எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 16, 2011

கன்னூஞ்சலாடினாள்

ஹிஹிஹி, படிக்கிறவங்க எல்லாம் ஆவலோடு காத்துட்டு இருப்பீங்க என்ன அமர்க்களம்னு. ஜானவாசம் அனுமதிக்கப்பட்ட தெருக்களில் போயிட்டு, கல்யாணம் நடக்கும் மாமா வீடு இருக்கும் தெருவிலே நுழைந்ததுமே என் மாமியார் என்னையும் அழைத்து வந்து, காரில் ஒன்றாய் உட்கார்த்திக் கூட்டிச் செல்லவேண்டும் என்று கூற, என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை, கல்யாணம் முடிஞ்சு பிள்ளை வீட்டில் தான் பட்டணப் ப்ரவேசம் செய்யணும், உங்க ஊரிலே போய்ப் பண்ணுங்கனு சொல்ல, பிடிவாதமாய் என் மாமியார் ஜானவாசத்திலே ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார்த்தி வைத்துப் புகைப்படம் பிடிக்கணும்னு சொல்ல, என்னோட மாமா ஒருத்தர் சத்தமே போடாமல் உள்ளே வந்து என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். ஒண்ணுமே புரியாமல் வெளியே வந்த என்னைக் காரில் ஏறச் சொல்லி மாப்பிள்ளை பக்கம் உட்காரச் சொல்ல நான் தயங்க, அவங்க வீட்டிலே எல்லாரும், நீ காரில் ஏறி உட்கார்ந்தால் தான் மாப்பிள்ளை கீழே இறங்குவார்னு கேலி செய்ய, உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார, புகைப்படம் எடுக்க என் மாமாவின் நண்பர் முயல, அப்போ இருந்த படபடப்பிலோ, அல்லது வேறு என்ன காரணமோ காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார். அதற்குள்ளாகப் பெண்ணுக்கு நிச்சயம் பண்ண நேரம் ஆயிடுச்சுனு புரோகிதர் சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்.

உடனேயே என் சித்தியும், மற்றும் சிலரும் என்னை மேடைக்கு அழைத்துச் செல்லப் பின் தொடர்ந்த மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார். முதலில் பிள்ளை வீட்டில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஹோவென்ற சிரிப்புச் சப்தம் கேட்க அப்புறம் தான் எல்லாரும் அசடு வழிந்தார்கள். கடைசியில் நிச்சயதார்த்ததில் இரண்டு பேரும் சேர்ந்தே உட்கார்ந்தோம். அன்றைய கலாட்டா முடிந்து அப்புறம் சாப்பிட அவங்க இருந்த வீட்டுக்குப் போயிட்டாங்க. மறுநாள் காலையிலேயே எழுப்பி, (எங்கே? ஏழரைக்குள் முஹூர்த்தம் என்பதால் நடு இரவுனு சொல்லணும், தூங்கவே விடலை :P) மாப்பிள்ளைக்கு எண்ணெய் கொண்டு கொடுத்து, எனக்கும் எங்க மாமி, அத்தை பெண்கள், போன்ற பல பெரியவர்கள் எண்ணெய் வைத்து மங்கள ஸ்நாநம் செய்ய வைத்துப் பின்னிவிட்டார்கள். இப்போ முதல்நாள் மாதிரி அலங்காரம் இல்லை என்றாலும் பூவை மாலை போலக் கட்டித் தலையில் சுற்றினார்கள். தலை பாரமாய் இருந்தது நினைவில் இருக்கு. அதன் பின்னர் ஊஞ்சலுக்கு வாங்கி இருந்த புடைவையைக் கட்டச் சொல்லி, ஒரு மாலையை மட்டும் கழுத்தில் போட்டு மாலை மாற்றலுக்கு உள்ள மற்ற மாலைகளையும் தயார் செய்து, காத்திருந்தோம். அங்கே பிள்ளை வீட்டில் சமாவர்த்தனம்/காசியாத்திரைக்குத் தயார் ஆகிக் கிளம்பிச் சென்று பின்னர் என் அப்பா சென்று அவரிடம் பெண்ணை தானமாய்த் தருகிறேன் என்று சொல்லி அழைத்து வந்தார்.

இப்போ இந்தக் காசி யாத்திரைக்கு மாப்பிள்ளையை அலங்கரிக்கிறது, அவர் காசியாத்திரை என்னும் சம்பிரதாயத்தைச் செய்வதற்கு முன்னாடியே பண்ணறாங்க, ஆனால் இது கல்யாணம் செய்துக்கப் பெண்ணைத் தரேன்னு பெண்ணின் அப்பா சொன்னப்புறமாத் தான் செய்யணும் என்பது சிலர் கூற்று. யோசித்தாலும் அது சரி என்றே தோன்றுகிறது. உங்க பெண்ணைத் தாங்க என்று கேட்கக் கூடாது என்றும், பெண்ணைப் பெற்றவர் மனமுவந்து பெண்ணைத் தர வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுவதாயும் சொல்கிறார்கள். அதோடு அந்தக் காலங்களில் எல்லாம் இப்போ மாதிரி ஜாதகம் பார்த்ததாயும் தெரியவில்லை. ஜாதகம் பார்ப்பது எப்போ வந்தது என்பதை திவா போன்றவர்கள் தான் சொல்லணும்.) காசி யாத்திரை பற்றிய விரிவான விளக்கம் தேவையானால் பின்னர் தருகிறேன்.) இதோ காசியாத்திரை போட்டோ.  
Posted by Picasa
அந்தக் காலத்துப் படம் என்பதால் எவ்வளவு ப்ராசசிங் பண்ணினாலும் இப்படித் தான் வருது. நெகட்டிவ்களைப் பார்த்துப் புதுசாப் பிரிண்ட் போடலாம் என்றால் நெகட்டிவ் சரியாவே கிடைக்கலை. காசி யாத்திரை முடிஞ்சு தேங்காய் கொடுத்து மணமகனை அழைத்ததும், பெண்ணைப் பார்க்க காத்திருந்தார். நானும் போனேன். சித்தியெல்லாம் வெட்கம் காட்டணும், மெதுவாய் நடக்கணும் என்றெல்லாம் சொல்ல, என்னால்முடியாமல் போக ஒரே சிரிப்பாய் வந்தது. அப்போத் தான் என்னோட மாமா ஒருத்தர் இன்னிக்குப் பூரா, பூராக் கூட வேண்டாம், தாலி கட்டும் வரைக்காவது சிரிக்காமல் இரும்மா என்று கேலி செய்ய, நானும் சவால் விட்டேன், சிரிக்கமாட்டேன் பாருங்க என. அது இதோ இந்தப் படம் தான். 
Posted by Picasa
தாலி கட்டியதும் எடுத்தது. மாலை மாற்றல் வீட்டு வாசலில் வைத்து நடந்தது. நான் பார்த்த கல்யாணங்களில் மாலை மாற்றல் என்பது சாதாரணமாய் நடக்கும். ஒண்ணும் குறிப்பாய் விசேஷம் இருக்காது. ஆனால் இங்கேயோ முதலில் நான் மாலையைப்போடப் போனதும், அவரோட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு அப்படியே அவரை இழுத்துக்கொண்டு பின்னே போய்விட்டார்கள். நமக்குத் தான் ஸ்போர்டிவ் ஸ்பிரிட்டா? கேட்கணுமா? ஓடிப் போய்ப் போட்டுட்டேன் போல. தெரியலை! ஹிஹிஹி. அ.வ.சி. அப்புறமாச் சித்தி கோவிச்சுண்டதும் தான் தெரிஞ்சது. அப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு. அதெல்லாம் எங்கே நினைவில் வருது? நம்மளை ஏமாத்தறாங்க பாரு, தோத்துடப் போறோம்னு தான் தோணிச்சு. அதுக்கப்புறமா அவர் மாலை போட வரச்சே, நானும் பின்னாடி போவேன்னு சொல்லிட்டுப் பின்னாடி போக, அவர் உயரத்துக்கு எட்டி மாலையைப் போட்டுட்டார். :P. இப்படிக் கொஞ்ச நேரம் அந்த அதிகாலையிலே மாலை மாற்றல் நடந்ததும் ஊஞ்சல். இதோ ஊஞ்சல் படம். 
Posted by Picasa

38 comments:

 1. /என்னை மேடைக்கு அழைத்துச் செல்லப் பின் தொடர்ந்த மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார்.//

  அன்னிக்கு பின்னாடி வர ஆரமிச்ச்சவர்தான், இன்னிக்கு வரைக்கும் பின்னாடியே வரார்.

  ReplyDelete
 2. //காசி யாத்திரைக்கு மாப்பிள்ளையை அலங்கரிக்கிறது, அவர் காசியாத்திரை என்னும் சம்பிரதாயத்தைச் செய்வதற்கு முன்னாடியே பண்ணறாங்க, //

  எதை சொல்றீங்க ? மாப்பிளையின் கண்ணுக்கு மை வைப்பதா ?? தெளிவா சொல்லுங்க

  ReplyDelete
 3. //வரோட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு அப்படியே அவரை இழுத்துக்கொண்டு பின்னே போய்விட்டார்கள்/

  என் கல்யாணத்திலும் சாதாரணம்தான்

  ReplyDelete
 4. இந்தப் படங்களைப் பாக்கறப்ப என் அப்பா/அம்மா கல்யாண போட்டோதான் நியாபகம் வருது

  ReplyDelete
 5. இது உங்களின் அனுபவப் பதிவா இல்லை ஏதேனும் புனைவிர்க்காக எழுதி இருக்கிறீர்களா !? எப்படி இருந்தாலும் சூப்பர்

  ReplyDelete
 6. //காத்துட்டு இருப்பீங்க என்ன அமர்க்களம்னு. //
  காத்துகிட்டா? மறந்தே போச்சு என்ன சமாசாரம்ன்னு. இவ்வளோ லேட்டா? :P

  //என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை,// கரெக்ட்தான்!

  //மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார்.//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  //காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார்.//

  ஹாஹ்ஹாஹ்ஹா!

  //ஜாதகம் பார்ப்பது எப்போ வந்தது என்பதை திவா போன்றவர்கள் தான் சொல்லணும்.//
  போன 100 -150 வருஷங்கள் முன்ன ஆரம்பிச்சதா கேள்வி! 50 -60 வருஷம் முன்னே கூட பொண்னு பிறந்ததும் இந்த பையனுக்குன்னு பெரியவங்க நிர்ணயம் பண்ணிடுவாங்கன்னு கேள்வி!

  //சித்தியெல்லாம் வெட்கம் காட்டணும், மெதுவாய் நடக்கணும் என்றெல்லாம் சொல்ல, என்னால்முடியாமல் போக..// அதானே? வெட்கம் ன்னா என்ன? :P:P:P

  //நமக்குத் தான் ஸ்போர்டிவ் ஸ்பிரிட்டா? //
  ஹை ஜம்ப் கூட பண்ணீங்களோ?
  //

  ReplyDelete
 7. மேடம் துரத்தி மாலை போட்ட இடம் அற்புதமான நேரேஷன். ஊஞ்சல் பார்த்தாச்சு... அப்புறம்... ;-))

  ReplyDelete
 8. \\அவர் உயரத்துக்கு எட்டி மாலையைப் போட்டுட்டார். :P. \\

  கலக்கல் ;))

  ReplyDelete
 9. வாங்க எல்கே, அநியாயமா இல்லை?? நாங்க நடக்கிறச்சே பார்த்தவங்களைக் கேட்டுப் பாருங்க, அவர் நான் வரேன்கற பிரக்ஞையே இல்லாமல், (நறநறநற) வேகமாப் போயிட்டுஇருப்பார், நான் தான் பின்னாடி ஓடணும்! :P

  ReplyDelete
 10. காசியாத்திரையின் அலங்காரம் எல்லாத்தையுமே சொல்றேன். பிரமசாரிக்குத் தானே பெண்ணைக் கொடுக்கிறேன்னு சொல்றாங்க, அதுக்கப்புறமாத் தான் கல்யாண கோலம்னு சிலர் சொல்றாங்க, இது பற்றித் தெளிவாச் சொல்ல திவாவை மேடைக்கு அழைக்கிறேன். (நோ ஜோடா, நான் கேட்டால் அவர் வாங்கிக் குடிச்சுடறார். :P)

  ReplyDelete
 11. என் கல்யாணத்திலும் சாதாரணம்தான்//

  அநேகமாய் எல்லாக் கல்யாணங்களிலும் நான் பார்த்தவரை மாலை மாற்றலில் விளையாட்டு எல்லாம் இருக்கலை! :( என் கல்யாணத்தில் பச்சைப்பிடி சுத்தறச்சே கூட ஒரே அமர்க்களம் பண்ணினாங்க, இவரோட அத்தைஒருத்தங்க ரொம்பவே விளையாட்டுப் புத்தி, நானெல்லாம் ஒண்ணுமே இல்லை, ஒவ்வொரு உருண்டையையும் ஆள் பார்த்துத் தாக்குவாங்க. ஒரே கலகலகலகலகலலா,

  பி.கு. அந்த அத்தையோட பெண்ணைத் தான் மாமாவுக்குக் கொடுக்கணும்னு பேச்சு வார்த்தை நடந்தது. :))))))))))

  ReplyDelete
 12. எல்கே, அறுபதுகளின் போதே வண்ணப் புகைப்படங்கள் வந்துவிட்டன, என்னோட பெரியப்பா பெண்கள் கல்யாணத்திலே வண்ணம் தான், ஆனால் என் அப்பா சம்மதிக்கலை, அதனால் வண்ணம் எடுக்கலை! :)))))அப்போ கொஞ்சம் இல்லை, ரொம்பவே காஸ்ட்லி, வண்ணம் எடுக்கிறது, அதான் உண்மையான காரணம்!

  ReplyDelete
 13. பனித்துளி, கேட்டீங்களே ஒரு கேள்வி, சுத்தமான அக்மார்க் சொந்த நினைவுப் பகிர்வுகள். உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. :))))))

  ReplyDelete
 14. //என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை,// கரெக்ட்தான்!//

  நினைச்சேனே, நீங்க வந்து சரியாச் சொல்லுவீங்கனு, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  /மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார்.//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

  :P:P:P:P

  //காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார்.//

  ஹாஹ்ஹாஹ்ஹா!//

  அப்பாடா, என்ன சந்தோஷம்?? :P

  ReplyDelete
 15. //மாலை மாற்றலில் விளையாட்டு எல்லாம் இருக்கலை! //

  எங்க வீட்டில் பண்ண ரெடியா இருந்தாங்க. அவங்க சைட்ல தாய்மாமா யாரும் இல்லை. அவளுக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி எனவே வேண்டாம்னு விட்டாச்சு

  ReplyDelete
 16. அப்ப எழுபதுகளில்தான் உங்க திருமணம் நடந்து இருக்கணும்

  ReplyDelete
 17. //சித்தியெல்லாம் வெட்கம் காட்டணும், மெதுவாய் நடக்கணும் என்றெல்லாம் சொல்ல, என்னால்முடியாமல் போக..// அதானே? வெட்கம் ன்னா என்ன? :P:P:P//

  ஹிஹிஹி, வெட்கம்னா என்னனு தான் கேட்கவேண்டி இருக்கு! :))))))

  //நமக்குத் தான் ஸ்போர்டிவ் ஸ்பிரிட்டா? //
  ஹை ஜம்ப் கூட பண்ணீங்களோ?
  ////

  அதை ஏன் கேட்கறீங்க, என்னோட சித்தி அப்புறமா அவசர ஆலோசனைக்கூட்டம் போட்டு என்னை ஸ்பீட் ப்ரேக்கரில் தடுத்து நிறுத்த ஒருபக்கம் என் பெரியம்மா பெண்ணையும், இன்னொரு பக்கம் என் மாமா பெண்ணையும் கூடவே அனுப்பினாங்க. என் நடைகொஞ்சம் வேகம் தெரிந்தால் உடனே இரண்டு பேரும் புடைவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து பிரேக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்! :)))) ஏதேனும் உறவினர் நிகழ்ச்சிகளில் நாங்க சந்திக்கும்போது சில சமயம் கூடிப் பேசிச் சிரிச்சுப்போம், அந்த நாளும் வந்திடாதோ!

  ReplyDelete
 18. ஆர்விஎஸ், நன்றி. அப்புறம் வரும் முடிஞ்சா இன்னிக்கு, இல்லாட்டி நாளைக்கு

  ReplyDelete
 19. ஹிஹிஹி, படிக்கிறவங்க எல்லாம் ஆவலோடு காத்துட்டு இருப்பீங்க என்ன அமர்க்களம்னு. //
  இருக்காதா பின்னே :)

  ஜானவாசம் அனுமதிக்கப்பட்ட தெருக்களில் போயிட்டு, கல்யாணம் நடக்கும் மாமா வீடு இருக்கும் தெருவிலே நுழைந்ததுமே என் மாமியார் என்னையும் அழைத்து வந்து, காரில் ஒன்றாய் உட்கார்த்திக் கூட்டிச் செல்லவேண்டும் என்று கூற, என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை, கல்யாணம் முடிஞ்சு பிள்ளை வீட்டில் தான் பட்டணப் ப்ரவேசம் செய்யணும், உங்க ஊரிலே போய்ப் பண்ணுங்கனு சொல்ல, பிடிவாதமாய் என் மாமியார் ஜானவாசத்திலே ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார்த்தி வைத்துப் புகைப்படம் பிடிக்கணும்னு சொல்ல, என்னோட மாமா ஒருத்தர் சத்தமே போடாமல் உள்ளே வந்து என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.//
  முதலில் ஓன்று சொல்லோனும்! வர வர முற்று புள்ளி வைப்பது தள்ளி போய் இவ்வளோ பெரிய வாக்கியமா என்று மலைக்க வைக்கிறது
  உண்மையில் தாய் மாமா அழைத்தால் வந்தீர்களா ;இல்லை சாம்பு மாமாவை பார்க்கும் ஆசையில் வந்தீர்களா :)

  ReplyDelete
 20. //ஒண்ணுமே புரியாமல் வெளியே வந்த என்னைக் காரில் ஏறச் சொல்லி மாப்பிள்ளை பக்கம் உட்காரச் சொல்ல நான் தயங்க, அவங்க வீட்டிலே எல்லாரும், நீ காரில் ஏறி உட்கார்ந்தால் தான் மாப்பிள்ளை கீழே இறங்குவார்னு கேலி செய்ய, உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார, புகைப்படம் எடுக்க என் மாமாவின் நண்பர் முயல, அப்போ இருந்த படபடப்பிலோ, அல்லது வேறு என்ன காரணமோ காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார். அதற்குள்ளாகப் பெண்ணுக்கு நிச்சயம் பண்ண நேரம் ஆயிடுச்சுனு புரோகிதர் சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்.//
  ஹ ஹா ! நீங்க காரில் ஏறின வேகத்தை பார்த்து மாமா தான் பயந்துட்டாங்க என்று கேள்வி :)


  //உடனேயே என் சித்தியும், மற்றும் சிலரும் என்னை மேடைக்கு அழைத்துச் செல்லப் பின் தொடர்ந்த மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார். முதலில் பிள்ளை வீட்டில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஹோவென்ற சிரிப்புச் சப்தம் கேட்க அப்புறம் தான் எல்லாரும் அசடு வழிந்தார்கள்.//
  ஓஹ்கோ ! அவரையும் அறியாமல் உங்களை பின் தொடர்ந்து அமர்ந்து விட்டாராக்கும் :)
  அப்போ உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்தது என்று சொல்லலாமா !!

  //கடைசியில் நிச்சயதார்த்ததில் இரண்டு பேரும் சேர்ந்தே உட்கார்ந்தோம். அன்றைய கலாட்டா முடிந்து அப்புறம் சாப்பிட அவங்க இருந்த வீட்டுக்குப் போயிட்டாங்க. மறுநாள் காலையிலேயே எழுப்பி, (எங்கே? ஏழரைக்குள் முஹூர்த்தம் என்பதால் நடு இரவுனு சொல்லணும், தூங்கவே விடலை :P) //

  ஹலோ ஹலோ கீதாம்மா ! உங்களுக்கு இனிய நினைவுகளால் தூக்கமே வரலே; இதிலே தூங்கவே விடலை என்று சொல்வது என்ன நியாயம் :)

  ReplyDelete
 21. //பிரமசாரிக்குத் தானே பெண்ணைக் கொடுக்கிறேன்னு சொல்றாங்க, அதுக்கப்புறமாத் தான் கல்யாண கோலம்னு சிலர் சொல்றாங்க, இது பற்றித் தெளிவாச் சொல்ல திவாவை மேடைக்கு அழைக்கிறேன். (நோ ஜோடா, நான் கேட்டால் அவர் வாங்கிக் குடிச்சுடறார். :P)//

  நோ ஜோடா ந்னா நோ கமென்ட்! :P:P:P

  ReplyDelete
 22. படங்களை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணலாமான்னு பாத்தேன் ஊஹும்! முடியலை!

  ReplyDelete
 23. எல்கே, ரொம்பவே வருத்தமா இருக்குப் போல?? :))) தாய் மாமானு இல்லாட்டியும், ஒண்ணுவிட்ட, ரெண்டு விட்ட மாமாக்கள் இருந்தால் கூடப் போதும். ஆனாலும் ஒரு சில கல்யாணங்களிலே தான் இது நல்லா நடக்குது.

  ReplyDelete
 24. அப்ப எழுபதுகளில்தான் உங்க திருமணம் நடந்து இருக்கணும்

  17 May, 2011//

  அப்படிங்கறீங்க??? இருக்கும், இருக்கும். :))))))))))))))) தேதி கூடச் சொல்லுவீங்க போல! :)))

  ReplyDelete
 25. உண்மையில் தாய் மாமா அழைத்தால் வந்தீர்களா ;இல்லை சாம்பு மாமாவை பார்க்கும் ஆசையில் வந்தீர்களா :)//

  ப்ரியா, உண்மையாச் சொல்லணும்னா இதை எல்லாத்தையுமே நான் இன்னொரு மனுஷியாத் தூர நின்னு பார்த்தேன் என்பதே உண்மை. எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலை. ஆனால் நீங்க சொல்றாப்போல் ஆசைனு இல்லை. அது மட்டும் தெரியும். எந்தவிதமான உணர்வுகளும் தோன்றவில்லை.. ஏதோ விளையாட்டு மாதிரி இருந்ததுனு சொல்லலாம்.

  ReplyDelete
 26. அப்போ உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்தது என்று சொல்லலாமா !!//

  நீங்க வேறே, ஏற்கெனவே வந்திருந்த கோடைக்கட்டிகள் சரியாகாத காரணத்தால் முகமே சிவந்து தான் இருந்தது. வெட்கமா?? அப்படின்னா??? கிலோ என்ன விலை??? மறுபடியும் படிங்க பதிவை. உங்களுக்கு நோ மதிப்பெண்கள். :P

  ReplyDelete
 27. ஹலோ ஹலோ கீதாம்மா ! உங்களுக்கு இனிய நினைவுகளால் தூக்கமே வரலே; இதிலே தூங்கவே விடலை என்று சொல்வது என்ன நியாயம் :)..

  ஹிஹிஹி, அதெல்லாம் இல்லை, அங்கே போய் எப்படி நடந்துக்கணும்னு எனக்கு ஆளாளுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருந்தாங்க. அதிலே எங்கே தூங்கறது?? :P

  ReplyDelete
 28. நோ ஜோடா ந்னா நோ கமென்ட்! :P:P:P//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிடையாது போங்க! :(

  ReplyDelete
 29. படங்களை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணலாமான்னு பாத்தேன் ஊஹும்! முடியலை!//

  ம்ம்ம்ம் நெகட்டிவ் கையிலே மாட்டட்டும், புதுசாவே ப்ரிண்ட் போட்டுடலாம்னு ஐடியா. பார்க்கலாம். அப்போ ஆல்பம் எல்லாம் வேணாம்னு அப்பா ஒரே பிடிவாதம். அதனால் ஆல்பமே இல்லை.. துண்டு துண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாக இருக்கா, தேடிப் பிடிக்கிறது கஷ்டமா இருக்கு. :)))

  ReplyDelete
 30. உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார,
  எதுக்கு பயந்தன்னு பொய் சொல்லனும்.

  ReplyDelete
 31. என் அப்பா சென்று அவரிடம் பெண்ணை தானமாய்த் தருகிறேன் என்று சொல்லி அழைத்து வந்தார்

  ReplyDelete
 32. சுவாரசியம். மாலை மாத்துற சமாசாரம் ஸ்போர்டிவோ ஸ்போர்டிவ் தான். பொண்ணையும் பிள்ளையும் தூக்கிட்டு ஓடுற வஸ்தாதுங்க வேறே..

  வெக்கம் பத்தி எழுதுனது ரொம்ப சரி.. திடீர்னு பெண்களுக்கு வெட்கப்படுறீ என்று அட்வைஸ் செஞ்சா சிரிப்பு வராம என்ன வரும்?!

  ReplyDelete
 33. புகைப்படங்கள் ரெஸ்டோர் பண்ணும் கடைகள் இப்ப நிறைய வந்திருக்கே.. அந்த நாள்ல மவுன்ட் ரோட் ஜிகேவேல் (இப்ப உண்டா தெரியாது) நிறைய ஜித்து வேலையெல்லாம் செஞ்சு ரெஸ்டோர் பண்ணிக் கொடுப்பாங்க.

  ReplyDelete
 34. இங்கு ஜானவாசம்,காசியாத்திரை, ஊஞ்சல்,என்றெல்லாம் செய்வதில்லை.

  நன்கு உங்கள் முறைகளை ரசித்தேன்.நேரில் பார்ப்பதுபோல் இருந்தது.

  ReplyDelete
 35. வாங்க திராச சார், ரொம்ப முக்கியமான கட்டங்களிலே மட்டும் கலந்துக்கணும்னு வச்சிருக்கீங்க போல! :P

  அடுத்த கமெண்டில் நீங்க என்ன சொல்ல வந்தீங்க என்றே தெரியலையே??????????

  ReplyDelete
 36. அப்பாதுரை, என் மாமாக்கள் என்னைத் தூக்கத் தயாராய்த் தான் இருந்தாங்க. ஆனால் அவரோட மாமா?? ஹிஹிஹி, ரொம்பக் கஷ்டம், அதான் ஓட்டம் பிடிக்கிறதோட நிறுத்தினாங்க போல! :)))))))

  ReplyDelete
 37. ம்ம்ம்ம் புகைப்படங்களை மீண்டும் போட முயல்கிறேன். நீங்க சொல்லி இருப்பது தெரியும், என் அம்மா, அப்பா கல்யாண போட்டோவையே ரெஸ்டோர் பண்ணி இருக்கோமே! :)))))) இதுக்குக்கொஞ்சம் கூட்டு முயற்சி தேவை, பார்க்கலாம். :))))))))

  ReplyDelete