எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 14, 2011

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் தொல்லைகளும் 2

இங்கே எங்க வீட்டுக்கு இருபக்கத்திலும் இருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்புக்களுக்கும் எங்க வீட்டுக் காம்பவுண்ட் சுற்றுச் சுவருக்கும் இரண்டடி கூடக் கிடையாது. அதிலும் இப்போது புதிதாய்க் கட்டுபவர்கள் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியானது நேரே எங்க வீட்டுக்காம்பவுண்ட் சுவற்றிற்கு மேலே வருகிறது. அவங்க போடும் குப்பை எல்லாம் நேரே எங்க வீட்டுக்குள் வந்து விழும், அதோடு மழை நீர் கழிவு நீர், வீடு கழுவும் நீர் எல்லாமே எங்க வீட்டுக்குள் வந்து விழும். அந்தப் பக்கம் நடமாடுவது என்றால் நாங்க யோசிக்க வேண்டி இருக்கும். யாரையாவது குடித்தனம் வைத்தால் அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும். தினம் தினம் சொல்லிட்டு இருக்க முடியுமா? உங்க தண்ணீர், குப்பை எல்லாம் எங்க பக்கம் வருது என்று? சொன்னாலும் கோவிச்சுப்பாங்க. கீழே இறங்கி வந்து குப்பையைக் கொடுப்பவர்கள் ரொம்பக் குறைச்சல். அதிலும் நம்ம ஊரிலே பக்கத்து வீட்டு வாசலில் குப்பையைக் கொட்டுபவர்களைத்தான் இன்று வரை பார்த்து வருகிறேன். அதோடு இந்தக் கட்டடம் கட்டும்போதும், பொறுப்பு எடுத்துக்கொண்டு கட்டும் கட்டிடக் காண்ட்ராக்டர்கள் சாமான்களை எல்லாம் அடுத்த வீட்டு வாசலில் அவங்களை ஒரு மரியாதைக்குக் கூடக் கேட்காமல் போட்டு விடுகின்றனர்.



மணல் ஒரு லாரி திடீரென நம் வீட்டு வாசலில் ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் ஒரு லாரி ஜல்லிக்கற்களும் வந்துடும். போதாததுக்கு சிமெண்ட் கலவை போடும் மெஷினை நம்ம வீட்டுக்கு எதிரே வாசலில் வைப்பாங்க. இங்கே தான் எங்களுக்குக் கலவைபோட செளகரியம், மணலும், ஜல்லியும் இங்கே தானே இருக்கு என்பது அவங்க கட்சி. அதோட தண்ணீர் நிரப்பும் பெரிய ட்ரம்மையும் சரியாக நம் வீட்டுக் கதவுக்கு முன்னே வைச்சு தண்ணீரையும் நிரப்பிடுவாங்க. வீட்டிலிருந்து வெளியே வர முடியாது. அவங்க இதை எல்லாம் செய்யும் முன்னர் வீட்டுக்கு வெளியே சென்றிருந்தோமானால் வீட்டுக்கு உள்ளே வர முடியாது. அவங்களைக் கெஞ்சணும். வேலை செய்யும் ஆட்களின் அட்டூழியம் அதுக்கும் மேலே. சாப்பாடு இங்கே தான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. சரி, போகட்டும் நிழலுக்கு வராங்கனு விட்டால், சாப்பிட்ட மிச்சம் எல்லாம் வீட்டு வாசலிலேயே கிடக்கும். டீ குடிச்சுட்டு டிஸ்போஸபில் கப்புகளைத் தூக்கி எறிய மாட்டாங்க. அல்லது குப்பைகளோடு சேர்த்தும் வைக்க மாட்டாங்க. அதெல்லாமும் வீட்டு வாசலில் கோலம் போட்டிருக்கும் இடத்தில் உருண்டுகொண்டு இருக்கும். இதை எல்லாம் எடுத்துச் சுத்தம் செய்யக் கூடாதா எனக் கேட்டால் நாங்க இந்தப் பக்கம் வரவே இல்லை, நாங்க போடவே இல்லைனு சத்தியம் செய்துடுவாங்க. பக்கத்து பில்டிங் கட்டறவங்க போட்டிருப்பாங்கனு சொல்லிடுவாங்க. பக்கத்து பில்டிங் கட்டறவங்களாலேயும் தொந்திரவு தான் என்றாலும் இங்கே எதிரே இருக்கிறவங்களை விடக் கொஞ்சம் கம்மினு சொல்லிக்கலாம். டீ கப்பெல்லாம் போட்டதில்லை. சாப்பாடு இங்கே வந்து சாப்பிடறதில்லை. அப்படிக் குப்பையாய் இருந்தாலும் பெருக்கிக் கொடுத்தாங்க. இப்போ இவங்க எதிரே கட்ட வந்ததுக்கப்புறம் இவங்க வராங்கனு அந்தக் கட்டிடத்து ஆட்கள் இங்கே வரதில்லை. எதிரே கட்டறவங்க தான் வராங்க. கேட்டால் ஒருத்தரும் உண்மையை ஒத்துக்கறதில்லை. எங்க வீட்டில் வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் நான் எடுக்க மாட்டேனு சொல்லிடறதாலே நாங்க தான் தினம் சுத்தம் செய்யறோம். என் கண்ணிலே பட்டால் நானும், அவர் கண்ணிலே பட்டால் அவரும் சுத்தம் செய்யறார். அப்போவும் அவங்க பார்த்துட்டுத் தங்களுக்குள்ளே சிரிச்சுப்பாங்க. ஆனால் வந்து செய்து தரமாட்டாங்க.

இவ்வளவு விபரமாக விளக்குவதன் காரணமே இது போல் வெளிநாடுகளில் மேல் நாடுகளில் செய்ய முடியாது என்பதைச் சொல்லவே. அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போருக்கு எனத் தனிச் சட்டமும், தனி வீடுகளில் இருப்போருக்கு எனத் தனிச் சட்டமும் இருக்கின்றது. பிறருக்குத் தொந்திரவு தரக் கூடாது என்பது அங்கே மிக முக்கியமான ஒன்று. இங்கே எங்க பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ, அல்லது கச்சேரிகளையோ அங்கே இருப்பவங்க கேட்டால், தெருவுக்கே வேறு தனி நிகழ்ச்சி தேவை இல்லை. அவ்வளவு சத்தமாக வைப்பார்கள். நாம் சொன்னாலும் தப்பாய்ப் போயிடும். சொல்லவும் முடியாது. அதோடு கைபேசியில் அவங்க பேசறது இங்கே கேட்கும். ஒரு சிலர் கைபேசியில் பாட்டும் கேட்கும் வசதி இருப்பதால் கழுத்தில் அதைத் தொங்க விட்டுக்கொண்டு பாட்டும் கேட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். அப்போவும் சத்தம் தாங்காது. மேல் நாடுகளில் என்றால் காரின் ஹாரன் கூட அடிக்க முடியாது. அப்படி யாரானும் ஹாரனை அடித்தால் அவங்களைக் கேவலமாய்ப் பார்ப்பார்கள். சாலைகளில் அத்தனை வண்டிகள் போகும். ஆனால் ஒரு காரின், அல்லது லாரிகளின் ஹாரன் ஒலியே கேட்காது.


அதோடு அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் மரங்கள் கட்டாயமாய் வளர்க்கப் படவேண்டும் என்பது அங்கே மிக முக்கியமான ஒன்று. இங்கே ஒரு கிரவுண்டில் ஒரு குடும்பம் குறைந்த பக்ஷமாக நான்கு அல்லது ஐந்து, ஆறு பேர் இருந்த காலிமனையில் கிட்டத்தட்ட எட்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டிக் குறைந்தது ஒரு வீட்டுக்கு நான்கு என்ற கணக்கில் முப்பது பேருக்கும் மேலாக வருகின்றனர். அப்போ சுற்றி இடம் எங்கே விட முடியும். இரு பக்கமும் இருக்கும் அடுத்த வீடுகளில் இடம் கொடுத்தால் அதையும் சேர்த்துக் கட்டுவாங்க போல. அப்படி கொஞ்சம் கூட இடம் விடாமல் கட்டிடறாங்க. இதை எப்படி அரசு அநுமதிக்கிறது என்பது புரியவில்லை. இதற்கென விதிமுறைகளை அரசு எப்படி வகுத்திருக்கிறது என்பதைப் புரிய வைக்கவேண்டும். முக்கியமாய் அந்த அந்த நகராட்சி, மாநகராட்சிபோன்ற உள்ளாட்சித் துறைகள் இவற்றை அநுமதிக்கும் முன்னர் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேறாத நகராட்சிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பை முழுதும் தடை செய்யாவிட்டாலும் ஒரு கிரவுண்டு காலிமனையில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டக்கூடாது எனத் தடை செய்யலாம். தனி வீடாக இரண்டு கட்ட மட்டும் அநுமதிக்கலாம். மூன்று கிரவுண்டு காலி மனையில் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதிக்கவேண்டும். அதுவும் சுற்றிலும் மரங்கள், செடிகள் வளர்க்க இடம் விட்டுப் பின் பக்கம் இரண்டு தென்னை மரமாவது வைத்துவிட்டு, முன்பக்கம் நிழல் தரும் வேப்பமரம், அசோகாமரம் வேறு ஏதேனும் மரங்களை வைக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு பாதிப்பு என ஒருபக்கம் அலறிக்கொண்டே இன்னொரு பக்கம் இருக்கும் வீடுகளில் உள்ள மரங்களை எல்லாம் உயிரோடு வெட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறோம். இது குறித்து.........

15 comments:

  1. சட்டம் எல்லாம் இருக்கு. யார் செயல்படுத்துவது? பேசாம வித்துட்டு கிராமத்துக்கு போங்க!சௌக்கியமா இருக்கலாம்!

    ReplyDelete
  2. கீதா மாமி உங்க ஆதங்கம் புரிகிறது.போன பதிவில் பெங்களூரை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்.அதில் நீங்க சொன்னதுபோல நான் பார்த்தவரையில் இங்கு பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்புகள் நன்றாக விசாலமாக இடம் விட்டுதான் கட்டியிருக்கிறார்கள்.
    சென்னையிலும் அரசு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான விதிமுறைகளை நன்றாக ஒழுங்கு படுத்த வேண்டும்.இல்லவிட்டால் கஷ்டம்தான்...

    ReplyDelete
  3. Anonymous14 July, 2011

    இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. இவனுங்களுக்கு கொஞ்சம் கூட புரிந்துக்கொள்ளும் தன்மையே கிடையாது. இவனுங்கள் வீடு கட்டி முடிக்கும்வரை நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை. பிறருடைய உரிமைகளையும், உடைமைகளையும் அனுமதியின்றி பயன்படுத்தும் ஜென்மத்தை என்ன சொல்வது? நானும் எவ்வளவோ திட்டியும் பார்த்தாகிவிட்டது. நல்லவேளை இப்போது எதிர் வீட்டு / பக்கத்து வீட்டு வேலை முடிந்துவிட்டது. பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பால் உங்களுக்கு ஏற்படுவதுபோல் குப்பை தொல்லை. இதற்கு ஏதேனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?

    ReplyDelete
  4. வாங்க திவா, வரலை, சொல்லல்லையேனு நினைச்சேன், சொல்லிட்டீங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்பத்தூரே கிராமம் தான் அது தெரியுமில்லை?? அதைத் தான் இப்போ நரகமாக்கறாங்க. கிராமங்கள் மட்டும் என்ன வாழுது? அங்கேயும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் வருது. கும்பகோணத்தில் வீடுகளுக்கு ஒருபக்கம் தான் தாய்ச்சுவர் வரும், அங்கேயே அடுக்குமாடிக்குடியிருப்புகள். என்னத்தைச் சொல்றது?:((((((

    ReplyDelete
  5. வாங்க ராம்வி, எனக்குத் தெரிந்து சென்னையில் அலாக்ரிடி நல்லாக் கட்டினாங்க. இப்போ தோஷி, நவீன் பரவாயில்லை. அவங்க எல்லாம் ஏகர் கணக்கிலே எடுத்துச் செய்யறாங்க. விலை நடுத்தரமக்களுக்குக் கட்டுப்படியாகாது. நடுத்தரம்னு இங்கே சொல்வது உயர் மத்திய வர்க்கமோ, நடுத்தர நடுத்தர வர்க்கமோ இல்லை; அதற்கும் கீழ்ப்பட்டவங்க. அவங்களோட சொந்த வீட்டுக் கனவுகளுக்கு விலை குறைச்சு இப்படிக் கிடைச்சால் நல்லா இருக்கும்னு நினைக்கறாங்க. வந்ததும் படற கஷ்டங்களும் இருக்கு,அதுவும் தனியா வரும்.

    ReplyDelete
  6. சென்னையிலே விதிமுறைகள் ஏது?? அதையெல்லாம் மீறினாலும் கண்டுக்க மாட்டாங்க. ஏதானும் விபத்து நடந்தால் கொஞ்சம் அலறுவாங்க. அப்புறம் அதுவும் அடங்கிடும். :(

    இப்போப் பாருங்க சிஎம்டிஏ மீட்டிங்கிலே அத்துமீறிக் கட்டிய கட்டிடங்களை உடனடியாக இடிக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் சொல்லியும் இடிக்காததைப் பற்றிய எந்தவிதமான முடிவும் எடுக்கப் படாமல் ஒரு மீட்டிங் போட்டு முடித்திருக்கிறார்கள். இவங்களா நம்மளோட கஷ்டத்தை வந்து கேட்கப்போறாங்க? ஏதோ என்னாலனது புலம்பறேன். :(((

    ReplyDelete
  7. மிகவும் சரி
    பல நேரங்களில் சென்னையில் இருந்து மாறி காஞ்சிபுரம்/ செங்கல்பட்டில் தனி வீட்டிற்கு போய் விடலாமா என்ற எண்ணம் வருவதுண்டு

    ReplyDelete
  8. வாங்க ஜாபர் முதல் வரவுக்கு நன்றி. சட்டமெல்லாம் இருந்தாலும் இங்கே எதுவும் நடக்காது. குப்பை போடாதேனு சொன்னால் சண்டைக்கு வருவாங்க. இது நிரந்தரமான தொந்திரவு. :(((((((

    ReplyDelete
  9. Wonderful post. Thanks for writing these kind of problems.

    ReplyDelete
  10. வாங்க ராம்ஜி யாஹூ, காஞ்சிபுரம் போகலாமானு என் கணவருக்குக் கூட யோசனை தான். அதே சமயம் இங்கே எல்லாமும் பழகி விட்டது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறிக்கடைகள், மளிகைக்கடை, எல்லாத்துக்கும் மேலே மருத்துவர், முக்கியமாய் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்கு. இந்த மருத்துவர் இங்கேயும் கே.கே. நகருக்கும் தான் வருவார். இவர் பார்க்க ஆரம்பிச்சதும் தான் நான் எழுந்து நடமாட ஆரம்பிச்சிருக்கேன். முக்கியமாய் ஆகஸ்டில் வீசிங் ஆரம்பிச்சால் ஜனவரி, பெப்ரவரிவரை இழுத்தடிக்கும். ஆக்சிஜனும், ஸ்டீராயிடும் மாறி மாறி/////// போதும்டா சாமினு ஆயிடும். இப்போ அந்தக் கொடுமை இல்லை. வெளி ஊர்களுக்குப் போனால் இரண்டு மாசத்துக்கு ஒரு தரமாவது இங்கே வந்து காட்டணும். எல்லாத்தையும் யோசிக்க வேண்டி இருக்கே.

    ReplyDelete
  11. வாங்க செல்வநாயகி, முதல் வரவு?? இல்லைனு நினைக்கிறேன். பெயரைப் பார்த்த நினைவு இருக்கு. வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  12. நான் இதற்கு முன்பு இருந்த அடுக்குமாடி குடிஇருப்பில் நடந்த சம்பவம். எங்கள் வீட்டுக்கு அருகில் நம்ம மக்கள் இருந்தார்கள். ஆபீஸ் போற அவசரத்தில் நம்ம பசங்க, கீழே இருந்த பெரிய குப்பை தொட்டில் குப்பையை கொட்டாமல், குப்பை கொட்டி விட்டு கதவருகே இருந்த கீழ்வீட்டுகாரரரின் குப்பை தொட்டியில் போட்டு கெளம்பிட்டாங்க. எதிர் வீட்டுக்காரர் தற்செயலாக பார்த்துவிட்டார். 911 கால் பண்ணிட்டார். போன பசங்க என்னடா திரும்பி வராங்க, வந்த ஒருத்தன் குப்பையை எடுத்து பெரிய குப்பை தொட்டியில் போட்டு விட்டு போறான். போலீஸ் எச்சரித்துவிட்டு போனார்கள்.லீசிங் ஆபீஸ்லையும் செம்ம டோஸ். அப்புறம் தான் தெரிஞ்சது பலதடவை பசங்க இப்படி பண்ணினதும்,வீட்டுக்காரர் எச்சரித்தும் தொடர்ந்து செய்ததால் வந்த வினை.அப்ப கூட குப்பை போட்டதுக் கெல்லாம் போலீஸ் கூபிடுவான்களா -ன்னு தான் சொன்னானுன்களே தவிர தப்பை உணரவில்லை. என்ன கொடுமைன்னா அபார்ட்மென்ட்டில் உள்ள வாங்கெல்லாம் இந்தியன் கய்ஸ்ன்னு அப்படி பண்ணாங்கன்னு தான் சொன்னங்கலே தவிர பேரை சொல்லல.. இங்கேயே இப்படின்னா நம்ம ஊர்ல சொல்லவே வேணாம்.ஏன்டா அடிக்கிற-ன்னு கேட்டா கூட நான் அடிக்காம வேற யாருடா அடிப்பாங்க?-ன்னு சொல்வாங்க. பட்டாக் கூட புத்தி வராது. (-:...I Love India ன்னு சொல்றீங்களே லவ் பண்றதை இப்படியா பார்த்துப்பிங்கனு கேட்டதுக்கு இன்றுவரை பதிலே இல்லை. (-:

    ReplyDelete
  13. நான் இதற்கு முன்பு இருந்த அடுக்குமாடி குடிஇருப்பில் நடந்த சம்பவம். எங்கள் வீட்டுக்கு அருகில் நம்ம மக்கள் இருந்தார்கள். ஆபீஸ் போற அவசரத்தில் நம்ம பசங்க, கீழே இருந்த பெரிய குப்பை தொட்டில் குப்பையை கொட்டாமல், குப்பை கொட்டி விட்டு கதவருகே இருந்த கீழ்வீட்டுகாரரரின் குப்பை தொட்டியில் போட்டு கெளம்பிட்டாங்க. எதிர் வீட்டுக்காரர் தற்செயலாக பார்த்துவிட்டார். 911 கால் பண்ணிட்டார். போன பசங்க என்னடா திரும்பி வராங்க, வந்த ஒருத்தன் குப்பையை எடுத்து பெரிய குப்பை தொட்டியில் போட்டு விட்டு போறான். போலீஸ் எச்சரித்துவிட்டு போனார்கள்.லீசிங் ஆபீஸ்லையும் செம்ம டோஸ். அப்புறம் தான் தெரிஞ்சது பலதடவை பசங்க இப்படி பண்ணினதும்,வீட்டுக்காரர் எச்சரித்தும் தொடர்ந்து செய்ததால் வந்த வினை.அப்ப கூட குப்பை போட்டதுக் கெல்லாம் போலீஸ் கூபிடுவான்களா -ன்னு தான் சொன்னானுன்களே தவிர தப்பை உணரவில்லை. என்ன கொடுமைன்னா அபார்ட்மென்ட்டில் உள்ள வாங்கெல்லாம் இந்தியன் கய்ஸ்ன்னு அப்படி பண்ணாங்கன்னு தான் சொன்னங்கலே தவிர பேரை சொல்லல.. இங்கேயே இப்படின்னா நம்ம ஊர்ல சொல்லவே வேணாம்.ஏன்டா அடிக்கிற-ன்னு கேட்டா கூட நான் அடிக்காம வேற யாருடா அடிப்பாங்க?-ன்னு சொல்வாங்க. பட்டாக் கூட புத்தி வராது. (-:...I Love India ன்னு சொல்றீங்களே லவ் பண்றதை இப்படியா பார்த்துப்பிங்கனு கேட்டதுக்கு இன்றுவரை பதிலே இல்லை. (-: self Discipline இல்லேன்னா எங்க போனாலும் செருப்படி தான் வாங்கணும்.

    ReplyDelete
  14. வாங்க பப்லு, ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. வரவுக்கு நன்றி. நீங்க சொல்வது உண்மையே. நம்மவர்களுக்குக் கொஞ்சம் அலட்சியம் தான் எதிலும். கொஞ்சமும் கவலைப்படாமல் குப்பை கொட்டுவாங்க. எங்க பையர் ஹூஸ்டனில் இருந்த அபார்ட்மெண்டில் அவரோட நண்பர் ஒருவர் காரைக் கிளப்பும்போது ஒரு மரத்தில் தெரியாமல் மோதி மரத்தின் கிளை உடைந்துவிட்டது.

    உடனே லீசிங் அலுவலகம், போலீஸ் எனக் கூடி விட்டது. அதே மரத்தின் கன்று ஒன்றை வாங்கிக் கொடுத்து அது இப்போது இருக்கும் மரத்தின் அளவுக்கு ஆகும் வரையும் அதை வளர்க்கும் செலவும் அவரைச் சேர்ந்தது என தண்டனை கொடுத்தார்கள். அப்படியே வாங்கி நட்டுப் பராமரித்து வருகிறார்.

    ReplyDelete
  15. வேலைப்பளு காரணமாகவும், வேலை மற்றும் இட மாற்றம் (டெக்ஸ்சாஸ்லிருந்து வாஷிங்டன்) வந்தது, வீடு பார்க்க என்று இருந்து விட்டதால் அடிக்கடி வர முடியவில்லை. மன்னிக்கவும். எனக்கு ஒரு சந்தேகம் கீதாம்மா. கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றி மூத்தகுடி நம் தமிழ் குடி என்பார்கள். பழமைக்கும்,நாகரீகத்திற்கும் அவ்வளவு பெயர் போனவர்கள் நாம்.இப்போ எங்கே போயிற்று? தனி மனித ஒழுக்கத்திற்கும்,மற்றவர்களை மதிக்கும்,உயர்ந்த எண்ணத்திற்கும் பெயர் பெற்ற நாம் இன்று எப்படி ஆகிவிட்டோம்? தமிழை விடுங்கள். அது இனி மெல்லச்சாகும். மேலை நாட்டை பார்த்தும், மேலை நாட்டு நாகரீகத்தையும் பார்த்து நம்மவர்கள் கெட்டார்கள்(எல்லாரும் அல்ல) என்று சொல்லவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. அது நிறைய இடங்களில் தவறாக சொல்லபட்டிருகிறது, அல்லது எடுத்துக்கொள்ளபட்டுள்ளது. எப்படி இந்த மாற்றம் நடந்தது? சத்தியமாக தெரியவில்லை. வாழ்கையில் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும்.அதை அனுபவித்து, கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அப்படி அடுத்த கட்டத்திற்கு போகாமல் இருந்தால் பிரச்சனை தான்.தான்தோன்றிதனமாக பொறுப்பே இல்லைதான் அப்பாவுக்கு பிறந்த நல்ல குழந்தை எப்படியெல்லாம் கஷ்டப்படுமோ, அப்படி தான் நம்மிடம் இந்தியா சிக்கிக்கொண்டு கஷ்டப்படுகிறது. மன்னிக்கவும்.அதுதான் உண்மை. (-:

    ReplyDelete