண்டு விட்டுட்டு, சாப்பாடு பத்தி விசாரிச்சாங்க. எல்லாரும் சாப்பிட்டு வந்தோம்னு சொல்லவே, அவங்க படுக்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு வந்தாங்க. இந்த அமர்க்களத்தோட சமையல்காரங்க குழுவும் வந்து சேரவே அவங்களுக்கு வேண்டிய சாமான் எடுத்துக்கொடுத்துட்டு மாமி, பாட்டி எல்லாம் அதிலே பிசி ஆனாங்க. மறுநாள் தயாராக வந்த வண்டிகளை அவங்க வீட்டுக்கு வந்ததுக்கு மட்டும் ஆன தொகையைக் கொடுத்துத் திருப்பி அனுப்பவேண்டி வந்தது.

எல்லாரும் என்னைக் கேலி செய்தாங்க. மாப்பிள்ளைக்கு அவசரம் பாரு, உன்னைப் பார்க்கறதுக்குனு ஒரு நாள் முன்னாடி வந்துட்டாரேனு. காலம்பர விடிஞ்சது. அப்பாவுக்குச் செய்தி சொல்ல மாமா ஒருத்தர் சைகிளில் கிளம்பிப்போனார். யார் வீட்டிலேயும் தொலைபேசி கிடையாது அப்போ. மாமா அந்தப் பக்கம் போயிருப்பார், இந்தப்பக்கம் அப்பா வந்துட்டார். அப்பா முகமே சரியாய் இல்லை. என்னமோ ஏதோனு நினைச்சா, மாப்பிள்ளை வீட்டிலே இருந்து யாருமே வரலைனு சோகத்தோட சொன்னார். அதுக்குள்ளே அம்மாவும், மற்ற உறவினர்களும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிக்க, மாப்பிள்ளையும் அவங்க அம்மா, அப்பாவும் முதல் நாளே வந்துவிட்ட செய்தி அப்பாவுக்குச் சொல்லப் படவே அப்பாவும், அம்மாவும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவங்க வீட்டின் மிச்ச உறவினர்களும் வர எங்க பக்கத்து உறவினர்களும் சேர்ந்து கொள்ள வீட்டில் இடம் போதவில்லை. அதுக்குள்ளே என்னோட பெரிய நாத்தனார் என்னைப் பார்க்கணும்னுஅங்கே வர அவங்க என்னைப் பார்த்துட்டு ஏதோ ஸ்கூல் போற பொண்ணு போலனு நினைச்சிருப்பாங்க போல. அப்புறமா நான் தான் கல்யாணப்பொண்ணுனு எல்லாரும் சத்தியமே செய்து கொடுத்ததோடு, அவங்க தம்பியையும் கேட்டுக்கச் சொன்னாங்க.

அதுக்குள்ளே எல்லாருக்கும் காபி வரவே, அங்கே இருந்தவங்களுக்கு ஒருத்தரும் மாப்பிள்ளை வீட்டிற்கு இன்னும் இரண்டு பேரும் காபியை எடுத்துச் செல்லக் கூடவே என் பெரியம்மாவும், பெரியப்பாவும் போனாங்க. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் வரும் நபர்கள், கல்யாண மாப்பிள்ளை உட்படக் கல்யாணம் நடக்கும் இடத்துக்கே வந்து சாப்பிடறது, காபி, டிபன் சாப்பிடறது எல்லாம் கிடையாது. அநேகமான திருமணங்கள் வீடுகளிலேயே நடைபெறும். வீடுகளும் திருமண விருந்தினர்களைத் தாங்கும் அளவிலேயே கட்டப் பட்டிருக்கும். அப்படி இல்லை என்றாலும் மதுரையில் ஒரு வசதி என்னவென்றால் அந்தக் காலகட்டங்களில் தெருவும், சரி, ப்ளாட்பார்ம் என்னும் நடைமேடையும் சரி சுத்தமாகவே இருந்தது. தினமும் சுகாதாரப் பணியாளர்கள் வந்து தெருவைச் சுத்தம் செய்வார்கள். வீட்டின் முன்னர் இருந்த நடைமேடைகளும் அந்த அந்த வீட்டுக்காரர்களால் சுத்தமாய்ப் பெருக்கப் பட்டுக் கோலங்களோடு காட்சி அளிக்கும். ஆகவே நடைமேடையில் அக்கம்பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டு, மணல் நிரவி, கொட்டகை அலங்காரம் செய்து கல்யாண மேடை கட்டித் திருமணங்கள் நடக்கும். இதற்கென அப்போதைய முனிசிபாலிட்டியின் அநுமதி ஒன்றுதான் தேவை. அதுவும் எந்தவிதமான இடையூறுகளும் இன்றிக்கிடைத்தன. அது ஒரு காலம்! ((( என் கல்யாணமும் மாமா வீட்டு வாசலில் அக்கம்பக்கம் மூன்று வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டுத் தான் நடந்தது. :D எங்கேயோ போயிட்டேனே. மாப்பிள்ளை வீட்டில் சாப்பிட வரமாட்டாங்கனு சொன்னேன் இல்லையா?? அதனால் அவங்க தங்கும் இடத்திற்கே எல்லாமும் போகும். ஒருவேளை சத்திரங்களில் திருமணம் நடந்தாலும் அவங்களுக்கென ஒதுக்கி இருக்கும் அறைகளில் சாப்பாட்டுக் கூடமும் ஒன்று கட்டாயம் இருக்கும். அங்கே எல்லாவற்றையும் எடுத்துப் போய்ப் பரிமாறுவார்கள். தனிப்பட்ட சிறப்பான கவனிப்பு இருக்கும். சாப்பாடும், பரிமாறும் ஆட்களும் மட்டும் போனால் போதாது. கூடவே பெண் வீட்டில் பெரியவங்க யாரானும் இரண்டு பேரோ, நான்கு பேரோ போகவேண்டும். ஆகவே என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் காபி, டிபனோடு போனாங்க. அப்படியே கல்யாணத்துக்கு முதல் நாள் நடக்கும் விரதம்/நாந்தி போன்றவற்றிற்கு அவங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவேண்டும். இப்போ இந்த விரதம்/நாந்தி பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்த்துட்டு மேலே தொடரலாமா??இந்த நாந்தி என்பது குடும்பத்தின் முன்னோர்களுக்கான ஒரு சடங்கு. இதைக் கல்யாணங்களில் செய்வது நல்லது. முன்னோரின் ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கும் என்பதோடு அவங்க அநுமதியையும் பெற்றுக்கொள்வதற்காக எனச் சொல்வது உண்டு. ஆனால் இதையும் திருநெல்வேலிக் காரங்க செய்யறதில்லை. அவங்களுக்குக் கல்யாணத்தில் நாந்தி செய்வது அச்சானியம் என்று சொல்வதுண்டு. தஞ்சை, மதுரை மாவட்டங்களில் இது கட்டாயமாய் இடம் பெறும். குடும்ப வழக்கத்தைப் பொறுத்து புரோகிதர்கள் வருவாங்க. ஒன்பது பேர் கட்டாயம்னு சில குடும்பங்களில் உண்டு. அன்னிக்குக் கல்யாணத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் அனைவருமே டிபன், காபி சாப்பிட பெண் வீட்டில் பெண்ணின் அம்மா, அப்பா, கல்யாணப் பெண், பிள்ளை வீட்டில் பிள்ளையின் அப்பா, அம்மா, கல்யாணப் பிள்ளை மட்டும் எதுவுமே சாப்பிடாமல் இவற்றை முடித்த பின்னரே சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு சிலர் வீடுகளில் இதற்கெனத் தனிச் சமையலும் உண்டு.

எங்க அப்பா, அம்மா, இங்கே மாமா வீட்டின் வாசல் பந்தலில் என்னையும் வைத்துக்கொண்டு விரதம் ஆரம்பிக்க மாப்பிள்ளை வீட்டில் அவங்க தங்கி இருக்கும் இடத்திலேயே விரதம், நாந்தி போன்றவற்றைச் செய்து கொள்வதாய்ச் சொல்லிட்டாங்க. தாலி கட்டும் முன்னர் பிள்ளையும் பெண்ணும், மணவறையில் ஒரே இடத்தில் அமரக் கூடாது என்பது அவங்க சொன்ன காரணம். இங்கே பந்தலுக்கு வந்தால் மணமேடையிலேயே அவங்க ஒரு பக்கமும், நாங்க இன்னொரு பக்கமும் உட்காரணும். அதைத் தவிர்க்க வேண்டி அப்படிச் சொன்னாங்க. அதோடு அன்று மாலை நடக்க இருக்கும் நிச்சயதார்த்ததிற்கும் பெண்ணுக்குத் தனியாகவும், மாப்பிள்ளைக்குத் தனியாகவுமே நடத்தவேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார்கள். தஞ்சைப் பக்கங்களில் பெண்ணையும், பிள்ளையையும் ஒன்றாய் உட்கார்த்தி வைத்து நிச்சய தார்த்தம் செய்ய மாட்டாங்களாம். எங்களுக்கு அது வழக்கமில்லை என்றார்கள். சரினு அவங்க அங்கேயே விரதம் பண்ண ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. முதல் பிரச்னை கோலத்தில் ஆரம்பம். :))))))))))

28 comments:

 1. \\முதல் பிரச்னை கோலத்தில் ஆரம்பம். :))))))))))\\

  அப்போ இன்னும் பிரச்சனை ஆரம்பிக்கவேல்லியா ;)))

  ReplyDelete
 2. மாமி
  //இதையும் திருநெல்வேலிக் காரங்க செய்யறதில்லை. அவங்களுக்குக் கல்யாணத்தில் நாந்தி செய்வது அச்சானியம் என்று சொல்வதுண்டு.//

  எங்களுக்கு திருநெல்வேலி தான் பூர்வீகம். நான் பார்த்தவரை என், மற்றும் பிற உறவினர்களின் திருமணங்களில் நாந்தி பூஜை இருந்ததே. மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர் சொல்லி அவர்களின் ஆசிர்வாதம் பெறுவோம். சிலர் ஏழு தலைமுறை வரை பெயர் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். பிற திருநெல்வேலிகாரா திருமணங்களில் நாந்தி பூஜை ஊன்றி பார்த்ததில்லை / விவரம் புரியாத வயது அப்பொழுது.

  கோலத்திலும் தஞ்சாவூர் பழக்கம் / மதுரை பழக்கம் மாறுமோ? ஒரு வேளை கல்யாண பொண்ணு தான் கோலம் போடணும்னு மாமா ஆத்துல சொல்லிடாளா? :))))

  ReplyDelete
 3. வாங்க கோபி, முதல் வடை உங்களுக்கே, உங்களுக்கு. பிரச்னை எப்போவுமே இருக்கும் அப்பா! :)))))))))

  ReplyDelete
 4. வாங்க ஸ்ரீநி,

  நீங்க சொல்றது நிஜம்மாவே புதிய செய்தி. என்னோட அக்கா(பெரியப்பா பெண்) கொடுத்தது திருநெல்வேலி, களக்காடு, அரவங்குளம், கல்லிடைக்குறிச்சினு அவங்க உறவு வட்டம். அந்த அக்கா கல்யாணத்திலேயும் சரி, என்னோட மூன்று மாமிகளும் திருநெல்வேலி தான், பத்தமடை, திருச்செந்தூர், ஏர்வாடி இவங்க கல்யாணங்களிலும் சரி நாந்தி பண்ணணும்னு என்னோட அப்பா ஒரு சண்டையே போட்டிருக்கார். அவங்க பண்ணலைனு நினைக்கிறேன். அந்தக் கல்யாணங்களின் போதெல்லாம் நானும் சின்னக்குழந்தைதான், (ஹிஹிஹி இப்போவும்) என்றாலும் இது ஒவ்வொரு கல்யாணத்திலும் பேசப்பட்டதால் நினைவில் இருக்கு.

  ReplyDelete
 5. எங்க பொண்ணு கல்யாணத்திலே நாந்தி பண்ணியபோது எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க, கடையநல்லூர்க்காரங்க, நாந்தி ஏன் கல்யாணத்திலே பண்ணறீங்கனும் கேட்டாங்க! எனக்கும் இப்போ இருக்கோ என்னமோனு சந்தேகம் இருக்கு. கேட்டுக்கறேன் எதுக்கும்.

  ReplyDelete
 6. நாந்தி பண்ணற வீட்டிலே ரொம்ப ஆசாரம் பார்க்கிறவங்க வேறு கோத்திரக்காரங்க சாப்பிட மாட்டாங்க. முன் காலங்களில் எல்லாம் வீடுகளிலேயே கல்யாணம் நடந்தப்போ நாந்தி செய்து வைக்கும் புரோகிதர்களுக்கும், நாந்தி செய்யும் வீட்டைச் சேர்ந்த உறவினருக்குமாய்த் தனித்தனியாச் சமையல் நடக்கும். இப்போ எங்க கல்யாணமும் வீட்டிலேயே நடந்தது என்பதால் பிள்ளை வீட்டிற்குத் தனிச் சமையல் அவங்க தங்கின இடத்திலே, எங்க வீட்டிற்குத் தனிச் சமையல் நாங்க தங்கின மாமா வீட்டிலே செய்தாங்க. மற்ற உறவினர்கள், மாமா வீட்டுக்காரங்க, வந்திருந்த நண்பர்களுக்கு எல்லாம் சமையல்காரங்க செய்த சமையல்னு மூணு தினுசாப் பண்ணினது நினைவில் இருக்கு.

  ReplyDelete
 7. இப்போ நாந்தி பண்ணறதே சத்திரத்திலேனு ஆகிவிட்டதாலே அரிசி, வாழைக்காய், பருப்பு, வெல்லம்னு கொடுக்கிறோம். சாப்பாடு போடறதில்லை. :(((((((

  எங்க பையரோட உபநயனத்திலே முதல்நாள் காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சு, மதியம் இரண்டு மணிக்கு முடிஞ்சு அதுக்கப்புறமா ஒன்பது புரோகிதர்கள் சாப்பிட்டு, நாங்கல்லாம் சாப்பிடும்போது நான்கு மணி. வந்தவங்களுக்கெல்லாம் மொட்டை மாடியிலே வைச்சுச் சாப்பாடு போட்டாச்சு! :)))))))

  ReplyDelete
 8. கல்யாண விசேஷங்கள் ஆரம்பிக்குமுன்னே வீட்டுலே சுமங்கலி பூஜை, முன்னோர்கள் பூஜைன்னு ஒன்னு செஞ்சுட்டுத்தானே மற்றவைகளைத் தொடங்குவாங்க.

  எங்க வீடுகளில் இதை ஒரு வாரமுன்னே செஞ்சுட்டுத்தான் கணபதி ஹோமம், பந்தக்கால் அது இதுன்னு ஆரம்பம் ஆகும்.

  விறுவிறுப்பாப் போகுது. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!!!!

  ReplyDelete
 9. வாங்க துளசி, இவ்வளவு லேட்டாவா வரது தோழியோட கல்யாணத்துக்கு? :P:P:P அதெல்லாம் எப்போவோ பண்ணியாச்சு, சுமங்கலிப் பிரார்த்தனை சமாராதனை, பந்தக்கால் முஹூர்த்தம் எல்லாம் அமர்க்களமா முடிஞ்சாச்சு, கொஞ்சம் பின்னாலே போய்ப் பாருங்க, இல்லாட்டி ரிவிஷன்(?) கொடுங்க! :)))))))))))

  ReplyDelete
 10. சண்டிகரில் இருந்து சென்னை வருவதைவிட நியூஸியில் இருந்து சென்னை வருவது ரொம்ப சுலபம்!

  உள்ளூர் விமானச்சேவை இந்த அழகில் இருக்கு:(

  ரிவைஸ் பண்ணிட்டு வர்றேன்:-)

  ReplyDelete
 11. கொஞ்சம் லேட்டா வரேன். எங்க வீட்டில் நாந்தி பழக்கம் இல்லை. தஞ்சாவூர் பக்கம் உண்டுன்னு தெரியும். மதுரை பத்தி இப்பதான் கேள்விப் படறேன்.

  இதை விட, கல்யாணத்தன்னிக்கு பொண்ணோட அப்பா/அம்மா , அப்புறம் மாப்பிள்ளை இவங்க மூணு பேருக்கும் சாப்பாடு கட் :(

  ReplyDelete
 12. @துளசி, வாங்க, வாங்க ரிவிஷன் முடிச்சுட்டு வாங்க, ஸ்பெஷல் டெஸ்ட் வைக்கிறேன். :))))))

  ReplyDelete
 13. எல்கே, நீங்க சொல்றது சரி, சிலர் ஊர்ப்பக்கம் வழக்கம் கிடையாது. பையர் கல்யாணமோ, பெண் கல்யாணமோ எதானாலும் நாந்தி பண்ணறதில்லை. கவனிச்சிருக்கேன். அப்புறம் கல்யாணத்தன்னிக்குப் பாவப்பட்ட ஜன்மங்கள் பெண்ணின் பெற்றோரோடு சேர்த்துப் பிள்ளையின் பெற்றோரும் தான். எனக்கு இரண்டுக்குமே பட்டினி இருந்து பார்த்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் :)))) பிள்ளையும், கல்யாணப் பெண்ணும் சேர்ந்து தான் பட்டினி இருக்கணும்! :( இப்போல்லாம் கல்யாணத்தன்னிக்கே சேஷ ஹோமம் வைக்கிறதாலே அன்னிக்கு ராத்திரி சாப்பாடு போடறாங்க. எங்க கல்யாணத்திலே நான்காம் நாள் அவங்க ஊரிலே பிரவேச ஹோமம் ஆகி, அப்புறமாத் தான் சேஷ ஹோமம். சேஷ ஹோமம் பண்ணற வீடுகளிலேயும் ஆசாரக் காரங்க சாப்பிட மாட்டாங்க. :)))))))

  ReplyDelete
 14. நாந்தி சில தின்னவேலிகாராளும் பண்னறதுதான்.எங்க மாமி, பாட்டி எல்லாம் கடையம் அவா பண்ணறதுதான் அதை சில பேர் சிரார்தம்னு தப்பா புரிஞ்சுண்டு செய்யமாட்டேங்கறா . அது சிராத்தம்னு எங்க பெரியவர்கள் சொல்லுவா . சிரத்தையோட செய்யற முன்னோர் வழிபாடு- தானம் முக்கியம்னு நான் புரிஞ்சுண்டது.

  ReplyDelete
 15. நாந்தீ அச்சானிய சமாசாரம் இல்லை. இதற்காகவே போட்ட பதிவு இங்கே:
  http://tinyurl.com/3kprked

  ReplyDelete
 16. //மாப்பிள்ளைக்கு அவசரம் பாரு, உன்னைப் பார்க்கறதுக்குனு ஒரு நாள் முன்னாடி வந்துட்டாரேனு. காலம்பர விடிஞ்சது.//

  பாவம்.. அதுக்கு அப்புறம் தான் சாம்பு அங்கிளுக்கு விடியவே இல்லையே! :D

  ReplyDelete
 17. //கல்யாணத்தன்னிக்கு பொண்ணோட அப்பா/அம்மா , அப்புறம் மாப்பிள்ளை இவங்க மூணு பேருக்கும் சாப்பாடு கட் :(//

  LK, எங்க உங்க ஊர் வழக்கத்துலயா?! என்னோட கல்யாணத்துலே, அப்புறம் மெட்ராஸ்ல நடந்த ரிசப்ஷன்லே ஒரு இடத்துல கூட எனக்கோ அப்பா அம்மாவுக்கோ சாப்பாடு இல்லை.. அது எப்படி அப்படி ஆகும்னு இன்னிக்கு வரை புரியலை. மாப்பிள்ளைக்கு விரதம்னு ஒரு ஒரு மணி நேரம் முடிஞ்ச உடனே தனி ரூம்ல தடபுடல் சாப்பாடு..!

  ReplyDelete
 18. நாந்தின்னா என்னன்னு இப்ப தான் கேள்விப்படறேன்.. எங்க ஊர்ல "பொண்டுகள்"னு சொல்றது தான் இது போலருக்கு! அப்புறம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் கிட்டக்கவே வரக் கூடாதுன்னு சொல்ற காமெடி, என்னோட கல்யாணத்திலேயே நடந்தது. வந்தவங்க எல்லாருக்கும் என்னோட அப்பா அம்மாவுக்குமே இது ஏன் இப்படி சொல்றாங்கன்னு புரியலை! அதுக்கு அவங்களும் ரொம்ப தில்லா கல்யாணம் நடந்து முடியட்டும் அப்புறம் தான் சேர்ந்து நிக்கறதுன்னு சொன்னாங்க! இதை பத்தி மேல சொல்ல எரிச்சலா இருக்கு கப்சிப்னு போய்க்கறேன்.

  ReplyDelete
 19. // பிள்ளையின் பெற்றோரும் தான்/

  இல்லையே மாப்பிள்ளையின் பெற்றோர் சாப்பிடலாமே ???

  நீங்க வேற, முக்கால்வாசி பேர் கல்யாணம் முடிந்தவுடனே சேஷ ஹோமம் பண்ணிடறாங்க. என் மச்சினியின் கல்யாணத்தில் மாலைதான் பண்ணவேண்டும் என்று சொல்லிவிட்டனர் எனவே இரவு வரை மாப்பிள்ளை மற்றும் பெண் பட்டினி

  ReplyDelete
 20. //ன் சாம்பு அங்கிளுக்கு//

  ஆமாமாம் , மிஸ்டர் போர்கொடிக்கு அப்படியோ அப்படிதான் இங்கயும்

  ReplyDelete
 21. போர்க்கொடி, நாந்தி வேறே, பொண்டுகள் வேறே, சுமங்கலிப் பிரார்த்தனைதான் பொண்டுகள். எங்க ஊர்ப்பக்கமும் பொண்டுகள்னும் சொல்றது உண்டு. இது குறித்து விரைவில் விளக்குகிறேன். நெட் சொதப்பலில் நான் கொடுக்கிற பதிலெல்லாம் காக்காய் தூக்கிண்டு போகுது. :(((((((((

  ReplyDelete
 22. நெட் பயங்கரமாச் சொதப்புது, போஸ்டெல்லாம் போட்டது காக்காய் கொண்டு போச்ச்ச்ச்ச்ச்ச்ச், நல்லவேளையா டாகுமெண்டிலே இருக்கு. கொஞ்சம் சரியாகட்டு

  ReplyDelete
 23. ஹிஹி, பாதி கமெண்டைக் காணோம்! :)))))))))))

  ReplyDelete
 24. திவா அவர்கள் நாந்தி பற்றிய விளக்கம் அவரோட வலைப்பக்கத்திலே கொடுத்திருக்கார். யாருக்கானும் முடிஞ்சா என்னோட போஸ்டுக்கு லிங்க் கொடுங்க. என்னாலே முடியலை. திவாவோட பதிவு சரியாத் திறக்கலை. திறந்தாலும் லிங்க் கொடுக்க முடியலை.

  ReplyDelete
 25. garrrrrrrrrrrrrrrr
  i have given the link already!
  http://tinyurl.com/3kprked

  ReplyDelete
 26. திவாவோட லிங்க் ஹைலைடெட் இல்லைனால கட் அண்ட் பேஸ்ட் பண்ணி ஓபன் பண்ண வேண்டியதுதான் :))

  ReplyDelete
 27. இங்கு பெண்ணும் மாப்பிளையும் மட்டும்தான் கல்யாண தினத்தில் சாப்பிட மாட்டார்கள்.

  இப்போதெல்லாம் இவை எங்கே...

  ReplyDelete
 28. நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்து இருக்கு போல இருக்கே
  ஆமா! கொடி கூட பழம் விட்டாச்சா கீதாம்மா :)

  ReplyDelete