எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 11, 2011

வீட்டைக் கண்டு பிடிச்சால் பரிசு! :P

வீடு எங்கே போச்சு?? காணோமே!


வீட்டைக் காணோம்; சில தினங்கள் முன்பு எங்க வீட்டின் எதிரே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுபவர் வீட்டின் இருபக்கமும் கொட்டி இருந்த கட்டுமானப்பொருட்கள். இவற்றுக்கு இடையே வீடே மறைந்துவிட்டது. வீட்டின் வாயிலில் கோலம் போடவே மணலை மிகுந்த சிரமத்துடன் அகற்ற வேண்டியதாகிவிட்டது. இத்தனைக்கும் முதல்நாளே அந்தக் கட்டடம் கட்டும் காண்ட்ராக்டரிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். 
Posted by Picasa



உடனே நடவடிக்கை எடுக்கிறேன்னு சொன்னார். எடுத்துவிட்டார், வீட்டை விட்டு அவசரத்துக்குக் கூட வெளியே வரமுடியாதபடி. :))))))) 
Posted by Picasa




அப்பாடா, ஒரு வழியாக முறத்தினால் மணலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டு வாசலைக் கண்டு பிடிச்சுட்டேனே! ஹையா, ஜாலி!!  
Posted by Picasa

14 comments:

  1. அப்பாடா, ஒரு வழியாக முறத்தினால் மணலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டு வாசலைக் கண்டு பிடிச்சுட்டேனே! ஹையா, ஜாலி!!//

    ரொம்ம்பக்கஷ்ட்டம்.

    ReplyDelete
  2. \\வீட்டு வாசலைக் கண்டு பிடிச்சுட்டேனே! \\

    தான்னோட வாசலை தானே கண்டு பிடித்த தானைத் தலைவி வாழ்க வாழ்க !;-)

    ReplyDelete
  3. அராஜகம் செய்கிறார்கள். ஏரியா கவுன்சிலர்களை கையில் போட்டுக் கொண்டு இவர்கள் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.

    இடுக்கண் வருங்கால் நகுகவா! ;-)

    ReplyDelete
  4. இம்மாதிரியான நகைச்சுவை உணர்வுகள்(பதிவுகள்) தான் வாழ்க்கை மீது உண்டாகும் சலிப்பை, எதிர்காலக் கவலைகளைத் தவிர்க்க உதவுபவை

    ReplyDelete
  5. oru velaitrivandrum kovil mathiri puthaiyal ethavathu irukkumnu thondaraankalo

    ReplyDelete
  6. வாங்க ராஜராஜேஸ்வரி, வாழ்க்கையே கஷ்டம் தானே! காலையிலே ஐந்து மணிக்குள்ளாக வாசல் தெளிப்பேன். அந்த நேரம் யாரும் இருக்க மாட்டாங்க தெருவிலேயே. நானும் தெரு நாய்களும் தான்! தான் நானே அப்புறப்படுத்திவிட்டேன். தன் கையே தனக்குதவி! :)))))))))

    ReplyDelete
  7. ஹாஹா கோபி! இது!!!!!!!!! நல்ல பின்னூட்டம், நன்றிப்பா. விடாமல் வருவதற்கும் நன்றி.

    ReplyDelete
  8. ஆர்விஎஸ், அராஜகமா! ஒண்ணும் கேட்காதீங்க. பக்கத்திலே கட்டும் காண்டிராக்டரால் எங்க வீட்டுத் தோட்டமே பாழாய்க் கொண்டிருக்கிறது. வீடெல்லாம் சிமெண்ட். அதென்ன இரண்டடி இடம் கூட விடாமல் எங்க காம்பவுண்டை ஒட்டிக் கட்டறாங்க. அவங்க வீட்டு ஏசித் தண்ணீரிலே இருந்து எல்லாமும் எங்க வீட்டுக்குத் தான் வரப் போகுது! குப்பைகளும் கொட்ட வசதி! சொன்னாலும் நம்ம மக்கள் கேட்க மாட்டாங்க. முறைப்பாங்க, பெரிசா வீடு வச்சிருக்கே, பேச வந்துட்டாம்பாங்க, இன்னும் என்னென்ன இருக்கோ! தெரியலை! :((((((

    ReplyDelete
  9. ராம்ஜி யாஹூ, ஒரு விதத்தில் சரிதான், ஆனால் அதே சில சமயம் அலுப்பும், சலிப்புமாக இருக்கே! :(((

    ReplyDelete
  10. திவா, என்னாச்சு???

    ReplyDelete
  11. வாங்க சார், புதையல் கிடைச்சால் நல்லது தான்! எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கிறேன். :))))))

    ஆனால் இங்கே சுரங்க அறை எல்லாம் இல்லை. அதான் ஒரே ஒரு குறை.

    ReplyDelete
  12. கீதா

    சிரம்னகள் வரலாம் போலாம்.

    இப்படியே வாசலோட டேரா போடுமா..

    அநியாயத்துக்குக் கஷ்டப் படுகிறீர்களே,.

    எதோ மனசில உரம்

    இருப்பதால நாம் பிழைக்கிறோம்.

    ReplyDelete